Sunday 7 December 2014

முட்டையா? வெங்காயமா?

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
அக்கால மக்களால் விளங்க இயலாத, இன்றைய அறிவியலாளர்களால் மட்டுமே விளக்க இயன்ற பல அறிவியல் உண்மைகளை குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான். இவை குர்ஆன் இறைவேதம்தான் என சாட்சி அளிப்பவை என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் சிலர்  அவசர கோலத்தில் தங்களுக்கு தெரிந்த அறிவியலை வைத்தோ அல்லது குர்ஆனில் தாங்கள் விளங்கியதிலிருந்தோ சிலவற்றை எடுத்து இந்த குர்ஆன் வசனம் இந்த அறிவியலைப் பற்றி பேசுகிறது என்று தவறாகப் பொருத்தி விடுகின்றனர். இதை செய்பவர்கள் அனைவரும் இது நன்மை தரும் என்ற நோக்கில்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் அறிவியல் எந்த அளவுக்கு உண்மையானது என்றும் அப்படி அது உண்மையாகவே இருந்தாலும் குறிப்பிட்ட அந்த குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ் இதைதான் கூறுகிறதா என்று சிந்திக்காமலும் இதை செய்துவிடுகின்றனர். இதன் பின்விளைவு எதிரிகள் இதை ஒரு விமர்சனமாக எடுக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லிலும் அதற்கு பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்படுகிறான். அப்படிப்பட்ட தகவல்கள் நமது பார்வையில் வரும்போது அதன் உண்மை நிலையை ஆராய்ந்து தொடர்புடைய சகோதரருக்கு விளக்கி வருகிறோம். அதனடிப்படையிலான ஒரு கட்டுரைதான் இது.
ரவிசங்கருடன் நடத்திய கலந்துரையாடலுடன் எனது மனதில் புகுந்து நிரந்தர இடத்தை பிடித்துகொண்ட ஒரு அறிஞர் டாக்டர் சாகிர் நாயக். அதில் ரவிசங்கர் “நாம் எல்லோரையும் நேசிக்க வேண்டும் நான் உங்களையும் நேசிக்கிறேன்” என சாகிர் நாயக்கிடம் சொல்வர். அவரது தவணையில் பேசும்போது சாகிர் நாயக் “நானும் உங்களை நேசிக்கிறேன் என்று சொல்வர்”. உடனே ரவிசங்கர் மைக்கை எடுத்து “உங்களுக்கு வேறு வழி இல்லை” என பல அர்த்தங்களுடன் சொல்வார். அடுத்த வினாடியே சிறிதும் யோசிக்காமல் “எனக்கு வேறு வழி இருந்தாலும் நான் உங்களை நேசிப்பேன்” என  ஒரு பதிலை வீசுவார். என்றும் மனதை விட்டு நீங்காத வாசகங்கள் அவை. மேலும் பீஸ் டீவி நமது ஊரில் கிடைக்க ஆரம்பித்த நாள் முதல் அவர்பேசும் உரைகளை கேட்க முயற்சிப்பதுண்டு. இப்படி நான் ரசித்த சாகிர் நாயக் அறிவியல் என்று எதையெல்லாம் சொல்கிறார் என்று நானே தெளிவுபடுத்துகிறேன்.
இந்த லிங்கில் உள்ள வீடியோவில் உலகம் நெருப்பு கோழியின் முட்டை வடிவமானது என்கிறார். அதாவது நாம் இன்று வரை விளங்கி வைத்திருந்த உலகம் கோள வடிவிலானது அல்ல நெருப்பு கோழியின் முட்டை போல் நீள்கோள வடிவிலானது என்கிறார். இதை தான் குரான் 79:30 இல் அல்லாஹ், “அதன் பின் அவன் பூமியை நெருப்புக்கோழி முட்டை வடிவிலாக்கினான்” (We have made the Earth thereafter Egg shape) என கூறுகிறார். இதன் அரபி மூலத்தில் “தஹாஹா” என்ற வார்த்தை வந்துள்ளது இதற்கு விரித்தான் என்றல்லாது “நெருப்புக்கோழி முட்டை வடிவிலாக்கினான்” என்ற பொருளும் உள்ளதாக வாதிடுகிறார். இது அறிவியல் அடிப்படையிலும் அரபி மொழி இலக்கண அடிப்படையிலும் சாத்தியம் எனில் நாம் வரவேற்போம். இல்லையேல் விமர்சிக்கத்தான் வேண்டும்.
விஞ்ஞானம்:
விஞ்ஞானம் "பூமி சரியாக உருண்டை வடிவில் இல்லை அதன் மையப்பகுதியை சிறிது புறந்தள்ளி நீள்கோள வடிவில்தான் உள்ளது" என்கிறது. அது எந்த அளவு தள்ளியுள்ளது எனவும் அது பார்க்க எப்படி இருக்கும் எனவும் பார்ப்போம்.
கோளம் என்றால் அதன் மையப்பகுதியிலிருந்து அதன் மேற்பரப்பிற்கு உள்ள தூரம் அதன் மேற்பரப்பில் எல்லா இடங்களிலும் சமமாக இருக்கும். உதாரணத்திற்கு ஒருகால்பந்தை கூறலாம்.
கால் பந்து
ரக்பி பந்து


நீள்கோளம் என்றால் அதன் மையப்பகுதியிலிருந்து அதன் மேற்பரப்பிற்கு உள்ள தூரம் அதன் மேற்பரப்பில் எல்லா இடங்களிலும் சமமாக இருக்காது. உதாரணம் ரக்பி பந்து.
நீள் கோளம் என்று பொதுவாக நாம் தமிழில் கூறினாலும் நீள்கோளம் இரண்டு வகைப்படும்.
1. OBLATE SPHEROID ஒப்லேட் 2. PROLATE SPHEROID ப்ரோலேட்.
1. OBLATE SPHEROID ஒப்லேட்:   ஒரு ரப்பர் பந்தை இரு புறமும் சிறிது அழுத்தி பிடித்தால் அழுத்தும் பகுதி சிறிது தட்டையாகி மையப்பகுதி சிறிது வெளியே தள்ளும், நீள்கோள வடிவில் மாறும். இந்த நீள்கோள வடிவம் OBLATE SPHEROID. உதாரணம் நாம்மூர் வெங்காயம்
2. PROLATE SPHEROID ப்ரோலேட்: அதே ரப்பர் பந்தின் இரு பகுதிகளிலும் கம்பிகளை கட்டி இழுத்துப்பிடித்தால் மையப்பகுதிகள் உள்ளே இழுக்கப்பட்டு துருவப்பகுதிகள் நீளும், நீள்கோள வடிவத்தை அடையும். இந்த நீள்கோள வடிவம் PROLATE SPHEROID. உதாரணம் ரக்பி பந்து.


D:\Articles\முட்டையா கூமுட்டையா\del-eggs-ostrich-egg-mdn.jpg
D:\Articles\முட்டையா கூமுட்டையா\ostrich-egg4.jpg
D:\Articles\முட்டையா கூமுட்டையா\Red-onion1.jpg
நெருப்புக்கோழி முட்டை
நெருப்புக்கோழி முட்டை
வெங்காயம்
D:\Articles\முட்டையா கூமுட்டையா\oblate_spheroid.png
D:\Articles\முட்டையா கூமுட்டையா\ProlateSpheroid_2.png
பூமியின் வடிவம் (oblate)
நெருப்புக்கோழி முட்டையின் வடிவம் (prolate)
எளிதில் விளக்குவதற்காக வடிவங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன.
பூமியின் வடிவம் அழுத்திப்பிடித்த நீள்கோளமாகும் (OBLATE spheroid) வெங்காய வடிவம். நெருப்புக்கோழி முட்டையின் வடிவம் இழுத்துப்பிடித்த நீள்கோளமாகும் (prolate spheroid) ரக்பி பந்து வடிவம். இப்படி ஒரு பிழையை அல்லா குர்ஆனில் செய்திருப்பானா? டாக்டர் சாகிர் நாயக்கிற்கு கணிதம் தெரியாமல் போகலாம் இறைவனுக்கு இந்த கணிதம் தெரியாமல் போகுமா?
மேலும் அந்த வீடியோவில் அவரே அவரை முரண்படுகிறார்.  பூமியின் வடிவத்தை விளக்கும்பொது “மேலே சிறிது தட்டையாகவும் மையப்பகுதியில் தள்ளியும் உள்ளது” என்கிறார். பின்னர் அதற்கு உதாரணமாக முட்டையை கூறுகிறார். அவர் பூமியின் வடிவத்தை சரியாக விளங்கி வைத்துள்ளார். நெருப்புக்கோழி முட்டையின் வடிவம்தான் என்னவென்று அவருக்கு தெரியவில்லை.
குர்ஆன் வசனம்:
மேலே உள்ள அரபி மூலத்திற்கு “இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்” என்று தான் எல்லா மொழிப்பெயர்பாளர்களும் பொருள் செய்துள்ளனர். ஆனால் இவர் மட்டும் “அதன் பின் அவன் பூமியை நெருப்புக்கோழி முட்டை வடிவிலாக்கினான்” (We have made the Earth thereafter Egg shape) என்று பொருள் செய்கிறார்
Sahih International
And after that He spread the earth.
Muhsin Khan
And after that He spread the earth;
Pickthall
And after that He spread the earth,
Yusuf Ali
And the earth, moreover, hath He extended (to a wide expanse);
Shakir
And the earth, He expanded it after that.
Dr. Ghali
And the earth, after that He flattened it (for life).
எல்லா தமிழ் மொழிபெயர்ப்புகளிலும்
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.


இதன் அரபி மூலத்தில் “தஹாஹா” என்ற வார்த்தை வந்துள்ளது இதற்கு விரித்தான் என்றல்லாது “நெருப்புக்கோழி முட்டை வடிவிலாக்கினான்” என்ற பொருளும் உள்ளதாக வாதிடுகிறார். ஆனால் அரபி தெரிந்த அறிஞர்கள் தஹாஹாவிற்கு முட்டை எனும் பொருள் கொண்டால்  “அதன் பின் பூமியை அவன் முட்டை” என்று பொருள் முடிந்துவிடும் “வடிவிலாக்கினான்” என்ற பொருளுக்கு இடமில்லை என்கின்றனர். இதற்கு காரணம் தஹாஹாவை முட்டை எனும் பொருள் கொள்ளும்போது அது பெயர்ச்சொல்லாகிவிடுகிறது. ஆனால் விரிப்பது என பொருள் கொள்ளும்போது விரித்தான் எனும் வினைசொல்லாக அமைகிறது என்கின்றனர். முட்டை என்று பொருள் கொண்டால் முட்டை என்பதோடு முடிந்துவிடும். முட்டைவடிவிலாக்கினான் என்பதற்கு அங்கு இடமில்லை.  “அதன் பின் பூமியை அவன் முட்டை” என்று முடிந்து குர்ஆன் வசனம் வேடிக்கையாகிவிடும்.
அவர் சொல்வதுபோல் தஹாஹா எனும் வார்த்தையின் மூல வார்த்தைக்கு அப்படி ஒரு பொருள் இருக்கிறதா என்று பார்ப்போம்.
இதன் பின்னர் பூமியை விரித்தான்.
D:\Articles\~மற்றவை\முட்டையா கூமுட்டையா\79_30.jpg
Dal-HA-Waw/Dal-HA-Alif
To hurl, spread forth, expand, stretch out, cast away, extend, drive along.
இது தஹாஹா எனும் வார்த்தையின் மூல வார்த்தை. அந்த வார்த்தைக்குரிய பல்வேறு பொருட்களைக் காட்டியுள்ளனர். முட்டை எனும் பொருளே இல்லை.
தஹாஹாவுக்கு நெருப்புக்கோழி முட்டை என்று பொருள் கொடுத்துவிட்டார். ஆனால் விரித்தான் என்று பொருள் வரும் மற்ற குர்ஆன் வசனங்களுக்கு எவ்வாறு பொருள் கொடுப்பார். காடை முட்டை, காக்கா முட்டை, பல்லி முட்டை என்று பொருள் கொடுப்பாரா? பின் வரும் வசனங்களிலும் அல்லாஹ் பூமியை விரித்ததைப் பற்றி பேசுகிறான். இவற்றிற்கெல்லாம் முட்டை எனும் பொருள் கொடுக்க இயலாது.
அவனே பூமியை விரித்தான்.
D:\Articles\~மற்றவை\முட்டையா கூமுட்டையா\13_3.jpg
Meem-Dal-Dal
to draw a thing (namely a rope), pull a thing, stretch a thing, strain a thing, extend by drawing or pulling, stretch forth, to prolong, expand/elongate/lengthen a thing, spread or spread out, delay or defer a thing, continue a thing, to help or aid someone, to advance, to increase, to supply ink (put ink into a thing), apply ink to a thing, manure land (with dung).
பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)
D:\Articles\~மற்றவை\முட்டையா கூமுட்டையா\88_20.jpg
seen-twa-ha
to spread out, level, expand, stretch
பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!
D:\Articles\~மற்றவை\முட்டையா கூமுட்டையா\91_6.jpg
Twa-haa-Alif/Ya
to spread out, extend, scatter/disperse, to execute/perform a matter firmly/soundly/ thoroughly.
மேலும் குர்ஆனில் வரும் அறிவியல் தொடர்பான வார்த்தைகள் இலைமறை காயாக, இரண்டு பொருட்கள் கொண்ட வார்த்தைகளாக இருக்கும். அவற்றை பொருள் கொள்ளும்போது அறிவியல் உண்மை ஆணித்தரமாக நிலைநாட்டப்படும். இது போல் கேலி கூத்தாக அமையாது.
மேலே உள்ள விளக்கம் சாதாரண மக்களுக்கும் விளங்கும். கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்காக மேலும் கூடுதல் விளக்கம்.
பூமியின் துருவ பகுதிகளில் அதன் விட்டம் (diameter) 12,713. 56 கிமி உம், மத்தியரேகை பகுதியில் அதன் விட்டம் 12,756. 28 கிமி ம் ஆகும். அதாவது துருவ பகுதியில் கடல் மட்டத்தில் நிற்கும் ஒரு மனிதரைவிட பூமியும் மையப்பகுதியில் கடல் மட்டத்தில் நிற்கும் ஒரு மனிதர் 21. 36 கிமி உயர்ந்த இடத்தில் இருப்பார். இந்த சரியான அளவுகளை வைத்து நாமே பூமியை அதன் சரியான வடிவத்தில் வரைந்து பார்த்துவிடலாம் என்று எண்ணினேன். 12,756 கிமி பூமியை காகிதத்தில் வரைய முடியாது ஆனால் ஆட்டோ காட்  சாப்டுவேரில் எளிதாக அதே அளவில் வரைந்து விடலாம். அப்படி வரைந்த படங்கள்தாம் இவை.
D:\Articles\முட்டையா கூமுட்டையா\egg_zakir_naik1.png
படம் ஒன்றில் துருவதிற்கும் மத்திய பகுதிக்கும் ஒரே விட்ட அளவை வைத்து வரைந்தேன். படம் இரண்டில் பூமியை அதன் சரியான அளவுகளில் அதாவது மத்தியரேகை பகுதிக்கு 12,756.28 கிமி ம் துருவ பகுதிக்கு (diameter) 12,713.56 கிமி ம் வைத்து வரைந்தேன். இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் தெரியாததால் வித்தியாசத்தை அறிய ஒன்றன் மேல் ஒன்றை பொருத்தி பார்த்தேன் (superimposed).  அதுதான் மூன்றாவது படம். உங்களால் இதில் நீலக்கோடுள்ள கோளத்தையும் சிகப்பு கோடுள்ளநீள்கோளத்தையும் பிரித்து பார்க்க இயன்றால் நீங்கள்தான் உலகத்திலேயே அமானுட கண்பார்வை கொண்டவராக இருக்க முடியும்.
என்னால் பார்க்க இயலாததால் 10மடங்கு zoom செய்து பார்த்தேன்.
D:\Articles\முட்டையா கூமுட்டையா\egg_zakir_naik2.png
மையப்பகுதியில் வித்தியாசம்
D:\Articles\முட்டையா கூமுட்டையா\egg_zakir_naik3.png
துருவப்பகுதியில் வித்தியாசம்
நீங்களே zoom செய்து பார்க்க ஆசைப்பட்டால் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் http://goo.gl/gphkpe.
இந்த இரண்டு விட்டங்களின் வித்தியாசத்தையும் சதவிகிதத்தில் சொல்ல வேண்டுமானால்.
(12,756. 28–12,713. 56) ÷ 12,756. 28  x 100 = 0. 335%
அதாவது சிறிய விட்டமானது பெரிய விட்டதை விட வெறும் 0. 335 சதவீதம்தான் (71/20000 இருபதாயிரத்தில் எழுபத்தி ஓன்று) சிறிதாக உள்ளது. இதனால்தான் நமது கண்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. இந்த வித்தியாசத்தை மிக துல்லியமாக செய்யவேண்டிய விஞ்ஞான கணக்கிற்காக மட்டுமே கவனித்தில் கொள்கிறார்கள். நாம் அன்றாடம் பயன் படுத்தும் GPS கருவிகளில் பூமி உருண்டை வடிவமானதாகதான் கணக்கில் கொள்கிறார்கள். இந்த சிறிய வித்தியாசத்தை விட்டு விடுகிறார்கள்
சரி பூமி மட்டும்தான் இப்படி நீள்கோள வடிவில் உள்ளதா என்றால் இல்லை. கிட்டத்தட்ட எல்லா கோள்களும் இப்படிதான் உள்ளன. கோள்கள் சுற்றுவதன் காரணமாக மையவிலக்கு விசையினால் (centrifugal force) அவற்றின் மையப்படுத்தி வெளியே நீளுகிறது. நாம் பௌர்ணமியில் முழு வட்டமாக பார்க்கும் சந்திரன் 0. 125% சுருங்கி நீள் வட்டமாகதான் உள்ளது. யாரும் சந்திரனை முட்டை வடிவ நிலா என்று சொன்னதில்லை மாறாக வட்ட வடிவ நிலா என்று தான் சொல்கிறோம். விண்வெளியிலிருந்து பல கோணங்களில் எடுக்கப்பட்ட பூமியின் படங்கள். எந்த கோணத்திலும் பூமி நீள் கோளமாக தெரியவில்லை. இவற்றை கீழே உள்ள நெருப்புக்கோழி முட்டை படத்துடன் நீங்களே ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
பூமி நீள்கோள வடிவம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நெருப்புக்கொழியின் முட்டை வடிவமா என்பதுதான் கேள்வி.


பூமி – வடதுருவத்திற்கு மேலிருந்து
பூமி - கிழக்கிலிருந்து


பூமி - மேற்கிலிருந்து
சந்திரன்


அப்படியே முட்டை வடிவிலாக்கினான் என்று பொருள் கொண்டாலும் மிகப்பெரிய சிக்கல் வரும். இந்த நீள்கோள வடிவத்திற்கு காரணம் பூமியின் சுழற்சியால் ஏற்படும் மைய விலக்கு விசை ஆகும். பூமியின் வேகம் மெதுவாக குறைந்து வருகிறது. எனவே அதன் மைய விலக்கு விசையும் படிப்படியாக குறைந்து நாளடைவில் பூமி மிகச்சரியான கோளவடிவில் வந்துவிடும். அப்போது முட்டை வடிவம் என பொருள் செய்தவர்கள் மீண்டும் விரித்தான் என பொருள் கொள்வார்களா?
தஹாஹாவிற்கு வெங்காயம் என பொருள் கொடுத்திருந்தாலாவது பொருந்திப்போயிருக்கும். அரபியில் பொருந்தாத பொருளை கொடுத்தும் பூமிக்கு இல்லாத வடிவத்தை கொடுத்தும் குர்ஆனை வளைத்து நெளிக்க தேவை என்னவோ?
நன்றி: