Monday 2 February 2015

பிறையின் விஞ்ஞானம்: பாகம்-2

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
சூரிய குடும்பம் (SOLAR SYSTEM) என்றால் என்ன?
சூரிய குடும்பம் எனப்படுவது சூரியனை மையமாகவும் 8 முக்கிய கோள்களையும், அவற்றின் துணைக்கோள்களையும், பல குள்ள கோள்களையும், எண்ணற்ற எரிகற்களையும் மற்றும் வால் நட்சத்திரங்களையும் கொண்டது. இவை அனைத்தும் தானும் சுழல்வதுடன் சூரியனையும் சுற்றுகின்றன. சூரியன் சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ளது. அது பூமியை விட 13 லட்சம் மடங்கு பெரிய நட்சத்திரம் ஆகும். சூரிய குடும்பத்தில் ஒளியின் மூலமாக இருக்கும் ஒரே நட்சத்திரம் சூரியனாகும். நாம் வாழும் பூமிக்கும் ஒளி தருவது சூரியனாகும்.

நாள் (SOLAR DAY) என்றால் என்ன?
பூமியின் ஒரு பகுதி சூரிய ஒளி பட்டு எப்போதும் வெளிச்சமாக இருக்கும் (பகல்). சூரிய ஒளி படாத பகுதி இருட்டாக இருக்கும் (இரவு). பூமி தானே சுழல்வதால் இரவு பகல் மாறி மாறி ஏற்படுகிறது. பூமியில் எப்போதும் சூரிய உதயமும் மறைவும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பகுதியில் சூரியன் உதயமாகும்போது மறுபகுதியில் மறைந்து கொண்டிருக்கும். பூமி ஒரு முறை சுழல 24மணிநேரம் எடுக்கிறது. அதுவே ஒரு நாளின் நேரம் ஆகும். சூரிய நாள்: ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் வரை உள்ள நேரம் (24மணி நேரம்)

மாதம் (MONTH) என்றால் என்ன?
ஒரு மாதம் என்பது ஒரு அமாவாசையிலிருந்து மறு அமாவாசை வரை உள்ள நாட்களாகும். விஞ்ஞான மொழியில் "சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒருமுறை சந்திரன் கடப்பதிலிருந்து மறுமுறை கடப்பதுவரையுள்ள நாட்கள்" ஒரு மாதம் எனப்படுகிறது. இந்த மாதத்தின் கணக்கை நாம் அளந்தால் அது ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டிருக்கிறது ஒரு மாதத்தில் 29நாள்கள் 7மணிக்கூறுகள் இருந்தால் அடுத்த மாதத்தில் 29நாள்கள் 10மணிக்கூறுகள் இருக்கும். இப்படியே 29நாட்கள் 6 மணிக்கூறுகள் முதல் 29 நாட்கள் 19 மணிக்கூறுகள் வரை மாறலாம்,  இரண்டு மாதங்களுக்கு இடையே 13 மணிநேர வித்தியாசம் வரை வரலாம். இதை சராசரியாக 29.530588853 நாள்கள் என கணக்கிடலாம். கிட்டத்தட்ட 29 ½ நாட்கள்.

சந்திரன் எத்திசையில் உதிக்கிறது?
பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவதால் சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கிறது. சந்திரனும் கிழக்கில்தான் உதிக்கிறது.

பிறைகள் (LUNAR PHASES) எதனால் ஏற்படுகின்றன?
சந்திரனின் ஒரு பகுதியில் எப்போதும் சூரிய ஒளி விழுந்து கொண்டிருக்கும் (சந்திர கிரகண நேரத்தை தவிர). சந்திரன் பூமியை சுற்றி வருவதால் ஒரு நாள் சூரிய ஒளி விழுந்து வெளிச்சமாக இருக்கும் சந்திரனின் பகுதி நமது பார்வைக்கு வரும். மற்றொருநாள் சூரிய ஒளி படாத இருளான பகுதி நமது பார்வைக்கு வரும். ஒளியூட்டப்படாத இருளான பகுதி நமக்கு நேராக வரும்போது சந்திரன் நமது கண்களுக்கு புலப்படுவதில்லை. அது அமாவாசை (NEW MOON) எனப்படுகிறது. ஒளியூட்டப்பட்ட பகுதி பூமிக்கு நேராக வரும்பொது முழு நிலவை நாம் காண்போம். அது பௌர்ணமி எனப்படுகிறது. சந்திரன் பூமியை சுற்றி வருவதால் ஒவ்வொரு நாளும் இந்த ஒளியூட்டப்பட்ட பகுதி சிறிது சிறிதாக நமது பார்வைக்கு வருகிறது. அமாவாசை முடிந்து ஓரிரு நாட்களுக்கு பிறகு சந்திரனின் வெளிச்சமான பாதியின் ஒரு சிறு பகுதி மட்டும் நமது பார்வைக்கு வரும். அது வளர்பிறை எனப்படுகிறது. அடுத்தநாள் சந்திரன் பூமியை சுற்றி இன்னும் சிறிதளவு நகர்ந்திருக்கும். அப்போது சந்திரனின் வெளிச்சமான பகுதி சிறிது அதிகமாகவே நமது பார்வைக்கு வரும். இப்படியே ஒவ்வொரு நாளும் சந்திரன் வளர்வது போல் நமக்கு காட்சியளிக்கும். அமாவாசை ஏற்பட்டு பதினான்கு அல்லது பதினைந்து நாட்களுக்கு பின் மீண்டும் முற்றிலும் ஒளியூட்டப்பட்ட சந்திரனின் பகுதி நமது பார்வைக்கு வரும்.

இதையே விஞ்ஞான மொழியில் கூற வேண்டுமனில்: “பூமியில் சுற்றி சந்திரன் இருக்கும் கோணத்தை பொருத்து அது ஒவ்வொரு பிறையாக நாளுக்கு நாள் வளர்வது போல் நமக்கு தோன்றுகிறது. பௌர்ணமியில் இந்த மூன்று கோள்களும் சூரியன் பூமி சந்திரன் எனும் வரிசையில் வருகின்றன. அமாவாசையில் சூரியன் சந்திரன் பூமி எனும் வரிசையில் வருகின்றன.”

C:\Users\Administrator\Desktop\peer\articles\moon_phases_diagram1.png
இதில் இருக்கும் படத்தில்  நடுவில் இருக்கும் கோள் பூமி. அது எப்பொழுதும் ஒரு பாதி ஒளியூட்டப்பட்டதாகவே உள்ளது. அதை சுற்றி இருப்பவை சந்திரனின் ஒவ்வொரு நிலைகள். அதுவும் எப்பொழுதும் ஒரு பாதி ஒளியூட்டப்பட்டதாகவே உள்ளது. இதற்கும் வெளியில் உள்ள வட்டத்தில் இருப்பவை ஒவ்வொரு நிலையிலும் பூமியிலிருந்து சந்திரனை பார்க்கும்போது அது எப்படி தோற்றம் அளிக்கும் என்பதை காட்டுகின்றன.

பிறை எப்போது உதிக்கிறது? எப்போது மறைகிறது?
சூரியன் காலையில் உதித்து மாலையில் மறவதைப்போல் சந்திர உதய மறைவுக்கு நிகழ்வதில்லை. அது சந்திரனின் ஒவ்வொரு நிலைகளிலும் மாறுபடுகிறது. அமாவாசை அன்று சந்திரன் சூரியன் உதிக்கும்போது உதிக்கிறது. சூரியன் மறையும்போது மறைகிறது. அதன் மறுநாள் சூரியனுக்குப்பின் உதித்து சூரியன் மறைந்தபின் மறைகிறது. இப்படியே பௌர்ணமி வரை சிறிது சிறிதாக சூரிய உதயதிற்கும் சந்திர உதயதிற்கும் இடையேயான நேர வித்தியாசம் கூடிக்கொண்டே செல்கிறது. இறுதியில் அமாவாசை அன்று சூரிய மறைவின்போது சந்திரன் உதிக்கிறது. அதன் மறுநாள் சூரியன் மறைந்தபின் சந்திரன் உதிக்கிறது. சூரியன் உதித்த பின் சந்திரன்  மறைகிறது. முதல் கால்பிறை அன்று நண்பகலில் சந்திரன் உதித்து நள்ளிரவில் மறைகிறது. இறுதி கால்பிறையில் நள்ளிரவில் உதித்து நண்பகலில் மறைகிறது.

கிரகணங்கள் எதனால் ஏற்படுகின்றன? சந்திரனின் வட்டப்பாதை (ORBIT)  பூமியின் வட்டப்பாதையிளிருந்து 5.1 டிகிரி சாய்ந்துள்ளது. இதனால் சூரியன் பூமி சந்திரன் இவை ஒரே வரிசையில் வந்தாலும்  ஒரே நேர்கோட்டில் வருவதில்லை. பூமியின் வட்டப்பாதையும் (ECLIPTIC) சந்திரனின் வட்டப்பாதையும் (MOON’S ORBIT) சந்திக்கும் புள்ளிகள் LUNAR NODES என அறியப்படுகின்றன. சந்திரன் லூனார் நோடுகளிலோ அவற்றிற்கு அருகிலோ இருக்கும்போது சந்திரனின் வட்டப்பாதையும் பூமியின் வட்டபாதையும் சாய்வில்லாமல் ஒரே நேர்கோட்டில் இருக்கும். ஒவ்வொரு 6 மாதம் முடியும்போது சந்திரன் இரு முறை இந்த லூனார் நோடுகளுக்கு அருகில் வரும் (வருடத்திற்கு நான்கு முறை). அமாவாசை எற்படும்போது லூனார் நோடுகளுக்கு அருகில் சந்திரன் இருக்குமேயானால் , சந்திரனின் நிழல் பூமியில் விழும் சூரிய கிரகணமும் ஏற்படும். பௌர்ணமியின் பொது  லூனார் நோடுகளுக்கு அருகில் சந்திரன் இருக்குமேயானால், பூமியின் நிழல் சந்திரனில் விழும் சந்திர கிரகணமும் ஏற்படும்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/34/Lunar_eclipse_diagram-en.svg/815px-Lunar_eclipse_diagram-en.svg.png
சந்திரன் லூனார் நோடுகளுக்கு அருகில் இல்லாதபோது ஏற்படும் அமாவாசையில் சந்திர வட்டப்பதையின் 5.1 டிகிரி சாய்வு காரணமாக சந்திரனின் நிழல் பூமியில் விழுவதில்லை. சந்திரனின் வட்டப்பாதையில் இந்த சாய்வு இல்லாமல் இருந்திருந்தால் எல்லா அமாவாசையில் சூரிய கிரகணமும் எல்லா பௌர்ணமியில் சந்திர கிரகணமும் ஏற்பட்டிருக்கும்.

அமாவாசை, பௌர்ணமி, கிரகணங்கள் ஆகியவற்றை இந்த காணொளியில் தெளிவாக விளக்குகிறார்கள் http://youtu.be/jybxe7hxpza
சந்திர வட்டப்பாதையின்  (ORBIT) சாய்வை இந்த காணொளியில் தெளிவாக விளக்குகிறார்கள் http://youtu.be/lni5ufpales
சந்திர வட்டப்பாதையின் சாய்வை விளக்கும் மற்றொரு காணொளி http://youtu.be/xwgs8_ott64

சந்திர கிரகணம் பௌர்ணமி இரவில் ஏற்படும். பூமி சந்திரனை விட மிக பெரியது என்பதால் பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மறைத்து விடுகிறது. சூரிய கிரகணம் அமாவாசை நண்பகலில் ஏற்படும். பூமியை விட சந்திரன் மிகச்சிறியது என்பதால் சந்திரனின் நிழல் பூமியின் மிகச்சிறிய பரப்பில் மீது மட்டுமே விழும். பூமியில் நிழல் விழும் பகுதி நடுப்பகலில் இரவு போல் காட்சி அளிக்கும். இது சில நிமிடங்களே நீடிக்கும்.

பூமியின் சுற்று வட்டப்பாதையும் (ORBIT) சந்திரனின் சுற்று வட்டப்பாதையும் ஒன்றுக்கொன்று 5.1 டிகிரி சாய்வாக அமைந்துள்ளன. அல்லாமல் இவைகள் இணையான சுற்றுப்பாதையில் சுழன்றால் எல்லாமாதமும் பௌர்ணமியில் சந்திர கிரகணமும் அமாவாசையில் சூரிய கிரகணமும் ஏற்பட்டிருக்கும்.

முதல் பிறை எப்போது பிறக்கிறது?
“முதல் பிறை எப்போது பிறக்கிறது” என்பது ஒரு விஞ்ஞானம் தொடர்பான கேள்வி அல்ல. விஞ்ஞானத்தை பொருத்தமட்டில் அமாவாசை நிகழ்ந்து அடுத்த வினாடியே புதுப்பிறை பிறந்து விடுகிறது. அமாவாசை நிகழும் அந்த வினாடியை நவீன விஞ்ஞானத்தின் உதவியால் துல்லியமாக கணக்கிட்டுவிடலாம். நடைமுறையில் முதல் பிறை பிறப்பதென்பது பிறை முதன் முதலில் எப்போது கண்ணுக்கு புலப்படும் என்பதாகும். அதை விஞ்ஞானத்தால் கணிக்க முடிந்தாலும் மிக துல்லியமாக அறுதியிட்டு கூற இயலாது.

முதல் பிறை கண்ணுக்கு தெரிய வேண்டும் எனில் அது கீழ்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரவேண்டும்.

§. சூரியன் மறையும் போது, சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் கோணம் 12 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும்.
§. சூரியன் மறையும் போது, பார்ப்பவரின் தொடுவானத்திலிருந்து சந்திரன் 10டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும்.

மேலுள்ள கணித வரையறைகளை எளிமையான முறையில் கீழ்கண்டவாறு கூறலாம்

§. பிறை எதிர்பார்க்கப்படும் ஊரில் பிறையின் வயது 20மணிநேரத்தை தாண்டி இருக்க வேண்டும்.
§. சூரியன் மறைந்து குறைந்தது 45-60 நிமிடங்களுக்கு பின் சந்திரன் மறைய வேண்டும்.

இதல்லாது பொதுவான நிபந்தனைகளான தெளிவான வானம், நல்ல கண்பார்வை மற்றும் காற்றின் பண்புகள் எப்போதும் பொருந்தும். இந்த காரணிகளை பொதுவான ஒரு கணித வரையறைக்குள் கொண்டு வர முடியாது என்றாலும் இவை பிறை தெரிவதற்கான மிக முக்கியமான காரணிகள். மேலுள்ள கணித காரணிகள் சரியாக அமையபெற்றாலும் இந்த காரணிகள் சரி இல்லையெனில் பிறை கண்ணுக்கு தெரியாது. அனுபவமில்லாதவர் மெல்லிய மேகத்தை பிறை என எண்ணக்கூடும்.

அமாவாசை எப்போது ஏற்படுகிறது?
அமாவாசை அல்லது சூரிய-சந்திர சந்திப்பு என்பது சூரியன் சந்திரன்-பூமி-ஆகியவை ஒரே வரிசையில் வரவேண்டும். அந்த ஒரு கணம் மட்டும் சந்திரன் அதன் முற்றிலும் இருளான பகுதி பூமியை நோக்கி இருக்கும். அடுத்த கணத்திலிருந்து பூமியை நோக்கியிருக்கும் சந்திரனின் பகுதி சிறிது சிறிதாக ஒளியுற ஆரம்பிக்கும். இது ஆங்கிலத்தில் CONJUNCTION எனப்படுகிறது

ஒரு மாதத்தின் கால அளவு ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டிருக்கிறது ஒரு மாதத்தில் 29நாள்கள் 7மணிக்கூறுகள் இருந்தால் அடுத்த மாதத்தில் 29நாள்கள் 10மணிக்கூறுகள் இருக்கும். இப்படி 29நாள்கள் 20மணிக்கூறுகள் வரை மாறுகிறது. மாதத்தின் கால அளவு ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டிருப்பதால் முதல் பிறை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நேரத்தில் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு இந்த மாதம் பிறை காலை 9 மணிக்கு பிறந்தால் அடுத்த மாதம் மதியம் 1.35 க்கு பிறக்கும் அதற்கு அடுத்த மாதம் இரவு 7.43க்கு பிறக்கு அதன் அடுத்த மாதம் அதிகாலை 4.52க்கு பிறக்கும். இப்படி எப்போதும் மாறிக்கொண்டிருக்கும்.

எல்லாமாதமும் அமாவாசை நண்பகலில் ஏற்படும் அல்லது சூரியன் மறையும்போது ஏற்படும் என பொதுவாக கூறிவிட முடியாது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை ஒரு நாளின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படுகிறது. இம்மாதம் காலையில் அமாவாசை நிகழ்ந்தால் அடுத்தமாதம் நள்ளிரவில் நிகழலலாம். அதன் அடுத்தமாதம் மாலையில் நிகழலாம்.

முதல் பிறையை எப்போது எங்கே பார்க்கவேண்டும்?
முதல் பிறையில் சந்திரன் சூரியன் உதித்த பிறகு உதிக்கிறது சூரியன் மறைந்த பின் மறைகிறது. சூரியன் மறைவதுவரை சந்திரன் வானில்தான் இருக்கும். எனினும் சூரியனின் வெளிச்சத்தின் முன் முதல் பிறையின் வெளிச்சம் ஒப்பிட முடியாத அளவிற்கு மிகக்குறைவாக இருப்பதால் அது கண்ணுக்கு தெரிவதில்லை. சூரியன் மறைந்து அதன் வெளிச்சம் அடிவானத்திலிருந்து விலகும் வரை முதல் பிறையை எளிதில் பார்த்துவிட முடியாது. சூரியன் மறைந்து 45-60 நிமிடங்களுக்கு பிறகு சந்திரனை மேற்கு அடிவானத்தில் பார்க்க முயற்சிக்க வேண்டும். அதுவும் சந்திரன் மறையும் வரையே பிறையை தேட இயலும்.

முதல் பிறையை பார்க்க ஆசைப்படுபவர்கள் முதலில் அந்த மாதத்தில் உங்களது பகுதியில் அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என தெரிந்து கொள்ளுங்கள். இதற்கான வசதிகள்  பல இணையதளங்களில் செய்யப்பட்டுள்ளன. moomsighting.com icoproject.org போன்றவை முஸ்லிம்-விஞ்ஞான நிபுணர்களால் நடத்தப்படுபவை. உங்கள் பகுதியில் அதற்கான வாய்ப்பு இருப்பின் உங்கள் ஊரின் அன்றைக்கான சூரிய மறைவு மற்றும் சந்திர மறைவிற்கான நேரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றை நீங்கள் THE UNITED STATES NAVAL OBSERVATORY WEBSITE , AUSTRALIAN GOVERNMENT GEOSCIENCE WEBSITE ஆகிய இணைய தளங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பின்னர் உங்கள் பகுதில் மேற்கில் தொடுவானம் தெரியும் பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அது மேற்கு கடற்கரை ஆயின் சிறந்தது. அன்றைய தினம் சந்திரன் வடமேற்கில் மறைகிறதா அல்லது தென்மேற்கில் மறைகிறதா என்பதையும் நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் பிறையை தேடுவது எளிதாகும். பிறை கண்ணுக்கு தெரிய ஒரு சரியான தருணத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். அது சூரிய சந்திர மறைவிற்கு இடைப்பட்ட பகுதியில் 9ல் 4ம் பங்கில் அமையும்

உதாரணத்திற்கு சூரியன் 5:36க்கும் சந்திரன் 6:18க்கும் மறைகிறதென்றால்
இரண்டிற்கும் இடையில் உள்ள நேரம் = 39நிமிடங்கள்
அதில் 9ல் 4ம் பங்கு என்பது = 39 x 4 ÷ 9 = 17.33நிமிடங்கள்
எனவே சூரியன் மறைந்து 17.5  நிமிடங்களுக்கு பிறகு பிறையை பார்க்கலாம்.

முதல் பிறையை எந்த நாட்டினர் முதலில் பார்ப்பார்கள்?
முதல் பிறை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு ஊர்களில் முதன் முதலாக தென்படும். இம்மாதம் நியுசிலாந்தில் முதல் பிறை தெரியும் வாய்ப்புகள் அதிகாமாக இருந்தால் அடுத்த மாதம் நியூ யார்க் நகரத்தில் பிறை தென்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இப்படி மாதா மாதம் முதலில் பிறை தென்படும் பகுதி மாறிக்கொண்டிருக்கும். இதற்கு காரணம் அமாவாசை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு நேரத்தில் நிகழ்வதே.

பின் வரும் மதங்களில் பிறை எந்த பகுதியில் முதன்முறை தெரியும் என்பதையும் நீங்கள் மேலே கூறப்பட்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

கூடுதல் தகவல்கள்:

அமாவசை ஏற்படும்போது இரவாக இருக்கும் பகுதிகளுக்கு அந்த மாதத்தில் அமாவாசை இல்லை. காரணம் அமாவாசை ஏற்படும்போது சந்திரன் அவர்கள் வானத்தில் இருப்பதில்லை. பூமியின் மறுபகுதியில் இருக்கும். அமாவாசையை CCD எனும் கருவி மூலம் பார்த்து விடலாம். இது அமாவாசை ஏற்படும்போது பகலாக இருக்கும் பகுதிக்கு மட்டுமே சாத்தியம். அமாவாசை ஏற்பட்டு சில நிமிடங்களில் பிறை பிறந்து விடுவதால் இதே கருவியை கொண்டு பிறையையும் பார்த்து விடலாம்.

கிரகணங்கள் சில நிமிடங்கள் மட்டும் நீடிப்பது போல அமாவாசையும் பௌர்ணமியும் சில வினாடிகள் மட்டுமே இருக்கும். அமாவாசையும் பௌர்ணமியும் ஒரு நாள் முழுவதும் நீடிப்பவை அல்ல. கிரகணங்களை பற்றி அதிகமாக விளக்க காரணம், சூரிய கிரகணத்தின் விஞ்ஞானத்தை விளங்கினால் அமாவசையின் விஞ்ஞானத்தை விளங்குவது எளிது. சூரிய கிரகணம் பூமியின் சில பகுதிக்கு மட்டுமே ஏற்படுவதைபோல அமாவாசையும் பூமியின் சில பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படுகிறது. மொத்த உலகிற்கும் இல்லை. அமாவாசை ஏற்படும் போது எந்த ஊர்கள் நண்பகலாக இருக்கிறதோ அந்த ஊர்களுக்கு மட்டுமே அது அமாவாசை. அடுத்த அமாவாசை வேறொரு ஊருக்கு ஏற்படும்.

இதை பின்வரும் சூரிய கிரகண காட்சி வரைபடங்கள் தெளிவு படுத்தும். இதில் கருஞ்சிவப்புக் கோடு செல்லும் இடங்களில் மட்டும் முழு சூரிய கிரகணம் தெரியும். அவர்களுக்கு மட்டுமே அமாவாசை. அதற்கு வெளியே கரும் ஆரஞ்சு நிறத்தில் தெரியும் பகுதிகளில் சூரியன் 90%க்கு மேல் மறைந்து இருக்கும். அதற்கு வெளியே அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு 90% வரையும் அதற்கும் வெளியே உள்ள பகுதிகளில் 40% வரையிலும் மறைந்திருக்கும்.
9 மார்ச் 2016 ல் சூரிய கிரகணம்   
1 செப்டம்பர் 2016ல் சூரிய கிரகணம்   

சூரியன் உதிப்பதில்லை மறைவதில்லை. மாறாக பூமியின் சுழற்சியால் சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வதைப்போல் தோற்றமளிக்கிறது. நமது ஊருக்கு மேலிருக்கும் சூரியன் சிறிது நேரத்திற்கு பிறகு மேற்கே உள்ள ஒரு ஊரின் மேலிருக்கும். சந்திரனும் இப்படிதான். கிழக்கிலிருந்து மேற்காக நகர்வதைப்போல் தோற்றமளிக்கிறது. நமது ஊரிலிருக்கும் சந்திரன் சில மணி நேரத்தில் வேறொரு ஊருக்கு மேலிருக்கும் அப்போது அது சிறிது வளர்ந்தோ தேய்ந்தோ காணப்படும். ஆகவே நமது ஊரில் இருக்கும் பிறை வேறோரு ஊரில் தெரிவதில்லை. அது அந்த ஊரை அடையும் போது சிறிதோ வளர்ந்தோ தேய்ந்தோதான் அடைகிறது.

பிறையை அதன் வயதை வைத்து அளக்கிறார்கள். அமாவாசை ஏற்படும் அந்த வினாடியில் பிறையின் வயது 0. அதன் அடுத்த விநாடியிலிருந்து பிறை பிறந்து அதன் வயது ஓவ்வொரு வினாடியாக, நிமிடமாக, நாளாக வளர்கிறது. ஒரு பிறை ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிந்தாலும் அந்ததந்த இடங்களிலிருந்து பார்க்கும் கோணம் மாறுபடுவதால் ஒவ்வொரு ஊருக்கும் பிறை வேறுபட்ட வயதுடையதாகவே தோற்றமளிக்கிறது.

அமாவாசையும் ஒரு பிறையே: சந்திரனின் வட்டப்பாதை (ORBIT)  பூமியின் வட்டப்பாதையிளிருந்து 5.1 டிகிரி சாய்ந்துள்ளது. இந்த சாய்வு காரணமாக அமாவாசை அன்றும் சந்திரனின் ஒளியூட்டப்பட்ட பகுதி சிறிதளவு பூமியை நோக்கி காட்டிக்கொண்டுதான் உள்ளது. கிரகணங்கள் ஏற்படும் மாதத்தில் ஏற்படும் அமாவாசையும் பௌர்ணமியும் மட்டுமே முழுமையானவை. மற்ற மாதங்களில் அமாவாசை என்பது முற்றும் இருள் நிறைந்த நிலவின் பகுதி அல்ல. சிறிது ஒளியூட்டப்பட்டதகவே இருக்கிறது (0. 1% - 0. 2%). பௌர்ணமியும் அப்படித்தான். முழுமையாக ஒளியூட்டப்பட்ட பகுதி நமக்கு தெரிவதில்லை. சிறிது தேய்ந்ததாகவே காணப்படுகிறது (99. 8%). அமாவாசையை CCD கருவியைப் பயன்படுத்தி ஒரு பிரஞ்சு புகைப்படக்காரர் புகைப்படம் எடுத்துள்ளதை இங்கே காணலாம். இது சரியாக அமாவாசை ஏற்படும் அந்த வினாடியில் எடுக்கப்பட்டது.


பிறை எப்படி வளர்ந்து தேய்கிறது என்பது பற்றிய அழகிய அனிமேஷன் காட்சிகள் கீழுள்ள லிங்குகளில் உள்ளன.

D:\Articles\விஞ்ஞானத்தின் பார்வையில் பிறை\அமாவாசை.PNGD:\Articles\விஞ்ஞானத்தின் பார்வையில் பிறை\சந்திர கிரகணம்.PNGD:\Articles\விஞ்ஞானத்தின் பார்வையில் பிறை\சூரிய கிரகணம்.PNGD:\Articles\விஞ்ஞானத்தின் பார்வையில் பிறை\பௌர்ணமி.PNG

நன்றி:
NATIONAL OCEANIC AND ATMOSPHERIC ADMINISTRATION WEBSITE
HER MAJESTY NAUTICAL ALMANAC OFFICE WEBSITE
THE UNITED STATES NAVAL OBSERVATORY WEBSITE
AUSTRALIAN GOVERNMENT GEOSCIENCE WEBSITE
UTRECHT UNIVERSITY, NETHERLANDS WEBSITE
THIERRY LAGAULT’S WEBSITE
TIME AND DATE WEBSITE
WIKIPEDIA WEBSITE
NASA WEBSITE