Monday 17 July 2017

பீஜே VS பிறைவாசி

இவர்களின் காலண்டரை உலகில் யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு ததஜ உறுப்பினர் அடையாளம் கொடுப்பதும், அதிகமாக எதிர்ப்பவர்களுக்கு ததஜ நிர்வாகி அந்தஸ்து கொடுப்பதும் இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. யாரென்பது தெரியாமல் நபி வழி பிறையைப் பின்பற்றும் ஒரு சகோதரருக்கு இவர்கள் ததஜ நிர்வாகி பட்டம் கொடுத்து, அவர் காரி உமிழாத குறையையாய் இவர்களை கேவலப்படுத்தினார். இவர்களின் இச்செயலால் பலமுறை அசிங்கப்பட்டும்கூட இவர்கள் இதை தொடர்ந்து செய்துவருகிறார்கள். பிறைவாசி இணையதளத்தின் சத்திய பிரசாரத்தால் மிகுந்த நெருக்கடிக்குள்ளாயினர் ஹிஜ்ராவினர். உதாரணமாக “நாம் ஏன் கிப்லாவை மாற்றினோம்” என்ற சக ஹிஜ்ராவினரின் கேள்விகளுக்கே பதிலில்லாமல், சப்பைக்கட்டு கட்டிப்பார்த்தும் பயனில்லாமல், போகவே பிறைவாசியை எதிர்ப்பதற்காக தற்போது அவர்கள் கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் “மூட்டிவிடுதல்”.
தவ்ஹீத் வாதிகளை பிறைவாசி தளத்திற்கு எதிராக திருப்பிவிட்டால் தவ்ஹீத்வாதிகள் பிறைவாசி தளத்தை புறக்கணிப்பர்; நமக்கு இருக்கும் பெரிய எதிர்ப்பு குறைந்துவிடும் என்பதே இவர்களது எண்ணம். “PJ vs பிறைவாசி”, ‘பீஜேவுக்கு எதிராக பிறைவாசிகள் பேசுகின்றனர்’, ‘பீஜேவின் குர்ஆன் மொழிப்பெயர்ப்பு எதிராக பிறைவாசிகள் மொழிப்பெயர்ப்பு செய்கின்றனர்’ என பக்கம் பக்கமாக இணையதளங்களில் எழுதிவருகின்றனர். மேலும் பீஜேவுக்கு எதிராக பேசுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பிறைவாசி என்ற தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற அறிவிப்பு தவ்ஹீத் ஜமாஅத் தரப்பிலிருந்து வரும், இதன் மூலம் ‘நம்மை எதிர்க்கும் பெரிய கூட்டத்திட்டமிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம்’ என்பதும் இவர்களின் எண்ணமாக உள்ளது.
IDLஐக் கொண்டுதான் கிப்லாவை நிர்ணயம் செய்யவேண்டும் என்றும், மீகாது கிப்லா என்றும் அலி மானிக் பான் சொன்னபோது செவியுற்றோம் கட்டுப்பட்டோம் என்று நீங்கள் சரணடைந்ததைப் போல பீஜே என்ன சொன்னாலும் சரணடையும் கூட்டமல்ல தவ்ஹீத்வாதிகள். அலி மானிக் பான் சொன்ன தட்டை உலக RHUMB LINE கிப்லாவை நீங்கள் மார்க்கமாக மாற்றியதைப் போன்றும், அவர் புதிதாக மார்கத்தில் நுழைத்த மீகாத்து கிப்லா என்ற பித்அத்தை மார்க்கமாக்கியதைப் போன்றும் தவ்ஹீத்வாதிகள் பீஜேவின் சுய கருத்தை மார்க்கமாக்கியவர்கள் அல்லர். ஆகவே நீங்கள் என்னதான் மூட்டிவிட நின்னைதாலும் உங்கள் கனவுகள் நிறைவேறாது.
குர்ஆன் ஹதீஸுக்கு எதிராகவோ குர்ஆன் ஹதீஸின் போதனைக்கு எதிரான வகையிலோ பிறைவாசி தளம் பிரச்சாரம் செய்யாதவரையில் உங்களின் எண்ணம் நிறைவேறாது. பிறைவாசியில் குர்ஆன் ஹதீஸ் இருக்கிறதா என்றுதான் தவ்ஹீத்வாதிகள் பார்ப்பார்களே தவிர நீங்கள் எண்ணுவதைப்போல பீஜே இருக்கிறாரா தவ்ஹீத் ஜமாஅத் இருக்கிறதா என்று பார்க்கமாட்டார்கள். மேலும் பிறைவாசி எனும் தளம் தவ்ஹீத் ஜமாத்தால் நடத்தப்படும் இணையதலமல்ல. தவ்ஹீத் ஜமாஅதிற்கும் பிறைவாசி இணைய தளத்திற்கும் ஏற்கனவே எந்த தொடர்பும் இல்லை. எனவே இதை புதிதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவிக்கத் தேவையில்லை.
பீஜே VS பிறைவாசி என ஒரு கட்டுரை வடித்து தங்கள் நரித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர் ஹிஜ்ராவினர். அதில் இருக்கும் அவதூறுகளைப் பார்ப்போம்.
//பிறை விஷயத்தில் சகோதரர் பீஜே அவர்களின் தவறான போதனைகளையும், நிலைபாடுகளையும் தக்க ஆதாரங்களோடு ஹிஜ்ரிகமிட்டியினர் உலகிற்கு தெளிவுபடுத்தினர். இதனால் ததஜவிற்கு ஹிஜ்ரி கமிட்டியினர் மீது கடும் கோபம் ஏற்பட்டது. தனது தவறை திருத்திக் கொள்ள முன்வராத ததஜ தலைமை, 'பிறைவாசி' என்ற புனைப்பெயரில் ஹிஜ்ரி கமிட்டியினரை திட்டி தீர்ப்பதற்காக சில இளைஞர்களை ஏற்பாடு செய்தனர்.//
ததஜவை உண்மையற்ற முறையில் விமர்சனம் செய்யும் சாதாரண இயக்கங்களுள் ஒன்றுதான் ஹிஜ்ரா கமிட்டி. பிறைவாசி என்ற புனைப்பெயரில் சில இளைஞர்களை ததஜ தலைமை ஏற்பாடு செய்தது உண்மையில்லாத பட்சத்தில், இந்த அவதூறை பரப்பும் ஹிஜ்ராவினருக்கு தக்க கூலிவழங்க அல்லாஹ் போதுமானவன்.
//அவர்களும் ஹிஜ்ரி கமிட்டி சொல்லாத விஷயங்களை எல்லாம் சொன்னதாக அவதூறு பரப்பி வருகின்றனர். பிறை, காலண்டர், விஞ்ஞானம், கிப்லா, தொழுகைநேரம் என்று தலைப்பிட்டு தங்கள் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் எழுதி ஹிஜ்ரி கமிட்டியை தரம்தாழ்ந்து விமர்சிக்கின்றனர். அறிவுக்குப் பொருந்தாத வாதப் பிரதிவாதங்களை தாங்களாகவே எழுப்பி, அவற்றிற்கு பதில் என்று பக்கம்பக்கமாக புளுகுமூட்டைகளை அள்ளி வீசி வருகின்றனர்.//
பிறைவாசி இணையத்தளத்தில் ஹிஜ்ரா கமிட்டி செய்த குர்ஆன் மோசடி, ஹதீஸ் மோசடி, விஞ்ஞான மோசடி, வரலாற்று மோசடி ஆகிய ஒவ்வொன்றிக்கும் இவர்கள் பொதுமேடையில் பேசிய வீடியோக்கள், இவர்கள் இணையதளங்கள் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றை ஆதாரமாகக் காட்டியே தோலுரித்துள்ளோம். அவர்கள் வைத்த வாதங்கள் அறிவுக்கு பொருத்தமில்லாதவை என்று அவர்கள்  வாயாலே ஒப்புக்கொள்ள வைத்த அல்லாஹ் மிகப்பெரியவன்.
அடுத்ததாக இவர்கள் எழுதியிருப்பது ரமளானுக்கு முன்னதாக இவர்கள் கடை விரிப்பதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாம் எழுதியே கட்டுரை துணுக்கைப் பற்றி. அதை இங்கே காண்க: http://www.piraivasi.com/2017/07/17-1.html . இக்கட்டுரைத் துணுக்கால் கோபமுற்ற ஹிஜ்ரா அறிஞர்கள் தொடர்ந்து சகட்டு மேனிக்கு பிறைவாசி இணையதளத்தை நடத்துபவர்களை சாடிவருகின்றனர்.
//சகோதரர் பீஜே அவர்கள் மொழிபெயர்த்துள்ள திருக்குர்ஆன் மற்றும் பல்வேறு ஹதீஸ்களின் மொழிபெயர்ப்புகள் தவறாக உள்ளன என்றும் தாங்கள்தான் சரியாக மொழிபெயர்த்துள்ளோம் என்ற பாணியில் புதிய மொழிபெயர்ப்புகளை பதிந்து வருகின்றனர். ஹிஜ்ரி கமிட்டியினரை விமர்ச்சித்து வரும் இவர்களை பிஜேவையும் விமர்சிக்கும் நிலைக்கு அல்லாஹ் தள்ளி விட்டான்.
சமீபத்தில் இவர்கள் பரப்பி வரும் கட்டுரையிலிருந்து உதாரணத்திற்காக 5 வசனங்களின் மொழிபெயர்ப்புகளை மட்டும் இங்கு தருகிறோம்.
சகோ பீஜே மொழிபெயர்ப்பு : பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! (2:189)
பிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : ஹிலால்கள் ஹஜ்ஜிக்கும் மக்களின் மற்ற வழிபாடுகளுக்கும் நேரம் குறிக்கப்பட்ட (மவாகீத்) டைம் டேபிள் (2:189)//
ஒரு வசனத்தின் நேரடி மொழிப்பெயர்ப்பு எப்படி இருக்கும் என்றும் அதன் கருத்தை மட்டும் பதிவிட்டு அடைப்புகுறியில் எந்த வசனம் என்று குறிப்பிட்டால் எப்படி இருக்கும் என்றும் வேறுபாட்டை அறியாதவர்கள் ஹிஜ்ரா அறிஞர்கள். இதைக் கண்டு சிரிப்பதை தவிர வேறுதுவும் எமக்கு செய்யத்தோன்றவில்லை.
//சகோ பீஜே மொழிபெயர்ப்பு : ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான். (10:5)
பிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : நீங்கள் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் எண்ணிக்கையில் அறிந்து கொள்ள அதற்கு ராசிகளை (மன்ஸில்களை) ஏற்படுத்தியுள்ளோம் (10:5)
சகோ பீஜே மொழிபெயர்ப்பு : சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. (36:39)
பிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : மீண்டும் பழைய பேரீத்த மட்டையைப் (முதல் பிறை) போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல ராசிகளை ஏற்படுத்தியிருக்கின்றோம் (36:39)//
இவ்விரு குர்ஆன் வசனங்களிலும் இருக்கும் மனாஸில் என்ற வார்த்தைக்கு படித்தரம் என்று மொழிப்பெயர்த்து, பின்னர் தங்குமிடம் என்று மொழிப்பெயர்த்து, பின்னர் என்ன மொழிப்பெயர்க்க வேண்டும் என்றே தெரியாமல் பீஜேவின் மொழிப்பெயர்ப்பில் சரணடைந்து “நிலைகள்” என்று பீஜே மொழிப்பெயர்ப்பை காப்பியடித்து போஸ்டர் அடித்து வருகின்றனர் ஹிஜ்ரா அறிஞர்கள்.
C:\Users\Peer\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\நிலைகள்2.jpg

குர்ஆன் யாருடைய தனிவுடமையும் அல்ல. இன்னும், குர்ஆனை முஸ்லிகள் மட்டுமே சொந்தம் கொண்டாட இயலாது. அலகா எனும்  வார்த்தையை Dr. கீத் மூர் ஆய்வு செய்தார், Dr. மோரிஸ் புகைல் குர்ஆனின் பல விஞ்ஞான விஷயங்களை ஆய்வு செய்து உலகிற்கு வெளிப்படுத்தினார் என்று மேடைக்கு மேடை பேசும் ஹிஜ்ரா அறிஞர்கள் பீஜே மட்டுமே குர்ஆனை ஆய்வு செய்யவேண்டும் என்று நினைப்பது வியப்பளிக்கிறது.
10:5 & 36:39 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் மனாஸில் என்ற வார்த்தை பிறையையோ, படித்தரங்களையோ குறிக்காது அரபு மொழியில் அவ்வாறு பொருளும் இல்லை. மனாஸில் என்பது உயரிய விஞ்ஞானம். அவ்வார்த்தையை ஆய்வு செய்யவும் விளக்கவும் வானியல் கல்வியும் அவசியம். இந்நிலையில் இஸ்லாமிய ஆதாரங்களுடன் தகுந்த விஞ்ஞான விளக்கங்களுடன் இவ்விரு வசனங்களும் என்ன சொல்கின்றன என்று விளக்குவதற்கு பிறைவாசி நிர்வாகிகளுக்கு எந்த தகுதிக் குறைவும் இல்லை.
மனாஸில் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள
திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் -1 http://www.piraivasi.com/2015/08/20.html
விஞ்ஞான ஒளியில் மனாசில் http://www.piraivasi.com/2016/11/11.html
மனாziல் ஒரு பார்வை http://www.piraivasi.com/2016/03/16.html
மனாziலும் படித்தரங்களும் http://www.piraivasi.com/2016/05/11.html
உம்முல் குறாவும்! மன்ஸில்களும்!  http://www.piraivasi.com/2017/01/15.html
மனாஸில் என்றால் என்ன? http://www.piraivasi.com/2017/10/15-3.html

//சகோ பீஜே மொழிபெயர்ப்பு : அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதி தருவதாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு. (6:96)
பிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : மேலும் ஞாயிறும் திங்களும் கணக்காக இருக்கின்றன (6:96)
சகோ பீஜே மொழிபெயர்ப்பு : சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன. (55:5)
பிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : ஞாயிறும் திங்களும் கணக்கில் இருகின்றன (55:5)//
ஹிஜ்ரா அறிஞர்கள் அனைவரும் பொது அறிவில்லாதவர்கள் என்பது நமக்கு இதை வாசித்துதான் தெரியவந்தது. “ஞாயிறும் திங்களும் மட்டும்தான் கணக்கில் இருக்கிறதா? செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை இல்லையா?” என்றொரு அதிரடிக் கேள்வியை ஹிஜ்ராவினர் கேட்டனர். இக்கேள்வியால் நாம் சற்று நிலைகுலைந்தோம் என்பது உண்மைதான். ஞாயிறு, திங்கள் என்று, வாரநாட்களுக்கு பெயர்வரக்காரணம் என்ன? ஞாயிறு, திங்கள் ஆகிய வார்த்தைகளுக்கு உண்மையான பொருளென்ன என்றுகூட அறியாமல்தான் தமிழ்  பேசும்   ஹிஜ்ராவினர் வாழ்கிறார்களா? என்று நாம் வியந்தோம். இவர்களுக்கு ஆங்கிலமும் அரபும் தெரியாது என்று நாம் அறிவோம். தமிழ் மொழிகூட அறியாதவர்களாக இருப்பார்கள் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை.
மனிதன் புறக்கண்ணுக்கு தெரியும் 7 கோள்களை மட்டுமே அடையாளம் கண்டிருந்தான். அவை சூரியன், நிலவு, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி. உலகின் பெரும்பாலான சமுதாயங்களில் பெரும்பாலான மொழிகளில் இந்த 7 கிரகங்களின் பெயர்களைத்தான் வாரநாட்கள் ஏழிற்கும் பெயராக வைத்துள்ளனர். ஹிஜ்ரா அறிஞர்கள் தங்களின் மார்க்க ஆதாரமான கொள்ளும் விக்கிபீடியாவில் இதை பார்க்கவில்லையா? காண்க: https://en.wikipedia.org/wiki/Names_of_the_days_of_the_week#South_Asian_tradition
ஞாயிறு என்ற தமிழ் வார்த்தைக்கு சூரியன் என்று பொருள். தமிழர்கள் சூரிய பகவானுக்கு உகந்த நாளாக ஒரு நாளை கருதினர். எனவே அன்னாளிற்கு தங்களின் சூரிய கடவுளின் பெயரையே கொடுத்தனர்.
திங்கள் என்ற தமிழ் வார்த்தைக்கு சந்திரன் என்று பொருள். தமிழர்கள் சந்திர பகவானுக்கு உகந்த நாளாக ஒரு நாளை கருதினர். எனவே அன்னாளிற்கு தங்களின் சந்திர கடவுளின் பெயரையே கொடுத்தனர்.
இதே போல செவ்வாய் பகவானுக்கு ஒரு நாளையும், புதன் பகவானுக்கு ஒரு நாளையும், குரு பகவானுக்கு தமிழ் பெயரான வியாழன் என்ற நாளையும், வெள்ளி மற்றும் சனி பகவான்களுக்கு அவர்களின் பெயர்களிலேயே நாட்களுக்கு பெயரிட்டனர். அந்தந்த நாட்களில் அந்தந்த கடவுளுக்கு உகந்த வழிபாடுகளை செய்வர்.
ஆக ஞாயிறு, திங்கள், என்பவை உண்மையில் கிரகங்களின் பெயர்கள் என்று கூட அறியாமல் வாழ்ந்து வருகின்றனர் ஹிஜ்ராவினர். கிரேக்க கடவுள்களின் பெயர்களில் இருப்பதால் ஆங்கில காலண்டர் ஹராம் என்று பத்வா கொடுத்த ஹிஜ்ராவினர் இந்து கடவுள்களின் பெயர்களில் இருக்கும் வாரநாட்களை பயன்படுத்துவது ஹராம் என்று எப்போது பத்வா கொடுப்பார்கள்.?
சூரியனும் சந்திரனும் கணக்கில் இருக்கின்றன என்பதைத்தான் நாம் ஞாயிறும் திங்களும் கணக்கில் இருகின்றன (55:5) என்று எழுதியிருந்தோம்.
//இவர்கள் ஹிஜ்ரி கமிட்டியை விமர்சிப்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் தங்களை களம் இறக்கிவிட்ட தங்களின் ஆஸ்தான குருவான பீஜேயின் மொழிபெயர்ப்பை திருத்திவிட்டு வரட்டும்.//
பீஜே தான் பிறைவாசிகளை களம் இறக்கிவிட்டார் என்ற அவதூறுக்கு அல்லாஹ் இவர்களுக்கு கூலி கொடுப்பான். பீஜே தான் களம் இறக்கினார் என்றும் ததஜ தலைமை களம் இறக்கியது என்றும் சொல்லும் அதே நேரத்தில் இவர்கள பீஜேவுக்கு முரண்படுகின்றனர் ததஜவுக்கு மாறு செய்கின்றனர் என்றும் சொல்கின்றனர். சுய நினைவுடன்தான் இவர்கள் பேசுகிறார்களா என்று சக ஹிஜ்ராவினர் சிந்திப்பீர்களா?