Monday 17 July 2017

ஒரு கிழமைக்கு எத்தனை தேதிகள்

நாள்:
இதை பாமரனும் விளங்கி வைத்துள்ளான். ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் வரையுள்ளதே ஒரு நாள். அல்லது ஒரு சூரிய மறைவு முதல் மறு சூரிய மறைவு வரை என்று வைத்துக்கொண்டாலும் நாள் என்று மனிதன் விளங்கி வைத்திருப்பது மாறாது. (எது முதலில் எனும் சர்ச்சை தனியான தலைப்பு.)
கிழமை:
நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கும். எந்த நாளில் என்ன செய்தோம் என்று நமக்கு தெரியாமல் போய்விடும். அல்லது வரும் நாட்களில் என்ன செய்யவேண்டும் என்றும் அறியாமல் இருப்போம். இதற்காக அடிப்படை காலங்கட்டியாக அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியது ஒரு வாரம் எனும் அளவீடு. இதில் 7 நாட்கள் இருக்கும். இந்த 7 நாட்களுக்கும் ஒவ்வொரு பெயரிட்டு நாட்களை அடையாளப்படுத்துவதே வாரநாள் அல்லது கிழமை.
ஒரு நாளுக்கு ஒரு பெயர், மறு நாளுக்கு அடுத்த பெயர், இவ்வாறு 7 நாட்கள் முடிந்ததும் மீண்டும் அதே பெயர்களில் நாட்கள் அடையாளப்படுத்தப்படும்.
ஆக வாரநாள் அல்லது கிழமை என்பது ஒரு உதயம் முதல் மறு உதயம் வரை உள்ள காலத்திற்கு பெயரிடுவதே, அல்லது ஒரு மறைவு முதல் மறு மறைவு வரை உள்ள காலத்திற்கு பெயரிடுவது.
நாள் என்றால் ஒரு கால அளவு. கிழமை என்றால் அதே கால அளவுக்கு இடப்பட்ட பெயர்கள். இந்த நாளும் கிழமையும் எங்கே ஆரம்பித்து எங்கே முடியும்?
பூமி முழுவதும் மனிதன் வியாபித்தான். பூமி உருண்டை. ஒரு மனிதனுக்கு சூரியன் உதித்த மறுவினாடி மற்றொரு மனிதனுக்கு உதிக்கும். அதே வேளையில் இன்னொரு மனிதக்கு அது மறைந்துகொண்டிருக்கும் அடுத்த வினாடி வேறொருவனுக்கு மறையும். பூமியில் ஒவ்வொரு உதயத்தை பார்த்த மனிதனும் (அல்லது ஒவ்வொரு மறைவை பார்த்த மனிதனும்) அவற்றிற்கு ஒரே மாதிரி பெயரிட்டானா அல்லாது வெவ்வேறாக பெயரிட்டானா? அதாவது ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்த சமுதாயம் தங்களுக்கு சூரியன் மறைந்த இரவை திங்கள் என அழைத்து. அந்நிலைப்பரப்பிலிருந்து சில காத தூரம் தொலைவில் உள்ள மற்றொரு சமூகமும் அவர்களுக்கு சில பல நாழிககைக்குப் பிறகு அதே நாளை துவங்குவார்கள். ஆனால் அவர்களும் அந்த நாளுக்கு அதே பெயரிட்டு அழைத்தார்களா?
இல்லை! ஓர் ஊரில் Vrydag என்றனர், ஓர் ஊரில் Ахәаш என்றனர், ஓர் ஊரில் ዓርብ என்றனர், ஓர் ஊரில் Ուրբաթ என்றனர், ஓர் ஊரில் петък என்றனர், ஓர் ஊரில் ᏧᏅᎩᎶᏍᏗ என்றனர், ஓர் ஊரில் П1ераска என்றனர், ஓர் ஊரில் 拜五 என்றனர், ஓர் ஊரில் གཟའ་སྤེན་པ་ என்றனர், ஓர் ஊரில் პარასკევი என்றனர், ஓர் ஊரில் 金曜日 என்றனர், ஓர் ஊரில் 금요일 என்றனர். இவ்வாறு பற்பல ஊர்களில் பலவாறாக அழைத்தனர். அரபுலகத்தில் ஒரு நாளை யுவ்முல் ஜுமுஆ என்றழைத்தனர். அந்த நாளில் சிறப்பு தொழுகை இருப்பதாக தன்னை நபி என்று வாதிட்ட ஒரு அரபுலக மனிதர் சொன்னார். அவரை நபியாக ஏற்றுகொண்ட முஸ்லிம்கள் என்று அழைக்கப்பட்ட மக்கள் பிற்காலத்தில் உலகெங்கும் பயணிக்கலானார்கள். இவர்கள் புறப்பட்ட நாளிலிருந்து ஓர் ஊருக்கு செல்லும் நாள் வரை நாட்களை கணக்கு வைத்து இவர்களின் யவ்முல் ஜுமுஆ நாள் அவர்களுக்கு என்ன நாள் என்று அறிந்து அவர்களிடம் அதே நாளில் அதே வழிபாட்டை அறிமுகப்படுத்தினர். அவர்களும் முஸ்லிமாக மாறியபோது, உலகில் வாரநாட்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அது ஒன்றாக ஆனது. Vrydag, Ахәаш, ዓርብ, Ուրբաթ, петък, ᏧᏅᎩᎶᏍᏗ, П1ераска, 拜五, གཟའ་སྤེན་པ་, პარასკევი, 金曜日, 금요일 இவை எல்லாமே யவ்முல் ஜுமுஆ தான். இதை வாசிக்கும் நீங்கள் அதை வெள்ளிக்கிழமை என்பீர்கள்.
ஆக உலகமெல்லாம் கிழமை ஒன்றாகக் காரணாம் மனிதன் உலகில் மேற்கொண்ட பயணத்தினால்தான். அதுவரை உலகில் ஒரே கிழமை இருக்கவில்லை. மனிதன் பயணம் மேற்கொண்ட பிறகுதான் வாரநாட்கள் ஒன்றாகின.
பயணம் மேற்கொண்ட மனிதன் எவ்வாறு பயணம் மேற்கொண்டான். எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டான்.?
இன்று நாம் பசிபிக் கடல் என்று அழைப்பது ஒரு காலத்தில் உலகில் பெருங்கடல் என்று அழைக்கப்பட்டது. பல யுகங்களாக மனிதன் அக்கடலை கடக்க சக்திபெறவில்லை. எனவே அந்த கடல் உலகின் எல்லையாகப் பார்க்கப்பட்டது. தட்டை உலக சித்தாந்தம் இருந்தவரை அந்தக் கடலைத் தாண்டினால் கீழே விழுந்துவிடுவோம் என்று மனிதன் நம்பினான். நீண்ட காலத்திற்கு மனிதனின் பயணங்கள் இக்கடலை கடக்கவில்லை. எனவே கிழக்கே பயணம் செய்தவர்கள் யவ்முல் ஜுமுஆவை கிழக்குவரை கொண்டு சேர்த்தனர், மேற்கே பயணம் செய்தவர் மேற்கு வரை யவ்முல் ஜுமுஆவை கொண்டு சேர்த்தனர். பசிபிக் கடலைக் கடக்காத மனிதன் கிழக்கின் எல்லையாக ஒரு பெருங்கடலையும் மேற்கின் எல்லையாக இன்னொரு பெருங்கடலையும் நினைத்தான். இரண்டும் ஒரே கடல்தான் என்பதை அவன் அதைக் கடக்கும்வரை அறியவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே ஜுமுஆ மற்றும் மற்ற வாரநாட்கள் பூமியில் சீராகிவிட்டது. இதன் காரணமாக பெருங்கடலுக்கு மேற்கே இருக்கும் ஊரில் ஒரு நாள் அல்லது கிழமை முதன் முதலில் தொடங்கியது. அது பெருங்கடலுக்கு கிழக்கே இருக்கும் ஊரில் இறுதியாக முடிவடைந்தது. இவ்வாறு உலகம் முழுதும் ஒரே வாரநாள் என்ற அடிப்படை உருவானது.
தேதி:
வாரநாட்கள் எனும் காலக்கணக்கைக் கொண்டு மனிதனால் 7 நாட்களுக்கு மேல் காலத்தை கணக்கு வைக்க முடியாமல் போனது. வாராவாரம் செய்யும் காரியங்களுக்கு மட்டுமே அது பயன்பட்டது. புனித நாட்களில் புனித கடமைகளை செய்தான். கொடுக்கல் வாங்கல்களை 7 அல்லது 7 மடங்காக செய்ய முடிந்தது. ஆனால் இதை வைத்து நெடுங்காலத்திற்கு கணக்கு வைக்க இயலாமல் போனது அல்லது சிரமமாக இருந்தது. எனவே ஏழுக்கும் அதிகமான நாட்களை கணக்கு வைக்க மனிதனுக்கு இன்னொரு காலக்கணக்கு தேவைப்பட்டது. அல்லாஹ் தேதியை வழங்கினான்.
தேதி என்பது நாட்களை எண்ணி அடையாளமிடும் காலக்கணக்காகும். மனிதன் எதையுமே ஒரு கருவியை கொண்டுதான் செய்ய முடியும். ஒரு மனிதனை உக்காரவைத்து *சொடுக்கு போட்டு விநாடிகளை எண்ணி காலத்தைக் கணக்கிடு* என்று சொல்ல இயலாது. எனவே மனிதன் அல்லாஹ்வின் படைப்புகளை கருவிகளாக கண்டான். அல்லாஹ்தான் சில படைப்புகளில் காலம் காட்டும் கருவிகளை அமைத்தான் என்பது முட்டாள் மனிதனுக்கு விளங்கவில்லை.
ஒவ்வொரு மனிதனும் படைப்புகள் காட்டும் காலத்தை அடையாளம் காணலானான். ஒரு நாள் என்பதை சூரியனைக் கொண்டு அடையாளம் கண்டவன், ஒரு வாரம் என்பதை 7 முறை சூரியனைக் கொண்டு அடையாளம் கண்டவன், அதற்கு மேலுள்ள நாட்களை நட்சத்திரங்களை கொண்டு அடையாளம் கண்டான். ஒருவன் சூரியன் இருக்கும் நட்சத்திரக்கூட்டதை வைத்து நாட்களை மனிதன் எண்ணினான். ஒரு நட்சத்திரத்தில் இருந்து அதே நட்சத்திரத்தில் சூரியன் மீண்டும் வருவதற்கு 365 நாட்கள் ஆனது. மனிதன் நாட்களை எண்ண மறந்துபோனாலும் காலக்கணக்கை காட்டும் கருவியாக நட்சத்திரம் விளங்கியது. எனினும் 365 நாட்கள் என்பது பெரிய காலமாகிப் போனது. 7 க்கும் 365க்கும் இடையே மனிதனுக்கு சிறிய கால அளவுகள் தேவை. சென்னையிலிருந்து கோவை வரை எத்தனை மேட்டர் தூரம் என்று நாம் யாரும் சொல்லமாட்டோம். அது அளவில் பெரிதாக இருக்கும். அதற்கு இலகுவாக இருப்பது கிலோமீட்டர் கணக்கே. அதே போல சட்டை தைக்க துணி வாங்க செல்லும் நாம் கிலோ மீட்டர் அளவில் துணி வாங்க மாட்டோம். அதற்கு மீட்டர் அளவுதான் இலகுவானது. ஆக மனிதனின் தேவைக்கேற்ப அளவுகள் சிறுதும் பெரிதுமாக இருக்கவேண்டும்.
எனவே 365 ஐ மேலும் சிறு அலகுகளாக பகுக்க மனிதன் வானை நாடினான். வானிலிருக்கும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு வடிவங்களை கற்பனை செய்தான். அந்த வடிவங்களையே அவன் ஒரு காலத்தின் பெயராக அழைத்தான். சூரியன் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்திற்கு அந்த நட்சதிரக்கூட்டதில் இருப்பதை அறிந்தான். இந்தியா என்று அழைக்கப்படும் நிலப்பரப்பில் மேஷம் என்றொரு நட்சத்திரக் கூட்டத்திற்கு பெயரிருந்தது, இதே நட்சத்திரக் கூட்டம் மத்திய ஆசியாவில் ஃபவர்தீன் என்று அழைக்கப்பட்டது, ஆப்கானிஸ்தானில் ஹமல் என்றும் பாஷ்தோவில் வ்ரை என்றும் அழைக்கப்பட்டது. சூரியன் இந்த நட்சத்திரக் கூட்டத்தில் எத்தனை நாள் இருக்கும் என்று அறிந்து வைத்திருந்தான். அதையே அவன் ஒரு காலக் கணக்காக எடுத்தான். சூரியன் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் நுழையும் முதல் நாளை மேஷம் 1 என்று எண்ணிட்டு அறிந்தான். இரண்டாம் நாளை மேஷம் 2 என்று எண்ணினான். இவ்வாறு வார நாட்களுக்கு பெயர் கொடுத்த மனிதன் அதற்கு எண்ணிக்கையும் கொடுத்தான். மேஷம் எனும் ராசியில் சூரியன் எத்தனை நாள் இருக்கும் என்பது அவனுக்கு தெரியும். அந்த எண்ணிக்கை முடிந்ததும் ரிஷபம் எனும் விண்மீன் கூட்டத்தில் சூரியன் நுழையும். அங்கே இருக்கும் நாட்களை ரிஷபம் 1 ரிஷபம் 2 என்று எண்ணலானான். இவையே தேதிகள்
இன்னொரு மனிதன் நிலவை பார்த்தான். அது 29 அல்லது 30 நாட்களில் தனது வடிவங்களை மாற்றுவதைக் கண்டான். கூர்ந்து கவனித்தான். அதன் வடிவங்களில் இருந்து தேதிகளை எடுக்கலாம் என ஆசைப்பட்டான். எண்ணி வைக்க சோம்பேறித்தனம் கொண்டுதான் வடிவங்கள் தேதியை காட்டதா என ஆசைப்பட்டான். ஆனால் வடிவங்கள் அவனை ஏமாற்றவே, ஆரம்ப வடிவத்தை மட்டுமே எடுத்து தேதியை அறிய முற்பட்டான். அது அவனுக்கு அழகாக காலத்தை கணக்கிட உதவியது. சூரியன் விண்மீன் கூட்டத்தில் சஞ்சரிப்பதை கணக்கிட மனிதனுக்கு சற்று ஞானம் அதிகமாக தேவைப்பட்டது. ஆனால் நிலவின் முதல் வடிவம் மனிதனுக்கு எளிதாக தேதியைக் காட்டியது. நிலவின் முதல் வடிவம் தெரிந்து மீண்டும் முதல் வடிவம் தெரிவதற்கு இடைப்பட்ட காலத்தை மனிதன் ஒரு மாதம் என்றழைத்தான். மீண்டும், அல்லாஹ்தான் பிறையை மாதம் காட்டியாக அமைத்தான் என்பது முட்டாள் மனிதனுக்கு தெரியவில்லை. முதலில் தெரியும் மெல்லிய பிறையின் இரவை மனிதன் முதல் தேதி என்றழைத்தான். மீண்டும் அதே வடிவம் அவனுக்கு தெரியும் வரையுள்ள காலத்தை மனிதன் ஒரு மாதம் என்று அழைத்து அதற்கும் எளிமையாக பெயர்கொடுத்து தேதிகளை தெரிந்துவந்தான். முதல் பிறை தோன்றும் இரவு தேதி-1, அதன் மறு இரவு தேதி 2 இவ்வாறு ஒவ்வொரு நாளாக தேதிகளை எண்ணுவான். 29 நாள் முடிந்த உடனே இரவில் பிறை தெரிகிறதா என பார்த்தான். பிறை தெரிந்தால் அந்த இரவை அடுத்த மாதத்தின் முதல் தேதியாக எண்ணுவான். பிறை தெரியாவிட்டால் அந்த நாளை நடப்பு மாதத்தின் 30ம் தேதியாக எண்ணினான். மனிதனுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் தூதர்களை அனுப்பி இவ்வாறுதான் காலத்தைக் கணக்கிட வேண்டும் என அல்லாஹ் நினைவூட்டி வந்தான். அதனால் 30 நாட்கள் முடிந்தும் பிறை தெரியாவிட்டால் அதற்கு மேலும் நாட்களை எண்ணமாட்டான். அடுத்த மாதத்தின் நாட்களை எண்ணத்துவங்குவான். *ஒவ்வொரு நாளும் மனிதன் தேதியை எண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமா? மனிதனுக்கு இதைவிட்டால் வேறு வேலையே இல்லையா?* ஒவ்வொரு நாளும் எண்ணிக்கொண்டிருக்க தேவையே இல்லை. இதற்கும் மனிதன் எளிமையாக வாரநாட்களைப் பயன்படுத்தினான். புதன் கிழமை இரவில் அவனுக்கு பிறை தெரிந்து தேதியை துவங்கினால் மீண்டும் 4 புதன்கிழமைகளுக்கு அவன் பிறையை தேடவேண்டிய தேவையே இல்லை. புதன் கிழமைகளை மட்டுமே அவன் நினைவில் கொண்டு எண்ணுவான். 4ம் புதன் கிழமை முடிந்த உடன் வியாழன் இரவில் பிறையை தேடுவான் தெரிந்தால் அடுத்த 4 வாரங்களுக்கு அவனுக்கு தேதிக்கு பிரச்சனையே இல்லை.
இவ்வாறுதான் மனிதன் எளிமையாக காலக்கணக்கினை அறிந்துகொள்ள இறைவனிடம் கற்றுக்கொண்டான். இப்போது சூரிய தேதியா சந்திர தேதியா எனும் சிக்கல் வந்தது. இரண்டுமே அவனுக்கு தேவைப்பட்டது. வின்மீன்தேதிகள் கணக்கிடுவதற்கு சற்று சிரமமானவை. மேலும் விண்மீன் கணக்கு எல்லோருக்கும் தேவைப்படவில்லை. காலநிலையை அறிந்து அதன் மூலம் தொழில் செய்பவருக்கு மட்டுமே அது தேவைப்பட்டது. எனவே விவசாயம் செய்வோர் விண்மீன் நாட்காட்டியை பயன்படுத்தினர். அதில் அவர்கள் ஆகப் பெரிய அலகான 365நாட்களைக் கொண்ட ஆண்டுகளை தெரிந்துகொண்டனர். மிகவும் எளிமையான பிறைகளில் இருந்து மாதக்கணக்கை அறிந்துகொண்டனர்.
சூரியன் வானில் ஓரிடத்திலிருந்து மீண்டும் அதே இடத்திற்கு வரும் காலத்தை ஒரு நாள் என்று மனிதன் அறிந்தான். ஏழு நாட்களை ஒரு வாரம் என்றறிந்தான். அவற்றில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயரிட்டு அழைத்தான். சூரியன் ஒரு நட்சத்திலிருந்து மீண்டும் அதே நட்சத்திரத்தில் தோன்றுவதை ஒரு ஆண்டு என்றறிந்தான். இந்த ஆண்டை அறிந்தால்தான் சோற்றுக்கு வழி என்பதை அறிந்தான். ஆக அவனது மிகக்குறிய காலக் கணக்கான நாள் சூரியனின் நிலையை அடிப்படையாக கொண்டது, அதைவிட சற்று பெரிதாக இருந்த காலக்கணக்கும் சூரியனை அடிப்படையாயக் கொண்டது. ஆகப்பெரிய காலக்கணக்கான வருடமும் சூரியனை அடிப்படையாகக்கொண்டது. ஆனால்.....!
மாதம் என்று அவன் அளந்தது மட்டும் நிலவை அடிப்படையாகக்கொண்டு அமைந்தது. இதனால் என்ன பிரச்சனை?
நாளும் கிழமையும் எங்கே ஆரம்பித்து எங்கே முடியுமென்று ஏற்கனவே பார்த்தோம். மனிதன் உலகெங்கும் வியாபித்ததால் கிழமை பசிபிக் பெருங்கடலுக்கு மேற்கே துவங்கி பசிபிக் பெருங்கடலுக்கு கிழக்கே முடிந்தது. ஒவ்வொரு பகுதியிலும் கிழமைக்கு வெவ்வேறு பெயர்கள் இருந்தன. ஆனால் உலகெங்கும் வியாபித்த மார்கமான இஸ்லாம், மதமான கிருத்தவம் இன்ன பிற கலாச்சாரங்களில் மட்டும் வாரநாட்களின் வழிபாடுகள் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே கிழமையில் அமைந்தன. தேதிகள்? எவ்வாறு வாரநாட்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர்களில் அழைக்கப்பட்டதோ அதேபோல தேதிகளும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு எண்ணிக்கையிலும் அமைந்தன. மேலே நாம் சொன்ன மேஷ ராசியை பல்வேறு மக்கள் அடையாளம் கண்டிருந்தாலும் பல கலாச்சார மக்கள் வேறு பெயர்களையும் வேறு எண்ணிக்கைகளையும் கையாண்டுவந்தனர். ஒரே கிழமையில் இருக்கும் இரு ஊர்களில் இரு தேதிகள் இருந்தன. ஆனால் இங்கேயும் சர்வதேசம் வந்தது. உலகெங்கும் பயணிக்க தொடங்கிய மனிதன் தனது மார்கத்தையும் மதத்தையும் உலகெங்கும் அறிமுகப்படுத்தினான். இதனால் அவனது வழிபாடுகள் அவனது மார்க்கம்/மதம் சொன்ன தேதிகளில்தான் அமையவேண்டியிருந்தது. கிருத்துவர்களின் பண்டிகைகள் காலநிலை நாட்கட்டியான அவர்களது கிரிகோரியன் கலண்டரில் அமைந்தது. எனவே உலகம் முழுவதும் அதே தேதியில் அந்த பண்டிகையை கொண்டாடினர். காலநிலை நாட்காட்டி நாம் மேலே சொன்ன விண்மீன் நாட்காட்டியுடன் 99.99% ஒற்றுமையானது. இதில் தேதிகள் சூரியனை தவிர வேறெந்த அளவையும் கொண்டு எண்ணப்படுவதில்லை. ஒரு வருடமென்பது ஒரு காலநிலை முதல் அதே காலநிலை மீண்டும் வரும்வரையிலான நாட்களாகும். இது சராசரியாக 365 ¹⁄ நாட்களைக்கொண்டது. ஆண்டு எனும் இந்த பெரிய கால அளவை பகுப்பதற்காக அவர்கள் எந்த வானியல் நிகழ்வுகளையும் கணக்கெடுக்காமல் அவர்கள் விரும்பியவாறு ஒரு ஆண்டை 12ஆக பகுத்து ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட நாட்களை வரையறுத்தனர். ஒவ்வொரு பகுதியையும் மாதமென்றழைத்தனர். கவனிக்க! இவர்கள் மாதமென்றதும் அல்லாஹ் மாதத்திற்காக உருவாக்கிய முதல் பிறைக்கும் எந்த தொடர்புமில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் ஜானுஅரி ஃபெப்ருஅரி என்று பெயரிட்டு, தேதிகளை இட்டு, நாட்களை எண்ணினர். இவர்களின் தேதியில் பிறைகள் இடம்பெறவே இல்லை. வெறும் நாட்களே இருந்தன. இவ்வாறு நாட்கள் மட்டுமே இருந்ததால் இவர்களின் தேதி அந்த நாள் ஆரம்பிக்கும் இடத்திலேயே ஆரம்பித்து உலகமும் முழுவதும் ஒரே தேதியாக இருந்தது. இதனால் உலகம் முழுவதும் கிருத்தவர்கள் ஒரே நாளில் பண்டிகைகளை கொண்டாடினர். கிருத்தவர்கள் ஒரே நாளில்தான் பண்டிகைகளை கொண்டாடினர் என்பது பல காலம் உலகிற்கே தெரியாமல் இருந்தது. எதுவரை?
மனிதன் பயணிக்கலானான். காலால் பயணித்தான். கால்நடைகளில் பயணித்தான், கப்பலில் பயணித்தான், எண்ணையை எரித்து வானில் பறந்தான். சில காலத்திலேயே மனிதன் முன்னேறி மின்சாரம் எனும் ஆற்றலைக் கண்டறிந்தான். கண்டறிந்த சில காலங்களிலேயே மனிதன் பெரும் தூரத்தை தாண்டி தகவலறிய புறாவை பறக்கவிடுவதையும் இன்ன பிற சாதனங்களை பயன்படுத்துவதையும் நிறுத்திக்கொண்டு மின்சாரத்தில் தொலைவில் இருக்கும் மனிதனை தொடர்புகொண்டான். இவனும் அவனும் ஒரே நாளில் கிருத்தவ பண்டிகைகளை கொண்டாடுவதை அவன் அறிந்தான். விளைவு என்ன...?
அருகே இருந்த குல்லாக்காரனும் விஷயத்தை ஒட்டுக்கேட்டான். இவனுக்கும் தொலைவில் இருக்கும் இன்னொரு குல்லாக்காரன் அதே நாளில் இறைவனை வழிபட்டானா என அறிய ஆவல். இவனும் அதே மின்சார கருவியை வாங்கி அந்த குல்லாக்காரனை அணுகினான். அந்தோ பரிதாபம்! அந்த குல்லாக்காரன் வேறொரு பெருநாளில் இறைவனை வணங்கிவிட்டான். இவனுக்கோ பெருத்த அவமானம். வெள்ளை அங்கிக்காரன் நமது குல்லா இனத்தையே அவமானிப்பானே! நாளை முதல் நான் எவ்வாறு குல்லா போடுவேன் என்று வெட்கினான். அந்த குல்லாக்காரனிடம் மீண்டும் விசாரித்தான். பிறையை பார்த்தாயா? ஆம் பார்த்தேன்! என்று பார்த்தாய்? புதன் கிழமை! தவறிழைத்துவிட்டாயே, செவ்வாய்க்கிழமையல்லவா பார்த்திருக்கவேண்டும், நாங்கள் செவ்வாய்க்கிழமைதானே பார்த்தோம்? செவ்வாய்க்கிழமை எங்களுக்கு 29ம் இரவல்லவா? அன்று எவ்வாறு பிறை பார்ப்பது புதன்கிழமைதானே எங்களுக்கு 30 ஆம் இரவு! என்ன! செவ்வாய்கிழமை உனக்கு 29ம் இரவா? மூர்ச்சையானான் இந்தக் குல்லாக்காரன்.
பறந்தான் உலகெங்கும்! ஆய்வு செய்தான்! ஒரே கிழமையில் இரண்டு தேதிகளா? இறைவனுக்கு மாறு செய்துவிட்டோமா? வெள்ளை அங்கிக்காரன் முன்னாலும் காவி அங்கிக்காரன் முன்னாலும் நான் இனிமேலும் எவ்வாறு சுயமரியாதையோடு குல்லா அணிவேன் என்பதே அவனது கவலையாக இருந்தது. ஆராய்ந்தான்! கண்டறிந்தான் அந்த உண்மையை.
அன்று செவ்வாய்க்கிழமை! பெருங்கடலுக்கு சற்று மேற்கே சென்று நின்றான். மத்தியில் இருந்த சகோதரன் ஒருவனை மத்திய ஆசியாவில் நிறுத்தினான். இளைய சகோதரனை பெருங்கடலுக்கு சற்று கிழக்கே இருக்கும் பூமியில் நிறுத்தினான். செவ்வாய்க்கிழமையின் இரவு ஆரம்பமானது. பிறையைத் தேடினான்! தேடினான்! தேடினான்! கண்ணுக்கெட்டவில்லை. மேகம் மறைத்திருக்கும் அதன்மீது பழிபோடலாமென்றால் ஒரு துண்டு மேகம் கூட இல்லை. காத்திருந்தான். சில மணி நேரத்தில் செவ்வாய்க்கிழமையை மத்திய ஆசியாவில் இருக்கும் சகோதரன் அடைந்தான். மின்சார மணியை அடித்தான். என்ன! உனக்கு பிறை தெரிந்ததா சகோதரா? எனக்கு தெரியவில்லையே. செவ்வாய்க்கிழமைதானே உனக்கும் எனக்கும். உனக்கு முன்பே, நான் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கும்போதே அதைப் பிடித்துப் பார்த்தேனே அதில் பிறை இல்லையே. காத்திருந்தான்! இளைய சகோதரனின் மணியோசை கேட்டது. அவனுக்கும் அந்த செவ்வாய்கிழமை பிறையுடன் சென்றுள்ளது. மூத்தவனுக்கு காரியம் பிடிபட்டது. “கிழமை பெருங்கடலில் துவங்குகிறது. ஆனால் தேதி பெருங்கடலில் துவங்குவதில்லை. இடையே எங்கேயோ துவங்கிவிடுகிறது. இதனால் எனக்கு ஒரு தேதி தாமதமாகிறது. உண்மையை வெளியே சொன்னால் வெள்ளை அங்கிக்காரனும் காவி அங்கிக்காரனும் நாக்கைப்பிடுங்கும் கேள்விகளைக் கேட்பார்கள். அவர்கள் புத்திசாலிகளாக சூரியனையும் நட்சத்திரத்தையும் தேதிகளாக எடுத்துக்கொண்டனர். நாம் இந்த பழங்கதை குல்லா மார்க்கத்தை எடுத்ததால் பிறை தேதிதான் கிடைத்தது. குல்லாவை மாற்றி அங்கி அணிந்தாலும் அசிங்கம். சமாளிப்போம்!” என்றான் மனதிற்குள்.
ஊருக்கு புறப்பட்டான் மூத்தவன். மின்சார கணக்குப் பெட்டியைத் தட்டினான். அமாவாசைத் தேதிகளை மின்சாரப் பெட்டியில் சிலந்தி வலைகளில் வெளியிட்டிருந்தார் ஒருவர். அது அங்கிக்காரர்களின் நாட்காட்டியான காலநிலைக்காட்டியின் தேதிகளில் இருந்தது. நிலவினால்தானே அமாவாசை ஏற்படுகிறது. அதை வைத்து நிலாக்காட்டி என்றும் கடவுள் காட்டி என்றும் சொன்னால் பழங்கதை குல்லா சமூகம் ஏற்றுக்கொள்ளும். நமக்கும் சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வெள்ளை அங்கிக்கு மாறாமலேயே கவுரமாக வாழலாம்! நினைத்தான் மூத்தவன். காலநிலைக்காட்டியில் அமாவாசை தேதிகளை பதிவெடுத்தான். ஒட்டினான் சந்திரக் கலைகளை. பெயரிட்டான் “கடவுளின் நிலாக்காட்டி” என்று. ஒரு ராச்சியத்தையே ஏமாற்றினான் மூத்தவன். பார்த்துகொண்டிருந்த மத்தியஸ்தன் இந்த நிலாக்காட்டி வெள்ளை அங்கிக்காரர்களின் திசையைச் சார்ந்தது! இது நமக்கு வேண்டாம்! என்றான். அவனும் மின்சாரக் கணக்குப்பெட்டியை தட்டி பழங்கதைக்காரர்களின் முன்னோக்கும் திசையை வைத்து அதே அமாவாசை நிலாக்காட்டியை வடிவம் மாற்றினான். இவன் கலைகளை ஒட்டாமல் அதே ராச்சியத்தை ஏமாற்றுகினான்.
உண்மை அறிந்த இளையவன் உண்மையை உலகிற்கு உரக்கச்சொன்னான். கிழமை பெருங்கடலில் துவங்குகிறது ஆனால் தேதி இடையில் எங்கோ துவங்குகிறது. கிழமையை துவங்கியவர்கள் சிலர் பழைய தேதியில் இருக்கையில் பலர் அதே கிழமையை புதிய தேதியில் துவங்குகின்றனர். இதுவே என் இறைவன் விதித்த பழமை விதி. இதுதான் இந்த பழங்கதை குல்லா மார்க்கம். இதுதான் உண்மை. ஆனால் காலம் கடந்துவிட்டது வெள்ளை அங்கிக்கு மாறவில்லை எனினும் என்றோ உள்ளுக்குள் வெள்ளை அங்கியை அணிந்த தனது தமையன்கள் ஒரு கிழமைக்கு ஒரு தேதிதான் எனும் வெள்ளை அங்கிக் காலநிலைக்காட்டியை பழங்கதை மக்கள் மனதில் விதைத்துவிட்டனர். அதுதான் பழங்கதை என்றும் எமது இளைய சகோதரன் சொல்வது உங்கள் கடவுளுக்கே அடுக்காது என்றும் சொல்லலாயினர். கடவுளின் நிலாக்காட்டிதான் உங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும். ஒற்றுமையே கிலாபத்தை ஏற்படுத்தும். தம்பி சொல்வது ஒரு கிழமைக்கு இரு தேதிகளை ஏற்படுத்தும் புதுமை, மடைமை. ஒரு கிழமைக்கு இரு தேதிகள் ஏற்பட்டால் பூமியில் பிரிவினை ஏற்படும். எமது பழங்கதை குல்லா சமூகத்தில் குழப்பம் தோன்றும் என்றார்கள்.
உண்மை இதுவே! கிழமைக்கு அடிப்படை சூரியன் மட்டுமே. கிழமை பெருங்கடலில் துவங்குகிறது. ஆங்கிலக் காலண்டரில் தேதிக்கு அடிப்படை சூரியன் மட்டுமே எனவே அதுவும் கிழமையுடன் சேர்ந்து பெருங்கடலில் துவங்கும். முஸ்லிம்களின் தேதி பிறையை அடிப்படையாகக் கொண்டது. அது பெருங்கடலில் துவங்காது. இடையே பெருநிலத்தில் எங்கோ துவங்கும். அது துவங்கும் முன்னரே கிழமைத் துவங்கி பாதி பூமியை அடைந்திருக்கும். மீதி பூமிக்கு பிறை புது தேதியை வழங்கும், பாதி பூமிக்கு பழைய தேதிதான். இதுவே பழங்கதை மார்க்கம்.