Thursday 29 June 2017

கிப்லாவை மாற்றியது யார்?

IDL க்கு வலது பக்கம் இருப்பவர்களுக்கு கிப்லா கிழக்கு என்றும் இடது பக்கம் இருப்பவர்களுக்கு கிப்லா மேற்கு என்றும் வாதிடுகிறது கமிட்டி. IDLதான் கிப்லாவை கிழக்கு மேற்கு என்று பிரிப்பதாக ஹிஜ்ரா அறிவாளிகள் சொல்கின்றனர். IDL ஐ வைத்துதான் கிப்லாவை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது அவர்களது வாதம். இது உண்மையா என்று விளக்குவதே இக்கட்டுரை
(அதிகமான விளக்கப் படங்கள் நிறைந்துள்ளதால் இக்கட்டுரை நீளமாக தோன்றும். ஆனால் படங்கள்தான் அதிகம். எழுத்துக்கள் குறைவு. எனவே இறுதிவரை படங்களைப் பார்வையிடவும்.)
நீங்கள் கப்பலில் இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டு பெருவுக்கு செல்கிறீர்கள். பசிபிக் கடலில் பயணிக்கிறீர்கள். இடையே IDL ஐக் கடக்க வேண்டும். இந்தினேசியாவில் தொடங்கி IDL வரை நீங்கள் மேற்கு நோக்கி தொழுவீர்கள். உங்கள் கப்பல் IDL ஐக் கடந்த உடன் அலேக்காக முஸல்லாவை திருப்பி கிழக்கு நோக்கி போடவேண்டும். அஸ்ர் தொழுகையில் இரண்டாம் ரகஅத் இருப்பில் இருக்கும்போது கப்பல் IDL ஐக் கடந்தால் அடுத்த இரண்டு ரகஅத்தும் அப்படியே திரும்பி விட வேண்டும். உங்களுக்கு முன்னால் நிற்கும் இமாம் நடந்து பின்னால் செல்வார். நீங்கள் எல்லோரும் திரும்பி நின்று கிழக்கு நோக்க வேண்டும்.
IDLதான் கிழக்கிற்கும் மேற்கிற்கும் எல்லை. இந்தாண்ட இருக்கிறவங்க மேற்கே பார்த்து நமாஸ் படிக்கணும் அங்கிட்டு இருக்கிறவங்க கிழக்கே பார்த்து நமாஸ் படிக்கணும் என்பது கமிட்டியின் அறியாமை. கிப்லா என்றால் என்னன்னு தெரியாததால் ஏற்பட்ட தடுமாற்றம். இந்த தடுமாற்றம் அலி பாய்க்கு வந்ததுதான் வேதனை. அவரை கண்மூடு பின்பற்றுபவர்கள் அதை ஏற்றத்தில் ஆச்சரியமில்லை
மேலே சொன்னது போல கப்பலில் இந்தோனேசியாவில் இருந்து பெருவுக்கு செல்பவர் IDL ஐக் கடக்கும்போது அவருக்கு கிப்லா எதிர் திசையில் மாறவே மாறாது. IDLஐத் தாண்டினால் கிப்லா மாறாது.
அவ்வாறு அலிபாய் சிந்தித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அலிபாய் அவருடைய ஹிஜ்ரா காலண்டரை விளக்குவதற்கு உலக வரைபடத்தை பயன்படுத்துவார். அதை வைத்துதான் அவர் சர்வதேச ஹிஜ்ரா காலண்டரை விளக்குவார். அந்த உலக வரைபடத்தில் கிழக்கின் எல்லையில் IDL இருக்கும் மேற்கின் எல்லையில் IDL இருக்கும். உலகத்தில் எல்லைகளாக அவர் IDL ஐப் பார்த்தார். அதை வைத்தே அவர் கிப்லாவையும் பார்த்தார்
மேலதிக உண்மை என்னவென்றால் இவ்வளவு அறிவாளியாக இருக்கும் அலிபாய் கிப்லா விஷயத்திலும் காலாண்டர் விஷயத்திலும் அறிவாலியாக சிந்திக்கக் காரணம்....
அவர் பூமியை தட்டை என்று நினைப்பதால்தான்.
பூமி தட்டையாக இருந்தால் உலக ஹிஜ்ரா காலண்டர் சாத்தியம். அவரிடம் இருக்கும் வரைபடத்தை போல பூமி இருந்திருந்தால் அவர் சொல்லும் IDL கிப்லாவும் உண்மையாக இருந்திருக்கும். ஆனால் பூமி உருண்டையாக இருப்பதால் அவர் சொல்வது பொய்.
கிப்லா IDL இல் மாறவில்லை என்றும் ஹிஜ்ராவினர் அறிந்துகொண்டே மறைக்கிறார்கள் என்பதையும் ஏற்கனவே நாம் பல கட்டுரைகளில் விளக்கியுள்ளோம். அவை பாமரர்களுக்கும் விளங்கும் வகையில் அமையவில்லை எனவே மிக எளிய விளக்கங்களுடன் இதில் விளக்கியுள்ளோம். நாம் முன்னர்  வெளியிட்ட கட்டுரைகள்:
எது சரியான கிப்லா? http://www.piraivasi.com/2015/09/hijiri-committee-qibla.html
கிப்லா மாற்றம் யூத சதியா? http://www.piraivasi.com/2016/03/4.html
ஹிஜ்றாவினர் முன்னோக்கும் தீர்க்க ரேகை http://www.piraivasi.com/2015/03/committeeQibla.html
கிப்லா எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? பூமியில் கிப்லா திசை மாறுவது ஒரு நேர்கோட்டிலா என்பனவற்றை பார்ப்போம்!
முதலில் எல்லோரும் கையில் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிப்லா எப்படி வேலை செய்கிறது என்று முதலில் கற்றுக்கொள்வோம். திசைகளுக்கும் கிப்லாவுக்கும் தொடர்புள்ளதா என்று தெரிந்துகொள்வோம். ஆரஞ்சு கிடைக்காவிட்டால் உருண்டையாக இருக்கும் எதோ ஒரு பெரிய காய் அல்லது பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு இரு காம்புகள் இருக்கும். ஒன்று அதை கிளையுடன் இணைப்பது மற்றொன்று அதை பூவுடன் இணைப்பது. இரண்டு காம்புகளும் ஒன்றுக்கொன்று நேர் எதிர் திசையில் இருக்கும்.
(இது செய்முறை விளக்கம். உங்கள் கற்பனை வேலை செய்யாமல் போகலாம். உருண்டையான ஒரு பழம் கையில் இருந்தால் இக்கட்டுரையின் விளக்கம் உங்களுக்குப் பயனளிக்கும்)
ஒரு காம்பு வழியாக ஒரு கம்பியை நுழைத்து அதை மறு காம்பு வழியாக வெளியற்றினால் அந்த கம்பி மிகச்சரியாக பழத்தின் மையப்புள்ளியை கடந்து வெளியே வரும். சரியா?
இப்போது ஒரு முனையை கஅபாவாக கற்பனை செய்யுங்கள்.
அதற்கு சிறிது தூரத்தில் ஒரு புள்ளி வையுங்கள். அந்த புள்ளியில் நீங்கள் இருப்பதாக கொண்டால் நீங்கள் கஅபாவை நோக்கி எவ்வாறு தொழுவீர்கள். அந்த புள்ளிக்கும் கஅபாவாக கற்பனை செய்த பழத்தின் காம்புக்கும் நேர்கோடு வரையுங்கள். இந்த கோடு செல்லும் திசைதான் கிப்லா. சரியா?
இப்படி ஆங்காங்கே புள்ளி வைத்து கிப்லாவை வரைந்து பழகுங்கள். பூமியை சுற்றிலும் கிப்லா எப்படி அமையும் என்று உங்களுக்கு விளங்கும்.
நீங்கள் கஅபாவாக கற்பனை செய்த காம்பிற்கு வலது புறத்தில் புள்ளி வைத்தால் கிப்லாக்கோடு இடதுபுறமாக இருக்கும். இடது புறம் புள்ளி வைத்தால் கிப்லா கோடு வலதுபுறமாக இருக்கும். மேலே புள்ளி வைத்தால் கிப்லா கோடு கீழ்நோக்கியும் கீழே புள்ளி வைத்தால் கோடு மேல்நோக்கியும் இருக்கும்.
நான்கு பக்கம் மட்டுமே புள்ளி வைக்க இயலுமா?
இல்லை! சுற்றிலும் வட்டமாக எல்லா திசைகளிலும் புள்ளிவைக்கலாம்.
சுற்றிலும் கிப்லா இருக்கும்
கஅபாவை சுற்றி மக்கள் எப்படி தொழுகிறார்கள்? நம்மூர் பள்ளிகளில் தொழுவது போன்று வரிசையாகவா? இல்லை! வட்டமாக நின்று தொழுகிறார்கள்.
ஏன் கஅபாவில் மட்டும் வட்டமாக நின்று தொழுகிறார்கள்.? ஏன் மற்ற பள்ளிகளில் வரிசையாக நின்று தொழுகிறோம்? மஸ்ஜித் நபவி மதீனாவில் கூட வரிசையாகவே நின்று தொழுகிறோம். ஏன்?
http://www.islamiclandmarks.com/wp-content/uploads/2015/08/kabah.jpg
உண்மையில் நாம் எல்லோரும் வட்டமாகவே நின்று தொழுகிறோம். கஅபாவை சுற்றி வட்டம் சிறிதாக இருப்பதால் அந்த வட்டம் முழுமை அடைகிறது. ஆனால் கஅபாவை தவிர மற்ற இடங்களில் அந்த வட்டம் முழுமை அடையாது. உலகில் இருக்கும். அனைத்து பள்ளிகளின் வரிசைகளும் வட்டத்தில் ஒரு பாகமாகவே இருக்கின்றன. ஒரு பெரிய வட்டத்தின் ஒரு சிறு பாகம் ஒரு நேர்கோடு போல காட்சியளிக்கும். ஆக உலகில் நாம் அனைவரும் வட்டவடிவ வரிசையில் நின்றுதான் கஅபாவை நோக்கி தொழுகிறோம்.
சரி... அந்த பழத்தில் ஆங்காங்கே புள்ளி வைத்து கோடிட்டு அப்பழத்தை நீங்கள் பாழ்ப்படுத்தி இருந்தால் அதை வெட்டி உண்டுவிட்டு வேறொரு பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது மீண்டும் ஒரு முனையை கஅபாவாக கற்பனை செய்யுங்கள். அந்த முனையை மையமாக வைத்து. ஒரு வட்டத்தை வரையுங்கள். அந்த வட்டத்தின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் நீங்கள் கஃபா முனைக்கு கோடு வரயலாம். அந்த வட்டம்தான் நாம் தொழுகையில் நிற்கும் ஸஃப். அக்கோடுதான் கிப்லா.
அடுத்ததாக அந்த வட்டத்திற்கு வெளியே, கஃபா முனையை மையமாக வைத்து மீண்டும் ஒரு வட்டத்தை வரையுங்கள். இந்த வட்டம் முதல் ஸஃப்புக்கு பின்னாடி நின்று தொழும் இரண்டாம் ஸஃப் மக்கள்.
அடுத்து மூன்றாம் ஸஃப் வட்டத்தை வரையுங்கள்.
நான்காம் ஸஃப்
ஐந்தாம் ஸஃப்
ஆறாம் ஸஃப்
வரைந்தீர்களா?
இது பூவின் காம்பு
முதல் வட்டம் (ஸஃப்)
அடுத்த வட்டம் (ஸஃப்)
இப்படியே வட்டம் விரிவடையத் துவங்கும்.
இப்படிதான் ஸஃப்புகளும் விரிவடையும்.
கஅபாவை சுற்றிலும் இவ்வாறு ஸஃப்புகள் நம்மால் எண்ண முடியாத அளவுக்கு பூமி எங்கும் விரிந்துள்ளது. இவ்வாறு இருக்கும் வட்ட வடிவ ஸஃப்புகள் எதாவது ஒன்றில்தான் நாம் நின்று தொழுகிறோம்
கொம்பின் காம்பை மையமாக வைத்து தொடங்கிய வட்டம் சிறிது சிதிதாக விரிவடையும். அந்த வட்டம் ஆரஞ்சின் அரைப்பகுதியை அடையும்போது பெரிய வட்டமாக மாறும். பின்னர் நாம் தொடர்ந்து வட்டம் வரைந்தால் அது ஆரஞ்சின் மறுபக்கத்தை அடையும். ஆனால் அளவில் சிறிதாக சுருங்கும்
பூவின் காம்பை சுற்றி நாம் வரையத் தொடங்கிய வட்டங்கள் விரிவடைந்து, ஆரஞ்சுப்பழத்தின் மறுபக்கத்தை அடைந்து, அவ்வட்டங்கள் கொம்பின் காம்பை நோக்கி சுருங்கும். இறுதியில் கொம்பின் காம்பில் அவ்வட்டம் முடிவுறும். அவ்வட்டங்கள் ஒருக்காலும் ஒரு கோட்டில் சென்று முடிவடையாது. அதாவது ஒரு புள்ளியை சுற்றி தொடங்கிய ஸஃப்புகள் மற்றொரு புள்ளியில் முடிவடைகின்றன. கோட்டில் முடிவதில்லை.
இப்போது பூவின் காம்பை கஅபாவாக கற்பனை செய்யுங்கள். கஅபாவை சுற்றி வட்ட வடிவில் உலகம் முழுவதும் ஸஃப்புகள் விரிவடைந்தால் நிச்சயமாக அவை பூமியில் கஅபாவிற்கு எதிர்புறத்தில் இருக்கும் ஒரு புள்ளியில் சென்று முடிவடையும். ஒரு நேர்கோட்டில் நிச்சயம் முடிவடையாது. சரி அந்த புள்ளி இவர்கள் சொல்லும் நேர்கோட்டில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
இனி... பூமியில் இது எவ்வாறு செயல்படுகிறது என பார்ப்போம்!
உலகம் உருண்டையாக இருக்கிறது. உண்மையில் கஅபாவை மையமாக வைத்து உலக வரைபடம் வரைந்தால் அது இவ்வாறு இருக்கும்
என்ன! பாதி நாடுகளை காணோமே என்று யோசிப்பீர்கள். உருண்டையில் ஒரு பாதிதான் எப்போதுமே கண்ணுக்குதெரியும் . மறு பாதியைப் பார்க்க ஒன்றில் நாம் மறுபக்கத்திற்கு போகவேண்டும் அல்லது உருண்டையை உருட்டி நம் பக்கமாக வைக்கவேண்டும்.
மறுபக்கம்
இந்த வரைபடங்கள் உண்மையா என்று சந்தேகப்படுபவர்களுக்கு இதோ செயற்கைக்கோள் (சாட்டிலைட்) புகைப்படங்கள்
இவை நாசா எடுத்த புகைப்படங்கள்.
இப்புகைப்படம் கஅபா மையமாக ஃபோகஸ் எடுக்கப்பட்டது. இந்த படத்தில், நாம் எங்கிருந்து கஅபாவை நோக்கி நேர்கோடு வரைந்தாலும் அது கிப்லா திசையைக் காட்டும் இந்த படத்தைதான் வரைபடமாக மேலே தந்துள்ளார்கள். இப்படிதான் பூமி இருக்கிறது. அலிபாய் கற்பனை செய்வது போல பூமி தட்டையாகவோ செவ்வகமாகவோ இல்லை. எந்த போட்டோவிலும் பூமியின் ஒரு பாதிதான் கண்ணுக்கு தெரியும். மறுபாதியை பார்க்க நாம் மறுபக்கம் செல்லவேண்டும்.
கஅபாவை மையமாக வைத்து ஒரு போட்டோவை எடுத்துவிட்டு அதற்கு நேர் எதிர் திசையில் சென்று சாட்டிலைட் எடுத்த புகைப்படம் இது.
உருண்டையாக இருக்கும் உலகத்தை செவ்வகமாக வரைந்தால் அதில் பல பிழைகள் இருக்கும். வட்டமாக வரைந்தால் பிழைகள் குறைவாக இருக்கும்
இப்போது மேலுள்ள வரைபடங்களில் கிப்லா வரையுங்கள்
உலக மக்கள் எல்லோரும் கஅபாவை இப்படிதான் முன்னோக்குவார்கள் சரியா?
சரி பூமியின் ஒரு பாதிக்கு கிப்லா இப்படி இருக்கும். மறு பாதிக்கு எப்படி இருக்கும்?
பார்ப்போம்!
இவ்வாறுதான் பூமியின் மறுபக்கத்தில் இருப்போர் கிப்லாவை முன்னோக்குவார்கள். கஅபா எனும் ஒரு புள்ளியை சுற்றி வட்ட வடிவில் துவங்கிய தொழுகை ஸஃப்புகள் பெரிதாக பூமியின் பாதிவரை விரிவடைந்து, பின்னர் சிறு வட்டங்களாக சுருங்கி அது ஒரு புள்ளியில் சென்று முடிவடையும். எந்த கோட்டிலும் கிப்லா முடிவடைவதில்லை.


முஸ்லிம்களின் கிப்லாவும் ஸஃப்புகளும் இவ்வாறுதான் பூமியில் அமைந்துள்ளன.




👆👆👆இது கமிட்டி சொல்லும் கிப்லா. IDL ல் கிப்லா மாறவேண்டும் என்கிறார்கள். நடுவிலிருக்கும் சிகப்பு பக்கவாட்டு நேர்கோடுதான் இந்தோனேசியாவிலிருந்து பெருவுக்கு செல்லும் கப்பல் பாதை. கமிட்டியின் கிப்லாவை பார்த்தால் IDL ஐக் கடந்த உடன் கப்பலில் இருப்பவர்களின் முஸல்லா எதிர் திசையில் திரும்பும்.
பிரச்சனைக்கு முக்கிய காரணம் அலி பாய் எடுத்துக்கொண்ட தட்டையான உலக வரைபடம்.

👆👆உருண்டை பூமியில் அலி பாயின் கிப்லா இப்படி இருக்கும். ஆனால் இவ்வாறு நிகழ்வதில்லை என்பதை நாம் ஆரஞ்சுப்பழத்தைக் கொண்டு விளங்கிகொண்டோம்.
நடுவே இருக்கும் திக் சிவப்பு கோடுத்தான் ஹிஜ்ராவினரின் கிப்லா நிர்ணையக்கோடு IDL
ஆனால் முஸ்லிம்களின் கிப்லா இவ்வாறு அமைந்துள்ளது
அலி பாய் மற்றும் பின்பற்றுவோரின் கிப்லா நிர்ணய IDL கோடு சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டைக் கடந்தால் கிப்லா மாறாது.
நடுவே அடையாளத்திற்காக வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள புள்ளிதான் கிப்லா மாறும் புள்ளி. இதுதான் ஆரஞ்சுப்பழத்தின் பூவின் காம்புக்கு எதிர் திசையில் இருக்கும் கொம்பின் காம்பு. ஒருவர் அந்த புள்ளியை நோக்கி பயணித்து அந்த புள்ளியை கடந்து சென்றால் கிப்லா எதிர் திசையாக மாறும்.
மேலே சிகப்பாக தடிமனாக காட்டப்பட்ட  IDL கோடு பூமியின் மறுபக்கமும் தொடர்கிறது . உருண்டையில் ஏது கோடு, எல்லாமே வட்டம்தான். பூமியின் மறுபக்கம் நீளும்  கோட்டிற்கு பெயர் (Greenwich) க்ரெனிச்.
வட்டத்தில் பாதியை IDL என்றும் மீதியை க்ரெனிச் என்றும் அழைக்கின்றனர்
நாம் ஏன் இந்த ஹிஜ்ராவினரின் திசை தொழும் துலுக்கர் எனும் பாரதியின் கவிதையை உண்மைப் படுத்தியவர்கள் என்று சொல்கிறோம். அலி பாய் கஅபாவை நோக்க சொல்லவில்லை. வேறொரு கோட்டை நோக்க சொல்கிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா?
கிப்லாவை எப்படி நிர்ணயிக்க வேண்டும் என்று ஹிஜ்ராவினர் சார்பில் பல ஆய்வுக்கட்டுரைகளும் விடியோக்களும் விளக்க அணிமேஷங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை தொகுப்பாக இங்கே காணலாம்.
“IDL க்கு முதுகைக் காட்டி அதன் இருபுறங்களிலும் ஸஃப் ஸஃப்பாக நின்று தொழுவதுதான் கிப்லா” என்கிறார்கள் ஹிஜ்ராவினர்.
ஹிஜ்ராவினர் கிப்லாவை மாற்றியதை நாம் ஆதரங்களுடன் நிறுவிவிட்டோம். ஆனால் நெருக்கடிக்குள்ளான ஹிஜ்ராவினர் “நாங்கள் அவ்வாறு சொல்லவே இல்லை. நாங்களும் உங்களுடன் தானே தொழுகிறோம். உங்களுடைய கிப்லாவை தானே முன்னோக்குகிறோம்” என்று முஸ்லிம்களிடம் பசப்புகின்றனர். அவர்கள் க்ரெனிச்சை முன்னோக்க சொன்னதற்கான தெளிவான ஆதாரங்களை இங்கே காண்க > http://www.piraivasi.com/2017/06/29-1.html
நாம் இவர்கள் ஹிஜ்ராக் காலண்டருக்காக கிப்லாவை மாற்றிய விஷயத்தை மக்களுக்கு சொல்லும்போது இவர்கள் கேட்கும் கேள்விகளும் கபட நாடகங்களும்:-
நாங்களும் உங்களின் கிப்லாவைத்தானே நோக்குகிறோம். நாங்கள் IDL ஐ நோக்குகிறோமா? நாங்கள் க்ரெனிச்சை நோக்குகிறோமா? என்று கேட்பார்கள்:
கஅபாவை முன்னோக்குவதுதான் கிப்லா என்று சொல்லிவிட்டு IDL க்கு முதுகைக் காட்டுவதும் கிப்லா என்பது ஏற்புடையது அல்ல. அல்லாஹ்தான் கடவுள் ஆனால் ஈசா (அலை) அவனது குமாரர் என்பது இஸ்லாம் ஆகுமா?
இவர்கள் வாயால் கஅபாவை முன்னோக்குங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் கிப்லாவை நிர்ணயம் செய்வது எப்படி என்று கேள்வி கேட்டால் IDLஐ பின்னோக்குவதுதான் கிப்லா என்கிறார்கள். அதாவது வாயால் சொல்லும்போது ஒன்றும் செயலுக்கு இன்னொன்றும் இருந்தால் செயல்தானே ஏற்றுக்கொள்ளப்படும்.
அல்லாஹ்வை மட்டுமே ஏற்றுக்கொண்டேன் என்றவர் பகிரங்கமாக இணைவைத்தால் அவரை முஸ்லிம் என்பீர்களா? முஷ்ரிக் என்பீர்களா?
இவர்கள் சொல்லால் கஅபாவை முன்நோக்க சொல்கிறார்கள். செயலால் லண்டன் க்ரெனிச்சை முன்னோக்குகிரார்கள்.
அடுத்ததாக இவர்கள் பாமர மக்களை வீழ்த்தும் கேள்வி-1:
கஅபாவுக்கு மேற்கே நாடுகளில் இருப்போர்கள் கிழக்கு நோக்கி தொழுவார்கள். கஅபாவுக்கு கிழக்கே இருக்கும் நாடுகளின் மக்கள் மேற்கு நோக்கி தொழுவார்கள். இப்படியே ஸஃப்புகள் விரிவடைந்தால் இரு சாராரின் முதுகுகளும் ஓரிடத்தில் சந்திக்கும்
அந்த இடம் எது?
இதுதான் அவர்களின் அறிவார்ந்த கேள்வி. நீங்கள் அவர்களிடம் கேளுங்கள்.
கிப்லா என்பது கிழக்கு மேற்கு மட்டும் தானா. வடக்கு தெற்கு இல்லையா? வடக்கு நோக்கி தொழும் நாடுகள் எத்தனையோ உள்ளன. கிழக்கு நோக்கி தொழும் நாடுகள் எத்தனையோ உள்ளன. மதீனாவின் கிப்லா தெற்கு தானே?
எனில் கஅபாவுக்கு தெற்கே நாடுகளில் இருப்போர்கள் வடக்கு நோக்கி தொழுவார்கள். கஅபாவுக்கு வடக்கே இருக்கும் நாடுகளின் மக்கள் தெற்கு நோக்கி தொழுவார்கள். இப்படியே ஸஃப்புகள் விரிவடைந்தால் இரு சாராரின் முதுகுகளும் ஓரிடத்தில் சந்திக்கும்
அந்த இடம் எது?
நீங்கள் இவ்வாறு கேளுங்கள். சிலைகளை வணங்கிய அந்த முஷ்ரிக்குகளிடம் சிறிய சிலைகளை உடைத்த பெரிய சிலையிடம் அதை பற்றி கேளுங்கள் என்று இப்ராஹிம் நபி சொன்னதைப் போல இந்த அமாவாசை நிலவின் பிரகாசத்தை மூளையில் கொண்ட இந்த விஞ்ஞானிகளிடம் நீங்கள் இந்த கேள்வியை கேளுங்கள்
கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்டதுதான் கிப்லா; (ஹதீஸ்)
இந்த ஹதீஸ்தான் அமாவாசைக்கு ஆதரமாம். இது ஸஹீஹ் ஹதீஸ் என்பதில் மாற்றுக்கருதில்லை. ஆனால் இதை விட ஆதாரப்பூர்வ ஹதீஸ் ஒன்று உள்ளது. குர் ஆனுக்கு அடுத்தபடியாக மிக மிக வலுவான ஆதாரமிக்க ஒரு ஹதீஸ் அது.
முஸ்லிம்கள் தலை முறை தலைமுறையாக ஓதி வந்து நமக்கு கிடைத்தது குர் ஆன். அதில் அறிவிப்பளர் தொடர் நோக்கினால் உலகில் குரானை ஓதிய அனைத்து முஸ்லிம்களின் சங்கிலி தொடரும் அதிலிருக்கும்.
அத்தகைய பல பல அறிவிப்பளர் தொடர் கொண்ட ஒரே செய்தி குர் ஆன் மட்டுமே.
அதற்கு இரண்டாம் இடத்தில் இருக்கும் ஹதீஸ் என்னவென்று தெரியுமா? அதுதான் கிப்லா. மதீனாவின் கிப்லாவை நபிகளார் தொழுது காட்டிவிட்டார்கள். மதீனாவுக்கு கிப்லா தெற்கு. எனில் மேலே சொல்லப்பட்ட “கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்டதுதான் கிப்லா” ஹதீஸ் தவறா என்றால் இல்லை. அந்த ஹதீஸை எவ்வாறு விளங்கவேண்டும் என்று ஹிஜ்ராகளுக்கு தெரியவில்லை.
கஅபாவின் இருபுறத்திலும் மக்கள் வரிசையாக நிற்கவில்லை. கிப்லா என்பது கிழக்கு மேற்கு எனும் இரு திசைகளை மட்டுமே கொண்டதல்ல. ஸஃப்புகள் வட்டமாக விரிவடைத்து ஒரு புள்ளியில் முடிகின்றன என்பதை ஆரஞ்சு பழத்தைக் கொண்டு விளக்கிவிட்டோம்.
பாமர மக்களை வீழ்த்தும் கேள்வி-2:
IDLக்கு இருபுறமும் உள்ள நாடுகளில் மக்கள் எதிர்திசையில் தானே தொழுகிறார்கள். இதுவே IDLஇல் கிப்லா மாறுவதற்கான ஆதாரம் தானே?
எல்லோராலும் IDLக்கு இருபுறமும் இருக்கும் நாடுகளுக்கு பயணம் செய்து எங்கே இருக்கும் கிப்லாவை அறிய முடியாது. ஹிஜ்ராவினர் கூட அங்கே பயணம் செய்து சென்று அங்குள்ள கிப்லாவை கண்டுவந்து பேசவில்லை. மக்கள் எதிர் கேள்வி கேட்கமாட்டார்கள் சிந்திக்க மாட்டார்கள் என்ற நபிக்கையில் அடித்துவிடுகிறார்கள். எனவே நாம் நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி IDLக்கு இருபுறமும் இருக்கும் நாடுகளில் கிப்லாவை அறிந்துகொள்வோம். IDLக்கு மேற்கே இருக்கும் ஹவாய் தீவையும் IDLக்கு கிழக்கே இருக்கும் பிஜி தீவையும் நாம் ஆய்வுக்கு எடுக்கிறோம். ஹிஜ்ராவினரின் கொள்கைப்படி பிஜியின் கிப்லா மேற்காகவும் ஹவாயின் கிப்லா கிழக்காகவும் இருக்கவேண்டும்.
கூகுள் மேப் எனும் கருவி மூலம் அல்லாஹ் நமக்கு பேருதவி செய்துள்ளான். இன்று இதை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். இந்த கருவியில் பல ஊர்களின் படங்கள் சாட்டிலைட் கருவிகளால் எடுக்கப்பட்டு அவற்றின் திசையுடன் பொதுமக்கள் அனைவரும் பார்வையிடும்படி தந்துள்ளார்கள். இதை நாம் கிப்லாவை ஆராய பயன்படுத்துவோம்.
முதலில் ஹவாய் தீவின் கிப்லா எதுவென பார்ப்போம்.
maps.google.com எனும் தளத்திற்கு செல்லுங்கள். அல்லது உங்கள் போனிலிருக்கும் maps எனும் ஆப்-ஐ திறவுங்கள். mosque near <நீங்கள் தேடவேண்டிய ஊர்> இவ்வாறு நீங்கள் தேடினால் எந்த ஊரின் பள்ளியையும் நீங்கள் பார்க்கலாம். ஹவாயின் பள்ளிகளை தேட MOQUE NEAR HAWAII என்றும் ஃபிஜியின் பள்ளிகளை தேட MOSQUE NEAR FIJI என்றும் தேடுங்கள். (https://goo.gl/jxRDvW இந்த லிங்கில் நீங்கள் நேரடியாக இதைப்பார்க்கலாம்)

இவ்வாறு தேடும்போது ஹவாயிலிருக்கும் ஒரு பள்ளியை நாம் அடைவோம். இது ஹவாய் பள்ளியின் படம் (டாப் வியு) மேலிருந்து. இந்த பள்ளி எந்த திசைகளில் அமைந்துள்ளது என்பதை கீழே இடதுபுறத்தில் இருக்கும் திசைகாட்டி தெளிவாக காட்டுகிறது.
எந்த மேப்பை எடுத்தாலும் அதில் வடக்கு திசை மேல் நோக்கி இருக்கும். இங்கேயும் அப்படிதான். இதை நீங்கள் இடது கீழ் மூலையில் இருக்கும் திசைகாட்டியை கொண்டு உறுதி செய்யலாம்.
இப்பள்ளி ஒரு செவ்வக வடிவ கட்டிடம். நமதூர் பள்ளிகளில் மிஹ்ராப் வெளியே வட்ட வடிவமாக நீண்டிருக்கும். இங்கே அது இல்லாததால் இதுதான் கிப்லா என்று பார்த்த உடனே சொல்ல இயலாது. சிறுது புலனாய்வு செய்யவேண்டியுள்ளது
இந்த லிங்கை பயன்படுத்தி உங்களாலும் புலனாய்வு செய்ய இயலும். https://goo.gl/nnAeRH
இது பள்ளியின் உள் தோற்றம்.
4 பக்கங்களில் கிப்லா எது என்று தெரியாமல் இருந்தோம். இப்போது அந்த பிரச்சனை இரண்டு பக்கங்களாக குறைந்துள்ளது. பள்ளியின் நீளவாக்கில்தான் ஸஃப்புகள் உள்ளன. மிஹ்ராபின் திசையும் தெரிகிறது. இதை வைத்து டாப் வியுவை பாருங்கள். மேலும் Aleo PI எனும் சாலை இருக்கும் திசையையும் குறித்துக்கொள்ளுங்கள்.
இப்போது நாம் நெருங்கிவிட்டோம். இன்னும் ஒரே ஒரு திசையை நெருங்கினால் போதுமானது
இது அல்லாஹ் கூகுள் மேப் எனும் கருவி மூலம் நமக்கு செய்த பேருதவி. இதில் பாருங்கள். நாம் எலியோ பை எனும் சாலையில் நின்று பள்ளியை பார்க்கும் காட்சி இது. இந்த காட்சி 3D. இதில் திசைகளை கீழே இடது மூலையில் தந்துள்ளார்கள். அது வடக்கு எங்குள்ளது என்று காட்டுகிறது.
இதை டாப் வியுவுடன் பொருத்திப் பாருங்கள். பள்ளியின் கிப்லா திசை எங்கு நோக்கியுள்ளது என்று அறிந்துகொள்ளலாம்
இதுவே ஹவாயின் கிப்லா திசை. மேற்கிலிருந்து வடக்குநோக்கி சாய்ந்த கிப்லா
அடுத்து பிஜியின் கிப்லா...
பிஜியின் கிப்லா மேற்கு என்று அவர்களே ஒப்புகொண்டுள்ளர்கள். எனினும் ஆய்வு செய்வோம்..
இது பிஜியில் இருக்கும் பள்ளிகளின் பட்டியல். ஃபிஜியில் பள்ளிகள் மிஹ்ராபுடன் உள்ளன. எனவே மேப்பில் பார்த்தாலே கிப்லா திசை புரிந்துவிடும். இவ்வளவு புலனாய்வு செய்யவேண்டியதில்லை.
பிஜியிலும் கிப்லா மேற்கிலிருந்து வடக்குநோக்கி சாய்ந்துள்ளது. இவர்களின் பொய் கிப்லா நிரூபணமாகிறது.
பள்ளி-1
பள்ளி-2
பள்ளி-3
பள்ளி-4