Monday 17 July 2017

கமிட்டியினரின் கரிசனம்

2017 ரமளானில் ஹிஜ்ராவினர் பரப்பிய அவதூறுக்கு நாம் வாட்சாப்பில் வெளியிட்ட மறுப்பை தேவை கருதி இங்கே வெளியிடுகிறோம்
+=+=+=+=+=+=+=+=+=+=+=+
*ஹிஜ்ரா கமிட்டியினரின் கரிசனம்*
+=+=+=+=+=+=+=+=+=+=+=+
ரமலான் வந்துவிட்டால் காலண்டர் கடையை விரிக்கும் ஹிஜிராவினர், பஜ்ஜி, வடை கடையை விரித்தால் பிழைப்பையாவது பார்க்கலாம். சமீபத்தில் ஒரு புதிய கடையை விரித்துள்ளனர் ஹிஜிரா கமிட்டியினர். கடையை பார்வையிட http://ottrumai.net/Calendar/KuraibQA.htm
1️⃣ *சிரியாவுக்கும் (டமஸ்கஸ்), மதீனாவுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 1050 கிலோ மீட்டர் ஆகும். அதுபோல உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள இரு ஊர்களான 'சாஹாரன்பூர்' (Saharanpur) மற்றும் 'வெயின்தம்கன்ஜ்' (wyndhamganj) ஆகியவற்றுக்கிடையேயுள்ள தூரம் சுமார் 1100 கிலோமீட்டர்களை தாண்டும். சற்றொப்ப சிரியாவுக்கும் மதீனாவுக்கும் இடையேயுள்ள தூரத்தை இது ஒத்திருக்கிறது. இதுபோன்று ஒரு மாநிலத்துக்குள்ளேயே 1000 கிலோ மீட்டர்கள் இடைவெளியில் இன்னும் பல ஊர்கள் உள்ளன. நமது கேள்வி என்னவெனில் உத்திரபிரதேச மாநிலத்தின் 'சாஹாரன்பூரில்' பார்க்கப்பட்ட பிறையை அதே மாநிலத்தின் 'வெயின்தங்கன்ஜூ' மக்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? மேற்படி இரு ஊர்களுக்கும் இடையேயுள்ள தூரம், சிரியா மதினாவுக்கு இடையேயுள்ள தூரத்தைபோல் இருப்பதால் TNTJ கொள்கை முடிவின்படி வெயின்தங்கன்ஜூ மக்கள் நிராகரிக்கத்தானே முடியும்? எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? குரைப் சம்பவத்தை வைத்து பிறை பார்க்கும் எல்லை ஒரு மாநில அளவுதான் (தமிழ்நாடு) என்ற TNTJயின் முடிவானது, நமது நாட்டிலுள்ள மற்றொரு மாநிலமான உத்திரபிரதேசத்துக்கே பொருந்தவில்லையே? சிந்திக்க மாட்டீர்களா?*
குறைப் சம்பவத்தை தூரத்திற்கு ஆதாரமாக நாம் காட்டவில்லை. மதீனா - சிரியா எனும் ஆட்சி எல்லைக்கு ஆதாரமாக காட்டுகிறோம். மேலும் 1100கிமி தூரத்திலிருந்து வரும் பிறை அறிவிப்பை ஏற்கக்கூடாது என்பதல்ல எமது நபி வழி நிலைப்பாடு. ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லையிலிருந்து வரும் தகவலை மட்டுமே ஏற்போம் என்பதே குறைப் ஹதீஸிலிருந்து நாம் எடுக்கும் நிலைப்பாடு.
நம்மை எதிர்க்கும் முன் நாம் சொல்லும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை ஹிஜிராவினர் விளங்கிவிட்டு எதிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். குறைப் ஹதீஸில் நாம் சொல்வது என்ன? பார்க்க http://www.piraivasi.com/2017/06/28.html
2️⃣ *மேலும், பிறைகள் மனிதர்களுக்கு நாட்காட்டி (காலண்டர்) என்று வல்ல அல்லாஹ் குர்ஆனில் (2:189) கூறுகிறான். காலண்டரில் ஒரு நாளுக்கு, ஒரு தேதிதான் இருக்கும். அதாவது வெள்ளிக் கிழமைக்கு ஒன்றாம் தேதி என்றால், சனிக்கிழமைக்கு இரண்டாவது தேதியாகத்தான் இருக்கும். இந்நிலையில் ரமழான் முதல் தேதி சிரியாவில் ஒரு நாளிலும், மதீனாவில் மற்றொரு நாளிலும் வேறுபட்டு தொடங்கியதாக இந்த குரைப் சம்பவம் கூறுகிறது.
அதாவது பிறை பார்த்ததின் அடிப்படையில் ரமழான் முதல் தேதியானது இரண்டு வெவ்வேறு கிழமைகளில் வந்துள்ளதாக குரைப் சம்பவம் கூறுவதிலிருந்து, சிரியா மக்களுக்கு ஒரு தேதியையும், மதீனா மக்களுக்கு மற்றொரு தேதியையும் பிறை காட்டியுள்ளது. இப்படி சந்திரன் தேதிகளை சரியாக காட்டவில்லை என்றும் அது துல்லியமாக இயங்கிடவில்லை என்றும் பொருள்படுகிறது. அப்படியனால் பிறைகள் மனிதர்களுக்கு நாட்காட்டி என்ற அல்குர்ஆன் (2:189) வசனத்திற்கும், சந்திரன் கணக்கின்படி துல்லியமாக இயங்குகின்றது என்ற அல்குர்ஆன் (55:5, 6:96) வசனங்களுக்கும் நேர் முரணாக அமைகிறது.
TNTJயின் கொள்கை முடிவின்படி ஒரு ஸஹீஹான ஹதீஸாகவே இருந்தாலும், குர்ஆன் ஆயத்துக்கு அது முரண்பட்டால் அந்த ஹதீஸை மறுக்க வேண்டும். ஆகையால் குரைபுடைய சம்பவத்தை தங்களின் மாநிலப்பிறை நிலைபாட்டுக்கு ஆதாரமாக TNTJயினர் இனியும் பிரச்சாரம் செய்வது நியாயம்தானா? என்று சிந்திப்பீர்.*
முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது 2:189 வசனத்தில் நாட்காட்டி என்ற வார்த்தை இல்லை. இது ஹிஜிராவினர் குர்ஆனில் செய்த கையாடல். அஹில்லா - மவாகீத் ஆகிய இரு வார்த்தைகளே இவ்வசனத்தை சாராம்சம். இதில் அஹில்லா எனும் வார்த்தை மாதத்தில் கண்ணுக்கு தெரியும் முதல் பிறையை குறிக்கும் அரபு பதமான ஹிலால் என்பதன் பன்மையாகும். கண்ணுக்குத் தெரியும் ஒவ்வொரு மாதத்தின் தலைப்பிறைகளை அல்லாஹ் பன்மையில் அஹில்லா என்கிறான்.
மவாகீத் என்ற வார்த்தை மீகாத் எனும் வார்த்தையின் பன்மையாகும். மீகாத் என்பது வக்த் (நேரம்) எனும் மூலச்சொல்லில் இருந்து பிறந்ததாகும். மீகாத் என்றால் "குறிக்கப்பட்ட நேரம்" என்று பொருள். மவாகீத் என்றால் "குறிக்கப்பட்ட நேரங்களை காட்டுபவை" என்று பொருள். *"நேரங்கள்"* & *"காட்டுபவை"* என இரண்டு விஷயங்களும் பன்மையில் உள்ளன. அதாவது நேரங்களும் பன்மை அவற்றை காட்டும் கருவிகளும் பன்மை. ஒரே பிறை உலகில் அனைவருக்கும் ஒரே நேரத்தை காட்டும் என்ற பொருள் இதில் இல்லை. இதை இவர்கள் நாட்காட்டி என்று ஒருமையில் எவ்வாறு மொழிப்பெயர்கிறார்கள்? ஹிஜிரா சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா?
*"அஹில்லத்தி மவாகீத்"* என்றால் *"ஹிலால்கள் காலங்களை காட்டுபவை"* என்று அர்த்தம்.
அதிக விளக்கத்திற்கு பார்க்க http://www.piraivasi.com/2017/07/15.html & http://www.piraivasi.com/2017/07/14.html
இரண்டாவதாக... *ஒரு தேதிக்கு ஒரு கிழமை என்பது சூரிய நாட்காட்டியின் சித்தாந்தம்.* சூரிய நாட்காட்டியில் தேதி என்பது சர்வதேச தேதிக்கோட்டின் மேற்கிலிருந்து துவங்கி அதே கோட்டின் கிழக்கே முடியும். வாரநாட்கள் (திங்கள், செவ்வாய்) என்பதும் இதேபோல சர்வதேச தேதிக்கோட்டின் மேற்கிலிருந்து துவங்கி அதே கோட்டின் கிழக்கே முடியும். இவை இரண்டும் சூரியன் எனும் ஒரே அளவுகோலை கொண்டுள்ளதால் சூரிய நாட்காட்டியில் ஒரு தேதிக்கு ஒரு கிழமை இருக்கிறது. அதிக விளக்கதிற்கு பார்க்க:
ஆனால் பிறைத் தேதியை பொறுத்தவரை அது காட்சியளிக்கும் இடத்தில் தேதி துவங்கும். பிறையானது எல்லா மாதமும் சர்வதேச தேதிக்கோட்டில் முதன்முதலில் காட்சியளிக்க துவங்கி மேற்கே உள்ள ஊர்கள் அனைத்திற்கும் காட்சியளித்தால் ஒரு பிறைக்கு ஒரு கிழமை இருந்திருக்கும்.
ஆனால் ஒவ்வொரு மாதமும் தலைப்பிறை ஒவ்வொரு பகுதியில் காட்சியளிக்கத் துவங்குகிறது. தலைப்பிறை இந்தியாவில் முதன் முதலில் திங்கள் இரவில் காட்சியளித்து அக்காட்சி மேற்கே விரிந்தால் இந்தியாவிலும் இந்தியாவிற்கு மேற்கே இருக்கும் நாடுகளிலும் திங்கள் முதல் தேதியாகவும் கிழக்கே இருக்கும் நாடுகளில் செவ்வாய் முதல் தேதியாகவும் அமையும்.
தலைப்பிறை அமெரிக்காவில் முதன் முதலில் திங்கள் இரவில் காட்சியளித்தால் அமெரிக்காவிற்கு திங்கள் முதல் தேதியாகவும் கிழக்கே இருக்கும் நாடுகளில் செவ்வாய் முதல் தேதியாகவும் அமையும்.
நேர்மையாக கஞ்'சக்'சன் என்று அமாவாசை நடக்கும் நேரத்தை  கணக்கெடுத்தால் கூட ஒரு கிழமைக்கு இரு தேதிகள் வரும். ஆனால் ஒரே கிழமைக்கு ஒரே தேதி வரவேண்டும் என்பதால் ஹிஜிராவினர் லண்டன் நேரத்தில் அமாவாசையை எடுகின்றனர். நபி வழிப்படி பிறையை தேதியாக எடுத்தாலும் யூத வழிப்படி லண்டன் அமாவாசையை தேதியாக எடுத்தாலும் ஒரு கிழமைக்கு இரு தேதிகள் வந்தே தீரும்.
கிழமை என்பது சூரியனை அடிப்படையாகவும் தேதி என்பது பிறையை அடிப்படையாக கொண்டும் இருப்பதால் நபி வழியில் ஒரு கிழமைக்கு இரு தேதிகள் வந்தே தீரும்.
அதிக விளக்கத்திற்கு பார்க்க http://www.piraivasi.com/2017/07/17.html
இவர்களின் கஞ்''க்சன் காலண்டரானது க்ரிகோரியன் காலண்டரை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதில் ஒரு தேதிக்கு ஒரு கிழமை வருகிறது.
3️⃣ *குரைபுடைய சம்பவத்தின்படி கலீஃபா முஆவியா (ரழி) அவர்கள் பிறை பார்த்ததை, கலீஃபாவின் ஆளுமையின்கீழ் கவர்னராக இருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆட்சித்தலைவரின் பிறை நிலைப்பாட்டையே அவரின் கீழ் பணியாற்றிய கவர்னர் மறுத்துள்ளார். எனவே எந்த ஒரு ஆட்சிப் பொறுப்போ, அதிகாரங்களோ இல்லாத TNTJ தலைமையின் பிறை அறிவிப்பை, TNTJ யின் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமோ, கட்டாயமோ இல்லை. மாறாக தலைமையின் பிறை நிலைபாட்டை மறுக்கத்தான் வேண்டும் என்பதற்குத்தான் இந்த குரைப் சம்பவம் ஆதாரமாக அமைகிறது.*
இப்னு அப்பாஸ் (ரலி) எந்த காலத்தில் மதீனாவின் கவர்ணராக இருந்தார்கள்?
ஹிஜிரா சகோதரர்களே! நீங்கள் வரலாற்றை புரட்டமாட்டீர்கள் கேள்வி கேட்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையால்  இவர்கள் வரலாற்றை மாற்றுவதில் யூதர்களை மிஞ்சிவிட்டனர். நீங்கள் என்றென்றும் ஹிஜ்ரா அறிஞர்கள் சொல்லும் பேச்சைக் கேட்டு முஆவியாவின் ஆட்சி காலாத்தில் மதீனாவின் கவர்ணர் யாரென்று நடுநிலையாளர்களிடம் கூட கேள்வி கேட்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர். சற்று வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் காலாகாலத்திற்கும் தங்களிடம் மூளையை அடகுவைத்த அடிமைகளாவே நீங்கள் இருப்பீர்கள் என்று உறுதியாக நம்பிவிட்டார்கள்
*"கஃலீபாவின் பேச்சை கேட்கக்கூடாது" என்ற காரணத்தால் முஆவியாவின் பிறையை இப்னு அப்பாஸ் நிராகரித்தார்களா. அல்லது "நபிமொழியை மேற்கோள் காட்டி, வேறு நிர்வாக எல்லையில் இருந்து வந்த பிறை தகவல்" என்பதால் நிராகரித்தார்களா?*
காலண்டர் வெளியிட்டு நபிவழிக்கு மாறு செய்ததாக உமர் (ரலி) மீது இட்டுக்கட்டியவர்கள், அடுத்ததாக கலீஃபாவுக்கு கட்டுப்படாமல் இருந்தார் என்று இப்னு அப்பாஸ் (ரலி) மீது இட்டுக்கட்டுகின்றனர்.
"காலண்டர் இல்லாமல் போனது மட்டுமே கிலாஃபத் வராமல் இருப்பதற்கு காரணம்" என்றும், "காலண்டரை நிறுவி கிலாஃபத்தை கொண்டு வருவோம்" பேர்வழிகள் என்றும் களமிறங்கிய ஹிஜிராவினர், கலீஃபாவிற்கு கட்டுப்படாமல் இருப்பதுதான் நபித்தோழர்கள் வரலாற்றில் நாம் கற்றுக்கொள்வது என்றும் கலீஃபாவிற்கு கட்டுப்படக்கூடாது என்றும் நஞ்சை விதைக்கிறார்கள். கலீஃபாவுக்கு கட்டுப்படாத தோழர்களையா நபிகளார் உருவாக்கினார்கள்? ஹிஜிராவை பின்பற்றும் சகோக்கள் இதை சிந்திக்க வேண்டாமா? கலீபாவுக்கு கட்டுப்படக்கூடாது என்று போதிப்பவர்களா கிலாபத்தை கொண்டு வரப்போகிறார்கள்?!
முகவரி இல்லாமல் கட்டுரை வரைவது அல்லது ஜாஹிர் ஹுசைன் நகர் முன்னாள் தலைவர் என்ற கள்ளப்பெயரில் ராஜப்பன் என்ற சகோதரனின் ஃபோன் நம்பரை முகவரியாக கொடுத்து கட்டுரை வரைவது இவர்கள் வாடிக்கை. யார் எழுதினார், குறை நிறைகளுக்கு யாரை தொடர்புகொள்ளவேண்டும் என்ற முகவரியை கொடுக்க *தைரியமில்லாதவர்களா* காலண்டரை நிறுவி கிலாஃபத்தை கொண்டுவரப்போகிறார்கள்? ஹிஜிராவினர் சிந்திக்க வேண்டாமா?
ததஜ சகோதரர்கள் மீது கரிசனம் கொண்ட ஹிஜ்ராவினரே! உண்மையாகவே உங்களுக்கு ததஜ சகோக்கள் மீது கரிசனம் இருந்தால் அவர்கள் நெடுங்காலமாக எதிர்பார்த்திருக்கும் விவாதத்திற்கு வாருங்கள். கிலாஃபத்தை கொண்டுவருவோம் பேர்வழிகள் உங்களிடம் சிறிதேனும் *உண்மை இருந்தால்* நேருக்கு நேர் அமர்ந்து உங்கள் ஆதாரங்களை சமர்ப்பணம் செய்யுங்கள். ததஜ தொண்டர்கள் எது சரி எது தவறு என்று பிரித்தறிவார்கள். ஹிஜ்ராவை பின்பற்றும் சகோதரர்களே உங்கள் தலைவர்களை அழைத்துக்கொண்டு விவாதத்திற்கு வாருங்கள்.
வெளியீடு: பிறைவாசி டாட் காம்.

🌙🌙🌙🌙🌙🌙🌙🌙