Saturday 11 February 2017

கியாமத் நாளைக் கணித்த ஹிஜிரா கமிட்டி

ஹிஜ்றா கமிட்டியினர் சந்திரனை துல்லியமாக கணக்கிட்டு காலண்டர் போடலாம் என்று பிரச்சாரம் செய்து அவ்வழியே காலண்டரை அச்சடித்து அதை அல்லாஹ்வின் காலண்டர் என இலவசமாக ⁽¹⁾ விற்று வருகிறார்கள். இவர்கள் அதை அல்லாஹ்வின் காலண்டர் என பின்வருமாறு நிறுவுகிறார்கள்.
9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்
மேலுள்ள குர்ஆன் வசனத்தின்படி வானம் பூமியை படைக்கும்போதே அல்லாஹ் மாதங்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்துவிட்டான். மேலும் மாதம் 29/30 ஆக இருக்கும் என்ற (புகாரி-1913) ஹதீஸின்படி ஒவ்வொரு மாதமும் 29 நாட்களைக் கொண்டதா 30 நாட்களைக் கொண்டதா என்பதும் வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலேயே அல்லாஹ் நிர்ணயம் செய்துவிட்டான். எனவே இதை பிற்காலத்தில் யாருமே மாற்ற இயலாது. பிறையை மேகம் மறைப்பதால் வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலேயே அல்லாஹ் நிர்ணயித்துவிட்ட மாதங்களும் அவற்றின் நாட்களின் எண்ணிக்கையும் மாறாது.
இது அவர்களின் முதல் வாதம்.
55:5. சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன.
சூரியனும் சந்திரனும் துல்லியமான கணக்கின்படி இயங்குவதாக அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான். அவற்றை கணக்கிட இயலும் என்பதும் கணக்கிட்டு காலண்டர் இடலாம் என்பதும் இதன் மூலம் நிறுவப்படுவதாக அவர்களின் இரண்டாம் வாதம் அமைந்துள்ளது.
10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்;
இந்த குர்ஆன் வசனத்தில் சந்திரனின் படித்தரங்கள் எதிர் காலத்தின் ஆண்டுகளின் எண்ணிக்கையும் மாதங்களின் கணக்கையும் காட்டுவதாக அல்லாஹ் சொல்கிறான் என்பது அவர்களின் மூன்றாம் வாதம். இதன் மூலம் கணக்கிடலாம் என்பதும் அதுவும் முன்கூட்டிய பல கோடி ஆண்டுகளுக்கு கணக்கிடலாம் என்பதும் இவர்களது வாதம்.
சூரியனும் சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன. அவை எத்தனை ஆண்டுகள் கணக்கின்படி இயங்கும் என்று நாம் குர்ஆனில் தேடினால்
36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
சூரியனால் சந்திரனை பிடிக்க முடியாது என்று அல்லாஹ் சொல்கிறான். அவை கணக்கின்படி இயங்குகின்றன என்று மீண்டும் இங்கே சொல்கிறான். எத்தனை நாள் வரை நெருங்கிப்பிடிக்க முடியாது என்று நாம் தேடிப்பார்த்தால், சூரத்துல் கியாமா அதாவது மறுமை நாள் என்று தலைப்பிடப்பட்ட அத்தியாயத்தில் அல்லாஹ் மறுமை நாள் எப்போது வரும் என்று விவரிக்கிறான். அதில்
75:6. “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும்போது.
என்று சொல்வதன் மூலம் கியாமத் நாள் வரை சூரியனும் சந்திரனும் கணக்கின்படி இயங்கும் என்றும் கியாமத் நாளில் அவை ஒன்று சேர்க்கப்பட்டு அவற்றின் கணக்கு முடிக்கப்படும் என்றும் அல்லாஹ் தெளிவாக கூறுகிறான்.
அதாவது பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து கியாமத் நாள் வரை சந்திரனைக் கணக்கிட்டு காலண்டர் இட இயலும் என்பது அவர்களது வாதத்திலிருந்து நாம் புரிந்து கொண்டது.
இனிமேல் பூமி படைக்கப்பட்ட தேதி என்னவென்பதையும் கியாமத் நாள் என்று வரும் என்பதையும் இவர்கள் வெளியிட்டுள்ள காலண்டரிலிருந்து நாம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
இவர்கள் வருடா வருடம் காலண்டரை அச்சடித்து இலவசமாக ⁽¹⁾ சில்லறை விற்பனை செய்து வருகிறார்கள். அதைத் தவிர காலண்டரை மொத்தமாக இவர்கள் இரண்டு மென்பொருட்களாக வெளியிட்டுள்ளனர். அவற்றில் முற்காலத்தின் தேதிகளும் பிற்காலத்தின் தேதிகளும் இடம்பெற்றுள்ளன. அதை அவர்களின் இணைய தளத்தில் “ஹிஜ்ரி காலேண்டர் பதிவிறக்கம் செய்யஎனும் பகுதியில் நீங்கள் காணலாம். இந்த காலண்டர் ஏதோ ஒரு மென்பொருள் வல்லுனரால் உருவாக்கப்பட்டதல்ல. இந்தியாவிலும் சவுதியிலும் மார்க்கம் பயின்ற ஆலிம் & பொறியாளரால் உருவாக்கப்பட்டது. எனவே அவர்களின் காலண்டரில் இருக்கும் தேதிகள் குர்ஆன் ஹதீஸ் ஆய்வுகளுக்கு உட்பட்டே இருக்கும்.
இந்த காலண்டரில் முதல் தேதியாக 1, முஹர்ரம், ஹி.மு100 உள்ளது. (ஹிமு = ஹிஜிரத்துக்கு முன்) அது ஆங்கில காலண்டரில் வியாழன், 18 ஜூலை 524ம் தேதியாக அமைந்தது என்று அவர்களே கொடுத்துள்ளனர்.
காலண்டரின் கடைசி தேதியாக 30 துல்ஹிஜ்ஜா ஹி.பி 3000ம் உள்ளது. (ஹிபி=ஹிஜிரத்துக்குப் பின்) ஆங்கில காலண்டரில் ஞாயிறு 19 மார்ச் 3533ம் தேதியாக அமையும் என்று அவர்களே கொடுத்துள்ளனர்.
இந்த இரண்டு தேதிகளில், முஹர்ரம் 1 ஹிமு 100இல் தான் உலகம் படைக்கப்பட்டது என்று சொன்னால் ஹிஜ்ராவினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே இவர்கள் காலண்டரில் இது பிழையாக இருக்கிறது எனும் முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.
ஆனால் சந்திரனும் சூரியனும் துல்லியமான கணக்கின்படியே இருப்பதால் அவற்றை முன்கூட்டியே கணக்கிடலாம் என்று வாதிடும் இவர்களின் காலண்டரில் இறுதி நாளாக இருப்பது யுகமுடிவு நாளாகவே இருக்க முடியும். இவர்களின் காலண்டரில் அதற்கு மேல் சந்திரனை கணக்கிட முடியாமல் போகிறதென்றால் அன்றுதான் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் யுகமுடிவு நாள் என்று சாதாரண ஒரு ஹிஜ்ரா சகோதரனுக்கு கூட எளிதில் விளங்கிவிடும். ஞாயிறு 19 மார்ச் 3533 ம் தேதி உலகம் அழியும் நாள் என்கிறார்கள் ஹிஜ்ராவினர்.
7:187. "யுகமுடிவு நேரம் எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்'' என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். கருவறையில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும் மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி); நூல் : புகாரி (4697)
இவர்கள் அல்லாஹ்வின் காலண்டர் என்று கூவி கூவி விற்பனை செய்கிறார்கள். அது அல்லாஹ்வின் காலண்டர் எனில் அதில் கியாமத் நாள் நிச்சயமாக இருக்கும். ஏனென்றால் அல்லாஹ் மட்டுமே கியாமத் நாளை அறிவான். அது அல்லாஹ்வின் காலண்டறல்ல, யஹுவாவின் காலண்டர். எனவே தான் அதில் யவ்முல் கியாமா ஞாயிறு 19 மார்ச் 3533ம் தேதியாக உள்ளது.
மேலும் வாசிக்க:
⁽¹⁾ இலவசம் என்றாலே விலையில்லாமல் காசு வாங்காமல் கொடுப்பதுதானே, அது எவ்வாறு விற்பனையாகும்?
ஜெயாவும் கருணாவும் இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு கொடுத்தது இலவசமா? உள்நோக்குடன் கொடுக்கப்படும் எதுவுமே இலவசமல்ல
**********************
பிறைவாசி தளத்திற்கு இனிமேல் பதில் கொடுக்கவே மாட்டோம் என்று சபதமெடுத்திருந்த ஹிஜ்ராவினர் மேற்கண்ட கட்டுரையை பார்த்தபின் பின்வரும் விமர்சனத்தை பதிலாக அளித்துள்ளனர். அதற்கான நமது பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
**********************
*மறுமையின் தேதி எப்போது? ததஜ புதிய ஆய்வு..!!* 😳
-----------------------------------
பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
ஒரு முஸ்லிமின் அனைத்து வணக்கங்களும், வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையிலும், குறித்த கிழமைகளிலும் பின்பற்றப்பட வேண்டும். பிறைகளின் அனைத்து வடிவநிலைகளையும் கவனித்தும், கணக்கிட்டும் வரவேண்டும் என்பதே அல்லாஹ்வுடைய கட்டளையும், அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையும் ஆகும். இதைத்தான் ஹிஜ்ரி கமிட்டி வலியுறுத்தி வருகிறது - அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிலையில் மஞ்சள் பத்திரிக்கைகள் வெளியிடும் பரபரப்பு செய்தியைப் போல, 'கியாமத் நாளை கணித்த ஹிஜிரா கமிட்டி' என்ற தலைப்பில் தரமற்ற கருத்துக்களை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தினர் (ததஜ) பரப்பியுள்ளனர். முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற பெயரில் மாநாடு நடத்திய கையோடு, சக முஸ்லிம்கள் மீது அபாண்டமான அவதூறுகளை அள்ளிவீசுவதுதான் ததஜவினருடைய பண்பொழுக்கத்தின் யதார்த்த நிலையோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. 
முன்பு தத்தமது பகுதி பிறை, பின்னர் மண்டலப் பிறை, தற்போது மாநில அளவு பிறை என்று பல நிலைப்பாடுகளையும் எடுத்து தவறான பல கருத்துக்களை பிரச்சாரமும் செய்தனர். ததஜவின் தவறான பிறை வாதங்கள் அனைத்திற்கும் மார்க்க ரீதியான பதில்களை www.mooncalendar.in  இணையதளத்தில் நாம் வெளியிட்டு வருகிறோம் - அல்ஹம்துலில்லாஹ். இதனால் ததஜவில் இருக்கும் சில நியாயமான சகோதரர்கள் நம் கருத்துக்களை படித்து அவர்கள் தலைமையிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு சரியான விடை கிடைக்காத காரணத்தினால் ததஜவை விட்டு பலர் வெளியேறியும் வருகின்றனர். 
*சகோதரர் பிஜே அவர்களும், ததஜவின் மூத்த தாயிக்களும் பிறை குறித்து மார்க்க ஆதாரமின்றி பேசியதில் பல சிக்கல்களை எதிர்கொண்டதால் தற்போது அவர்கள் மௌனமாக உள்ளனர். இருப்பினும் ஹிஜ்ரி கமிட்டியினரை சமூக ஊடகங்களில் தரமற்று விமர்சிக்க  'பிறைவாசி' போன்ற புனைப் பெயர்களில் சிலரை களம் இறக்கியும் உள்ளனர்.* இதுதான் 'கியாமத் நாளை கணித்த ஹிஜிரா கமிட்டி' என்ற தலைப்பில் அமைந்த தரமற்ற கட்டுரையின் பிண்ணனி ஆகும். 
சில வருடங்களுக்கு முன்னர் ஹிஜ்ரி கமிட்டியைச் சார்ந்த சகோதர மௌலவி ஒருவர் 3000 வருடங்களுக்கான காலண்டரை ஒரு மென்பொருளாக வடிவமைத்தார். அந்த காலண்டரானது சவுதி அரபியாவின் வானஇயற்பியல் துறையின் முன்னாள் தலைமை அறிஞர் காலஞ்சென்ற கலாநிதி டாக்டர் ஃபதுல் அஹ்மது (PhD in Astronomy) அவர்கள் கணக்கிட்டு வெளியிட்டதைத் தழுவியதாகும். சவுதி அரசாங்கம் குழப்பமின்றி நடைமுறைப்படுத்தி வந்த பழைய உம்முல்குறா காலண்டருடன் ஒத்துபோகக் கூடியதாகும். 
மேற்படி 3000 வருட காலண்டர் மென்பொருளில் இடம்பெற்றுள்ள இறுதி மாதத்தையும் இறுதி நாளையும் குறிப்பிட்டு, அன்றோடு உலகம் முடிவடையும் என்றும், கியாமத்துநாள் வந்துவிடும் என்றும் ஹிஜ்ரி கமிட்டியினர் சொல்வதாக தவறான செய்தியை ததஜவினர் பரப்பியுள்ளனர். இது ஒரு அறிவீனமான வாதம் என்பதை ததஜவின் உள்ள நடுநிலையாளர்கள்கூட புரிந்து கொள்வார்கள். ஹிஜ்ரி கமிட்டியைச் சார்ந்த மற்றொருவர் 5000 வருடங்களுக்கு ஒரு காலண்டரை வடிவமைப்பார், அதைப் பார்த்துவிட்டு கியாமத்நாள் மேலும் பல வருடங்கள் பின்தங்கி சென்று விட்டது என்று இவர்கள் கூறுவார்கள் போலும்.
வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் மறுமைநாள் பற்றி சுமார் இருநூற்றுக்கும் அதிகமான இடங்களில் நினைவு படுத்தியுள்ளான். மறுமைநாள் எப்போது வரும்? என்கின்ற ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது என்கிறது குர்ஆன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை அறிய மாட்டார்கள் என ஆணித்தரமாக சொல்கிறது குர்ஆன். ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டிய, மார்க்கத்தின் அடிப்படையான கொள்கை இது. இந்நிலையில் 'கியாமத் நாளை கணித்த ஹிஜிரா கமிட்டி' என்று இவர்கள் கட்டுரை எழுதியுள்ளதில் இருந்தே இவர்களின் தரம் என்ன? என்பதையும், *கியாமத் நாள் எந்த தேதியில் நிகழும்? என்ற புதிய ஆராய்ச்சியில் ததஜ இறங்கியுள்ளதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.* 
ஹிஜ்ரி கமிட்டியை ஹிஜிரா கமிட்டி என்றும், கணக்கீட்டை கணிப்பு என்றும் இவர்கள் எழுதியுள்ளதிலிருந்தே இவர்களின் அறிவுத்திறமை வெளிப்படுகிறது. தோராயமான கணிப்பிற்கும், துல்லியமான கணக்கீட்டிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர்கள் ஹிஜ்ரி காலண்டரை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளது நகைப்புக்குரியதே. அந்த கட்டுரை முழுவதும் ஹிஜ்ரிகமிட்டியைப் பற்றிய அவதூறுகளும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களுமே இடம் பெற்றுள்ளன. 
ஹிஜ்ரி கமிட்டியினரை இப்படி நைய்யாண்டி செய்வதற்கு முன்னர், தங்கள் இயக்கம் வெளியிட்டு வரும் காலண்டரைப் பற்றி இவர்கள் சிந்தித்தார்களா?. ததஜ சார்பில் வருடந்தோரும் கிருஸ்துவ ஆங்கிலக் காலண்டரை அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள். அந்த காலண்டரில் அச்சிடப்பட்ட இறுதி தேதியான டிசம்பர் 31-ஆம் நாளன்று கியாமத் நாள் வருவதாக இவர்கள் புரிந்து கொள்வார்களா? *டிசம்பர் 31-ஆம் நாளோடு உலகம் அழியும் என்று ததஜவினர் நம்புவதாக பிறைவாசி பாணியில் யாரும் கட்டுரை வெளியிட்டால் இவர்கள் சும்மா விடுவார்களா?* 
மேலும் 2004-ஆம் ஆண்டு ததஜ தொடங்கிய பிறகு கடந்த 13 வருடங்களாக ததஜவினர் காலண்டர் வெளியிட்டு வருவதாகக் கொள்வோம். ததஜ சார்பில் வெளியிட்ட அந்த முதலாவது காலண்டரின் முதல் தேதியை வைத்துக் கொண்டு 'அன்றுதான் அல்லாஹ் உலகத்தை படைத்தான்' என்று இவர்கள் பாணியில் சிந்தித்தால் நிலைமை என்னவாகும்? 
இன்னும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகள் மக்களுக்கு இலவசங்களை கொடுத்துவிட்டு ஓட்டு வாங்குது போல, ஹிஜ்ரி காலண்டரை நாம் இலவசமாக வினியோகித்து வருவதில் நமக்கு உள்நோக்கம் இருப்பதாகவும் எழுதியுள்ளனர். இது ஒரு அறிவார்ந்த வாதம்தானா?. *அப்படியானால் எந்த உள்நோக்கத்தின் அடிப்படையில் பிஜேயின் குர்ஆன் மொழிபெயர்ப்பை ததஜவினர் இலவசமாக வினியோகித்து வருகின்றனர்? எனவே ததஜவினர் இலவசமாக செய்யும் அனைத்து செயல்களுக்கும் பின்னால் அவர்களுக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதும் தெளிவாகி விட்டது.* 
இன்று உலகில் சுமார் 150 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறோம். குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த, முரண்பாடற்ற, துல்லியமான, ஒரு இஸ்லாமிய நாட்காட்டி தற்போது நடைமுறையில் இல்லை. இஸ்லாமிய விரோத சக்திகளால் அது திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டது. முஸ்லிம் சமூகம் இழந்த அந்த இஸ்லாமிய காலண்டரை மீண்டும் புதிப்பிப்பது அவசியமில்லையா? இது முஸ்லிம்களின் கடமையில்லையா?
இஸ்லாமிய நாட்காட்டி அவசர அவசியம்தான் என்றால், மஃரிபு வேளையில் மறையும் பிறையை எங்கள் புறக்கண்களால் பார்த்த பின்னர்தான் புதிய மாதத்தைத் தொடங்குவோம். அதுவும் தமிழக எல்லைக்குள் மட்டும்தான் பிறையைப் பார்ப்போம் என்ற ததஜவின் பிறை நிலைப்பாட்டின் மூலம் அத்தகைய நாட்காட்டியை ஏற்படுத்திட இயலுமா? 
துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமில்லை என்று நீங்கள் கருதினால், நாட்காட்டியையும், அதை கணக்கிடுவதையும் வலியுறுத்தும் 2:189, 10:5, 55:5, 17:12, 9:36,37, 36:39,40, 6:96 போன்ற இறை வசனங்கள் வலியுறுத்துவது என்ன? என்பதை சிந்தியுங்கள். - வஸ்ஸலாம்.
**********************
நமது பதில்
**********************
அன்பின் முஸ்லிம் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
கடந்த நாட்களில் *“கியாமத் நாளைக் கணித்த ஹிஜ்ரா கமிட்டி”* http://www.piraivasi.com/2017/02/11.html எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை பிறைவாசி டாட் காம் இணைய தளம் வெளியிட்டிருந்தது. அதை வாசித்த எல்லோரும் அதன் கருத்தை அதன்படியே விளங்கிக்கொண்டனர், ஹிஜ்ராவினரைத் தவிர.
*”55:5. சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன”* எனும் குர்ஆன் வசனத்தின்படி நாங்கள் *சந்திர நாட்காட்டியை துல்லியமாக கணக்கிட்டு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வெளியிட்டுள்ளோம். அதை அல்லாஹ்வின் நாட்காட்டி என்று அழைக்கிறோம்* என்கிறார்கள் ஹிஜ்ராவினர். மேலும், 9:36ம் வசனத்தின்படி *வானம் பூமி படைக்கப்பட்ட நாள் முதல் இந்த காலண்டர் இயங்கி* வருவதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
இதை தொடர்ந்துதான் நமது கேள்வி எழுந்தது. 36:40 மற்றும் 75:9 வசனங்களின்படி அல்லாஹ் கியாமத் நாள் வரையில் சந்திரன் கணக்கின்படியே இயங்கும் என்கிறான். மேலும் அல்லாஹ் மட்டுமே கியாமத் நாளை அறிவான் என்றும் சொல்கிறான். நிச்சயம் அல்லாஹ்விடம் இருக்கும் அவனது பதிவுப்புதகத்தில் கியாமத் நாள் இருக்கும். எனில் அல்லாஹ்வின் காலண்டரில் கியாமத் நாள் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
இரண்டு காரணங்களுக்காக இவர்களின் ஹிஜ்ரா காலண்டரில் கியாமத் நாள் இருந்தே ஆகவேண்டும். ஒன்று: இவர்களின் காலண்டர் 55:5வசனத்தில் உள்ள கணக்கின்படி இருக்கிறது. இரண்டு: இவர்களிடம் இருப்பது அல்லாஹ்வின் காலண்டர். எனில் 75:9 மற்றும் 7:187 ம், வசனங்களின்படி அல்லாஹ்வின் காலண்டரில் கியாமத் நாள் இருந்தே தீரும்.
இவர்கள் வெளியிட்டுள்ள ஹிஜ்ரா காலண்டரில் ஞாயிறு 19 மார்ச் 3533 க்குப் பின் தேதிகள். இல்லை. அந்த நாளுக்கு பிறகு இவர்களால் சந்திரனைக் கணக்கிட இயலவில்லை என்றால் அன்று சூரியனும் சந்திரனும் சேர்க்கப்படும் நாள் என்றே பொருள். அன்றுதான் கியாமத் நாள் என்று பொருள். இதைதான் நாம் கேட்டிருந்தோம். அறிவுடையவருக்கு இது நிச்சயம் விளங்கும்.
அவர்களின் காலண்டர் அல்லாஹ்வின் காலண்டர் அல்ல யூதர்களின் காலண்டர் என்பதை விளக்குவதே அக்கட்டுரையின் நோக்கமாக இருந்தது. விளக்கத்திற்கு பார்வையிடுங்கள் http://www.piraivasi.com/2015/10/17-3.html
அடுத்ததாக இவர்கள் எது நடந்தாலும் அதை பின்வரும் இரண்டில் ஒரு விதமாக பிரிக்கும் கொள்கை கொண்டவர்கள். ஒன்று: “இது ஹிஜ்ரா நாட்காட்டியை பின்பற்றாமல் போனதால் நடந்தது” என்பார்கள். இரண்டு: குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரைக் கூறி அவர்கள் தான் இதை செய்தார்கள் என்பார்கள். சென்ற ஹஜ்ஜை சவூதி அரசு அவர்களின் கணக்கின்படி மாற்றினார்கள். அதை இவர்கள் சாதகமாக்கிக்கொண்டு இவர்கள் கண்டுபிடித்ததால் சவூதி ரகசியமாக தேதியை மாற்றியதைப் போல சித்தரித்தார்கள். இது முதல் வகை. அதே போல உலகில் எது நடந்தாலும் அதை இலுமினாட்டி என்ற பெயரில் அழைப்பது ஒரு வியாதியாக பரவியுள்ளது. இவர்களும் இவர்களை யார் எதிர்த்தாலும் குறிப்பிட்ட அந்த இயக்கத்தின் சதி என்று ஓலமிடுவார்கள். இது இரண்டாம் வகை.
இவர்களை எதிர்க்கும் பல சகோதரர்களை இவர்களாக அந்த இயக்கத்தில் சேர்த்து பொறுப்பாளர் பதவியும் கொடுத்துவிடுவார்கள். இதைதான் தமிழில் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் எனும் பழமொழியாக சொல்வார்கள். இவர்களின் விவாத சவடால்களைக் கண்டு அவ்வியக்கம் இவர்களை விவாதத்திற்கு அழைத்ததும் இந்த *வீரர்கள்* விரண்டோடி தலைமறைவானதும் வரலாறு. இன்றளவும் இந்த *வீரர்களுக்கு* அவ்வியக்கத்துடன் விவாதிக்கும் அளவுக்கு தைரியம் வரவில்லை. முகவரியில்லா கட்டுரை எழுதுவதும் பினாமி பெயரில் கெட்டவார்த்தைகளில் வசைபாடுவதும் தான் *வீரர்களின்* ஆயுதமாக உள்ளது. பார்க்க http://www.piraivasi.com/2017/01/3.html
குர்ஆனை இலவசமாக வினியோகிப்பது உள்நோக்கத்துடனா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் ஆம்! நிச்சயமாக உள்நோக்கத்துடன்தான். தஅ்வா எனும் நிய்யத் (உள்நோக்கம்) இல்லாமல் அவர்கள் குர்ஆனை இலவசமாக கொடுப்பதில்லை. ஆனால் இந்த காலண்டரை இலவசமாக விற்பதில் வேறு உள்நோக்கங்கள் உள்ளன. அதை *காலண்டருக்கென ஒரு இயக்கமா* எனும் தலைப்பில் கட்டுரையாக பிறைவாசியில் காணலாம். கூட்டத்தை சேர்த்து அரசியலில் குதிப்பதே இவர்களின் நோக்கம்.
பிறைவாசி என்பது ஒரு இணையதளத்தின் பெயர். அதில் வெளியிடப்படும் கட்டுரைகளை வாசகர்கள் காப்பி பேஸ்ட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். காப்பி பேஸ்ட் செய்யும்போது அந்த தளத்தின் பெயர் முதலில் வந்துவிடுகிறது. இதைத்தவிர பிறைவாசி என்பது ஒருவரின் புனைப் பெயரல்ல. ஒளிந்து கொண்டிருந்து எழுதும் நபருமல்லர். பிறைவாசியின் அட்மின் ஹிஜ்ராக்களை தொடர்பு கொண்டு பேச முயற்சித்ததும், இவர்கள் பயந்து ஓடியதும் வரலாறு. பிறைவாசி இணையதளத்தை நடத்துபவரின் பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி ஆகிய அனைத்தும் ஹிஜ்ராக்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த தகவல்கள் பிறைவாசி தளத்திலும் உள்ளன.
ஹிஜ்ரி கமிட்டி என்பதை ஹிஜ்ரா கமிட்டி என்று எழுதிவிட்டோமாம். ஒப்பாரி வைக்கின்றனர். இவர்களது இயக்கம் மற்றும் காலண்டரின் பெயர் *ஹிஜ்ரா* என்பதற்கான ஆதாரங்களை கீழே தந்துள்ளோம். Hijraஎன்று இணையத்தில் தேடிப்பாருங்கள் சகோதரர்களே. ஹிஜ்ரா என்றால் என்னவென்று விளங்கும்.
கணக்கீட்டை கணிப்பு ஏற்று எழுதிவிட்டோமாம். *“கியாமத் நாளைக் கணித்த ஹிஜ்ரா கமிட்டி”* என்பதை *“கியாமத் நாளைத் துல்லியமாகக் கணக்கிட்ட ஹிஜ்ரா கமிட்டி”* என்று பெயர்மாற்றம் செய்யச் சொல்கிறார்களா?
இதுநாள் வரை அலி மானிக் ஃபான் எனும் நபர்தான் காலண்டரை வடிவமைத்ததாக பிரச்சாரம் செய்தனர். இவரை வைத்து இவர்கள் பல பிரச்சாரங்களையும் தமிழ்நாட்டில் செய்துள்ளனர். ஆனால் 2013ற்குப் பிறகு இவரை ஹிஜ்ராஸ் ஓரம்கட்டி வருகின்றனர். இவரும் எங்கேயும் பேசியதாக எந்த தகவல்களும் இல்லை. இந்நிலையில் இப்போது கமிட்டி இவரை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது. ஃபள்ல் அஹ்மத் எனும் நபர்தான் ஹிஜ்ராவின் காலண்டரை வடிவமைத்ததாக புதிதாக பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் காரணங்களையும் மர்மங்களையும் யாமறியோம்.
இது அவர்களின் காலன்டரே! ஹிஜ்ரா காலண்டர் என்பதும் ஹிஜ்ரா கமிட்டி என்பதும்தான் அவர்களின் இயற்பெயர். ஹிஜ்ரி என்பது புனைப்பெயர்.
இவர்களின் முதல் இணையதளம் இதுதான். இது இவர்களின் கட்சித் தலைமையின் தளம். பின்னர் ஏற்ப்பட்ட உட்கட்சி பூசலால் இத்தளம் மூடப்பட்டது. இது நாம் முன்னரே எடுத்து வைத்திருந்த screenshot தளத்தின் முகவரியை மேலே கூர்ந்து கவனியுங்கள். hijracalendar.in
வெளியீடு:
அட்மின்
பிறைவாசி டாட் காம்
இவற்றையும் தவறாமல் பார்வையிடுங்கள்:
காலண்டருக்கென இயக்கமா http://www.piraivasi.com/2017/01/3.html
அல்லாஹ்வின் காலண்டரா யஹுவாவின் காலண்டரா? http://www.piraivasi.com/2015/10/17-3.html