Friday 16 October 2015

ஹிஜ்ராவின் விமர்சனங்களும் பதில்களும்-2

ஹிஜ்ராவின் விமர்சனங்கள் சிகப்பு நிறத்திலும் நமது விடைகள் பச்சை நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது
//கேள்வி : அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும், அவரவருக்கு பெருநாள் வரும்போதுதான் பெருநாள் கொண்டாட வேண்டும். உதாரணமாக இந்தியாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜெய்ப்பூரையும், தெற்குப் பகுதியிலுள்ள காயல்பட்டினத்தையும் எடுத்துக் கொள்வோம். ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் அட்சரேகை மாறுபட்டிருப்பதால் பிறையின் காட்சி நேரத்தில் மிகுந்த நேர வித்தியாசம் வரும், அதனால் நோன்பும், பெருநாளும் மாறுபடத்தான் செய்யும் என்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில் : உலக முஸ்லிம்கள் 24 மணிநேரங்கள் கொண்ட ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்கிட வேண்டும் என்று நாம் கூறுவதை 'ஒரே நேரத்தில்' நோன்பை நோற்க வேண்டும் என்று நாம் கூறுவதாகப் புரிந்து கொண்டனர். ஜெய்ப்பூரில் ஃபஜ்ரு தொழுகை தொழும் அதே மணிநேர நிமிடத்தில் காயல்பட்டினத்தில் நாம் ஃபஜ்ரு தொழுகையைத் தொழுவோமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை. சில நிமிட நேரங்கள் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். அதைப்போல ஜெய்ப்பூரில் சூரியன் மறையும் அதே நேரத்தில் காயல்பட்டினத்தில் சூரியன் மறைவது இல்லைதான். ஆனால் மேற்படி இரண்டு ஊர்களுக்குமிடையே நேர வித்தியாசம் இருக்குமே அல்லாமல் நாள் வித்தியாசம் என்பது இல்லை. இதற்கு ஜெய்ப்பூர் என்ன?, தமிழ்நாட்டிற்குள்ளேயே இந்தகைய நிமிட நேர வித்தியாசங்கள் வரத்தான் செய்யும். ஆனால் தேதி மாறுபடுவதில்லை. அதாவது ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் வெள்ளிக்கிழமை என்பது ஒரு தேதிக்குள்தான் வருகிறது. ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் தனித்தனியாக இரண்டு தேதிகளில் வெள்ளிக்கிழமை வருவதில்லை. வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரங்கள் கொண்ட அந்த ஒருநாளுக்குள்ளேயே ஜெய்ப்பூர், காயல்பட்டினம் முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை தொழுது விடுகிறோம். இந்நிலையில் 'அட்சரேகை (Latitude)', 'பிறையின் காட்சி நேர வித்தியாசம்' என்றெல்லாம் எழுதி கஷ்டமான கேள்வியை கேட்டு விட்டதாக காண்பிப்பதில் யாருக்கும் எந்தப் பயனுமில்லை. ஒரு தீர்க்கரேகையில் (Longitude) அல்லது ஒருநாட்டில் உள்ள இரண்டு ஊர்கள் வடக்கு, தெற்கமாக அமைந்திருந்தால் அவற்றின் அட்சரேகையின் மதிப்பளவீடு வித்தியாசமாக இருப்பது இயற்கையே. அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்துகொண்டு காயல்பட்டினத்தில் ஒருநாளிலும், ஜெய்ப்பூரில் அதற்கு அடுத்த நாளிலும் நோன்பைத் துவங்கலாம் என்ற போதிப்பது ஏன் என்று கேட்கிறோம். அவரவருக்கு பெருநாள் வரும்போதுதான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று கூறிக்கொண்டு மேற்படி இரு ஊர்களிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடுவது ஏன் என்றுதான் கேட்கிறோம். மேற்படி இரு ஊர்களுக்கும் பிறையின் காட்சி நேரத்தில் நேர வித்தியாசம் வரும் என்பதால், மேற்படி இரு ஊர்களுக்கு ஒருநாளுக்குள் தெரியும் பிறை வெவ்வேறு தேதிகளைக் காட்டுமா? சற்று சிந்திப்பீர். நேர வித்தியாசம் என்பதையும், நாள் வித்தியாசம் என்பதையும் ஏன் இவர்களால் இன்னும் புரிந்து கொள்ள இயலவில்லை. தமிழ்நாட்டிற்குள்ளேயே வக்த்துகளில் இத்தகைய நிமிட நேர வித்தியாசங்கள் வருவதால் இவர்களின் இயக்கத்தவர்கள் தமிழ்நாட்டிற்குள் இரண்டு நாட்களில் வித்தியாசப்பட்டு பெருநாள் கொண்டாடட்டும்.அவரவர்களுக்கு நோன்பும், பெருநாளும் என்பதுதான் மார்க்கம் எனப் புரிந்து கொண்டதால்தான் பிறைகள் விஷயத்;தில் மாநில அளவு, ஒரு நாட்டளவு மற்றும் சர்வதேசம் என்று பிறை பார்க்கும் எல்லைகளை தாங்களாகவே நிர்ணயித்துக் கொண்டு வேறுபட்டுள்ளனர்.//
எப்போதும்போல நாம் கேட்பது இவர்களுக்கு விளங்கவில்லை. அட்ச ரேகை எனும் வார்த்தையை பார்த்து பயந்து விட்டார். அட்ச ரேகை அதிக அளவு மாறும் இரு பகுதிகள் ஒரு தீர்க்க ரேகையில் இருந்தாலும் பிறையின் காட்சி நேரம் மாறிவிடும் என்பது நாம் சொன்ன விஞ்ஞான உண்மை. ஜைபூரும் காயல்பட்டினதிற்கும் தீர்க்க ரேகையில் பெரிய வித்தியாசம் இல்லை. எனவே லுஹ்ர் தொழுகை நேரத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. அதிக பட்சம் 1௦நிமிட வித்தியாசம் வரும். ஆனால் பிறையின் காட்சியில் நிறைய வித்தியாசம் இருக்கும். நாம் இப்படி சொன்னதை இவர் நேர வித்தியாசம் என்று தவறாக விளங்கிகொண்டார்.
உதாரணத்திற்கு: இன்று முதல் பிறை தெரியும் நாள் என்று வைத்துக்கொள்வோம் ஜெய்ப்பூரில் சூரிய-சந்திர மறைவு நேரங்களின் வித்தியாசத்தை (moon lag time) விட காயல்பட்டினதிற்கு சூரிய சந்திர மறைவு நேரங்களின் வித்தியாசம் அதிகமாக இருக்கும். மேலும் சூரிய-சந்திர விலகல் கோணமும் elongation ஜைபூரை விட காயல்பட்டினதிற்கு அதிகமாக இருக்கும். வருடத்தின் மிக்க மாதங்களிலும் பிறையின் காட்சிக்கு மிக முக்கிய காரணிகளான moon lag time & elongation ஆகியவை ஜைபூரை விட காயல்பட்டினதிற்கு சாதகமாகவே இருக்கும். வாய்ப்பு அதிகமா இருக்கும் காயல்பட்டினத்தில் பிறை தெரிந்து ஜெய்பூருக்கு தெரியாமல் போனால் காயல்பட்டினத்தில் பெருநாள் கொண்டாடும்போது ஜெய்ப்பூரில் நோன்பு வைப்பார்கள்.
நாம் மேலே சொன்னதற்கு ஆதாரம் இதோ! இது உங்களின் பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய நாசாவே மதிக்கும் அளவுக்கு இருக்கும் US NAVAL OBSERVATORY இணைய தளத்தில் இருந்து எடுத்தது.
The observer's location (parallax). If the observer is located in the tropics such that the one-day-old-Moon is observed just before it sets, its elongation as seen by the observer will be about a degree less than that seen by a fictitious observer at the center of the Earth, which is the position used for most almanac calculations
இதில் elongation பற்றி மட்டும் பேசப்படவில்லை. Geocentric conjunction என்பது ஏட்டுசுரைக்காய் என்பதும் சொல்லப்பட்டுள்ளது. IDLக்கு அருகே வளர் பிறையும் தேய்பிறையும் conjunction நடக்கும் நாளில் தெரிவது பற்றி இவரிடம் கேட்கப்படும்போதெல்லாம் parallax error என்று ஒன்றரை சொல்லி இவர் ரசிகர்களின் கைதட்டல்களை பெறுவார். அவர்களும் கஞ்சிசன், கஞ்சக்சன், கஞ்சஷன் என்று என்னவென்றே தெரியாமல் சொல்லிதிரிவதை போல parallax error, parallax error என்று அவர்களும் சொல்லி திரிகின்றனர். அது என்னவென்று கேட்டால். எஸ்கேப். அந்த parallax பற்றியும் இந்த தளத்தில் சுருக்கமாக சொல்லியுள்ளனர். parallax என்றால் என்ன? parallax  & parallax error இரண்டும் ஒன்றுதானா? IDLக்கு அருகே வளர் பிறையும் தேய்பிறையும் conjunction நடக்கும் நாளில் தெரிவதற்கு உண்மையான காரணம் அதுதானா என்பது போன்ற விரிவான விளக்கங்களுடன் இன் ஷா அல்லாஹ் தமிழில் விரைவில் எழுதுவோம்.
//இன்னும் சவுதியில் தெரியும் பிறையானது, பூமியை ஒரு ரவுண்டு சுற்றி இந்தியாவுக்குள் வந்து, நம் கண்களுக்குத் தெரிய வேண்டுமானால் இருபத்து ஒன்றரை (21.30) மணிநேரம் ஆகும் என்பதுதான் இவர்களது தலைவரின் பிறை நிலைப்பாடு. ஆக பிறை விஷயத்தில் சவுதி அரேபியாவைவிட இந்திய நாடு, ஒரு நாள் பின்தங்கி உள்ளது என்பதே இவர்களின் பிறை நிலைப்பாடு. அப்படியானால் ஹிஜ்ரி 1436-இன் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையை சவுதி அரேபியா கடந்த 2015 செப்டம்பர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொழுதார்கள். இவர்களது இயக்கமும் அதே செப்டம்பர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை பெருநாள் தொழுகையை தொழுதது ஏன்? சவுதிக்கும் இவர்களுக்கும் ஒரே நாளில் கடந்த ஹஜ்ஜூப் பெருநாள் அமைந்தது எப்படி? தவறிழைத்தது யார்? நம்மை விமர்சிக்கும் முன்னர் இதையாவது இவர்கள் சிந்திக்கட்டும்.//
பீஜேவின் மாமிசத்தை தின்று காட்டி இவர்களின் ரசிகர்களின் கைதட்டல்களை பெறுவதற்கு இவர் எழுதிய வார்த்தைகள்.
//பிறை விஷயத்தில் சவுதி அரேபியாவைவிட இந்திய நாடு, ஒரு நாள் பின்தங்கி உள்ளது என்பதே இவர்களின் பிறை நிலைப்பாடு.//
உதாரணங்களையும்  உவமைகளையும் அப்படியே புரிந்து கொள்ளும் மொழி அறிவற்றவர்களிடம் இது போன்ற பதிலைத்தான் எதிர்பார்க்கலாம். இன்று முதல் பிறை என்று வைத்துகொள்வோம். சூரியன் மறைந்து 10நிமிடத்தில் சந்திரன் மறைகிறதென்றால் அப்பிறை நிச்சயம் நம் கண்களுக்கு தெரியாது. ஆனால் அதே சந்திரன் சௌதியில் மறையும்போது சூரியன் மறைந்து வெகு நேரத்திற்கு பிறகு மறையும் அங்கே பிறையை பார்ப்பார்கள். அவர்கள் பெருநாள் கொண்டாடுவார்கள். நாம் நோன்பு வைப்போம். நம் கண்ணுக்கு தெரியாமல் போன பிறை நமக்கு முதல் பிறையாகது. மீண்டும் சந்திரன் நமது கண்களுக்கு தெரிய வேண்டுமெனில் அடுத்த நாள் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
வேறொரு மாதத்தில்  முதல் பிறை நமது கண்களுக்கு தெரிந்தால் அது சவுதியிலும்  பார்க்கப்படும். அந்த மாதம் இரண்டு பகுதிகளுக்கும் ஒரே நாளில் துவங்கும். இரு பகுதியினரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவோம். //பிறை விஷயத்தில் சவுதி அரேபியாவைவிட இந்திய நாடு, ஒரு நாள் பின்தங்கி உள்ளது என்பதே இவர்களின் பிறை நிலைப்பாடு// என்பது ஹிஜ்ராக்கள் நெடுநாட்களாக பரப்பிவரும் அவதூறு
//கேள்வி : இந்திய நேரம், உலக நேரம் எல்லாம் மனிதன் உருவக்கியதுதான். ஜெய்ப்பூருக்கும் காயல்பட்டினத்திற்கும் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் (IST) ஒன்றுதான். ஆனால் true solar time என்பது வேறு. இதைப் புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான அறிவு வேண்டும் என்றும், நீங்கள் விக்கிபீடியா இணையதளத்தைத்தான் ஆதாரமாகக் கொள்வதாகவும் விமர்சனம் செய்யப்படுகிறதே இதற்கு உங்கள் விளக்கம் என்ன?//
//பதில் : மேற்படி இரண்டு ஊர்களுக்குமிடையே நேர வித்தியாசம் இருக்குமே அல்லாமல் நாள் வித்தியாசம் இல்லை. ஒருநாளுக்குரிய தேதிகள் ஊருக்கு ஊர் மாறுபடுவதில்லை என்பதை முன்னரே விளக்கி விட்டோம். இந்திய நேரம், உலக நேரம் என்பதெல்லாம் மனிதன்தான் உருவக்கியது என்கின்றனர். அப்படியானால் ''உண்மையான சூரிய நேரம்'' (true solar time) என்று இவர்கள் வாதிக்கும் அந்த நேரத்தை கண்டுபிடித்தது யார்? என்பதையும் இவர்கள் சொல்ல வேண்டும். அந்த நேரத்தை மலக்குமார்களா கண்டு பிடித்தார்கள்?. //
இந்த ஹிஜ்றா ஏற்கனவே ஒரு முறை உலக தேதிகோடு அல்லாஹ்வின் அத்தாட்சி இல்லை என்றால் வேறு யாருடைய அத்தாட்சி, அப்துல் காதர் ஜீலனியின் அத்தாட்சியா என்று கேட்டார். அது அல்லாஹ்வின் அத்தாட்சி இல்லை அப்துல் காதர் ஜீலனியின் அத்தாட்சியும் இல்லை நீங்கள் பின்பற்றும் க்ரிகொரியன் நாட்காட்டியை உருவாக்கிய, நீங்கள் முன்னோக்கும் கிப்லாவகிய உங்கள் (Greenwich) க்ரெனிச் தீர்க்க ரேகையை உருவாக்கிய 1884இல் meridian conference இல் கலந்து கொண்ட உங்கள் முன்னோர்களின் அத்தாட்சி என்று நாம் பதிலளித்தோம். இப்போது apparent solar timeஐ கண்டுபிடித்தது யார் மலக்குகளா என்று கேட்கிறார். இஸ்லாத்தை பற்றியும் தொழுகை நேரங்களை பற்றியும் அடிப்படை அறிவு இல்லாததால் தான் இந்த கேள்வி வருகிறது. தொழுகை நேரங்களை யார் நமக்கு கற்று தந்தார்கள்? அது எப்படி இருந்தது? சூரியன் உதித்தால் ஃபஜ்ர் தொழுகை நேரம் முடிந்து விடுகிறது. சூரிய கடிகாரத்தில் உண்மை சூரிய நேரம் அப்போது காலை 6 மணி. சூரியன் உச்சத்தில் வரும்போது சூரிய கடிகாரத்தில் உண்மை சூரிய நேரம் 12மணி. அது சற்று சாய்ந்த உடன் லுஹ்ர் தொழுங்கள். சூரியன் மறையும் பொது சூரிய கடிகாரத்தில் உண்மை நேரம் மாலை 6 மணி. அதன் பின் மக்ரிப் தொழுங்கள். இப்படி தொழுகை நேரங்களை நமக்கு யார் கற்றுகொடுத்தார். நமக்கு கற்று தந்தவருக்கு யார் கற்றுகொடுத்தார் என்பதையும் சிந்தித்துபாருங்கள். உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.
உண்மை சூரிய நேரம் மனிதன் கண்டு பிடித்ததல்ல. அது அல்லாஹ் உருவாக்கியது. இதை அல்லாஹ் அல்குர்ஆன் 17:12இல் தெளிவாக சொல்கிறான். பார்க்க. http://www.piraivasi.com/2015/08/20.html
தொழுகை நேரங்களை மட்டும் என் கணக்கிடுகிறோம். குச்சியை நட்டு ஏன் பார்ப்பதில்லை? பார்க்க http://hafsa13.blogspot.ae/2015/10/10.html
தொழுகை நேரங்களை எப்படி கணக்கிடுகிறோம் பார்க்க  http://www.piraivasi.com/2015/04/PrayerTimes.html
//தான் என்ன கேட்கிறோம் என்பதைக்கூட புரியாமல் ஏதோ கேள்விகளை அடுக்கிக் கொண்டு போய்விடுவோம் என்று எண்ணிக் கொண்டார்கள் போலும். இதைப் புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான அறிவு வேண்டும் என்று பீடிகை வேறு. அப்படியானால், "சந்திரன் மேற்கில் உதிக்கிறது. மேற்கு திசையில்தான் சந்திரனை பார்ப்பீர்கள். சந்திரன் (பிறை) மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது" என்று இவர்களது இயக்கத்தின் அசல் தலைவர் சொல்லியுள்ளது விஞ்ஞானமா அல்லது மெஞ்ஞானமா? என்பதையும் இவர்களே அறிவிக்கட்டும். இன்னும், "தலைப்பிறை சவுதியில் உதிக்கிறது என்றால் சவுதியிலிருந்து பிறை ரிவேஸ்ல வராது. காரணம் அது மேற்கு உதிப்பதால் நம் தலைக்கு நேராக ஒரு ரவுண்ட் அடித்து வருவதற்கு 21:30 மணிநேரம் ஆகும்" என்று இவர்களது தலைவர் சொன்னது எந்த 'விக்காத பீடியா' இணையதளத்தில் உள்ளது?//
விக்கிபீடியா என்றால் “விக்கல்” தொடர்பான ஏதோ ஓன்று என்று விளங்கி வைத்திருக்கிறார். அல்லாஹு அக்பர். தண்ணிய குடிங்க ஜி. விக்காது. விக்கிபீடியாவில் இருந்து ஆதாரத்தை எடுத்து போட்டு போட்டு விக்கி-விஞ்ஞானி என்ற பட்டதை வாங்கியது நினைவில்லையோ. அதே விக்கிபீடியாவின் நம்பகத்தன்மையை உங்கள் விஞ்ஞானியின் விக்கி பேஜை மாற்றி காட்டி நிரூபித்ததும் நினைவில்லையோ?
//மேலும், "பிறை பிறந்தால்தான் இரவு ஆரம்பிக்கிறது. இரவில்தான் நாள் ஆரம்பிக்கிறது" என்று அவர் சொன்னதும் விஞ்ஞான அறிவின் உச்சகட்ட முதிற்சியின் வெளிப்பாடுதானோ? 
இவர்களின் விஞ்ஞான அறிவின் நிலைமை இந்த அளவு இருக்கும் போது Apparent Solar Time, Mean Solar Time, Standard Time மற்றும் Universal Time என்று கேள்வி எழுப்புவது நகைப்புக்குரியது.//
பீஜேவின் மாமிசத்தின் ஒரு துண்டையாவது ஒரு நாளில் சாப்பிடாவிட்டால் இவர்களுக்கு தூக்கம் வராது. தின்பதை விட்டுவிட்டு குர்ஆன் ஹதீசிலிருந்து ஆதாரத்தை காட்டுங்கள். குறைந்தபட்சம் உங்கள் வேதமான விக்கிபீடியாவில் இருந்தாவது ஆதாரத்தை காட்டுங்கள்.