Monday 17 July 2017

அவதூறு: முஹல்லா ஒருங்கிணைப்பே தமிழகப்பிறைக்கு ஆதாரம்

//ததஜவின் பிறை நிலைப்பாட்டின் படி பிறையை 29-வது நாள் மாலை 30-வது நாள் இரவு, மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் புறக்கண்ணால் பார்க்க வேண்டும். அதுவும் தமிழக எல்லைக்குள் மட்டுமே பிறை பார்க்கப்பட வேண்டும். தமிழகம் தாண்டி வரும் பிறைத் தகவலை ஏற்கக்கூடாது என்பதே இவர்களின் பிறை நிலைப்பாடு.இதற்கு குர்ஆனிலிருந்து நேரடியான ஆதாரத்தை தாருங்கள் என்று கேட்டோம், தரவில்லை. தமிழகம் என்ற ஒரு மாநில எல்லைதான் பிறைபார்க்கும் அளவுகோள் என்பதற்கு ஆதாரமாக ஸஹீஹான ஹதீஸைத் தாருங்கள் என்று கேட்டோம். மாநில எல்கை என்பதற்கு நேரடியான ஹதீஸ் ஆதாரத்தை பிஜேயாலும் தரமுடியவில்லை, பிறைவேஷங்களாலும் தரமுடியவில்லை.மாறாக 'தமிழ்' என்ற ஒரு மொழி பேசுகிறோம் அதனால் தமிழக எல்லையில் பிறை பார்க்கிறோம் என்று மொழி அடிப்படையிலான வரட்டு வாதத்தை முன் வைத்தனர். பாண்டிச்சேரி மக்கள் கிரேக்க, ரஷ்ய மொழிகளையா தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்? அங்கும் தமிழ்மொழிதானே உள்ளது. பாண்டிச்சேரியில் பிறை பார்க்கப்பட்டால் அந்த தகவலை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்டோம். உறுப்படியான பதில் வரவில்லை.//
எப்போதும்போல ஒளிந்துகொண்டு, சிலரை அனுப்பி நம்மிடம் சில கேள்விகளை கேட்டனர் ஹிஜ்ரா அறிஞர்கள். தமிழ்நாடு என்ற எல்லையை எடுத்து கேரளா என்ற எல்லையை விடுவதன் மூலம் நீங்கள் செய்வது மொழி வெறியாகாதா? கேரளா முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லையா? அவர்களின் பிறை சாட்சியத்தை நீங்கள் புறக்கணிக்கக் காரணம் மொழி வெறிதானே என்ற கேள்வியை தொடுத்தனர். அப்போது நாம் மொழியால் எந்த வேற்றுமையும் பாராட்டவில்லை மொழியில் வேற்றுமையை ஏற்படுத்தியது அல்லாஹ்தான், அவ்வேற்றுமை ஏற்படுத்தப்பட்டதற்கான காரணத்தையும் அல்லாஹ் சொல்லிவிட்டான் என்ற விளக்கத்தை பின்வரும் குர்ஆன் வசனத்தைக் காட்டி விளக்கினோம்.
30:22 வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடை யோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
49:13. மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
மனிதர்கள் மொழியால், எல்லைகளால், ஆட்சியால் பிரிந்திருப்பதால் அவர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாமல் போகாது என்றும் அல்லாஹ்வின் வேதத்தை பற்றிப்பிடிப்பதில்தான் ஒற்றுமை இருக்கிறது என்றும் விளக்கினோம். ஹிஜ்ரா அறிஞர்களுக்கு அது விளங்கவில்லை. தமிழ் மொழி என்பதுதான் எல்லை என்று நாம் சொன்னதாக விளங்கிக்கொண்டனர்.
//இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவும், பண்பாட்டு மொழியாகவும் உள்ளதே எப்படி வசதி? என்று கேட்டோம். தமிழ்மொழிப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் அங்கிருந்து வரும் பிறைத் தகவலைலும் ஏற்றுக்கொள்ளுங்களேன் என்றோம். தமிழ்மொழி என்ற சொத்தை வாதத்தை அத்தோடு கைவிட்டனர்.//
நாம் சொல்லாததை நம் மீது திணிப்பதே ஹிஜ்ராவினரின் வேலை.
//பின்னர் தமிழ்நாடு என்ற மாநிலம் ஒரு ஆட்சியின் கீழ் உள்ளது, அதனால்தான் தமிழக எல்கை என்கிறோம் என்றனர். மாநில அரசு என்பதைவிட பெரிய ஆட்சி அதிகாரமாக மத்திய அரசு உள்ளதே. எனவே இந்திய தேசியப்பிறை என்று எல்கையை விரிவுபடுத்த என்ன தடை? என்று கேட்டோம். மத்தியில் கூட்டு ஆட்சி மாநிலத்தில் சுயாட்சி தத்துவத்தையும் தற்போது கைகழுவி விட்டனர்.//
பிறை தகவலை ஏற்கும் எல்லை ஆட்சி அதிகாரத்தால் முடிவு செய்யப்படுவதுதான். ஷாம் எனும் எல்லையிலிருந்து வந்த தகவலை மதீனா எனும் எல்லைக்குள் இருந்த இப்னு அப்பாஸ் அவர்கள் ஹதீஸை மேற்கோள் காட்டி ஏற்கவில்லை. பார்க்க http://www.piraivasi.com/2017/06/28.html . மதீனாவுக்கும் கலீஃபா ஷாமிலிருந்த முஆவியாதான். எந்த எல்லையிலிருந்து வரும் தகவலை ஏற்கவேண்டும் என்று அந்த எல்லையிலிருக்கும் மக்கள் முடிவு செய்வார்கள். கேரளா ஹிலால் கமிட்டி என்ற அமைப்பை கேரளா முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அங்கே (ஹிஜ்ராவினரைத் தவிர) அனைத்து முஸ்லிம்களும் கேரளா எல்லையிலிருந்து வரும் தகவலை ஏற்றுகொள்கின்றனர். இங்கே மலையாளிகள் ஏற்றுகொண்டது கேரளா அரசு எனும் எல்லை.
சவூதி எல்லையில் பிறை பார்க்கப்பட்டால் அதை சவூதி அரசு ஏற்றுக்கொள்கிறது. இங்கே மக்கள் ஏற்றுகொண்ட எல்லை சவூதி அரபியா எனும் ஆட்சியின் எல்லை.
உமான் எல்லையில் பிறை பார்க்கப்பட்டால் அதை உமான் அரசு ஏற்றுக்கொள்கிறது. இங்கே மக்கள் ஏற்றுகொண்ட எல்லை உமான் எனும் ஆட்சியின் எல்லை.
இதே போல தமிழ்நாடு எனும் எல்லையில் பிறை பார்க்கப்பட்டால் அதை தமிழக முஸ்லிம்கள் ஏற்றுகொள்வோம் என தமிழக முஸ்லிம்கள் முடிவெடுத்துள்ளோம். (யூத காலண்டரை பின்பற்றும் ஹிஜ்ராவினரையும், உம்முல் குறாவை பின்பற்றும் ஸலஃபுகளையும் நாம் கணக்கெடுக்கவில்லை)
ஹிஜ்ரா அறிஞர்கள் கேட்பதைப் போல தமிழ்நாட்டின் எல்லையை குறிப்பிட்டும், இலங்கையின் எல்லையை குறிப்பிட்டும் வரும் ஹதீஸை கொடுத்தால் ஹிஜ்ராவினர் ஏற்றுகொள்வார்களா? இல்லை. நபிகளார் காலத்தில் தமிழ்நாடு ஏது இலங்கை ஏது என்று கேள்வி கேட்பார்கள். ஆக, இவர்கள் அறிந்துகொண்டே “தமிழ்நாடு” என்று பெயர் சொல்லப்பட்ட குர்ஆன் ஹதீஸை கேட்கின்றனர்.
தமிழ்நாட்டின் எல்லையை குறிப்பிட்டும், இலங்கையின் எல்லையை குறிப்பிட்டும் குர்ஆன் வசனமோ ஹதீசோ இல்லை. எல்லை விஷயத்தில் மக்கள் முடிவு செய்துகொள்ள அனுமதி வழங்கிவிட்டார்கள் நபிகளார். மேலும் நபிகளார் சொல்லாமல் விட்டதை கேள்வி மேல் கேள்வி கேட்டு அழிந்து விடாதீர்கள் என்ற எச்சரிக்கையையும் நபிகளார் விடுத்துச் சென்றுள்ளார்கள்.
நீங்கள் நோன்பு பிடிக்கும் நாளே நோன்பு. நீங்கள் நோன்பை விடும் நாளே ஈகைத்திருநாள். நீங்கள் பலியிடும் நாளே தியாகத்திருநாள்.
-நபி மொழி; அறிவித்தவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: திர்மிதீ 697
மக்கள் நோன்பை விடும் நாளே ஈகைத்திருநாள். மக்கள் பலியிடும் நாளே தியாகத்திருநாள்
-நபி மொழி; அறிவித்தவர் : ஆயிஷா (ரலி); திர்மிதி 802
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும்விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
-நபி மொழி; அறிவித்தவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 7288.
இதில் ஹிஜ்ரா அறிஞர்கள் அதிரடிக் கேள்விகளைக் கேட்டனர். மக்கள் என்பவர் யார், சுன்னத் ஜமாதினரா? ஜாக்கா? ததஜவா? என அனல் பறக்கும் கேள்விகளைக் கேட்டனர். நாம் ஒரு நபி மொழியை மேற்கோள் காட்டி அதில் மக்கள் என்று சொல்லப்பட்டிருப்பதை ஆதாரமாக காட்டினோம். அந்த நபி மொழி யாருக்கு பொருந்துமென்றால் யார் நபிவழியை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். புத்த துறவி ஒருவர் மக்களே என்று அழைத்து பிரச்சாரம் செய்கிறார். அந்த அழைப்பை ஏற்று ஹிஜ்ராவினர் செல்வார்களா? இல்லை! புத்தர்கள் மட்டுமே செல்வார்கள். அதே போல மக்கள் என்று நபிகளார் நபி வழியை பின்பற்றும் மக்களையே குறிப்பிடுகிறார்கள்.
யூத காலண்டர்களை பின்பற்றும் ஹிஜ்ராவினர் “நபி வழியை பின்பற்றும் மக்கள்” எனும் வார்த்தைக்குள் அடங்குவார்களா? என்றால் இல்லை!. உம்முல் குறா எனும் மனோ இச்சையை மார்க்கமாக்கியவர்கள் “நபி வழியை பின்பற்றும் மக்கள்” எனும் வார்த்தைக்குள் அடங்குவார்களா? என்றால் இல்லை! ஆகவே மக்கள் என்று நபிகளார் யாரை சொன்னார்கள் என்றால் நபி வழியை பின்பற்றும் மக்களைத்தான்.
//பிறை விஷயத்தில் TNTJ யையும், SLTJ யையும் தனித்தனியாக பிரித்து சொல்கின்றனர். ததஜ போட்ட குட்டிதானே SLTJ? தேசியப் பிறை என்ற நிலை எடுத்து, குட்டி 16 அடி பாய்ந்திருக்கலாம். ஆனாலும் SLTJ யின் மூக்கணாங்கயிறும் ததஜ தலைமை மாலுமியிடம்தானே இருக்கிறது. பிறை விஷயத்தில் TNTJ நிலைபாட்டையும், SLTJ நிலைபாட்டையும் ஒன்றிணைத்து தெற்காசியப் பிறை என்ற அகண்ட பவுண்டரியை நோக்கி பயணிக்கலாமே. அகண்ட பாரதத்தை கனவைப்போல அகண்ட எல்லையாகவும் அது அமையுமே? ததஜ தலைமைக்குத்தான் முஹல்லாக்களை ஒன்றிணைக்கும் அசாத்திய சக்தி இருக்கிறது அல்லவா?//
தமிழகத்தில் தமிழ்நாடு என்ற எல்லையை எடுத்திருப்பதால் மாநிலம் என்பதுதான் நமது நிலைப்பாடு என்று எண்ணிவிட்டனர் ஹிஜ்ரா அறிஞர்கள். பின்னர், நாடு என்ற எல்லையை இலங்கையில் எடுத்திருப்பதால் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் முரண்படுவதாக நினைகின்றனர்.
மாநிலம் என்பதோ நாடு என்பதோ நமது நிலைப்பாடு அல்ல. மக்கள் முடிவு செய்யும் ஆட்சி எல்லையே பிறையின் எல்லை. இதற்கு தெளிவான சான்றுகளை இப்னு அப்பாஸ் அறிவிக்கும் ஹதீசிலிருந்து காட்டிவிட்டோம். மக்கள் யார் என்பதை மேலே விளக்கிவிட்டோம்.
ஆம். தமிழ்நாட்டில் தமிழகம் முழுவதுமுள்ள முஸ்லிம்களை எங்களால் ஒருங்கிணைக்க முடிகிறது. தமிழக முஸ்லிம்கள் தமிழ்நாடு எனும் ஆட்சி எல்லையை பிறையின் எல்லையாக ஒருமனதாக ஏற்றுகொண்டனர். இது போல இலங்கையிலும், கேரளாவிலும், சவுதியிலும், உமானிலும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
எங்களால் கேரளாவின் மக்களை கட்டுப்படுத்தி அவர்களையும் ஒருங்கிணைத்து தென்னிந்திய பிறை எல்லையை நிறுவ இயலவில்லை. நாளை இன்ஷா அல்லாஹ் அது சாத்தியப்பட்டால் எங்களது எல்லை தென்னிந்திய எல்லையாக விரிவடையும்.
//இந்தியாவின் பகுதியாக இருந்த கட்சத்தீவு சமீபத்தில்தான் இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டது. கட்சத்தீவு மக்கள் யாருடைய பிறை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும்? என்று நமது சகோதரர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு கட்சத்தீவில் அந்தோணியார் கோவில்தான் உள்ளதாகவும், அங்கு முஸ்லிம்கள் இல்லை எனவும், ஆளில்லாத கடையில் ஏன் டீ ஆத்துகிறீர்கள்? என்று ததஜ வின் வழமையான பாணியில் நைய்யாண்டியை பதிலாக தந்துள்ளனர்.
அப்படியானால், கட்சத்தீவு அந்தோணியார் கோவில் விசேஷத்திற்காக அங்கு ததஜ பிறைவாசி கடைபோட்டு டீ விற்கப்போகும் வேளையில் அங்கு பிறை பார்த்தால், ததஜ தலைமை அதை ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அது இலங்கை SLTJ காரனுக்குரிய பிறைத் தகவல் என்று புறக்கணிக்குமா? என்று கேட்கிறோம். //
அல்ஹம்துலில்லாஹ்! பிறைவாசிகளுக்கென ஹலாலானா தொழில் இருக்கிறது. எந்த வேலைக்கும் போகாமல் காலண்டரே கதி என்றும், காலண்டரை வைத்து கிலாஃபத் பேசி, மக்களை ஒருங்கிணைத்து அரசியலில் குதித்து அரசியல்வாதி ஆகலாம் என்ற கனவுக்கோட்டையில் இருப்பவர்களின் கனவு ஒருநாள் கலையலாம். கனவு கலைந்து பிழைப்பு தேடி கட்சத்தீவில் அந்தோனியார் கோவில் வாசலில் டீக்கடை போடும் நிலை ஏற்படலாம். காயல்பட்டினத்திற்கு அருகாமையில்தானே கட்சத்தீவு உள்ளது.
இன் ஷா அல்லாஹ்! கட்சத்தீவில் பெருநாள் தொழும் நிலை ஏற்பட்டால் அதை அப்போது தவ்ஹீத் ஜமாஅத் அதை கைகாரியம் செய்து கொள்ளும். காத்திருங்கள்.
//உங்களைவிட பெரிய நிர்வாகமும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட, இந்திய அளவில் முஹல்லாக்களை நிர்வகிக்கின்ற சுன்னத் வல் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் பிரண்ட் போன்ற அமைப்புகள் நாளை இந்திய தேசியப்பிறை என்ற அளவுகோளை அறிவித்தால் உங்கள் நிலை என்ன? நீங்கள் இன்று புரியக்கூடிய சப்பை கட்டு வாதங்கள் நாளை இந்திய தேசியப் பிறைக்கும் பொருந்துமல்லவா? பதிலைச் சொல்லுங்கள் பிறைவாசிகளே..!!//
இதற்கும் காலம் பதில் சொல்லும்! எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அல்லாஹ் மட்டுமே அறிவான். நீங்கள் மேலே சொன்ன அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்டு தேசிய பிறையை அறிவிப்பது நடக்கும் காரியம் தானா? முதலில் அவர்களை அறிவிக்க சொல்லுங்கள். இன் ஷா அல்லாஹ் உடனே தீர்வை சொல்கிறோம்.
//இவர்கள் முஹல்லாக்களை ஒருங்கிணைக்கிறார்களாம். ஒற்றுமையோடு இருக்கின்ற முஹல்லாக்களை கூறுபோட்டு பிரிக்காமல் விட்டால் சரி.//
உச்சகட்ட வேடிக்கை இதுதான். ஒற்றுமையை நாடும் கிலாஃபத்காரர்கள் இரண்டாக இருந்த பெருநாளை மூன்றாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்கள். ஒன்றுமையை பேசும் முன் நீங்கள் முதலில் ஏற்படுத்திய பிரிவினையை களையுங்கள்.