Thursday 26 March 2015

ஹிஜ்றாவினர் முன்னோக்கும் தீர்க்க ரேகை

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم


ஹிஜ்ரி கமிட்டி என்போர் தங்களின் பிறை ஆய்வு தொடரில் வெளியிட்ட முஸ்லிம்கள் (தீர்க்கரேகை-Meridian) முன்னோக்கும் திசை பற்றிய விளக்கம் எனும் கட்டுரையை நாம் ஆய்வுக்கு எடுக்கிறோம்.


இதை ஆய்வு செய்யும் முன் கிப்லாவை அடிப்படையிலிருந்து படித்து விளங்கிக்கொள்வோம்.


கிப்லா என்றால் என்ன?


கிப்லா என்றால் தொழுகையில் கஅபாவை முன்னோக்குவது. இது மஸ்ஜிதுல் ஹரமில் தொழுபவர்களுக்கோ அதை சுற்றிலும் உள்ளவர்களுக்கோ எளிதான காரியம். அவர்களின் கண்களுக்கு முன்னே கஅபா இருக்கும். எளிதாக அதை நோக்கி தொழுதுவிடலாம் கஅபாவிலிருந்து வெகு தூரத்தில் உள்ளவர்களுக்குதான் அது சிரமம். அவர்கள் தங்கள் ஊரிலிருந்து கஅபா எங்கே உள்ளது என்று கண்டுபிடித்து அதை முன்நோக்க வேண்டும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள திசைகளை வைத்தே மனிதன் கஅபா எங்கிருக்கிறது என்று கூற ஆரம்பித்தான். ஆரம்ப காலத்தில் திசைகளை கண்டறிய சூரிய உதய மறைவையும் நட்சத்திரங்களையுமே பயன்படுத்தினர்.


D:\Articles\hijri committee\qiblah\kaaba1.jpg


அப்படிப்பட்ட திசைகளின் அடிப்படையில் கஅபாவின் கிழக்கே உள்ளவர் மேற்கு நோக்கியும், மேற்கே உள்ளவர் கிழக்கு நோக்கியும் தொழவேண்டும். இதேபோல் வடக்கே உள்ளவர் தெற்கையும் தெற்கே உள்ளவர் நோக்கியும் வடக்கையும் நோக்கவேண்டும். வடகிழக்கே உள்ளவர் தென் மேற்கையும். தென்மேற்கே உள்ளவர் வடகிழக்கையும். வடமேற்கே உள்ளவர் தென்கிழக்கையும், தென்கிழக்கே உள்ளவர் வடமேற்கையும் நோக்கவேண்டும்.
D:\Articles\hijri committee\qiblah\காபா.png
இப்படி எட்டுதிசைகளையும் நாம் பெயரிட்டு குறிப்பிடலாம். மேலும் வட-வடமேற்கு, மேற்கு-வடமேற்கு எனும் அடிப்படையில் எட்டு திசைகளுக்கு இடையே மேலும் 8திசைகளை பெயரிட்டு அழைக்கலாம். இதை மேலே படத்தில் காட்டியுள்ளோம். இதனடிப்படையில் மொத்தம் 16 திசைகளையே பெயரிட்டு அழைக்க முடியும். ஆனால் இவற்றிற்கு இடைப்பட்ட திசைகளிலும் முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்கள் உள்ளன. அவர்களின் கிப்லாவை எந்த திசையின் பெயர்கூறி அழைப்பது. கஅபாவை சுற்றிலும் 360 டிகிரியிலும் மக்கள் நின்று தொழுவதை நீங்கள் குறைந்த பட்சம் டீவியிலாவது பார்த்திருப்பீர்கள். கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு மட்டுமல்லமால் நம்மால் பெயரிட இயலாத திசைகளிலெல்லாம் மக்கள் நின்று கஅபாவை நோக்கி தொழுவதை நாம் பார்த்திருப்போம். இப்படி 16திசைகளை மட்டும் கிப்லாவை குறிக்க பயன்படுத்தினால் (360 ÷ 16 = 22½) 22½ டிகிரி வரை பிழை ஏற்படும். சென்னையிலிருந்து கிப்லாவை 5டிகிரி பிழையாக நோக்கினால் நாம் கஅபாவிற்கு பதிலாக துபையின் புர்ஜ் கலீபவை நோக்கி தொழுதுகொண்டிருப்போம். 22½ டிகிரி என்றால் ரஷியாவில் எதாவது கட்டிடத்தை நோக்கிகொண்டிருப்போம்.


இப்படி திசைகளின் பெயர்களை கூறி அவற்றை நோக்கி தொழுதால் அது கிப்லா ஆகாது என்று விளங்கி இருப்பீர்கள். அப்படி எனில் கிப்லாவை சரியாக குறிப்பது எப்படி? கஅபா மிகத்தொலைவில் இருக்கும் பகுதிகளுக்கு அதை கண்ணால் காண இயலவில்லை என்பதால்தான் திசைகளை வைத்து கிப்லாவை அறிந்து கொள்ள முற்பட்டனர். ஆனால் அது மிகச்சரியாக எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் இந்த பிரச்சனை இல்லை. இதை துல்லியமாக கணக்கிடும் முறையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துவிட்டனர். அதன் கணக்கு பின்வருமாறு.
α = arctan { sin(21.42251 – λ) ÷ [cos ϕ × tan 39.8261382 – sin ϕ × cos (21.4225 – λ) ] }


இதில் ϕ என்பது நமது ஊரின் குறுக்கை (latitude) மற்றும் λ என்பது நமது ஊரின் நெடுக்கை (longitude); இதன் விடை α என்பது நமது ஊரில் இருந்து கஅபாவின் அமைந்துள்ள கோணம் ஆகும். இதை நேர் வடக்கிலிருந்து கடிகாரதிசையில் குறிக்க வேண்டும். இந்த சூத்திரத்தை பயன்படுத்தினால் நமது ஊரின் வடக்கிலிருந்து எத்தனை டிகிரியிலிருந்து கிப்லா உள்ளது என்பதை மிகத்துல்லியமாக கணக்கிடலாம். இந்த கணக்கை பயன்படுத்திதான் நமது ஊர்களில் பள்ளிவாசலுக்கு கிப்லாவை நிர்ணயம் செய்கின்றனர். சும்மா மேற்கு அல்லது வடமேற்கு எனும் திசைகளில் கிப்லாவை வைத்து பள்ளிகள் கட்டப்படுவதில்லை. மேலும் விபரங்களுக்கு நமது கிப்லா கட்டுரையை வாசிக்கவும். விஞ்ஞானம் பகுதி-1 எனும் கட்டுரையும் பயன் தரும்


இப்போது நாம் திசைகளை நோக்கி தொழவில்லை கஅபாவை நோக்கி தொழுகிறோம் என்று விளங்கி இருப்பீர்கள். இதை கிப்லா குறிக்கப்பட்ட பின்வரும் வரைபடத்திலிருந்தும் நீங்கள் எளிதில் விளங்கிகொள்ளலாம்.
D:\Articles\hijri committee\qiblah\Qiblah Direction on mercator-page-002.jpg


பெயரிட இயலாத பல திசைகளில் இருந்தும் கஅபாவை மக்கள் முன்னோக்குவதை நீங்கள் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


கஅபாவின் எதிர் முனை:
கஅபாவின் எதிர் முனை என்பது “கஅபாவிலிருந்து பூமியை துளைத்து சரியாக பூமியின் மையம் வழியாக பூமியின் மறுபகுதிக்கு வந்தால் நாம் வெளியேறும் இடம் அதன் எதிர் முனை ஆகும்”. இங்கே இருந்து கிப்லாவை கணக்கிட்டால் அது பூஜ்ஜியம் எனும் விடையை தரும். அதாவது இந்த பகுதியிலிருந்து தெற்கு மேற்கு வடக்கு கிழக்கு என எங்கு நோக்கி தொழுதாலும் அது கிப்லாதான். (இதை புரிந்து கொள்ளவும் செயல்படுத்தவும் மக்கள் குழம்புவார்கள் என்பதற்காவே இறைவனை அப்பகுதியை கடல் ஆக்கிவிட்டனோ ! அல்லாஹு அஃலம்)


ஹரமில் தொழுபவர்கள் காஅபாவை சுற்றி நின்று தொழுவது போன்று கஅபா எதிர் முனையில் உள்ளவர் எந்த திசையை நோக்கி தொழுதாலும் அது கஅபா திசையே. கஅபாவின் புவியியல் புள்ளி: (21.4225,39.8262). கஅபாவின் எதிர்முனையின் புவியியல் புள்ளி: (-21.4225,-140.1738).


21.4225°S, 140.1738°W எனும் புள்ளியை நீங்கள் கடந்தால் மட்டுமே உங்கள் கிப்லா எதிர் திசையாக மாறும். அல்லாமல் அந்த புள்ளி இருக்கும் 140.1738W எனும் தீர்க்க ரேகையை கடந்தால் கூட உங்கள் கிப்லா மாறுவதில்லை. மேலே இருக்கும் வரைபடம் கஅபாவை மையப்படுத்தி வரையப்பட்டதால் கஅபாவின் எதிர்முனையை நீங்கள் வரைபடத்தின் இரு பகுதிகளிலும் காணாலாம். அந்த புள்ளியிலிருந்தே அம்புக்குறிகள் புறப்பட்டு கஅபாவை அடைவதைக்காணாலாம். மேலும் அந்த புள்ளியில் நின்று தொழுதால் எந்த திசையிலும் தொழலாம் என்பதை தெளிவாக விளங்கலாம்.


கிப்லாவை பற்றி மேலதிக விளக்கத்திற்கு கிப்லா-ஒரு அறிவியல் பார்வை எனும் கட்டுரையை வாசிக்கவும்


இனி ஹிஜ்ரி கமிட்டியின் விளக்கத்தை ஆய்வு செய்வோம்






இவர்களின் விளக்கங்களிலிருந்து நாம் புரிந்து கொள்வது (மேலுள்ள லிங்குகளையும் வீடியோவையும் பார்க்கவும்)


மேலே இருப்பது கிப்லா பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர் கொடுக்கும் விளக்கம் ஆகும். இவர்களின் வாதங்களில் இருந்து இவர்கள் விளங்கி இருக்கும் காரியங்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.


1. கிப்லா என்பது கஅபா இருக்கும் தீர்க்க ரேகையான 39.82 டிகிரி மெரிடியனை முஸ்லிம்கள் முன்நோக்குவதாகும்.
2. இப்படி முஸ்லிம்கள் இந்த தீர்க்க ரேகையின் இரு புறமும் அணிவகுத்து நின்றால் அவர்களின் முதுகுப்பகுதி சரவதேச தேதிக்கோட்டில் சந்திக்கும். அதாவது 180டிகிரியில் இருக்கும் சர்வதேச தேதிக்கொட்டுபகுதியில் அதன் இருபுறமும் மக்கள் முதுகை காட்டிக்கொண்டு தொழுவார்கள். மேலும் சொன்னால் நீங்கள் சர்வதேச தேதிக்கோட்டை தாண்டினால் உங்கள் கிப்லா மேற்கிலிருந்து கிழக்காக மாறிவிடும்.
3. கிப்லா என்பது மேற்கு திசையில் உள்ளவர்க்கு கிழக்கும், கிழக்கு திசையில் உள்ளவர்க்கு மேற்கும் என்பதாகவே விளங்கி வைத்துள்ளனர். இவற்றை தவிர கிப்லாவிற்கு வேறு திசைகள் இல்லை என்றும் விளங்கி வைத்துள்ளனர்.


இவர்களின் விளக்கத்தை நாம் உலக வரைபடத்தில் வரைந்து பார்த்தல் எப்படி இருக்கும்


D:\Articles\hijri committee\qiblah\hijiri qibla.jpg


மேலே இருக்கும் வரைபடம்தான் இவர்களின் விளக்கப்படி கிப்லா வரைபடம். கஅபா இருக்கும் மெரிடியன் 39.82E தீர்க்க ரேகை. உலகத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் இந்த தீர்க்க ரேகையை ஒன்றில் கிழக்காக அல்லது மேற்காக நோக்கி விடலாம். மேலும் தேதிக்கோட்டில் முஸ்லிம்கள் முதுகை காட்டி தொழுகின்றனர் என்ற வாதத்தையும் நாம் இங்கே வரைபடமாக மாற்றியுள்ளோம். சர்வதேச தேதிக்கோட்டை சிகப்பு நிறமிட்டு காட்டியுள்ளோம். நீல நிறத்தில் இருப்பது கமிட்டியினர் கூறும் முஸ்லிம்கள் முன்னோக்கும் தீர்க்கரேகை. தேதிக்கோட்டில் இருந்து இருபுறமும் மக்கள் எங்கு நோக்கி தொழவேண்டும் என்று கமிட்டியினர் கூறுவதையும் சிகப்பு அம்புக்குறியில் காட்டியுள்ளோம்.


கிப்லா மாற்றம் ஒரு புள்ளியில் நிகழ்கிறது என்பதை விளங்கி இருப்பீர்கள். அந்த புள்ளி தேதிக்கோட்டில் அமைய வில்லை என்பதையும் விளங்கி இருப்பீர்கள். இங்கே கமிட்டியினர் கூறும் கிப்லாவை பின்பற்றினால் வடமேற்காக தொழவேண்டிய அமெரிக்கன் சமோவா, வெஸ்டன் சமோவா, கிரிபாற்றி, பிரெஞ்சு பாலினேசியா, நீயூவே மற்றும் ஹவாய் நாட்டினர் கிழக்கு நோக்கி தொழுது கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட எதிர் திசையை முன்னோக்கி தொழுவார்கள். மேலும் மிகச்சரியாக வடக்கு நோக்கி தொழவேண்டிய அலாஸ்கா மற்றும் கனடாவின் சில பகுதியினரும் தவறாக கிழக்கு நோக்கி தொழுவார்கள். இவர்கள் சரியாக எங்கு நோக்கி தொழவேண்டும் என்பதற்கான வரைபடங்களை கீழே காட்டியுள்ளேன். நீலக்கோடு கிப்லா திசையை காட்டும். நேர் வடக்கிலிருந்து இந்த நாட்டினர் சரியாக எத்தனை டிகிரியில் கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்ற கணக்கையும் காட்டியுள்ளேன். கீழே கொடுத்திருக்கும் longitude & latitudeகளை நீங்கள் (உங்கள் மொபைளிலேயே) எந்த ஒரு கிப்லா அப்ளிகேஷனில் இட்டும் சரிபார்த்துகொள்ளலாம்


D:\Articles\hijri committee\qiblah\alaska.png
D:\Articles\hijri committee\qiblah\american samoa (Copy).pngD:\Articles\hijri committee\qiblah\fiji (Copy).pngD:\Articles\hijri committee\qiblah\french polynesia (Copy).pngD:\Articles\hijri committee\qiblah\hawaii (Copy).pngD:\Articles\hijri committee\qiblah\kiribati (Copy).pngD:\Articles\hijri committee\qiblah\niue (Copy).pngD:\Articles\hijri committee\qiblah\tonga (Copy).pngD:\Articles\hijri committee\qiblah\western samoa (Copy).png


கஅபாவை முன்னோக்குவதையும் அதன் எதிர் முனையை பின்னோக்குவதையும் நீங்கள் இன்னும் விளங்கவில்லை என்றால் பின்வரும் படங்கள் அவற்றை விளக்கும்.


D:\Articles\hijri committee\qiblah\meccamap.png


இடது புறத்தில் இருக்கும் படம் கஅபாவை நடுவிலிருக்கும்படி உலக உருண்டையை அமைத்து எடுத்த படம். இது உங்களுக்கு நன்றாக விளங்கும். கிப்லாவை குறிக்கும் அம்புக்குறிகள் கஅபாவை நோக்கி  உள்ளன. அவை எந்த திசையானாலும் கஅபாவை சுற்றிலும் உலகம் முழுவதும் வட்டம் வட்டமாக விரிவதை பார்க்காலாம். இதே வட்டங்கள் பூமியின் மறுபக்கத்திலும் விரிவடைகின்றன. அதை வலது புறத்தில் இருக்கும் படத்தில் காட்டியுள்ளோம். முடிவில் இந்தவட்டங்கள் பூமியின் மறு பக்கத்தில் ஒரு புள்ளியில் சுருங்குகின்றன. இந்த புள்ளியே கஅபாவின் எதிர் முனை. பூமியின் ஒரு பாதியில் அம்புக்குறிகள் கஅபாவை நோக்கி இருப்பதையும் அதன் மறுபாதியில் அம்புக்குறிகள் கஅபாவின் எதிர்முனையை பின்னோக்கி இருப்பதையும் பார்கிறீர்கள்.


இதை ஒரு பந்தை கையில் எடுத்துக்கொண்டு நீங்களே செய்து பார்க்கலாம். ஒரு பெரிய பந்தை கையில் எடுதுக்கொள்ளுங்கள். அதில் ஒரு புள்ளியை வையுங்கள். அந்த புள்ளியை மையமாக வைத்து ஒரு சிறிய வட்டத்தை வரையுங்கள். பின்னர் அந்த வட்டத்திற்கு வெளியே வேறொரு வட்டத்தை வரையுங்கள். இப்படியே தொடர்ந்து வட்டத்தை வரைந்து வாருங்கள். சரியாக பந்தின் அதைப்பகுதியை எட்டும்போது ஒரு பெரிய வட்டத்தை வரைந்திருப்பீர்கள். மீண்டும் தொடருங்கள். வட்டங்கள் வட்டங்கள் பந்தின் அரைக்கோளத்தை தாண்டும்போது சிறிதாகத்தொடங்கும். அவை சுருங்கி சுருங்கி முடிவில் ஒரு புள்ளியை அடையும். இதுதான் நீங்கள் முதலில் வைத்த புள்ளியின் எதிர் முனை.
கஅபாவின் எதிர்முனை தேதிக்கொட்டிலிருந்து 40டிகிரி விலகி உள்ளது. 180W ஆன தேதிக்கொடிலிருந்து 140W ஆன கஅபாவின் எதிர் முனை இருக்கும் தீர்க்க ரேகை வரை உள்ள நாடுகள் கமிட்டியினரில் கிப்லாவை பின்பற்றினால் தொழுகைகளை பாழாக்க வேண்டியதுதான்.




கிப்லா திசையை உலக அளவில் குறிக்கும் படம்


முஸ்லிம்கள் உலக அளவில் வட்ட வரிசையில் நின்று தொழுவதற்கான ஆதாரம்


இப்படி நாம் கூறும் சரியான கிப்லாவை மறுத்துவிட்டு (Greenwich) க்ரெனிச்சையும் IDLஐயும் அடிப்படையாக கொண்ட கிப்லாவை மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதற்காக இவர்கள் வேறொரு பிரச்சாரத்தையும் செய்கின்றனர். மேலே நாம் வலது புறத்தில் காட்டி இருக்கும் படத்தில் இருப்பதுபோல் மக்கள் வட்டவடிவத்தில் முதுகை காட்டிக்கொண்டு நின்று தொழுதால் இமாம் எங்கே நிற்பார் என்பதாகும். மேலும் இது ஜாஹிலியா காலத்து நடை முறை என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். நிச்சயமாக பொது அறிவுள்ளவர் இப்படி கேட்கமாட்டார். நாம் கூறும் கஅபாவின் மறு முனை கடல் பகுதியில் அமைந்துள்ளது. அதை சுற்றி ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மனிதர் வசிக்கும் எந்த நிலப்பரப்பும் இல்லை. இதற்கு மிக அருகாமையில் இருக்கும் பிரெஞ்சு பாலினேசியாவின் கிப்லா திசையை நாம் மேலே காட்டியுள்ளோம். அதனை சுற்றிலும் 1000கிலோமீட்டர் அளவிற்கு அந்த இடத்தை கடலாக்கிவிட்டன். அப்படியே வீம்புக்கு அந்த இடத்தில் செயற்கையாக ஒரு தீவை உருவாகினாலோ கப்பலைநிறுத்தினாலோ கூட இஸ்லாம் அதற்கு தீர்வு வழங்காமல் இல்லை. கஅபாவை சுற்றி நாம் வட்ட வடிவில் நின்று தான் தொழுகிறோம். இவர்கள் கூறுவது போல் நேர் வரிசையாக நின்று தொழவில்லை. ஆனால் கஅபாவிற்கு உள்ளே தொழுபவர்கள் இமாமை நடுவில் நிறுத்திவிட்டு வட்ட வடிவில் நின்று தொழுவார்களா? இல்லை. ரசூலல்லாஹ் கஅபாவிற்கு உள்ளே நின்று தொழும்போது கஅபாவின் வாசலின் எதிரில் உள்ள சுவற்றை நோக்கி தொழுதார்கள் என்று ஹதீஸில் தெளிவாக உள்ளது. அதே போல் மிகச்சரியாக கஅபாவின் எதிர்முனையில் நின்று தொழுபவர்கள் ரசூலுல்லாஹ் கஅபாவிற்குள் நோக்கிய அந்த சுவற்றை நோக்கி தொழுதால் போதுமானது.


وَكَانَ الْبَيْتُ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ سَطْرَيْنِ، صَلَّى بَيْنَ الْعَمُودَيْنِ مِنَ السَّطْرِ الْمُقَدَّمِ، وَجَعَلَ باب الْبَيْتِ خَلْفَ ظَهْرِهِ، وَاسْتَقْبَلَ بِوَجْهِهِ الَّذِي يَسْتَقْبِلُكَ حِينَ تَلِجُ الْبَيْتَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ، قَالَ وَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى وَعِنْدَ الْمَكَانِ الَّذِي صَلَّى فِيهِ مَرْمَرَةٌ حَمْرَاءُ‏ புகாரி 4400


நமது வரிசை வட்டமாக இல்லை நேர் கோட்டு வரிசையாகவே உள்ளது. எனவே வட்டமாக விரிந்து செல்லும் கிப்லா தவறானது எனவும். தட்டையாக இருக்கும் வரைபடத்தில் அவர்கள் காட்டுவது போன்றுதான் கிப்லா இருக்குமாம். ஒரு பெரிய வட்டத்தின் சிறிய பகுதி நேர்கோடாக தோராயப்படுதப்படும் என்பது  அடிப்படை கணிதம். கஅபாவை சுற்றிலும் வட்டமாக நின்று தொழும் முஸ்லிம்கள் மாக்காவிலேயே இருக்கும் வேறு பள்ளிகளில் வட்டமாக நின்று தொழமாட்டர்கள். இதற்க்கு காரணம் அந்த பகுதியில் வட்டம் மிகவும் பெரிதாகிவிடும். அந்த பெரிய வட்டத்தில் ஒரு சிறு பகுதியிலேயே மக்கள் நின்று தொழுவார்கள். அங்கே நாம் ஒரு சிறிய வளைவுள்ள ஆர வடிவிலான வரிசையை ஏற்படுத்தினாலும் அது ஒரு நேர்கோடாகவே இருக்கும்.


மேலும் இப்படி ஒரு வாதத்தை எடுத்துவைப்பவர்கள் கஅபத்துல்லாவில் மக்கள் தொழுவதை டிவியில் கூட பார்த்திருக்க மாட்டார்களா?  இன்று கஅபாவில் அதை சுற்றி மக்கள் வட்டவடிவில் நின்றே தொழுகிறார்கள். இமாம் எங்கே நிற்பார் என்று தெரியுமா? முதல் வரிசையில் கூட நிற்க மாட்டார். மதாஃபுக்கு வெளியே பல வரிசைகளுக்கு பின் தனக்கு முன் நின்று தொழும் மனிதரின் முதுகை நோக்கி தொழுகை நடத்துவார். கமிட்டியினர் ஹஜ்ஜுக்கு உம்ராவிற்கோ சென்றால் கஅபாவிற்கு அருகில் மதாஃபில் நின்று தொழ ஆசையே படமாட்டார்கள் போலும். மஃதாபிற்கு வெளியே இமாமிற்கு பின்னர் (வட்ட) வரிசையில் நின்று தொழுவார்கள் போலும்.


மேலும் கமிட்டியினர் கிப்லா மாற்றதையும் நாளின் துவக்கத்தை சேர்த்தே விளங்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். கிப்லாவிற்கும் நாள் துவங்கும் இடத்திற்கும் என்ன தொடர்பு. உலகில் எல்லா வினாடியிலும் கிப்லாவை நோக்கி எதாவது ஒரு பகுதியினர் தொழுகை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் மாதத்தையும் நாளையும் துவங்கும் இடத்தை இறைவனின் அத்தாட்சி என கூற வேண்டும் என்பதற்காக அங்கேதான் கிப்லா மாற்றம் நிகழ்கிறது என்று கூறுவது இவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்களா அல்லது அறியாமையின் வெளிப்பாடா?


“நமக்கு அல்லாஹ் முன்னோக்கும் திசையாக கஃபாவை கிப்லாவாக (Meridian) ஆக்கி தொழுகைக்காக அந்த கஃபாவின் திசையையே முன்னோக்குமாறு கட்டளையிட்டுள்ளான். அவ்வாறு ஆக்கித் தந்ததால்தான் கீழ்த்திசை நாடுகள், மேல்திசை நாடுகள் என்றெல்லாம் நம்மால் தற்போது கூற முடிகின்றது.” என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்


பூமியின் வடக்கு முனையும் தேற்குமுனையும் பூமி சுழல அச்சாக செயல் படுகின்றன. எனவே வடக்கு மற்றும் தெற்கு திசைகள் மாறாதவை. ஆனால்உருண்டையான உலகத்தில் கிழக்கு திசை இந்த இடத்தில ஆரம்பித்து இங்கே முடிவடைகிறது என்றோ மேற்கு திசை இந்த இடத்தில ஆரம்பித்து இங்கே முடிவடைகிறது என்றோ கூற முடியாது. ஒரு கோடு எங்கே தொடங்குகிறது என்று சொல்லலாம். ஒரு வட்டம் எங்கே தொடங்குகிறது என்று சொல்ல முடியுமா? உருண்டையான உலகத்தில் கிழக்கு இங்கே தொடங்குகிறது என்று ஒரு இடத்தை காட்டமுடியாது. அப்படியானால் மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், கிழகத்திய நாடுகள் என்று அழைக்க காரணம் என்ன? இந்த பெயர்கள் அனைத்தும் மரபு (CONVENTIONAL) வழிப்பெயர்களே. தட்டையான வரைபடத்தில் அமேரிக்கா மேற்கிலும் ஜப்பான் கிழக்கிலும் துபை மத்தியிலிருந்து கிழக்கிலும் இருக்கும். இப்படி பெயர்வர காரணம் தட்டையான வரைபடத்தை மரபு வழியாக பயன்படுத்தியதே.


துபையை மத்திய கிழக்கு நாடு என்கிறோம். ஆனால் துபை இந்தியாவுக்கு எத்திசையில் உள்ளது என்று வினவினால் யாரும் கிழக்கில் உள்ளது என்று விடையளிக்க மாட்டார்கள். மேற்கே உளது என்றே விடை அளிப்பர். அதேபோல் கிழக்கு நாடான ஜப்பானுக்கு கிழக்கே அமெரிக்க உள்ளது. மேற்கு நாடான அமெரிக்காவுக்கு மேற்கே ஜப்பான் உள்ளது.


கிப்லா என்பது ஒன்றில் மேற்கு திசையாக இருக்கும் அல்லது கிழக்கு திசையாக இருக்கும் என்றே விளங்கி வைத்துள்ளனர். ஈராக், சிரியா, துருக்கி, ஜார்ஜியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் கிப்லா மிகச்சரியாக தெற்கு திசையில் அமைந்துள்ளது. எரித்ரியா, எதியோபியா, கென்யா, மடகாஸ்கர், அலாஸ்கா, கனடா  போன்ற நாடுகளின் பகுதிகளில் கிப்லா மிகச்சரியாக வடக்கு திசையில் அமைந்துள்ளது. இதை விட சிறந்த உதாரணம் மதீனா மாகாணத்தின் சில பகுதிகளில் கிப்லா மிகச்சரியாக தெற்கு திசையில் உள்ளன.


மேலும் அதிக விளக்கங்களுடனும் விஞ்ஞான கணக்குகளுடனும் எது சரியான கிப்லா? எனும் கட்டுரையை வாசிக்கவும். http://hafsa13.blogspot.com/2015/09/hijiri-committee-qibla.html


நாம் மேற்கொண்ட கமிட்டியினரின் கிப்லா விளக்கவுரையின் ஆய்வில் தெரிந்து கொண்டவைகள்.


1. கமிட்டியினர் கஅபாவை முன்நோக்க சொல்லவில்லை. கஅபா இருக்கும் தீர்க்க ரேகையை முன்நோக்க சொல்கிறார்கள். இது அவர்களின் கட்டுரையின் தலைப்பிலிருந்து விளங்கிவிடுகிறது. மேலும் முஸ்லிம்கள் முன்னோக்கும் தீர்க்க ரேகை என பல முறை எழுதியுள்ளனர். அவர்கள் தேதிக்கோட்டில் முஸ்லிம்கள் முதுகு காட்டி தொழுகிறார்கள் என்று வாதிடுவதும் இவர்கள் ஒரு தீர்க்க ரேகையைதான் முன்நோக்க சொல்கிறார்கள் என்பது தெளிவாகிறது. திசை தொழு துலுக்கர் எனும் பாரதியின் கூற்றை மெய்யாக்குகிறார்கள் போலும்.


2. கிப்லா என்பது கஅபாவின் தீர்க்க ரேகையை முன்னோக்குவது என்று சொன்னது போல கிப்லா மாற்றம் நிகழ்வதும் ஒரு தீர்க்க ரேகை. அதுதான் தேதிக்கோடு. IDL இறைவனின் அத்தாட்சி என்று நிறுவுவதற்காக இவர்கள் சொல்லும் 6 காரணங்களில் ஓன்று பொய்யாகிறது.


3. IDLஐ மையமாக வைத்தே கிப்லாவை விளங்குகின்றனர். “கிப்லாவை நிர்ணயம் செய்யும் இடம் கிப்லாவின் டைரக்சனை நேர்த்தியாக வரையறுக்கும் இடம்தான் IDL” என்று வீடியோவில் கூறுவது இவர்களுக்கு கிப்வை தவறாக விளங்கியுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது


4. கிப்லாவின் எதிர்முனையை 140W இலிருந்து 180Wக்கு மாற்றியதால் இவர்கள் இதற்கு இடைப்பட்ட ஊரில் இருக்கும் மக்களின் தொழுகைகளை பாழாக்க முயற்சிக்கின்றனர்.


இந்த கட்டுரை கிடைக்கபெற்ற உடன் கமிட்டியினர் செய்ய வேண்டியவை.


1. சுய விருப்பு வெறுப்பின்றி சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். கிப்லாவை குறித்து நாங்கள் செய்துவந்த பிரசாரம் அறியாமையினால் நிகழ்ந்தது என ஒப்புக்கொண்டு அதை சரி செய்வதுடன் பிரச்சாரமும் செய்ய வேண்டும்.


2. ஏற்கனவே கிரிபாற்றி முஸ்லிம்களுக்கு கடிதம் எழுதியது போல இவர்களால் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள முஸ்லிம்களை உடனடியாக நேரில் சென்று சந்தித்து உண்மையை விளக்க வேண்டும்.


3. IDL இறைவனின் அத்தாட்சி என்று சொல்லுவதற்கான 6 காரணங்களில் ஓன்று பொய்யாகிவிட்டது. இதை ஒப்புக்கொள்ள வேண்டும். மற்ற ஐந்தும் பொய்யென நிறுவும் கமிட்டியினரின் தேதிக்கோடு! எனும் கட்டுரையை வாசிக்கவும்


இதை வாசிக்கும் முஸ்லிம்களுக்கு.
1. தொழுகையின் முக்கிய அம்சமான கிப்லா என்றால் என்னவென்றே தெரியாத கமிட்டியினரின் ஆய்வுகள் எப்படி இருக்கும் என்று சிந்தித்துக்கொள்ளுங்கள்.

2. மேலே குறிப்பிட்ட 140W இலிருந்து 180Wக்குள் உள்ள நாடுகளின் மக்கள் தவறாக கிப்லாவை நோக்கி தொழுதுகொண்டிருந்தால் அவர்களின் சரியான கிப்லாவை அறிவுறுத்த வேண்டும்.