Friday 22 July 2016

ஹிஜ்ராவின் கொள்கை என்ன?

ஹிஜ்றா கமிட்டி என்போர் லண்டனில் அமாவாசை என்று நடக்கும் என்று ஆங்கிலக் காலண்டரில் பார்த்து லண்டனில் அதன் மறுநாள் என்ன ஆங்கில நாளோ அந்நாளில் மாதத்தின் முதல் நாளை அனுஷ்டிக்கும் வழக்கம் உடையவர்கள். உதா. லண்டன் நேரப்படி ஆங்கில கலண்டரில் திங்கள் கிழமை இரவு 11:30 க்கு அமாவாசை நடப்பதாக வைத்துக்கொண்டால், ஆங்கில கலண்டர் வழக்கப்படி இரவு 12 மணிக்கு செவ்வாய்கிழமை துவங்கி விடும். இவர்களுக்கு அந்த செவ்வாய்கிழமை மாதத்தின் முதல் நாளாகி விடும். இன்னுமொரு உதாரணம். (ஆங்கிலக் காலண்டரில் நள்ளிரவு 12 மணிக்கு நாள் துவங்கும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.) லண்டன் நேரப்படி புதன் கிழமை இரவு 1:30 மணிக்கு அமாவாசை நடக்கிறது என்றால் அன்று பகல் கடந்து மீண்டும் இரவு 12 மணியாகும்போது ஆங்கில காலண்டரில் வியாழக்கிழமை துவங்கும். இவர்கள் 12 மணிக்கு துவங்கும் அந்த வியாழக்கிழமையில் மாதத்தின் முதல் நாளை அனுஷ்டிப்பார்கள். இதுதான் இவர்களின் காலண்டரின் தத்துவம்.
இதை நீங்கள் சரி பார்க்கவேண்டுமெனில். இவர்களுக்கு லண்டன் நேரத்தில் அமாவாசையைக் கணித்துக்கொடுத்த Fred என்பாரின் இணையதளத்திற்குச் செல்லுங்கள். லிங்க் இதோ http://astropixels.com/ephemeris/phasescat/phases2001.html . ஆங்கில வருடத்தில் அமாவாசை எப்போது நடக்கும் என்பதை new moon எனும் தலைப்பில் லண்டன் நேரத்தில் fred குறிப்பிட்டிருப்பார்.
இவர்களின் காலண்டரையும் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். லிங்க் http://mooncalendar.in/index.php/ta/ta-articles/ta-information/item/469-hijri-calendar-1437
இரண்டையும் மேற்சொன்ன அளவீட்டின்படி ஒப்பிட்டுப்பாருங்கள்.
உதா: ஜனவரி 10 அன்று இரவு ௦1:31க்கு லண்டனில் அமாவாசை. இவர்கள் காலண்டரில் ஜனவரி 11 ரபியுல் ஆகிர் ஆரம்பம்.
மே 6 அன்று இரவு 7:30 க்கு லண்டனில் அமாவாசை. இவர்கள் காலண்டரில் மே 7 ஷஅபான் ஆரம்பம்.
இவர்கள் காலண்டர் எப்படி தயாரிக்கிறார்கள். அதற்கும் குர்ஆன் ஹதீஸுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா எனும் தகவல்களுக்கு இந்த லிங்கை பின்தொடருங்கள் piraivasi.com/2015/10/17.html