Friday 8 December 2017

அரபு மொழியும்! அமாவாசைகளும்!! -2


இந்த வீடியோவில் பேசும் ஹிஜ்ரா அறிஞரின் அரபு மொழி அறியாமையை பாகம் ஒன்றில் கண்டீர்கள். இதில் அவர் வைக்கும் மற்ற வாதங்களின் உண்மை நிலையை பார்ப்போம்

நாளின் ஆரம்பம் இரவு என்றால் தொழுகை நேரங்கள் ஏன் பஜ்ரில் ஆரம்பிக்கின்றன? என்கிறார். மக்ரிபில் இருந்து தொழுகை நேரங்களை அச்சிட வேண்டியதுதானே. தவ்ஹீது பள்ளிகளிலும் பஜ்ரில் இருந்துதானே தொழுகை நேரங்கள் துவங்குகின்றன? என்றும் வினா எழுப்புகிறார்

எங்களிடம் அமாவாசை பார்முலா உள்ளது என்று பல காலமாக பொய்யை வியாபாரம் செய்துவந்த ஹிஜ்ரா கமிட்டியும் அவர்களுடன் வியாபார தொடர்புள்ள சில கம்பெனிகளும்தான் இக்கேள்வியை கேட்கின்றன.

இவர்களால் அமாவாசை பார்முலாவை பயன்படுத்தி இன்றுவரை ஒரு காலண்டர் சாப்ட்வேரை உருவாக்க முடியவில்லை. 100 வரிகளுக்குள் இருக்கும் அந்த பார்முலாவை பயன்படுத்த தெரியாமல் நாசா வெளியிட்ட அமாவாசை தேதிகளை 6000 - 7000 வரிகளுக்கு டைப் செய்து, அந்த ஆங்கில தேதிகளின் மீது இஸ்லாமிய மாதங்களின் பெயர்களை ஒட்டும் இவர்களிடம் தொழுகை நேரக் கணக்குகளை எப்படி விளக்க இயலும்.

தொழுகை நேரக்கணக்குகள் அனைத்தும் சூரிய நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. கவனிக்க! சூரியனை அல்ல. சூரிய நாட்காட்டியை அடிப்படையாக கொண்டுதான் தொழுகை நேரங்களை கணக்கிட இயலும். ஏன்?

தொழுகை நேரங்கள் ஏன் மாறுகின்றன? ஏன் வருடத்தின் எல்லா நாட்களிலும் பஜ்ர் 5:30க்கும் லுஹர் 12 மணிக்கும், அஸ்ர் 3:30க்கும், மக்ரிப் 6:30க்கும் இஷா 7:45 க்கும் வருவதில்லை?

தொழுகை நேரங்கள் சூரியனின் நிலையை அடிப்படையாக கொண்டவை. சூரியன் உச்சத்தில் இருந்து சாயத்துவங்கும் நிமிடம் லுஹர் வேளையாகும். சூரியன் மறைந்த உடனே மக்ரிப் வேளை துவங்கிவிடும். சூரியனின் இந்த நிலைகள் வருடத்தின் எல்லா காலத்திலும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. குளிர் காலத்தில் சூரியன் தாமதமாக உதித்து விரைவாக மறைந்துவிடும். கோடை காலத்தில் சீக்கிரம் உதித்து தாமதமாக மறையும். ஆக தொழுகை நேரங்கள் சீசன் எனப்படும் காலநிலையை அடிப்படையாக கொண்டவை. காலநிலையை பிரதிபலிக்கும் ஒரு நாட்காட்டியை கொண்டுதான் தொழுகை நேரங்களை கணக்கிட இயலும். காலநிலையை பிரதிபலிக்கும் ஒரே நாட்காட்டி சூரிய நாட்காட்டியே.

இன்று நம் அனைவரிடமும் மொபைல் ஃபோன்களில் தொழுகை நேர சாப்ட்வேர்கள் உள்ளன. ஆகஸ்ட் 30 ம் தேதி 2017ம் வருடத்தின் தொழுகை நேரத்தை பாருங்கள். பின்னர் 2018, 2019, 2020, 2021, 2022 ஆகிய வருடத்தின் ஆகஸ்ட் 30ம் தேதியின் தொழுகை நேரங்களையும் பாருங்கள். ஆம்! ஒரே நேரம்தான். ஒரே சீசனில் ஒரே நாளில் தொழுகை நேரங்கள் ஒன்றாகவே இருக்கும். ஒரே வருடத்திற்கான தொழுகை நேர அட்டவணை 100 வருடங்களுக்கு போதுமானது. இதனால் சில பள்ளிகளில் தொழுகை நேரங்களை நிரந்தரமாக டைல்ஸ்களில் அச்சிட்டு பதித்துவிடுகின்றனர்.

இன்றிருக்கும் சூரிய நாட்காட்டியான கிரிகோரியன் நாட்காட்டியில் நாளில் துவக்கம் நள்ளிரவு 12 மணி. இந்த நாட்காட்டியை பயன்படுத்திதான் தொழுகை நேரங்களை கணக்கிடவேண்டும். அவ்வாறு கணக்கிட்டால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு வரும் தொழுகை ஃபஜ்ர் தொழுகைதான். இதன் காரணமாகவே தொழுகை அட்டவணையில் ஃபஜ்ர் தொழுகை முதலிடம் பிடித்துள்ளது. மேலும் தொழுகை நேரங்கள் ஹிஜ்ரி தேதியில் அட்டவணையாக எந்த பள்ளிகளிலும் இடப்படவில்லை. எல்லா பள்ளிகளிலும் ஆங்கில தேதிகளில்தான் தொழுகை நேரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஷஅபான் 8ம் தேதியின் முதல் தொழுகை ஃபஜ்ர் என்று எந்த தவ்ஹீத் பள்ளிகளிலாவது ஒட்டப்பட்டிருந்தால் ஹிஜ்ராக்களின் இந்த கேள்வியில் அர்த்தம் இருந்திருக்கும். சூரிய காலண்டர் ஹராம் என்று நாங்கள் பத்வா கொடுக்கவில்லை. சூரிய நாட்காட்டியை அடிப்படையாக வைத்து மட்டுமே தொழுகை நேரங்களை கணக்கிட இயலும் என்று அல்லாஹ் விதித்திருப்பதே சூரிய நாட்காட்டி மார்க்கத்தில் தடையில்லாதது என்பதை நிறுவ போதுமானது. சூரிய நாட்காட்டி ஹராம் அல்ல எனும் எங்களுக்கு சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் ஆங்கில தேதியின் முதல் தொழுகையாக அட்டவணையில் ஃபஜ்ர் இடம்பிடித்திருப்பது ஆச்சரியம் ஏதுமில்லை.

சூரிய நாட்காட்டி ஹராம் என்று சொல்லும் ஹிஜ்ராக்கள்

1. சூரிய நாட்காட்டியே பயன்படுத்தப்படாமல் அமாவாசை நேரங்களை கணக்கிடும் பார்முலாவை வெளியிட வேண்டும்.

2. சூரிய நாட்காட்டியே பயன்படுத்தப்படாமல் சந்திர தேதிகளை நேரடியாக பயன்படுத்தி தொழுகை நேரங்களை கணக்கிடும் பார்முலாவை வெளியிட வேண்டும்.

இவ்விரண்டையும் செய்யாதவரையில் ஹிஜ்ராக்கள் முனாஃபிக்குகளே

*சூரிய நாட்காட்டியை கொண்டு தொழுகை நேரங்கள் கணக்கிடப்படுவதால் ஃபஜ்ர் முதலிடத்தில் உள்ளது.*

++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ====

நாளின் ஆரம்பம் இரவாக இருந்தால் மக்ரிபுக்கு பிறகு ஹிஜ்ரி தேதி மாறவேண்டுமல்லவா? நீங்கள் அச்சிடும் காலண்டரில் ஜூன் 11ம் தேதி மக்ரிப் வரை ரமளான் 17 என்றும் மக்ரிபுக்கு பிறகு ரமளான் 18 என்றும் ஒரு ஆங்கில தேதிக்கு இரண்டு ஹிஜ்ரி தேதிகள் இடவேண்டுமல்லவா

Common daylight hours என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பகல் பொழுது இரு தேதிகளுக்கு பொதுவாகவே இருக்கும். ரமளான் 18இன் பகல் பொழுதும் ஜூன் 12ம் பகல் பொழுதும் பொதுவானது. இந்த அடிப்படையிலேயே உலகில் வித விதமாக அச்சிடப்படும் அனைத்து கலண்டர்களும் இருக்கும் உதாரணம் உம்முல் குரா காலண்டர்.

கேள்வியை கேட்கும் அறிஞருக்கு இக்கேள்வி அவரை நோக்கி திரும்பும் என்று சிந்திக்க இயலவில்லையே. பஜ்ரில் நாள் துவங்கும் என்று சொல்லும் ஹிஜ்ராக்கள் ரமளான் 13 க்கு 07.06.2017 என்று ஒரே தேதியை எவ்வாறு கொடுக்க இயலும். 07.06.17 இந்த நள்ளிரவு முதல் பஜ்ர் வரை ரமளான் 12ம் பஜ்ருக்கு பிறகு ரமளான் 13ம் என இரண்டு தேதிகள் வரவேண்டுமே?

++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ====

வரலாற்றில் யாராவது மக்ரிபுக்கு பிறகு தேதியை மாற்றினார்களா?

-ஹிஜ்ரா அறிஞர்

வரலாற்றில் யாராவது ஃபஜ்ருக்கு பிறகு தேதியை மாற்றினார்களா?

++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ====

*துல் ஹஜ் 8 லுஹரில் மினவுக்கு செல்லவேண்டும். அன்றய மக்ரிபும் இஷாவும் மினாவில் தொழவேண்டும். ஆனால் மக்ரிப்பில் நாள் துவங்கினால் (துல் ஹஜ் 9ன்) அரஃபா இரவின் மக்ரிப் இஷா மினாவில் தொழவேண்டும் என்று வந்திருக்கும்.*

-ஹிஜ்ரா அறிஞர்

இடத்தையும், வணக்கத்தையும், நாளின் பெயரையும் போட்டு குழப்பிக்கொண்டுள்ளார் ஹிஜ்ரா அறிஞர். இவர் 7 வருடம் மதரசாவில் என்ன செய்தார் என்று தெரியவில்லை.

(துல் ஹஜ் 9) அரஃபா இரவில் ஹாஜிகள் மினாவில் இருப்பார்கள். நபிகளாரும் மினாவில்தான் இருந்தார்கள். மக்ரிபுக்கு இஷாவும் மினாவில்தான் தொழுதார்கள். இல்லை என்று இந்த ஹிஜ்ரா அறிஞர் சொல்வதாக இருந்தால் அதற்கு ஆதாரத்தை இவர்தான் காட்டவேண்டும். துல் ஹல் 8ன் மக்ரிப் மற்றும் இஷா தொழுகையையும் துல் ஹஜ் 9ன் ஃபஜ்ர் தொழுகையும் நபிகளார் மினாவில் தொழுதார்கள் என இவர்கள் நிறுவட்டும்.

துல் ஹஜ் 9 அரஃபா நாள் முடிந்து துல் ஹஜ் 10 நஹ்ர் (ஜம்) இரவின் ஆரம்பத்தில் நபிகளார் முஸ்தலிபா நோக்கி பயணமானர்கள். துல் ஹஜ் 10ன் மக்ரிப் இஷா தொழுகைகளை ஜம்-இல் தொழுதார்கள் என்று தெளிவான சான்றுகள் உள்ளன.

அரஃபா இரவில் நபிகளார் முஸ்தலிபாவுக்கு சென்றதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நபிகளார் ஜம் இரவில்தான் முஸ்தலிபாவுக்கு சென்றார்கள். மேலும் ஜம் இரவு விடிவதற்குள் அரபாவில் நின்றுவிடவேண்டும் என்பது அரபாவில் நிற்பதற்கான கால அளவாகும். இவை அரஃபா பகலுக்கு பிறகு ஜம்உ இரவு வருவதை தெளிவாக நிறுவுகின்றன.

தாமதமாக வருபவர்கள் ஜம் இரவு விடிவதற்குள் அரபாவில் நிற்கவேண்டும் என்பதை ஹிஜ்ரா மவ்லவிகள் அரஃபா இரவு என்று தவறாக சித்தரிக்கின்றனர்.

ஜம்வு இரவு விடியும் முன் யார் அரஃபாவை அடைகிறாரோ அவர் ஹஜ்ஜை அடைந்தார். அபு தாவூத் 1949

முஸ்லிம் 2477. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் ஜம்-இல் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். ஒரேயோர் இகாமத்தில் மூன்று ரக்அத்கள் மஃக்ரிபையும் இரண்டு ரக்அத்கள் இஷாவையும் தொழுதார்கள்.

++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ====

மொழிவழக்கில் இரவு-பகல் என்று இரவை முதலில் சொல்வதால் ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்றாகுமா?” என்று ஒரு கேள்வியை கேட்டு விட்டு, “அல்குர்ஆனில் ஒரு சொல் முற்படுத்தி சொல்லப்பட்டால் அதைத்தான் முற்படுத்த வேண்டும் என்று நபி () அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை என்கிறார்

 பிறகு அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் "ஹஜருல் அஸ்வத்" அமைந்துள்ள மூலைக்குத் திரும்பிச் சென்று, அதில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். பின்னர் (அருகிலிருந்த) அந்த (ஸஃபா) வாசல் வழியாக "ஸஃபா" மலைக் குன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஸஃபாவை நெருங்கியதும் "ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்" எனும் (2:158ஆவது) வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, *"அல்லாஹ் முதலில் ஆரம்பித்ததை கொண்டு நானும் ஆரம்பிக்கிறேன்"* என்று சொன்னார்கள். அவ்வாறே, முதலில் "ஸஃபா" மலைக் குன்றை நோக்கிச் சென்று, அதன் மீது ஏறினார்கள். அப்போது அவர்களுக்கு இறையில்லம் கஅபா தென்பட்டது. உடனே "லாயிலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓரிறை உறுதிமொழியும் தக்பீரும் சொன்னார்கள்”. முஸ்லீம் – 2334

இந்த ஹதீஸில் அல்லாஹ் முதலில் எதைக்கொண்டு ஆரம்பித்தானோ அதைக்கொண்டு நானும் ஆரம்பிக்கின்றேன்என்று அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் ஒரு காரியத்தை ஆரம்பிக்க இரண்டு வழிமுறைகளை காட்டி தந்து இருக்கின்றார்கள், அதில் ஒன்று வலது புறத்தில் இருந்து ஆரம்பித்தல், இரண்டாது அல்லாஹ் முற்படுத்தியதை கொண்டு ஆரம்பித்தல் என்பது மேற்கண்ட ஹதீஸில் இருந்து தெளிவாக விளங்குகின்றது.

அல்லாஹ் சொல்லும் வரிசை முறையில் முக்கிய விஷயங்கள் இருகின்றன என்பதை நேரடி நபிமொழியில் கண்டோம். ஆனால் குர்ஆனிலேயே இதற்கு சான்றுகள் உள்ளன.

32:9 பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். (மேலும் பார்க்க 76:2 & 23:78)

6:1 அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்.  (மேலும் பார்க்க 6:14; 10:6; 2:164; 17:99; 6:79; 6:73; 27:60; 9:36; 14:32; 14:19; 14:10; 2:117; 20:4; 29:61; 6:1; 30:22; 18:51; 29:44; 32:4; 36:81; 42:11; 39:46; 64:3; 39:38; 42:29; 57:4; 43:9; 25:59; 10:3; 6:101; 31:25; 39:5; 50:38; 52:36; 35:1; 3:190; 11:7; 21:56; 46:33; 45:22)

அல்லாஹ் தான் படைத்தவற்றை பற்றி பேசும்போது முதலில் எதை படைத்தானோ அதையே முதலில் கூறுவான். வானங்கள் தாம் முதலில் படைக்கப்பட்டவை. எனவே வானத்தை முதலில் சொல்கிறான் அல்லாஹ். அதே போல ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் பார்வையை வழங்கும் முன் செவிப்புலனையே முதலில் வழங்குகிறான். ஆக அல்லாஹ் படைத்ததை, அல்லாஹ் ஏற்படுத்தியதை வரிசைக்கிரமத்திலேயே அல்லாஹ் சொல்வான். அல்லாஹ்வின் வார்த்தைகள் உண்மை என்பதாலும், அவை அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதாலும் அவை perfect ஆக பரிபூரணமாக இருக்கும். அல்லாஹ் சொல்லும் வரிசைக்கிரமங்கள் வீணுக்காக அல்ல. இதை மனதில் நிறுத்தி பின்வரும் வசனங்களை பாருங்கள்.

79:27-29 படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான். அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான் அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான்.

6:1 அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். இருள்களையும், ஒளியையும் ஏற்படுத்தினான்.

25:62 படிப்பினை பெற விரும்புபவனுக்கும், நன்றி செலுத்த விரும்புபவனுக்கும் இரவையும், பகலையும் ஒன்றன் பின் ஒன்றாக அவனே ஏற்படுத்தினான்.

இரவு பகல் என்று வார்த்தைகள் வரும் மற்ற வசனங்களை போலல்லாமல் இவை படைக்கப்பட்டதை பேசும் வசனங்களாகும். அல்லாஹ் இரவை முதலில் படைத்தான் என்பதற்கு இதைத் தவிர வேறு சான்றுகள் தேவையில்லை.

இதற்கு மறுப்பாக இவர்கள் வைக்ககூடிய இரண்டு செய்திகளை பார்ப்போம்.

*1. மர்யமே! உம் இறைவனுக்கு ஸூஜூது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக (என்றும்) கூறினர். (3:43)*

*2. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்;. (2:196)*

இந்த இரண்டு வசனத்திலும் ஸூஜூதையும் ஹஜ்ஜையும் முற்படுத்தி அல்லாஹ் சொல்லி இருக்கும் போது, நாம் நடைமுறையில் இந்த இரண்டையும் பின்னால் தானே செய்கின்றோம் என்று கேட்கின்றார்கள். இந்த கேள்வி நியாயமானது.

இந்த இரண்டு வசனங்களையும் நுனிப்புல் மெய்வதைப்போல வாசித்துள்ளார்கள் ஹிஜ்ரா கமிட்டியினர். இன்று நாம் தொழுகையில் ருகூவை முதலில் செய்கிறோம், பின்னர் சஜ்தா செய்கிறோம். இதே முறையில்தான் முந்தைய சமூகத்தினரின் தொழுகை இருந்ததா? நாம் தொழுவதைப் போலத்தான் மூஸா () ஈஸா () என அனைத்து நபிமார்களும் அவர்களின் சமூகத்தினரும் தொழுதனரா?

*இப்ராஹிமுக்கு (இறை) இல்லத்தின் இடத்தை நாம் அடையாளப்படுத்தியபோது “என்னுடன் எதையும் இணைகற்பிக்காதீர், மேலும் தவாஃப் செய்பவர்களுக்காகவும், நின்று வணங்குபவர்களுக்காகவும், ருகூ செய்பவர்களுக்காகவும், ஸஜ்தா செய்பவர்களுக்காகவும் எனது இல்லத்தை சுத்தப்படுத்துவீராக! மேலும் ஹஜ்ஜைப் பற்றி மக்களுள் அறிவிப்பீராக! நடையாகவும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் அவர்கள் உம்மிடம் வருவார்கள்! தொலைவான ஒவ்வொரு பாதையிலிருந்தும் அவைகள் (மெலிந்த ஒட்டகங்கள்) வரும்!" என்று (கூறினோம்)* 22:26-27

இங்கே தவாஃப், நின்று வணங்குதல், ருகூ & ஸஜ்தா ஆகியவை வெவ்வேறு வணக்கங்களாக சொல்லப்படுகிறது. முந்தய சமூகத்தில் ருகூ வும் சஜ்தாவும் வெவ்வேறு வணக்கமாக இருந்திருக்கலாம். அல்லது அவர்களுக்கு ஸஜ்தாவை முற்படுதியும் ருகூவை பிற்படுத்தியும் அல்லாஹ் சட்டம் வகுத்திருப்பான். அல்லாஹ் மட்டுமே இதை அறிவான். எனவே மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சொன்னதை பொதுவாக மாற்ற இயலாது. குர்ஆனின் மற்ற அனைத்து இடங்களிலும் ருகூ முதலில் வருகிறது. அவசர கோலத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்.

இரண்டாம் வசனத்திலும் புரிதல் குறைபாடு காரணமாகவே இவர்கள் இவ்வாறு சிந்திக்கின்றனர். ஹஜ் உம்ரா ஆகிய இரண்டு வணக்கங்களையும் தனித்தனியே இந்த வசனம் பேசுகிறது. மாறாக ஹஜ்ஜுடன் நாம் செய்யும் உம்ராவை பற்றி இவ்வசனம் பேசவில்லை. ஏனென்று பார்ப்போம்! ஹஜ்ஜில் மூன்று விதங்கள் இருகின்றன. இவர்கள் சொல்வதைபோல பொருள் கொண்டால் தமத்துஃ ஹஜ்ஜை மட்டுமே இந்த குறிப்பதாக அமையும் மற்ற இரு ஹஜ்ஜின் முறைகளும் இந்த வசனம் குறிக்காததைப் போல அமையும். அவ்வாறல்ல. இங்கே ஹஜ் எனும் வணக்கத்தை முக்கியத்துவம் கருதி முதலிலும் ஹஜ் அல்லாத மாதத்தில் செய்யப்படும் உம்ரா எனும் வணக்கத்தை தனியாக இரண்டாவதும் அல்லாஹ் சொல்கிறான். இது நமது சுய விளக்கம் அல்ல.

"கியாமத் நாள் வரை ஹஜ்ஜில் உம்ரா நுழைந்து விட்டது'' என்று அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: முஸ்லிம் 2137, அஹ்மத் 2173

ஹஜ்ஜின் ஒரு பகுதியாக உம்ரா இருக்கும்போது அதை தனித்தனியாக சொல்லவேண்டியதில்லை. இவர்களின் இந்த வாதமும் அடிபட்டுப்போகிறது.

++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ====

இன்று நாம் தொழுத இஷா எந்த நாளுடைய இஷா?” என்று ஒரு புன்னகையுடன் கேள்வியைக் கேட்கிறார். மக்களும் இன்றைய இஷா என்று பதில் சொல்கின்றனர். அதையும் ஒரு ஆதாரமாக் காட்டுகிறார்.

தொழுகை நேரங்கள் ஏன் பஜ்ரில் ஆரம்பிக்கின்றன என்பதிலேயே இதன் உண்மையை விளக்கியுள்ளோம். ஆங்கிலக் காலண்டரை பயன்படுத்தப் பழகிய நாம் அதில் நள்ளிரவு 12 மணிக்கு நாள் மாறுவதையே பேச்சுவழக்கில் பேசி வருகிறோம். அந்த அடிப்படையில் ஒரு பகலுக்கு பின் வரும் இரவில் தொழும் மக்ரிப் இஷா ஆகியவற்றை அந்த பகலுக்கு உரிய நாளில் தொழுவதாகவே சொல்கிறோம். இது ஆங்கில காலண்டரால் ஏற்பட்ட பாதிப்பு. ஆனால் முஸ்லிம்களிடம் நாளின் ஆரம்பம் எது என்று கேட்டால் இரவு என்று தெளிவாகவே சொல்வார்கள். பிறை பார்க்கும் அந்த இரவில்தான் அம்மாதமும் அம்மாதத்தின் முதல் நாளும் துவங்குகிறது என்பதில் முஸ்லிம்கள் தெளிவாக உள்ளனர்.

நாளின் ஆரம்பம் பஜ்ர் என்று சொல்லும் ஹிஜ்ராவினரின் காலண்டரில் நாளின் ஆரம்பம் நள்ளிரவாக இருப்பது ஏனோ? பார்க்க... http://www.piraivasi.com/2017/10/15.html