Wednesday 1 July 2015

முட்டாளாக்கும் சவுதி பிறைகள்!

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
பிறை தான் நாட்காட்டி என்பதை முஸ்லிம் சமூகம் மாற்றுக்கருத்தின்றி ஒப்புக்கொண்டுள்ளது எனினும் அந்த பிறையை முடிவு செய்வதில் பல்வேறு கோட்பாடுகள் நிலவுகின்றன.  முக்கியமாக தமிழகத்தில் ஹிஜ்ரி கமிட்டி, சவுதி பிறை, கேரளா பிறை மற்றும் தமிழ்நாடு பிறை ஆகிய பிறை கோட்பாடுகள் உள்ளன. இதில் அதிகப்படியாக பின்பற்றப்படுவது சவுதி பிறை. இதை பின்பற்றுவோர் சவுதியில் இருந்து வரும் பிறை அறிவிப்புக்கு நள்ளிரவு வரை காத்திருந்து நோன்பு நோற்றும் பெருநாள் கொண்டாடியும் வருகின்றனர்.
சவுதியில் பிறை பார்க்கப்படுவதில்லை அவர்கள் முன்னரே அச்சிட்ட நாட்காடியைத்தான் பின்பற்றுகிறார்கள் என பல முறை பலராலும் கூறப்பட்டாலும் ஆதாரங்களுடன் தமிழில் ஒரு ஆக்கம் வரவில்லை எனவே கருதுகிறேன். என்னால் முடிந்த அளவு கடந்த ஆண்டுகளின் சவுதி பிறை அறிவிப்பை அலசி இங்கே உங்களுக்குக்காக தந்துள்ளேன்.
அமாவாசை முடிந்து வரும் முதல் பிறை கண்ணுக்கு தெரிய வேண்டும் எனில் அது கீழ்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரவேண்டும்.
§. சூரியன் மறையும் போது, சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் கோணம் 12 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (விலகல் கோணம்)  (Elongation)
§. சூரியன் மறையும் போது, பார்ப்பவரின் தொடுவானத்திலிருந்து சந்திரன் 10டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (எழுச்சிக்கோணம்) Moon Altitude)
§. குறைந்த பட்சம் பிறை 1% ஒளியூட்டப்பட்டு இருக்க வேண்டும். (Illumination)
மேலுள்ள கணித வரையறைகளை எளிமையான முறையில் கீழ்கண்டவாறு கூறலாம்
§. பிறை எதிர்பார்க்கப்படும் ஊரில் பிறையின் வயது 20மணிநேரத்தை தாண்டி இருக்க வேண்டும். (Moon Age)இது சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் விலகல் கோணத்திற்கு இணையானதாகும். எனினும் எல்லா மாதங்களிலும் 20மணி நேரத்தில் சந்திரன் 12டிகிரி விலகி விடாது. சில மாதங்களில் 18மணி நேரத்தில் விலகி விடும் சில மாதங்களில் 26மணி நேரம் கூட ஆகலாம். சந்திரன் மற்றும் பூமியின் நீள்வட்ட பாதைகளே இதற்கு காரணம். எனவே பிறையின் வயதை ஒரு துல்லியமான காரணியாக எடுக்கக் இயலாது. எனினும் சாதாரண மக்களின் எளிமையான புரிதலுக்காக இவ்வாறு விளக்குகிறோம் )
§. சூரியன் மறைந்து குறைந்தது 48 நிமிடங்களுக்கு பின் சந்திரன் மறைய வேண்டும். (Moon lag time.) ( இது பார்ப்பவரின் தொடுவானத்திலிருந்து சந்திரன் இருக்கும் கோணத்திற்கு இணையானதாகும். )
மேலுள்ள வரையறைகளுக்குள் பிறை வராத நிலைமையில் பிறை பார்த்ததாக தகவல் வந்தால் அது வடிகட்டப்பட்ட பரிசுத்த பொய் என்று முடிவு செய்து விடலாம்.
சவுதியில் பிறை பார்த்ததாக அறிவிக்கப்படும் அந்த நாளில் பிறையின் வயதையும் சந்திர சூரிய மறைவுகளையும் மிக துல்லியமாக கணக்கிட்டுவிடலாம். அப்படி கணக்கிட்டு கடந்தகாலத்தில் வெளியான றமளான், ஷவ்வால் & துல் ஹஜ் மாதங்களின் பிறை அறிவிப்புகளை மட்டும் ஆய்வு செய்து இங்கே தந்துள்ளேன்.
ஷவ்வால் 1429
அமாவாசை (புவிமைய சந்திப்பு)  நிகழும் நேரம்: Monday, September 29, 2008 at 8:12 UT
திங்கள் கிழமை பிறை பார்க்கப்பட்டதால் செவ்வாய் 30 செப்டம்பர் 2008 தினத்தை பெருநாளாக சவுதி அரசு அறிவித்தது. திங்கள் கிழமை சூரிய மறைவின் பொது பிறையின் வயது வெறும் 8மணி நேரம். அன்று சூரியன் மறைவதற்கு முன்பாகவே சந்திரன் மறைந்து விட்டது. முதல் பிறையின் பிரகாசம் 0.23% மிகவும் குறைவாக இருப்பதால் சூரிய வெளிச்சத்தில் அது நிச்சயமாக கண்ணுக்கு தெரியாது.  சூரியன் மறைந்து அடிவானின் வெளிச்சம் மறைவதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அதன் பிறகும் சந்திரன் வானில் இருந்தால் மட்டுமே பார்க்க இயலும். அனால் சவுதியில் பிறை பார்த்ததாக சொல்லப்பட்ட திங்கள் கிழமை சூரியன் மறைவதற்கு முன்பாகவே சந்திரன் மறைந்து விட்டது. வானில் இல்லாத பிறையை சவுதிகள் எப்படி பார்த்தார்களோ?
ஆதாரம் கீழே!
- SAUDI ARABIA Makkah, Long: 39:49:31.0, Lat: 21:25:22.0, Ele:304.0, Zone:3.00
- Conjunction Time: 29/09/2008 CE, 10:03 LT
- Sunset:  18:13 LT                       Moon Age:   +08H 10M
- Moonset: 18:07 LT                       Moon Lag Time: -00H 06M
- Moon Altitude: -02°:46':14"          
- Elongation:  +05°:29':49"
- Illumination:   00.23 %              Horizontal Parallax: +00°:56':14"
றமளான் 1431
அமாவாசை (புவிமைய சந்திப்பு)  நிகழும் நேரம்: August 10, 2010 (Tuesday) at 3:08 UT.
ஆகஸ்ட் 10 2010 அன்று சூரிய மறைவின்போது பிறையின் வயது 14மணி 25நிமிடம் மட்டுமே. சூரியன் மறைந்து 11நிமிடங்களில் பின் சந்திரன் மறைந்து விட்டது. இந்த 0.49% இளம் பிறையை தொலை நோக்கியால் கூட பார்க்க இயலாது. ஆனால் சவுதி அரசு அன்று பிறை தெரிந்ததாகவும் மறுநாள் றமளான் தொடங்குவதாகவும் அறிவித்தது.
- SAUDI ARABIA Makkah, Long: 39:49:31.0, Lat: 21:25:22.0, Ele:304.0, Zone:3.00
- Conjunction Time: 10/08/2010 CE, 04:33 LT
- Sunset:  18:57 LT                       Moon Age:   +14H 25M
- Moonset: 19:08 LT                       Moon Lag Time: +00H 11M
- Moon Altitude: +00°:57':25"          
- Elongation:  +08°:02':56"
- Illumination:   00.49 %              
துல் ஹஜ் 1431
அமாவாசை (புவிமைய சந்திப்பு)  நிகழும் நேரம்:: 06/11/2010 CE, 04:52 UT
6 நவம்பர் சனிக்கிழமை 2010 அன்று பிறை பார்க்கப்பட்டதாகவும் மறுநாள் ஞாயிறு துல் ஹஜ் முதல் பிறையாகவும் சவுதி அறிவித்தது.
6 நவம்பர் சனிக்கிழமை 2010 அன்று சூரியன் மறைவின்போது பிறையின் வயது 9மணி  53 நிமிடங்களே. சூரியன் மறைந்து ஐந்தே நிமிடத்தில் சந்திரன் மறைந்து விட்டது.
- SAUDI ARABIA Makkah, Long: 39:49:31.0, Lat: 21:25:22.0, Ele:304.0, Zone:3.00
- Conjunction Time: 06/11/2010 CE, 06:06 LT
- Sunset:  17:45 LT                       Moon Age:   +11H 39M
- Moonset: 17:50 LT                       Moon Lag Time: +00H 05M
- Moon Altitude: -00°:26':44"          Moon Azimuth: +247°:03':56"
- Relative Altitude: +01°:00':32"      Elongation:  +06°:18':44"
- Illumination:   00.30 %              Horizontal Parallax: +00°:59':17"
ஷவ்வால் 1432
அமாவாசை (புவிமைய சந்திப்பு)  நிகழும் நேரம்:  August 29, 2011 (Monday) at 3:04 UT.
ஆகஸ்ட் 29 திங்கள் 2011, சூரியன் மறைந்து வெறும் 4நிமிடங்களில் மறைந்த சந்திரனை சவுதி அரசு பார்த்ததாக மறுநாள் நோன்பு பெருநாள் கொண்டாடியது.
- SAUDI ARABIA Makkah, Long: 39:49:31.0, Lat: 21:25:22.0, Ele:304.0, Zone:3.00
- Conjunction Time: 29/08/2011 CE, 04:28 LT
- Sunset:  18:43 LT                       Moon Age:   +14H 15M
- Moonset: 18:47 LT                       Moon Lag Time: +00H 04M
- Moon Altitude: -00°:35':08"          Moon Azimuth: +271°:56':14"
- Relative Altitude: +00°:51':49"      Elongation:  +08°:42':20"
- Illumination:   00.58 %              Horizontal Parallax: +01°:00':36"
றமளான் 1433
அமாவாசை (புவிமைய சந்திப்பு)  நிகழும் நேரம்: July 19, 2012 (Thursday) at 4:24 UT.
வியாழன், ஜூலை 19 2012 அன்று சுதைர் எனும் பகுதியில் பிறை தெரிந்ததாக சவுதி அரசு அறிவித்தது. அன்றைய தினம் சுதைரில் சூரியன் மறைவதற்கு 13 நிமிடங்களுக்கு முன்பாகவே சந்திரன் மறைந்துவிட்டது.
- SAUDI ARABIA Sudair, Long: 23:58:32.0, Lat: 47:06:59.0, Ele:730.0, Zone:3.00
- Conjunction Time: 19/07/2012 CE, 05:57 LT
- Sunset:  21:19 LT                       Moon Age:   +15H 22M
- Moonset: 21:06 LT                       Moon Lag Time: -00H 13M
- Moon Altitude: -03°:41':45"          Moon Azimuth: +295°:25':15"
- Relative Altitude: -01°:54':34"      Elongation:  +08°:19':16"
- Illumination:   00.53 %              Horizontal Parallax: +00°:56':11"
ஷவ்வால் 1434
அமாவாசை (புவிமைய சந்திப்பு)  நிகழும் நேரம்: August 6, 2013 (Tuesday) at 21:51 UT.
சூரியன் மறைந்து 11நிமிடத்தில் மறைந்த 18H 30M வயது பிறையை பார்த்ததாக சவுதி அரசு பெருநாளை அறிவித்தது
- SAUDI ARABIA Makkah, Long: 39:49:31.0, Lat: 21:25:22.0, Ele:304.0, Zone:3.00
- Conjunction Time: 07/08/2013 CE, 00:29 LT
- Sunset:  18:59 LT                       Moon Age:   +18H 30M
- Moonset: 19:10 LT                       Moon Lag Time: +00H 11M
- Moon Altitude: +01°:01':19"          Moon Azimuth: +278°:51':29"
- Relative Altitude: +02°:28':12"      Elongation:  +09°:33':15"
- Illumination:   00.70 %              Horizontal Parallax: +00°:54':57"
துல் ஹஜ் 1434
அமாவாசை (புவிமைய சந்திப்பு)  நிகழும் நேரம்: October 5, 2013 (Saturday) at 0:35 UT.
சூரியன் மறைந்து 15நிமிடத்தில் மறைந்த 14H 33M வயது பிறையை பார்த்ததாக சவுதி அரசு பெருநாளை அறிவித்தது
- SAUDI ARABIA Makkah, Long: 39:49:31.0, Lat: 21:25:22.0, Ele:304.0, Zone:3.00
- Conjunction Time: 05/10/2013 CE, 02:28 LT
- Sunset:  18:07 LT                       Moon Age:   +15H 40M
- Moonset: 18:22 LT                       Moon Lag Time: +00H 15M
- Moon Altitude: +01°:53':04"          Moon Azimuth: +258°:48':55"
- Relative Altitude: +03°:20':11"      Elongation:  +07°:14':41"
- Illumination:   00.40 %              Horizontal Parallax: +00°:57':50
ஷவ்வால்1435
அமாவாசை (புவிமைய சந்திப்பு)  நிகழும் நேரம்: Saturday July 26, 2014 at 22:42 UT.
மீண்டும் சுதைரில் சூரியன் மறைவதற்கு  10 நிமிடத்திக்கு முன் மறைந்த பிறையை பார்த்ததாக சவுதி அரசு பெருநாளை அறிவித்தது
- SAUDI ARABIA Sudair, Long: 23:58:32.0, Lat: 47:06:59.0, Ele:730.0, Zone:3.00
- Conjunction Time: 27/07/2014 CE, 01:20 LT
- Sunset:  21:10 LT                       Moon Age:   +19H 50M
- Moonset: 21:01 LT                       Moon Lag Time: -00H 10M
- Moon Altitude: -03°:17':35"          Moon Azimuth: +290°:58':31"
- Relative Altitude: -01°:30':24"      Elongation:  +10°:05':57"
- Illumination:   00.78 %              Horizontal Parallax: +00°:53':56"
துல் ஹஜ் 1435
அமாவாசை (புவிமைய சந்திப்பு)  நிகழும் நேரம்: Wednesday September 24, 2014 at 6:14 UT
சூரியன் மறைந்து 5நிமிடத்தில் மறைந்த 9H 4M வயது பிறையை பார்த்ததாக சவுதி அரசு பெருநாளை அறிவித்தது
- SAUDI ARABIA Makkah, Long: 39:49:31.0, Lat: 21:25:22.0, Ele:304.0, Zone:3.00
- Conjunction Time: 24/09/2014 CE, 07:21 LT
- Sunset:  18:18 LT                       Moon Age:   +10H 57M
- Moonset: 18:23 LT                       Moon Lag Time: +00H 05M
- Moon Altitude: -00°:14':05"          Moon Azimuth: +266°:04':34"
- Relative Altitude: +01°:12':59"      Elongation:  +04°:02':15"
- Illumination:   00.12 %              Horizontal Parallax: +00°:54':51"
ஷவ்வால் 1436:
Sunset: 19:09
Moon Age: +16H 03M
Moonset: 19:21
Moon Lag Time: +00H 12M
Moon Altitude: +01°:06':28"
Elongation: +08°:06':38"
Illumination: 00.50 %  
தொலைநோக்கியால் கூட பார்க்க இயலாத பிறையை பார்த்ததாக சவுதி அரசு இத்தனை நாளும் மக்களை ஏமாற்றி வருகிறது. இதை நாம் எத்தனை முறை கூறினாலும் மக்கள் நம்ப ஆயத்தமாக இல்லை. இதே நிலை தான் மிக்க கேரளா பிறைகளுக்கும். பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாட்களில் பிறை பார்க்கப்பட்டதாக கேரளாவிலிருந்து அறிவிப்பு வரும். அதை ஏற்று நோன்பு பிடித்து பெருநாள் கொண்டாடும் தமிழக மக்களும் இருக்கிறார்கள்.
இது பரவாயில்லை. பல மாதங்களில் பிறை கண்ணுக்கு தெரியாததால் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்கிறோம் என சவுதி அரசு அறிவிக்கும். அப்படியெனில் 30ஆக பூர்த்திசெய்யப்பட்ட அந்த நாளின் சூரிய மறைவின் பின் நிச்சயமாக பிறை கண்ணுக்கு தெரியுமென்பது நிறுவப்பட்ட விஞ்ஞானமாகும். ஆனால் சவுதி 30ஆக பூர்த்தி செய்த மாதங்களின் இறுதியில் கூட பிறை கண்ணுக்கு தெரிய வாய்ப்பிருப்பதில்லை. இன் ஷா அல்லாஹ் அத்தகைய அறிவிப்புகளின் பட்டியல் விரைவில்....
சவுதி இப்படி அறிவிப்பதற்கான  காரணத்தையும்  நாம் அறிந்து கொள்ள வேண்டும்:
இவர்தான்  அப்துல்லா  அல் குதைரி.  சந்திரன் மறைந்த பின்பும் பிறையை பார்க்கும்  சுதைர் பகுதியை  சேர்ந்த சவுதிக்காரர் இவர்தான். Telescopeஇல் பார்க்க முடியாத பிறையை கூட வெறும் கண்ணால் பார்ப்பார். 10வருடமாக இவரது ஷஹாதாவை சவுதி அரசு ஏற்று வருகிறது
சவுதியை பொறுத்தவரை உம்மல் குறா எனும் காலண்டர் தான் அவர்களது அரசு அலுவலக நாட்காட்டியாவும் உள்ளது. பிறையை பார்த்து மாதத்தை முடிவு செய்தால் அந்த காலண்டரை வருடத்திற்கு 3 தடவை மாற்ற வேண்டி வரும். இது பல்வேறு அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தும். முன் தேதியிட்ட எல்லா அரசு அலுவல்களும் பாதிக்கப்படும். சாப்ட்வேர்களில் பல மாறுதல்களை செய்ய வேண்டி வரும். எனவே உம்மல் குறாவில் என்று நோன்பு வருகிறதோ என்று பெருநாள் வருகிறதோ  அன்றே  அதை செயல் படுத்துவதுதான்  அரசாங்கத்திற்கு  உகந்தது. பிறை பார்ப்பதுதான் நபி வழி என்று ஏற்கனவே சவுதி சொல்லியும் விட்டது. எனவே இந்த இரண்டிற்கும் முரண்படாமல் செல்ல வேண்டுமெனில் உம்மல் குறா நாள்காட்டியில் என்று மாதம் துவங்குகிறதோ அன்று பிறை தெரிந்தே ஆகவேண்டும். அதற்காக சவுதியே நியமித்த ஒரு ஆள்தான் இவர் என்று நம்மால் ஊகிக்க முடியும்.
துல் ஹஜ் 1436:
சவுதி காலண்டர் படி ஹஜ் பெருநாள் 23 செப்டம்பர்  2௦15. சவுதி எப்போதும் போல பிறையை பார்க்காது காலண்டரை பின்பற்றும் என்ற நம்பிக்கையில் 23 செப்டம்பர்  அன்றே விடுமுறைக்கு தாய்நாட்டிற்கு செல்லும் பயணங்களையும் நாம் முடிவு செய்திருந்தோம். நம்மை மகிழ்ச்சி அளிக்கும் விதமாக 23 செப்டம்பர்  பெருநாளாக சவுதி அறிவித்ததாக பத்திரிக்கை செய்தியும் வந்தது.
ஆனால் சில மணி நேரங்களிலேயே பிறை பார்க்கப்படாததால் மாதத்தை 3௦ ஆக முழுமை செய்து 24 செப்டம்பர்  பெருநாள் என்று அதிரடியாக சவுதி அறிவித்தது. நம் விடுமுறை திட்டங்களை சவுதி மாற்றியது என்றாலும் பிறையை கண்ணால் பார்த்து மாதத்தை துவங்கும் முடிவுக்கு சவுதி வந்ததை நினைத்து நமக்கு மகிழ்ச்சியே
முஹர்ரம் 1436:
இந்த மாதமும் பிறை கண்ணுக்கு தெரியாததால் மாதத்தை முழுமைப்படுதுவதாக அறிவித்து சவுதி நபி வழியை பேணியது.
ரமலான் 1437:
சென்ற துல்ஹிஜ்ஜாவின் பிறை அறிவிப்பையும் முஹர்ரத்தின் பிறை அறிவிப்பையும் பார்த்து சவூதி அரசு திருந்திவிட்டதாக மகிழ்சியடைந்தோம். வரும் காலங்களில் பிறையைப் பார்த்து அறிவிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் உம்முல்குறாவையே பற்றிப்பிடித்துள்ளனர்.
Sunset:  19:04 LT                       
Moon Age:   +13H 04M
Moonset: 19:26 LT                       
Moon Lag Time: +00H 22M

தொலைநோகியால் கூட பார்க்க முடியாத பிறையை சவூதி அரசு பார்த்ததாக ரமளானின் நோன்பை அறிவித்தது