Friday 16 October 2015

அல்லாவின் நாட்காட்டியா? யஹுவாவின் நாட்காட்டியா?

தமிழகத்தில் ஹிஜ்ரா கமிட்டி என்போர் தங்களது காலண்டர் குர்ஆன் ஹதீஸின்படி அமைக்கப்பட்ட அல்லாஹ்வின் காலண்டர் என்று இலவசமாக ⁽¹⁾ விற்று வருகின்றனர். ஆனால் உண்மையில் அது அல்லாஹ்வின் காலண்டர் அல்ல, யஹுவாவின் காலண்டர். யஹுவா என்பது யூதர்களின் கடவுளின் பெயர். அதே பெயரை நாமும் பயன்படுத்தினால் மாட்டிவிடுவோம் என்பதால் இவர்கள் அல்லாஹ்வின் காலண்டர் என்று பெயர்மாற்றம் செய்துவிட்டனர்.
ஹிஜ்ராவின் இணையதளமான மூன் காலண்டர் டாட் காம் யஹுவாக்களின் இணையதளமான world last chance என்பதன் தமிழ் பதிப்பு என்பதை ஆதாரங்களுடன் வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://www.piraivasi.com/2017/10/13.html
யஹுவாவினர் வெளியிட்டுள்ள யஹுவா காலண்டரும் ஹிஜ்ரா கமிட்டியின் ஹிஜ்ரா காலண்டரும் ஒன்றே. இதை ஆதாரங்களுடன் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
பின்வரும் படங்களுக்கு விளக்கம் தேவை இல்லை. இவர்களின் அல்லாக் காலண்டர் யஹுவா காலண்டருடன் மிகச்சரியாக ஒத்துப்போவதைக் காணலாம். இவர்களின் தேதிகளும் கிழமைகளும் அவர்களின் தேதிகள் கிழமையுடன் 100% பொருந்துவதைப் பாருங்கள்.
-----------------------------------------ஹிஜ்றா காலண்டர்------------------------------------------------------யஹுவா காலண்டர்----------------------------------
இந்த காலண்டரை அவர்களின் இணையதளத்தில் காணலாம். https://www.worldslastchance.com/yahuwahs-calendar/new-moon-day-the-dawn-after-conjunction.html
விமர்சனம்-1: நாம் இதை வெளியிட்டதும் இதற்கு மறுப்புகொடுக்க இயலாமல், தங்களின் காலண்டர் யூத காலண்டர் இல்லை என்று நிறுவ இயலாத ஹிஜ்ராவினர் வேறு சில யூத பிரிவுகளின் காலண்டர்களை காட்டி “பாருங்கள்! எங்கள் காலண்டர் வேறு! யூத காலண்டர் வேறு!” என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
முஸ்லிம்கள் உம்முல் குறா, துருக்கி காலண்டர், மலேசிய காலண்டர், லிப்ய காலண்டர், எகிப்து காலண்டர் என் பல வகை காலண்டர்களை வைத்திருப்பதைப் போல யூதர்களிலும் பல விரிவுகள் உள்ளன. ஒவ்வொருவரும் வெவ்வேறு காலண்டர்களை வைத்துள்ளனர். யஹூவா எனும் யூதப்பிரிவின் காலண்டரைக் காப்பியடித்து உருவாக்கப்பட்டதுதான் ஹிஜ்றா காலண்டர். இவர்கள் வேறு யூதப் பிரிவின் காலண்டரைக் காட்டி எங்கள் காலண்டர் யூதக் காலண்டர் இல்லை என்று வாதிடுவது நாங்கள் மற்ற யூத பிரிவுகளின் காலண்டர்களைப் பின்பற்றவில்லை யஹுவா காலண்டரைத்தான் காப்பியடித்தோம் என்று உறுதிப்படுத்துவதாக உள்ளது.
விமர்சனம்-2: யூத காலண்டர்களில் 13 மாதங்கள் வருகிறது! நீங்கள் சொல்லும் யஹுவா கலண்டரிலும் 13 மாதங்கள் வருகிறதே எங்கள் காலண்டரில் அது இல்லையே என்பது ஹிஜ்ரா கமிட்டியின் அறிவுப்பூர்வ வாதம்.
யூதக் காலண்டர் சிவான், ஐயார், நிசான் போன்ற மாதங்களின் பெயர்களைக் கொண்டது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு மாதத்தை அதிகரித்து 13 மாதங்களைக் கொண்ட வருடமாக ஆக்குவார்கள். அந்த வருடத்தில் ஆதாருக்குப்பின் ஆதார்-2 என்று ஒரு மாதம் இருக்கும். ஆனால் யஹுவா கலண்டரில் மாதங்களுக்கு முக்கியத்துவமே இல்லை. ஒவ்வொரு சந்திர சுழற்சியையும் (Number) எண்ணிட்டு எண்ணுகிறார்கள். வருடங்களுக்கு சூரிய சுழற்சியை அடிப்படையிலான 365.25 நாட்களை எடுக்கின்றனர். சூரிய வருடத்தை சந்திர வருடத்துடன் ஒருமைப் படுத்துவதற்காக 13 சந்திர சுழற்சியைக் கொண்ட வருடத்தை உருவாக்குகின்றனர். மாதத்தை வைத்து அவர்கள் எந்த வழிபாடும் செய்வதில்லை. வருடத்தின் குறிப்பிட்ட காலநிலைகளில் அமாவாசைக்கு மறுநாள் சில பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். இது மட்டுமே யஹுவா காலண்டரின் அடிப்படை.
நாம் இவர்களின் கலண்டரை மற்ற காலண்டர்களுடன் ஒப்பிடும்போது இவர்களை அந்த ஒப்பீட்டை மறுக்காமல் வேற்றுமைகளைப் பட்டியலிடுகிறார்கள். யஹுவாக்கள் மாதத்தை துவங்க என்ன அளவுகோலை எடுக்கிறார்களோ அதைத்தான் இவர்களும் எடுக்கிறார்கள். யஹுவா காலண்டரில் சங்கமத்தின் மறுநாள் முதல் பிறை. யஹுவாக்கள் பஜ்ரில் நாளை ஆரம்பிப்பதைப் போல இவர்களும் பஜ்ரில் நாளை ஆரம்பிகிறார்கள். இதைதான் நாம் காலண்டரின் காப்பி என்கிறோம். ஆனால் இதற்கு பதிலில்லாத ஹிஜ்ராவினர் எங்களின் காலண்டர் பச்சை நிறம் யஹுவா காலண்டர் நீல நிறம் என்பதுபோன்ற வேற்றுமைகளை பட்டியலிடுகின்றனர். இவர்கள் காலண்டருக்கும் யஹுவா காலண்டருக்கும் உள்ள வேற்றுமைகள்
1. யஹுவா காலண்டரில் மாதங்களின் பெயர்கள் இல்லை. எங்கள் காலண்டரில் அரபிப் பெயர்களில் மாதங்கள் அமைந்துள்ளன.
2. யஹுவா காலண்டரில் 13 லூநேஷன்கள் உள்ளன. எங்கள் காலண்டரில் 12 மாதங்கள் மட்டுமே உள்ளன.
3. யஹுவா காலண்டரில் ஆஷூரா நோன்பு, ரமளான் நோன்பு இல்லை. ஹஜ் பெருநாள் இல்லை எங்கள் காலண்டரில் இவை உள்ளன.
4. யஹுவா காலண்டரில் கிழமைகளுக்கு பெயர்கள் இல்லை. எங்கள் காலண்டரில் இவை உள்ளன.
இவ்வாறு இவர்கள் காலண்டரின் வேற்றுமைகளை பட்டியலிட்டால் இவர்களின் அறியாமையை கண்டு நம்மால் நகைக்க மட்டுமே இயலும்.
அமாவாசைக்கு மறுநாள் முதல் பிறை. நாள் ஃபஜ்ரிலிருந்து துவங்குகிறது எனும் முக்கிய கொள்கைகளை யஹுவாக்களிடமிருந்து காப்பி அடித்ததை நாம் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டோம். மேலும் யஹுவா காலண்டரை எடுத்து அதில் வரிசையாக முஹர்ரம் சஃபர் என்றும் ஹிஜ்ரி வருடங்களையும் எழுதிவந்தால் அது ஹிஜ்ரா காலண்டராக மாறி விடும் என்பதையும் மக்கள் உணர்ந்துவிட்டனர். இவர்கள் இதை மறுக்காமல் சிறுபிள்ளை ஒப்பீட்டு வேலையை செய்வதை அறிவுள்ளவர்கள் உணர்ந்துகொள்வர்
யஹுவாக்களின் கடவுளின் பெயர் வேறு, ஹிஜ்ராக்கள் முஸ்லிம்களில் அல்லாஹ்வையே தங்களுக்கும் அல்லாஹ் என்கின்றனர். யஹுவாவின் லூநேஷன் எண்ணிக்கை வேறு ஹிஜ்ராக்களின் மாதங்களின் எண்ணிக்கை வேறு. யூதர்களின் மாதப்பெயர்கள் வேறு ஹிஜ்ராக்களின் மாதப்பெயர்கள் வேறு. இவை ஒன்றாக இருந்திருந்தால் ஹிஜ்ராக்களுகும் யஹுவா பிரிவினருக்கும் என்ன வித்தியாசம்?
யஹுவா காலண்டரில் மாதம் என்று துவங்குகிறதோ அன்றுதான் ஹிஜ்ரா காலண்டரில் மாதம் துவங்குகிறது. யஹுவா காலண்டரில் ஒவ்வொருநாளும் எந்த ஆங்கில தேதியில் அமைகிறதோ அதே தேதியில் ஹிஜ்ரா காலண்டரில் நாட்கள் அமைந்துள்ளன. யஹுவா காலண்டரின் தேதிகள் எந்த வாரநாட்களில் வருகின்றனவோ அதே வாரநாட்களில் ஹிஜ்ரா காலண்டரின் தேதிகள் அமைந்துள்ளன.
விமர்சனம்-3: எங்கள் காலண்டரும் யஹுவா காலண்டரும் ஒத்துபோகும் வருடத்தை மட்டுமே உங்களால் காட்ட இயலும். மற்ற வருடங்களை வெளியிடும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? வெளியிட்டால் 13 மாதங்கள் கொண்ட உண்மை வெளியாகிவிடும்.
கீழே அடுத்த 4 வருடத்திற்கான ஹிஜ்ரா காலண்டரையும் யஹுவா காலண்டரையும் தந்துள்ளோம். யஹுவா காலண்டரில் 13 லூநேஷன் வருவதால் அது மாதமாகிவிடாது. யஹுவா காலண்டரில் மாதம் என்ற பேச்சே இல்லை. அவர்கள் அமாவாசையை லூநேசன் என்று எண்ணுகிறார்கள். வருடங்களை சூரிய ஆண்டுகளாக எண்ணுகிறார்கள். அவர்கள் என்று லூநேசனை துவங்குகிரார்களோ அதே நாளில் நீங்கள் மாதத்தை துவங்குகிறீர்கள் என்பதே எமது குற்றச்சாட்டு. அவர்களிடமிருந்து காலண்டரைக் காப்பியடித்து அதில் அரபு மாதங்களின் பெயர்களையும் ஹிஜ்ரி வருட எண்களையும் ஒட்டி வைத்துள்ளீர்கள். இரண்டு காலண்டர்களிலும் மாதம் என்று துவங்குகிறது என்று பார்த்தால் ஹிஜ்றா காலண்டர் யூதக் காலண்டரின் காப்பியே! என்பதை மக்கள் உணர்ந்து கொள்வர்.
யஹுவா காலண்டர் 1437 - 1440
அமாவாசைக் காலண்டர் 1437 - 1440
ஹிஜ்ரா காலண்டருக்கும் யஹுவா காலண்டருக்கும் இடையேயுள்ள ஹிஜ்ராவினர் கண்டுபிடிக்காத ஒரு வேற்றுமையை நாம் கண்டுபிடித்துள்ளோம். ஹிஜ்ரா காலண்டரின் கடைசி தேதி 30 துல்ஹிஜ்ஜா ஹிஜ்ரி 3000ஆக இருக்கிறது. அதாவது ஹிஜ்ராவின் கணக்குப்படி கியாமத் நாள் 30 துல்ஹிஜ்ஜா ஹி.பி 3000 அல்லது  ஞாயிறு 19 மார்ச் 3533ம் தேதியாக உள்ளது. அதற்கு பிறகு சந்திரனை கணக்கிட முடியாது, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் என்று கமிட்டி நம்புகிறது. அதிக விளக்கங்களுக்கு பார்க்க http://www.piraivasi.com/2017/02/11.html . ஆனால் யஹுவா காலண்டரில் தேதிகள் கிபி 10,000யும் தாண்டிசெல்கின்றன. இதுவும் இரண்டு காலண்டர்களுக்கும் உள்ள வேற்றுமையாக நாம் பார்க்கிறோம்.


⁽¹⁾ இலவசம் என்றாலே விலையில்லாமல் காசு வாங்காமல் கொடுப்பதுதானே, அது எவ்வாறு விற்பனையாகும்?
ஜெயாவும் கருணாவும் இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு கொடுத்தது இலவசமா? உள்நோக்குடன் கொடுக்கப்படும் எதுவுமே இலவசமல்ல