Monday 22 February 2016

பிறை பார்ப்பது எப்படி?

புதிதாக பிறை தேடச் செல்பவரா நீங்கள். உங்களுக்கு இந்த கட்டுரை உதவலாம். மாதாமாதம் பிறை பார்ப்பவர்களுக்கு இந்த விளக்கம் தேவையே இல்லை.

இந்த லிங்கில் மென்பொருளை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் முதல் பிறை தெரிவதற்கான வாய்ப்புகள், எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் எனும் எல்லா தகவல்களும் இது அழகாக தரும். கிப்லா மற்றும் தொழுகை நேரங்களையும் இந்த மென்பொருளே காட்டும். இவற்றிற்கான மற்ற மென்பொருள்களை நீங்கள் அழித்து விடலாம்.
SETTINGS > LOCATION இல் சென்று உங்கள் ஊரைத் தேர்ந்தெடுங்கள். இன்டர்நெட் இருப்பின் உங்கள் ஊர் பெயரை வைத்தே தேடலாம். GPS இருப்பின் அதுவாகவே உங்கள் ஊரை கண்டுபிடித்துவிடும். அல்லது ஏற்கனவே இருக்கும் பட்டியலில் இருந்தும் உங்கள் ஊரைத் தேர்ந்தெடுக்கலாம்.
EDIT COORDINATES & TIME ZONE ஐ செலக்ட் செய்து EDIT MANUALLYயை தேர்ந்தெடுத்து+5.௦ என்றிருக்கும் TIMEZONEஐ 5.5 என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
இதன் பின் நீங்கள் MOON SIGHTING என்பதை தேர்ந்தெடுத்தால் குறிப்பிட்ட தேதியில் பிறை கண்ணுக்குத் தெரியுமா? எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் எனும் தகவல்கள் காட்டப்படும்.
“பிறை தெரியுமா?” “தெரியுமெனில் எந்த நேரத்தில் பார்க்க வேண்டும்?” “தெரியாதெனில் அதற்கான காரணம் என்ன?” என்பன போன்ற தகவல்களை வட்டமிட்டுக் காட்டியுள்ளோம். சிறிய சிகப்பு வட்டத்தில் இருக்கும் பட்டனை அழுத்தினால் பிறை கணிப்பு வரைபடங்கள் வரையப்படும்.

புதிதாக வந்துள்ள மீகாத் எனும் மென்பொருளும் பிறை கணிப்பை அறிந்துகொள்ள உதவுகிறது. https://play.google.com/store/apps/details?id=com.geospatialtechnology.visualqiblah

வானில் பிறை இருக்கும் இடத்தை அடையாளம் கண்டுகொள்வது எப்படி?
இந்த லிங்கில் மென்பொருள் பிறையை எந்தத் திசையில் பார்க்க வேண்டும் என்பதை துல்லியமாகக் காட்டிவிடும். நீங்கள் மொத்த வானிலும் பிறையை சுத்தி சுத்தி தேட வேண்டியதில்லை. பிறை இந்த இடத்தில் இருக்கிறது என்று மிகத் துல்லியமாக இந்த மென்பொருள் காட்டும்.
நீங்கள் இருக்கும் பகுதியை GPS மூலம் தெரிந்து கொள்ளும் இந்த மென்பொருள் உங்கள் பகுதியிலிருந்து பிறை எந்தத் திசையில் இருக்கிறது என்பதை போனில் இருக்கும் Accelerometer / GyroScope எனும் கருவியைக்கொண்டு கண்டு பிடித்துக் காட்டிவிடும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான் போனை உங்கள் வானை நோக்கிக் கட்டினால் போதும். நீங்கள் காமெராவில் போட்டோ எடுப்பது போன்று வானில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களும், கோள்களும், ராசிகளும் அவற்றின் பெயர்களுடன் உங்கள் போனின் திரையில் தெரியும். நீங்கள் மேற்கு நோக்கி உங்கள் போனை திருப்பினால் பிறை துல்லியமாக வானில் எங்கே இருக்கிறது என்று இந்த மென்பொருள் காட்டும். அந்தத் திசையில் மட்டும் நீங்கள் பிறையை தேடினால் போதுமானது.
உங்கள் போனில் Accelerometer / GyroScope வசதி இருந்தால் மட்டுமே இந்த மென்பொருள் வேலை செய்யும்.
பிறை தொடர்பான மற்ற விஞ்ஞான தகவல்களுக்கு இந்த மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.me.lunarphase
பிறைக்கணிப்பு வரைபடங்களை வாசிப்பது எப்படி?
முக்கிய குறிப்பு: பிறை கண்ணுக்கு எளிதில் தெரியும், அல்லது பிறை கண்ணுக்குத் தெரிய வாய்ப்பு அதிகம் என்று கணிப்பு கூறிய பின்னும் பிறை கண்ணுக்குத் தெரியாமல் போகலாம். வானிலை (மேகம், பனி மூட்டம், தூசு, காற்றழுத்தம், புகைமண்டலம்) சாதகமாக இல்லையெனில் பிறை கண்ணுக்குத் தெரியாது. ஆனால் பிறை தெரிய வாய்ப்பே இல்லை என்று வானியல் கணிப்பு கூறினால் நிச்சயம் பிறை கண்ணுக்குத் தெரியாது.
இதற்கு உலக வரைபடம் எப்படி இருக்கும், எந்தெந்த நாடுகள் வரைபடத்தில் எங்கே இருக்கிறது, என்ற அடிப்படை தகவல் மட்டுமே தெரிந்தால் போதுமானது. மிழில் உலக வரைபடம் இங்கே >>> http://www.mapsofindia.comom/worldmap/tamil/political-map-large.html
[கீழே தமிழில் இருக்கும் தகவலை வாசிக்கவும், ஒவ்வொரு நிறத்திற்கும் என்ன பொருள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. எண்களும் அடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளன]
இந்தப் படம் http://www.moonsighting.com/visibility.html எனும் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. வரும் ரபியுல் ஆகிரின் பிறை அமாவாசை (கஞ்ஜங்க்ஷன் நடக்கும் அன்றைய) தினமே அமெரிக்காவில் தெரிகிறது. கஞ்ஜங்க்ஷன் என்று நடக்கும் என்ற தகவலும் கீழே NEW MOON என்ற பெயரில் பதிவு செய்துள்ளனர். அந்த (ஞாயிறு) நாளின் இறுதியில் அமெரிக்காவில் தெரியப்போகிறது. அதன் அடுத்தநாளான திங்கள் கிழமையில் உலகின் அனைத்து பகுதிகளிலும் பிறை பார்க்கப்படும். பச்சை நிறத்தில் இருக்கும் நாடுகளில் பிறை தெரியும். இளம் நீல நிறத்தில் இருக்கும் நாடுகளில் வானிலை சாதகமாக இருந்தால் பிறை தெரியும். இப்படிப்பட்ட தகவல்களைக் கீழே தமிழில் தந்துள்ளேன். ஒவ்வொரு மாதத்திற்கும் இது போன்று ஒரு வரைபடத்தை இவர் கணக்கிட்டு வெளியிட்டுள்ளார். ஒரு மாதத்தில் மூன்று நாட்களுக்கான வரை படங்களைப் பார்க்கலாம். 1. அமாவாசை எனும் கண்ஜங்க்ஷன் நடக்கும் நாளில் எங்கெல்லாம் பிறை தெரியும் எனும் படம். 2. அதற்கு அடுத்த நாளில் எங்கெல்லாம் தெரியும் 3. இரண்டாம் நாளில் எங்கெல்லாம் தெரியும்.
இந்த இணைய தளம் காலித் ஷவுகத் எனும் பொறியாளரால் நடத்தப்படுகிறது. பின்னர் வரும் யல்லப் என்பார் உருவாக்கிய பார்முலா மற்றும் விதிகளையே காலித் ஷவுகத் பயன்படுத்துகிறார். (இவர் கணக்கீட்டு கொள்கையில் உள்ளவர் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். அமாவாசை கமிட்டி அமாவாசை நடந்த பின் வரும் (Greenwich) க்ரெனிச் நள்ளிரவிலிருந்து மாதத்தைத் துவங்கச் சொல்வது போல் காலித் ஷவுகத் அமாவாசை நடந்த பின் வரும் க்ரெனிச் நண்பகலிலிருந்து மாதத்தைத் துவங்கச் சொல்கிறார்.)
[கீழே தமிழில் இருக்கும் தகவலை வாசிக்கவும், ஒவ்வொரு நிறத்திற்கும் என்ன பொருள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. எண்களும் அடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளன]
இது இங்கிலாந்தின் விண்ணியல் ஆய்வகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. http://astro.ukho.gov.uk/moonwatch/nextnewmoon.html . ஒவ்வொரு மாதமும் வருகின்ற மாதத்தின் பிறை கணிப்பு வரைபடத்தை வெளியிடுவார்கள். இது யல்லப் எனும் வானியல் ஆய்வாளர் உருவாக்கிய விதிப்படி தயாரிக்கப்பட்டது. பிறை கணிப்பு முறைகளில் யல்லப்பின் பங்களிப்பு அதிகமானது. யல்லப் முஸ்லிம் அல்லர்.

இதிலும் அந்தத்த நிறங்களை வைத்து அன்றைய தினம் எந்தெந்த ஊர்களில் பிறை தெரியும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
[கீழே தமிழில் இருக்கும் தகவலை வாசிக்கவும், ஒவ்வொரு நிறத்திற்கும் என்ன பொருள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. எண்களும் அடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளன]
இது UTRECHT பல்கலைகழகத்தின் அறிவியல் பிரிவால் வெளியிடப்படும். பிறை கணிப்பு வரைபடம். இதுவும் மேலுள்ள இங்கிலாந்து விண்ணியல் ஆய்வகத்தின் வெளியீடுபோல் யல்லப் எனும் வானியல் ஆய்வாளர் கண்டுபிடித்த விதிப்படி தயாரிக்கப்பட்டது. எனவே இரண்டும் ஓன்று போல் இருக்கும். இதை நீங்கள் https://www.staff.science.uu.nl/~gent0113/islam/islam_lunvis.htm இந்த லிங்கில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.
[கீழே தமிழில் இருக்கும் தகவலை வாசிக்கவும், ஒவ்வொரு நிறத்திற்கும் என்ன பொருள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. எண்களும் அடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளன]
இது முஹம்மத் அஉதா எனும் ஜோர்தானிய பொறியியலாளரால் வடிவமைக்கப்பட்ட மென்பொருளிலிருந்து எடுக்கப்பட்டது. அந்த மென்பொருளை www.icoproject.org/accut.html?l=en இந்த லிங்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இது கணிப்பொறியில் மட்டுமே வேலை செய்யும். இந்த ஒரு மென்பொருளில் பிறை கணிப்பு வரைபடம், தொழுகை நேரங்கள், சூரிய நிழலைக் கொண்டு கிப்லா குறிப்பிடும் நேரம் இன்னும் பல விண்ணியல் தகவல்களைப் பெறலாம். இந்த மென்பொருளில் அஉதா முறைப்படி மட்டுமல்ல மேல் சொன்ன யல்லப் விதிப்படியும், தென் ஆப்ரிக்க விண்ணியல் ஆய்வக கணிப்பு முறைப்படியும் வரைபடங்களை வரையலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட ஊரைத் தேர்ந்தெடுத்து அந்த ஊரில் பிறை தெரியுமா, பிறையை பார்க்க வேண்டிய நேரம், சூரியன் மறையும் நேரம், சந்திரன் மறையும் நேரம் போன்ற அனைத்தையும் இந்த மென்பொருளிலிருந்து எடுக்கலாம்.

வரைபடங்களை மட்டுமே பார்ப்பதற்கு இந்த லிங்கை பயன்படுத்தவும் http://icoproject.org/res.html?l=en
அஉதா, யல்லப்பின் பிறைக்கணிப்பு விதியை மேம்படுத்தி அவரது விதியை நிறுவினார். இவரும் கணக்கீட்டு கொள்கையில் இருப்பவர்தான்.
மேலுள்ள மூன்று முறைகளும். பல விண்ணியல் ஆய்வாளர்களால் தங்களது சொந்த பிறை பார்த்தல் அனுபவத்தால் பல முறை சரிபார்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.
மேலுள்ள தகவல்கள் பிறையை கண்ணால் பார்ப்பதை விட்டும் நம்மைத் தடுத்துவிடக் கூடாது. தவறான பிறை அறிவிப்புகளை அடையாளங்கண்டுகொள்ள மட்டும் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வானில் நிலவு இருக்குமிடத்தை எளிதில் கண்டுபிடிக்க பின்வரும் மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்
Android : https://play.google.com/store/apps/details?id=com.PYOPYO.StarTracker&hl=en
iPhone: https://itunes.apple.com/us/app/startracker-lite-mobile-skymap/id780172278?mt=8