Monday 17 July 2017

ரமளான் வந்துவிட்டால்...

இது 2017 ஷஅபானின் இறுதியில் நாம் வாட்சாப்பில் வெளியிட்ட மென்பிரசுரம். தேவை கருதி இங்கே வெளியிடுகிறோம்
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
*ரமலான் மாதம் வந்து விட்டால் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்”*
நபிமொழி புகாரீ (1899), முஸ்லிம் (1957)
ஆனால் ஷஅபானின் இறுதி நாட்கள் வந்துவிட்டால் ஹிஜ்ராவினர் கட்டவிழ்க்கப்படுகிறார்கள். *அமாவாசைக்கு மறுநாள் நோன்பு பிடியுங்கள்! அமாவாசைக்கு மறுநாள் நோன்பு பிடியுங்கள்!! அதுவே சரியான நாள்!!!* என்று கூவிக் கூவிக் கடை விரிக்கிறார்கள்.
அல் குர்ஆனில் 27 இடங்களில் கமர் என்று நிலவைப்பற்றி பேசும் அல்லாஹ் ஓரிடத்தில் கூட அதை கணக்கிட்டு வழிபாடுகளை செய்யுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் ஹிலால்களை பற்றி சொல்லும் ஒரே இடத்தில் (2:189) ஹிலால்கள் ஹஜ்ஜிக்கும் மக்களின் மற்ற வழிபாடுகளுக்கும் நேரம் குறிக்கப்பட்ட (மவாகீத்) டைம் டேபிள் என்கிறான். டைம் டேபிளை பார்த்து நாம் எப்படி வேலைகளை செய்வோமோ அதே போல அல்லாஹ் உருவாக்கிய டைம் டேபிளான ஹிலால்களை பார்த்து வணக்க வழிபாடுகளை செய்யவேண்டும். கமருக்கும் ஹிலாலுக்கும் வித்தியாசம் தெரியாத இக்கூட்டம் மக்களை வழிகெடுக்கிறது.
மேலும் ஞாயிறும் திங்களும் கணக்காக இருக்கின்றன (6:96) ஞாயிறும் திங்களும் கணக்கில் இருகின்றன (55:5) என்ற இறைவசனங்களைத் திரித்தும் இவர்கள் வழி கெடுக்கின்றனர். இதில் முதல் வசனம் இவ்விரு கோள்களும் காலக்கணக்கை காட்டுவதாகும் இரண்டாம் வசனம் இவ்விரு கோள்களும் அல்லாஹ் விதித்த கணக்கின் படி இயங்குவதாகவும் சொல்கின்றன. சூரியன் பகலில் காலத்தை காட்டுவதாகும் நிலவு இரவில் நேரத்தை காட்டுவதாகவும் உள்ளது. இவற்றை தவிர நிலவு மாதத்தை காட்டுவதில்லை. ஹிலால்கள்தாம் மாதத்தை காட்டுகின்றன.
*நீங்கள் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் எண்ணிக்கையில் அறிந்து கொள்ள அதற்கு மன்ஸில்களை ஏற்படுத்தியுள்ளோம்”* 10:5 என்ற வசனத்தையும் இக்கூட்டம் திரித்து அமாவாசை கணக்கிற்கு ஆதாரமாக காட்டுகிறது. இதில் இடம்பெறும் மன்ஸில் என்ற வார்த்தைக்கு இன்றுவரை அர்த்தம் சொல்ல இயலாமல் இக்கூட்டம் அல்லோலப்படுகிறது. படித்தரம் என்றும் தங்குமிடம் என்றும் ஸ்டேஜ் என்றும் மக்களை குழப்பியவர்கள் தொடர் கெடுபிடி கேள்விகளுக்குப்பிறகு இப்போது மன்ஸில் என்றே எழுதத் துவங்கிவிட்டனர். பல்வேறு அறிவியல் அற்புதங்களை விளக்குவதாக மன்ஸில் என்ற வார்த்தை இருக்கிறது. அதற்கு பிறை என்றோ படித்தரம் என்றோ அர்த்தமே இல்லை.
ஹிலால்கள் என்பவை மக்களுக்கும் ஹஜ்ஜுக்கும் நிர்ணயிக்கப்பட்ட காலங்களாக இருக்கின்றன (2:189) என்ற வசனத்தை திரித்து பிறையின் வடிவங்கள் தேதிகள் என்று மக்களை ஏய்க்கின்றனர் ஹிஜ்ரா அறிஞர்கள்.
🌚 *அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்*
ஹிலால்களுக்கும் அப்துல் காதருக்கும்தான்  தொடர்பிருக்கிறது. *அண்ணலாரின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது* என்கிறார்கள் அவரின் துணைவியார். மேற்சொன்ன வசனங்களுக்கு நடைமுறையாய் வாழ்ந்து காட்டிய பெருமானார் ஹிலாலை பார்த்து நோன்பு பிடித்தார்கள் . அதுவே மேற்சொன்ன வசனங்களுக்கு விளக்கம்.
*காலண்டரை பார்த்து நோன்பு பிடித்தால் என்ன கேடு* *விஞ்ஞானம் வளர்ந்து விட்டதே*
குர்ஆனை வாழ்க்கையாக கொண்ட நபிகளார் சொல்கிறார்கள்.
*முந்திக்கொண்டு ஷஅபானின் இறுதி நாளில் நோன்பு பிடிக்காதீர்கள்*
*ஹிலாலை "பார்க்காமல்" நோன்பு பிடிக்காதீர்கள். "ஹிலாலை" பார்க்காமல் பெருநாள் கொண்டாடாதீர்கள்*
சவுதி காலண்டர் பிறை , காப்பாடு பொய்ப்பிறை, அமாவாசை பிறை ஆகியவற்றிற்கு சாவு மணி அடிப்பதுதான். நபிகளாரின் மேற்படி கட்டளைகள்.
சவுதி காலண்டர் பிறையை பார்த்து ஒரு நாள் முந்துபவர்களும், போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்கும் முன்பாக அமாவாசை விரதம் இருப்பவர்களுக்கும் நபி   அவர்களுக்கு மாறு செய்கின்றனர். வஹியை நிராகரிகின்றனர்.
🌙ஹிலாலை பார்த்து நோன்பு வையுங்கள். ஹிலாலை பார்த்து பெருநாள் கொண்டாடுங்கள்🌙
*குர்ஆன் வழி வாழுங்கள்**நபி வழி வாருங்கள்*
வெளியீடு: www.piraivasi.com
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙