Saturday 18 July 2015

சவுதியை கண்மூடி பின்பற்றும் ஜாக்

அஸ்ஸலாமு அலைக்கும்

பிறை பார்க்கப்பட்டதாக உலகில் எங்கிருந்து அறிவிப்பு வந்தாலும் ஏற்று செயல் படுத்துவோம் என கூறும் ஜாக்கிகள் இன்று வரை சவுதியை தவிர வேற எந்த நாட்டு பிறை அறிவிப்பையும் பின்பற்றியதில்லை. ஆனால் அந்த சவூதி அரசோ என்றுமே பிறை பார்த்ததில்லை. சவுதியில் ஏற்கனவே கணக்கிட்டு வைத்துள்ள உம்மல் குறா எனும் (காலண்டர்) பிறையைதான் பின்பற்றுகிறார்கள். பிறை கண்ணுக்கு தெரியாவிட்டாலும் அமாவாசையன்று சூரியன் மறைந்த பின்பு வானில் சந்திரன் இருக்கிறதா என்று மட்டுமே கணக்கிடும் ஒரு முறையை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது அந்த காலண்டர். 29வது பகல் பொழுது முடிந்து வரும் இரவில் பிறை தெரியாவிட்டாலும் அந்த காலண்டரில் முதல் பிறை எனில் சவுதியில் எங்கோ பிறை பார்க்கப்பட்டது என்ற ஒரு பொய்யான அறிவிப்பை சவுதி அரசாங்கம் வெளியிடும். சவுதியை பின்பற்றும் பல நாடுகளும் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் ருக்கும் ஜாக்கிகள்&சலபிகள் அந்த அறிவிப்பை கண்ணை மூடிக்கொண்டு ஏற்கின்றனர். இந்த ஈகை பெருநாளிலும் சவூதி அதே திருட்டுத்தனத்தை செய்தது. அதை கீழே விரிவாக பார்ப்போம்.

அமாவாசை முடிந்து வரும் முதல் பிறை கண்ணுக்கு தெரிய வேண்டும் எனில் அது கீழ்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரவேண்டும்.

§. சூரியன் மறையும் போது, சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் கோணம் 12 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (விலகல் கோணம்)  (Elongation)
§. சூரியன் மறையும் போது, பார்ப்பவரின் தொடுவானத்திலிருந்து சந்திரன் 10டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (எழுச்சிக்கோணம்) (Moon Altitude)
§. குறைந்த பட்சம் பிறை 1% ஒளியூட்டப்பட்டு இருக்க வேண்டும். (Illumination)

மேலுள்ள கணித வரையறைகளை எளிமையான முறையில் கீழ்கண்டவாறு கூறலாம்

§. பிறை எதிர்பார்க்கப்படும் ஊரில் பிறையின் வயது 20மணிநேரத்தை தாண்டி இருக்க வேண்டும். (Moon Age) ( இது சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் விலகல் கோணத்திற்கு இணையானதாகும். எனினும் எல்லா மாதங்களிலும் 20மணி நேரத்தில் சந்திரன் 12டிகிரி விலகி விடாது. சில மாதங்களில் 18மணி நேரத்தில் விலகி விடும் சில மாதங்களில் 26மணி நேரம் கூட ஆகலாம். சந்திரன் மற்றும் பூமியின் நீள்வட்ட பாதைகளே இதற்கு காரணம். எனவே பிறையின் வயதை ஒரு துல்லியமான காரணியாக எடுக்கக் இயலாது. எனினும் சாதாரண மக்களின் எளிமையான புரிதலுக்காக இவ்வாறு விளக்குகிறோம் )
§. சூரியன் மறைந்து குறைந்தது 60 நிமிடங்களுக்கு பின் சந்திரன் மறைய வேண்டும். (Moon lag time.) ( இது பார்ப்பவரின் தொடுவானத்திலிருந்து சந்திரன் இருக்கும் கோணத்திற்கு இணையானதாகும். )

மேலுள்ள வரையறைகளுக்குள் பிறை வராத நிலைமையில் பிறை பார்த்ததாக தகவல் வந்தால் அது வடிகட்டப்பட்ட பரிசுத்த பொய் என்று முடிவு செய்து விடலாம். இப்போது ஷவ்வால் 1க்கான பிறை ஆங்கில ஆண்டு 16 July 2015 வியாழக்கிழமை சவுதியில் பார்க்கப்பட்டதாக அந்த அரசு பிறை தகவல் வெளியிட்டது. இப்போது இதன் உண்மைத்தன்மையை அலசுவோம்.

மக்கா நகரில் சூரியன் மறையும்போது சந்திரனின் மேற்குறிப்பிடப்பட்ட அளவைகள்:

Sunset: 19:09
Moon Age: +16H 03M
Moonset: 19:21
Moon Lag Time: +00H 12M
Moon Altitude: +01°:06':28"
Elongation: +08°:06':38"
Illumination: 00.50 %  

பிறையின் வயது 16மணி மட்டுமே. சூரியன் மறைந்து 12நிமிடத்தில் சந்திரன் மறைகிறது. சூரியன் மறையும் போது சந்திரனின் எழுச்சி வெறும் 1டிகிரி மட்டுமே. சந்திரன் வெறும் அரை சதவிகிதமே ஒளியூட்டப்பட்டுள்ளது.

மக்கா நகரை மட்டும் ஏன் எடுக்கிறீர்கள் வேறு நகரங்களில் பிறை தெரிய வாய்ப்பில்லையா என வினவினால், எந்தா நாடக இருந்தாலும் அந்த நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள ஊரில் பிறை தெரியும் வாய்ப்பு அதிகம். ஏனெனில் மேற்கு நோக்கி செல்ல செல்ல பிறை தெரியும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. அந்த அடிப்படையில் சவுதியின் மேற்கு எல்லையில் உள்ள தபூக் நகரையும் ஆய்வுக்கு எடுப்போம். தபூக் நகருக்கான அளவைகள்.

Sunset: 19:38
Moon Age: +16H 27M
Moonset: 19:46
Moon Lag Time: +00H 08M
Moon Altitude: -00°:09':10"
Elongation: +08°:24':32"
Illumination: 00.54 %

இந்த அளவைகளில் பிறை இருக்கும் எனில் அந்த பிறை தொலைநோக்கியால் பார்த்தல் கூட தென்படாது. மக்கா மட்டுமல்ல சவுதியின் எந்த பகுதியிலும் தொலை நோக்கியால் கூட பிறை காண இயலாதென்பது தெள்ளதெளிவாக நிரூபணம் ஆகிறது. எனினும் சவூதி அரசாங்கம் பிறை பார்க்கப்பட்டதாக அறிவிப்பு செய்தது.

இதை நாம் வெளியிட்டபோது எதோ நவீன கருவி மூலம் சவுதியில் பிறை பார்க்கப்பட்டதாக ஒரு தகவலும் வந்தது.

CCD எனும் ஒரு கருவி உள்ளது. இந்த கருவியின் மூலம் சூரியன் உச்சத்தில் பிரகாசிக்கும் நண்பகலில் கூட புதிதாக பிறந்த பிறையை பார்த்து விடலாம். தொலைநோக்கியில் நம் கண்களால் நேரடியாக பிறையை பார்ப்போம். மிக மெல்லிய பிறையை பார்க்க நம் கண்களுக்கு சக்தி இல்லாதாதால் தொலைநோக்கி மூலம் அதை அதிகப்படுத்துவதால் பிறை கண்ணுக்கு தெரியும். தொலைநோக்கியில் பார்க்கும்போது புறக்கண்களால் பார்க்க இயலாத மெல்லிய பிறை ஒளிப்பெருக்கம் செய்யப்பட்டு நம் விழித்திரையில் விழுகிறது. ஆனால் CCD கருவியில் நாம் பார்ப்பது நேரடியாக நமது கண்களால் அல்ல. வானத்தில் இருக்கும் பிறையை பல பில்டர்களை பயன்படுத்தியும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் ஒரு புகைப்படமாக மாற்றி கம்ப்யூட்டர் திரையிலேயே காட்டுகிறார்கள். இதை பார்க்க அந்த கருவியின் தேவையே இல்லையே. வானத்தில் பிறை எப்படி இருக்குமோ அதில் ஒரு மில்லி மீட்டர் அளவு கூட வித்தியாசம் இல்லாமல் அதே போல் நமது செல் பொன் திரைகளில் காட்டும் சாப்ட்வேர்கள் உள்ளனவே. அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்.

CCD கருவியால் பார்க்கப்பட்டாலும் பிறை பார்த்ததாக ஆகிவிடும் என்றால் சென்ற மாதத்தின் முதல் பிறை செவ்வாய் ஜூலை 16ஆம் தேதி சவுதி நேரப்படி சாயங்காலம் 5மணிக்கே பிறந்து விட்டது. இந்த பிறையை அதே CCD  கருவியால் பார்க்க இயலும். சென்ற மாதம் மட்டும் சவுதி செவ்வாய் அன்று கருவியால் பிறை பார்த்து விட்டு புதன் கிழமை நோன்பை ஆரம்பிக்கவில்லை ஏன். 3ஆக பூர்த்தி செய்து ஏன் வியாழக்கிழமை நோன்பை ஏன் ஆரம்பித்தனர். ரமலானுக்கு பிறை பார்ப்பதிலும் ஷவ்வாலுக்கு பிறை பார்பதிலும் ஏன் இந்த ஓர வஞ்சனை.

இதற்கு காரணம் June 16 செவ்வாய்கிழமை பிறை பிறந்தாலும், CCD கேமராவில் அது தெரிந்தாலும், சவுதி அந்த பிறை உம்மால் குரா வின் காலண்டர் வரைமுறைக்கு உட்பட்டு வரவில்லை. எனவே 30ஆக பூர்த்தி செய்தனர். அதே வேளையில் July 16 இல் சவுதியில் தொலைநோக்கிக்கு கூட தென்படாத பிறையை பார்த்ததாக பொய்யாக அறிவித்து தங்கள் உம்மல் குறா நாட்காட்டிக்கு உயிர் கொடுத்தனர்.

உம்மல் குறா நாட்காட்டியை நீங்கள் இங்கே கிளிக் செய்து எடுக்கலாம். கீழே அதன் screen shotஐ இணைத்துள்ளேன். மேலும் இந்த உம்மல் குறா எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்திற்கு சவுதியின் உண்மையான நாட்காட்டி கோட்பாடு எனும் நமது ஆக்கத்தை வாசிக்கவும். இதற்கு முன்னும் சவுதி பிறை பார்த்ததில்லை என்பதற்கு இது போன்ற விஞ்ஞான கணக்குகளுடன் நிரூபிக்கும் ஆக்கம் இங்கே.



சவுதி இப்படி அறிவிப்பதற்கான  காரணத்தையும்  நாம் அறிந்து கொள்ள வேண்டும்:





இவர்தான்  அப்துல்லா  அல் குதைரி.  சந்திரன் மறைந்த பின்பும் பிறையை பார்க்கும்  சுதைர் பகுதியை  சேர்ந்த சவுதிக்காரர் இவர்தான். Telescopeஇல் பார்க்க முடியாத பிறையை கூட வெறும் கண்ணால் பார்ப்பார். 10வருடமாக இவரது ஷஹாதாவை சவுதி அரசு ஏற்று வருகிறது

சவுதியை பொறுத்தவரை உம்மல் குறா எனும் காலண்டர் தான் அவர்களது அரசு அலுவலக நாட்காட்டியாவும் உள்ளது. பிறையை பார்த்து மாதத்தை முடிவு செய்தால் அந்த காலண்டரை வருடத்திற்கு 3 தடவை மாற்ற வேண்டி வரும். இது பல்வேறு அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தும். முன் தேதியிட்ட எல்லா அரசு அலுவல்களும் பாதிக்கப்படும். சாப்ட்வேர்களில் பல மாறுதல்களை செய்ய வேண்டி வரும். எனவே உம்மல் குறாவில் என்று நோன்பு வருகிறதோ என்று பெருநாள் வருகிறதோ  அன்றே  அதை செயல் படுத்துவதுதான்  அரசாங்கத்திற்கு  உகந்தது. பிறை பார்ப்பதுதான் நபி வழி என்று ஏற்கனவே சவுதி சொல்லியும் விட்டது. எனவே இந்த இரண்டிற்கும் முரண்படாமல் செல்ல வேண்டுமெனில் உம்மல் குறா நாள்காட்டியில் என்று மாதம் துவங்குகிறதோ அன்று பிறை தெரிந்தே ஆகவேண்டும். அதற்காக சவுதியே நியமித்த ஒரு ஆள்தான் இவர் என்று நம்மால் ஊகிக்க முடியும்.

http://blog.al-habib.info/id/2014/07/abdullah-al-khudairi-ahli-rukyatul-hilal-arab-saudi/


ஜூலை 8 2013 காலை 9:14 மணிக்கு சுடும் வெயிலில் பிறை பிறந்த அந்த வினாடியில் எடுக்கப்பட்ட புகைப்படம். இது கேமராவில் சாதரணமாக எடுப்பது போன்று எடுக்கப்பட்டதல்ல. சூரிய ஒளியை பல filterகளால் குறைத்து infrared ஒளி மூலம் எடுக்கப்பட்டது. கருப்பு வெள்ளையாக இருக்கும் படத்தை பல digital தொழில் நுட்பங்கள் மூலம் செறிவூட்டப்பட்டு வானத்திற்கு நீல நிறம் செயற்கையாக் வழங்கப்பட்டது.


இந்த புகைபடத்தை THIERRY LEGAULT எனும் வானியல் புகைப்படக்காரர் CCD கருவி கொண்டு எடுக்கும் காட்சி. http://www.astrophoto.fr/new_moon_2013july8.html