Wednesday 28 June 2017

கிப்லாவை மாற்றியதற்கான ஆதாரங்கள்

ஹிஜ்ராவினர் கிப்லாவை மாற்றியதை நாம் ஆதரங்களுடன் நிறுவிவிட்டோம். ஆனால் நெருக்கடிக்குள்ளான ஹிஜ்ராவினர் “நாங்கள் அவ்வாறு சொல்லவே இல்லை. நாங்களும் உங்களுடன்தானே தொழுகிறோம். உங்களுடைய கிப்லாவைத்தானே முன்னோக்குகிறோம்” என்று முஸ்லிம்களிடம் பசப்புகின்றனர். “நாங்களும் உங்களின் கிப்லாவைத்தானே நோக்குகிறோம். நாங்கள் IDL ஐ நோக்குகிறோமா? நாங்கள் க்ரெனிச்சை நோக்குகிறோமா?” என்று கேட்கின்றனர். கஅபாவை முன்னோக்குவதுதான் கிப்லா என்று சொல்லிவிட்டு IDL க்கு முதுகைக் காட்டுவதும் கிப்லா என்பது ஏற்புடையது அல்ல. அல்லாஹ்தான் கடவுள் ஆனால் ஈசா (அலை) அவனது குமாரர் என்பது இஸ்லாம் ஆகுமா?
இவர்கள் கஅபாவை முன்னோக்குங்கள் என்று வாயால் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் கிப்லாவை நிர்ணயம் செய்வது எப்படி என்று கேள்வி கேட்டால் IDLஐ பின்னோக்குவதுதான் கிப்லா என்கிறார்கள். அதாவது வாயால் சொல்லும்போது ஒன்றும் செயலுக்கு இன்னொன்றும் இருந்தால் செயல்தானே ஏற்றுக்கொள்ளப்படும்.
அல்லாஹ்வை மட்டுமே ஏற்றுக்கொண்டேன் என்றவர் பகிரங்கமாக இணைவைத்தால் அவரை முஸ்லிம் என்பீர்களா? முஷ்ரிக் என்பீர்களா?
இவர்கள் சொல்லால் கஅபாவை முன்நோக்க சொல்கிறார்கள். செயலால் லண்டன் க்ரெனிச்சை முன்னோக்குகிரார்கள்.
அவர்கள் லண்டன் க்ரெனிச்சை முன்னோக்கச் சொன்னதற்கான தெளிவான ஆதாரங்களை மட்டுமே நிறைத்ததாக இந்த பதிவு வருகிறது.
(அதிகமான படங்கள் நிறைந்துள்ளதால் இக்கட்டுரை நீளமாக தோன்றும். ஆனால் படங்கள்தான் அதிகம். எழுத்துக்கள் குறைவு. எனவே இறுதிவரை படங்களைப் பார்வையிடவும்.)
ஆதாரம் -1
“Meeqath is a fixed place or station to refer a thing or action to be performed. Meeqathul qibla is an imaginary line running from the North Pole to the South Pole, which determines the turn around point towards Qibla for the purpose of Salah. This line coincides with the International Date Line and the people on the either side of this line turn their face away from those on the other side in order that both face the Qibla.”
“All of us are familiar with the word "Meeqat" in connection with the Hajj pilgrimage. As we know, the Meeqat is a fixed place or a station at which the pilgrims don the 'Ihram', that is the pilgrim's garment. Now I am trying to explain about another Meeqat which is very important for the Muslims, - that is "The Meeqatul Qibla". The former Meeqat which we already know is connected with a place and this 'Meeqat' is connected with the place as well as the time, where a traveller going around the Earth has to change his Qibla from east to west or vice versa, his day and his date and the time when the world has to change her day, for example, - from Thursday to Friday.
“I like to name this Date line, which would be established, as 'The Meeqatul Qibla'.”
“மீக்காத் என்பது ஒரு பொருளை அல்லது ஒரு செயலை செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட இடமாகும். மிகாத்துல் கிப்லா என்பது வட துருவத்திலிருந்து தென்துருவத்தை நோக்கி வரையப்பட்ட கற்பனைக் கோடாகும். தொழுகைக்காக பயன்படும் கிப்லா திசை மாற்றத்தை நிர்ணயிக்கும் இடம் இதுவாகும். மிகாத்துல் கிப்லா எனும் கோடு சர்வதேச கோட்டுடன் ஒருமித்துள்ளது. இந்த கோட்டிற்கு இருபுறமும் மக்கள் ஒருவருக்கொருவர் முகத்தை எதிர் திசையில் திருப்பி (முதுகைக் காட்டிக்)கொண்டு கிப்லாவை முன்னோக்குகிறார்கள்.”
“ஹஜ்ஜுக்கான மீக்காத் பற்றி நாமறிவோம். இப்பொது நான் மற்றொரு மீகாத்தை பற்றி உங்களுக்கு விளக்குகிறேன். அது முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமான மீக்காத் ஆகும். அதுதான் “மிகாத்துல் கிப்லா!”. ஹஜ்ஜுக்கான மீக்காத் “இடத்துடன்” தொடர்புடையது என்பதை நாமறிவோம். (நான் சொல்லும் இப்புதிய) மீக்காத் “இடம் மற்றும் நேரத்துடன்” தொடர்புடையது. அதாவது பூமியை சுற்றி பயணிக்கும் ஒருவர் தனது கிப்லாவை கிழக்கில் இருந்து மேற்காக அல்லது மேற்கிலிருந்து கிழக்காக மாற்றுவதும், அவருடைய தேதியும் நாளும் மாறுவதும், மேலும் பூமியில் கிழமை மாற்றம் நிகழ்வதும் இந்தக் கோட்டில்தான். உதா: வியாழனிலிருந்து வெள்ளிக்கு.”
“இந்த தேதிக்கோட்டிற்கு “அல் மீகாதுல் கிப்லா” என்று நான் பெயரிடுகிறேன்”
👆👆👆 இது ஹிஜ்ரா கமிட்டி நிறுவனர், ஹிஜ்ரா கமிட்டி விஞ்ஞானி, ஹிஜ்ரா கமிட்டி ஆலோசகர், அலி மானிக்ஃபான் அவர்களின் கிப்லா & காலண்டர் பற்றிய ஆய்வறிக்கையிலிருந்து.
அல்லது
ஆதாரம் - 2

இது ஹிஜ்ராக்களின் பழைய இணையதளத்தின் screenshot. இதில் கிப்லாவை விளக்குவதற்கு ஒரு அனிமேஷனை கொடுத்திருந்தார்கள். அதை மீட்டு, கீழே அதே லிங்கில் உங்களுக்கு தந்துள்ளோம். லிங்கை க்ளிக் செய்து அனிமேஷனை பாருங்கள். (உங்கள் ஃபோனில் அனிமேஷன் ஓடவில்லை என்றால். flashfox browser ஐப் பயன்படுத்துங்கள் அல்லது வீடியோவாக மாற்றப்பட்டுள்ளதைப் பாருங்கள். )
இந்த லிங்கில் இருக்கும் அனிமேஷன்களின் ஸ்க்ரீன்ஷாட் கீழே
D:\Articles\~ஹிஜ்றா\கிப்லாவை மாற்றியது யார்\animation screen shots\1.png
D:\Articles\~ஹிஜ்றா\கிப்லாவை மாற்றியது யார்\animation screen shots\6.png
D:\Articles\~ஹிஜ்றா\கிப்லாவை மாற்றியது யார்\animation screen shots\7.png
_IDLக்கு முதுகைக் காட்டுவதுதான் கிப்லா என்று தெளிவாக படம் வரைந்து விளக்கியுள்ளார்கள்._
அடுத்ததாக அதே அனிமேஷனில் கிப்லா இவ்வாறு அமைந்துள்ளதாக விளக்கியுள்ளார்கள். IDLக்கு முதுகை காட்டினால் நாம் லண்டன் க்ரெனிச்சை நோக்குவோமா? அல்லது கஅபாவை நோக்குவோமா?
IDLக்கு முதுகை காட்டினால் இப்படத்தில் உள்ளதைப் போல நாம் லண்டன் க்ரெனிச்சைத்தானே முன்னோக்குவோம்.
அவர்களுடைய ஸ்க்ரீன் ஷாட்டில் நாம் கிப்லாவை சரி செய்து காட்டியுள்ளோம். முஸ்லிம்களின் கிப்லா இவ்வாறுதானே அமைந்துள்ளது.
ஆதாரம் -3

உட்கட்சி பூசலால் மூடப்பட்ட அவர்களின் அடுத்த இணையதளம் இது. இதிலிருந்த அனிமேஷன்களை மீட்டு கீழே அதே லிங்குகளில் தந்துள்ளோம்.

D:\Articles\~ஹிஜ்றா\qiblah\HCI wrong qiblah\rightqibla1.swf.jpg
இது RIGHT METHOD OF QIBLA அனிமேஷனின் ஸ்க்ரீன் ஷாட்.
கிப்லாவை நிர்ணையிக்கும் சரியான முறை இதுதானம். இவ்வாறு கிப்லாவை நிர்ணயம் செய்தால் நாம் லண்டன் க்ரெனிச்சைத்தான் முன்னோக்குவோம்
இதற்கு பெயர் ரம் லைன் கிப்லா. இப்படி கிப்லாவை நிர்ணயம் செய்தால் நாம் கஅபாவை முன்னோக்கமாட்டோம் என்று விளங்கி உலகமே சரியான கிப்லா நிர்ணய முறைக்கு மாறிய பிறகு இவர்கள் ரம் லைன் கிப்லாவே சரி என்கிறார்கள்.
ரம் லைன் கிப்லாதான் சரி என்றதற்கான ஆதாரம்.  http://islamic-month-discussion.2305289.n4.nabble.com/Meeqatul-Qibla-and-Islamic-Calendar-By-Ali-Manikfan-td4336208.html
இவர்களின் coordinator மேலுள்ள அனிமேசனை பதிந்து இதுதான் சரியான் கிப்லா என்கிறார்
ரம் லைன் கிப்லா எப்படி தவறானது என்று இங்கே விளக்கியுள்ளோம். http://www.piraivasi.com/2015/09/hijiri-committee-qibla.html

D:\Articles\~ஹிஜ்றா\qiblah\HCI wrong qiblah\qiblawrong1.swf.jpg
இது WRONG METHOD OF QIBLA அனிமேஷனின் ஸ்க்ரீன் ஷாட்.
உலக முஸ்லிம்கள் முன்னோக்கும், கிப்லாவை நிர்ணயம் செய்யும் இந்த முறையை தவறு என்கிறார்கள்.
D:\Articles\~ஹிஜ்றா\qiblah\HCI wrong qiblah\Qibla finder0.png
இது ERROR IN QIBLA FINDING WITH INTERNET SOFTWARE AND GPSஅனிமேஷனின் ஸ்க்ரீன் ஷாட்.
உலக முஸ்லிம்கள் கிப்லாவை நிர்ணையிக்கும் முறை தவறு என்கிறார்கள். கிப்லாவை காட்டும் இணையதளங்கள், சாப்ட்வேர்கள் அனைத்தும் தவறு என்கிறார்கள். (அனைத்து கிப்லா மென்பொருட்களும் இவ்வாறுதான் காட்டுகின்றன)
D:\Articles\~ஹிஜ்றா\qiblah\HCI wrong qiblah\Qibla finder3.png
_அவர்கள் சொல்லும் IDL முதுகு கிப்லாதான் சரி என்கின்றனர்._
ஆதாரம் -4
இது இப்போதைய ஹிஜ்ரா கமிட்டி வெளியிட்டுள்ள கிப்லா விளக்க வீடியோ.
“கிப்லாவுடைய டைரக்''னை மிக நேர்த்தியாக நிர்ணயிக்க கூடிய இடமாக இருப்பது இன்டர்நே'ஸ'னல் டேட் லைன். IDL க்கு முதுகைக் காட்டுவதுதான் கிப்லா” என்று தெளிவாக விளக்குகிறார்கள். IDLக்கு முதுகைக் காட்டினால் நாம் லண்டன் க்ரெனிச்சை நோக்கியே தொழுவோம்.
கஅபாவை நோக்காமல் லண்டன் க்ரெனிச்சை நோக்க மறைமுகமாக சொல்கிறார்கள் என்பது நிரூபணம்

இதன் தொடர்ச்சியை வாசிக்க http://www.piraivasi.com/2017/06/29-2.html