Sunday 29 November 2015

நபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே!

நபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே!!

கணக்கீட்டை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொள்ளும் ஹிஜ்றா கமிட்டி, தவறான தங்கள் கணகீட்டை மெய்ப்படுத்திட குர்ஆன், ஹதீஸ், விஞ்ஞானம், வரலாறு, கிப்லா, போன்ற விஷயங்களில் எத்தகைய திரிபுகளையும் திருட்டுகளையும் செய்தனர் என்று முந்தைய ஆக்கங்களில் தெளிவுபடுத்தி இருந்தோம். அந்த வரிசையில் இவர்கள் செய்த மற்றுமோர் திரிபுதான் நபி தன் வாழ்நாளில் செய்த ஹஜ்ஜின் கிழமையை மாற்றியது. நபிகளாரின் ஹஜ்ஜில் வெள்ளிக்கிழமையில் (CE 06/03/0632) அரஃபாவும் சனிக்கிழமையில் நஹ்ர்-உடைய தினமும் அமைந்திருந்ததென்பது ஹதீஸ்களிலும் வரலாறுகளிலும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையில் அரஃபா நாள் வந்துள்ளது எனில் அதற்கு முந்தய வாரத்தில் வியாழன் (CE 26/02/0632) இரவில் அவர்கள் பிறையைப் பார்த்துள்ளார்கள். இதன் மூலம் புறக்கண்ணால் தான் பிறையை பார்க்கவேண்டும் என்பதும், மக்ரிபில் பிறையை பார்த்துதான் மாதத்தை துவங்க வேண்டும் என்பதும், இரவில்தான் நாள் துவங்குகிறது என்பதும் நிரூபணம் ஆகிறது. ஆனால் இவர்களது அமாவாசை கணக்குப்படி செவ்வாய் கிழமை (CE 25/02/0632) அமாவாசை என்பதால் புதன் கிழமை துல் ஹஜ் ஒன்றும் வியாழக்கிழமை (CE 05/03/0632) அரஃபா நாளும் வந்திருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை அரஃபா வந்தது இவர்களது கணக்கின் அடிப்படையையே தகர்த்துவிடுவதால் இவர்கள் நபிகளாரின் அரஃபா தினத்தையே மாற்ற முயற்சிக்கின்றனர். குர்ஆனை மாற்றுபவர்களுக்கு, ஹதீஸ்களில் விளையாடுபவர்களுக்கு, விஞ்ஞானத்திலும் வரலாற்றிலும் துணிந்து பொய்சொல்லும் இவர்களுக்கு நபிகளாரின் அரஃபாவை மாற்றுவதொன்றும் சிரமமான காரியமல்ல. இவர்களின் திருட்டு வேலைகளுக்குள் செல்வதற்கு முன் நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது நபியின் அரஃபா எந்த கிழமையில் நடந்தது. அதை தெரிந்து கொண்டால் பாதி தெளிவு கிடைக்கும். பின்னர் மார்க்கம் முழுமையாக்கப்பட்ட 5:3 வசனம் இறக்கப்பட்ட நேரம் எது. இரண்டையும் தெரிந்துகொள்ளும்போது முழு தெளிவு கிடைக்கும்.

நபி அரஃபாத்தில் எவ்வளவு நேரம் தங்கினார்கள்?

மினாவிலிருந்து நபிகள் நாயகம் அரஃபாத் மைதானத்திற்கு எப்போது வந்தார்கள் அரஃபாத் மைதானத்திலிருந்து எப்போது முஸ்தலிபாவிற்கு என்று தெரிந்து கொள்ளவேண்டும். எந்த நேரத்திலிருந்து எந்த நேரம்வரை நபிகளார் அரஃபாத் மைதானத்தில் இருந்தார்கள் என்று தெரிந்துகொள்வது முக்கியம்.
அரஃபாத் பெருவெளி என்பது மக்காவில் இருக்கும் ஒரு இடமாகும். அரஃபா நாள் என்பது துல் ஹஜ் 9ம் நாளுக்குரிய பெயராகும். அந்நாளின் பகல் பொழுதில் ஹாஜிகள் அரஃபாத் வெளியில் நிற்கவேண்டும். அரஃபாத் பெருவெளியில் தங்குவதுதான் ஹஜ்ஜின் முக்கிய கடமை.
துல் ஹஜ் 8 ஆம் நாளை யவ்முத் தர்வியா என்றழைகிறோம்.
யவ்முத் தர்வியா நாளானது துல் ஹஜ் 7 இன் பகல்பொழுது முடிந்து சூரியன் மறைந்த பின் துவங்குகிறது.
துல் ஹஜ் 9 ஆம் நாளுக்கு யவ்முல் அரஃபா என்று பெயர். துல் ஹஜ் 8 இன் பகல் பொழுது நிறைவடைந்து சூரியன் மறைந்த பின் அரஃபா நாளானது துவங்குகிறது.
துல் ஹஜ் 9 ம் நாளான யவ்முல் அரஃபாவின் பகல் பொழுது முடிந்து சூரியன் மறைந்த பின் வரும் இரவு லைலத் ஜம் ஆகும் அந்த இரவின் பகலுக்கு யவ்முன் நஹ்ர் என்று பெயர். இது துல் ஹஜ் 10ம் நாளாகும். இந்நாள் அடுத்து வரும் சூரிய மறைவு வரை நீடிக்கும்.
நபி துல் ஹஜ் 9 பகல் நேரத்திலேயே அரஃபாதுக்கு வந்துவிட்டார்கள். சூரியன் உச்சத்தை கடக்கும்வரை காத்திருந்தார்கள். பின்னர் உரையாற்றினார்கள். ஒரு பாங்கு இரண்டு இகாமத்துடன் லுஹ்ர் & அஸ்ர் தொழுதார்கள். நிற்கும் இடத்திற்கு வந்து கிப்லாவை நோக்கி நின்றார்கள். பின்னர் சூரியன் மறைந்து அதன் அந்தி வெளிச்சம் சிறிது மறையும் வரை அரஃபாத் வெளியிலேயே நின்றார்கள். சூரியன் மறைந்து அதன் அதன் அந்தி வெளிச்சம் சிறிது குறைந்தபின் உசாமாவை பின்னால் ஏற்றிக்கொண்டு முஸ்தலிபாவுக்கு புறப்படுகிறார்கள். இந்த சம்பவம் பல ஹதீஸ்களில் உள்ளன. பார்க்க (இப்ன் மாஜா 3190, அபு தாவூத் 1924)
மினாவிலிருந்து ஃபஜ்ர் தொழுதுவிட்டு காலையில் அரஃபாத் வந்தடைந்த நபிகளார் அன்று மாலை சூரியன் மறைந்து சிறிது நேரம்வரை அரஃபாத் வெளியிலேயே இருந்தார்கள்

அவர்கள் அரஃபாத் பெருவெளியில் நின்ற கிழமை எது?

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، وَغَيْرِهِ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ قَالَ رَجُلٌ مِنَ الْيَهُودِ لِعُمَرَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ لَوْ أَنَّ عَلَيْنَا نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{‏ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا‏}‏ لاَتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا‏.‏ فَقَالَ عُمَرُ إِنِّي لأَعْلَمُ أَىَّ يَوْمٍ نَزَلَتْ هَذِهِ الآيَةُ، نَزَلَتْ يَوْمَ عَرَفَةَ فِي يَوْمِ جُمُعَةٍ‏.‏ سَمِعَ سُفْيَانُ مِنْ مِسْعَرٍ وَمِسْعَرٌ قَيْسًا وَقَيْسٌ طَارِقًا‏.‏
புகாரி 7268. தாரிக் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்' எனும் இந்த (திருக்குர்ஆன் 5:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்' என்றார். அப்போது உமர்(ரலி) அவர்கள், 'இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை அறிவேன். இது அரஃபா நாள் வெள்ளிக்கிழமையன்று அருளப்பெற்றது' என்றார்கள்.
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ، قَالَ قَرَأَ ابْنُ عَبَّاسٍ ‏:‏ ‏(‏ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا ‏)‏ وَعِنْدَهُ يَهُودِيٌّ فَقَالَ لَوْ أُنْزِلَتْ هَذِهِ عَلَيْنَا لاَتَّخَذْنَا يَوْمَهَا عِيدًا ‏.‏ قَالَ ابْنُ عَبَّاسٍ فَإِنَّهَا نَزَلَتْ فِي يَوْمِ عِيدين فِي يَوْمِ جُمُعَةٍ وَيَوْمِ عَرَفَةَ
திர்மிதி 3044. அம்மார் இப்ன் அபி அம்மார் அறிவிக்கிறார்கள்”
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்' எனும் வசனத்தை இப்ன் அப்பாஸ் ரலி ஓதினார்கள். அப்போது உடனிருந்த யூதர் ஒருவர் இந்த (திருக்குர்ஆன் 5:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்' என்றார். அப்போது இப்ன் அப்பாஸ் ரலி “அது நிச்சையம் இரு பெருநாட்களின் தினத்தில்தான் அருளப்பட்டது, வெள்ளிக்கிழமையில், அரஃபா நாளில்என்றார்கள்

அருளப்பட்ட நேரம் எது?

1. அரஃபா அந்திப்பொழுதில், வெள்ளிக்கிழமையில்
188 - حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا  أَبُو عُمَيْسٍ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ: جَاءَ رَجُلٌ مِنَ الْيَهُودِ إِلَى عُمَرَ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنَّكُمْ تَقْرَءُونَ آيَةً فِي كِتَابِكُمْ لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ، لاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا، قَالَ: وَأَيُّ آيَةٍ هِيَ؟ قَالَ: قَوْلُهُ عَزَّ وَجَلَّ: {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي} [المائدة: 3] ، قَالَ: فَقَالَ عُمَرُ: وَاللهِ إِنَّي لَأَعْلَمُ الْيَوْمَ الَّذِي نَزَلَتْ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالسَّاعَةَ الَّتِي نَزَلَتْ فِيهَا عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَشِيَّةَ عَرَفَةَ فِي يَوْمِ الْجُمُعَةِ


தாரிக் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
யஹூதிகளில் ஒரு மனிதர் உமர் (ரலி) இடம் வந்து “மூ’மீன்களின் தலைவரே! நீங்கள் உங்களின் வேதத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களுக்கு இறக்கப்பட்டிருந்தால் அந்நாளை பெருநாள் ஆக்கியிருப்போம்” என்றார். “அது எந்த வசனம்” என்றார்கள் உமர் ரலி. ‘இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 5:3 வது) இறைவசனம் என்றார் அவர். அதற்கு உமர் (ரலி): அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு அந்த வசனம் என்று அருளப்பட்டது என்பதையும் எந்நேரத்தில் அருளப்பட்டது என்பதையும் நானறிவேன், அரஃபா நாளின் (அஷியத்) அந்திப்பொழுதில் வெள்ளிக்கிழமையில்.
முஸ்னத் அஹ்மத் 188
இந்த ஹதீஸில் அஷியத் அரஃபா ஃபீ யவமுல் ஜுமுஆ என்று வந்துள்ளது. அஷியத் என்பது சூரியன் மறைவதுக்கு முன்னால் இருக்கும் மாலை நேரத்தையும் சூரியன் மறைந்து சிறிது நேரம் இருக்கும் கருக்கல் நேரத்தையும் குறிக்கும் அரபி சொல். தமிழில் ஏறக்குறைய அந்தி எனும் வார்த்தையை சொல்லலாம்.
2. அரஃபா மைதானத்தில், வெள்ளிக்கிழமை அந்திப்பொழுதில்
9479 - وَأَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ بِشْرَانَ , أنبأ أَبُو جَعْفَرٍ الرَّزَّازُ , ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ , ثنا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ , عَنْ أَبِيهِ , عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ , عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ , قَالَ: قَالَ يَهُودِيٌّ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ: أَمَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا} [المائدة: 3] نَعْلَمُ الْيَوْمَ الَّذِي نَزَلَتْ فِيهِ لَاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا , فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ: " قَدْ عَلِمْتُ الْمَوْضِعَ الَّذِي نَزَلَتْ فِيهِ وَالْيَوْمَ , وَالسَّاعَةَ نَزَلَتْ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ بِعَرَفَةَ عَشِيَّةَ جُمُعَةٍ "


தாரிக் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
யூதர் ஒருவர் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், ‘இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்' (5:3) எனும் இறைவசனம் யூதர் சமுதாயமான எங்களுக்கு அருளப்பெற்றிருந்து, அது அருளப்பெற்ற தினத்தை நாங்கள் அறிந்திருந்தால், அந்நாளைப் பண்டிகை நாளாக நாங்கள் ஆக்கிக் கொண்டாடியிருப்போம்" என்றார். அப்போது உமர்(ரலி) அவர்கள், 'இந்த வசனம் இறங்கிய இடத்தையும், நாளையும் மேலும் அது இறங்கிய நேரத்தையும் நானறிவேன். இது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அரஃபாத் பெருவெளியில் இருக்கும்போது வெள்ளிக்கிழமையன்று (அஷியத்) அந்திப்பொழுதில் அருளப்பெற்றது' என்றார்கள்.
பைஹகி 9479
இந்த ஹதீஸில் அரஃபாவில் இருக்கும்போது, வெள்ளிக்கிழமை அந்திப்பொழுதில் என்று வந்துள்ளது.
3. "ஜம்உ" உடைய இரவில், "அரஃபாத்" பெருவெளியில்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ - وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ - قَالَ حَدَّثَنَا عَبْدُ، اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ أَبِيهِ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ قَالَتِ الْيَهُودُ لِعُمَرَ لَوْ عَلَيْنَا مَعْشَرَ يَهُودَ نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{‏ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا‏}‏ نَعْلَمُ الْيَوْمَ الَّذِي أُنْزِلَتْ فِيهِ لاَتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا ‏.‏ قَالَ فَقَالَ عُمَرُ فَقَدْ عَلِمْتُ الْيَوْمَ الَّذِي أُنْزِلَتْ فِيهِ وَالسَّاعَةَ وَأَيْنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ نَزَلَتْ نَزَلَتْ لَيْلَةَ جَمْعٍ وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِعَرَفَاتٍ
முஸ்லிம் 3017
முஸ்லிம் 5741. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், ‘இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்' (5:3) எனும் இறைவசனம் யூதர் சமுதாயமான எங்களுக்கு அருளப்பெற்றிருந்து, அது அருளப்பெற்ற தினத்தை நாங்கள் அறிந்திருந்தால், அந்நாளைப் பண்டிகை நாளாக நாங்கள் ஆக்கிக் கொண்டாடியிருப்போம்" என்று கூறினர். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அது அருளப்பெற்ற நாளையும் நேரத்தையும் அப்போது அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிந்துள்ளேன். அது "ஜம்உ" உடைய இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் () அவர்களுடன் "அரஃபாத்" பெருவெளியில் இருந்தபோது அருளப்பெற்றது" என்று கூறினார்கள்.
அரஃபா பகல் முடிந்து வரும் இரவுக்குப் பெயர் “ஜம்உ” இரவு. அரஃபா பகல் முடிந்து சூரியன் மறைந்த பின் ஜம்உ இரவு துவங்குகிறது ஜம்உ இரவின் ஆரம்ப நேரத்தில் சிறுது நேரம் நபிகளார் அரஃபாத் பெருவெளியில்தான் இருந்தார்கள்.
இந்த ஹதீஸ்களில் தெளிவாக அந்த வசனம் எந்த நேரத்தில் அருளப்பட்டது என்ற தகவல் உள்ளது. அஷியத் என்றால் மக்ரிபுக்கு சிறிது நேரத்திற்கு முன்னாலும் பின்னாலும் உள்ள நேரமாகும். ஹதீஸ்களில் இதற்கான ஆதாரத்திற்கு புகாரி 5618 & முஸ்லிம் 2466(1280-5) ஆகிய ஹதீஸ்களை பார்வையிடுங்கள். நபிகளார் அரஃபா நாளில் நோன்பு நோற்றுள்ளார்களா என சஹாபாக்களுக்கு சந்தேகம் வருகிறது. (பார்க்க புகாரி 5636) அதை நிவர்த்தி செய்ய நபிகளார் லுஹ்ர் அஸ்ர் தொழுத பிறகு அரஃபா பெருவெளியில் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கும் வேளையில் அவர்களுக்கு பால் கொடுத்து பரிசோதிக்கப்படுகிறது. புகாரி 5618 இல் அஷியத் எனும் வேளையில் நபிகளார் அரஃபாத் பெருவெளியில் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கும்போது பால் அருந்தியதாகவும் வந்துள்ளது. லுஹ்ர் அஸ்ர் தொழுத பிறகுதான் ஒட்டகத்தின் மீது அமர்ந்து நபிகளார் அரஃபாவில் தங்கினார்கள். மேலும் ஒருவர் நோன்பு நோற்றுள்ளாரா என்பதை மக்ரிபுக்கு முன்தான் சோதிக்க முடியும். இங்கே அஷியத் என்பது மக்ரிபுக்கு முன்னர் உள்ள வேளையை குறிக்கிறது. அடுத்து முஸ்லிம் 2466(1280-5) ஹதீஸில் நபிகளார் சூரியன் மறைந்த பிறகு அரஃபாவிலிருந்து புறப்பட்டு முZதலிஃபாவிற்கு செல்லும் வழியில் நடந்த நிகழ்வுகள் அஷியத் நேரத்தில் நடந்ததாக குறிப்பிடப்படுகிறது.
அகராதிகளிலிருந்து அஷியத் எனும் வார்த்தையின் பொருளை விளக்கினால் அகராதி பிடித்த கூட்டத்திற்குப் பிடிக்காது எனவே அரபுகளின் நடைமுறையில் அஷியத் எனும் வார்த்தையின் பொருளை ஹதீஸ்களிலிருந்து விளக்கியுள்ளோம்.
அவ்வசனம் இறங்கும்போது அஷியத் எனும் நேரத்தில் வெள்ளிக்கிழமையில் நபி அரஃபாத் பெருவெளியில்தான் நின்றார்கள் என்பதற்கும் தெளிவான ஆதாரங்களை மேலே தந்துள்ளோம். அந்த வசனம் வெள்ளிக்கிழமையின் இறுதி நேரத்தில் சனிக்கிழமையின் ஆரம்ப நேரத்தில் இறங்குகிறது. இதுதான் அஷியத் என்று குறிப்பிடப்படுகிறது. வெள்ளிக்கிழமை என்றும் ஜம்உ இரவில் என்றும் குறிப்பிடப்படுவதற்கும் இதுவே காரணம். துல் ஹஜ் 9 வெள்ளிக்கிழமையில் அஸருக்கு பிறகு சூரியன் மறைந்து அதன் மஞ்சள் மறைவதற்கு முன்பாக முஸ்தலிபாவுக்கு புறப்படும் முன் அந்த வசனம் இறங்குகிறது. மேலும் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து மாலை வரை நபி அரஃபாத் பெருவெளியில் இருந்தார்கள் என்பது தெள்ளத்தெளிவாக நிரூபணம் ஆகிறது.
வரலாறுகளைத் தொகுத்த ஆசிரியர்கள் அனைவரும் மாநபியின் அரஃபா வெள்ளி என்றே பதிவு செய்தனர். இப்னு ஹZம் எழுதிய ஹஜ்ஜத் விதா புத்தகத்தில் 120ம் பக்கத்தில் பின்வருமாறு தெளிவாக எழுதியுள்ளார்.
“நபி துல் ஹஜ் 1௦ சனிக்கிழமை இரவு முZதலிஃபாவுக்கு சென்றார்கள். அங்கே மக்ரிப் இஷா இரண்டையும் தொழுதார்கள். சனிக்கிழமை ஃபஜ்ர் வரை ஓய்வெடுத்தார்கள். சனிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையை மக்களுடன் தொழுதார்கள். சனிக்கிழமைதான் யவ்முன் நஹ்ர்”
107 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَبِيعٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَحْمَددُ بْنُ شُعَيْبٍ، أَنْبَأَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، هُوَ ابْنُ رَاهَوَيْهِ، أَنْبَأَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ بُكَيْرِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمَرِ الدِّيلِيُّ، قَالَ: شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ، وَأَتَاهُ نَاسٌ مِنْ أَهْلِ نَجْدٍ، فَسَأَلُوهُ عَنِ الْحَجِّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَجُّ عَرَفَةَ، فَمَنْ أَدْرَكَ لَيْلَةَ عَرَفَةَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ مِنْ لَيْلَةِ جَمْعٍ فَقَدْ تَمَّ حَجُّهُ» قَالَ أَبُو مُحَمَّدٍ رَحِمَهُ اللَّهُ: لَيْسَ يَمْنَعُ هَذَا مِنْ وُجُوبِ غَيْرِ عَرَفَةَ، فَخُصُومُنَا مَقْرُونٌ أَنَّ بَعْدَ عَرَفَةَ طَوَافَ الْإِفَاضَةِ، وَهُوَ فَرْضٌ لَا يَتِمُّ الْحَجُّ لِمَنْ لَمْ يَطُفْهُ، وَمَعْنَى قَوْلِهِ عَلَيْهِ السَّلَامُ: «مَنْ أَدْرَكَ لَيْلَةَ عَرَفَةَ قَبْلَ الْفَجْرِ» إِنَّمَا هُوَ عَلَى مَا نَصَّهُ عَلَيْهِ االسَّلَامُ [ص: 177] مِنْ أَنْ يُدْرِكَ مَعَ ذَلِكَ الصَّلَاةَ مَعَ الْإِمَامِ بِمُزْدَلِفَةَ. وَأَمَّا قَوْلُنَا: فَلَمَّا كَانَ فِي الطَّرِيقِ عِنْدَ الشِّعْبِ الْأَيْسَرِ نَزَلَ عَلَيْهِ السَّلَامُ فَبَالَ وَتَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا، فَقَالَ لَهُ أُسَامَةُ: الصَّلَاةَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الصَّلَاةُ أَمَامَكَ» أَوْ قَالَ لَهُ: «الْمُصَلَّى أَمَامَكَ» ، ثُمَّ رَكِبَ حَتَّى أَتَى الْمُزْدَلِفَةَ لَيْلَةَ السَّبْتِ الْعَاشِرِ مِنْ ذِي الْحِجَّةِ، فَتَوَضَّأَ عَلَيْهِ السَّلَامُ ثُمَّ صَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ الْآخِرَةَ مَجْمُوعَتَيْنِ فِي وَقْتِ الْعِشَاءِ الْآخِرَةِ دُونَ خُطْبَةٍ، لَكِنْ بِأَذَانٍ وَاحِدٍ لَهُمَا مَعًا وَبِإِقَامَتَيْنِ، لِكُلِّ صَلَاةٍ مِنْهُمَا إِقَامَةٌ، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا، ثُمَّ اضْطَجَعَ عَلَيْهِ السَّلَامُ بِهَا حَتَّى طَلَعَ الْفَجْرُ، فَقَامَ عَلَيْهِ السَّلَامُ وَصَلَّى الْفَجْرَ بِالنَّاسِ بِمُزْدَلِفَةَ يَوْمَ السَّبْتِ الْمَذْكُورِ، وَهُوَ يَوْمُ النَّحْرِ، وَهُوَ يَوْمُ الْأُضْحِيَّةِ، وَهُوَ يَوْمُ الْحَجِّ الْأَكْبَرِ مُغَلِّسًا أَوَّلَ انْصِدَاعِ الْفَجْرِ
************************





இந்த வீடியோவில் சகோதரர் அவிழ்த்துவிடும் பொய்களையும், கற்பனைகளையும், கட்டுக் கதைகளையும், அவர் நம்மிடம் கேட்கும் கேள்விகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

● “சாதரணமாக வரலாற்றில் தேதி மட்டுமே இருக்கும் ஆனால் இதில் மட்டுமே தேதியும் கிழமையும் உள்ளது. இதிலிருந்து சாதாரணமாக வரலாறுகள் பதிவு செய்யப்படும் முறைகளிலிருந்து இது மாற்றமானது என்று தெரிந்துகொள்ளலாம்”. என்கிறார்

கிழமையில்லாமல் தேதி மட்டுமே குறிப்பிடப்படும் ஹதீஸ்களை இவர் முதலில் காட்டவேண்டும். தனது பார்வையாளர்கள் தான் என்ன சொன்னாலும் கேட்பார்கள் எனும் இவரது அபார நம்பிக்கைதான் இவருக்கு இப்படி பொய்யுரைக்க துணை நிற்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் ஹஹிஹ் ஹதீஸ்கள் என்றறியப்படும் எந்த ஆதாரப்பூர்வ ஹதீஸ்களிலும் இவர் சொல்வதுபோல கிழமையில்லாமல் தேதி மட்டும் இடம்பெற்றதில்லை. எந்த ஹதீஸ்களிலும் தேதியே இடம்பெற்றதில்லை என்பது கூடுதல் தகவல். நபிகளாரின் அரஃபா நிகழ்வில் மட்டும் நம்மால் தேதியையும் கிழமையையும் அறிந்துகொள்ள முடிகிறது. பிற்காலத்தில் ஒரு அமாவாசைக்கூட்டம் வரும் அவர்கள் இஸ்லாமிய வரலாற்று தேதிகளை மாற்ற முயற்சிப்பார்கள் என்பதற்காக அல்லாஹ் செய்த ஏற்பாடுதான் இது. தேதி கிழமையுடன் பதிவுசெய்யப்பட்டு நபிகளாரின் ஹஜ், அமாவாசைக் கொள்கைக்கு எதிராக இருப்பதால் இவர்கள் நபிகளாரின் ஹஜ்ஜின் தேதியையே மாற்ற முயல்கிறார்கள்.

● அறிவிப்பாளர் சுஃபியானுக்கு சந்தேகம், அதனால் இந்த ஹதீசை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்

அறிவிப்பாளர் சுஃபியானுக்கு சந்தேகம் என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாத ஹதீஸ்களை எடுக்கவேண்டியதுதானே? ஸுஃப்யான் இல்லாமல் மற்ற அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் பார்க்க புகாரி 45, முஸ்லிம் 3017-5, திர்மிதி 3044, நசாயி 5012, அஹ்மது 188, பைஹகி 9479

● நபியின் அரஃபா எந்த நாள் என்பது அந்த காலத்திலேயே சர்ச்சைக்குரிய ஓன்று. இதுவும் இந்த ஹதீஸை பலவீனமாக்குகிறதாம்

வெவ்வேறாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களை புரிந்துகொள்ள இயலாத, அரபு மொழியறியா பேச்சாளர் இதை சொல்லக்கூடாது. எல்லா வரலாறுகளிலும் சீறாக்களிலும் நபியின் அரஃபா வெள்ளி என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. முதலில் இவர் நெபி என்று சொல்லாமல் நபி என்று சொல்லிப் பழகட்டும். பின்னர் அரபு மொழியைப் பற்றிப் பாடம் எடுக்கட்டும்.

● தாரிக் இப்ன் ஷிஹாப் மட்டுமே அறிவிக்கிறார்.

துணிந்து பொய்யுரைக்கிறார். திர்மிதி 3044இல் அம்மார் இப்ன் அபீ அம்மார் அறிவிக்கும் ஹதீசையும் மேலே தந்துள்ளோம். திர்மிதி 3044 ஹதீசை இவர் காட்டும் ஸ்லைடில் வைத்திருக்கிறார். வாசிக்காமல் நழுவுகிறார். தன்னிடம் அந்த ஹதீஸ் இருந்தும் வேண்டுமென்றே மறைத்துப் பொய் சொல்கிறார்.

● “தெ” சேர்த்தது

இவர்கள் தங்கள் காலண்டரை நிலைநாட்ட எத்தகைய கயமைத்தனத்தையும் செய்வர். எந்த எல்லைக்கும் செல்வர். ஜம் என்ற வார்த்தையில் “தெ” சேர்த்து ஜுமுஅதி என்று மாற்றிவிட்டார்களாம். இவர்கள் இப்படி குற்றம் சுமத்துவதற்கு என்ன ஆதாரம்? இவர்கள் சொல்லும் தஃப்சீர் செய்திகள்தாம் சரி என்பதற்கும் ஹதீஸ்கள் தவறானவை என்பதற்கும் இவர்கள் சான்றுகளைத் தரவேண்டும். ஜம்உ இரவு என்றால் என்னவென்பதை மேலே விளக்கியுள்ளோம்.

● யவ்முல் ஜுமுஆ, யவ்முல் ஜம்’உ, லைலத் ஜுமுஆ, லைலத் ஜம்’உ, யவ்முல் அரஃபா, அஷியத் அரஃபா, லைலத் அரஃபா இப்படி குழப்பமாக அறிவிக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் அரஃபா எந்த கிழமை என்று அன்றைக்கே சந்தேகத்திற்குரியதாக இருந்ததாம்.

பல்வேறாக அறிவிக்கப்பட ஹதீஸ்களை ஆதாயமாக எடுத்து தன் பார்வையாளர்களை சந்தோஷப்படுத்த இவர்கள் வாடிக்கையாக செய்யும் யுக்திதான் இது. பல்வேறாக அறிவிக்கப்பட்ட ஹதீஸை எப்படி தெளிவாக விளங்குவதென்று விளக்கிவிட்டோம். எல்லா ஹதீஸ்களும் ஒட்டு மொத்தமாக சொல்லும் செய்தி நபிகளார் வெள்ளிக்கிழமையில் அரஃபாத் பெருவெளியில் இருந்தார்கள் என்பதைத்தான். வியாழக்கிழமையில் அரஃபாத் பெருவெளியில் இருந்தார்கள் என்றோ யவ்முன் நஹ்ர் வெள்ளிக்கிழமையில் அமைந்ததாகவோ எந்த ஹதீசும் இல்லை.

● நசாயி 3002 இல் (லைலத் ஜுமுஆ) வெள்ளி இரவென்று என்று வந்துள்ளதே. உங்கள் கணக்குப்படி சனி இரவென்றல்லவா வந்திருக்கவேண்டும்

3002 - أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِيهِ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ: قَالَ يَهُودِيٌّ لِعُمَرَ: لَوْ عَلَيْنَا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ لَاتَّخَذْنَاهُ عِيدًا {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ} [المائدة: 3] قَالَ عُمَرُ: " قَدْ عَلِمْتُ الْيَوْمَ الَّذِي أُنْزِلَتْ فِيهِ، وَاللَّيْلَةَ الَّتِي أُنْزِلَتْ: لَيْلَةَ الْجُمُعَةِ، وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَاتٍ "


இங்கே லைலத் எனும் வார்த்தைக்கு நாள் என்று நாம் பொருள் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறோமாம். இது ஹிஜ்ராவினரின் ஒரு வாதமாக இருக்கிறது.
லைலத் என்பதை நாள் என்ற பொருளில் எடுத்தாலும் நபிகளார் வெள்ளிக்கிழமை அரஃபாவில் நின்றார்கள் என ஹிஜ்ராவினருக்கு எதிராகவே பொருள் வரும்.
இரவு என்று எடுத்தாலும் இவர்களுக்கு சாதகமாக இல்லையே. எந்த இரவிலும் நபிகளார் அரஃபாவில் இருக்கவே இல்லை. அரஃபாவுக்கு முந்தய இரவில் மினாவில் இருந்தார்கள் மறு இரவில் முஸ்தலிஃபாவில் இருந்தார்கள். துல் ஹஜ் 9ம் நாளின் காலையில் அரஃபாவுக்கு வந்த நபிகளார் சூரியன் மறைந்த பிறகு முஸ்தலிஃபாவுக்கு சென்றுவிட்டார்கள். இரவின் ஆரம்பத்தில் சிறிது நேரம் இருந்ததை தவிர இரவில் நபிகளார் அரஃபாவில் தங்கவே இல்லை.
இரவு என்று எடுத்தாலும் நாள் என்று எடுத்தாலும் இது ஹிஜ்ராவினருக்கு எதிரான செய்தி.
எனில் இந்த ஹதீஸை எவ்வாறு விளங்குவது? 5:3 வசனம் இறங்கியது அஷியத் எனும் நேரத்தில். அதை இரவின் இடத்திலும் வைப்பார்கள். வெள்ளிக்கும் சனிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இருப்பதால் இந்த அறிவிப்பில் அதை வெள்ளி இரவென்று அறிவித்திருக்கிறார்கள். அஷிய்யா நேரத்தைதான் அறிவிப்பாளர் லைலத் என்று அறிவித்துள்ளார் என்பது வெள்ளிடை மலை. இந்த ஒரே ஒரு அறிவிப்பு மட்டுமே மற்ற அனைத்து அறிவிப்புகளுக்கும் மாற்றமாக உள்ளது என்பதே கூடுதல் ஆதாரம்.ஒரே ஹதீஸ் சில வார்த்தைகள் வித்தியாசத்தில் அறிவிக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் ஹதீஸ்களில் எண்ணற்றவை உள்ளன. ஒரே ஹதீஸ் அல்லது சம்பவத்தை பல அறிவிப்பாளர்கள் அர்த்தம் மாறாமல் வேறு வார்த்தைகளில் அறிவிப்பார்கள். அப்படி நிகழ்ந்த ஓன்று இது.
இதனால் அரஃபா வியாழக்கிழமை ஆகாது. லைலத் நாள் ஆகாது.
லைலத்தை இரவு என்றெடுத்தாலும் பகல் என்றெடுத்தாலும் ஹிஜ்ராவினருக்கு எதிராகவே இருக்கிறது. இதை வைத்து என்ன சாதிக்கிறார்கள்?

● “ஈதைன் இஸ்னைன், யவ்முல் ஈத் வ யவ்முல் ஜுமுஆ” என்று தபரி 11098ல் வரும் ஹதீஸ்தான் சரி

தஃப்சீர் தபரி 11098ல் வரும்ஈதைன் இஸ்னைன், யவ்முல் ஈத் வ யவ்முல் ஜுமுஆசெய்தியை மட்டும் உண்மை என்கிறார்கள். மற்றவற்றை பொய் என்கிறார்கள். தபரியின் அந்த செய்தியில் “இரு பெருநாட்களின் தினத்தில், பெருநாள் தினம் ஜுமுஆ தினம்” அந்த வசனம் இறங்கியதாக வந்துள்ளது. எனவே பெருநாள் தினமாகிய துல் ஹஜ் 10 தான் வெள்ளிக்கிழமை. எனவே அரஃபா வியாழக் கிழமைதான் என்கிறார்.

தபரி என்பது தஃப்சீர் புத்தகம். ஹதீஸ் புத்தகமல்ல. ஈதைன் இஃத்னைன் என்று வரும் அறிவிப்பை நாமும் ஹதீஸ் புத்தகங்களில் பார்த்தோம். இதோ.

حَدَّثَنَا يُوسُفُ الْقَاضِي، ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ أَنَّ ابْنَ عَبَّاسٍ قَرَأَ هَذِهِ الْآيَةَ: {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي} [المائدة: 3] إِلَى آخِرِ الْآيَةِ، وَعِنْدَهُ يَهُودِيٌّ , فَقَالَ: لَوْ أُنْزِلَتْ عَلَيْنَا هَذِهِ الْآيَةُ لَاتَّخَذْنَا يَوْمَهَا عِيدًا، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: " فَإِنَّهَا نَزَلَتْ فِي يَوْمِ عِيدَيْنِ اثْنَيْنِ: جُمُعَةٍ، وَيَوْمِ عَرَفَةَ "

தபரானியின் கபீர் 12835

இரு பெருநாட்களின் தினத்தில்: ஜுமுஆ தினம் மற்றும் அரஃபா தினம் என்று இந்த அறிவிப்பில் தெளிவாக வந்துள்ளது. மார்க்கம் தெரியாத ஹிஜ்ரா அறிஞர்கள் நஹ்ர் தினத்தை மட்டுமே பெருநாள் தினம் என நினைக்கிறார்கள். ஆனால் அரஃபா நாள்தான் ஹாஜிகளின் முதல் பெருநாள் தினம். அவர் காட்டும் தபரியின் செய்தி வாதத்திற்கு ஸஹீஹ் என்று எடுத்துக்கொண்டாலும் அது வெள்ளி எனும் பெருநாளாகவும் அரஃபா பெருநாளையும் சேர்த்து இரண்டு பெருநாட்கள் என்றுதான் பொருள். ஹாஜிகளுக்கு அரஃபா நாள்தான் பெருநாள், முஸ்லிம்களுக்கு எல்லா வெள்ளிக்கிழமையுமே பெருநாட்கள்தான். இது ஏற்கனவே மேலே கொடுக்கப்பட்ட திர்மிதி 3044ம் ஹதீஸிலும் சொல்லப்பட்டுளைத் காண்க..

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُوسَى بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: " يَوْمُ عَرَفَةَ وَيَوْمُ النَّحْرِ وَأَيَّامُ التَّشْرِيقِ عِيدُنَا أَهْلَ الْإِسْلَامِ، وَهِيَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ "


நபி அவர்கள் கூறினார்கள் முஸ்லிம்களாகிய நமக்கு அரபா நாள் (துல் ஹஜ் 9), பலியிடும் நாள் (துல் ஹஜ் 10), தஷ்ரீக் நாள்கள் (துல் ஹஜ் 11,12,13) ஆகியவை பெருநாட்கள் ஆகும். அவை உண்பதற்கும் பருகுவதற்குமான நாட்களாகும்”

அறிவித்தவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
திர்மிதீ 773, நசாயி 3004, அபூ தாவூத் 2419,

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ "‏ قَدِ اجْتَمَعَ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ فَمَنْ شَاءَ أَجْزَأَهُ مِنَ الْجُمُعَةِ وَإِنَّا مُجَمِّعُونَ ‏"‏ ‏

இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜும்ஆத் தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்ஆத் தொழுகையை நடத்துவோம் என்று நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: அபூ தாவூத் 1073


● ஹஜ்ஜுல் அக்பர் நாளில் இறைவசனம் 5:3 இறங்கியதாக தபரி 11083ல் இருப்பதுதான் சரி

தபரி என்பது தஃப்சீர் புத்தகம். ஹதீஸ் புத்தகமல்ல. மார்க்கத்தின் அடிப்படை எதுவென்று தெரியாத ஹிஜ்ராவினர் தங்கள் அமாவாசைக் கொள்கைக்கு எதிராக இருந்தால் சஹீஹான செய்தியை பொய்யாக்குவார்கள். இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளை உண்மையாக்குவர். அவ்வாறு உண்மையக்கப்பட்ட பலவீனமான முர்சலான செய்திதான் தபரியின் 11083ம் செய்தி. இந்த செய்தியின் குறைகள் பற்றிய அதிக விளக்கங்களுக்கு பார்க்க http://www.piraivasi.com/2017/02/28.html

● துல் ஹஜ் பிறை பார்த்த தகவல் ஹதீஸில் இல்லை. துல் கஅதா எப்போது முடிந்தது.

நாம் காலண்டர்காரர்களிடம் கேட்பது: துல் ஹஜ் பிறையை கணக்கிட்ட தகவல் ஹதீஸில் எங்கே? நபி துல் ஹஜ்ஜுக்கு பயன்படுத்திய காலண்டரின் நகல் எங்கே?
இவர்கள் பாணியில் சொல்கிறோம், புதன்கிழமை முடிந்து வரும் மாலையில் பிறையை பார்த்து வியாழக்கிழமை துல்ஹிஜ்ஜாவை தொடங்கினார்கள் என்று பாதுகாக்கப்பட்ட வானியற் பௌதீகத் தரவுகளின் துல்லியமான பதிவுகள் உலகிற்கு இன்றும் பறைசாற்றுகின்றன.... தரவுகள் கீழே.
நாள்
ஆங்கிலத் தேதி
நபிவழித் தேதி
குறிப்பு
ஹிஜ்ரா காலண்டர் தேதி
திங்கள்
27/01/0632
29
ஷவ்வால் 29 ஹிஜ்ரி-10
இப்ராஹிம் மரணம்
(30) அமாவாசை & கிரகணம்
செவ்வாய்
28/01/0632
30

1
புதன்
29/01/0632
1
1-துல் கஅதா ஹிஜ்ரி-10
2





செவ்வாய்
25/02/0632
28

(29) அமாவாசை
புதன்
26/02/0632
(29)
புதன் பகல் முடிந்து வரும் மாலையில் பிறை பார்க்கிறார்கள்
1
வியாழன்
27/02/0632
1
1-துல் ஹிஜ்ஜா ஹிஜ்ரி-10
2
வெள்ளி
28/02/0632
2

3
சனி
29/02/0632
3

4
ஞாயிறு
01/03/0632
4

5
திங்கள்
02/03/0632
5

6
செவ்வாய்
03/03/0632
6

7
புதன்
04/03/0632
7

8
வியாழன்
05/03/0632
8

9
வெள்ளி
06/03/0632
9
யவ்மு அரஃபா
10
சனி
07/03/0632
10
யவ்முன் நஹ்ர்
11


ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் துல்ஹஜ்ஜின் பிறையை எதிர்நோக்கியவர்களாக, நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம்.
முஸ்லிம் 2302,2303,2304 (1211/5,6,7) புகாரி 317, 1783, 1786 நஸாஈ 2717
துல் ஹஜ் மாதம் பிறை பார்த்துதான் ஆரம்பிக்கப்பட்டதற்கு இந்த சான்று போதுமானது. மேலும் ஹஜ் என்பது மக்காவில் நடக்கும் வழிபாடு. மக்காவில் பிறை பார்த்து ஹஜ் செய்வார்கள். வெளியூரிலிந்து செல்பவர்கள் மக்காவின் பிறையின் அடிப்படையில் அங்கே நடக்கும் ஹஜ்ஜில் கலந்துகொள்ளவேண்டுமே தவிர அவர்கள் ஊரில் பார்த்த பிறையைக் கொண்டு மக்காவில் ஹஜ் செய்ய இயலாது.

● பால் ஏன் கொடுக்கப்பட்டது?

ஹஜ் செய்யாமல் மதீனாவில் இருக்கும் காலங்களில் அரஃபா நோன்பு நோற்க மக்களை நபிகளார் ஆர்வமூட்டினார்கள். எனவே நபி அரஃபா நோன்பு நோற்றிருப்பர்களோ என்று சஹாபாக்களில் சிலருக்கு சந்தேகம் வருகிறது. அவர்களை தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய நபியவர்களுக்கு பால் கொடுக்கிறார்கள்.
புகாரி 5604. உம்முல் ஃபள்ல்(ரலி) கூறினார்
இறைத்தூதர்() அவர்கள் (அரஃபாவில் தங்கியிருந்தபோது) 'அரஃபா' (துல்ஹஜ் 9ஆம்) நாளில் நோன்பு நோற்றுள்ளார்களா (இல்லையா) என மக்கள் சந்தேகப்பட்டார்கள். எனவே, நான் இறைத்தூதர்() அவர்களுக்குப் பால் நிரம்பிய பாத்திரம் பாத்திரம் ஒன்றைக் கொடுத்தனுப்பினேன். (அதை) அவர்கள் அருந்தினார்கள்.
கமிட்டியின் வாதம்: “சஹாபாக்களுக்கு ஏன் அவ்வாறு சந்தேகம் வந்தது? ஒன்றில் ஜாஹிலியா காலத்தில் அப்படி ஒரு நடை முறை இருந்திருக்க வேண்டும் அல்லது அது நபி வழமையாக நோன்பு பிடிக்கும் வியாழக்கிழமையாக இருக்க வேண்டும். ஜாஹிலியா காலத்தில் அப்படி ஒரு வழக்கம் இல்லை. எனவே அது வியாழக்கிழமைதான்”.
நாம் கேட்பது: ”ஜாஹிலியா கால வழக்கப்படி அரஃபாவில் நோன்பு இல்லை; அன்று வியாழக்கிழமையானதால் நாங்கள் சந்தேகித்தோம்” என்று சஹாபாக்கள் சொன்னதாக ஹதீஸில் எங்கே உள்ளது? பயணத்தில் இருந்தாலும் நபி திங்கள் வியாழன் நோன்பு பிடிப்பார்கள் என்று ஹதீஸில் எங்கே இருக்கிறது. இவர்கள் கணக்குப்படி துல் ஹஜ் 9 வியாழன் என்று வைத்தாலும் துல் ஹஜ் 6 திங்கள் மற்றும் துல் ஹஜ் 2 வியாழன் நபி நோன்பு நோற்றிருந்தர்களா?
புகாரி 2319. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி (மக்காவிற்கு) வந்தேன்.
புகாரி 2323. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் "இஹ்ராம்" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவை நோக்கி) வந்தோம். ஆயிஷா (ரலி) அவர்கள் உம்ராவிற்காக வந்தார்கள்.
(ஹஜ்ஜத் விதாவில்) நான் நபி () அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, 'அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை. நான் நோன்பு நோற்கிறேன்' என்று நான் கேட்ட போது 'ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!' என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: நஸயீ 1456
நபிகளார் தனது பயணத்தில் சுன்னத்தான நோன்புகளை நோற்பார்கள் என்று ஹதீஸ்களில் இல்லை. குறிப்பாக ஹஜ்ஜின் பொது அவர்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்கவில்லை
தங்கள் சந்தேகங்களை தெரிந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறாமல் சந்தேகளுக்கு மேல் கற்பனைக் கூடாரம் கட்டக்கூடாது.

● பால் குடி சம்பவத்தையும் குறைப் ஏன் அறிவிக்கிறார்?

பால் குடிக்கும் சம்பவத்தைப் பற்றி பேசும்போதும் குறைபை சும்மா விடவில்லை அமாவாசிகள். குறைபின் மீது இத்தனை வெறுப்பு ஏன் என்று நமக்கு புரியவில்லை. ஒருவேளை இவர்களின் சர்வதேச நாட்காட்டிக்கு எதிரான உண்மையை அவர் வெளியே சொன்னதாலா?

● உமரின் (ரலி) ஆட்சிகாலத்தில் (ஜசீர் அல் அரபில்) அரபு தீபகற்பதில் யூதர்கள் இருந்தார்களா?

ஆம்! இருந்தார்கள்.

● மார்க்கம் அரஃபாவில் பூர்த்தியாக்கப்பட்டுவிட்டதா?

5:3ம் வசனம் அரஃபாவில் இறங்கினால் அன்றே மார்க்கம் முழுமையகிவிட்டதா? மறுநாள் நஹ்ர் தினத்தில் செய்யவேண்டிய முடி மழித்தல், குர்பானி போன்ற சட்டங்களின் நிலை என்ன? அன்றைய சட்டங்களை யார் சொல்வார்?
இது மார்க்கமும் நபி வாழ்கையும் அறியாததால் ஏற்பட்ட கேள்வி.
இந்த அறிவாளிகள் என்ன எதிர்பார்கிறார்கள்? மார்க்கம் முழுமையானவுடன் நபி மரணித்து விடவேண்டுமா? அல்லது குறைந்த பட்சம் மரணம் வரையில் வாயை மூடி பேசாமல் இருந்திருக்க வேண்டும் என்று இந்த கயவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லது ஹஜ்ஜத் விதாவிற்கு பிறகு மக்கள் சந்தேகம் கேட்டால் மார்க்கம் முழுமையடைந்து விட்டது இனிமேல் எதுவும் கேட்காதீர்கள் என்று கூறியிருக்க வேண்டுமா? நபி மரணப்படுக்கையில் கூட அவர்களின் போதனைகளை செய்துகொண்டிருந்தார்கள். மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது என்ற இறை வசனம் அருளப்படுகிறது என்றால் முடி மழித்தல், குர்பானி போன்றவற்றின் சட்டங்கள் அதற்கு முன்னரே நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.
மார்க்கம் முழுமையாகி விட்டது எனும் வசனம் அந்தியில் இறங்குகிறது. தொடர்ந்து வரும் பகலில் அதை நபி பிரகடனப்படுத்துகிறார்கள்.

● வானம் பூமி படைக்கப்பட்ட நாள் எது?

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது என்று இறுதி பேருரையில் மாநபி பேசினார்கள். வானம் பூமி வெள்ளிக்கிழமை படைக்கப்பட்டது எனவே இதை நபி சொன்ன தினமான துல் ஹஜ் 10ம் வெள்ளிக்கிழமைதான்.
இது இவரின் குர்ஆன் தொடர்பின்மையை காட்டுகிறது! 9:36-37 வசனங்களை நபி அமுல் படுத்தி நசீஉ எனும் குப்ரை அதிகப்படுத்தும் செயலை மாநபி அந்த தருணத்தில் தடை செய்கிறார்கள். அரபுகள் மாதங்களின் எண்ணிக்கையையும் அவற்றின் புனிதத்தையும் மாற்றி வந்தனர். அதை அல்லாஹ் 9:36-37 இல் தடை செய்கிறான். வானம் பூமி படைக்கப்பட்ட காலத்தில் இருந்தே மாதங்களின் எண்ணிக்கை 12 என்கிறான். புனித மாதங்கள் 4 என்கிறான். மாதங்களின் எண்ணிக்கையையும் புனித மாதங்களை மாற்றுவதும் கூடாது என்கிறான்.
அரபுகளின் நசீ’உ எனும் செயலால் மாதங்கள் அவற்றின் இடத்திலிருந்து மாறி மாறி வந்தன. நபி ஹஜ் செய்த அந்த வருடம் அவைகள் அவற்றின் இடத்தில் சரியாக வந்தன. அதைதான் வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது என்று சொல்கிறார்கள். புனித மாதங்களையும் அடையாளப்படுத்தி விட்டு நசீ’உ வை தடை செய்கிறார்கள்.
நீயும் சிகப்பு சட்டை... நானும் சிகப்பு சட்டை.... சேம்... சேம்... என்று சிறு பிள்ளைகள் பேசுவதைப் போலவே உள்ளது இவரின் ஒப்பீடு. வானம் பூமியும் படைக்கப்பட்டது வெள்ளிக்கிழமை எனவே துல் ஹஜ் 10ம் நாள் வெள்ளிக்கிழமை என்பது சிறுபிள்ளை தனமான ஒப்பீடு. குர்ஆனையும் ஹதீசையும் விளங்காமல் இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். குர்ஆன் வசனத்தின் பின்னணியும், ஹதீஸ் கருத்தையும் புரிந்து இவர்கள் செயல்படுவார்களேயானால் இஸ்லாத்தில் காலண்டர் இல்லை என்பதை விளங்குவார்கள்.

● ஹஜ்ஜுல் அக்பர்?

“ஹிஜ்ரி 9 ம் வருடம் துல் ஹஜ் 1௦ம் நாள் இணைவைப்பாளர்கள் ஹஜ்ஜுக்கு வரக்கூடாது என்று மினாவில் வைத்து அலி ரலி அறிவிப்பு செய்தார்கள். எனவே ஹஜ்ஜுல் அக்பர்தான் அறிவிப்புகள் செய்ய பயன்படுத்தப்பட்ட நாள். அரஃபா அல்ல”
அடுத்த சிறுபிள்ளைத்தனமான ஒப்பீடு. இந்த பேச்சாளருக்கு மார்க்கமே தெரியவில்லை. நபி அரஃபாவில் ஒரு உரையாற்றினார்கள் அது அரஃபா பேருரை. யவ்முன் நஹ்ரில் ஒரு உரையாற்றினார்கள். அது இறுதிப் பேருரை. நபி அரஃபாவில் செய்த அறிவிப்புகளை இவர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்களா? அலி ரலி செய்த அறிவிப்புதான் இவர்களுக்கு ஆதாரமா?

● அரஃபா வெள்ளி என்றால் ஜுமுஆ வின் சட்டம் ஏன் சொல்லப்படவில்லை?

நாம் இவர்களை நோக்கிக் கேட்கும் கேள்வி. யவ்முன் நஹ்ர் வெள்ளி என்றால் அன்றைய தினம் ஹாஜிகளுக்கு ஜுமுஆவின் சட்டம் ஏன் சொல்லப்படவில்லை. இவர்கள் எதிர்பார்ப்பது போல் ஹதீஸ்கள் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். எதற்காக நபி ஜுமுஆவின் சட்டத்தைச் சொல்ல வேண்டும். ஒரு பாங்கு இரண்டு இகாமத்துடன் லுஹ்ர் & அஸ்ர் ஜம்உ செய்து தெளிவாக தொழுது காட்டிவிட்டார்களே. செய்து காட்டிய பின் ஏன் சொல்லவேண்டும்.

● தேதி மாறினால் மொத்த இஸ்லாமும் மாறிவிடும்.

ஹிஜ்ராவினர் செய்யும் முதல் கட்ட பிரச்சாரம் “வரலாறு இல்லையென்றால் சமுதாயமே அழிந்துவிடும். காலண்டர் இல்லையென்றால் வரலாறு இல்லை. எனவே காலண்டர் இல்லையென்றால் மார்க்கமும் இல்லை”
நாம் கேட்பது:
நபி தன் வாழ்க்கையில் எத்தனை நிகழ்சிகளை தேதி கிழமையுடன் பதிவு செய்ய சொன்னார்கள்?
ஹதீஸ்களில் இருந்து எத்தனை போர்களின் தேதிகள், உடன்படிக்கைகளின் தேதிகளை இவர்களால் காட்ட முடியும்?
முன் சென்ற நபி மார்களை பற்றி பேசும்போது எத்தனை சம்பவங்களை நபி தேதிகளுடன் குறிப்பிட்டார்கள்?
இஸ்லாத்தில் எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டாததுதான் இந்த நாட்காட்டி. உடனே இவர்கள் 10:5, 2:189 போன்ற குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி அல்லாஹ் சொல்லும் கலாண்டரை இவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பார்கள். சூரியன் சந்திரன் காலம் காட்டி என்பதை யார் மறுத்தார். அல்லாஹ் முதல் பிறைகள் காலம் காட்டி என்கிறான். அதை நாங்கள் அப்படியே செயல்படுத்துகிறோம். நீங்கள் செய்வதை போல் அமாவாசையை கணக்கிட்டு மாதத்தை துவங்க சொல்லும் குர்ஆன் வசனம் எது?
இஸ்லாமிய வரலாற்றில் எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டாததுதான் இந்த நாட்காட்டி. அது இல்லையென்றால் மார்க்கமே இல்லை என்கிறார்கள். தேதி மாறினால் மொத்த இஸ்லாமும் மாறிவிடும் என்கிறார். ஹதீஸ்களில் இருந்து தேதி கிழமையுடன் நாம் அறிந்து கொள்ள இயலும் ஒரே நிகழ்சி மாநபியின் ஹஜ். இப்போது இந்த தேதியை இவர்கள் மாற்றி வழிகெட்டு விட்டார்கள் என்பது உண்மைதான். எனினும் இப்படி செய்ததால் இவர்கள் இஸ்லாமிய கடமைகளில் எதை மாற்றினார்கள். மொத்த இஸ்லாமும் எப்படி மாறிப்போயிற்று. இவர்கள் அரஃபாவின் தேதியை மாற்றியதால் இவர்கள் மொத்தமாக மார்க்கத்தில் இருந்து வெளியேறி விட்டதாக சொல்ல வருகிறார்களா?
பொய் சொல்ல கற்றுக்கொண்ட இவர்களுக்கு அதை பொருந்தச் சொல்லத்தெரியவில்லை

● பழைய உம்மல் குறா காலண்டரில் உள்ளது, அகராதிகளில் உள்ளது, அல் பைரூணி எழுதியிருக்கிறார்.

இவர்கள் நபியின் அரஃபா வியாழன் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் வைக்கவில்லை. மாறாக இவர்கள் வைக்கும் முதல் ஆதாரம் ஹிஜ்ரி முதல் தேதி வியாழக்கிழமையாம்.
ஆதராமாக முதலில் காட்டுவது டாக்டர். ஃபள்ல் தயாரித்த உம்முல் குறா நாட்காட்டி. இதுதான் நாம் சொன்ன குப்பைகளில் முதல் குப்பை. இதுதான் வேடிக்கையின் உச்சக்கட்டம். இவர்கள் எதை டாக்டர். ஃபள்ல் தயாரித்த உம்முல் குறா நாட்காட்டி என்கிறார்களோ அதைதான் இவர்களின் ஹிஜ்ரா காலண்டர் என்றும் சொல்கிறார்கள். 1999ம் ஆண்டு அந்த நாட்காட்டி தவறு என்று உணர்ந்து குப்பையில் வீசியது. அதை எடுத்துவந்துதான் “நாங்களே காலண்டர் தயாரித்தோம்” என்று பித்தலாட்டம் செய்கின்றனர் ஹிஜ்ரா கமிட்டியினர். டாக்டர். ஃபள்ல் தயாரித்த உம்முல் குறா நாட்காட்டியில் ஹிஜ்ரி முதல் தேதி வியாழக்கிழமை எங்கள் ஹிஜ்ரா காலண்டரிலும் முதல் தேதி வியாழக்கிழமை என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம். தங்கள் காலண்டர் உண்மை என்பதற்கு தங்கள் காலண்டரையே ஆதாரமாக காட்டுகிறார்கள். இவர்களுக்கு சாதகம் என்றால் எந்த குப்பையில் இருப்பதையும் ஆதராமாக காட்டுவார்கள். இவர்களுக்கு எதிரானது என்றால் எந்த ஸஹிஹ் ஹதீசையும் சாதாரண சம்பவம் ஆக்கி விடுவார்கள்.
இரண்டாவது ஆதாரம் ஏதோ என்சைக்ளோபீடியாவும் அகராதிகளுமாம். விக்கிபீடியாவை ஆதாரமாக காட்டும் இவர்களுக்கு என்சைக்ளோபீடியாவையும் அகராதிகளையும் ஆதரமாக காட்டுவதில் ஆச்சரியம் இல்லை.
மூன்றாவது மிகப்பெரிய ஆதாரம்: அல்-பைரூணி ஹிஜ்ரி 1-1-1 வியாழன் என்று கணக்கிட்டு எழுதியுள்ளாராம். நாம் ஆதாரத்தை கேட்டபோது ஆதாரமாக பைரூணியின் புத்தகத்தில் இருந்து பின்வரும் பக்கத்தை காட்டினர்.
D:\Articles\ஹிஜ்ரி கமிட்டி\பிரூனி\5.jpg
இதன் தமிழாக்கம்
“நீங்கள் எங்களுக்கு தேதிகள் இடாமல் கடிதங்களை அனுப்புகிறீர்கள்” என்று அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) உமர் பின் கத்தாப் ரலி அவர்களுக்கு (கடிதம்) எழுதினார்கள். உமர் (ரலி) ஏற்கனவே பதிவுப்புத்தகங்களை ஒழுங்குபடுதியிருந்தார்கள், மேலும் வரி மற்றும் (சட்டக்) கட்டுப்பாடுகளை நிர்மானித்துவிட்டு பழைய முறைகளை போலல்லாமல் (தேதிகளைக் குறிப்பிட) ஒரு புதிய ஆண்டுமானத்தின் தேவையுடன் இருந்தார். (அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களின் கடிதம் வந்த) சம்பவத்துடனே சஹாபாக்களை கூட்டி ஆலோசனை கேட்டார்கள். அப்போது மிக ஆதாரப்பூர்வமான தேதியாக, ஐயமற்ற, தெளிவான, பிழையில்லா தேதியாக தெரிந்தது நபிகளார் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்தடைந்த திங்கள்கிழமை ரபியுல் அவ்வல் 8 மட்டுமே. அந்த வருடத்தின் முதல் நாள் வியாழனாக இருந்தது. இப்போது இதையே ஆண்டுமானமாக அவர் முடிவு செய்து, அவருடைய எல்லா தொடர்புகளிலும் தேதிகளை குறித்தார். இது ஹிஜ்ரி 17 இல் நடந்தது.
இந்த பக்கத்தில் ஹிஜ்ரி 1.1.1 வியாழன் என்று வந்துள்ளதாக கமிட்டி சொல்கிறது. ஆனால் அதே புத்தகத்தின் 327 & 328 ஆம் பக்கங்களை தந்துள்ளோம். ஹிஜ்ரி 1.1.1 வெள்ளி என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கீழே பார்க்க.
மேலும் பைரூணி இதை எப்படி கணக்கிட வேண்டும் என்று விளக்கும் பக்கம் 176 இல் அதை கணக்கிட்டே காட்டியுள்ளார். அதிலும் தெளிவாக ஹிஜ்ரி 1 முஹர்ரம் 1 வெள்ளி என்று எழுதியுள்ளார். கீழே பார்க்க.
அவ்வாறெனில் புத்தகத்தின் அதிகமான இடங்களில் வெள்ளி என்றும் ஓரிடத்தில் வியாழன் என்றும் ஏன் எழுதியுள்ளார். நாம் காட்டியுள்ள மூன்று பக்கங்களிலும் ஹிஜ்ரி முதலாம் ஆண்டு முஹர்ரம் முதல் தேதி வெள்ளி என்று தெளிவாக உள்ளது. அவர்கள் காட்டிய 34 ஆம் பக்கத்தில் “அந்த வருடத்தின் முதல் நாள் வியாழன்” என்று உள்ளது. இந்த மொழிப்பண்டிதர்கள் அதை ஹிஜ்ரி முதல் வருடத்தின் முதல் நாள் என்று எண்ணி விட்டார்கள். உமர் ரலி தொடர்பான இந்த சம்பவம் நடந்தது ஹிஜ்ரி 17ஆம் ஆண்டில், அந்த (ஹிஜ்ரி 17ஆம்) வருடத்தின் முதல் நாள் வியாழன் என்று எழுதியுள்ளார் பைரூணி. அது உங்களுக்கு விளங்கவில்லையே ஹிஜ்ரா அறிஞர்களே. உங்கள் அரபு மொழி அறிவையும் ஆங்கில மொழி அறிவையும் கண்டு உலகமே வியக்கிறது.

● 1.1.1 ஐ உமர் ரலி கணக்கிட்டு வியாழக்கிழமை என்று கண்டு பிடித்து ஹிஜ்ரி கலண்டரை நிறுவினார்களா?

ஹிஜ்ரி 1.1.1 வியாழன் என்பதற்கு மேலே இவர்கள் தவறாக விளங்கிய பைரூணியின் புத்தகம் மட்டுமே இவர்களது ஒரே ஆதாரம், அதுவும் உண்மை இல்லை என்றாகிவிட்டது. இவர்கள் சொல்லும் அடுத்த பொய் உமர் ரலி பின்னோக்கி 2௦௦ ஆண்டுகள் கணக்கிட்டார்கள் என்று. அதற்கும் இவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் இதை செய்வதற்கு எந்த கணக்கும் தேவை இல்லை. நம்மூர் பாட்டி கணக்கு போதுமானது. ஸஹாபிகள் ஆண்டுகளையும் மாதங்களையும் எண்ணி வந்தனர். முந்தைய கால நிகழ்வுகளை ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து ஆண்டுகளின் எண்ணிக்கையையும் நினைவில் வைத்திருந்தனர். அந்த அடிப்படையில் ஹிஜ்ரத் நடந்து எத்தனை ஆண்டுகள் ஆயிற்று என்பது அவருக்கு நன்றாக தெரியும். உதாரணத்திற்கு உமர் ரலி ஹிஜ்ரி சகாப்த முறையை ஹிஜ்ரி 17ம் தொடங்கினார்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்போது அவர்களுக்கு நாம் ஹிஜ்ரத் நடந்து 17 ஆண்டுகளை கடந்து விட்டோம் என்று நன்றாகவே தெரியும். அந்த அடிப்படையில் அவர்கள் தங்கள் கணக்கு வழக்குகளிலும் தகவல் பரிமாற்றங்களிலும் ஹிஜ்ரி 17 என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள். ஹிஜ்ரி ஆண்டுமுறை என்பது காலண்டர் அல்ல. அதிக விளக்கத்திற்கு பார்க்க http://www.piraivasi.com/2016/01/1.html

● தங்களுக்கு எதிராக ஆதாரம் வைக்கும் விஞ்ஞானிகள்.

அவர்கள் ஆதாரமாக காட்டிய பைரூணி புத்தகத்தின் 34 பக்கத்தில் ஹிஜ்ரி-1 ரபியுல் அவ்வல் 8ஆம் தேதி திங்கள் கிழமை என்று பைரூணி பதிவு செய்துள்ளார். ஆனால் அதை தொடர்ந்து இவர்கள் ஒப்பிடுவதற்காக காட்டும் இவர்கள் காலண்டரில் ரபியுல் அவ்வல் 8 ஞாயிறு என்று இருக்கிறது. இதை நீல நிறத்தில் அடையாளப்படுத்தி இருக்கிறோம்.
D:\Articles\ஹிஜ்ரி கமிட்டி\பிரூனி\false proof.jpg
D:\Articles\ஹிஜ்ரி கமிட்டி\பிரூனி\2.jpg
ஹிஜ்ரி 17-ம் ஆண்டு முஹர்ரம் 1-ம் தேதி வியாழக்கிழமையாக இருந்தது என்று பைரூணி சொன்னதை விளங்காமல், ஹிஜ்ரி 1-ம் ஆண்டு முஹர்ரம் 1-ம் தேதியை வியாழக்கிழமை என்று சொல்கிறார் என்று விளங்கி விட்டு ஹிஜ்ரி 1-ம் ஆண்டு ரபியுல் அவ்வல் 8-ம் தேதி திங்கள் கிழமையாக இருந்தது என்று பைரூணி சொன்னதை இவர்கள் கவனிக்கவில்லை. அது இவர்களுக்கு எதிராகப் போவதையும் கவனிக்கவில்லை. இப்படித்தான் இவர்கள் தங்களுக்கு எதிரான ஆதாரத்தை தாங்களே எடுத்துக் கொடுத்து மாட்டிக்கொள்வார்கள்.
பைரூணி கணக்கிட்டு காட்டிய வரலாற்றின் எல்லாத் தேதிகளையும் தங்கள் காலண்டருடன் ஒப்பிட்டு காட்டும் திராணி இவர்களுக்கு இருக்கிறதா என்று சவால் விடுகிறோம்.

● கிரகணத்தின் அத்தாட்சி என்ன?

15-ஜூலை-622 ஆம் ஆண்டு ஹிஜ்ரி முதல் தேதியாம். அது வியாழக்கிழமையாம். அது முதல் தேதியானதிற்கு காரணம் அதற்கு முந்தைய நாள் சூரிய கிரகணமாம். நபி வாழ்ந்த காலத்தில் ஒரே ஒரு முறை சூரிய கிரகணம் நிகழந்தது அது நிகழ்ந்து ஷவ்வால் 29 ஹிஜ்ரி 10 திங்கள் கிழமை (27/01/0632). அதை தவிர வேறு எந்த கிரகணமும் நபி காலத்தில் பார்க்கப்பட்டதாக பதிவுகள் இல்லை. அப்படியே பார்த்திருந்தாலும் கிரகணம் எப்படி உங்கள் காலண்டருக்கு அத்தாட்சியாகும். சூரிய கிரகணத்தின் மறுநாளை முதல் பிறையாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று நபிகளார் கட்டளையிட்டுள்ளார்களா? சந்திர கிரகணம் பிறை 14இல் நடக்கும் என்று அறிவித்துள்ளார்களா?
கிரகணம் எனும் கஞ்ஜங்க்ஷன் நடப்பதை வாழ்நாளில் ஒரே ஒருமுறைக் கண்ணால் பார்த்த நபிகளார், அந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல், இதுதான் இம்மாதத்தின் இறுதிநாள் என்றார்களா?

முடிவுரை:

மாநபியின் அரஃபா வெள்ளிக்கிழமை என்பதை சான்றுகளுடன் தெரிந்து கொண்டோம்.
ஹதீஸ்களை பின்வந்தவர்கள் மாற்றிவிட்டார்கள் என்பது ஆதாரமற்ற குற்றசாட்டு
ஒருவர் மட்டுமே இந்த ஹதீஸ்களை அறிவிக்கிறார் என்பது வடிகட்டிய பொய்
வெவ்வேறு விதமாக அறிவிக்கப்பட ஹதீஸை புரிய இயலாது ஹதீஸ்களுடன் தொடர்ப்பின்மையை காட்டுகிறது
வானம் பூமி வெள்ளிக்கிழமை படைப்பட்டது அதனால் வெள்ளிக்கிழமையில் தான் மார்க்கம் முழுமைபெற வேண்டும் என்ற வாதம் இவர்களுக்கு குர்ஆனுடன் இருக்கும் தொடர்பின்மையை காட்டுகிறது
ஹஜ்ஜுல் அக்பர் பற்றி பேசுவது சிறுபிள்ளை தனமான உதாரணம்.
பால் ஏன் கொடுக்கப்பட்து என்பது இவர்களது அபார கற்பனை
அரஃபாவில் மார்க்கம் முழுமை அடையாது என்பது இஸ்லாமிய அடிப்படை தெரியாத வாதம்
பைரூணியின் புத்தகத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக விளங்கியது இவர்களுக்கு எந்த மொழியும் தெரியாது என்பதை உறுதி செய்கிறது
எங்களுக்கு பிடித்திருந்தால் இப்ன் கதீர், பைரூணி, போன்றோரின் சொந்த கருத்துகளையெல்லாம் எடுப்போம். ஆனால் சஹீஹான குறைபின் ஹதீஸை எடுக்க மாட்டோம் என்பதே இவர்களது கொள்கை
நபிகளாரின் அரஃபா வெள்ளிக்கிழமையே
ஹதீஸ்களில் சந்தேகம் இன்றி தேதி கிழமையுடன் வரும் ஒரே சம்பவம் மாநபியின் ஹஜ். அது புறக்கண்ணால் பிறையை பார்த்து மாதத்தை துவங்கும் நபி வழியுடன் ஒத்துபோவதால் அதை எப்படியாவது பொய்யாக்கி தங்கள் ஹிஜ்ரா காலண்டரை மெய்யாக்க வேண்டும் என்ற இந்த ஹிஜ்ராவினரின் சதி இத்துடன் முறியடிக்கப்படுகிறது. ஷவ்வால் ஹிஜ்ரி-10 இலிருந்து அரஃபா நாள் வரை கணக்கிட்டு மேலே அட்டவணையில் தந்துள்ளோம். அவை ஹதீஸ்களுடன் சரியாக ஒத்துப்போகிறது. இவர்கள் காலண்டருடன் ஒத்துப்போகாததால் நபிகளாரின் அரஃபா வியாழக்கிழமை என்று பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். ஹதீஸ்கள் அல்லாத வரலாற்று குறிப்புகளில் உள்ள தேதிகளும் மக்ரிபில் புறக்கண்ணால் பார்த்து மாதத்தை துவங்கும் தேதிகளுடனே ஒத்துப்போகின்றன.
நன்றி:
ஹதீஸ்களில் குறிப்பெடுத்துத்தந்த சகோ. அப்துன் நாசிருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக

நபிகளார் காலத்திய அமாவாசை நேரங்கள் http://astropixels.com/ephemeris/phasescat/phases0601.html