Wednesday 15 June 2016

பிறை மீரான்: இரவு பகல் - குர்ஆன் வசனங்கள் ஒரு பார்வை

இரவு பகலை முந்தாது!!!!

وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَار (ِ36:40 )
இந்த வசனத்தை முதன்மையாகக் கொண்டுதான் ஹிஜிரி கமிட்டியினர் பகலுக்கு பின்னரே இரவு என கூறுகின்றனர்.
ஓட்டப் பந்தயத்தில் ஓடும் இருவரில் ஒருவருக்குப்பின் மற்றொருவர் என்ற அடிப்படையில் ஒருவரை ஒருவர் முந்தாமல் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வு இரவு பகல் சுழற்சி என்று கமிட்டியினர் கூறுகின்றனர்.
குர் ஆன் வசனங்களுக்கு இதுமட்டும்தான் பொருள் என்று உறுதியாக கூறிவிடமுடியாத நிலையில் மேலே உள்ள வசனத்தின் சரியான பொருளை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தெளிவுபடுத்துவானாக.
ஆகவே கமிட்டியின் கூற்றை மட்டும் சரியா என காண்போம்.
அவர்களின் கூற்றுப்படி பூமிப்பந்தின் மீது இரவும் பகலும் சுழல்கிறது.பகல் முந்தியும் இரவு அதை பின்தொடர்ந்து சுழன்று ஓடுகிறது.
இரவும் பகலும் பூமிப்பந்தின் மீது சுழல வேண்டுமானால் சூரியன் பூமியைச் சுற்றினால் மட்டுமே சாத்தியமாகும்.
ஆனால் பூமிப்பந்து சூரியனைச் சுற்றுகிறது தன்னையும் சுழற்றுகிறது.
புமிப்பந்தின் மீது இரவும் பகலும் நிலையாய் இருக்கிறது.தன் மீது நிலைத்திருக்கும் இரவுக்குள்ளும் பகலுக்குள்ளும் பூமிப்பந்து சுழன்று அதன் தரைப்பகுதிகளுக்கு இரவையும் பகலையும் மாறி மாறி வரச்செய்கிறது.
இதுவே பூமிப்பந்தின் மீது நிகழும் இரவு பகல் நிகழ்வு.
கமிட்டி சொல்வதுபோல் இரவும் பகலும் ஓட்டப்பந்தயம் நடத்தவில்லை.இரவு பகல் இயக்கத்தை அறியாமல் குர்ஆன் வசனத்திற்கு விளக்கமளித்தால் மனோ இச்சைதான் மேலோங்கும்.
وَهُوَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ وَلَهُ اخْتِلَافُ اللَّيْلِ وَالنَّهَارِ ۚ أَفَلَا تَعْقِلُونَ
அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். இரவு பகல் மாறுவது அவனுக்கே உரியது. விளங்க மாட்டீர்களா?(23:80)
அல்லாஹ் இரவு பகல் மாறுவதை விளங்கச் சொல்கிறான்.
يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ ۚ وَهُوَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். உள்ளங்களில் உள்ளவற்றையும் அவன் அறிந்தவன்.(57:6)
இரவு பகலில் நுழைவதாகவும்.,பகல் இரவில் நுழைவதாகவும் அல்லாஹ் கூறுகிறான்.
கமிட்டியின் கூற்றுப்படி இரவும் பகலும் ஒன்றையொன்று துரத்திச் சென்றால் பகலைப்பின் தொடர்ந்து இரவு பூமிப்பந்தின் மீது சுழன்று கொண்டிருக்கும்.அல்லாஹ்வின் வார்த்தைப்படி இரவு பகலுக்குள் நுழையாது,பகல் இரவுக்குள் நுழையாது.
கமிட்டி கொடுக்கும் அர்த்தத்தின்படி சூரியன் பூமிப்பந்தை சுற்றினால் மட்டுமே சாத்தியமாகும்.பூமியை சூரியன் சுற்றுகிறது என்ற கொள்கை சுமார் 500 வருடங்களுக்கு முந்தையது.இந்த கொள்கையை பின்பற்றி கணக்கிடப்பட்டிருக்கும் மனித குலகாலண்டர் மண்ணோடு மண்ணாக மக்கிப்போன மனிதர்களுக்கான மகத்தான காலண்டர்தான்.
பிறை மீரான்

இரவை மூடும் பகல்!!!

பகல் இரவை மூடுகிறதா?இது என்ன புது செய்தி என நீங்கள் கேட்பது புரிகிறது.
பகல் முந்தியிருக்கும்,அதை இரவு வந்து மூடும்,இதுதானே இதுவரை ஹிஜிரா கமிட்டி கூறியது என்றுதானே கேட்கிறீர்கள்.
குர் ஆன் வசனம் 7:54 ல்அல்லாஹ் கூறுகிறான், يُغْشِي اللَّيْلَ النَّهَارَ
"இரவை பகலால் மூடுகிறான்" . அதாவது பகலுக்கு முன்பாகவே இருக்கும் இரவை பகலைக் கொண்டு மூடுவதாக அல்லாஹ் கூறுகிறான்.
பகல் இரவை மூடியிருப்பதை எப்படி அறிவது?
அதற்கு நிழலைப் பற்றி அறிய வேண்டும்.
நிழல் என்றால் என்ன?
"ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது , அத்திசையில் ஒளியூடுருவ முடியாத ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர்"
மேலே உள்ள வாக்கியம் விஞ்ஞான வாக்கியம்.ரொம்ப குழம்ப வேண்டாம்...
சூரிய ஒளியில் கையை காட்டினால் கையின் நிழல் பூமியில் விழும்.
நிழல் எங்கிருந்து வருகிறது?
அதாவது சூரிய ஒளியை தடுத்தால் நிழல் விழுகிறது.அப்படியென்றால் சூரியனே நிழலையும் தருகிறதா?
இதுதான் என்னுடைய கேள்வி!!!
நிழல் என்பதும் இருட்டுதான்.சூரியன் எப்படி ஒளியையூம் இருட்டையும் ஒருசேர கொண்டிருக்கும்.
குர்ஆனில் தீர்வு இருக்குமா...
தேடினேன்...
"இரவைப் பகலால் மூடுகிறான்"
இரவை எப்படி பகலால் மூடமுடியும்?
நான் கற்பனையில் சூரியனை ஆப் செய்து பார்த்ததில் பூமிப்பந்து முழுவதும் இருட்டானது.பின்னர் ஆன் செய்ததில் பூமியின் அரைப் பந்து மட்டும் வெளிச்சமானது.மீதி அரைப்பந்தில் பழைய இருட்டு அப்படியே இருந்தது.சூரிய ஒளி படும் பகுதி பகல்.ஒளி படாத பகுதி இரவு.
சூரிய ஒளி பட்டவுடன் வெளிச்சமான அரைப்பந்தில் அதற்கு வெளிச்சம் வருவதற்கு முன்பாக இருந்த இருட்டு எங்கே போனது?
பிறகு அறிந்து கொண்டேன்...
பூமிப்பந்தில் ஒளி பட்டவுடன், ஒளி படும் அந்த பகுதியில் இருக்கும் இருட்டின் மீது வெளிச்சம் பூசப்படுகிறது.அதாவது இரவின் மீது பகல் பூசப்படுகிறது.இன்னும் சொல்வதானால் பகலுக்குள் இரவு ஒளிந்திருக்கிறது.
பகல் எனும் சூரிய ஒளியை ஒரு பொருள் மறைத்தால், ஒளி தடுக்கப்பட்டும் பகுதியில் மறைந்திருக்கும் இரவு வெளிப்பட்டு அந்த பொருளின் நிழலாக காட்டுகிறது.
ஆக நிழல் என்பது பூமியின் பகலுக்குள் மறைந்திருக்கும் இரவே.
சூரிய ஒளியை கைகொண்டு தடுத்தால் கையின் நிழல் பூமியில் விழுகிறதே அந்த நிழல்தான் பகலுக்குள் ஒளிந்திருக்கும் இரவு.
பூமியின்மீது போர்த்தப்பட்டிருக்கும் பகல் எனும் ஆடையைக் கிழித்து அல்லது உரித்துப் பார்த்தால் அதற்குள் மறைந்திருக்கும் இரவு நிழலாக வெளிப்படும்.
"இரவின் மீது பகலை போர்த்துகிறான்"
அல்லாஹ்வின் உதவியால் விளங்கிக் கொண்டேன்.
அல்லாஹ்வின் வார்த்தை, முந்தியிருக்கும் இரவை பகலைக் கொண்டு போர்த்துகிறான் என்றிருக்க,பகல்தான் முதலில் உள்ளது இரவு பின்னால்தான் வரும் என்று கூறும் ஹிஜிரா கமிட்டியே! எங்கே கொண்டு செல்கிறீர்கள் சமுதாயத்தை.
பிறை மீரான்