Friday 12 February 2016

தினமும் பிறை பார்த்து வந்தால் உலகில் ஒரே பிறை வருமா

பிறை விளக்கக் சாட்சிகளோடு பிறைகளை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதையும் விஞ்ஞானி அலிமனிக்பான் அவர்கள் உரைநிகழத்தினார். ஒரு மாதத்தின் முதல்நாளை நாம் சரியாக கணக்கிட வேண்டுமென்றால் முந்திய மாதத்தின் பிறையின் படித்தரங்களில் உள்ள தேய்பிறைகளையாவது கண்டிப்பாக பார்த்து, கணக்கிட்டு வந்திருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்திய அலிமனிக்ஃபான் அவர்கள் தேய்பிறைகளை கணக்கிடாமல் விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
நீங்கள் பார்க்கின்ற பிறை எந்த நாளை காட்டுகிறது என்பதை தோராயமாக அறிந்து கொள்ளும் வழிமுறையையாவது தெரிந்திருக்க வேண்டும். அதாவது மாதம் என்பது 29 நாட்கள் அல்லது 30 நாட்களைக் கொண்டது. ஒரு மாதம் எத்தனை நாட்கள் கொண்டது என்பதை முன்கூட்டியே நாம் தோராயமாக அறிய வேண்டுமானால், மாலை சூரியன் முழுமையாக மேற்கு நோக்கி மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90 டிகிரியில்) நிலைபெற்றிருந்தால் அந்த பிறை 07 (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 08ஆவது நாளைக் (மாதம் 30 ஆக இருந்தால்) காட்டுகிறது. 
மாலை சூரியன் முழுமையாக மேற்கில் மறையும்போது, பிறை முழு நிலவு அளவில் கிழக்கு திசையில் உதித்துக் கொண்டிருந்தால், அந்த பிறை பவுர்ணமி நாளை தெரிவிக்கிறது. ஒரு மாதத்தில் பவுர்ணமி பெரும்பாலும் 14ஆம் நாளில் (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 15ஆம் நாளில் வரும் (மாதம் 30 ஆக இருந்தால்). அந்நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனத்தையும் கிழக்கில் சந்திரன் உதிப்பதையும் காணலாம். 
அதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில், நாம் நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருந்தால், அந்தப் பிறை 21 (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 22 (மாதம் 30 ஆக இருந்தால்) தேதியை காட்டும் பிறையாகும். இதுதான் பொது விதி. 
இதல்லாமல் சில வருடங்களில் சில மாதத்தில் (Rare occurrence) பிறை 06 இல் முதல் பாதியும் 13இல் பவுர்ணமியும், பிறை 23இல் அரை வட்டும் வரும். இதையும் கணக்கீட்டின் படி முற்கூட்டியே அறிய முடியும்..
- இவை 2013 காயல்பட்டினம் பிறைக் கருத்தரங்கில் பெரியார் அலி மானிக் பான் பேசியவை.
பார்க்க
இதே தகவல்கள் ஹிஜ்ராவின் இணையதளத்திலிருந்து


தினமும் பிறை பார்த்து வந்தால் அது கணக்கீட்டுடன் ஒத்துபோகும் என்று குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டக்கூடாது. செய்து பார்க்கவேண்டும்.


நீங்கள் உங்கள் ஊரில் தினமும் பிறையை பார்த்து மிகச்சரியாக அமாவாசைக்கு அடுத்த நாள் மாதத்தை துவங்குகிறீர்கள். உலகில் வேறேதோ பகுதியில் இருக்கும் ஒருவரும் உங்களைப்போல் தினமும் பிறையை பார்த்து மிகசரியாக அமாவாசைக்கு மறுநாள் மாதத்தை துவங்குகிறார்.


நீங்கள் இருவரும் ஒரே கிழமையில் மாதத்தை துவங்கி இருப்பீர்களா?
தினமும் பிறை பார்த்தல் கணக்கீட்டுடன் ஒத்துபோகும் என்றும், அதன்படி ஒரே நாளில் உலகில் பெருநாள் வந்துவிடும் என்றும் சொல்பவர்கள் கவனத்திற்கு. இவர்களின் விஞ்ஞானி தினமும் எப்படி பிறை பார்க்க வேண்டும் என்று விளக்கி இருக்கிறார் (அதை மேலே சிகப்பு நிறத்தில் தந்துள்ளோம்). இந்த அடிப்படையில் பிறையின் படித்தரங்கள் உலகிற்கு ஒரே தேதியை வழங்குகிறதா என்று பார்ப்போம்.


நான் பயன்படுத்தியுள்ள இந்த மென்பொருளை மூன்று நாடுகளின் நானே பிறையின் படித்தரங்களுடன் ஒப்பிட்டு பார்த்துவிட்டேன். பிறைகளை அதன் அளவுகள், வடிவங்கள், கோணங்கள் என எல்லா பரிமாணங்களிலும் துல்லியமாக காட்டுகிறது. 3 நாடுகளிலும் இந்த மென்பெருள் காட்டும் பிறை வானில் இருக்கும் பிறையுடன் மிகத்துல்லியமாகப் பொருந்திபோகிறது. இந்த மென்பொருளை வைத்தே ஒவ்வொரு நாடுகளிலும் பிறை எப்போது எப்படி தெரியும் என்று ஆராயப்போகிறோம்.


கமிட்டி காலண்டரில் பிப்ரவரி 8 அமாவாசை நாள். பிப்ரவரி 15 முதல் குவாட்டர். ஆனால் பிரெஞ்ச் பாலினேசியா மக்கள் பிப்ரவரி 14 ஞாயிற்று கிழமையிலேயே முதல் குவார்டரை பார்க்கிறார்கள்.


பிஜியை சேர்ந்தவர் முதல் கோட்டரை பார்க்கும்போது அவருக்கு பிப்ரவரி 15 திங்கள் ஆகிவிடுகிறது.




விஞ்ஞானி அலியின் கூற்றுப்படி பார்த்தால் இரண்டு நாடுகளுக்கும் பிறை இரண்டு தேதியை காட்டுகிறது


இவை இரண்டும் கிழக்கு மேற்கு எல்லை என்று இவர்கள் ஓரம் கட்டுவர். சரி, பூமத்திய ரேகைக்கு அருகில், கிழக்கு மேற்கு எல்லைகளில் இல்லாமல் இரு நாடுகளை எடுப்போம்.
இது இகுவேடர் நாடு, பிப்ரவரி 22 திங்கள் முழு நிலவு.
இது இந்தோனேசியா, பிப்ரவரி 23 செவ்வாய் முழு நிலவு


கடைசி குவாட்டர்
இந்தோனேசிய மார்ச் 2 புதன்.
இகுவேடர்: மார்ச் 1 செவ்வாய்


ஒவ்வொரு மாதமும் இதே நிலைமைதான். பிறையின் ஒரே படித்தரத்தை இரு நாட்டினர் இரு வேறு நாட்களில் பார்ப்பர். இவர்களின் கொம்புக்கணக்குப்படி பார்த்தால் இயற்கையாகவே உலகில் இரண்டு தேதிகள் வந்துவிடும். பிறைகளை இரண்டு தேதிகளை இவர்களுக்கும் வழங்கிவிடும்.,


தலைப்பிறை


பிரெஞ்சு பாலினேசியாவும் பிஜியும் இரண்டு மணி நேர வித்தியாசத்தில் அமைந்த நாடுகள். அதாவது பிரெஞ்சு பாலிநேசியாவில் லுஹ்ர் தொழுத அடுத்த 2 மணி நேரத்தில் பிஜியில் லுஹ்ர் தொழுவர். ஜமாத்தில் ஆகிர் மாதத்தின் முதல் பிறையை மார்ச் 9 புதன் கிழமை பிரெஞ்ச் பாலினேசியர் பார்த்து விடுவார். அன்று சூரியன் மறைந்து 5௦ நிமிடங்களுக்கு பின்தான் சந்திரன் மறைகிறது. பிறையின் அளவு கண்ணுக்கு தெரியவேண்டிய 1% விட அதிகமாகவே வளர்ந்து காணப்படும். பனி மூட்டமா மேக மூட்டமோ இல்லையெனில் பிரெஞ்சு பாலினேசியர் அந்த பிறையை பார்ப்பார். அந்த பிறையை கீழே காட்டியுள்ளோம்.




அதே பிறையை சற்று நேரத்திற்கு பிறகு பிஜிக்காரர் பார்ப்பார். ஆனால் அவர் அந்த பிறையை பார்க்கும்போது அவர் மார்ச் 1௦ வியாழக்கிழமையில் இருப்பார். ஒரே பிறை. 2 மணி நேர வித்தியாசம். இரண்டு தேதிகள்.




இது அதை விட சுவாரஸ்யமானது... அமெரிக்கன் சமோவா மற்றும் டோங்கா இரண்டு நாடுகள். சூரிய நேரத்தில் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் சூரியன் தலைக்கு மேல் இருக்கும், அதாவது இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் லுஹ்ர் தொழுகை வரும். இவர் வானத்தில் என்னென்ன பார்க்கிறாரோ அதை அவரும் அப்படியே பார்ப்பார்.


அமெரிக்க சமோவன் முதல் பிறையை மார்ச் 9 புதன் கிழமை முதல் பிறையை பார்க்கிறார். அதே பிறையை அதே நேரத்தில் டோங்காகாரரும் பார்ப்பார். ஆனால் அவருக்கு அது மார்ச் 1௦ வியாழக்கிழமை




இருவருக்கும் தலைக்கு மேல் சந்திரன் முதல் குவாட்டரை காட்டிகொண்டிருக்கும். ஒருவர் செவ்வாய் கிழமையிலும் மற்றவர் புதன் கிழமையிலும் இருப்பார்.


சரி இதெல்லாம் தேதிகோட்டிற்கு அருகில் இருக்கும் நாடுகள். அங்கே இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்யும் என்று சப்பைக்கட்டு கட்டினால். இதோ மீண்டும் ஐடிஎலுக்கு அருகில் இல்லாத நாடுகள். ஒரே குவாட்டர். இரு நாட்டினரும் இரு வேறு தினங்களில் பார்க்கிறார்கள்.


இகுவேடர்: மார்ச் 15
இந்தோனேசியா மார்ச் 16


மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு


லாஸ்ட் குவாட்டர்,
எகுவேடர் மார்ச் 31
இந்தோனிசியா ஏப்ரல் 1


கடைசியாக ஓன்று
முதல் குவாட்டர்:
இந்தோனேசியா ஏப்ரல் 14
எகுவேடர் ஏப்ரல் 13

தினமும் பார்த்தாலும் மாதம் ஒருமுறைப் பார்த்தாலும் பிறைகள் இரண்டு தேதிகளை பூமிக்கு வழங்கி விடும்.