Wednesday 2 August 2017

கணக்கிடுவதில் சூரியனுக்கு ஒரு நீதி நிலவுக்கு ஒரு நீதியா?

“உனக்கு மறுப்பு எழுதுகிறேன்” என்ற பெயரில், ரசிகர்களை தக்க வைக்கும் முயற்சியாக ஹிஜ்ராவினர் வெளியிட்ட மற்றொரு கட்டுரையைப் பார்ப்போம்
பின்வரும் கேள்வியை பொதுத்தளங்களில் நாம் நெடு நாட்களாக கேட்டுவந்தோம்.
கணக்கீட்டாளர்களுக்கு ஒரு கேள்வி?
பின்வரும் கணக்கீடுகளில் என்ன பிழையைக் கண்டதால் "UTC 00:00 க்கு முன்னால் கஞ்ஜங்க்ஷன்" எனும் முறையில் காலண்டர் தரிக்கிறீர்கள்?
1. ISNA/FCNA: UTC 12:00 க்கு முன்னால் கண்ஜங்க்ஷன்
2. Indonesia, Malaysia: Altitude > 5°
3. ECFR: உலகில் எங்காவது  Altitude > 5°, elongation > 8°
4. Libya: ஃபஜ்ருக்கு முன்னால் கஞ்ஜங்க்ஷன்
5. Turkey: Altitude > 5°, elongation > 8°  
மேற்கண்ட கேள்விக்கு விடையளிக்கிறோம் பேர்வழிகள் இந்த லிங்கில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளனர். http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/486-manycalendars
நாம் கேட்டது மேலே இருக்கும் கேள்வியைத்தான். ஆனால் கேள்வி புரியவில்லையா பிடிக்கவில்லையா அல்லது நமது கேள்விக்கு பதிலில்லையா என்று தெரியவில்லை. அவர்களாக ஒரு கேள்வியை கற்பனை செய்து பதிலளித்துள்ளார்கள்.
அவர்கள் கற்பனை செய்த கேள்வி இதோ!
//உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டிகள் பல உள்ளன. அல்ஜீரியாதுனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகள் சந்திரக் கணக்கீட்டு முறையை பின்பற்றினாலும் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல கணக்கு முறைகளைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நீங்கள் வெளியிடும் நாட்காட்டியை மட்டும் எந்த அடிப்படையில் துல்லியமான கணக்கு என்று பின்பற்றச் சொல்கிறீர்கள்கணக்கீட்டாளர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இல்லையா?//
அல்ஜீரியா துனுசியா பற்றி நாம் கேட்கவே இல்லை. அவர்களுக்கு பிடித்த நாடுகளை சேர்த்துள்ளார்கள்.
இதற்கு பதில் என்ற பெயரில் அவர்களின் உளறலில் முதல் பகுதி
//மேற்படி குற்றச்சாட்டில் கூறியுள்ளதுபடி அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகள் சந்திரக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றி ஹிஜ்ரி நாட்காட்டியை வெளியிட்டுள்ளனர் என்ற கூற்று வடிகட்டிய பொய்யாகும். குர்ஆன் சுன்னா ஒளியில் மேற்படி நாடுகள் துல்லியமான ஹிஜ்ரி நாட்காட்டியை வெளியிட்டுள்ளதாக பிரச்சாரம் செய்வோர் அந்நாட்காட்டிகளை முதலில் நமக்கு அனுப்பித் தரட்டும்.
சந்திர மாதத்தின் முதல்நாளில், சூரியன் மறைந்த பிறகு பிறையை பார்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் பிறைக்கும் சூரியனுக்கும் உள்ள கோணதூரம் (Angular Distance) அல்லது நீட்சி (Elongation) அல்லது பிறையின் ஒளிர்வு (illuminations) போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு சிலர் மாதங்களை ஆரம்பிக்கின்றனர். அதற்காக அவர்கள் நமதூர் குத்துமதிப்பு காலண்டர்களைப் போல காலண்டர் ஒன்றை தயாரித்துள்ளனர் என்பதே உண்மை.//
விடையளிப்பேன் பேர்வழிகள் சுயநினைவுடன்தான் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. “சந்திரக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றி ஹிஜ்ரி நாட்காட்டியை வெளியிட்டுள்ளனர் என்ற கூற்று வடிகட்டிய பொய்யாகும்” என்று எழுதிவிட்டு அடுத்த பத்தியில். “அவர்கள் நமதூர் குத்துமதிப்பு காலண்டர்களைப் போல காலண்டர் ஒன்றை தயாரித்துள்ளனர் என்பதே உண்மை” என்று எழுதியுள்ளனர். மேற்படி நாடுகள் காலண்டர் வெளியிடவே இல்லை என்று சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் காலண்டர் தயாரித்துள்ளனர் என்றும் கூறி தாங்கள் எத்தகைய கோமாளிகள் என்று உலகிற்கு பறைசாற்றியுள்ளனர். யாருடைய கூற்று பொய் என்றும் யார் பொய்யன் என்றும் அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேற்படி நாடுகள் காலண்டர் வெளியிடவே இல்லை, வெளியிட்டதாக சொல்வது பொய் என்று சொல்லிவிட்டு, அந்நாடுகள் காலண்டர் தயாரித்துள்ளனர் என்று அவர்களே ஒப்புக்கொண்ட பிறகு நம்மிடம் அக்காலண்டர்களை கேட்பது அறிவீனம். நமக்கும் அக்காலண்டர்களை அனுப்பிக்கொடுக்கும் கடமை இல்லாமல் போய்விடுகிறது. எனினும் வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக ஆதாரங்களை தந்துள்ளோம். பார்க்க
மேலும் இவர்கள் டாக்டர். கலித் சவுகத் என்று சிலாகித்துக்கொள்ளும், இவர்கள் ஆதாரமாகக் காட்டும் இணையதளத்திலிருந்தே ஆதாரத்தைத் தருகிறோம்.: https://www.moonsighting.com/calculation-or-sighting.html
இந்த லிங்குகள் பிற்காலத்தில் நீக்கப்படலாம். எனவே screenshot தந்துள்ளோம். படங்களை right click செய்து open image in new tab என்பதை க்ளிக் செய்யவும்.
                 
அடுத்ததாக இவர்கள் விஞ்ஞானத்தின் வாடையைக் கூட முகராதவர்கள் என்பதற்குச் சான்று “கோணதூரம் (Angular Distance) அல்லது நீட்சி (Elongation) அல்லது பிறையின் ஒளிர்வு (illuminations)” என்று எழுதியிருப்பதே. ஆங்கிலத்தில் Angular Distance என்பதை தமிழில் கோணதூரம் என்று சொல்லவே மாட்டோம். மேலும் Angular Distanceக்கு மற்றொரு பெயர்தான் Elongation என்பதாகும். இரண்டும் ஒன்றே. இவற்றை இரண்டாக விளங்கியுள்ளதே இவர்கள் எந்த அளவு விஞ்ஞானத்தைப் பற்றிப் பேச தகுதியானவர்கள் என்பதைக் காட்டுகிறது.
//நாம் காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில் பிறையின் வடிவங்களும் அதன் கோணவிகிதமும் சரியானதாக உள்ளனவா//
என்றும் எழுதியுள்ளனர். பிறையின் விஞ்ஞானத்தில், நிலவின் ஓட்டத்தில் “கோண விகிதம்” (Angular Ratio) என்று எந்த அளவீடும் இல்லை. ஆங்கில வார்த்தைகளையும் புரியாத வார்த்தைகளையும் சொல்லி மக்களை ஏமாற்றுவதே இவர்களின் கொள்கை.
//அல்ஜீரியாதுனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகளின் காலண்டர்கள் முரண்பட்டு உள்ளன என்று வாதம் வைக்கின்றனர். புறக்கண்ணால் பிறையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக போடப்பட்ட குத்துமதிப்பு  காலண்டர்கள் முரண்படுவதில் என்ன ஆச்சரியம் உள்ளது? இவர்கள் ஏன் அல்ஜீரியாவுக்கும்துனிசியாவுக்கும்,லிபியாவுக்கும் செல்ல வேண்டும்நமதூர் சர்வதேசப்பிறை இயக்கத்தின் காலண்டரும்தமிழகப்பிறையை சரிகாணும் இயக்கத்தவரின் காலண்டரும் முரண்பட்டு இல்லையா?.//
1. ISNA/FCNA: UTC 12:00 க்கு முன்னால் கண்ஜங்க்ஷன் நடந்தால் தொடர்ந்து வரும் மக்ரிபிலிருந்து புதிய மாதம் துவங்கும். (by Some community in USA & Canada) (இந்த முறையை அறிமுகப்படுத்தியவர் காலித் ஷவுகத்)
2. மலேசியா: சூரியன் மறையும்போது நிலவின் உயரம் 5°க்கு மேலிருந்தால் அந்த மக்ரிபிலிருந்து  புது மாதம் துவங்கும் (இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ப்ரூனே)
3. ECFR: அன்றைய தினம் உலகில் எங்காவது சூரியன் மறையும்போது நிலவின் உயரம் 5°க்கு மேலாக மேலும் elongation (நிலவு - சூரியன் விலகல் கோணம்) 8°  மேலிருந்தால் அந்த மக்ரிபிலிருந்து  புது மாதம் துவங்கும் (ireland & Luxembourg)
4. லிப்யா: ஃபஜ்ருக்கு முன்னால் கண்ஜங்க்ஷன் நடந்தால் முந்தய மக்ரிபிலிருந்து புதிய மாதம் துவங்கும்
5. துருக்கி: சூரியன் மறையும்போது நிலவின் உயரம் 5°க்கு மேலாக மேலும் elongation (நிலவு - சூரியன் விலகல் கோணம்) 8°  மேலிருந்தால் அந்த மக்ரிபிலிருந்து  புது மாதம் துவங்கும் (Angola, Bosnia and Hercegovina, Croatia, Kosovo, Macedonia, Montenegro, Serbia, Slovania, Tunisia)
6. எகிப்து: மக்ரிபுக்கு முன்னால் கண்ஜங்க்ஷன் நடந்து, சூரியன் மறைந்து குறைந்தது 5 நிமிடங்களுக்குப்பின் நிலவு மறைந்தால், அந்த மக்ரிபிலிருந்து  புது மாதம் துவங்கும்.
7. பிரான்ஸ் (UOIF - Union des Organizations Islamiques de France [Union of the Islamic Organizations of France])
8. சீனா (Majority Follow MeccaCalendar.org)
9. சவுதி (Ummul Qura): மக்ரிபுக்கு முன்னால் கண்ஜங்க்ஷன் நடந்து, சூரியன் மறைந்ததற்குப்பின் நிலவு நிலவு மறைந்தால், அந்த மக்ரிபிலிருந்து  புது மாதம் துவங்கும்.
மேலுள்ள அனைத்து கணக்கீட்டு முறைகளும் ஹிலால் (தலைப்பிறை) என்பதை கணக்காக மாற்றும் முயற்சியாகும். அமாவாசை நிகழ்ந்த உடனே பிறை பிறந்துவிடுவதாக முஸ்லிம் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆனால் அந்த பிறையை நாம் உடனே கண்ணால் பார்த்துவிட முடியாது. குறைந்தது 18 மணி நேரம் முதல் 24மணி நேரம் வரை கடந்திருக்க வேண்டும். மேலும் சூரியன் மறைந்து அடிவானத்தின்  வெளிச்சம் குறைந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிறை கண்ணுக்குத் தெரியும். மேலுள்ள ஒவ்வொரு நாடுகளும் பிறை என்பதை எவ்வாறு கணக்காக மாற்ற முயற்சி செய்துள்ளனர் என்று பார்ப்போம்.
துருக்கி: “சூரியன் மறையும்போது elongation (நிலவு - சூரியன் விலகல் கோணம்) 8°  இருக்கவேண்டும். நிலவின் உயரம் 5° இருக்க வேண்டும்”
இது தொலைநோக்கியால் தலைப்பிறையை பார்க்க இயன்ற அளவாகும். பிறை கண்ணுக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை தொலைநோக்கிக்கு தெரியும் அளவுக்கு வளர்ந்தால் போதும் எனும் அளவை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் இந்த கணக்கை நடைமுறைப்படுத்துகிறார்கள். ஏறக்குறைய இதே அளவுகளைதான் மலேசியாவும், ECFRம் பின்பற்றுகின்றன.
சவூதி (Ummul Qura): மக்ரிபுக்கு முன்னால் கண்ஜங்க்ஷன், சூரியன் மறைந்ததற்குப்பின் நிலவு மறைய வேண்டும்.
சூரியனுக்கு முன்னால் அமாவாசை நிகழ்ந்து சூரியன் மறைந்த பின் நிலவு மறைந்தால், மக்ரிபில் துவங்கும் இஸ்லாமிய நாளின் ஆரம்ப பகுதியில் வானில் பிறை இருக்கும். அந்த பிறையைக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் நாள் துவங்கும் மக்ரிப் வேளையில் வானில் நிலவு இருந்தால் புது மாதத்தைத் துவங்குவதற்கு இந்த அளவுகோல் போதுமானது என சவூதி அரசு முடிவு செய்துள்ளது.
எகிப்து: மக்ரிபுக்கு முன்னால் கண்ஜங்க்ஷன், சூரியன் மறைந்து குறைந்தது 5 நிமிடங்களுக்குப்பின் நிலவு மறைய வேண்டும்.
சவுதி அரசின் அளவுகோலை சற்று மாற்றம்  செய்து உருவாக்கப்பட்டதுதான் எகிப்து நாட்டின் அளவுகோல். சூரியன் மறைந்து அடுத்த வினாடி நிலவு மறைந்தாலும் புது மாதம் பிறந்துவிட்டதாக உம்முல் குறா கருதுகிறது. ஆனால் சூரியன் மறைந்த பின் துவங்கும் இஸ்லாமிய நாளில் குறைந்தது 5 நிமிடங்களுக்காவது வானில் நிலவு இருக்கவேண்டும் என்கிறது எகிப்து முறை.
லிப்யா: ஃபஜ்ருக்கு முன்னால் கஞ்ஜங்க்ஷன் மேலுள்ள நாடுகள் இஸ்லாமிய நாள் மக்ரிபில் துவங்கும் வேளையிலேயே வானில் நிலவு இருந்தால்தான் அந்த நாளில் புது மாதம் துவங்க வேண்டும் என்று கருதக்கூடியவை. ஆனால் லிப்யாவில் அமாவாசை நடந்த உடனே புதுப்பிறை பிறப்பதாக கருதும் அவர்கள்,நோன்பு துவங்கும் நேரமான பஜ்ர் வேளை வரையில் புது நிலவுக்காக காத்திருக்கிறார்கள். எனவே பஜ்ருக்கு முன் அமாவாசை நடந்தால் அன்று புது மாதம் பிறந்துவிட்டதாக கணக்கெடுக்கிறார்கள்.
மேலுள்ள அனைத்து கணக்கீட்டு முறைகளும் பிறை என்பதை விஞ்ஞானமாக மாற்றுவதற்கு தட்டுத் தடுமாறியிருப்பதைக் காணலாம். நாம் சில கணக்கீட்டு முறைகளை மட்டுமே உதாரணத்திற்காக பார்த்தோம். இன்னும் பல கணக்கீடுகள் உள்ளன. பிறை எனும் வார்த்தையை விஞ்ஞானமாக மாற்ற, ஏன் இந்த தடுமாற்றம். ஏன் இத்தனை முரண்பாடுகள்.
இதில் அநேக நாடுகள் நமது கண்களுக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை வானில் பிறை இருந்தால் போதும் என்ற அளவுகோலை எடுத்துள்ளன. ஆனால் ஹிஜ்ராவினர் மட்டுமே அமாவாசையை அளவுகோலாக கொண்டுள்ளனர். அதிலும் வேடிக்கை என்னவென்றால் இந்த ஹிஜ்ராவினர் மட்டுமே லண்டன் நேரத்தை அளவுகோலாக கொண்டுள்ளனர். இஸ்லாமிய மாதத்திற்கு எதற்கு லண்டன் நேரம்?
முஸ்லிம்கள் தங்களை தலைவர்களின் பெயர்களால் பல பிரிவுகளாக பிரித்துள்ளனர். ஷாஃபிஈ, ஹனஃபி, மாலிகி, சலபி என்று பல பிரிவுகளாக பிரித்துள்ளனர். ஆனால் இவர்கள் தொழுகை நேரத்தை விஞ்ஞானமாக மாற்றுவதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இன்று ஹிஜ்ராவினரின்  தொழுகை நேரத்திலும் எந்த வேறுபாடும் முரண்பாடும் இல்லை. இந்நேரத்தில் ஹிஜ்ராவினர் ஒரு கேள்வியை கேட்கலாம். அசர் தொழுகை நேரத்தில் ஷாஃபிஈ, ஹனஃபி என்ற வேறுபாடு உள்ளதே? மேலும் ஃபஜ்ர், இஷா நேரங்களில் Karachi University, ISNA, Egypt, Muslim world league, Ummul Qura என பல முறைகள் உள்ளதே என விஞ்ஞானம் அறியா ஹிஜ்ராவினர் கேட்கலாம்.
அஸ்ர் நேரத்தை பொறுத்தவரை சர்ச்சைகள் ஹனபி மத்ஹபில் மட்டுமே உள்ளன. மத்ஹபை குப்பையில் வீசிவிட்டு நபி வழியை பார்த்தால் அதில் “நிழல் ஒரு மடங்கு வரும் நேரம்” எனத் தெளிவாக உள்ளது. நிழல் ஒரு மடங்கு வரும் நேரத்தை கணக்கிடுவதில் உலகில் எந்த சர்ச்சையும் இல்லை. மேலும் ஃபஜ்ர் வேளை முடியும் நேரமான சூரியன் உதிப்பதைக் கணக்கிடுவதிலும், மக்ரிப் வேளை துவங்கும் நேரமான சூரியன் மறைவதைக் கணக்கிடுவதிலும் உலகில் எந்த சர்ச்சையும் இல்லை. மாற்று மதத்தினரான ஷியாக்களின் வழிபாட்டு நேரங்களில் கூட சூரிய உதயம், சூரிய மறைவு மேலும் லுஹ்ர் வேளைகள் ஒரே மாதிரியே உள்ளன.
ஃபஜ்ர் இஷா வேளைகளை பொறுத்தவரை உலகின் எல்லா பகுதிகளுக்கும் ஒரே பார்முலா வேலை செய்யாது. அரபு நாடுகள் உயர்ந்த அட்ச ரேகையில் இருப்பதால், கோடை காலத்தில் சூரியன் மறைந்து அடிவானின் செம்மை மறைவதற்கு அதிக நேரம் தேவைப்படும். இன்னும் உயரமான அட்ச ரேகை பகுதிகளுக்கு செல்லச் செல்ல இந்த நேரம் அதிகமாகும். எனவே பூமத்திய ரேகை பகுதிகளுக்கு பயன்படும் இஷா, ஃபஜ்ர் பார்முலா உயர்ந்த அட்ச ரேகை பகுதிகளுக்கு பயன்படாது. எனவே அந்தந்த பகுதிகளுக்கு மட்டும் இஷா, ஃபஜ்ர் கணக்கீட்டு முறைகள் மாறுபட்டுள்ளன. இது புவியியல் மாறுபாடே தவிர விஞ்ஞான முரண் அல்ல.
ஆக தொழுகை எனும் இஸ்லாமிய வணக்கத்தின் நேரத்தை கணக்கிடும் முறைகளில் உலகம் முழுவதும் என்ற மாற்றமும் இல்லாமல் ஒரே பார்முலா பயன்படுத்தப்படுகிறது. தொழுகை நேரத்தைக் கணக்கிடுவதில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். ஆனால் பிறையை கணக்கிடுவதில் ஏன் இத்தனை முரண்பாடு?
மேலே நாம் காட்டிய கணக்கீட்டு முறைகளை சொல்பவர் அனைவரும் 2:189 & 10:5, 9:36,37, 55:5 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டியே தங்களது கணக்கீட்டு முறைகளை நியாயப்படுத்துகின்றனர். தொழுகை நேரத்தைப் பற்றி பேசும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் விஞ்ஞானமாக மாற்றும்போது எந்த முரண்பாடும் சிக்கலும் வாராதபோது. இவர்கள் அனைவரும் மேற்கோள் காட்டும் இவ்வசனங்களை விஞ்ஞானமாக மாற்றும்போது ஏன் இத்தனை முரண்பாடுகள்? சிக்கல்கள்?
கணக்கிடுவதில் சூரியனுக்கு ஒரு நீதி பிறைக்கு ஒரு நீதியா?
இல்லை! சூரியனை கணக்கிடலாம். பிறையைக் கணக்கிட முடியாது.
என்ன? நிலவைக் கணக்கிட முடியாதா? நிலவைக் கணக்கிட முடியாமலா கிரகணங்களும் நிலவின் உதய மறைவு நேரங்களும் கணக்கிடப்படுகின்றன.”  இது ஹிஜ்ராவினரின் அதிர்சிக் கேள்வி. நாம் சொன்னதில் முரண்பாடு ஏதுமில்லை. சூரியனைக் கணக்கிடலாம், நிலவைக் கணக்கிடலாம், ஆனால் பிறையைக் கணக்கிட இயலாது. நிலவு வேறு பிறை வேறா? ஆம். நிலவு என்பது உருண்டையாக இருக்கும் ஒரு கரும்பாறை, பிறை என்பது அதில் விழும் ஒளி நம் கண்களை வந்தடையும் காட்சி. நம் கண்களுக்கு அந்த ஒளி தெரிந்தால் மட்டுமே அது பிறை. வருடத்தின் 365 நாட்களிலும் நிலவில் ஒளி விழுந்து கொண்டுதான் இருக்கிறது. அமாவாசை நிகழும்போது கூட நிலவின் சரி பாதி பரப்பளவில் சூரிய ஒளி விழுந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை நாம் பிறை என்பதில்லை. வளர் பிறை, தேய் பிறை, அரைப்பிறை, பவுர்ணமி என்று நாம் நிலவின் தோற்றதிற்கேற்ப பெயரிட்டு அழைப்பதெல்லாம் நமது கண்களுக்கு தெரியும் காட்சியைத்தான்.
பிறையை கணக்கிடவே முடியாது என்று நாம் சொல்வது இஸ்லாமிய மாதத்தை துவங்குவதற்காக அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் ஹிலால் எனும் தலைப்பிறையைப் பற்றிதான். இந்த ஹிலால் எப்போது எந்த இடத்தில் காட்சியளிக்கும் என்று கியாமத் நாள் வரை விஞ்ஞானத்தால் கணக்கிடவே இயலாது. நிலவின் ஓட்டத்தைக் துல்லியமாக கணக்கிடலாம், அது எப்போது உதிக்கும், எப்போது மறையும், எப்போது சூரியனைக் கடந்து அமாவாசை ஏற்படுத்தும், எப்போதும் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே வந்தும் கிரகணத்தை ஏற்படுத்தும் என்று துல்லியமாக கணக்கிடலாம். சூரியனும் நிலவும் கணக்காக இருக்கின்றன என அல்லாஹ் 6:96இல் சொல்வதும் சூரியனும் நிலவும் கணக்கின்படி இருக்கின்றன என 55:5இல் சொல்வதும் நிலவின் இக்கணக்குகளைப் பற்றிதான். மேலும் நிலவைக் கணக்கிட்டு மாதத்தை துவங்குவதற்கு மார்க்கத்தில் எந்த கட்டளையும் இல்லை. ஆனால் மாதத்தை துவங்குவதற்கு எதை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்று சொல்லும்போது தலைப்பிறைகள்தான் மனிதனுக்கு காலம்காட்டி என்று 2:189ம் இறைவசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
சூரியனைக் கணக்கிட இயலும். உலக முஸ்லிம்கள் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் எந்த முரண்பாடும் இல்லாமல் அதைக் கணக்கிட்டு தொழுகை நேரங்களுக்கு பயன்படுத்துகிறோம். நிலவைக் கணக்கிட இயலும் ,அதன் உதய மறைவுகளைக் கணக்கிடுகிறோம், அது ஏற்படுத்தும் கிரகணங்களைக் கணக்கிடுகிறோம். அந்த கணக்குகளில் முரண்பாடு இல்லை. மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பிறையைக் கணக்கிடவே இயலாது. அதைக் கணக்கிட இயன்றிருந்தால், தொழுகை நேரங்களைப் போல எந்த முரண்பாடும் அதில் இருந்திருக்காதே. உலக விஞ்ஞானிகளும் இஸ்லாமிய விஞ்ஞானிகளும் ஆளுக்காள் ஒரு கருத்தை சொல்லியிருக்க மாட்டார்களே. உலகம் முழுவதும் ஒரே கணக்கு இருந்திருக்குமே. “சொன்ன நேரத்தில் (லுஹ்ர் வேளை) சூரியன் உச்சத்தைக் கடக்கிறது, சொன்ன நேரத்தில் உதிக்கிறது மறைகிறது, நிழல் ஒரு மடங்கு வருகிறது” என தொழுகை நேரக்கணக்கை நபி வழியுடன் உரசிப்பார்த்து ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் பிறைக்கணக்கையும் நபி வழியுடன் உரசிப்பார்த்து “ஆம்! பிறைக் கணக்கு துல்லியமாக இருக்கிறது, சொன்ன நேரத்தில் தலைப்பிறை தெரிகிறது!” என்று ஏற்றுக்கொண்டிருப்பார்களே.
விதவிதமான காலண்டர் வாதிகள் விதவிதமாக கணக்கிடுவது நிலவையேத் தவிர பிறையை அல்ல.
//ஹிஜ்ரி நாட்காட்டி பௌர்ணமி என்று தெரிவித்துள்ள அந்தக் கிழமை பௌர்ணமி தினமாக உள்ளதாஇல்லையா என்பதை மக்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம். நாம் அமாவாசை எனும் புவிமைய சங்கமதினம் என்று குறிப்பிட்டுள்ள அந்த நாள் அமாவாசை தினமாக உள்ளதா இல்லையாஎன்பதையும் மக்களே உறுதிபட அறிந்து வருகின்றனர். மேலும் சந்திரனின் முதல் கால்பகுதி நாள்இறுதிகால் பகுதி நாள் என்று நாம் காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில் பிறையின் வடிவங்களும் அதன் கோணவிகிதமும் சரியானதாக உள்ளனவா என்பதையும் நீங்களே பார்த்து ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறோம்.//
கமிட்டியின் மிகப்பெரிய மோசடி இதுவே. எங்கள் காலண்டருடன் பிறையின் வடிவங்கள் ஒத்துப்போகின்றன என்று பிரச்சாரம் செய்கின்றனர். எங்கள் காலண்டரின் இருக்கும் அரைப்பிறைகள், பவுர்ணமி மற்றும் கடைசிப்பிறை ஆகியவற்றை நீங்கள் வானில் தெரியும் பிறையுடன் ஒப்பிட்டால் எங்கள் காலண்டர் துல்லியமானது என்று நீங்கள் விளங்கலாம் என்றும் பொய்யாக பிரச்சாரம் செய்கிறனர்.
வானில் தெரியும் வடிவங்கள் இவர்கள் காலண்டரின் பிறை வடிவங்களும் உண்மையில் ஒத்துப்போவதில்லை.
உதாரணமாக 2017 May  3ம் தேதியன்று அரைப்பிறை தெரியுமென்று அவர்களது காலண்டரில்  ஆனால் உண்மையில் நாம் may 2 ம் தேதி அரைப்பிறையைப் பார்த்தோம்.
அதேப் போல feb 4 அன்று தெரியும் என்ற அரைப்பிறையை நாம் feb 3ம் தேதி பார்த்தோம்.
sep 28 அரைப்பிறை என்கிறார்கள் ஆனால் இன்ஷா அல்லாஹ்  27ம் தேதி நிலவு அரைவட்டமாக காட்சியளிக்கும்.
oct 12 அரைப்பிறை என்கிறார்கள் ஆனால் இன்ஷா அல்லாஹ்  13ம் தேதி நிலவு அரைவட்டமாக காட்சியளிக்கும்.
குறிப்பாக இவர்கள் உருஜூணில் கதீம் கண்டிப்பாக தெரியும் என்று சொல்லும் நாட்களில் உர்ஜுனில் கதீம் தெரிவதில்லை.
மக்களின் அறியாமையை பயன்படுத்தி முதலெடுப்பதே ஹிஜ்ராவினரின் வியாபார யுக்தி. தொடர்ந்து மூன்று மாதங்கள் தினமும் பிறையை பார்த்து வந்தால் இவர்களது காலண்டருக்கும் பிறை வடிவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.
/கணக்கீடு முறையில் பல காலண்டர்கள் உள்ளது அதனால் ஹிஜ்ரி காலண்டரைப் பின்பற்றக் கூடாது என்றால் புறக்கண் பார்வை என்ற நிலைப்பாட்டில் அதிக முரண்பாடுகள் உள்ளதால் பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று இவர்கள் இனி பிரச்சாரம் செய்யத் தயாரா? என்று கேட்கிறோம்.//
இது அறிவற்ற வாதம். பல காலண்டர்கள் இருப்பதால் ஹிஜ்ராவினரின் காலண்டரை பின்பற்ற கூடாது என்று யாருமே சொல்லமாட்டார்கள். அமாவாசைக் கணக்கை தொழுகை நேரக்கணக்குடன் ஒப்பிடும் ஹிஜ்ராவினரிடம், தொழுகை நேரக்கணக்கில் இருக்கும் ஒருமித்த கருத்தைப் போல ஏன் சந்திரக் கணக்கு காலண்டரில் ஒருமித்த கருத்து வரவில்லை என்பதே மக்களின் கேள்வி. நிலவின் ஓட்டத்தைக் கணக்கிடும் பார்முலாக்களிலும் எந்த முரண்பாடும் இல்லை. எத்தனை விதமான பார்முலாக்கள் இருந்தாலும் அவற்றின் விடைகள் ஒன்றாகவே உள்ளன. ஆனால் காலண்டர் இடும் முஸ்லிம்களிடையே ஏன் தொழுகை நேரத்தைப் போல ஒருமித்த நிலைப்பாடு இல்லை என்பதே கேள்வி
புறக்கண்ணால் பிறையைப் பார்ப்பதில் பல நிலைபாடுகள் இருப்பதால் புறக்கண்ணால் பிறை பார்த்தல் தவறாகிவிடுமா? என்று ஹிஜ்ராவினர்  அறிவுப்பூர்வம் என்று நினைத்து ஒரு கேள்வியைக் கேட்டுள்ளனர். பிறையை பார்த்துதான் மாதத்தை துவங்க வேண்டும் என்பவர்களிடையே எல்லையை முடிவுசெய்வதில் மாற்றுக்கருத்துகள் உள்ளன. அவை மார்க்க மசாயில்தொடர்பானவை. சஹருக்கு பாங்கு சொல்ல வேண்டுமா? நோன்பு துறக்க தனி துஆ உள்ளதா? என்பன போன மார்க்க மசாயில்களைப் போல ஒன்றுதான் தகவலின் எல்லையை முடிவு செய்யும் மசாயில். ஆனால் உங்களது காலண்டர் முரண்பாடுகள் விஞ்ஞானம் தொடர்பானவை. விஞ்ஞான கணக்கும் ஃபார்முலாவும் ஒன்றாக இருக்கும்போது உங்கள் காலண்டர்களில் ஏன் இத்தனை முரண்பாடுகள்.
தொழுகை நேரத்தை உதாரணமாகக் கூற ஹிஜ்ராவினருக்கு எந்த உரிமையும் இல்லை. முதலில் பல்வேறு காலண்டர்களை பின்பற்றும் மக்களிடம் அமாவாசை காலண்டரை விளக்கி காலண்டரிகள் முதலில் ஒன்றுபட்ட கருத்திற்கு வாருங்கள்.