Monday 26 June 2017

லைல் vs லைலத், நஹார் vs யவ்ம்


லைல் என்றால் இரவுப் பொழுது, நஹார் என்றால் பகல் பொழுது. இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பன்மை இல்லை. உதாரணம் சொல்வதாக இருந்தால், அந்திப்பொழுது என்போம். இரண்டு அந்திகள் என்றோ 10 அந்திகள் என்றோ சொல்லமாட்டோம். மேலும் தமிழில் காலைகள் மாலைகளை எண்ண முடியாது. இவை பொழுதுகள் எனும் நேரங்கள். இவற்றை எண்ண முடியாது. அதே போல அரபில் லைல் மற்றும் நஹாருக்கு பன்மை இல்லை.
النَّهار اسم وهو ضدُّ الليل، والنهارُ اسم لكل يوم، واللَّيْل اسم لكل ليلة، لا يقال نَهار ونَهاران ولا ليل ولَيْلان، إِنما واحد النهار يوم وتثنيته يومان وجمعه أَيام، وضدّ اليوم ليلة وجمعها لَيال، وكان الواحد لَيْلاة في الأَصل،
لسان العرب
ஆனால் இரவுகள் பகல்களை எண்ணுவோம். ”இரண்டு இரவுகள் மூன்று பகல்கள்” என்பதைப் போல. இதேப் போல இரவுகளை பகல்களை எண்ண பயன்படும் வார்த்தைகள் *லைலத்* மற்றும் *யவ்ம்*.
*"இரவு வரை உறங்குங்கள்”* என்று இரவுப்பொழுதை சொல்ல லைல் என்பார்கள். இங்கே இரவு என்பது பொழுது. அதே வேளையில் *3 இரவுகள் பயணப்பட்டு மதுரையை* அடைந்தேன் என்று சொல்ல லைலத் எனும் வார்த்தையை பயன்படுத்துவார்கள்.
*பகலில் உழையுங்கள்* என்று சொல்ல நஹாரை பயன்படுத்துவார்கள். *ஐந்து பகல்கள் வேலை பார்த்து இந்த அலமாரியை உருவாக்கினேன்* என்று சொல்ல யவ்ம் (பன்மை அய்யாம்) எனும் வார்த்தையை பயன்படுத்துவார்கள்.
உதாரணங்கள்: லைல் & நஹார் எப்போது வரும்?
هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ *الَّيْلَ* لِتَسْكُنُوْا فِيْهِ *وَالنَّهَارَ* مُبْصِرًا‌ ، اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّسْمَعُوْنَ‏ 
10:67. இரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை வெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
وَجَعَلْنَا *الَّيْلَ* *وَالنَّهَارَ* اٰيَتَيْنِ‌ فَمَحَوْنَاۤ اٰيَةَ *الَّيْلِ* وَجَعَلْنَاۤ اٰيَةَ *النَّهَارِ* مُبْصِرَةً
17:12. இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம்.
وَمِنْ رَّحْمَتِهِ جَعَلَ لَـكُمُ *الَّيْلَ* *وَالنَّهَارَ* لِتَسْكُنُوْا فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ 
28:73. நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது.
இங்கே எண்ணிக்கை, பன்மை எதுவும் இல்லாமல் இரவு பகல் எனும் பொழுதுகளை குறிக்க லைல் & நஹார் வந்துள்ளதை காண்க...
உதாரணங்கள்: லைலத் (லயால்) & யவ்ம் (அய்யாம்) எப்போது வரும்?
سَخَّرَهَا عَلَيْهِمْ *سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ* حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ
69:7. அதை ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான். அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப் போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர்.
قَالَ رَبِّ اجْعَل لِّي آيَةً , قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ *ثَلَاثَ لَيَالٍ* سَوِيًّا
19:10. " இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!'' என்று அவர் கேட்டார். "குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேச மாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்'' என்று அவன் கூறினான்.
قَالَ رَبِّ اجْعَل لِّي آيَةً , قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ *ثَلَاثَةَ أَيَّامٍ* إِلَّا رَمْزًا
3:41. "இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!'' என்று அவர் கேட்டார். "மூன்று பகல்கள் சைகையாகவே தவிர உம்மால் மக்களிடம் பேச முடியாது என்பதே உமக்குரிய சான்றாகும்.
وواعدنا موسى *ثلاثين ليلة* وأتممناها بعشر فتم ميقات ربه *أربعين ليلة*
7:142. மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். அதை (மேலும்) பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது.
இரவு பகல்களை எண்ணும்போது லைல் & நஹார் பயன்படுத்தப்படாது. (பயன்படுத்த முடியாது). லைலத் & யவ்ம் ஆகிய வார்த்தைகளே பயன்படுத்தப்படும்.
லைல் என்றாலும் லைலத் என்றாலும் இரவு என்பதை தவிர வேறு அர்த்தமில்லை. லைலை எண்ணவேண்டுமெனில் லைலத்தாகவே எண்ணவேண்டும். நஹார் என்றால் பகல் பொழுது. நஹாரை அய்யாம் என்றே எண்ணவேண்டும். மேலும் “அய்யாம்” எனப்படுவது நாட்களின் எண்ணிக்கைக்கும் பயன்படும், காலங்கள் என்ற பொருளிலும் பயன்படும்.
லைலத்துக்கு நாள் என்று அர்த்தம் இருப்பதாக அரபு மொழி தோன்றிய நாள் முதல் இன்று வரை எங்குமே எழுதப்படவில்லை.
எனில் மூஸா நபி விஷயத்திலும் Zகரிய்யா நபி விஷயத்திலும் குழப்பம் வருமே?
وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ *أَرْبَعِينَ لَيْلَةً*
2:51. மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்!
وَوَاعَدْنَا مُوسَىٰ *ثَلَاثِينَ لَيْلَةً* وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ *أَرْبَعِينَ لَيْلَةً*
7:142. மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். அதை (மேலும்) பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது.
قَالَ رَبِّ اجْعَل لِّي آيَةً , قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ *ثَلَاثَ لَيَالٍ* سَوِيًّا
19:10. " இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!'' என்று அவர் கேட்டார். "குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேச மாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்'' என்று அவன் கூறினான்.
قَالَ رَبِّ اجْعَل لِّي آيَةً , قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ *ثَلَاثَةَ أَيَّامٍ* إِلَّا رَمْزًا
3:41. "இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!'' என்று அவர் கேட்டார். "மூன்று பகல்கள் சைகையாகவே தவிர நீர் பேச மாட்டீர்” என்பதே உமக்குரிய சான்றாகும்.
கேள்விகள், ஐயங்கள்?
மூஸா நபி 40 இரவுகள்தான் ஊரில் இல்லை என்று அர்த்தம் வைத்தால், அவர்கள் அந்த நாட்களின் பகல்களில் ஊரில் இருந்தும் மக்களை குஃப்ரில் இருந்து தடுக்காமல் இருந்திருப்பார்களா?
ஒரு வசனத்தில் 3 லைலத் (இரவுகள்) பேசமாட்டீர்கள் என்று சொல்லிவிட்டு இன்னொரு இடத்தில் 3 நாட்கள் (அய்யாம்) பேசமாட்டீர்கள் என்று சொல்வதன் மூலம் லைலத் என்றால் நாட்கள் என்று அர்த்தம் என்கிறான் அல்லாஹ்!
குர்ஆன் தமிழ் மொழியில் டாக்டர் ஜானுக்கு அருளப்படவில்லை. அரபு மொழியில் முஹம்மத் நபிக்கு அருளப்பட்டது [41:44]. குர்ஆன் இறக்கப்படும் முன்னரும் அரபு மொழி செழித்துதான் இருந்தது. இலக்கியங்கள் இருந்தன, அவற்றில் இலக்கணம் இருந்தது. அவர்களுக்கு விளங்குவதற்காகவே அரபு மொழியில் இறக்கியதாக அல்லாஹ் சொல்கிறான் [43:3]. அவர்களுக்கு விளங்கவேண்டுமெனில் அவர்கள் பேசிய அரபு மொழியில்தான் குர்ஆன் அருளப்பட்டிருக்குமே தவிரப் பிற்காலத்தில் 1390 ஆண்டுகளுக்குப் பின் வாழும் ஹிஜ்ராவினர், டாக்டர் ஜான் மொழிபெயர்ப்பை பார்த்து விளங்குவதைப் போல இறக்கப்பட்டிருக்காது. யாருக்கு இறக்கப்பட்டதோ அவர்களின் மொழியில் விளங்கவேண்டுமே தவிர ஹிஜ்ராவினர் பேசும் மொழியில் அதை விளங்கக்கூடாது.
அரபுகள் நாட்களை எண்ணும்போது, நடந்த சம்பவத்தின் முக்கியத்துவம் கருதி அதை இரவாக எண்ணுவார்கள், அல்லது பகலாக எண்ணுவார்கள். பயணங்கள் இரவிலே மேற்கொள்ளப்படும். எனவே பயணங்கள் இரவில்தான் எண்ணப்படும். பயணத்தில் தங்குவது இரவில்தான். எனவே தங்குதல் எனும் செயல் இரவிலேயே எண்ணப்படும். இது இன்றும் நடைமுறையில் உள்ள விஷயம். தங்கும் விடுதியில் (ஹோட்டல்களில்) இரவைத்தான் கணக்கெடுப்பார்கள். Night Stay என்பார்கள். இரவுக்குத்தான் பணம் வசூலிக்கப்படும். உல்லாசச் சுற்றுலாவுக்கு விளம்பரம் இரவுகளின் கணக்கிலேயே செய்யப்படும். மலேசியா டூர் பேக்கேஜ் : 5 பகல்கள் + 4 இரவுகள் ஹோட்டல் ஸ்டேய். இது அன்றும் இன்றும் எல்லாக் கலாச்சாரங்களிலும் வழமையில் உள்ள ஒன்று.
மேலுள்ளவை நேரடி எடுத்துக்காட்டுக்கள். இவை விளங்காதவர்களுக்கு இதே போல வேறு வழக்கங்களைச் சொல்லலாம். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆட்களை எண்ணுவதற்குத் தலையை எண்ணுவோம். “தலைக்கு 5 ரூபாய் வசூலிக்கப்படும். 500 Dollars per head.” என்று அலுவலக ரீதியில் கூட எழுதுவோம். பேச்சு வழக்கிலும் “தலைகளை எண்ணுப்பா!” என்போம். ஆட்களை அவர்களின் தலைகளை வைத்து எண்ணுவோம்.
மேலே சொன்னது தத்திகளுக்கான உதாரணமே. ஒரு தலைக்கு ஒரு உடல்தான் இருக்கும் என்று விளங்குவதைப் போல ஓரிரவுக்கு ஒரு பகல்தான் என்று விளங்கக்கூடாது. இரவையும் பகலையும் தனித்தனியாக எண்ணும்போது ஒரே நாளின் இரவு பகலாக அவை அமையவேண்டும் என்றில்லை. உதா:- நான்கு இரவுகள் மூன்று பகல்கள் பயணம் என்றால், இரவுகளுக்கு இடையே பகல்கள் அமையும். பயணம் இரவில் தொடங்கும். முதல் நாளின் பகல் பயணம் தொடங்கிய அந்த நாளிலேயே அமையும். ஆனால், மூன்றாம் நாளின் பகல் முடிந்த பிறகு நான்காம் நாளின் இரவில் பயணம் முடியும். நான்காம் நாள் முடிவதற்கும் பயணம் முடிந்துவிடும். நாம் செய்யும் செயல்கள் முழு நாளாக இருக்கவேண்டியதில்லை என்பதே இதற்குக் காரணம்.
இதுவே நான்கு பகல்கள் மூன்று இரவுகள் பயணம் என்றிருந்தால், பயணம் பகலில் தொடங்கும். அந்த இரவில் நாம் ஊரில்தான் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருப்போம். முதல் பகல் முடிந்த பிறகு இரண்டாம் இரவு தொடங்கும், இரண்டாம் இரவுக்குப்பின் இரண்டாம் பகல் வரும். இறுதி நாளின் இரவும் பகலும் முழுமையாகப் பயணத்தில் இருக்கும். ஆனால் முதல் நாளின் இரவு பயணத்தில் இருப்பதில்லை.,
இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒரு காரியம் செய்யப்படுவதை வைத்து நாளின் துவக்கம் முடிவு செய்யப்படாது. நான் பகலில் பயணத்தைத் துவங்குவதால் நாள் பகலில் தொடங்குவதாக ஆகாது. இதுதான் ஆது சமூகம் அழிக்கப்பட்டபோதும் நடந்தது. வேதனையை அல்லாஹ் பகலிலிருந்து தொடங்கினான். இதனால் பகல்தான் நாளின் ஆரம்பம் என்று எவ்வாறு சொல்ல இயலும்.
ஒரு காரியத்தை நான் நண்பகலில் செய்யத் தொடங்கினால் நண்பகலில் நாள் துவங்குவதாக அமையுமா? இன்று அஸ்ர் வேளையில் ஒரு காரியத்தைத் தொடங்கி அதை நாளை லுஹா வேளையில் நான் முடித்தால் இடைப்பட்டதுதான் நாளா? அல்லது அஸ்ரில் நாள் துவங்குவதாக அமையுமா? சிந்தியுங்கள் ஹிஜ்ராவினரே!
இவ்வாறு, செய்யப்படும் காரியத்தின் முக்கியத்துவத்தைப் பொருத்து இரவுகளை எண்ணுவது அல்லது பகல்களை எண்ணுவது அல்லது இரண்டையும் தனித்தனியாக எண்ணுவது அக்கால மக்களின் வழக்கம். (இக்காலத்திலும் அவ்வழக்கம் இருப்பதை மேலே விளக்கினோம்.) மூஸா அலை விஷயத்தில் அல்லாஹ் அவர்களுக்கு வாக்களித்தது நாற்பது இரவுகளைத்தான். அந்த நாட்களின் பகல்களுக்கு அங்கே முக்கியத்துவமில்லை. அந்த பகல்களில் மூஸா நபி வேறு வேலைகளைச் செய்திருப்பார்கள். உண்டிருப்பர், உறங்கியிருப்பார், தொழுதிருப்பார். வாக்களிக்கப்பட்டவை இரவுகள் மட்டுமே. இடைப்பட்ட பகலில் அவர் பயணப்பட்டு ஊருக்கு வந்துபோகவில்லை. வந்திருந்தால் மக்களை வழிகேட்டின் பக்கமிருந்து அவரே தடுத்திருப்பார். ஹாரூன் அலை அவர்களைக் கேள்வி கேட்டிருக்கத் தேவை ஏற்பட்டிருக்காது.
Zக்கரியா நபி விஷயத்தில் ஓரிடத்தில் அல்லாஹ் 3 இரவுகள் என்கிறான், மற்றோரிடத்தில் அல்லாஹ் 3 பகல்கள் என்கிறான். இதை ஹிஜ்ராவினர் முரண்பாடாகப் பார்ப்பார்கள். ஆனால் சிந்தித்தால், பிற்காலத்தில் வரும் ஹிஜ்ராவினர்களுக்காகவே இவ்வசனங்களை அல்லாஹ் இவ்வாறு அமைத்தானோ எனத் தோன்றுகிறது. இதுதான் அக்கால மக்களின் பேச்சு வழக்கின் சான்றாகும். மேலும் நமது வாதத்தின் முக்கிய ஆதாரமுமாகும். இரவிலும் Zக்கரியா நபி பேசவில்லை. பகலிலும் Zக்கரியா நபி பேசவில்லை. ஓரிடத்தில் இரவுகளை எண்ணினான் அல்லாஹ், மற்றோரிடத்தில் பகல்களை எண்ணி ஹிஜ்ராவினரின் முகங்களில் அல்லாஹ் கரியைப் பூசிவிட்டான்.
மேலும் அவ்வசனங்களை இரவைத் தனியாக பகலைத் தனியாக அல்லாஹ் சொல்வதில் காரணம் இருக்கிறது. பகலைப் பற்றி சொல்லும்போது “சைகையாகவே தவிர பேசமாட்டீர்” என்கிறான், இரவைப் பற்றி சொல்லும்போது “நலமாக இருந்தும் இரவில் பேசமாட்டீர்” என்கிறான். இரண்டும் ஒன்றல்லவே. ஒரு வார்த்தையை வித்தியாசப்படுத்தி அல்லாஹ் நமக்கு ஏதோ சொல்கிறான் அல்லவா? சிந்திப்போம்! முந்தைய சமூகத்திற்கு மவுன விரதத்தை அல்லாஹ் அனுமதித்திருந்தான் (பார்க்க 19:26). அதன்படி Zக்கரியா (அலை) அவர்கள் பகலில் மவுன விரதம் இருப்பார்கள் என்கிறான். ஆனால் மவுன விரதம் இல்லாத இரவு நேரத்திலும் கூட, அதுவும் உடல் நலத்துடன் இருந்த போதும் இரவில் அவர்களால் பேச முடியாது என்கிறான். இதுதான் இரண்டு வசனங்களுக்கும் இடையே இருக்கும் முக்கிய வேறுபாடு. இதை நாம் சிந்திக்க வேண்டும். யவம்-லைலத் ஆகிய இரண்டையுமே நாள் என்று பொருள் செய்தால் இந்த வேறுபாட்டைச் சொல்லவே முடியாது.
லைலத் என்றால் இரவுதான், அதை நாள் என்றோ கிழமை என்றோ பொருள் கொள்ளவே இயலாது. ஒரு நிகழ்ச்சியின் முக்கியத்துவம் கருதி இரவுகளில் நடந்த நிகழ்ச்சிகள் இரவுகளாக; பகல்களில் நடந்த நிகழ்ச்சிகள் பகல்களாக எண்ணப்படும். இரவுகள் என்று எண்ணப்படும்போது இடையே இருக்கும் பகல்களும் கணக்கில் வரும். பகல்கள் மட்டும் எண்ணப்பட்டால் இடையே இருக்கும் இரவுகளும் கணக்கில் வரும். இரண்டும் சேர்த்து எண்ணப்பட்டால் அந்நிகழ்வு இரு பொழுதுகளிலும் நடந்துள்ளது என்றும் துல்லியமாக இரவு பகல்களை எண்ணிக் குறிப்பிடுகிறார்கள் என்றும் அர்த்தம்.
லைலத்தை எப்போது எண்ணுகிறார்கள் நஹாரை எப்போது எண்ணுகிறார்கள் என ஹதீஸ்களில் ஆராய்ந்தால் மிகத் தெளிவான, எண்ணற்ற ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் ஹதீஸ்களை மறுக்கும் கூட்டமான ஹிஜ்ராவினர் கேட்பதைப் போன்று குர்ஆனிலிருந்தே ஆதாரங்களைக் கொடுத்து நிறுவியுள்ளோம்.
ஹதீஸ்களிலிருந்து சான்றுகள்:
அன்னை ஆயிஷா இரவுகளையே எண்ணியுள்ளார்கள். நபிகளார் பகலில் மனைவிகளிடம் வந்ததாக அர்த்தம் ஆகாது. அல்லது லைலத்திற்கு நாள் என்றும் அர்த்தம் ஆகாது. இரவுகளை எண்ணுவது அவர்களின் வழக்கம்.
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَقْسَمَ أَنْ لاَ يَدْخُلَ عَلَى أَزْوَاجِهِ شَهْرًا - قَالَ الزُّهْرِيُّ - فَأَخْبَرَنِي عُرْوَةُ عَنْ عَائِشَةَ - رضى الله عنها - قَالَتْ لَمَّا مَضَتْ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً أَعُدُّهُنَّ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم - قَالَتْ بَدَأَ بِي - فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ أَقْسَمْتَ أَنْ لاَ تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا وَإِنَّكَ دَخَلْتَ مِنْ تِسْعٍ وَعِشْرِينَ أَعُدُّهُنَّ فَقَالَ  "‏ إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ "‏ ‏.‏
صحيح مسلم 1083
முஸ்லிம் 1977. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருடன் ஒரு மாதகாலம் சேரப் போவதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு (விலகி) இருந்தார்கள். பின்னர் நான் எண்ணிவந்த இருபத்தொன்பது இரவுகள் முடிந்ததும், என்னிடம்தான் முதன்முதலில் வந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு மாதம் எங்களிடம் வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே, இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும் வந்துவிட்டீர்களே?
நான் அந்த இரவுகளை எண்ணிக் கொண்டிருந்தேனே!" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மாதம் என்பதே இருபத்தொன்பது நாட்கள்தாம்" என்றார்கள்.
நபிகளார் தங்கியிருந்த காலம் 29 இரவுகள் என்கிறார்கள் அனஸ் (ரலி). தங்கியிருந்த இரவுகளை எண்ணியுள்ளார்கள்.
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ آلَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ نِسَائِهِ، وَكَانَتِ انْفَكَّتْ رِجْلُهُ، فَأَقَامَ فِي مَشْرُبَةٍ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً، ثُمَّ نَزَلَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ آلَيْتَ شَهْرًا.‏ فَقَالَ {‏إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ}‏
புகாரி 6684. அனஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாத காலம்) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தார்கள். அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள் மாடியறை ஒன்றில் இருபத்தொன்பது இரவுகள் தங்கியிருந்தார்கள். பின்னர் அவர்கள் இறங்கி வந்தபோது மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே? ' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "மாதம் என்பதே இருபத்தொன்பது நாட்கள்தாம்" என்றார்கள்
மாதம் என்பது 29 இரவுகளாகும் என்கிறார்கள் நபிகள் நாயகம். 29 பகல்கள் மாதத்தில் அடங்காதா என்று விளங்கக்கூடாது. லைலத் என்றால் நாள் என்றும் அர்த்தமல்ல. நாட்களை இரவுகளைக் கொண்டு எண்ணுவது அரபுகளின் வழக்கம்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ  "‏ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلاَثِينَ "‏‏.
புகாரி 1907. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்.'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இவற்றை விட தெளிவான ஆதாரம்:
இரவையும் பகலையும் எண்ணுங்கள் என்று நபிகளாரே சொல்கிறார்கள்
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ امْرَأَةً، كَانَتْ تُهَرَاقُ الدَّمَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَفْتَتْ لَهَا أُمُّ سَلَمَةَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "‏ لِتَنْظُرْ عَدَدَ اللَّيَالِي وَالأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا فَلْتَتْرُكِ الصَّلاَةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ ثُمَّ لْتَسْتَثْفِرْ بِالثَّوْبِ ثُمَّ لْتُصَلِّي "‏ ‏.‏
سنن النسائي 355
நபிகளாரின் காலத்தில் தொடர் உதிரப்போக்கால் ஒரு பெண் அவதிப்பட்டார். எனவே உம்மு சலமா (ரலி) அவருக்காக நபியிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் “இது அவருக்கு ஏற்படுவதற்கு முன்னால் அவருக்கு உதிரப்போக்கு ஏற்படும் இரவுகளையும் பகல்களையும் அவர் எண்ணட்டும், அந்த நாட்களில் அவர் தொழுவதை நிறுத்திக்கொள்ளட்டும். பின்னர் குளித்துவிட்டு துணியை கட்டிக்கொண்டு அவர் தொழட்டும்”
அறிவிப்பாளர்: உம்மு சலமா (ரலி); நூல்: நஸாஈ 355
இரவையும் பகலையும் எண்ணுங்கள் என்று நபிகளாரே சொல்கிறார்கள்
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلاَئِيِّ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، قَالَ أَتَيْتُ عَائِشَةَ أَسْأَلُهَا عَنِ الْمَسْحِ، عَلَى الْخُفَّيْنِ فَقَالَتْ عَلَيْكَ بِابْنِ أَبِي طَالِبٍ فَسَلْهُ فَإِنَّهُ كَانَ يُسَافِرُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَسَأَلْنَاهُ فَقَالَ جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ ‏.‏ قَالَ وَكَانَ سُفْيَانُ إِذَا ذَكَرَ عَمْرًا أَثْنَى عَلَيْهِ ‏.‏
முஸ்லிம் 465 (276) . ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள்மீது மஸ்ஹு செய்வது குறித்துக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், நீங்கள் அலீ பின் அபீதாலிப் அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராய் இருந்தார்கள் என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள், பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும்,உள்ளூரிலிருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்று கூறினார்கள்.
லைலத் என்பதற்கு இரவு என்பதை தவிர வேறு பொருளே இல்லை. அரபு மொழி வழக்கில் நாட்களை எண்ணுவதற்கு இரவுகளை எண்ணுவார்கள்.