Monday 8 December 2014

வலது புறத்தை வலியுறுத்திய இஸ்லாம் தவாஃபில் முரண்பட்டது ஏன்?

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

அக்கால மக்களால் விளங்க இயலாத, இன்றைய அறிவியலாளர்களால் மட்டுமே விளக்க இயன்ற பல அறிவியல் உண்மைகளை குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான். இவை குர்ஆன் இறைவேதம்தான் என சாட்சி அளிப்பவை என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் சிலர்  அவசர கோலத்தில் தங்களுக்கு தெரிந்த அறிவியலை வைத்தோ அல்லது குர்ஆனில் தாங்கள் விளங்கியதிலிருந்தோ சிலவற்றை எடுத்து இந்த குர்ஆன் வசனம் இந்த அறிவியலைப் பற்றி பேசுகிறது என்று தவறாகப் பொருத்தி விடுகின்றனர். இதை செய்பவர்கள் அனைவரும் இது நன்மை தரும் என்ற நோக்கில்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் அறிவியல் எந்த அளவுக்கு உண்மையானது என்றும் அப்படி அது உண்மையாகவே இருந்தாலும் குறிப்பிட்ட அந்த குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ் இதைதான் கூறுகிறதா என்று சிந்திக்காமலும் இதை செய்துவிடுகின்றனர். இதன் பின்விளைவு எதிரிகள் இதை ஒரு விமர்சனமாக எடுக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லிலும் அதற்கு பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்படுகிறான். அப்படிப்பட்ட தகவல்கள் நமது பார்வையில் வரும்போது அதன் உண்மை நிலையை ஆராய்ந்து தொடர்புடைய சகோதரருக்கு விளக்கி வருகிறோம். அதனடிப்படையிலான ஒரு கட்டுரைதான் இது. 

இதில் நண்பர் வலது புறத்தை வலியுருத்திய இஸ்லாம் தவாஃபில் முரண்பட்டது ஏன்? என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையும் அதை தொடர்ந்து நான் அவருக்கு எழுதிய மறுப்பும் இடம்பெற்றுள்ளது.

வலது புறத்தை வலியுருத்திய இஸ்லாம் தவாஃபில் முரண்பட்டது ஏன்?
ஆக்கம்: XXXX

‘தவாஃப்’ என்ற அரபுச் சொல்லின் பொருள், ஒரு பொருளை அதன் நான்கு புறங்களிலும் அந்த பொருளின் இடது புறத்திலிருந்து சுற்றி வருவதற்கே தவாஃப் என்று சொல்லப்படும். நபி( ஸல்) அவர்கள் காஃபாவை இடது புறத்திலிருந்து சுற்றி வருமாறு கட்டளை போட்டுள்ளார்களா? ஆதாரம் எங்கே என்று கேட்பவர்களுக்குத் தான் இந்த வார்த்தை விளக்கம்! ! !

மக்கா எனும் அரபு பிரதேசத்தில், உலகில் இறைவனை வணங்குவதற்க்கு முதலாவதாக எழுப்பப்பட்ட பள்ளிவாசலான கஃபா என்ற அல்லாஹ்வின் திருவீட்டை 7 முறை சுற்றி முடிப்பதே மார்க்க ரீதியில் ஒரு தவாஃப் ஆகும். உம்ரா ஹஜ் முதலிய புனிதப்பயணங்களை மேற்கொள்ளும் பேறு பெற்றவர்கள் கஃபாவைச் சென்றடைந்தவுடன் நிறை வேற்ற வேண்டிய காரியங்களில் ஒன்றாகும். கஃபாவைத் தவிர, உலகிலுள்ள இறையில்லங்கள் அனைத்திலும் ஒருவர் நுழைந்தவுடன்  காணிக்கைத் தொழுகையான தஹிய்யத்துல் மஸ்ஜித் என்ற  (நஃபில்) தொழுது கொள்ள வேண்டும். ஆனால், உலகின் முதல் இறையில்லமாம் கஃபாவை தரிசிப்பவர்கள் ‘தவாஃப்’ செய்வதே அதற்குரிய காணிக்கையாகும்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகைக்கு முன்பு நிலவிய அறியாமைக் காலத்தில் அரேபியர்கள் கஃபாவை நிர்வாணமாக வலம் வரும் பழக்கமாக  கொண்டிருந்தனர். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமறையின் 9 ஆவது அத்தியாயமான சூரத்துத் தவ்பாவில் 17 ம் வசனம் அருளப்பட்ட பின்பு அலீ (ரலி) அவர்களை அனுப்பி அந்தஆபாச வழக்கத்தை தடுத்து நிறுத்தி தடைசெய்து விட்டார்கள். வருடம் முழுவதும் பகல் இரவு  தவறாது மனிதர்களால் சுற்றிவரப்படும் ஆலயம் உலகில் கஃபத்துல்லாஹ் எனும் இறையாலயம் மட்டுமே. கடும் குளிரிலும், கடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், பெருங்காற்றிலும், ஆண்டு முழுவதும் மனிதர்கள் அந்த புனித ஆலயத்தைச் சுற்றிவந்து இறைவனை வழிபட்டு வருவது கண்கொள்ளா காட்சிமட்டுமல்ல. ஒரு பேரற்புதமுமாகும்.
இஸ்லாத்தை பொருத்த வரை வணக்க வழிபாடுகளுக்கு அறிவு ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும் நபி(ஸல்) அவர்கள் காரணங்களை சொல்லித்தராவிட்டாலும்,அதை மெய்படுத்துகின்ற குர்ஆன் ஹதீஸூக்கு முரன் படாத செய்திகளை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. அந்த அடிப்படையில் இஸ்லாம் வலது புறத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நாம் அறிந்ததே"" உண்ணுவதாகிருந்தாலும் ,காலணிகள் மாட்டுவதாக இருந்தாலும், எதைச் செய்தாலும். வலது புறத்திற்க்கு தான் முதலிடம் கொடுக்கின்றோம. ஆனால் ஹஜ்ஜில் செயயப் படுகின்ற  தவாஃப் என்ற வணக்கம் மாத்திரம் காலகாலமாக இடது புறத்திலிருந்து தான் செய்யப்பட்டு வருகின்றது.எளிமையாக சொல்வதாக இருந்தால் தவாஃப் செய்வோரின் இடது கை தான் காஃபாவின் திசை நோக்கி இருக்கும். அல்லாஹ்வின் மார்க்கமாக இது இருக்கின்ற காரணத்தினால் காரணமே இல்லாமல் இந்த மாற்றத்தை இறைவன் ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் அல்குர்ஆன்:03:97:லே அங்கே தெளிவான அத்தாட்சிகள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றான்.
குர்ஆனிய பார்வையில் அத்தாட்சி என்பது நபிமார்கள் நிகழ்த்திய,அற்புதங்களுக்கும்,நவீன கண்டுபிடிப்புகளுக்குமே பயன் படுத்தப் படுவதை ஆய்வாளர்கள் அறிவார்கள்.அந்த ரீதியில் இரு விதமான விஞ்ஞான உறுதிபடுத்தப் பட்ட உண்மைகளுக்கு பொறுந்திப் போகின்றது.

( 1 ) நமது இதயம் உடலின் இடது புறத்தில் அமைந்துள்ளது. இடதுபுறமாக ஓடும்பொழுது உடலின் மையத்திற்கு எதிர்த்திசையில் செயல்படும் விசையாற்றல் இடது புறத்திலிருந்து வலது புறமாகச் செயல்படுகிறது. வலது புறமாக ஓடும் பொழுது இவ்வாற்றல் வலது புறத்திலிருந்து, இடது புறமாகச் செயல்படும். நமது உடலில் பாய்ந்தோடும் இரத்தம் - சுத்தமான இரத்தம், அசுத்தமான இரத்தம் என இரு வகைப்படும். இதய இயக்கம் அசுத்தமான இரத்தத்தை சுத்த இரத்தத் தமணிகள் மூலம் உடலெங்கும் பாய்ச்சுகிறது. உடலெங்குமிருந்து அசுத்தமான இரத்தம் அதன் தமணிகள் மூலம் மீண்டும் இதயத்தை வந்தடைகிறது. அங்கிருந்து நுரையீரல்களுக்குப் பாய்ந்து,சுத்தகரிக்கப்பட்டு மீண்டும் இதயத்திற்குப் பாய்ந்து அங்கிருந்து உடலெங்கும்பாய்ச்சப்படுகிறது. மனிதன் உயிர் வாழும்வரை இந்த சுழற்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும் . அசுத்த இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு செல்லும் இரண்டு முக்கிய தமணிகள் உள்ளன. மேல்புறத் தமணி, கீழ்ப்புறத் தமணி. மேல்புறத் தமணி தலை,நெஞ்சு மேற்பகுதி முதலிய பாகங்களிலிருந்து அசுத்த இரத்தத்தையும், மற்ற பாகங்களிலிருந்து பாயும் அசுத்த இரத்தத்தை கீழ்புறத் தமணியும் இதயத்திற்குச் செலுத்துகின்றன. இதயத்தின் உறிஞ்சும் சக்தியால் அசுத்த இரத்தம் இதயத்திற்குள் உறிஞ்சப்படுகிறது. இதயத்தின் உறிஞ்சும் சக்தியின் உதவியுடன் பெரிய மேல் தமணி அசுத்த இரத்தத்தை இடது புறத்திலிருந்து வலது புறமாக எடுத்துவருகிறது. இடது புறமாக ஓடும்பொழுது அல்லது நடக்கும்பொழுது உடல் மைய எதிர்திசை விசையாற்றல், இதயத்தின் உறிஞ்சும் தன்மைக்கு உதவுகிறது. அதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எளிதில் களைப்பு ஏற்படுவதில்லை. மாறாக வலது புற ஓட்டம் அல்லது நடை இதயத்தின் உறிஞ்சும் திறனை குறைத்து விடுகிறது. ஆகவே, எளிதில் களைப்பு ஏற்பட்டுவிடுகிறது. (தி ஹிந்து, ஏப்ரல் 11 1996 பக்: 27)

இதனடிப்படையில் பார்க்கும்பொழுது தவாஃபில் களைப்பு ஏற்படுவதில்லை என்பதையும், தினமும் பலமுறை தவாஃப் செய்தாலும் உடல் சோர்வடைவதில்லை என்பதையும் உணர்ந்துகொள்ள முடியும். ஓட்டப்பந்தய வீரர்கள் இடது புறம் ஓடும் முறையில் தான் களம் அமைக்கப்படுகிறது. இராட்டிணம், எண்ணெய் பிழியும் செக்கு, குதிரைப் பந்தயம், மினாராப் படிகள் முதலியன இடது புறம் செல்வதாகவே அமைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கவை ஆகும். மேற்கண்ட விஞ்ஞான அடிப்படையே இடது புறமாக காஃபாவை வலம் வருவதற்க்கு ஒரு காரணியாக இருக்கக் கூடும்.

( 2 ) இயற்கையாக சுழலும் விதத்தில் படைக்கப் பட்டுள்ள எந்த ஒன்றும் இடது புறத்தில் சுழலும் விதமாகவே படைக்கப் பட்டுள்ளது. சூரியனும்,இதன் துணை கோள்களும், இதர கோள்கள் அனைத்தும் இடது புறத்தில் சுற்றி வருவதை விஞ்ஞானம் மெய் படுத்துகின்றது அனைத்து உயிரின கருவரைகளில் சழலும் உயிர் அனுக்கள் இடது புறமாக சுழல்வதை உறுதி செய்யப் பட்டுள்ளது. அனுவில் உள்ள எலக்ட்ரானை இடது புறமாகவே புரோட்டானும்,நியூட்ரானும் சுற்றி வருவதை பரிசோதனை உறுதி படுத்தியுள்ளது. இது போலவே உலகம் அழியும் நாள் வரை காஃபாவை சுற்றி வருபவர்கள் இடது புறமாக சுற்றி வருவதை அறிவு ஜீவிகள் பார்க்க வேண்டும். அதன் மூலம் இது போன்ற இன்னும் பல அறியாத உண்மைகளை அறிய வேண்டும் என்பதைக் கூட இறைவன் ஏற்பாட்டை அமைத்திருக்கலாம்.

அல்லாஹீ அக்பர்:
நட்புடன்: XXXX


நபி பெருமானார் தவாப் செய்ய கட்டளை இட்டார்கள். தவாப் செய்பவரின் இடது புறம் காபாவை நோக்குமாறு தவாப் செய்ய சொன்னார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. யாரும் ஆதாரம் கேட்க மாட்டார்கள். நானும் அப்படிதான் தவாப் செய்தேன். நீங்கள் நினைத்தாலும் அங்கே சென்று கடிகார திசையில் தவாப் செய்ய இயலாது.
இதை இஸ்லாத்தின் மற்ற காரியங்களோடு தொடர்பு படுத்த எந்த தேவையும் இல்லை. உண்ணுவதாக இருந்தாலும், காலணிகள் மாட்டுவதாக இருந்தாலும், எதைச் செய்தாலும் வலது புறத்திற்கு தான் முதலிடம் கொடுக்கின்றோம் என்பது சரிதான். அவைகள் நமது உடல் உறுப்புகளோடு தொடர்புடைய காரியங்கள். தாவாபுக்கும் வலது கைக்கும் வலது காலுக்கும் என்ன தொடர்பு. தவாபை நாம் இடது கை கொண்டோ இடது கால் கொண்டோ தொடங்குவது இல்லை. அந்த காலத்தில் இடது புறமாக தவாப் செய்யுங்கள் என்று தான் சொல்ல முடியும். எதிர் கடிகார திசை என்று சொல்ல இயலாது. இதை இடது புறம் என்று தான் சொல்ல வேண்டும் என்பது ஒரு மொழியின் இயலாமை.
கேள்வியே தவறு என்கிறேன். தவாப் செய்வதை இடது திசை அல்லது இடது புறத்தில் ஆரம்பிக்கிறோம் என்பதே தவறு. அப்படி ஒரு சொல் வழக்கு இருக்குமெனில் அது காலத்தின் இயலாமை அல்லது மொழியின் இயலாமை.

இப்போது நீங்கள் கூறிய இரண்டு அறிவியல் விளக்கங்களுக்கும் வருவோம்.

“மையத்திற்கு எதிர்த்திசையில் செயல்படும் விசையாற்றல்” என்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும். இதை Centrifugal force என்று ஆங்கிலத்தில் அழைப்போம். வட்டப்பாதையில் சுழலும் ஒரு பொருளை அந்த வட்டபாதையிலிருந்து வெளியே தள்ளும் ஒரு விசைக்கு பெயர் மையவிலக்கு விசை அல்லது மையத்திற்கு எதிர்த்திசையில் செயல்படும் விசையாற்றல்.

மையவிலக்கு விசை பற்றி மேலும் அறிய:- ஆங்கிலம்: http://is.gd/ZNJLG6  தமிழ்: http://is.gd/jSpogS
 
உதாரணமாக வேகமாக செல்லும் ஒரு கார் ஒரு வளைவில் திரும்பும்போது அந்த காரை அந்த வளைவிலிருந்து வெளியே தூக்கி எறிய முற்படும் விசையே மையவிலக்கு விசை. வளைவு என்பது வட்டத்தின் ஒரு பகுதி.  மையவிலக்கு விசை எப்போதும் அந்த பொருளை வட்டத்திற்கு வெளியே தள்ள முற்படும். இந்த விசையின் வீரியம் காரின் எடை, வேகம் மற்றும் வட்டப்பாதையின் விட்டத்தை பொருத்து அமையும். எடையும் வேகமும் கூட விசை கூடும். விட்டம் குறைய குறைய விசை குறையும். இதனால்தான் காரில் செல்லும்போது வளைவின் விட்டத்தை பொருத்து நாம் காரின் வேகத்தை குறைப்போம். குறுகிய வளைவில் வேகமா போக இயலாது. அதே வேகத்தில் அதை விட பெரிய வளைவில் செல்ல இயலும். தூக்கி எறிதலை நம்மூர் பாஷையில் “அப்சைடு” ஆகிவிடும் என்பார்கள்.

இந்த விசையையும் நம்மால் எளிதில் கண்டுபிடிக்க இயலும் அதற்கான formula
Fc=mass x velocity² ÷ radius; மையவிலக்கு விசை=நிறை x வேகம்² ÷ ஆரம்
இப்போது இந்த formulaவை கொண்டு காபாவில் நடந்து வலம் வருபவரின் மையவிலக்கு விசையை கணக்கிடுவோம்

சராசரி மனிதனின் எடை 60kg
காபாவை சுற்றும்போது சராசரி வேகம் 6km/h or 1.667m/s
காபாவிலிருந்து சராசரி ஆரம் 10m
மையவிலக்கு விசை = 60 x 0.833 x 0.833  ÷ 10 = 4.16 N (or) kgm/s²

ஆனால் மனித இரத்த அழுத்தத்தின் அளவு 80/120mmHg அதாவது 10000 முதல் 15000 N/m² ஆகும்
அழுதத்தையும் விசையையும் ஒப்பிட முடியாது என்றாலும்... 15000 எங்கே 4 எங்கே.
அப்படியே இந்த 4, 15000 ஐ பாதித்து விடும் என்றாலும் அதே பாதிப்பு வலது புறமாக சுற்றினாலும் வரும்.

தாங்கள் கீழே கூறி உள்ளது போல் மனித இதயம் இடது புறமிருந்து வலப்புறமாக எந்த இரத்தத்தையும் உந்த வில்லை. மாறாக எல்லா இரத்தமும் மேலிருது கீழாகவே உந்தபடுகின்றன.

“இதயத்தின் உறிஞ்சும் சக்தியின் உதவியுடன் பெரிய மேல் தமணி அசுத்த இரத்தத்தை இடது புறத்திலிருந்து வலது புறமாக எடுத்துவருகிறது.”
கீழே உள்ள படத்தை காண்க.

http://1.bp.blogspot.com/-1gFogG_fuOk/VIU3VGi8EFI/AAAAAAAACzk/yU0nmFmx35Q/s1600/image001.png

1966இல்இந்து பத்திரிகையில் வந்த கட்டுரை எந்த விதத்தில் முற்றிலும் உண்மையான தகவலாக இருக்க முடியும். தி இந்துவில் வரும் எல்லா கட்டுரைகளையும் உண்மை என நம்ப இயலுமா.
எல்லா காரியங்களையும் இரண்டு தரப்பிலிருந்தும் சிந்திக்க வேண்டுமென்பதால் இதன் உண்மையான ஆங்கில மூலத்தை தேடினேன். கிடைத்தது.
The Superior vena-cava collects de-oxygenated blood to the heart aided by heart suction. This vein carries blood from left to right. Centrifugal force due to anticlockwise running helps this suction. If we run clockwise, the centrifugal force impedes suction. That is why, in olden days, health officers ensured that all carnival merry-go-rounds were run only in the anti-clockwise direction. As the heart is on the left side, for humans and animals, running anticlockwise makes the centrifugal force in the body to act from left to right. Whereas it is from right to left for clockwise running. Racing tracks, animal shows in circuses, bullock-drawn pelt on wheels, all mostly have only left turns. Stairways in temple towers have only left turns for going up. Clockwise running tires people.
- Goteti Mvsr Krishna, Tadepalligudem, India

இதில் கூறப்பட்டுள்ளது ஓட்டபந்தயத்தை பற்றியதாகும். அதுவும் நிறுவப்பட்ட அறிவியல் அல்ல. இது ஒரு கருதுகோள் ஆகும். எளிமையாக சொல்ல வேண்டுமென்றல் “ஊகம்”. ஆங்கிலத்தில் hypothesis என்போம். ஓட்டப்பந்தயத்தில் ஓடுதளம் ஏன் எதிர் கடிகார திசையில் உள்ளது என்ற கேள்விக்கு ஒரு நபர் எழுதிய ஹைபோதிசிஸ். இது போல் ஓடுதளம் ஏன் எதிர் கடிகார திசையில் உள்ளது  என்பதற்கு ஏராளமான ஹைபோதிசிஸ்கள் உள்ளன. அவைகளை இங்கே பார்வை இடவும் http://is.gd/DkJFyE.

மேலும் இது ஓட்டபந்தயத்தில் ஓடும் நபரை பற்றி பேசுகிறது ஓட்டப்பந்தயத்தில் 35கிமி வேகத்தில் ஓடுவார்கள். ஆனால் தாவப் செய்யும்போது மிஞ்சிபோனால் 3கிமி வேகம் தான். இந்த hypothesisஐ இந்த உதாரணத்திற்கு எடுத்ததே தவறு.

“இனி இரண்டாவது அறிவியல் விளக்கம்: இயற்கையாக சுழலும் விதத்தில் படைக்கப் பட்டுள்ள எந்த ஒன்றும் இடது புறத்தில் சுழலும் விதமாகவே படைக்கப் பட்டுள்ளது. சூரியனும்,இதன் துணை கோள்களும், இதர கோள்கள் அனைத்தும் இடது புறத்தில் சுற்றி வருவதை விஞ்ஞானம் மெய் படுத்துகின்றது அனைத்து உயிரின கருவரைகளில் சழலும் உயிர் அனுக்கள் இடது புறமாக சுழல்வதை உறுதி செய்யப் பட்டுள்ளது. அனுவில் உள்ள எலக்ட்ரானை இடது புறமாகவே புரோட்டானும்,நியூட்ரானும் சுற்றி வருவதை பரிசோதனை உறுதிபடுத்தியுள்ளது.”

இது விஞ்ஞானமும் அல்ல அறிவியலும் அல்ல. சாதாரண மனித அறிவை கொண்டு சிந்தித்தால் இது உண்மையல்ல என்று விளங்கலாம். ஒரு படத்தை வரைந்து எளிதில் விளக்கி விடலாம்.
G:\desktop backup 19-10-13\debates\yaseen.jpg

நடுவில் இருக்கும் பெரிய கருப்பு வட்டத்தை சூரியனாகவோ, நியூக்ளியஸ் (நியூட்ரான்+ப்ரோட்டான்) ஆகவோ கொள்ளுங்கள். வெளியே இருக்கும் சிறிய வட்டத்தை எலெக்ட்ரான் ஆகவோ கோள்களாகவோ கருதுங்கள். இப்போது எங்கே இருந்து பார்த்தால் இடது புறத்தில் சுற்றுவதாக கொள்வீர்கள். A க்கு இடது புறம் எனில் B க்கு வலது புறம். C?.... D?.....
அவை இப்படிதான் சுழல வேண்டும் என்றில்லை இப்படியும் சுழலாம்.
G:\desktop backup 19-10-13\debates\yaseen.jpg

இப்படியும் சுழலாம்.
G:\desktop backup 19-10-13\debates\yaseen.jpg

பூமியில் நிறுவப்பட்டிருக்கும் காபா மாதிரி ஒரு பொருளை சுற்றுவதை கடிகார திசை என்றோ எதிர் கடிகார திசை என்றோ வகை படுத்தலாம். காரணம் பார்ப்பவர் பூமியில் நின்று கொண்டு பார்க்கிறார். அதற்கு காரணம் புவி ஈர்ப்பு விசை. வான் வெளியில் சுற்றும் கோள்களை எங்கிருந்து பார்ப்பது. எதன் மேல் நின்று கொண்டு பார்ப்பது. எதை மையமாக வைத்து பார்ப்பது. எதை அடிப்படையாக  வைத்து பார்ப்பது. அணுக்களுக்கும் இதே நிலைமைதான். அவை சில நேரம் முதல் படத்தில் இருப்பது போல் சுழலும் சிறிது நேரத்தில் இரண்டாவது படத்தில் இருப்பது போல் சுழலும் இன்னும் சற்று நேரத்தில் மூன்றாவது படத்தில் இருப்பது போல் சுழலும். இந்த படங்களில் இல்லாத ஒரு நிலையிலும் சுழலும்.
http://1.bp.blogspot.com/-j8rMzXMLd2Y/VIU3WVbL2zI/AAAAAAAACz8/7Gpa8NrpZ14/s1600/image007.png

இதல்லாது "அணுவில் உள்ள எலக்ட்ரானை இடது புறமாகவே புரோட்டானும்,நியூட்ரானும் சுற்றி வருவதை பரிசோதனை உறுதி படுத்தியுள்ளது." என எழுதி உள்ளீர்கள். இயல்பில் அணு என்பது அணுக்கருவும் (nucleus) அதனை சுற்றி வரும் எலெக்ட்ரான்களும் ஆகும். அணுக்கருவினுள் நியூட்ரானும் ப்ரோட்டானும் உள்ளன. இயல்பில் நியூட்ரான்களையும் ப்ரோட்டான்களையும் எலெக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன.