Friday 12 February 2016

நமது குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ராவின் விமர்சனங்கள்:

நாம் கேட்பது இவர்களுக்கு என்றுமே புரிந்ததில்லை. நாம் கேட்பதை இவர்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்களோ அதற்கு பதில் என்ற பெயரில் எதையாவது உளறிக்கொட்டுவார்கள். அந்த பதில்கள் இவர்களது உறுப்பினர்களையும் திருப்திப்படுத்திவிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின் நம் கேள்விகளுக்கு பதில் என்ற பெயரில் உளறி வைத்துள்ளார்கள். இவற்றுக்கான பதிலை நாம் ஏற்கனவே வழங்கிவிட்டதால் அவற்றின் லிங்குகளை மட்டும் இங்கே தந்துள்ளோம்.

அவர்கள் பதில் என்று உளறியது சிவப்பு நிறத்தில் இருக்கும் லிங்குகளில் உள்ளது. நமது விளக்கங்களும் மறுப்புகளும் தொடர்ந்து கீழே நீல நிற எழுத்துக்களில்....

++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ====



உலக நேரம் என்பது உலக தேதிக்கோட்டை அடிப்படையாக கொண்டது; தேதிக்கோடானது (Greenwich) க்ரெனிச் தீர்க்க ரேகையை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை கிருத்தவர்களின் உடமை என்றோ பிரித்தானியர்களின் உடமை என்றோ நாம் சொல்லவில்லை. கிருத்தவர்களின் கிப்லா என இவர்கள்தாம் க்ரெனிச்சை பழிக்கின்றனர். எனில் ஏன் அந்த கிப்லாவை மையப்படுத்திய உலக நேரத்தில் காலண்டர் இடவேண்டும்.

உலக நேரம் என்பது க்ரெனிச்சை மையமாகக்கொண்டது. அதற்கு காரணம் பிரித்தானிய ஆளுமை என்று நீங்களும் விளங்கிக்கொண்டீர்கள். அமாவாசை திங்கள்கிழமை UT 23:00க்கு நடந்தால் நீங்கள் செவ்வாய் 00:00 விலிருந்து மாதத்தை துவங்குகிறீர்கள். இதுவே தேதிகோடு ஜெர்மன் ஆதிக்கத்தில் ஜெர்மன் முதன்மை நெடுக்கை வழி சென்றிருந்தால் செவ்வாய் கிழமையன்று அமாவாசையும் புதன் கிழமையில் உங்கள் மாதத்துவக்கமும் இருந்திருக்குமே இது ஏன் உங்கள் மூளைக்கு எட்டவில்லை. உங்கள் உறுப்பினர்களும் சிந்திக்கவில்லையே!

உலகத் தேதிக்கோடு தவறான தேர்வென்று பல முறை நிரூபித்துவிட்டோம். அதை மாற்றவேண்டும் என்று நாம் சொன்னால்தான் “அதை மாற்றிவிட்டு நம்மிடம் பேசட்டும்” என்று இவர்கள் சொல்வதில் பொருள் இருக்கும். ஆனால் நாம் மற்றச் சொல்லவில்லை. மாறாக தவறாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிக்கோட்டால் அங்கிருக்கும் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் சரியான நாளில் ஜுமுஆ தொழுதால் முஸ்லிம்களின் தேதிக்கோடு தானாகவே நாம் சொல்லும் இடத்துக்கு மாறிவிடும் என்பதே நாம் சொல்லும் கருத்து. நாம் சொல்லும் இந்த கருத்தை விளங்கும் அளவுக்கு இவர்களுக்கும் விஞ்ஞானம் தெரியாது.

தொழுகை நேரங்கள் உலக நேரத்தில் கணக்கிடப்படுகின்றனவாம். அது இல்லாமல் கணக்கிட முடியாதாம். அல்லாஹு அக்பர்!! இந்த இவர்களுக்கு கிப்லாவை எப்படி கணக்கிட வேண்டும் என்பதே தெரியாது. இந்நிலையில் இவர்கள் தொழுகைநேரங்களை பற்றி பேசுவது உலகமகா நகைச்சுவை. முதலில் நமது இணைய தளத்தில் உள்ள தொழுகைநேரங்களை கணக்கிடும் முறையைக் கற்றுக்கொண்டுவிட்டு பின்னர் பேசட்டும்.

இதை விளங்கிக்கொள்ள மேலே நாம் சொன்ன உதாரணம் போதுமானது. முதன்மை நெடுக்கையாக ஜெர்மனியின் பெர்லின் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் உலக நேரம் மாறியிருக்கும், இவர்களது காலண்டரும் மாறியிருக்கும். ஆனால் எந்த ஊருக்காவது தொழுகை நேரம் மாறியிருக்குமா. தொழுகை நேரங்களின் கணக்கும் முழுக்க முழுக்க தத்தம் பகுதியின் சூரிய ஓட்டம் தொடர்பானது. உலக நேரம் என்பது முதன்மை நெடுக்கை எனும் மனிதத் தேர்வை அடிப்படையாக கொண்ட மற்றொரு மனித ஏற்பாடு.

அதிக விளக்கங்கள் இந்த துடுப்புகளில்:


++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ====


ஒற்றுமைகள் என்னவென்பதை ஏன் பட்டியலிடவில்லை. இவர்கள் காலண்டர் எங்கிருந்தெல்லாம் காப்பியடிக்கப்பட்டது என்பதை இந்த கட்டுரைகளில் தெளிவாக நிரூபித்துள்ளோம்.


++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ==== ++++ ====




நேர மண்டலங்கள், பூமியின் சுழற்சி, ஒரு நாளின் தேதியும் கிழமையும் பூமியில் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது போன்ற அடிப்படை புவியியலும் வானியலும் சார்ந்த விஷயங்களே தெரியாத இவர்களிடம் என்ன பேசுவது?

அதிக விளக்கங்கள் இந்த துடுப்புகளில்: