Wednesday 4 January 2017

சவுதி அரசு ரகசியமாக தேதியை மாற்றியதா?

சவுதி அரசு ரகசியமாக தேதியை மாற்றியதா?
Date Published: 27-Sep-2016
துருக்கி கான்பரன்சை வைத்து கமிட்டியினர் ஒரு கதை எழுதி தங்கள் குழந்தைக்கு தங்களது இன்ஷியலை கொடுக்காமல் சமூக வலைதளங்களில் பரப்ப விட்டனர். பார்க்க http://www.piraivasi.com/2017/01/1.html ஹிஜ்ரி காங்கிரஸ் என்று துருக்கியில் நடந்த கலந்தாலோசனைக்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது. பிறை பார்ப்பது மூடத்தனமான பழங்கால செயல் மேலும் இஸ்லாமிய வணக்கங்கள் காலண்டரை அடிப்படையாக கொண்டே இருக்கவேண்டும் எனும் கொள்கையுள்ளவர்கள் மட்டுமே அந்த கான்பரன்சில் கலந்து கொண்டனர். அதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு காலண்டரை வைத்துள்ளனர். எல்லோருமே தங்கள் காலண்டரை ஹிஜ்ரி காலண்டர் என்றே அழைக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்களுக்குள் இருக்கும் காலண்டர் வேற்றுமைகளை களைந்து ஒரே காலண்டரை வழிபடவேண்டும் என்று ஆலோசனை செய்தனர். எனினும் எந்த காலண்டரும் தேர்ந்தெடுக்கப்படாமல் அந்த கூட்டம் கலைந்தது. ஆனால் இந்த ஹிஜ்ரா கமிட்டியோ உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் மார்க்க அறிஞர்களும் ஓன்று கூடி ஹிஜ்ரா கமிட்டி காலண்டரை பின்பற்ற வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக ஒரு கட்டுக்கதையை முகவரியில்லாமல் பரப்பவிட்டு ஆனந்தம் அடைந்தனர். அல்லாஹ்வின் உதவியால் அந்த வதந்தி முறியடிக்கப்பட்டது.
அதுபோல இம்முறை இவர்கள் உருவாக்கியதுதான் இந்தக் கதை. சவூதி அரசு செப்டம்பர் 3ம் தேதி துல்ஹஜ் 1 என்று அறிவித்தது அதன் அடிப்படையிலேயே ஹஜ் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவர்களின் உம்முல்குரா காலண்டரில் செப்டம்பர் 2ம் தேதி துல்ஹஜ் 1 ஆக இருந்தது. துல்ஹஜ் பிறையை அறிவிப்பு செய்த பின்னும் அவ்வாறே இருந்தது. உம்முல்குறாவைப் போல ஹிஜ்ரா காலண்டரிலும் செப்டம்பர் 2ம் தேதி துல்ஹஜ் 1 ஆக இருந்தது. இந்த ஒற்றுமை வேற்றுமைகளை வைத்து ஹிஜ்ரா கமிட்டி லாபம் பார்க்க முயற்சித்ததுதான் இந்த கட்டுக்கதை. செப்டம்பர் 3ல் துல்ஹஜ் பிறையை தொடங்கி செப்டம்பர் 12ல் பெருநாள் கொண்டாடிய சவூதி அரசு சிலநாட்களுக்குப் பின் தவறை உணர்ந்து ஹிஜ்ரா கமிட்டியின் காலண்டர்தான் சரி என ஏற்றுக்கொண்டு ரகசியமாக தங்கள் தேதியை மாற்றிவிட்டதாக அமைவாசையினர் பரப்புகின்றனர். இதன் உண்மை நிலையை பார்ப்போம்.
ஹிஜ்ரி நாட்காட்டிபடி இன்று 22-09-2016 வியாழக்கிழமை துல்ஹிஜ்ஜா பிறை 21 ஆகும்.

சவுதி அரசாங்கத்தின் துல்ஹிஜ்ஜா மாத பிறை அறிவிப்பின் படி, இன்றைய தேதி துல்ஹிஜ்ஜா பிறை 20 என ஒருநாள் பின்தங்கி இருக்க வேண்டும்.

இதை படிக்கும் நீங்கள் சவுதி தொலைக் காட்சி மற்றும் சவுதி அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் தேதியை பாருங்கள். இன்று 22-09-2016 வியாழக்கிழமை துல்ஹிஜ்ஜா பிறை 21 என்று அவர்கள் மாற்றியிருப்பதை காணலாம்.

ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள்தான் சரியானது என்பதை தாமதமாக உணர்ந்து, கடந்த 4 தினங்களுக்கு முன்னரே ரகசியமாக இப்படி தேதியை மாற்றி விட்டது சவுதி அரசு.
படங்களும் கருப்பு வெள்ளையில் இருப்பவைகளும் ஹிஜ்ராவின் புலனாய்வு அறிக்கைகளாகும்
சவூதி அரசு அலுவலக தேவைகளுக்காக உம்முல்குறா நாட்காட்டியை தயாரித்தது. பின்னர் பிறை பார்க்க சோம்பேறித்தனம் கொண்டதாலும் இன்னபிற காரணங்களாலும் பிறையை பார்க்காமல் கலண்டரை பார்த்து நோன்பையும் பெருநாட்களையும் சவூதி அரசு அறிவித்து வருகிறது.
அமாவாசை நாளில் சூரியன் மறைந்த பின் சந்திரன் மறைந்தால் அந்த சூரிய மறைவில் மக்ரிபிலிருந்து மாதம் பிறக்கும் என்பது உம்முல்குரா காலண்டரின் அடிப்படை. அமாவாசை நாளில் சூரியன் மறைவதுக்கு முன் சந்திரன் மறைந்தாலோ அல்லது சூரியன் மறைந்த பின் அமாவாசை நடந்தாலோ அவர்கள் மாதத்தை 30ஆக முழுமைப்படுத்துவார்கள். இந்த அடைப்படியில் அவர்கள் ஏற்கனவே அமாவாசையையும் சூரிய சந்திர மறைவு நேரங்களையும் கணித்து பல வருடங்களுக்கு காலண்டர் போட்டுவிட்டனர். அதுதான் உம்முல்குரா காலண்டர்.
சவுதியில் பிறைபார்க்கப்படுவதில்லை. காலண்டர்தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் 29 முடிந்துவரும் பிறை தேடும் இரவில் சூரியன் மறைந்து மிக குறைந்த நேரத்தில் சந்திரன் மறைந்தால் அவர்கள் உம்முல்குறா காலண்டரின் தேதியை பின்பற்றாமல் அந்த மாதத்தை முப்பதாக முழுமை செய்வர். இது சென்ற 1436(2015) துல் ஹஜ்ஜிலும் நடந்தது. முன்னரும் பல முறை நடந்துள்ளது.
சென்ற 1437 (2016)ல் ரமலான் மாதப் பிறை சவுதியில் தெரியவே இல்லை. சூரியன் மறைந்து 20நிமிடங்களுக்குப்பின் சந்திரன் மறைந்தால் பிறை பிறந்துவிட்டதாக, ரமலான் தொடங்கிவிட்டதாக அறிவித்தார்கள். அன்றய தினம் எந்த அரபு நாடுகளில் பிறை தெரிய வாய்ப்பே இல்லை. ஆப்ரிக்க கண்டத்தில் கூட பிறைத் தெரிய வாய்ப்பே இல்லை.
உம்முல் குறா காலண்டரின் அடிப்படையில் செப்டம்பர் 1 மாலை துல்கஅதா 29முடிந்தது. மார்க்க அடிப்படையில் அது பிறை தேடும் இரவு ஆகும். அன்று மக்காவில் சூரியன் மறைந்து 2 நிமிடங்களில் சந்திரன் மறைந்தது. எனவே அவர்கள் காலண்டரில் செப்டம்பர் 2 துல் ஹஜ் முதல் பிறையாக இருந்தது. எனினும் சூரியன் மறைந்து மிக குறைந்த நேரத்தில் (2 நிமிடத்தில்) சந்திரன் மறைந்தால் மாதத்தை 30ஆக முழுமையாக்கிட சவூதி முடிவு செய்தது.
செப்டம்பர் 2 30ஆம் நாளாக முழுமையாக்கி, சவூதி அரசு செப்டம்பர் 3ம் தேதி துல்ஹஜ் 1 என்று அறிவித்தது அதன் அடிப்படையிலேயே ஹஜ் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவர்களின் உம்முல்குரா காலண்டரில் செப்டம்பர் 2ம் தேதி துல்ஹஜ் 1 ஆக இருந்தது. காலண்டரில் அவர்கள் தேதியை மாற்றவில்லை. துல்ஹஜ் பிறையை அறிவிப்பு செய்த பின்னும் அவ்வாறே இருந்தது. சவூதி உம்முல்குரா காலண்டரை நாம் தினமும் பார்த்துவருவதால் இதை உறுதியாக சொல்கிறோம்.
உம்முல்குறாவைப் போல ஹிஜ்ரா காலண்டரிலும் செப்டம்பர் 2ம் தேதி துல்ஹஜ் 1 ஆக இருந்தது. இந்த ஒற்றுமையை வைத்து ஹிஜ்ரா கமிட்டி லாபம் பார்க்க முயற்சித்ததுதான் இந்த கட்டுக்கதை. செப்டம்பர் 3ல் துல்ஹஜ் பிறையை தொடங்கி செப்டம்பர் 12ல் பெருநாள் கொண்டாடிய சவூதி அரசு சிலநாட்களுக்குப் பின் தவறை உணர்ந்து ஹிஜ்ரா கமிட்டியின் காலண்டர்தான் சரி என ஏற்றுக்கொண்டு ரகசியமாக தங்கள் தேதியை மாற்றிவிட்டதாக அமைவாசையினர் பரப்புகின்றனர்.
வணக்க வழிபாட்டிற்காக சவூதி அரசு தேதியை மாற்றும்போது அந்த மாற்றங்கள் காலண்டரிலும் ஆவணங்களிலும் இடம்பெறுவதில்லை!!!
அவர்களின் அதிகாரப்பூர்வ காலண்டர் இணையதளத்தில் கூட ஏற்கனவே இருந்த தேதி அப்படியே இருக்கும். இன்னும் பிற இணைய தளங்களிலும் ஆவணங்களிலும் ஏற்கனவே உம்முல்குறா என்ன தேதியை காட்டியதோ அது அப்படியே இருக்கும். நீங்களே இந்த தளத்தில் இதைப் பார்க்கலாம் http://www.ummulqura.org.sa/yearcalender.aspx?y=1437&l=True . துல் கஅதாவிலும் இக்காலண்டர் இவ்வாறே இருந்தது. துல் ஹஜ்ஜிலும் இவ்வாறே எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.
இந்த சாதாரண விஷயம் தெரியாத ஹிஜ்ரா கமிட்டியினர் டிவி சானலை மாற்றும் பொது எதேச்சையாக கண்ணில் பட்ட சவூதி சானலின் தேதியையும் பின்னர் புலனாய்வு என்ற பெயரில் ஹிஜ்ராவினர் வலையத்தில் சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தளத்தை பார்வையிட்டதும் அவர்களின் பொதுவறிவின்மையை மீண்டுமொருமுறை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சில மாதங்களில் ஹிஜ்ரா காலண்டரும் சூரிய சந்திர மறைவை அடிப்படையாகக் கொண்ட உம்முல்குறா காலண்டரும் ஒத்துபோகும். இந்த துல் ஹஜ் மாதத்திலும் உம்முல் குறா காலண்டரும் ஹிஜ்ரா காலண்டரும் ஒத்துபோனது. ஆனால் சவூதி அரசு ஹஜ்ஜின் தேதியை ஒருநாள் பின்னுக்கு மாற்றி அறிவித்ததால் அதை பொறுத்துக்கொள்ள இயலாத ஹிஜ்ராவினர் இவ்வாறு தங்கள் குறை புத்தியில் உதித்ததை பரப்புகின்றனர்.
இவர்கள் இன்று வைத்துள்ள அமைவாசைக் காலண்டரைத்தான் ஒரு காலத்தில் உம்முல்குரா காலண்டராக சவூதி அரசு வைத்திருந்தது. பின்னர் 1998இல் அதை அவர்கள் குப்பையில் வீசி எறிந்தனர். சவூதி குப்பையில் வீசிய காலண்டரைத்தான் அமைவாசைக் கமிட்டி எடுத்துவந்து அல்லாஹ்வின் காலண்டர் என்று மக்களை ஏய்க்கின்றனர்.
சவூதி அரசு காலண்டரில் தேதியை மாற்றவே இல்லை. பின்னர் ஹிஜ்ரா காலண்டரைத்தான் சரி என்று உணர்ந்து ரகசியமாக அமாவாசை அடிப்படையில் தேதியை மாற்றவும் இல்லை.
அரசியல் வியாதிகள் இயற்கை சீற்றங்கள் நடந்தால் கூட அது தங்களின் தலைவரின் கட்டளையால் நடந்ததாக பீற்றுவர். சிலர் அரசின் நலத்திட்டம் கிடைப்பதற்காக அந்த இயற்கை சீற்றங்கள் தங்களுக்கும் வராதா என இறைவனை மறந்து அவர்களை புகழ்வதையும் காண முடிகிறது. அதே போன்ற ஒரு கேடுகெட்ட நிலைமையில்தான் ஹிஜ்ரா கமிட்டி இருக்கிறது. தெருநாய் சாலையோரத்தில் செத்துக் கிடந்தாலும் அது ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றாததால் செத்துவிட்டதாக சொல்வதற்கு இவர்கள் தயங்கமாட்டார்கள். தங்கள் காலண்டரை வழிபடாதவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்று குரளி வித்தை காட்டும் அளவிற்கு கமிட்டி தள்ளப்பட்டுள்ளது. விரைவில் இஸ்லாத்தின் எதிர்க்கும் இந்தக் கூட்டம் அழிந்தே போகும்.
குறிப்பு: உம்முல் குறாவும் இஸ்லாத்திற்கு எதிரான ஒரு காலண்டரே. சூரியனுக்கு பின் சந்திரன் மறைந்தால் புதுமாதம் பிறப்பதாக அல்லாஹ்வோ அவன் தூதரோ சொல்லவில்லை.

-பிறைவாசி.காம்