Monday 17 July 2017

குர்ஆனை மறுக்கும் பீஜேயின் பிறைவாசிகள்..!!

அடுத்த அவதூறு கட்டுரை:
குர்ஆனை மறுக்கும் பீஜேயின் பிறைவாசிகள்..!!  
//பிறைவாசி : பிறைகளின் வடிவங்களை வைத்து தேதியை வரையறுக்க இயலாது. சந்திரனை வைத்து ஒரு நாட்காட்டியை தயாரிக்கவே முடியாது.
பதில் : அல்குர்ஆன் 2:189-வது வசனம் பிறைகள் மனிதர்களுக்கு தேதிகளை காட்டக்கூடியது, ஹஜ்ஜையும் அறிவிக்கும் என்று தெளிவாகக் கூறுகிறது. குர்ஆனின் நேரடியான பொருளை திரித்து ஃபித்னாவை பரப்புவதற்குத்தானே பிறைவாசிகள் களம் இறக்கப்பட்டார்கள். தங்கள் திருப்பணியை செவ்வனே செய்வதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.//
விளக்கம் : சந்திரனின் பிறை வடிவங்கள் தேதிகளாக ஆகாது. "பிறை வடிவங்கள் தேதிகள்" என்று சொல்பவர்கள் ஒரு பிறை வடிவத்தைப் பார்த்து "இந்த வடிவம் இந்த தேதியைக் காட்டுகிறது" என்று இதுவரை சொன்னதில்லை.
அவர்களின் காலண்டரில் "ஒரு வடிவமானது ஒரு மாதத்தில் ஒரு தேதியையும், அதே வடிவம் மறு மாதத்தில் வேறு தேதியையும் காட்டுவதே" அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு சான்று.
உதாரணம் :
அவர்களின் காலண்டரில் அரைவட்ட பிறை(FQ) மூன்று தேதிகளையும், முழு நிலவு(FM) நான்கு தேதிகளையும், மற்றொரு அரைவட்ட பிறை(LQ) மூன்று தேதிகளையும் காட்டுகிறது. "ஒவ்வொரு பிறைவடிவமும் தேதி" என்று சொல்லிக் கொண்டே ஒரு வடிவத்தின் மீது மூன்று தேதிகளையும் நான்கு தேதிகளையும் திணிக்கும் இந்த "உண்மையாளர்கள்"தான் சொல்கிறார்கள் "ஒரு பிறைவடிவம் ஒரு தேதியைக் காட்டுகிறது" !!!!!! *பிறை வடிவம் தேதியைக் காட்டவில்லை, பிறை வடிவத்தின் மீது தேதிகளை திணிக்கிறார்கள்*
சூரியனை வைத்தும் சந்திரனை வைத்தும் காலண்டரை எப்போதோ தயாரித்துவிட்டனர் மூதாதையார்கள். ஏதோ அலிபாய்தான் சந்திர காலண்டரை முதன்முறையாக தயாரித்தது போலவும், அதை பிறைவாசிகள் எதிர்ப்பது போலவும் பில்டப் செய்கின்றனர். சந்திரனின் ஓட்டத்தை பார்க்கவோ அதன் ஓட்டத்தை கணக்கிடவோ முஸ்லிம்களுக்கு எந்த தேவையுமில்லை. சந்திரனின் ஓட்டத்தை கணக்கிடுவது மாற்றுமதத்தினர்தான். நமக்கான கட்டளை சந்திரனின் முதல் தோற்றமான "ஹிலால்" தான். அந்த ஹிலாலை பார்த்து மாதத்தை துவங்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் விரல்களால் காட்டிய 29 எண்ணிக்கை வரும் வரையில் நாட்களை எண்ணவேண்டும். 29 ன் முடிவில் "ஹிலால்" தேட வேண்டும். ஹிலால் பார்க்கப்பட்டால் புது மாதம் பிறந்துவிட்டது. பார்க்கப்பட வில்லையென்றால் நடப்பு மாதம் 30 நாட்கள் கொண்டதாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதுதான் நமக்கு மார்க்க கட்டளை.
அதாவது, ஹிலால் என்ற "சந்திரனின் முதல் தோற்றம்(தலைப்பிறை)" தான் மார்க்க கட்டளையே தவிர, "கமர்" என்ற சந்திரன் அல்ல. (2:189 ல் சொல்லப்படுவது சந்திரன் அல்ல. ஹிலால் தான் சொல்லப்படுகிறது) ஹிலாலைக் கணக்கிட்டு காலண்டர் கொடுத்தால் அதை பரிசீலிக்கலாம். ஆனால் சம்மபந்தமே இல்லாமல் "கமர்" என்ற சந்திரனைக் கணக்கிட்டு காலண்டரைப் போட்டு இதுதான் மார்க்கம் என்று சொன்னால் என்ன செய்வது??? ஹிலால் கணக்கு இஸ்லாமியர்களுக்கானது. சந்திரக்(கமர்) கணக்கு "அஹ்லே காலண்டர்" கொள்கையுடைய ஹிஜிராக் கமிட்டியினருக்கு.
"காலண்டர் மதத்தின்" கட்டாயக் கடமையே "காலண்டரை ஏற்று காலண்டரை பிரசங்கித்து காலண்டரை விமர்சிப்பவர்களை தங்கள் மதத்தில் சேர்க்காமல் இருப்பதே" .
காலண்டர் மதத்தினரிடமிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.
// *பிறைவாசி :* சந்திரனின் சுழற்சியை வைத்து ஆண்டுகளை கணக்கிட இயலாது. சந்திரனை அல்லாஹ் அப்படித்தான் படைத்துள்ளான்.
*பதில் :* அல்குர்ஆன் 10:5வது வசனத்தின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக சந்திரனுக்கு பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) விதியாக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். பிறைவாசிகளோ இல்லை இல்லை, முடியவே முடியாது என்று மல்லுக்கட்டுகின்றனர். //
நாம் சொல்லுவதை விளங்காமலோ அல்லது வேண்டுமென்றே திரித்து சொல்வதோ கமிட்டிக்கு கை வந்த கலை என்பதால் இதையும் விளக்குவோம்.
சந்திரனின் சுழற்சியையோ அல்லது அதன் ஓட்டத்தையோ கணக்கிட வேண்டிய மார்க்க தேவை முஸ்லிம்களுக்கு இல்லை என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். சந்திரனின் பல வடிவ நிலைகளில் நம்மால் பார்க்க முடிந்த முதல் நிலை(தலைப்பிறை) -யின் அடிப்படையில் நாட்களை எண்ணுவது மட்டுமே மார்க்க கடமை. மற்றபடி அமாவாசையை எண்ணுவது, ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பிறைவடிவ நிலைகள் என்று எண்ணுவது போன்ற வேலைகள் "நாயை"யும் சேர்த்து எண்ணிய மக்கள் செய்தது போன்ற வேலைதான். (குர்ஆன் 18:22)
10:5 ல் நாம் அறியும் செய்தி என்ன? கமிட்டியின் விளக்கத்தையே எடுப்போம்.
அல்குர்ஆன் 10:5வது வசனத்தின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக சந்திரனுக்கு பல மன்சில்களை (தங்குமிடங்களை) விதியாக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். *சந்திரனைக் கொண்டு ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறிந்து கொள்வீர்கள் என்று இந்த வசனம் சொல்லவில்லை. *சந்திரனுக்கு விதியாக்கப்பட்டிருக்கும் "மன்சில்களைக்" கொண்டுதான் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறிந்து கொள்ள முடியும் என்று வசனம் சொல்கிறது. சந்திரனின் மன்சில்களை வைத்துதான் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறிய முடியும் என்பதை கமிட்டியும் ஒப்புக்கொள்கிறது.
சந்திரனின் மன்சில்கள் எவை?
கமிட்டியின் விளக்கத்தை பார்ப்போம்.
மன்சில்கள் என்றால் "படித்தரங்கள்" என்று கூறிவந்தவர்கள் தற்போது பல்டியடித்து "தங்குமிடங்கள்" என்று மொழிபெயர்க்கின்றனர். இந்த "தங்குமிடங்கள்"தான் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் காட்டுகின்றன என்கின்றனர். சரி, சந்திரன் தங்கும் இடங்கள் எது என்று கேட்டால் சந்திரனில் தெரியும் பிறை வடிவங்களையே காட்டுகின்றனர். அதாவது, ஒரு நபரின் தங்குமிடம் அவரிடத்திலேயே இருக்குமாம்.
உதாரணமாக, "ஹாரூனின் தங்குமிடம்" எது என்று கேட்டால், "ஹாரூனின் தங்குமிடம்" ஹாரூனிடத்திலேயே இருக்கிறது என்று சொன்னால், சொன்னவர் எவ்வளவு அறிவாளியாக இருப்பார்!!!
சந்திரனின் தங்குமிடங்களை எப்படி அறிவது என்பதற்கு ஒரு விளக்கம் கொடுக்கின்றனர். அதாவது, சந்திரன் அதனுடைய சுற்றுப்பாதையில் நகரும்போது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வடிவம் பெறுமாம். சந்திரன் அதன் சுற்றுவட்டப் பாதையில் தங்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வடிவம் பெறுவதே அதன் தங்குமிடங்கள் என்கின்றர். (இது ஒரு அறிவியல் மோசடி)
சந்திரனின் பிறைவடிவங்கள் என்பதும் சந்திரனின் தங்குமிடங்கள் என்பதும் ஒன்றுதான் என்கின்றனர். "சந்திரனின் தங்குமிடங்களை(மனாசில்)" வைத்து ஆண்டுகளையும் காலக் கணக்கையும் அறிவது என்பதும், "சந்திரனின் பிறை வடிவங்களை" வைத்து ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறிவது என்பதும் ஒன்றுதான் என மக்களிடம் வேண்டுகோள் வைக்கின்றனர்.
**மனாசில் என்ற அரபு வார்த்தைக்கு "பிறை வடிவங்கள்" என்று ஒரு அர்த்தம் கிடையாது.
**ஒரே ஒரு தேதியைக் கூட சரியாக காட்டத்தெரியாத பிறை வடிவடிங்களை வைத்து ஆண்டுகளையும் காலக் கணக்கையும் எப்படி அறிவது?
**சந்திரன் தன்னுடைய சுற்றுப்பாதையில் சுற்றும்போது ஒரு இடத்தில் பெற்ற வடிவத்தை, அடுத்த சுற்றில் அதே இடத்தில் அதே வடிவத்தைப் மீண்டும் பெறாது.
**சந்திரனின் தங்குமிடங்களுக்கும் அதன் பிறை வடிவங்களுக்கும் தொடர்பு கிடையாது.
**சந்திரனின் பிறை வடிவங்களை (தங்குமிடங்களை) வைத்து ஆண்டுகளையோ காலக் கணக்கையோ அறிய முடியாது.
**சந்திரன் அதன் சுற்றுப்பாதையில் இருக்குமிடத்தை வைத்து ஆண்டுகளையோ காலக் கணக்கையோ அறிய முடியாது.
**சந்திர மாதங்களை எண்ணுவதன் மூலமே "சந்திர ஆண்டு" அறியப்படுகிறது.
**கமிட்டியின் காலண்டரிலும் 12 சந்திர மாதங்களை எண்ணித்தான் ஒரு சந்திர ஆண்டு என்று போட்டிருக்கிறார்கள்
**அவர்களின் காலண்டரில் உள்ள பிறைவடிவங்களை (தங்குமிடங்களை) பார்த்து இது இந்த வருடம் என்றோ இன்ன காலம் என்றோ யாரும் சொன்னதில்லை.
**அஹில்லா மற்றும் மனாசில் ஆகிய இரண்டிலும் அவர்களின் குழம்பிய நிலை இன்னும் மாறவில்லை.
**மனாசில் என்ற வார்த்தைக்கு 10:5 ல் "தங்குமிடங்கள்" என்றும் 36:39 ல் "படித்தரங்கள்" என்றும் மொழிபெயர்த்து குழம்பிதை உறுதி படுத்துகின்றனர்.
**2:189, 10:5, 36:39 ஆகிய மூன்று வசனங்களிலும் கமிட்டி குழம்பி இருப்பதை தெளிவாகக் காணலாம்.
பிறைவாசிகள் சொல்லும் "மனாசில் எது?
கமிட்டியின் விளக்கத்தைக் கொண்டே விளக்குவோம்.
*அல்குர்ஆன் 10:5வது வசனத்தின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக சந்திரனுக்கு பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) விதியாக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்*. சந்திரன் ஆண்டுகளைக்காட்டாது என்பதையும் சந்திரனின் தங்குமிடங்கள்தான் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் காட்டும் என்பதை அவர்களின் விளக்கத்தின் மூலம் மேலே பார்த்தோம். மனாசில் என்ற வார்த்தைக்கு தங்களுக்கு தெரிந்த நியாயங்களின் அடிப்படையில் முன்னோர்கள் மொழிபெயர்த்தனர். வசனங்களை தமிழில் புரிவதற்கு அது போதுமானதாகவும் இருந்தது. ஆனால், அதையே ஆணித்தரமாக மாற்றி மார்க்க சட்டமாக மாற்ற ஒரு கூட்டம் முயன்றபோதுதான் பிறைவாசியின் தேடுதல் தொடங்கியது.
தேடுதலில் கிடைத்தது :
**மனாஸில் என்ற வார்த்தைக்கு "வளர்ந்து தேயும் நிலை" என்று அர்த்தம் இல்லவே இல்லை.
**ஆண்டு : ஒரு பருவம் தொடங்கி மீண்டும் அதே பருவம் வருவதே ஆண்டு.
**பருவகாலம் தொடங்குவதையும் அது நீடிக்கும் காலத்தையும் அது முடிவடையும் காலத்தையும் நட்சத்திரங்களை எண்ணிக்கொள்வதன் மூலம் அறிந்து கொண்டனர்.
**உலகம் முழுவதுமே நட்சத்திரங்களை எண்ணுவதன் மூலமே பருவங்களையும் காலங்களையும் கணக்கிட்டனர்.
**ஆண்டுகளையும் காலங்களையும் அறிவது என்றாலே அது நட்சத்திரங்களை எண்ணுவதுதான்.
**வானத்தில் தெரியும் எல்லா நட்சத்திரங்களையும் வைத்து ஆண்டுகளை அறிய முடியாது.
**அதற்காக, சூரியன் மற்றும் சந்திரன் நகரும் பாதையில் உள்ள நட்சத்திரங்களை மக்கள் தேர்ந்தெடுத்தனர்.
**அந்த நட்சத்திரங்களின் பெயர் தமிழில் "ராசிகள்" என்றும் அரபு மொழியில் "மனாசிலுல் கமர்" என்றும் அழைக்கப்படுகிறது.
**இந்த நட்சத்திரங்களை வைத்து சோதிடம் பார்ப்பதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை.
**சூரியனையும் சந்திரனையும் மற்றவர்கள் வணங்குகிறார்கள் என்பதால் நாம் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதில்லைதானே.
**இந்த நட்சத்திரங்களை வைத்து ஆண்டுகளையும், ஒரு ஆண்டின் எந்த காலப் பகுதியில் இருக்கிறோம் என்பதையும் துல்லியமாக சொல்ல முடியும்.
**சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களில் நகர்வதை மக்கள் கணக்கிடுகையில் "சந்திரனின் நட்சத்திரங்களை" மட்டும் வசனங்களில் குறிப்பிடுவதுதான் அது அல்லாஹ்வின் வார்த்தை என்பதை உணர்த்திக்கொண்டிருக்கிறது.
**36:38 வசனம் சூரியனின் ஓட்டத்தைப் பேசுகிறது(solar apex). நட்சத்திரங்களில் சூரியன் நகர்வதை மறுக்கிறது.
**36:39 ல் சந்திரன் நட்சத்திரங்களில் நகர்வதை ஆமோதிக்கிறது. சந்திரன் மீண்டும் மீண்டும் அந்த நட்சத்திரங்களில் நகல்கிறது என்கிறது. சந்திரனுக்கு அந்த நட்சத்திரங்கள் விதியாக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்கிறது.
**10:5 ல் அந்த நட்சத்திரங்களை வைத்து ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறிந்துகொள்கிறீர்கள் என்பதையும் சொல்கிறது.
**அந்த நட்சத்திரங்களுக்கு அரபுகள் பயன்படுத்திய "மனாஸில்" என்ற வார்த்தையே குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளது.
**அந்த மனாஸில் என்ற வார்த்தைக்கு தமிழில் நேரடியான வார்த்தை "ராசிகள்" என்பதுதான்.
**ராசிகள் என்ற வார்த்தை சோதிடத்திலும் இருப்பதால் அது சோதிட வார்த்தை என்பவர்கள், கம்ப்யூட்டரையும் பயன்படுத்தி "கம்ப்யூட்டர் சோதிடம்" இருப்பதால் இனி கம்ப்யூட்டர் என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டார்களோ!!
இதுதான் பிறைவாசிகளின் மனாசில்.
அதாவது, பிறைவாசிகளின் மனாசில் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் காட்டும். கமிட்டியின் மனாசில் தேதியைக்கூட காட்டாது. பிறகு எங்கே ஆண்டுகளையும் காலக்கணக்கையும் காட்டுவதோ!!!
இங்கு உங்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும்...
12 சந்திர மாதங்களை ஒரு ஆண்டு என்று சொல்லி தொடர்ச்சியாக ஆண்டுகளை எண்ணி வருகிறோமே, அந்த செயல் "ஆண்டுகளை எண்ணுவதாக" ஆகாதா? உலகின் எந்த ஒரு மொழியிலும் ஆண்டு என்ற வார்தையை தேடினால் அது "பருவ ஆண்டு" என்ற அர்த்தத்தில்தான் விளக்கம் இருக்கும். பருவ ஆண்டு என்பதை நட்சத்திரங்களை வைத்து அறிவது மட்டுமே. இந்த பருவ ஆண்டைத்தான் "சூரிய ஆண்டு" என்றும் சொல்கின்றனர். ஒரு சூரிய ஆண்டிற்குள் சந்திர மாதங்களை நுழைத்து கணக்கிட்டனர். ஒரு சூரிய ஆண்டிற்குள் 12 சந்திர மாதங்களையும், சில சமயங்களில் 13 சந்திர மாதங்களையும் புகுத்தி "நஸிய்யு" செய்தனர். அதாவது ,அவர்கள் "ஆண்டு" என்று சொல்வது "சூரிய ஆண்டு". மாதம் என்று சொல்வதோ "சந்திர மாதம்" அதாவது, சூரிய ஆண்டிற்குள் சந்திர மாதங்கள். 12 சந்திர மாதங்கள் ஒரு ஆண்டு என்று அவர்கள் எண்ணவில்லை.
நஸிய்யு தடை செய்யப்பட்ட பிறகே (9:37)
12 சந்திர மாதங்களை தனியாக எண்ணி அதையும் ஒரு ஆண்டு என்றனர். (அரபு அராதிகளில் சூரிய ஆண்டிற்கும், 12 மாதங்களை அடக்கிய சந்திர ஆண்டிற்கும் வேறுபடுத்தி காட்டும் வார்த்தைகளில்லை என்பதே இதை அறிய உதவும்). 12 சந்திர மாதங்களை தனியாக எண்ணி அதையும் ஆண்டு என்று அழைப்பது இஸ்லாமிய சமூகம் மட்டுமே. காரணம், 12 மாதங்களை எண்ணுவது மட்டுமே மார்க்க கடமைகளுக்கான கட்டளை. (நபி(ஸல்) அவர்களின் வயது 63 என்பதும் அது சூரிய ஆண்டா சந்திர ஆண்டா என்பதும் இன்னும் ஆராய்ச்சியில்தான் இருக்கிறது) மற்றபடி சூரிய ஆண்டுகளை தனியாகவும், 12 சந்திர மாதங்களை தனியாகவும் கடைபிடிப்பதற்கு மார்க்கத்தில் எந்த தடையுமில்லை. இந்த இரண்டையும் சேர்த்து சூரிய ஆண்டிற்குள் பொருந்துமாரு சந்திர மாதங்களை முன்பின்னாக மாற்றுவதற்கே தடை. இதுதான் நஸிய்யு.
சரி...
12 சந்திர மாதங்களை எண்ணி அதை ஆண்டு என்று சொல்லி அது போல் பல ஆண்டுகளை எண்ணுவதற்கு எந்த "மன்சில்களை"யும் பார்க்கத் தேவையில்லை.
12 (13) தலைப்பிறைகள் எண்ணப்பட்டாலே போதும் ஒரு சந்திர ஆண்டு கிடைத்துவிடும். இது போல தலைப்பிறைகளை எண்ணிக் கொண்டேயிருந்தாலே போதும் பல சந்திர ஆண்டுகளை எண்ணிக்கொள்ளலாம். ஆனால் 10:5 ல் சொல்லப்படுவதோ "சந்திரனுக்கு விதியாக்கப்பட்ட மன்சில்களைப் பற்றி". அந்த மன்சில்கள் மூலம்தான் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறியமுடியுமாம். சந்திரனின் பிறை வடிவங்கள் தேதியைக் காட்டாது. காலங்களைக் காட்டாது. ஆண்டுகளைக் காட்டாது.
ஆனால் பிறைவாசிகள் கூறும் சந்திரனின் மன்சில்கள் ஆண்டுகளைக் காட்டுகின்றன, ஒரு ஆண்டின் எந்த காலப் பகுதியில் இருக்கிறோம் என்பதைக் காட்டுகின்றன. ஒரு ஆண்டு முடிய இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்பதையும் மன்சில்கள் காட்டுகின்றனவே.
ஹதீஸ்களிலும், தப்ஸீல்களிலும், அகராதிகளிலும் "மனாசிலுல் கமர்" என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதாவது பிறைவாசிகளின் மனாசில் ஆதாரமுள்ளது.
கமிட்டியின் மனாசில் ஆதாரமற்றது. அவர்களின் மனோ இச்சையினாலனது.
// *பிறைவாசி :* ஆண்டுகளை கணக்கிட சூரியனின் மன்ஸிலை பயன்படுத்தலாம் என்று 10:5 வசனம் கூறுகிறது.
*கமிட்டி பதில் :* ஓஹோ..அப்படியா செய்தி..!! சந்திரக் காலண்டர் இருக்கக்கூடாது என்று அண்ணன் சொல்லிவிட்டதால் ஏற்பட்ட கொள்கை முடிவா இது? ஒரு மாதத்துக்கு 29 அல்லது 30 நாட்கள்தான் இருக்க வேண்டும் என்ற நபியின் (ஸல்) கட்டளைக்கு இணங்க, *சூரியனுக்கு இருப்பதாக நீங்கள் கூறும் அந்த மன்ஸிலை வைத்து ஒரு காலண்டரை தயாரித்து தாருங்களேன் பிறைவாசிகளே..!*
அல்குர்ஆனின் 10:5-வது வசனத்தில் *'கத்தரஹூ மனாஸில' என்று சந்திரனின் மன்ஸிலைக் குறித்து ஆண்பால் ஒருமையில்தான் அல்லாஹ் கூறுகிறான்.* ஹிஜ்ரி காலண்டரை மறுப்பதற்காக சூரியனையும் வம்புக்கு இழுத்துள்ளனர் பிறைவாசிகள். *இனி சூரியனைப் பார்த்து நோன்பு நோருங்கள், சூரியனைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்ற புதிய வஹியை அறிவிக்கவும் கூடும். வஹியை மட்டும் பின்பற்றும் கூட்டமல்லவா பிறைவாசிகள்..!!* //
பிறைவாசிகளின் விளக்கம் :
நாம் சொல்லாததை சொல்லியும் அதற்கு பதிலும் எழுதி கேடுகெட்ட வேலையை செய்யும் கமிட்டியின் அறிவாளிகளே!!!
சூரியனுடைய மன்சில்களை குர்ஆன் பேசவில்லை. சந்திரனுடைய மன்சில்களைப் பற்றிதான் 10:5, 36:39 ஆகிய இருவசனங்களும் பேசுகின்றன.
குர்ஆன் சொல்லக்கூடிய இந்த மன்சில்களைத்தான் பிறைவாசிகள் சொல்கிறார்கள். சந்திரனின் இந்த மன்சில்கள்தான் ஆண்டுகளைக் காட்டுகிறது என்று பிறைவாசிகள் சொல்கிறார்கள்.
'கத்தரஹூ மனாஸில' என்பதில் உள்ள "ஹு" சந்திரனைத்தான் குறிக்கிறது. சூரியனைக் குறிக்கிறது என்று நாம் எங்கே சொன்னோம்? (ஆண்பால் பெண்பால் மோசடி செய்வதில் கமிட்டியினர் வல்லவர்கள் என்பதை நாம் முன்பே பதிவிட்டிருக்கிறோம்)
இதற்குக் காரணம் கமிட்டியினரின் அறியாமைதான்.
சந்திரனின் நட்சித்திரங்களை(மனாசிலுல் கமர்) வைத்து அறியப்படும் ஆண்டுகளைத்தான் "சூரிய ஆண்டு" என்கின்றனர். ஆதாவது, சந்திரனின் நட்சத்திரங்களை வைத்து அறியப்படும் ஆண்டிற்கு பெயர்தான் "சூரிய ஆண்டு" .
இதில்தான் கமிட்டியினர் குழம்பிப்போய், நாம் "சூரியனின் மனாசிலை" பார்க்க சொல்கிறோம் என்று கதை கட்டுகின்றனர்.
நட்சத்திர மனாசிலை வைத்து காலண்டர் போட்டுத்தா! என்று கமிட்டியினர் கேட்கின்றனர்.
உலகில் இருக்கும் அனைத்து பருவகாலண்டர்களும் "நட்சத்திர காலண்டர்"தானே. கமிட்டியின் காலண்டர் இயங்குவது கிரிகோரியன் காலண்டரில்தான். அந்த காலண்டர் இல்லையென்றால் கமிட்டி காலண்டரே கிடையாது. அப்படிப்பட்ட கிரிகோரியன் காலண்டர் ஒரு நட்சத்திரக் காலண்டர்தானே.
பேரீச்சம் பழம் விவசாயத்தில் அரபுகள் கணக்கிட்டது நட்சத்திர ஆண்டைத்தானே.
பிறைவாசிகள் தனியாக காலண்டர் போட வேண்டியதன் தேவையென்ன? காலண்டர் போட்டுத்தா என்று கேட்பது கமிட்டியினருக்கு ரத்தத்தில் ஊறியது என்பதால் இந்த கேள்வி தொடர்கிறது போலும்.
நபிகளார் காலத்தில் நட்சத்திரங்களைக் கொண்டு விவாசாயம் நடந்ததற்கான ஆதாரங்களை நாம் ஏற்கனவே தந்துவிட்டோம்.
'மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்காதீர்கள்!" என்று நபி () ஆலோசனை போல் கூறினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), ஸுரையா (தோன்றக் கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வரும்வரை தம் தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்க மாட்டார்.
அறி: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ; புகாரி 2193.
கனிகளின் குறைகள் போகும்வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) தடை விதித்தார்கள்என இப்ன் உமர் (ரலி) கூறினார்கள். அது எப்போது என இப்னு உமரிடம் கேட்டேன். ஸுரையாவின் உதயம்என்று கூறினார்கள்.
அறி: உஸ்மான் பின் அப்துல்லாஹ் பின் சுராகா ; அஹமத் 5012, தஹாவி-1906
சவூதி அரசு தனது பழைய உம்முல்குராவை சாக்கடையில் வீசியபோது அதை நைசாக தூக்கிவந்து கேரளா வழியாக தமிழ்நாட்டிற்கு கடத்தி, வியாபாரம் பார்க்கும் இந்த கூட்டம் அதே உம்முல் குரா (அரசு துறை) நபிகளார் காலம் முதல் இன்றுவரை வியாவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நட்சத்திர ராசி காலண்டரை வெளியிட்டு வருவதை இவர்கள் காணவில்லையா? பார்க்க http://bit.ly/2uEaiKB
"பிறை பார்த்து நோன்பு" என்ற வஹியை மாற்றி "சந்திரனின் அமாவாசையை கணக்கிட்டு நோன்பு" என்று புது வஹியை அறிவித்த கூட்டம் நீங்களல்லவா அமாவாசிகளே!
//பிறைவாசி : சந்திரனானது உலகின் ஒரு சாராருக்கு ஒரு தேதியையும், மற்றொரு பகுதிக்கு வேறு தேதியையும் காட்டும். அமாவாசை என்பது இரண்டு நாளில் நடக்கும்.
பதில் : ஒவ்வொரு நாளுக்கும் ஒரேயொரு தேதி என்பதுதான் ஒரு காலண்டரின் சாதாரண அடிப்படை. வெள்ளிக்கிழமை என்ற ஒரு நாளுக்குள்ளேயே நாம் ஜூம்ஆ தொகையை நிறைவேற்றி விடுகிறோம். வெள்ளிக்கிழமை என்ற அந்த ஒரு நாளுக்கு இரண்டு தேதிகள் எப்படியாவது வந்துவிடாதா என்று பிறைவாசிகள் ஏங்குவது நமக்கு புரிகிறது.
ஏற்கனவே இந்துக்களின் பஞ்சாங்கங்களை ஹலால் என ததஜ பிறைவாசிகள் அறிவித்து விட்டார்கள். மேலும் மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், மகரம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம், சிம்மம் போன்ற ராசிகளும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்று பக்கம் பக்கமாக கட்டுரைகளையும் வரைந்து தள்ளிவிட்டார்கள். அதைப் படித்த ததஜவினர் பலர் முகம் சுளிக்கவே, எதிர்ப்புகளுக்கு அஞ்சி அக்கட்டுரையை நைசாக நீக்கிவிட்டனர் பிறைவாசிகள். தற்போது அமாவாசை என்பது இரண்டு நாளில் நடக்கும் என்று புனைவதும், இந்துக்களின் பஞ்சாங்க அடிப்படையிலான அமாவாசை நம்பிக்கையை வேறு லேபிளில் முஸ்லிம்களிடம் புகுத்தும் நரித்தந்திரம்தானே தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 55:5, 6:96 போன்ற வசனங்கள் சந்திரன் துல்லியமான கணக்கின்படி உள்ளதாகவும், அவை கணக்கிடும்படி உள்ளதாகவும் கூறுகிறது. சந்திரனானது ஒருநாளுக்கு ஒருசாராருக்கு ஒரு தேதியையும், மற்றொரு பகுதிக்கு வேறு தேதியையும் காட்டும் என்று பிறைவாசிகள் சொல்வது சந்திரனின் துல்லியமாக இயங்கிடவில்லை என்று பொருள்படும். மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களுக்கு நேர்முரணாக இவர்களின் கூற்று அமைகிறது.//
பிறைவாசிகள் தங்களது கட்டுரைகளில் கூடுதல் விளக்கங்களை சேர்த்துள்ளார்களே தவிர, எந்த கட்டுரையையும் நீக்கவில்லை. இவர்கள் சொல்லும் கட்டுரைகள் அதே பெயர்களில் மிதுனம், கும்பம், மீனம் என்ற சூரிய ராசிகளை விளக்கியும் கிருத்திகை (நபிகளார் சொன்ன சுரையா), ரோகினி (நபிகளார் சொன்ன மிஜ்தஹ்), சித்திரை (நபிகளார் காட்டிய சிமாக்) போன்ற சந்திர நட்சத்திரங்களை விளக்கியும் வெளியிட்ட நாள் முதல் அதே லிங்கில் உள்ளன பார்க்க. http://www.piraivasi.com/2015/08/20.html
நிலவைக் கொண்டு உலகுக்கெல்லாம் பொதுவான ஒரு நாட்காட்டியை உருவாக்கவே இயலாது என்பதை ஏற்கனவே பிறைவாசிகள் நிறுவிவிட்டனர். பார்க்க:
🔗 ஒரே பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு  👉   http://www.piraivasi.com/2014/12/Universal-Hilail-An-Astronomical-Analysis.html
🔗 தினமும் பிறை பார்த்து வந்தால் உலகில் ஒரே பிறை வருமா  👉   http://www.piraivasi.com/2016/02/11.html
🔗 பிறை பார்த்த தகவலை ஏற்றால் உலகில் ஒரே நாளில் பெருநாள் வருமா? V2  👉   http://www.piraivasi.com/2016/04/19.html
🔗 பிறை பார்த்த தகவலை ஏற்றால் உலகில் ஒரே நாளில் பெருநாள் வருமா?  👉   http://www.piraivasi.com/2016/04/13.html


ஒவ்வொரு நாளுக்கும் ஒரேயொரு தேதி என்பதுதான் ஒரு காலண்டரின் சாதாரண அடிப்படை என்று ஹிஜ்ராவினர் பிரச்சாரம் செய்கின்றனர். தகவல் தொடர்பு வளர்ந்த பிறகும், கிருத்தவ காலண்டர் உலகம் முழுவதும் பரவிய பிறகும் சர்வதேச தேதிக்கோடு நிறுவப்பட்ட பிறகும்தான் உலகம் முழுவதும் ஒரு சூரிய கிழமைக்கு ஒரு சூரிய தேதி எனும் சித்தாந்தம் வந்தது. கூடுதல் விளக்கத்திற்கு
கிழமைகள் (திங்கள், செவ்வாய், புதன்...) எனும் வாரநாட்கள் சூரியனை அடிப்படையாகவும், தேதி என்பது பிறையை அடிப்படையாகக்கொண்டு இருக்கும் காலமெலாம் ஒரு சூரிய நாளுக்கு ஒரே ஒரு பிறை தேதி உலகம் முழுமைக்கும் வரவே வராது. அல்லாஹ்வின் இவ்விதியை மீறி, ஒரு சூரிய கிழமைக்கு ஒரு பிறை தேதியை திணித்தால், ஹிஜ்ரா காலண்டரில் இருக்கும் ஓட்டைகள்தான் எல்லா காலண்டரிலும் இருக்கும்.
🔗 ஹிஜ்றா காலண்டரின் பிழைகள்! 👉 http://www.piraivasi.com/2015/03/1.html
//பிறைவாசி : தமிழகத்திலுள்ள மஸ்ஜிதுகள் கிப்லாவை சரியாக முன்னோக்கும் அளவில் கட்டப்படவில்லை. சுமார் 5 டிகிரி அளவுக்கு மாறுபட்டு உள்ளது.
பதில் : அண்ணன் ஃபேமஸ் ஆகியதே பாபர் மசூதி இடிப்பு போராட்டங்களை வைத்துதான். ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எந்த பள்ளிவாசல்களிலும் தற்போதைக்கு கைவைக்க மாட்டார்கள் என்பதால் நாம்தான் அவர்களின் களப்பணியை கையில் எடுத்து செயல்பட வேண்டும் என்று பிறைவாசிகள் முடிவெடுத்து விட்டார்கள் போலும். அப்போதுதான் நாமும் அண்ணனைப் போல ஃபேமஸ் ஆகலாம் என்ற திட்டமோ என்னவோ? மாட்டுக்கறி விஷயத்தில் பிஜேபி அரசை வன்மையாக கண்டித்த பக்கீர் முஹம்மது அல்தாபியை மிரட்டி ததஜவின் தலைமை பதவியிலிருந்து ஓரங்கட்டி தஃவாவை விட்டே விரட்டியடித்ததிலிருந்து, பிறைவாசி பீலா மன்னன்களை ததஜ தலைமை இதற்கான பணிகளில் களமிறக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பது தெரிகிறது. நமது மஸ்ஜிதுகளை நிர்வகிக்கும் கண்ணியத்திற்குரிய ஜமாஅத்தார்கள் மிக கவனமாக இருக்க வேண்டுகிறோம்.//
முஸ்லிம்களின் கிப்லாவை நிச்சயமாக உங்கள் (Greenwich) க்ரெனிச் கிப்லாவை நோக்கி மாற்றிவிடுவோம் என்று கிருத்தவ மடங்களிலிருந்து பணம் பெற்றுக்கொண்டும், உங்களின் காலண்டரை எப்பாடுபட்டாவது தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் விற்போம் என்று யூதர்களிடம் பணம் பெற்றுக்கொண்டும் களமிறங்கிய ஹிஜ்ராவினர் பிறைவாசி எனும் இணையதளத்தால் தோலுரிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு அடையாளம் காட்டப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஹிஜ்ராவினர் பிறைவாசி என்ற இணையதளத்தை ஒரு நபரின் பெயராக சித்தரித்து வசைபாடி மகிழ்கின்றனர்.
அளவற்ற அவதூறுகளையும் நிகரற்ற பொய்களையும் பிறைவாசி எனும் தளத்தின் மீது வாரி இறைத்து இன்பமடைகின்றனர்.. இவர்கள் என்ன உருண்டு பிரண்டாலும் இன் ஷா அல்லாஹ் கிப்லாவை மாற்றவும் விடமாட்டோம் யூத நாட்காட்டியை தமிழ்நாட்டில் விற்கவும் விடமாட்டோம். கிப்லா பற்றி இவர்கள் நம்மீது சொன்ன அவதூறுகளுக்கான விடைகளை
இங்கே காண்க. http://www.piraivasi.com/2017/07/17-5.html

ஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபி என்பவர் ராஜினாமா செய்தாலும் செய்தார் அன்றுவரை அவருக்கு எதிரியாக இருந்த அனைவரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டி அவரை நண்பராக்க முயற்சிக்கின்றனர். RSS கல்யாணி, Fair and Lovely இப்ராஹிம், என்ற வரிசையில் அஹ்லே காலண்டர் ஜமாஅத்தின் தலைமை அறிஞர்கள் இணைந்துள்ளனர். யூத கைக்கூலிகள் என்று நாம் எண்ணிவந்த ஹிஜ்ராவினர், RSS கைக்கூலிகளாக இருப்பார்களோ என்ற எண்ணம் நமக்கு இப்போது ஏற்படுகிறது. நேற்று வரை அல்தாஃபி ஹதீஸ் மறுப்பாளர், தங்களது ஹிஜ்ரா காலண்டரை எதிர்க்கும் லட்சோப லட்சம் முஸ்லிம்களின் தலைவன், தங்களின் முக்கிய எதிரி. ஆனால் இன்று அதே அல்தாஃபி தாயி ஆகிவிட்டார். கல்யாணிக்கும் ஹிஜ்ரா தலைவர்களுக்கும் உள்ள வேற்றுமை ஒற்றுமைகளை பட்டியலிடும் பணியை பொதுமக்களுக்கு விடுகிறோம்.