Tuesday 3 January 2017

காலண்டருக்கென இயக்கமா?

கடந்த ஜூலை 2ம் தேதி 2016வருடம், காலண்டருக்கென ஓர் இயக்கமா? எனும் பிரசுரத்தை நாம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தோம். அதற்காக அதிகாரப்பூர்வ மறுப்பு ஒன்றையும் தரங்கெட்ட விமர்சனம் ஒன்றையும் ஹிஜ்ரா கமிட்டி வெளியிட்டுள்ளது. நமது ஆக்கத்தை முதலிலும் பின்னர் அவர்களின் விமர்சனத்தையும் இங்கே தொகுப்பாக தருகிறோம்.
Published: 2-Jul-2016
காலண்டருக்கென ஓர் இயக்கமா?
நீ எந்த இயக்கத்திலும் இரு! எந்தக் கொள்கையிலும் இருந்துவிட்டுப்போ!
நீ ரவுடியா!
பரவாயில்லை, பதில் தெரியாமல் விழி பிதுங்கும்போது கெட்டவார்த்தையால் வையவும் மிரட்டல் விடுக்கவும் எங்களுக்கு நீ தேவை. சேர்ந்துகொள்!
நீ தொழுகலாம்! தொழாமலும் இருக்கலாம்!
தொழுவதானால் அலிபாயின் லண்டன் கிப்லாவை நோக்கி தொழு! (இது சென்ற வருடம்).
எங்கு நோக்கினாலும் அல்லாவின் முகம் இருக்கிறது. எனவே வடக்கோ தெற்கோ எங்கு நோக்கியும் தொழுதுகொள்! (இது இந்த வருடம்).
வேறு மார்க்க கடமைகள்?
அதெல்லாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நீ விரும்பினால் ZAகாத் கொடு! விரும்பாவிட்டால் அதைப் பற்றி நாங்கள் பேசமாட்டோம்.
வேறு சமூகப் பிரச்சனைகள்?
அது உன்னுடைய தனிப்பட்ட விருப்பம். நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டோம். ஆனால் *நீ வருடத்திற்கு இரு முறை மட்டும் நாங்கள் அறிவிக்கும் நாளில் எங்கள் திடலுக்கு வந்து தொழுதுவிட்டுப்போ. இது மட்டுமே எங்கள் கொள்கை*
ஃபர்ள் & சுன்னத்தான நோன்புகள், இரு பெருநாட்கள் மற்றும் ஹஜ்ஜைத் தவிர வேறு எதற்கும் பிறைகளைப் பார்க்க நபி ஸல் கட்டளையிடவில்லை. தலைப்பிறைகளை மக்களுக்கு காலம்காட்டிகளாக அல்லாஹ் ஏற்படுத்தியிருப்பதாக சொல்லும் இறை வசனத்தை நாம் மறுக்கவில்லை. சூரிய நாட்காட்டி இல்லாமல் விவசாயம் செய்யமுடியுமா? இதுவே சூரிய நாட்காட்டிக்கு அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் சான்றுதான். நபிகளார் சூரிய காலண்டரை விவசாயத்திற்கு அனுமதித்ததும் (புகாரி-2193 & அஹமத்-5012) பார்க்க http://www.piraivasi.com/2015/08/20.html அல்லாஹ் ஆண்டுகள் என்று சூரிய ஆண்டுகளை மட்டுமே (குர்ஆன் 10:5 & 17:12) குறிப்பிடுவதையும் சூரிய நாட்காட்டிக்கான அனுமதியைக் காட்டுகின்றன. இபாதத்துகளுக்கு பிறைகளும், இன்னபிற காரியங்களுக்கு சூரிய நாட்காட்டியும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை.
ஃபர்ள் & சுன்னத்தான நோன்புகள், பெருநாட்கள் மற்றும் ஹஜ்ஜைத் தவிர வேறு எதற்கும் பிறைகளைப் பார்க்க நபி ஸல் கட்டளையிடவில்லை. ஆனால் இந்தப் புதுமைக்கூட்டம் காலண்டரை மட்டுமே மார்க்கமாக பிரச்சாரம் செய்துவருகிறது. காலண்டர் இல்லை என்றால் இஸ்லாம் இல்லையென்று இவர்கள் பலமுறை சொல்லிவிட்டனர். 2007இல் தான் இவர்களின் முதல் காலண்டர் வெளிவந்தது. அதுவரை இஸ்லாம் எங்கிருந்தது? நபிகளார் எந்தக் காலண்டரைப் பார்த்து நோன்பு நோற்றார்கள்? எந்தக் காலண்டரைப் பார்த்து பெருநாளை அறிவித்தார்கள்?
கிலாஃபத்தை கையில் எடுத்த பல இயக்கங்கள் இன்று காணாமல் போய்விட்டன. சில இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறிவிட்டன. காலண்டரை மார்க்கமாக கொண்டிருக்கும் இந்த இயக்கமும் அடிக்கடி கிலாஃபத்தைப் பற்றி பேசுவதைக் காணலாம். பார்க்க http://www.piraivasi.com/2017/01/1.html இவர்களின் காலண்டர் பிறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தால் கூட இவர்களின் வாதங்களில் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் இவர்களின் காலண்டரோ முழுக்க முழுக்க அமாவாசையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் நாளின் துவக்கம் மக்ரிபாக இருக்க இவர்களின் நாளின் துவக்கமோ யஹூதி-நசாறா பிரிவான யஹுவாவின் கொள்கையைப் போல சுபுஹில் இருக்கிறது. மேலும் ஆச்சரியம்! இவர்களின் அமாவாசைக் காலண்டர் அதே யஹூதி-நசாறா பிரிவான யஹுவாவின் காலண்டரை ஒத்திருக்கிறது. பார்க்க http://www.piraivasi.com/2015/10/17-3.html
சரியான நேரத்தில் தொழுவது மார்க்கமா அல்லது தொழுகை நேரத்தை கணக்கிடுவது மட்டுமே மார்க்கமா? சரியான நாளில் நோன்பு நோற்பது மார்க்கமா அல்லாது சரியான நாளை கண்டுபிடிப்பது மட்டுமே மார்க்கமா? மார்க்கம் எதுவென்று சிந்தியுங்கள்! சரியான நாளைக் காட்டினால் கூட பரவாயில்லை லண்டனில் அமாவாசை எப்போது என்று அறிந்து அதற்கு அடுத்த லண்டன் நாளில் மாதத்தை துவங்குவது சரியான மார்க்க வழி முறையா? இஸ்லாத்தில் காலண்டர் என்ற நடைமுறையே இல்லை. தலைப்பிறையை பார்த்துதான் வணக்க வழிபாடுகளை செய்ய நபிகளார் கட்டளையிட்டுள்ளார் (அபூதாவூத் 1991).
இவர்கள் காலண்டரைத் தவிர வேறு எதையும் பிரச்சாரம் செய்யாததும், கிலாஃபத்தைப் பற்றி அடிக்கடி பேசுவதும், யஹுவாக்களைப் போல நாளை சுபுஹிலிருந்து துவங்குவதும், யஹூதி-நசாறா பிரிவான யஹுவாவின் காலண்டரை காப்பியடித்து அல்லாஹ்வின் காலண்டர் என்ற பெயரில் *இலவசமாக விற்பதும்* நமக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கவர்ச்சிகரமான இந்த காலண்டரில் இளைஞர்களே அதிகமாக சிக்குகின்றனர். என்ன உள்நோக்கமென்று நமக்கு தெளிவாக தெரியாத நிலையில் காலண்டரை மார்க்கமாக பிரச்சாரம் செய்யும் இந்த கும்பலிடமிருந்து எச்சரிக்கையா ஒதுங்கியிருங்கள் முஸ்லிம்களே!
-பிறைவாசி
ஜெயலலிதா கொடுத்த லாப்டாப்பும். கருணாநிதி கொடுத்த டீவியும் *இலவச விற்பனை* எனும் பதத்திற்கு எடுத்துக்காட்டுகள். உள்நோக்கத்துடன் கொடுக்கப்படும் இலவசங்களும் விற்பனையே.
*******
மேலுள்ள இந்த பிரசுரத்தால் ஆத்திரம் அடைந்த ஹிஜ்ரா கமிட்டியின் பொறுப்பாளர்கள், பதில் என்ற பெயரில் எம்மை வசைபாடி அதை ரகசியமாக வேறொருவர் பெயரில் இணைய தளங்களில் பறக்கவிட்டுள்ளனர். அது எந்த அளவுக்கு தரங்கெட்ட விமர்சனம் என்றால் அதை ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுபவர்கள் கூட பரப்புவதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு பரப்பாமல் விட்டுவிட்டனர். அவ்வளவு தரங்கெட்ட விமர்சனம் அது. அதனால் அது காலதாமதமாக நமக்கு இப்போதுதான் வந்து சேர்ந்துள்ளது. விமர்சனங்களையோ வசைபாடல்கலையோ அஞ்சும் ஆட்களல்லர் நாம். ஆனால் விமர்சனத்தை நேரடியாக நம் முகம் நோக்கி வைக்கும் ஆற்றலும் தைரியமும் இல்லாதவர்கள்தாம் இந்த ஹிஜ்ரா கமிட்டியினர்கள். ஹிஜ்ரா என்று தங்களுக்கு பொருத்தமான பெயரையே இவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
https://www.facebook.com/singam.puli.9231/posts/1752563351624115
மேற்படி விமர்சனத்தில் சொல்லப்பட்டுள்ள மேற்படியாரான முன்னாள் ததஜ நிர்வாகிக்கு இத்தகைய எழுத்தாற்றலெல்லாம் கிடையாது என்பது ஊரறிந்த விஷயம். அவரின் தொலைபேசி இலக்கம் என்று இவர்கள் கொடுத்துள்ளதோ ராஜப்பன் எனும் திருப்பூரை சேர்ந்த சகோதரர். அவரிடம் இது குறித்து விசாரித்தபோது தன்னுடைய நம்பரை தவறாக சில பயன்படுத்துவதாக நொந்துகொண்டார். நாமும் அவருக்கு போன் செய்ததற்கு மன்னிப்பு கேட்டோம். பின்னர் ஜாகிர் ஹுசேன் நகர முன்னாள் தலைவரை தொடர்பு கொண்டு இந்த விமர்சனத்தை குறித்து விசாரித்தபோது அவர் அதை மறுத்ததுடன் ஹிஜ்ராவின் இந்த செயலால் பெருதும் மனவேதனை அடைந்தார்.
தன் எதிரியுடன் முகத்திற்கு நேர் நின்று போரிட திராணியற்ற இந்த கோழைகளா கிலாஃபத்தை கொண்டுவரப்போகிறார்கள்.
மூன் காலண்டர் இணைய தளங்களையும் ஹிஜ்ராவின் பதிவுகளையும் வாசித்து வருபவர்களுக்கு இந்த தரங்கெட்ட விமர்சனத்தை யார் எழுதியிருப்பார் என்று எளிதில் விளங்கிவிடும். ஹிஜ்ரா கமிட்டியில் பொறுப்பில் இருக்கும் இவரே ஹிஜ்ரா கமிட்டிக்கு எமது கட்டுரையை அனுப்பி விளக்கம் கேட்டாராம். அவருக்கு பதிலளிப்பதில்லை என்று ஹிஜ்ரா கமிட்டி சொல்லிவிட்டதாம். உடல் பொருள் ஆவி மூன்றுமே பொய்யாக இருந்தால் இவ்வாறு பொய் சொல்வதற்கு வேறென்ன துணிவு வேண்டும்.
2016 ஜூலை 6ம் தேதி இவர்கள் மேற்படி பினாமி விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர். அதில் “ததஜ தருதலை பிறைவேசியின் நரகல் நடை விமர்சனங்களுக்கு பதில் எழுதுவதை எப்போதோ நிறுத்திவிட்டோம் என்று சொன்னார்கள்” என்று இவர் சொன்னதாக இவரே எழுதியுள்ளார். ஆனால் வேடிக்கை என்னவென்றால் நாம் வெளியிட்ட காலண்டருக்கென ஓர் இயக்கமா? என்பதற்கு மறுப்பாக அவர்களது அதிகாரப்பூர்வ youtube சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ஆக்ஸ்ட் 28ம் தேதி மறுப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 6 இல் எனக்கு பதில் எழுதுவதை எப்போதே நிறுத்திவிட்டார்களாம், ஆனால் ஆகஸ்ட் 28 இல் எனக்கு மறுப்பு வீடியோ வெளியிடுவார்களாம். அது போன மாசம் இது இந்த மாசமோ?
நாங்கள் பதில் எழுத மாட்டோம் என்று தானே சொன்னோம். வீடியோ வெளியிடமாட்டோம் என்று சொன்னோமா என கிலாபத் வீரர்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.
மறுப்பு என்ற பெயரில் பதில் என்ற பெயரில் உளறிக்கொட்டியுள்ளனர். நாம் சூரிய நாட்காட்டி பற்றி என்ன சொன்னோம் என்பதை விளங்காமலேயே மறுப்பு தெரிவித்துள்ளனர். நபிகளார் காலத்தில் சூரிய காலண்டர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. அதற்கான ஹதீஸ்களை தந்திருந்தோம். குறிப்பிடப்பட்ட இரண்டு வசனங்களில் அல்லாஹ் ஆண்டு என்று குறிப்பிடுவது சூரிய ஆண்டைத்தான் என்பதை ஆதரங்களுடன் நிறுவியிருந்தோம். பார்க்க http://www.piraivasi.com/2015/08/20.html இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பிறையை பார்த்துதான் நிறைவேற்றப்படவேண்டும், உலக விஷயங்களில் சூரிய நாட்காட்டி மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல. என்பதையும் தெளிவாக்கியிருந்தோம். விவசாயத்திற்கு சூரிய நாட்காட்டி தேவை எனும் நிலையில் அல்லாஹ் நம்மை வைத்திருப்பதே சூரிய நாட்காட்டிக்கான அனுமதிதான்.
தான் தினந்தோறும் ஹிஜ்ரா கமிட்டி நண்பர்களுடன் பேசும் தரங்கெட்ட வார்த்தைகளை அப்படியே விமர்சனத்தில் பயன்படுத்தியுள்ள மேற்படியார். கெட்டவார்த்தைகளால் எம்மை அர்ச்சனை செய்த ஹிஜ்ரா அறிஞர் இஸ்லாமிய நற்குணங்களை பற்றி ததஜவினருக்கு வகுப்பெடுத்ததுதான் உச்சக்கட்ட நகைச்சுவை. ஹிஜ்ரா கொள்கையை விமர்சிப்பவர்களை மிரட்டுவதற்காக இவர்கள் ஒரு ரவுடி கும்பலை வைத்திருப்பதை அனைவரும் அறிவர். அக்கும்பல் பேசும் கெட்டவார்த்தைகளின் தொகுப்புகளும் நம்மிடமுள்ளது.
இன்று வரை எமது பெயரை தவிர எந்த பெயரிலும் நாம் எழுதியதில்லை. பிறைவாசி என்பது இவ்விணையதளத்தின் பெயர். இன்றுவரை முகவரியில்லா எந்த ஆக்கத்தையும் நாம் வெளியிட்டதில்லை. ஒவ்வொரு ஆக்கத்திலும் எமது பெயர் அல்லது எமது இணையதள முகவரி இடம்பெறும். நம்மை தொடர்பு கொள்ளும் எல்லா வசதிகளும் நமது இவ்விணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கோழைகளாக முகவரியற்ற உரைகளை பரப்பும் நிலை என்றும் நமக்கு ஏற்பட்டதில்லை. தன் குழந்தைக்கு அடுத்தவன் இனிஷியலை கொடுப்பதைப் போல தான் எழுதியதை அடுத்தவர் பெயரில் வெளியிடும் இத்தகைய கோழைகள், புனைப்பெயரில் எழுதுவதாக நம்மை சாடுவது வேடிக்கையாகவே உள்ளது.
என்னமோ கிலாஃபத் இவர் வீட்டு கொல்லைப்புறம் வரை வந்துவிட்டதைப் போலவும் அது இவர் வீட்டு முன்வாசல்வழியாக எம் தெருவிற்கு வந்துவிட்டால் எமக்கு பிரச்சனை என்று நாம் பயப்படுவதைப் போலவும் எழுதியுள்ளார். கிப்லாவை மாற்ற முயற்சித்ததிலிருந்து (பார்க்க http://www.piraivasi.com/2016/03/4.html), யூத ஷியா காலண்டர்களை காப்பியடித்துவரையில் (பார்க்க http://www.piraivasi.com/2015/10/17-3.html) இவர்கள் யூதர்களின் கையில் சிக்கிக்கொண்டதை நாம் நிறுவிவிட்டோம். கிலாஃபத் என்ற பெயரில் யூத ஷியாக்கள் முன்னர் எம் சமூகத்தை வேரறுத்த நிகழ்வுகள் மீண்டும் எம் சமூகத்திற்கு ஹிஜ்ரா வடிவில் வந்துவிடுமோ என்ற அச்சமே மேற்கண்ட பிரசுரத்திற்கு காரணம். அன்றி, குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஓர் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டால் அல்லாஹ் அக்பர் என்று முழங்கிக்கொண்டே அந்த அரசில் அடிப்படை சேவகனாக நாமிருப்போம்.