Friday 16 October 2015

மூன் காலண்டர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்கள்:
1. க்ரிகொரியன் நாட்காட்டி
2. க்ரிகொரியன் நாட்காட்டியில் சர்வதேச நேரத்தில் கஞ்சங்ஷன் நேரம்
3. அறபு மாதங்களின் பெயர்கள்
செய்முறை:
க்ரிகொரியன் நாட்காட்டியை உங்கள் தேவையான வருடத்திற்கு கூகுளில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள்
கஞ்சங்ஷன்  நடக்கும் நேரத்தை இந்த http://astropixels.com/ephemeris/phasescat/phases2001.html தளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள். Timeanddate.com இணையதளத்திலிருந்தும் எடுக்கலாம். Timeanddate லிருந்து எடுக்கும்போது எச்சரிக்கையாக மூன் காலண்டர்காரர்களின் கிப்லாவான (Greenwich) க்ரெனிச்சின் நேரம் பயன்பாட்டில் இருக்கும் எதாவது ஒரு ஊரை தேர்ந்தெடுத்து moon phases எடுக்கவும் (Accra அல்லது Abidjan)
1438ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தின் முதல் நாள் க்ரிகொரியன் நாட்காட்டியின் எந்த நாள் என்று கண்டு பிடிக்க வேண்டும். இது சிரமமான வேலையல்ல. காலம் காலமாக இஸ்லாமிய மாதங்களின் சுழற்சி க்ரிகொரியன் காலண்டரில் எந்த நாள் என்று தெரிந்து கொண்டுதான் வருகிறோம். எனவே சென்ற ஆண்டின் துல்ஹஜ் மாதம் எந்த கிரிகோரியன் நாளில் முடிந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா மாதமும் இஸ்லாமிய நாளை எண்ணி வருபவர்களுக்கு இது சுலபம். இல்லையெனில் அதை எந்த காலண்டரில் இருந்து வேண்டுமானாலும் எடுத்துகொள்ளலாம். சிவகாசி காலண்டரோ, உம்மல் குரா கலண்டரோ அல்லது islamicfinder காலண்டரையோ பார்த்துக்கொள்ளுங்கள். எந்த காலண்டராக இருந்தாலும் ஓரிரு நாட்கள்தான் வித்தியாசம் வரும்.
1437 துல் ஹஜ் மாதத்தின் கடைசி நாள் அக்டோபர் -2 2016 ஆக ஏறக்குறைய வரும். இதற்கு அருகாமையில் இருக்கும் conjunction dataவை  பாருங்கள்.  மேலே அது new moon என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர்-2 க்கு அருகாமையில் இருக்கும் new moon Oct 1 00:12 ஆகும். அப்படியெனில் Oct 1ம் தேதி மூன் காலண்டரில் முந்தைய மாதத்தின் கடைசி நாள். அந்த நாளை நீங்கள் கையில் வைத்திருக்கும் க்ரிகொரியன் காலண்டரில் NM என்று அடையாளப்படுத்துங்கள். NM என்றால் new moon தமிழில் அமாவாசை என்று பொருள். அதற்கு அடுத்த நாளான அக்டோபர்-2ஐ முஹர்ரம் 1 1438 என்று குறித்துக்கொள்ளுங்கள்.
இதை கீழே காட்டியுள்ளோம்.
இதற்கு அடுத்த conjunction எப்போது நடக்கிறது என்று conjunction dataவில் பாருங்கள். Oct 30  17:38 என்று இருக்கும். இப்போதும் அதேபோல் அக்டோபர் 3௦அன்று NM குறித்துக்கொள்ளுங்கள். அதற்கு அடுத்த நாளை அதாவது அக்டோபர் 31 ஐ அடுத்த மாதத்தின் முதல் நாளாக குறித்துக்கொள்ளுங்கள் அதாவது சஃபர்-1. இதை கீழே காட்டியுள்ளோம்.
இப்போது முஹர்ரம்-1 என்று எழுதியதன் அடுத்த நாளிலிருந்து NM வரையில் 2, 3, 4, 5 என்று ஏறுவரிசையில் எழுதிவாருங்கள். கீழே காட்டியுள்ளது போல்.
முஹர்ரம் மாதத்தை முடித்துவிட்டோம். இனி சஃபர் மாதத்தை முடிப்போம். அக்டோபர் 31க்கு அடுத்து வரும் conjunction எப்போது நடக்கிறது என்று conjunction dataவில் பாருங்கள். Nov 29  12:18 என்று இருக்கும். இப்போதும் அதேபோல் நவம்பர் 29 அன்று NM குறித்துக்கொள்ளுங்கள். அதற்கு அடுத்த நாளை அதாவது நவம்பர் 3௦ ஐ அடுத்த மாதத்தின் முதல் நாளாக குறித்துக்கொள்ளுங்கள் அதாவது ரபியுல் அவ்வல்-1 என்று. இதை கீழே காட்டியுள்ளோம்.
பின்னர் நவம்பர் -2 முதல் 29 வரை 2, 3, 4, 5 என்று ஏறுவரிசையில் எழுதிவாருங்கள். கீழே காட்டியுள்ளது போல்
இப்படியே ஒவ்வொரு மாதமும் அடையாளப்படுத்துங்கள், பல நூற்றாண்டுகளுக்கான மூன் காலண்டரை தயாரித்து விடலாம்.
சில ரசிகர்கள் இப்போது கோபப்படக்கூடும் “எங்கள் காலண்டரில் பிறையின் படித்தரங்களும் பல குவாட்டர்களும் இருக்குமே அது நீ தயாரித்ததில் இல்லையே” என்று.
படித்தரத்தின் படங்களை இதிலிருந்து வெட்டி ஒட்டிக்கொள்ளுங்கள். NM க்கு முந்தய நாளில் UQ என்று எழுதி வையுங்கள். குவாட்டர்களும் நாம் மேலே சொன்ன இணைய தளத்தில் இருக்கிறது அதையும் அந்தந்த நாளில் குறித்துக்கொள்ளுங்கள். இனி மீதம் இருப்பது ஒரு வரை படம். http://www.timeanddate.com/worldclock/sunearth.html இந்த இணைய தளத்திற்கு சென்று மேலே நாம் எடுத்த கஞ்சங்க்ஷன் நேரத்தை கொடுத்தால் வரைபடமும் கிடைக்கும். ரசிகர்கள் இப்போது மகிழ்ச்சி அடைவார்கள்.
மூன் காலண்டர் ரெடி.
நீங்கள் இந்த மூன் கலண்டரை தயாரிக்க பயன்படுத்தியவை என்னென்ன என்று சற்று யோசித்துப்பாருங்கள். 1. கிரிகோரியன் காலண்டர். 2. கஞ்சங்க்ஷன் நடக்கும் நேரம் அதுவும் கிரிகோரியன் காலண்டர் தான். 3. மாதங்களின் சுழற்சி, அது நபி ஸல் பிறப்பதற்கு முன்பிருந்தே பல நூற்றாண்டுகளாக கவனிக்கப்படும் சுழற்சியே. 4. மாதங்களின் பெயர்கள் அவையும் நபி ஸல் பிறப்பதற்கு முன்பிருந்தே பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருப்பவை.
இந்த தயாரிப்பில் ஒரு குர்ஆன் வசனமோ ஒரு ஹதீஸோ பயன்படுத்தப்படவில்லை. அதே வேளையில் தொழுகை நேரங்களை கணக்கிடுவது எப்படி என்று இங்கே வாசித்துப்பாருங்கள். ஓவ்வொரு தொழுகை நேரத்திற்கான கணக்கும் ஒரு ஹதீஸை அடிப்படையாக கொண்டே இருக்கும். http://hafsa13.blogspot.com/2015/04/PrayerTimes.html. நமது தொழுகை நேரக்கணக்கை இவர்கள் இவர்களின் காலண்டர் கணக்குடன் ஒப்பிடுவது எவ்வளவு தவறு என்று விளங்கும்.
முழுக்க முழுக்க க்ரிகொரியன் நாட்காட்டியை மட்டுமே பயன்படுத்தி அதன் மேல் கஞ்சங்க்ஷன் (new moon) எனும் சாயத்தை பூசி விட்டு இது மூன் கலண்டர் என்று மக்களை ஏய்க்கின்றனர்.
இந்த வாதத்திற்கு இவர்களின் பதில்
  1. க்ரிகொரியன் நாட்காட்டியில் மாதங்களின் பெயர்கள்  ஜனவரி பிப்ரவரி மார்ச் என்று இருக்கும் எண்கள் மூன் காலண்டரில் முஹர்ரம் சஃபர் ரபி-1 ரபி-2 என்று அரபியில் இருக்கும். இரண்டும் ஒன்றா?
  2. க்ரிகொரியன் நாட்காட்டியின் 28, 29, 30 ,31 என்று நான்கு விதமான நாட்கள் இருக்கும் எங்கள் மூன் கலண்டரில் 29, 3௦ என்று இரண்டு எண்ணிக்கை கொண்ட மாதங்கள் மட்டுமே இருக்கும்
  3. எங்கள் மூன் கலண்டரில் பிறையின் படித்தரங்கள் இருக்கும் க்ரிகொரியன் கலண்டரில் அது இருக்காது
  4. மூன் கலண்டரில் 4 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நாளை சேர்க்க வேண்டும். எங்கள் மூன் காலண்டரில் அது தேவை இல்லை.
  5. கிரிகோரியன் நாட்காட்டியில் ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை, லீப் நாளாக ஒரு நாளை கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும். எங்கள் காலண்டரில் அப்படி இல்லை
  6. கிரிகோரியன் நாட்காட்டியின் தேதிகள் நள்ளிரவு 12 மணிக்கு துவங்குகிறது மூன் கலண்டரில் பிறையின் ஃபஜ்ரிலிருந்து துவங்குகிறது
இதெல்லாம் உன் மிட்டாய் சிகப்பு கலர் என் மிட்டாய் பச்சை கலர் என்று சிறுபிள்ளைகள் சொல்லும் ஒப்பீடு போலவே இருக்கிறது. மாதத்தின் பெயர்கள், மற்றும் நாட்களின் எண்ணிக்கை மிட்டாய்  கலர் ஒப்பீடுதான்.
பிறையின் படித்தரங்கள் கஞ்சன்க்ஷன் சாயம் பூசும்போது வந்துவிடுகிறது.
வாலோடு சேர்ந்து இருப்பதுதான் நாய். வாலையும் சேர்த்துதான் அதை நாய் என்று அழைக்கிறோம். அதே போல் லீப் வருட முறையும் சேர்ந்துதான் அது க்ரிகொரியன் கலாண்டர். அதை அதிலிருக்கும் குறையாக காண்பது நாய்க்கு இருக்கும் வாலை குறை சொல்வது போலாகும் (உவமை சொல்வதற்கே பயமாக உள்ளது. இவர்களுக்கு உவமையை விளங்க தெரியாது)
இவர்களின் நாட்காட்டியிலும் நள்ளிரவு 12மணிக்குதான் நாள் மாறுகிறது.
என்னதான் நீங்கள் நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்று கூறினாலும் நோட்டீஸ் அடித்தாலும் மேடையில் பேசினாலும் உங்கள் நாட்காட்டியில் நாளின் ஆரம்பம் (நீங்கள் கிருத்துவர்களின் கிப்லா என்று சொல்லிக்கொண்டே அதை உங்களுக்கும் கிப்லாவாக ஆக்கிக்கொண்டீர்களே அந்த) க்ரெனிச்சில் இரவு 12மணி ஆகும்போதுதான் உங்கள் காலண்டரில் நாளும் மாதமும் துவங்குகிறது. சான்றுகள் இதோ!
ரபிஉல் அவ்வல் 1436இன் இறுதியில் நடக்கும் அமாவாசை 18.02.15 புதன் கிழமை 23:46:54 க்கு நடந்தது. நள்ளிரவு ஆவதற்கு 13மூன்று நிமிடங்களும் 7 நொடிகளுமே இருந்தது. அடுத்தநாள் வியாழக்கிழமையில் மாதத்தை துவங்கினீர்கள்.
துல் ஹிஜ்ஜா 1436இன் இறுதியில் நடக்கும் அமாவாசை 13.10.15 செவ்வாய் கிழமை 00:05:34 க்கு நடந்தது. நள்ளிரவு கடந்து 5நிமிடம் ஆகிவிட்டதால் மீதம் இருக்கும் 23மணி 55நிமிடத்தையும் சேர்த்து ஒரு நாளை இறுதி நாளாக கணக்கிட்டுவிட்டீர்கள்.
ஒரு மாதத்தில் 13நிமிடங்களுக்கு பின் வரும் நள்ளிரவை காத்திருந்து நாளையும் மாதத்தையும் துவங்கினீர்கள். அது பரவாயில்லை. இன்னொரு மாதம் நள்ளிரவு கழிந்து 5நிமிடம் ஆகிவிட்டதற்காக அந்த முழுநாளையும் கடைசி நாளாக மாற்றி விட்டீர்கள். இந்த இரண்டு உதாரணங்களில் மிகதெளிவாக தெரிகிறது “5 நிமிடங்கள் ஆனாலும் பரவாயில்லை துல்லியமாக க்ரெனிச்சில் நள்ளிரவு 12 ஆகும்போதுதான் நாங்கள் நாளையும் மாதத்தையும் துவங்குவோம்” என்பது தான் உங்கள் நாட்காட்டியின் அளவுகோல்.
அதே போல் துல் ஹிஜ்ஜா 1437இன் இறுதியில் நடக்கும் அமாவாசை 1.10.16 செவ்வாய் கிழமை 00:12 க்கு நடக்க இருக்கிறது. நள்ளிரவு கடந்து 12நிமிடம் ஆகிவிட்டதால் மீதம் இருக்கும் 23மணி 48நிமிடத்தையும் சேர்த்து ஒரு நாளை இறுதி நாளாக கணக்கிட்டுவிட்டீர்கள்.
ஜாமத்தில் அவ்வல் 1477 இன் இறுதியில் நடக்கும் அமாவாசை  திங்கள்  2054 Dec 28 அன்று  23:52 க்கு நடக்கிறது. நள்ளிரவுக்கு பின் வரும் செய்வாய் மாதத்தை துவங்குகிறீர்கள்
ஷவ்வால் 1506 இன் இறுதியில் நடக்கும் அமாவாசை  புதன்  2083 Jul 14 அன்று  23:55 க்கு நடக்கிறது. நள்ளிரவுக்கு பின் வரும் செய்வாய் மாதத்தை துவங்குகிறீர்கள்
ஷாபான் 1522 இன் இறுதியில் நடக்கும் அமாவாசை  சனி 2098 Nov 22 அன்று  23:52 க்கு நடக்கிறது. நள்ளிரவுக்கு பின் வரும் செய்வாய் மாதத்தை துவங்குகிறீர்கள்
ஷவ்வால் 1524 இன் இறுதியில் நடக்கும் அமாவாசை  வியாழன் 2100 Dec 30 அன்று  23:58 க்கு நடக்கிறது. நள்ளிரவுக்கு பின் வரும் செய்வாய் மாதத்தை துவங்குகிறீர்கள்
ரபியுல் ஆகிர் 1438 இன் இறுதியில் நடக்கும் அமாவாசை சனிக்கிழமை 2017 Jan 28  அன்று  00:07க்கு நடக்கிறது. நள்ளிரவைக் கடந்து 7நிடங்கள் ஆகிவிட்டதால் மீதம் இருக்கும் 23 மணி 53 நிமிடங்களையும் கடைசி நாளில் சேர்த்துவிட்டீர்கள்
Ramadan 1481 இன் இறுதியில் நடக்கும் அமாவாசை வெள்ளி 2059 Mar 14 அன்று 00:06 க்கு நடக்கிறது. நள்ளிரவைக் கடந்து 6நிடங்கள் ஆகிவிட்டதால் மீதம் இருக்கும் 23 மணி 54 நிமிடங்களையும் கடைசி நாளில் சேர்த்துவிட்டீர்கள்
Dul hijja 1506 இன் இறுதியில் நடக்கும் அமாவாசை ஞாயிறு 2083 Sep 12 அன்று 00:08 க்கு நடக்கிறது. நள்ளிரவைக் கடந்து 8நிடங்கள் ஆகிவிட்டதால் மீதம் இருக்கும் 23 மணி 52 நிமிடங்களையும் கடைசி நாளில் சேர்த்துவிட்டீர்கள்
Muharram 1518 இன் இறுதியில் நடக்கும் அமாவாசை ஞாயிறு 2094 Jun 13 அன்று 00:04 க்கு நடக்கிறது. நள்ளிரவைக் கடந்து 4நிடங்கள் ஆகிவிட்டதால் மீதம் இருக்கும் 23 மணி 56 நிமிடங்களையும் கடைசி நாளில் சேர்த்துவிட்டீர்கள்
ஒரு மாதத்தில் வெள்ளிக்கிழமை 23:59க்கு கஞ்சங்க்ஷன் நடந்தால் அடுத்த நிமிடம் வரும் சனிக்கிழமையில் உங்கள் காலண்டரில் நாள் மாறுகிறது. வேறொரு மாதத்தில் 00:01க்கு கஞ்சங்க்ஷன் நடந்துவிட்டால் மீதம் இருக்கும் 23மணி 59மணி நேரம் கொண்ட முழுநாளையும் சேர்த்து ஒரு முழுநாளை தள்ளிப்போட்டு நாளை துவங்குகிறீர்கள். இது இரண்டிற்கும் இடைப்பட்ட க்ரெனிச் 12மணி நள்ளிரவில்தான் உங்கள் நாட்காட்டியில் நாள் மாறுகிறது என்பது வெள்ளிடைமலை.
இவர்கள் நாட்காட்டிக்கும் க்ரிகொரியன் நாட்காட்டிக்கும் இருக்கும் மற்றொரு பெரிய ஒற்றுமை இரண்டிலும் ஒரு கிழமைக்கு ஒரு தேதி இருக்கும். சந்திர நாட்காட்டியில் ஒரு கிழமைக்கு இரண்டு தேதிகள் இருக்கும் என்பது விஞ்ஞான உண்மை.
மேலும் சந்திரனுடைய எந்த கணக்காக இருந்தாலும் அது சூரிய நாட்காட்டியின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். சந்திர ஓட்டத்தையோ, கஞ்சங்க்ஷன் நேரத்தை கண்டுபிடிக்கும் கணக்கோ, பிறையின் வடிவங்களை கணக்கிடும் கணக்கோ எதுவாக இருந்தாலும் அவை சூரிய நாட்காட்டியின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அவற்றின் முடிவுகளை நாம் கிரிகோரியன் நாட்காட்டியிலிருந்தே பயன் படுத்த முடியும். அசுத்தமான நாட்காட்டி, கிருத்தவர்களின் நாட்காட்டி என்று கூறிக்கொண்டே இவர்கள் முழுக்க முழுக்க அதை சார்ந்தே இருக்கிறார்கள்.
இவர்கள் காலண்டர் கஞ்சங்க்ஷன் சாயம் பூசப்பட்ட க்ரிகொரியன் நாட்காட்டியே!

இவர்கள் காலண்டர் கஞ்சங்க்ஷன் சாயம் பூசப்பட்ட க்ரிகொரியன் நாட்காட்டி என்பது ஒருபுறம் இருக்க. அதற்கு ஒரு படி மேலே போய் அது யூதர்களிடமிருந்து காப்பியடிப்பட்ட யஹுவா நாட்காட்டி என்பதை இங்கே பார்க்க http://hafsa13.blogspot.com/2015/10/17-3.html. மேலும் இவர்கள் கிருத்தவர்களின் நாட்காட்டியை குறை கூறுவார்களே தவிர யூதர்களின் நாட்காட்டியை இன்று வரை குறை கூறாததும் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.