Friday 22 July 2016

இரண்டு பற்களுடன் மூக்குடைந்த ஹிஜ்றா!

ஹிஜ்றா கமிட்டி தனது மடமையை, அறியாமையை ஒப்புக்கொண்ட லிங்கிலுள்ள கட்டுரையைப் பற்றி பார்க்கப்போகிறோம்.
வர வர கமுட்டியின் பதில்கள் ரசிர்களைகூட திருப்திப்படுத்துவதில்லை என்றே தோன்றுகிறது. "ஹிஜ்ரி கமிட்டி சொன்னதுதான் சரியானது என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறோம்" என்று கெஞ்சும் அளவுக்கு கட்டுரையாளர் தள்ளப்பட்டுள்ளார். என்னதான் கெஞ்சினாலும் மக்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டனர். என்பதை இவர்களின் கட்டுரையேக் காட்டிவிடுகிறது.
அரபி சிறந்த மொழி என்றோ அரபி தெரிந்தவர்கள், பேசுபவர்கள் சிறந்தவர்கள் என்றோ யாராவது சொல்லியிருந்தால் கட்டுரையாளரின் வாதத்தில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். நாம் யாரும் அவ்வாறு சொல்லவே இல்லை. மாறாக அரபியின் அடிப்படை தெரியாமல் கூகுளையும் விக்கிபீடியாவையும் நம்பி வாழும் அறிஞர் பெருமக்கள் அரபியில் இருக்கும் குர்ஆனையும் ஹதீசையும் அணுகாமல் இருப்பதுதான் சிறந்தது. சிறிதளவேனும் இறையச்சம் இருப்பவன் இந்த வேலைக்கு வரமாட்டான். வேறு எதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்வான்.
23 பத்திகளில் 10 பத்திகள் முழுதும் வழ வழ புராணம் பாடியுள்ளார். ஒரு கட்டுரையில் பாதியும் தேவையற்ற அழுகை. எப்படித்தான் ரசிகர்கள் இதை ரசிக்கிரார்களோ. 13 பத்திகளில் "எங்களுக்கு அரபி தெரியாதுதான். அதனால் நாங்கள் ஆய்வு செய்யக்கூடாதா. அரபி தெரியாமல் எத்தனையோ பேர் ஆய்வு செய்யவில்லையா. நாங்கள் செய்தால் மட்டும் ஏன் இப்படி ரவுண்டு கட்டி குறை கண்டு பிடிக்கிறீங்க"ன்னு அழுது புலம்பியிருக்கிறார். நமக்கே பரிதாபமாக இருக்கிறது! 350 பக்க ஆய்வுநூலில் வேறு எவ்வளவோ பிழைகள் இருக்க இந்த ஸின்னானை மட்டும் நீங்கள் குற்றம் பிடிக்கலாமா என்று சிணுங்குகிறார் பாவம்.
கமிட்டியின் இந்த கட்டுரையாளர் வழக்கம்போல வழவழவென்று கேள்விக்கு தொடர்பில்லாதவைகளை உளறிக்கொட்டிவிட்டு மீசையில் மண் ஒட்டியதை ரசிகர்கள் பார்க்காத விதத்தில் “ஆமா! ஸின்னான் என்றால் இரண்டு பற்கள் என்ற மொழிப்பயர்ப்பு தவறுதான். அதனால எங்களுக்கு அரபி தெரியாதுன்னு ஆகிவிடுமா? ன்னு முடிச்சிருக்கார். இவர் மீசையில் ஒட்டிய மண்ணை துடைப்பது மட்டும் ரசிகர்கள் கண்ணுக்கு தெரியாது. அதற்கு முன்புவரை வழவழத்ததை ஆகா ஓகோ வென ரசிகர்கள் கைதட்டி ரசிப்பார்கள்.
ஸின்னான் என்பதை நாங்கள் தவறாக மொழிப்பெயர்துவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ள எதுக்கு இவ்ளோ பில்டப்பு... ஏழெட்டு இமாம்களை இழுத்து அவர்களெல்லாம் அரபி இல்லை நாங்களும் அரபி இல்லை என்ற ஒப்பீடெல்லாம் தேவையா. அவர்கள் அரபியை கற்றுக்கொண்டு அந்த வேலையை செய்தனர். நீங்களும் கற்றுக்கொண்டு வந்து ஏதாவது முயற்சி செய்யலாமே. அதுவரை வேறு எதாவது தொழில் செய்யுங்கள்.
அபூ ஜஹிலும் அவனது கூட்டாளிகளும்தான் காலநிலையை கணித்து நசிய்யு எனும் குப்ரில் தள்ளும் காலண்டரைப் போட்டனர். நீங்கள் அவனை அடி பிறளாமல் பின்பற்றி காலண்டர் போடுகிறீர்கள். நீங்கள் தான் அபு ஜஹிலை பின்பற்றுபவர்கள்.
அடுத்து அஹில்லா...
ஸின்னானில் மீசையில் தான் மண் ஒட்டியது. அஹில்லா விஷயத்தில் குப்புற விழுந்ததில் முகம் முழுவதுமே மண் ஒட்டிவிட்டது.
“ஆமா! நீங்க சொல்றதெல்லாம் சரிதேன். அஹில்லா பெண்பால் சொல் தான். சூமூ லி ருயதிஹியின் ஹி ஆண்பாலைத்தான் குறிக்கும். இருந்தாலும் இத்தனை நாளா நாங்க அப்படித்தானே சொல்லிட்டு திரிஞ்சோம். எங்களால அதையெல்லாம் மாத்த முடியாது. மாத்தினா இருக்கிற ஒண்ணு ரெண்டு பேரும் ஓடிடுவாங்க. புதுசா நாங்க எதாவது சொல்லி சமாளிப்போம் பாருங்க. எங்களை பின்பற்றும் ரசிகர்கள் உடனே எப்படி விசிலடிப்பாங்கன்னு மட்டும் பாருங்க அப்படின்னு முடிவு பண்ணி கட்டுரையாளர் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் ஒன்றை புதுசா கற்றுக்கொடுக்க முற்படுகிறார். ஹி எனும் ஒருமை ஆண்பால். அது அஹில்லாவை குறிக்காது. இத்தனை நாட்கள் நங்கள் தவறாக சொல்லிவிட்டோம். அது அஹில்லாவையுடைய கமறை குறிக்கிறது என்கிறார் கட்டுரையாளர். அஹில்லா என்ற வார்த்தையை குர்ஆனில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அல்லாஹ் பயன்படுத்துகிறான். ஆனால் கமர் என்ற வார்த்தையை 27 இடங்களில் குர்ஆனில் சொல்கிறான். இந்த இறையச்சமற்ற கட்டுரையாளர் அல்லாஹ் 2:189 இல் கமர் என்று சொல்லாமல் தவறாக அஹில்லா என்று சொல்லிவிட்டான் என்கிறார். 27 இடங்களில் கமர் என்று சொன்ன அல்லாஹ் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இந்த கயவர்கள் மீது முத்திரை குத்தும் விதமாக அஹில்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி சொல்கிறான். ஆனால் இந்த கயவர்கள் அந்த இடத்தில்தான் அல்லாஹ் தவறு செய்துவிட்டான் என்கின்றனர். எவ்வளவு கவனிக்க வேண்டிய விஷயம் இது. கமர் வேறு ஹிலால் வேறு என்று அல்லாஹ் வேறுபடுத்தும் இடமல்லவா இது. 27 இடங்களிலும் அல்லாஹ் சந்திரன் என்ற கோளைப்பற்றி பேசுகிறான். மனிதனுக்கு காலம்காட்டி என்று சொல்லும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சந்திரனிலிருந்து பிரதிபலித்து மனித கண்களுக்கு தெரியும் ஒளியான ஹிலாலை அல்லாஹ் கலம்காட்டி என்கிறான். இந்த கயவர்கள் அல்லாஹ்வின் வார்த்தை தேர்வையே தவறென்று சொல்கிறார்கள்.
நபி ஹிலாலை பார்த்து நோன்பு வையுங்கள் ஹிலாலை பார்த்து நோன்பை விடுங்கள் என்று சொல்லியிருக்க இவரோ “அது தப்பு! நபிக்கு அரபி தெரியாதுன்னு Mr. அபு ஜஹிலே சொல்லி இருக்கார். அது ஹிலால் இல்ல. அந்த ஹி ஹிலாலுக்கு சொந்தமில்லை. அந்த ஹி கமருக்குதான். நபி அரபி தெரியாமல் ஹிலால்ன்னு சொல்லி இருப்பாங்க என்கிறார்.
ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்லவேண்டும் என்பதால் இவர்களின் பொய் சங்கிலித்தொடர் நீண்டுகொண்டே செல்கிறது. இத்தனை நாளும் ஆண்பாலுக்குரிய ஹி-யும் ஹூ-வும் பெண்பாலான அஹில்லாவை குறிக்கும் என்று பொய் சொன்னனர். இப்போது அந்த பொய்யை மறைக்க “அல்லாஹ்வும் தூதரும் அஹில்லா என்று தப்பாக சொல்லிவிட்டனர். அது அஹில்லா இல்லை. கமர் என்றுதான் சொல்லியிருக்கவேண்டும் எனும் புதிய பொய்யை சொல்கின்றனர்.
ஹி மற்றும் ஹு எனும் வார்த்தைகள் அஹில்லாவைக் குறிக்கவில்லை. ஏனெனில் அஹில்லா பெண்பால் வார்த்தை. இந்த சிக்கலை எப்படி சமாளிப்பது என்று யோசித்தபோது அவர்களின் குருட்டு புத்தியில் தோன்றியதுதான் கமர் எனும் ஆண்பால் வார்த்தை. அஹில்லா எனும் பிறைகள் கமர் எனும் சந்திரனில் ஏற்படுபவைதானே. அதை வைத்து சமாளித்துவிடலாம். என்று கனவு கண்டுள்ளனர். இவர்களது அப்பாவி ரசிகர்களும் இதெல்லாம் சிந்திப்பதில்லை. ஹிஜ்ரா அறிஞர்களே! உங்கள் கற்பனைக்கு ஏதாவது அடித்தளம் இருக்கிறதா? முன்னர் ஒருமுறை “ஜம்உ என்ற வார்த்தையைத்தான் ஹதீஸ்களை பதிவு செய்த மாணவர்கள் தவறாக தெ சேர்த்து ஜுமுஆ என்று மாற்றிவிட்டனர்“ என்றீர்கள். அந்த வரிசையில் “அஹில்லா என்ற வார்த்தை குர்ஆனில் எங்குமே இல்லை. கமர் எனும் வார்த்தைதான் 27 இடங்களில் வந்துள்ளது. 2:189 வசனத்தில் கூட கமர் தான் வந்திருக்க வேண்டும். குர்ஆனை பிரதி எடுத்தவர்கள் தவறாக அஹில்லா என்று எழுதிவிட்டனர்” என்று விரைவில் நீங்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை. ஒரு படி மேலே சென்று அல்லாஹ் தான் தவறாக அஹில்லா என்று சொல்லிவிட்டான் என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை.
மேலும் முரண்பாடுகளால் நிரம்பி வழியும் அந்தக் கட்டுரையில் அஹில்லாவுக்கு நாங்கள் கொடுக்கும் விளக்கம் தப்பு என்று அவரே ஒப்புக்கொள்கிறார். துவக்கத்தில் அஹில்லா என்ற பன்மைச் சொல் பிறைகள் அனைத்தையும் குறிக்கும் என்கிறார். பின்னர் அவரே அஹில்லா என்பது ஒரு சந்திர மாதத்தின் சுமார் 14 படித்தரங்கள் வரைதான் குறிக்கும் என்கிறார். ஹிலால் என்பது அஹில்லா என்று பன்மையாகும்போது 14 படித்தரங்களை மட்டுமே குறிக்குமா? அல்லது ஒரு மாதத்தின் அனைத்து 29 படித்தரங்களையும் குறிக்குமா?
இவர் அடுத்த கட்டமாக அல்லாஹ்வை எப்படி கேலிசெய்கிறார் என்று பாருங்கள். ஒரு வாதத்திற்காக அஹில்லா என்றால் படித்தரங்கள் என்று வைத்துகொண்டால். ஒரு மாதத்தில் 14 தேதிகளை மட்டும்தான் சந்திரன் காட்டுமா? மனிதர்களுக்கு காலம் காட்டும் கருவி என்று அல்லாஹ் சொன்ன அஹில்லா முதல் 7 நாட்களுடனும் கடைசி 7 நாட்களுடனும் தேதியை காட்டுவதை நிறுத்திவிட்டால் மற்ற நாட்களில் மனிதர்கள் தேதி இல்லாமல் என்ன செய்வார்கள்? எப்படி இயங்குவார்கள?. அல்லாஹ்வை மட்டம் தட்டும் செயலல்லவா இது?
>> //அரபு மொழி அகராதிகள் மார்க்க ஆதாரங்கள் போன்றும், அது அல்லாஹ்விடமிருந்து வஹியாக இறங்கியதைப் போன்றும் // //அதை மனிதன் இயற்றிய இலக்கணத்தோடு உரசிப் பார்க்கும் அளவிற்கு //
>> //போன்ற அரபு இலக்கண, இலக்கிய அகராதிகளிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்//
ஆரம்பத்தில் 'ஸின்னான்' விஷயத்தில் இரண்டு பற்களும் உடைந்தபோது “அகராதிகள் என்ன வஹியாக இறங்கியவையா? மனிதன் இயற்றிய இலக்கணத்துடன் குர்ஆனை உரசுவதா? என்று கூக்குரலிட்டவருக்கு பின்னர் அஹில்லா விஷயத்தில் அரபு அகராதியும் இலக்கிய நூல்களும் ஆதாரமாகிவிட்டன. உங்களுக்கு தேவை என்றால் அகராதிகள் ஆதராமாகிவிடுகின்றன. எதிரானது என்றால் அகராதிகளை எழுதியவர்களை யஹூதிகள் என்பீர்கள். ஒரு நடிகனின் ரசிகன் கூட நடிகன் தவறாக நடந்தால் அதன் பின்னர் அவனின் ரசிகனாக இருக்க மாட்டான். ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றும் சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
அஹில்லா என்ற வார்த்தைக்கு தலைப்பிறைகள் என்று அன்னை ஆயிஷா தெளிவாக விளக்கம் கொடுத்த பின் அகராதி விளக்கம் தேவையா? ஹிலால் என்ற வார்த்தை தலைப்பிறை எனும் பொருளிலே தவிர வேறு எதாவது பொருளில் ஒரு ஹதீசிலாவது வந்துள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக அஹில்லா என்றால் அனைத்து படித்தரங்கள் என்று எந்த அகராதியிலும் இல்லையே. ஏன் இந்த பித்தலாட்டம்?
அரப் அகராதியில் “ஹிலால்” என்றால் பிறை உள்நோக்கி வளைந்திருக்கும் வரையுள்ள வடிவத்திற்கான பெயர். இதை நாமும் மறுக்கவில்லை. தமிழிலும் உள்நோக்கி வளைந்திருப்பது வரை அதைப் பிறை என்பர். ஆங்கிலத்திலும் உள்நோக்கி வளைந்திருக்கும் வரை அதை crescent க்ரசன்ட் என்பர். வெளிநோக்கி கூன் விழுந்தாற்போல் வளையும்போது அதை கமர் என்பர். தமிழில் மதி என்பர். ஆங்கிலத்தில் கிப்பஸ் gibbous என்பர். இதெல்லாம் அகராதிப் பொருள். ஆனால் பயன்பாட்டில் ஹிலால் என்ற வார்த்தை தலைப் பிறையை மட்டுமே குறித்தது. இதுவும் இவர்கள் குறிப்பிடும் அதே அகராதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை இவர்கள் மறைத்துவிடுவர். நபிகளார் இரண்டாம் பிறையை ஹிலால் என்று குறிப்பிட்டதாக ஒரே ஒரு ஹதீஸை இவர்கள் கொண்டுவரட்டும். மூன்றாம் பிறையை சஹாபாக்கள் ஹிலால் என்றதாக ஒரே ஒரு செய்தியை இவர்கள் கொண்டுவரட்டும். அன்றைய வழக்கத்தில் ஹிலால் என்பது தலைப்பிறையை மட்டுமே குறித்தது. அஹில்லா என்பதற்கு தலைப்பிறைகள் என்பதைத் தவிர வேறு பொருள் இல்லை. இதற்கு எண்ணற்ற ஹதீஸ்கள் சான்றாக உள்ளன.
அகராதிகளை எழுதியது யார்?
43:3 நீங்கள் விளங்குவதற்காக அரபு மொழியில் அமைந்த குர்ஆனாக இதை நாம் ஆக்கினோம்.
ஹிஜ்ரா அறிஞர்களின் மொழி அறிவின்மையை நாம் சுட்டிக்காட்டும்போது அவர்கள் நம்மை நோக்கி "மொழி அகந்தை கொண்டவர்கள்" என்று வசைபாடுவதும் அபூ ஜஹிலுடன் ஒப்பிடுவதுமே வாடிக்கையாகிவிட்டது. அல்லாஹ்வே இதை அரபி மொழியில் இறக்கினோம் என்கிறான். அரபி தெரியாமல் ஆய்வில் இறங்கினால் இவர்களைப் போல ஏடாகுடமாக விளங்கியும் விளக்கியும் வழிகெட வேண்டியதுதான் என்பதை அல்லாஹ்வே சொல்லிவிட்டான். ஹிஜ்ரா அறிஞர்களுக்கு அரபி மட்டுமல்ல எந்த மொழியிலும் அறிவில்லை என்பதை ஏற்கனவே பலமுறை நிறுவிவிட்டோம். அரபியில் இருக்கும் குர்ஆன் ஹதீஸை அரபி தெரியாத நீங்கள் ஏன் விளக்க முற்படுகிறீர்கள் என்பதே நமது கேள்வி?
12:2 நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம்.
என்கிறான் அல்லாஹ். அவர்கள் என்ன மொழியில் பேசினார்களோ அந்த இலக்கணத்தில் குர்ஆன் இறக்கப்படவில்லை என்றால் அவர்களுக்கு குர்ஆன் எப்படி விளங்கி இருக்கும். ஏற்கனவே இருந்த அரபி இலக்கணத்தின்படிதானே அல்லாஹ் குர்ஆனை அருளியிருப்பான். அல்லது குர்ஆனுடன் அதற்கான இலக்கண புத்தகமும் இறக்கப்பட்டதா?
39:28 அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)
26:193,194.195 எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.
கோணல் இல்லாத தெளிவான அரபி மொழி என்கிறான். தெளிவான அரபி மொழி என்பதை மக்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள். அது தெளிவான மொழிதானா என்பதை உரசிப் பார்க்கவெண்டுமனில் குர்ஆன் வருவதற்கு முன்னால் அதற்கான தெளிவான இலக்கண புத்தகத்தை அல்லாஹ் இருக்கியிருக்க வேண்டுமல்லாவா. அந்த இலக்கணப் புத்தகம் எங்கே?
மேலும் இலக்கண புத்தகங்களும் அகராதிகளும் மனிதர்களால் அதுவும் யூதர்களால் எழுதப்பட்டது என்பதால் இலக்கணமெல்லாம் தேவையில்லை என்பார்கள். இந்தக் குர்ஆனை முதன் முதலாக கேட்டதும் வாசித்ததும் அரபுகளும் யூதர்களும்தானே. அவர்களின் இலக்கணத்தில் அல்லாமல் வேறு யாரின் இலக்கணத்தில் அல்லாஹ் குர்ஆனை அருளியிருப்பான்? குர்ஆன் உயர்ந்த இலக்கிய நடை கொண்டது என்று சொல்லிக்கொள்ளும் நாம் அதை இலக்கிய இலக்கண விதிகளை யாரிடமிருந்து பெற்றோம்.
14:4. எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
இன்ஜீலை யூதர்களுக்கு அருளும்போதும் யூதர்களின் மொழியில் தானே அருளியிருப்பான். தவ்ராத்தை இஸ்ரவேலர்களுக்கு அருளும்போது ஏற்கனவே காபிர்கள் வைத்திருந்த அவர்களின் இலக்கணதில்தானே அருளியிருப்பான். சபூரை அருளும்போதும் தாவூது நபி வாழ்ந்த அந்த சமுதாயத்தினர் பேசிய மொழியில்தானே அல்லாஹ் அவர்களுக்கு அருளியிருப்பான்.
யூதர்களும் அரபுகளும் எழுதிய இலக்கிய இலக்கண அகராதி நூற்களை பயன்படுத்தக்கூடாது என்றால் அல்லாஹ் முதலில் எல்லோரையும் முஸ்லிம்களாக மாற்றிவிட்டு அவர்களுக்கு முதலில் புதிய இலக்கண புத்தகத்தை இறக்கிவிட்டு பின்னர் அந்த இலக்கணத்தின் அடிப்படியில் குர்ஆனை அல்லாஹ் அருளியிருக்கவேண்டும் என்கிறார்களா ஹிஜ்ராவினர்?
குர்ஆன் அரபி இலக்கணத்திற்கு உட்பட்டு பேசுகிறதா? அல்லது எந்த இலக்கண விதியையும் பின்பற்றாமல் பேசுகிறதா?
குர்ஆன் இலக்கண விதிகளுடன்தான் பேசுகிறது என்றால் மனிதன் எழுதிய இலக்கண விதியைத்தான் அல்லாஹ் பின்பற்றுகிறானா?
குர்ஆனை ஆரம்ப காலத்தில் செவியுற்ற மக்கா காபிர்களும் மதீனா யூதர்களும் குர்ஆனின் இலக்கண இலக்கியங்களை அவர்களிடமிருந்த அகராதியுடன் உரசினார்களா? இல்லை குர்ஆனுக்கென தனி இலக்கண புத்தகத்தை உருவாக்கி அதனுடன் உரசினார்களா?
மொழிகளை உருவாக்கியது மனிதனா? அல்லாஹ்வா?
மொழிகளை மனிதன் உருவாக்கினான் என்றால். அல்லாஹ் இறக்கிய அனைத்து வேதங்களும் மனிதனின் இலக்கணத்திற்கு உட்பட்டே வந்திருக்கும்.
மொழிகளை அல்லாஹ் உருவாக்கினான் என்றால் அதற்கான இலக்கணமும் அல்லாஹ்தான் உருவாக்கினான்.
30:22 வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடை யோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
குர்ஆனை அணுகும் முன் ஒரு முக்கிய விஷயத்தை தெரிந்துகொண்டு அணுகவேண்டும். குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்ட வேதம். அது இறக்கப்பட்டபோது அரபு மொழி எப்படி இருந்ததோ அதை அடிப்படையாகக் கொண்டே குர்ஆனை அணுகவேண்டும். எந்த மொழியும் காலங்கள் கடக்கும்போது மாற்றமடையும். புதிய சொற்கள் சேர்க்கப்படும். ஏற்கனவே இருந்த சொல்லின் பயன்பாடு மாறும். ஒரே சொல்லுக்கு பிற்காலத்தில் புதிய அர்த்தங்கள் கொடுக்கப்படும். நாளடைவில் பழைய அர்த்தம் மங்கி புது அர்த்தம் மட்டுமே மேலோங்கி நிற்கும். அல்லாஹ் அன்றைய அரபு மொழியில் குர்ஆனை இறக்கினான். அன்றைய அரபை பழமையான அகராதிகளில் இருந்து மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். “இல்லை! அகராதிகள் மனிதர்கள் எழுதியவை” என்றால் நீங்கள் குர்ஆனை அணுகவே முடியாது. அதன் ஒவ்வொரு எழுத்துக்கள் மீதும் சந்தேகம் வந்துவிடும். இதற்கு இதுதான் பொருளா என்பது கேள்விக்குறியாகும். குர்ஆன் என்றால் என்ன, அதை எவ்வாறு அணுகுவது போன்ற அடிப்படை விஷயங்களையாவது தெரிந்துகொண்டபின் ஆய்வுகளை செய்வது ஹிஜ்ரா அறிஞர்களுக்கு நல்லது.
கட்டுரையில் கமுட்டி ஒப்புக்கொண்ட விஷயங்கள்.
1. எங்களுக்கு அரபி தெரியாதுதான். ஆனால் அதுக்காக எங்களை நீங்கள் இந்த மாதிரி வெச்சு செய்யலாகாது.
2. ஸின்னான்னுக்கு நாங்க செஞ்ச மொழிப்பெயர்ப்பு தப்புதான். 350 பக்கங்கள்கொண்ட ஆய்வுநூலில் எவ்வளவோ பிழைகள் இருக்கும்போது இந்த சின்ன பிழைக்கு மட்டும் ஏன் முன்னுரிமை கொடுக்கிறீர்கள்.
3. சூமூ லி ரூயதிஹி யில் வரும் ஹி-யும், இதா ரஐதமுஹு வில் வரும் ஹு-வும் ஒருமையில் ஆண்பாலைதான் குறிக்கின்றன.
4. அஹில்லா எனும் வார்த்தை பெண்பால்தான், அது பன்மை வார்த்தைதான். ஹிலால் தான் ஒருமையில் வரும் ஆண்பால் வார்த்தை. ஹி-யும் ஹூ-வும் ஒருமையைத்தான் குறிக்கின்றன.
5. ஹி-யும் ஹூ-வும் ஹிலால் எனும் ஒருமையில் ஆண்பாலைத்தான் குறிக்கின்றன. ஆனால் இந்த உண்மையை நாங்கள் சொல்லிவிட்டு அப்படியே விட்டுவிட்டால் இருக்கும் அஞ்சு பத்து பேரும் ஓடிடுவாங்க. அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் நாங்க புதுசா ஒண்ணை கண்டுபிடிச்சு சொல்வோம். எங்களை பின்பற்றுபவர்களை அவற்றை ஆய்வு செய்ய மாட்டார்கள். கண்மூடி ஏற்றுகொள்வார்கள்
6. "Mr. அபு ஜஹ்லுக்கு தெரிந்த அரபி இலக்கணம் ரசூலுல்லாவுக்கு தெரியாது. மட்டுமல்ல அமாவாசைக்குபின் வரும் லண்டன் நள்ளிரவில்தான் முதல் தேதி என்று Mr. அலிக்கு தெரிந்த அறிவியலும் நபிக்கு தெரியாது. அதனால அவங்க கமர்-னு சொல்லவேண்டியதை தப்பா அஹில்லான்னு சொல்லிட்டாங்க" இப்படி சொல்லி நாங்க உறுப்பினர்களை தக்க வெச்சுப்போம்.
7. "இலக்கணமெல்லாம் யூதர்களுக்குதான் தெரியும். அல்லாஹ்வுக்கு தெரியாது. 27 இடத்தில கமர்னு சொன்ன அல்லாஹ் இந்த இடத்தில் கவனக்குறைவா அஹில்லான்னு சொல்லிட்டான். அது கமர் என்றுதான் வந்திருக்க வேண்டும்." எப்படி சமாளிச்சோம் பார்த்தாயா?

8. ஹி கமரைக் குறிக்கும் என்ற இவர்களின் புதிய கண்டுபிடிப்பின் மூலம் “இவர்களின் காலண்டர் பிறைகளை அடிப்படையாகக் கொண்டதில்லை. சந்திரன் எனும் கோளை அடிப்படையாகக் கொண்டது மட்டுமே” என்பதும் தெளிவாகிறது.