Tuesday 14 June 2016

அளவில் பெரிதாக இருப்பது இரண்டாம் பிறையா?

முதல் பிறை மிக மெல்லிதாக நூல் போல இருக்கும். அது அடிவானத்திலிருந்து சற்றே உயரத்தில் இருக்கும். சிறிது நேரம் மட்டுமே தென்படும்.
இரண்டாம் பிறை முதல் பிறையை போல இரண்டுமடங்கு பெரிதாக இருக்கும். முதல் பிறை எந்த அளவுக்கு உயரத்தில் இருந்ததோ அதை விட இரண்டு மடங்கு அதிக உயரத்தில் இருக்கும். முதல் பிறை தென்பட்ட நேரத்தைப் போல இருமடங்கு அதிக நேரம் காட்சியளிக்கும்.
மூன்றாம் பிறை முதல் பிறையை போல மூன்று மடங்கு பெரிதாக இருக்கும். முதல் பிறை எந்த அளவுக்கு உயரத்தில் இருந்ததோ அதை விட மூன்று மடங்கு அதிக உயரத்தில் இருக்கும். முதல் பிறை தென்பட்ட நேரத்தைப் போல மும்மடங்கு அதிக நேரம் காட்சியளிக்கும்.
இப்படித்தான் தலைப் பிறையைப் பற்றி பலரின் கற்பனை இருக்கிறது. ஆனால் இத்தகைய நிபந்தனைகளுக்கு பிறை கட்டுப்படுவதில்லை. தலைப் பிறை முதன் முதலாக எந்த ஊரில் தென்படுகிறதோ அங்கே அது மெலிதாக அடிவானத்தில் சிறிது நேரம் காட்சியளிக்கும். அந்த நாட்டிலிருந்து 8 மணி நேரம் பின்தங்கி இருக்கும் நாட்டில் அது காட்சியளிக்கும்போது அதை விட இரு மடங்கு பெரிதாக காட்சியளிக்கும். ஆனால் அந்த நாட்டில் அப்போதுதான் அது முதன்முதலாக காட்சியளிக்கிறது. முந்தய நாளில் அமாவாசையாக இருந்திருக்கும். அந்த நாட்டில் அது பெரிதாக தெரிவதால் இரண்டாம் பிறையாகிவிடாது. இதற்கு காரணம் பிறை ஒவ்வொரு வினாடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். முதலில் தெரிந்த ஊரில் இருந்ததை விட 8 மணி நேரம் பின்தங்கிய ஊரில் அது காட்சியளிக்கும்போது அதன் வயது 8 மணி  நேரம் அதிகரித்து பெரிதாக வளர்ந்திருக்கும். மேலும் தலைப் பிறை எல்லா மாதமும் ஒரே நாட்டில் முதன்முதலில் தெரிவதில்லை. இம்மாதம் இந்தியாவில் முதன்முதலாக தெரிந்தால் அடுத்த மாதம் அமெரிக்காவில் தெரியலாம். நாம் மெல்லிய தலைப்பிறையை முதன் முதலாக பார்த்தால் அது அமெரிக்காவை அதே நாளில் அடையும் ஆனால் பார்க்க பெரிதாக இருக்கும். அமெரிக்கா தலைப்பிறையை முதன் முதலாக பார்த்தால் நாம் அதேநாளில் அப்பிறையைப் பார்க்க மாட்டோம். அந்த பிறை நம்மை மறுநாளே வந்தடையும் அப்போது அது பெரிதாகவே காட்சியளிக்கும்.
நமக்கு தெரிந்த பிறை அதே நாளில் அமெரிக்காவுக்கு தெரியுமாம்! ஆனால் அமெரிக்காவுக்கு தெரிந்த பிறை நமக்கு மறுநாள்தான் தெரியுமாம்! யாரை முட்டாளாக்க பாக்குற?
ஐயா! தொப்பி வைத்து தலைப்பாகை அணிந்திருப்பவரே! பூமி உருண்டை. அது மேற்கு-கிழக்காகத்தான் சுத்தும். அமெரிக்கா தலைப் பிறையைப் முதலில் பார்த்தா நமக்கு மறுநாள்தான் தெரியும். சவூதி தலைப் பிறையைப் முதலில் பார்த்தா நமக்கு மறுநாள்தான் தெரியும்.
எடுத்துக்காட்டிற்கு ஜூலை 5 (ஷவ்வால் 1437) தலைப்பிறை இந்தோனேசியாவில் காட்சியளிப்பதற்கு வாய்ப்பு அதிகமாவே இருக்கிறது. அங்கே பிறை தெரியும்போது அது மெலிதாக கீழே இருப்பது போல் காட்சியளிக்கும்.
(இந்த மென்பொருள் பிறை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை மிக துல்லியமாக காட்டக்கூடியது)
D:\Articles\~கேள்வி பதில்கள்\அளவில் பெரிதாக\Screenshot_2016-06-14-03-25-48.png
1.2% க்கும் அதிகமாக வளர்ந்துள்ள பிறை, சூரியன் மறைந்து 46 நிமிடத்திற்கு பின் சந்திரன் மறைகிறது. இந்தப் பிறை கண்ணுக்கு தெரியும்.
இதே பிறை ஜூலை 5 ஆம் தேதி கானா நாட்டில் தெரியும்போது. எப்படி இருக்கிறது என்று பாருங்கள்
D:\Articles\~கேள்வி பதில்கள்\அளவில் பெரிதாக\Screenshot_2016-06-14-03-26-02.png
அதே நாளில் தெரியும் அதே தலைப்பிறை ஆனால் இந்தோனேசியாவில் தெரிந்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாக வளர்ந்து இன்னமும் அதிக நேரம் காட்சியளிக்கிறது.
இதே பிறை இதே நாளில் பெரு நாட்டை அடையும்போது....
D:\Articles\~கேள்வி பதில்கள்\அளவில் பெரிதாக\Screenshot_2016-06-14-03-26-16.png
இன்னும் அதிகமாக வளர்ந்து இன்னும் அதிக நேரம் காட்சியளிக்கிறது. ஒரே நாளில் ஒரே பிறை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அளவில் வெவ்வேறு உயரத்தில் காட்சியளிக்கிறது.
இதே தான் ஜூன் 5 ஆம் தேதியும் நடந்தது. என்னெவென்று பாருங்கள்...
D:\Articles\~கேள்வி பதில்கள்\அளவில் பெரிதாக\Screenshot_2016-06-14-03-41-54.png
அந்நாளில் கோழிக்கோட்டில் சூரியன் மறையும்போது பிறை வெறும் 0.5% தான் வளர்ந்திருந்தது. 1% வளராதவரை பிறை கண்ணுக்கு தெரியாது. மேலும் சூரியன் மறைந்து 20நிமிடத்தில் சந்திரன் மறைந்துவிட்டது. சூரிய வெளிச்சத்தில் பிறை தெரிய வாய்ப்பே இல்லை. மேலே இருப்பது போல் கருப்பாகத்தான் நிலவு பூமியை நோக்கி இருந்தது.
அதே நாளில் பெருவில் சூரியன் மறையும்போது
D:\Articles\~கேள்வி பதில்கள்\அளவில் பெரிதாக\Screenshot_2016-06-14-03-41-42.png
1.2% பிறை வளர்ந்துவிட்டது. சூரியன் மறைந்து 49 நிமிடங்களுக்கு பிறகு சந்திரன் மறைந்தது. அப்பிறையை பெரு மக்கள் பார்த்தார்கள். நமக்கு மறுநாள் தான் பிறை தெரியும். அடுத்தநாளில் பிறை தெரியும்போது எப்படி இருக்குமென்று பாருங்கள்...
D:\Articles\~கேள்வி பதில்கள்\அளவில் பெரிதாக\Screenshot_2016-06-14-03-42-07.png
ஜூலை 6 கோழிக்கோட்டில் சூரியன் மறையும்போது பிறை 3.1% வளர்ந்துவிட்டது. அது பெரிதாகத்தான் தெரியும். ஆனால் இதுதான் கோழிக்கோட்டு மக்களுக்கு முதல் பிறை.
பெருவில் ஜூன் 5 ஆம் தேதி தெரிந்த பிறை ஏன் இந்தியாவில் தெரியவில்லை. இந்தியர்கள் இளிச்சவாயன்களா?
சார்! நீங்க படித்தவர்தானே! காலேஜுக்கெல்லாம் போநீங்கள்ல! பூமி உருண்டை சார்! அது மேற்கிலிருந்து கிழக்காகத்தான் சுத்தும். இந்தியர்கள் இளிச்சவாயன் இல்லையென்பதால் உங்களுக்காக அது திருப்பி சுத்தாது.
பிறை என்பது ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஸ்டெப் ஸ்டெப்பாக, படேர், டமீர் என்று வளராது. ஒவ்வொரு வினாடியும் அது வளர்ந்துகொண்டே இருக்கும். பூமி உருண்டையாக இருப்பதாலும் அது சுற்றிக்கொண்டிருப்பதாலும் பூமியில் ஒவ்வொரு பகுதியினரும் ஒவ்வொரு அளவில் தலைப் பிறையைப் பார்ப்பார்கள்.
ஹதீஸிலிருந்து....
அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதன் நக்லா என்ற இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது தலைப்பிறையைப் பார்க்க முயன்றோம். (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாம் இரவின் மகன் என்றனர். மற்றும் சிலர் இரண்டாம் இரவின் மகன் என்றனர். நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிக் கூறினோம். அதற்கவர்கள் நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள்?'' என்று கேட்டார்கள். இந்த இரவில் பார்த்தோம் என்று விடையளித்தோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “பிறையைப் பார்ப்பதற்காகவே அதனை (காட்சி அளிக்கும் நேரத்தை) அல்லாஹ் நீட்டுகிறான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவுக்குரியது தான்என்று விளக்கமளித்தார்கள்.
இந்த ஹதீஸின் வார்த்தை அமைப்புகள் சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மேலே உள்ள இதே ஹதீஸை ஒரு எளிய உரையாடலாக மாற்றி கீழே தந்துள்ளேன்.
அபுல் பக்தரீ சயீத் (ரஹ்):- நாங்கள் தலைப்பிறையைப் பார்த்தோம். சிலர், அது மூன்றாம் இரவின் மகன் என்றனர். வேறுசிலர், ”(அல்ல) அது இரண்டாம் இரவின் மகன் என்றனர்
இப்னு அப்பாஸ் (ரலி):- எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?
அபுல் பக்தரீ சயீத் (ரஹ்):- இந்த இரவில்
இப்னு அப்பாஸ் (ரலி):- அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும்
இந்த ஹதீஸில் சில கேள்விகளைக் கேட்டு அவற்றின் விடைகளை தெரிந்துகொள்வோம்.
1. பார்ப்பதற்காக அல்லாஹ் எதை நீட்டியுள்ளான்?
2. நீங்கள் கண்ட இரவுக்குரியதே என்று எந்த இரவை இப்ன் அப்பாஸ் ரலி கூறுகிறார்கள்?
நாம் பார்ப்பதற்காக காட்சி அளிக்கும் நேரத்தை அல்லாஹ் நீட்டுகிறான். இந்த ஹதீஸிற்கு 27 நாட்கள் கொண்ட சிடேரியல் மாதத்தை 29/30வரை அல்லாஹ் நீட்டுகிறான் என்று சிலர் கொடுக்கும் மடைமை விளக்கத்திற்கு இன்ஷா அல்லாஹ் தனியாக விளக்கம் கொடுப்போம்.
நீங்கள் கண்ட இரவுக்குரியதே என்று எந்த இரவை இப்ன் அப்பாஸ் ரலி கூறுகிறார்கள்? பிறையைப் பார்த்தவர்களில் சிலர் அது இரண்டாம் இரவுக்குரிய பிறை என்கின்றனர், சிலர் அது மூன்றாம் இரவுக்குரிய பிறை என்கின்றனர். நீங்கள் பார்த்த இரவுக்குரியது என்று இப்ன் அப்பாஸ் ரலி விளக்கம் கொடுக்கிறார். எனில் அது இரண்டாம் இரவுக்குரியதா அல்லது மூன்றாம் இரவுக்குரியதா? சிலர் இந்த ஹதீஸை வைத்து பிறைகள் தினமும் ஒரு தேதியைக் காட்டும் அதற்கு இதுதான் ஆதாரம் என்கின்றனர். அவர்களுக்கு சொல்வது போல் நீங்கள் பார்த்த இரவுக்குரியது என்றால் இரண்டாம் இரவுக்குரியது என்று சொன்னவர்களுக்கு அது இரண்டாம் இரவும் மூன்றாம் இரவுக்குரியது என்று சொன்னவர்களுக்கு மூன்றாம் இரவும் என்று இப்ன் அப்பாஸ் ரலி தீர்ப்பு வழங்கினார்களா? இது அறிவுடைமையா? இன்று எத்தனையாவது இரவு என்பதை நீங்கள் அந்த இரவில் பிறை பார்த்து தெரிந்துகொள்வீர்களா அல்லது எண்ணிக்கையின் அடிப்படையில் சொல்வீர்களா. இது ஏழாம் இரவு என்று சொல்வதற்கு நீங்கள் பிறையைப் பார்த்து சொல்வீர்களா அல்லது முதல் பிறையிலிருந்து எண்ணிச் சொல்வீர்களா. முதல் தேதி தெரிந்துவிட்டால் அதிலிருந்து எண்ணுவதுதான் உலக வழக்கம், அறிவுடைமை, உண்மை மற்றும் நபி வழி.
முஸ்லிம் 2087. அல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "ஸம்ஸம்" கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். "ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!" என்று சொன்னார்கள். "இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?" என்று நான் கேட்டேன். அதற்கு, "ஆம்" என்று அவர்கள் விடையளித்தார்கள்.
எனவே, பார்த்த இரவுக்குரியது என்பது ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டும் என்றோ அவ்வாறு ஒவ்வொரு நாளும் பார்க்கும்போது அது உங்களுக்கு என்ன அளவில் தெரிகிறதோ அந்த அளவுக்குரிய பிறை என்றோ பொருள் கிடையாது. மேலும் இரண்டாம் இரவு என்று சொன்னவர்களுக்கு இரண்டாம் இரவும் மூன்றாம் இரவு என்று சொன்னவர்களுக்கு மூன்றாம் இரவும் வராது. இப்ன் அப்பாஸ் ரலி நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள் என்று கேட்டுவிட்டு அந்த ஒரே ஒரு இரவைத்தான் சொன்னார்கள். அது எந்த இரவு? அவர்கள் முதல் பிறையை ஏற்கனவே பார்த்திருந்தால் அது எந்த இரவுக்குரிய பிறை என்பதை அவர்கள் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொண்டிருப்பார்கள். சந்தேகமும் வந்திருக்காது! சர்ச்சையும் வந்திருக்காது! எனில் அது எந்த இரவு? அவர்கள் பிறையைத் தேடவேண்டிய (29ஆம் பகல் முடிந்து வரும்) 30ஆம் இரவு பிறையைப் பார்க்க ஓன்று கூடுகிறார்கள். அது அளவில் பெரிதாக இருப்பதால் முதல் பிறையை நாம் பார்க்க தவறிவிட்டோமோ என்று அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. அதன் அளவை வைத்து சிலர் அதை 2ம் பிறை என்று மற்றும் சிலர் அதை 3ம் பிறை என்றும் சொல்கின்றனர். நீங்கள் சந்தேகம் கொள்ளவே வேண்டாம். பிறையைப் பார்ப்பதற்காகவே அல்லாஹ் அது காட்சியளிக்கும் நேரத்தை நீட்டி வைத்துள்ளான் . எனவே நீங்கள் அது பிறையைத் தேடிய முதல் இரவுக்குரியதே என்று ஒரு நபி மொழியைச் சொல்லி இப்ன் அப்பாஸ் தீர்ப்பு வழங்குகிறார்கள்.
“நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள் என்று கேட்டுவிட்டு அதன் பின்னர் தான் அந்த இரவுக்கு உரிய பிறைதான் அது என்று இப்ன் அப்பாஸ் கூறுவதை அனைவரும் கவனிக்க தவறுவது ஏன்? அது எந்த இரவு என்று அறிந்துகொள்ள முற்பட்டால் இந்த ஹதீஸ் விளங்கி விடுமே! அது எந்த இரவு என்பது ஹதீஸின் ஆரம்பத்தில் தெளிவாக வருகிறது. அது ஹிலால் எனும் தலைப்பிறையை தேடும் இரவு. 29 முடிந்து வரும் 30 ஆம் இரவு.
அவர்கள் தலைப்பிறையைதான் தேடினார்கள் என்பதையும், எந்த இரவில் பார்த்தீர்கள் என்று கேட்டுவிட்டுதான் அந்த இரவுக்குரியது என்று இப்னு அப்பாஸ் தீர்ப்பு வழங்கினார்கள் என்பதையும் வசதியாக இருட்டடிப்பு செய்து விடுகின்றனர். பிறைகள் தேதியைக் காட்டாது மாறாக நீங்கள் எண்ணி வந்த நாட்கள்தாம் தேதியைக் காட்டும் என்பது இந்த ஹதீஸ் கூறும் உண்மையாகும்.
பிறை எந்த அளவு பெரிதாக இருக்கிறதோ அது அந்த நாளுக்குரிய பிறை என்று விளங்குவது மடைமை. அப்படி விளங்கினால் இரண்டாம் இரவுக்குரியது என்று சொன்னவர்களுக்கு அது இரண்டாம் இரவும் மூன்றாம் இரவுக்குரியது என்று சொன்னவர்களுக்கு மூன்றாம் இரவும் என்று மூடத்தனமான கருத்து வரும். மேலும் அது “பிறையைப் பார்ப்பதற்காகவே அதனை (காட்சி அளிக்கும் நேரத்தை) அல்லாஹ் நீட்டுகிறான்” எனும் கருத்தையும் அர்த்தமற்றதாக மாற்றிவிடும். பின்னர் அதை விளக்குவதற்காக பொருத்தமில்லாத சிடேரியல் மாதம் எனும் நட்சத்திர மாதத்தை சாட்சிக்கு அழைக்க வேண்டி வரும்.
பிறையின் அளவுகள் தேதிகளைக் காட்டாது என்பதை அதிகமான விஞ்ஞான விளக்கத்துடன் தெரிந்துகொள்ள பார்க்க:
திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் எனும் கட்டுரையை வாசிக்கவும்  piraivasi.com/2016/02/20-2.html
திரிக்கப்பட்ட ஹதீஸ்கள்  http://www.piraivasi.com/2017/02/13.html