Monday 13 February 2017

திரிக்கப்பட்ட ஹதீஸ்கள், பாகம்-2

திரிக்கப்பட்ட ஹதீஸ்கள். பாகம்-2

ஹதீஸ்-3

நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதுனுநக்லா என்ற இடத்தில் இறங்கினோம். அப்போது பிறையைக் கவனித்தோம்;. அக்கூட்டத்தில் சிலர் இது மூன்றாவது நாளுக்குரியது (இப்னு ஃதலாஃத்) என்றனர். மற்றும் அக்கூட்டத்தில் சிலர் இரண்டாவது நாளுக்குரியது (இப்னு லைலத்தைன்) என்றனர். அப்பொழுது நாங்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் நிச்சயமாக பிறையைக் கவனித்தோம் சில நபர்கள் அது மூன்றாம் நாளுக்குரியது என்றும் மேலும் சில நபர்கள் அது இரண்டாம் நாளுக்குரியது என்றும் கூறினோம். அதற்கவர்(இப்னு அப்பாஸ் ரழி) நீங்கள் எந்தக் கிழமையில் கவனித்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் இன்ன இன்ன கிழமைகளில் கவனித்தோம் என்று விடையளித்தோம். அதற்கவர்கள்(இப்னு அப்பாஸ் ரழி), நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள். அறிவித்தவர்: அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 1885)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் மேற்கண்ட அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.
இவ்வாறு ஹதீஸை திரிக்கின்றனர் ஹிஜ்ராவினர். இந்த ஹதீஸ் உண்மையில் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.
قَالَ خَرَجْنَا لِلْعُمْرَةِ فَلَمَّا نَزَلْنَا بِبَطْنِ نَخْلَةَ
நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பத்ன் நக்லா என்ற இடத்தில் ஓய்வெடுத்தோம்.
قَالَ - تَرَاءَيْنَا الْهِلاَلَ
அப்போது *ஹிலாலைப்* பார்க்க முயன்றோம். (தெரிந்தது)
فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلاَثٍ
சிலர் இது மூன்றாவது இரவின் பிள்ளை என்றனர்.
وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ
மற்றும் சிலர் இரண்டாவது இரவின் பிள்ளை என்றனர்.
قَالَ فَلَقِينَا ابْنَ عَبَّاسٍ فَقُلْنَا إِنَّا رَأَيْنَا الْهِلاَلَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلاَثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ
பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, "நாங்கள் ஹிலாலை பார்த்தோம். மக்களில் சிலர் "அது மூன்றாவது இரவின் பிள்ளை " என்றனர். வேறுசிலர் "அது இரண்டாவது இரவின் பிள்ளை " என்று கூறினர்" என்று (நடந்ததை) சொன்னோம்.
‏.‏ فَقَالَ أَىَّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ
அதற்கவர்கள் “நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள்?'' என்று கேட்டார்கள்.
قَالَ فَقُلْنَا لَيْلَةَ كَذَا وَكَذَا
இந்த இரவில் பார்த்தோம் என்று விடையளித்தோம்.
فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ"
(அதற்கு) “அதைப் “(பிறையைப்) பார்ப்பதற்காகவே (காட்சி அளிக்கும் நேரத்தை) அல்லாஹ் நீட்டுகிறான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
فَهُوَ لِلَيْلَةِ رَأَيْتُمُوهُ
“எனவே அது நீங்கள் பார்த்த இரவுக்குரியது தான்” என (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்) கூறினார்கள்
கீழ்காணும் விளக்கம் ஹதீஸின் எந்த வார்த்தைக்குரியது என்பதை வட்டமிட்ட அடிக்குறிப்பு எண்கள் காட்டும். மேலும் முக்கிய வார்த்தைகள் அடிக்கோடிடப்பட்டுள்ளன
ஹிலாலை தேடினோம் என்கிறார் அபுல் பக்தரி. அவர்கள் தேடியது ஹிலாலை, ஹிலால் ஃதானி-யை தேடவில்லை, ஹிலால் ஃதாலிஃத்-ஐ தேடவில்லை. ஹிலால் என்ற முதல் பிறையை தேடினார்கள்.
ஹிலாலை பார்த்தோம் என்கிறார் அபுல் பக்தரி. அவர்கள் பார்த்ததும் ஹிலாலைதான், ஹிலால் ஃதானி-யை பார்க்கவில்லை, ஹிலால் ஃதாலிஃத்-ஐ பார்க்கவில்லை.
மக்களுக்கு தான் அது இரண்டாம் இரவின் பிறையா மூன்றாம் இரவின் பிறையா என்று சந்தேகம். இன்றைக்கும் மக்களுக்கு இதுதான் தர்க்கமே தவிர, பிறையை பெரிதாக பார்க்கும் எவருமே முதல் பிறையா என்று சர்ச்சை செய்யமாட்டார்கள்.
இப்னு அப்பாஸ் எந்த இரவில் பார்த்தீர்கள் என்று ஒரே ஓர் இரவைக்குறித்து ஒருமையில் கேட்கிறார்.
அபுல் பக்தரியும் இந்த இரவில் பார்த்தோம் என்று ஒரே ஓர் இரவைக்குறித்து ஒருமையில் பதிலளிக்கிறார்.
எந்த இரவில் பார்த்தார்கள் என்று உறுதி செய்யவே இந்த கேள்வி. 30ம் இரவு என்பதை தவிர வேறு ஒன்றை அபுல் பக்தரி சொல்லியிருக்கவே முடியாது.
காரணங்கள்:-
அ. முந்தய இரவில் அவர்கள் பிறை பார்த்திருந்தால் அடுத்த இரவில் பிறையை தேடவேண்டிய தேவையென்ன? பிறையைப் பார்க்காமலே அது இரண்டாம் இரவென்று அவர்களுக்கு தெரிந்திருக்கும். எண்ணிக்கைதான் அவர்கள் வழிமுறை. அதற்கு முன்னால் அவர்கள் பிறையை பார்க்கவில்லை என்றும் அன்றுதான் அம்மாதத்தின் முதல் பிறையை பார்க்கிறார்கள் என்றும் தெளிவாகிறது. அது பிறை தேடும் இரவான 30ஆம் இரவை தவிர வேறல்ல.
ஆ. ஹிஜ்ராவினர் சொல்வதைப்போல தினமும் பிறைகளைப் பார்ப்பார்கள் என்று வைத்துக்கொண்டால் "நேற்றுதானே பிறை ஒன்றைப் பார்த்தோம். இது இரண்டுதான்" என்று முடிவெடுத்திருப்பார்கள். அல்லது " நேற்றுதானே பிறை இரண்டை பார்த்தோம் எனவே இது மூன்றுதான்" என்று முடிவெடுத்திருப்பார்கள். இவ்விரண்டும் நடக்கவே இல்லை. ஏனென்றால் அதற்குமுன் அவர்கள் பிறையை பார்த்திருக்கவே இல்லை. அந்த மாதம் முதலில் அன்றுதான் பிறை பார்க்கிறார்கள். எனில் அது எந்த இரவு? 30ஆம் இரவை தவிர வேறு இரவாக இருக்கவே முடியாது.
அவர்கள் பார்த்தது ஹிலாலை தேடும் 30ஆம் இரவுதானா என்று உறுதிசெய்துகொண்டார் இப்னு அப்பாஸ் (ரலி)
"அதைப் பார்க்கும் வரை அல்லாஹ் நீட்டுகிறான்". என்ற நபி மொழியை மேற்கோள் காட்டுகிறார்கள்.
அதனால் அளவை வைத்து அலட்டிக்கொள்ளாதீர்கள். என்பதே நபி ஸல் சொன்ன ஹதீஸை இப்னு அப்பாஸ் ரலி மேற்கோள் காட்டியதன் உட்கருத்து.
எனவே நீங்கள் ஹிலாலை தேடிய தலைப்பிறைக்குரிய இரவு தான் அது என தீர்ப்பளிக்கிறார்கள்.
இரண்டா மூன்றா என்பதே சர்ச்சை. அந்த நேரத்தில் போயி யாராவது "நீங்க எந்த கிழமையில் பார்த்தீர்களோ அந்த கிழமைக்குரியது" என்று பொதுவாக சொல்வார்களா? இது போல ஒரு சந்தர்ப்பம் அமையுமா? "நீங்கள் என்றைக்கு பிறை தேடுகிறீர்களோ அன்றைக்குதான் முதல் பிறை" என்று தெளிவாக சொல்லியிருக்கவேண்டாமா? – எதிர் தரப்பு வாதம்
நியாயமான கேள்வி.:
முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது. "நீங்க எந்த கிழமையில் பார்த்தீர்களோ அந்த கிழமைக்குரியது" என மூலத்தில் இல்லை. "எனவே அது நீங்கள் பார்த்த இரவுக்குரியது" என்றுதான் உள்ளது. என்றெல்லாம் பார்க்கிறீர்களோ அன்றெல்லாம் அந்த பிறை அந்த தேதியைக் காட்டும் என்பது திருடர்களின் மொழிப்பெயர்ப்பு. கிழமை என்ற வார்த்தையே அரபு மொழியில் இல்லை. இரவு என பொருள்படும் லைலத் என்ற வார்த்தை மட்டுமே மூலத்தில் உள்ளது.
இரண்டாவதாக அன்று ஹிஜ்ராணிகள் இல்லை. பிறைகளின் வடிவங்கள் தேதிகளைக் காட்டும் என்ற குழப்பம் அன்று இல்லை. அப்படி இருந்திருந்தால் இப்னு அப்பாஸ் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கலாம். கேள்வி என்னவோ அதை புரிந்து தக்க பதிலை இப்னு அப்பாஸ் ரலி வழங்கியுள்ளனர். அவர்கள் பார்த்த பிறை அளவில் பெரிதாக இருந்ததால் முதல் பிறை பார்க்கவேண்டிய நாளை தவறவிட்டுவிட்டோமோ என்பதே சர்ச்சைக்கு காரணம்.
பிறையை எந்த நாளில் தேடினீர்கள் என்று கேட்டு அது 30ம் இரவுதான் என உறுதி செய்து நீங்கள் பார்த்தது ஹிலால் எனும் தலைப்பிறையைத்தான் என்கிறார்கள்.
அபுல் பஃக்தரி ஹிலாலை பார்த்தோம் என்றுதான் சொல்கிறார். ஹிலால் ஃதானி ஃதாலிஃத் என்று சொல்லவில்லை என்பதே அபுல் பக்தரி தெளிவாக இருக்கிறார் மக்களின் சந்தேகத்தை மட்டுமே முறையிட்டுள்ளார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அதை தெளிவாக விசாரித்து "ஆமப்பா சரியாத்தான் செஞ்சிருக்கீங்க" என்று அங்கீகரிக்கிறார் இப்னு அப்பாஸ் ரலி. அதனால் எந்த சர்ச்சை அன்று இல்லையோ அந்த சர்ச்சைக்கு இப்னு அப்பாஸ் சந்தர்ப்பத்தை தவறவிட்டு பதில் சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்ல இயலாது.
இதே கேள்வி எதிர் தரப்பிலும் வரும் என்பதை அவர்கள் உணரவில்லை. இரண்டா மூன்றா என்று கேட்ட மக்களிடம் இரண்டு என்றும் அவர் சொல்லவில்லை மூன்று என்றும் சொல்லவில்லை. நீங்கள் பார்த்த இரவுக்குரியது என்கிறார். எனில் இரண்டு என்று சொன்ன மக்களுக்கு 2ம் பிறை என்றும் 3 என்ற மக்களுக்கு 3ம் பிறை என்றும் அர்த்தமா?
ஹதீஸில் ஒருவர் இரண்டாம் இரவின் பிறை என்றார் மற்றொருவர் மூன்றாம் இரவின் பிறை என்றார். எனில் இரண்டாம் இரவின் பிறை என்றவருக்கு அது இரண்டாம் தேதியும் மூன்றாம் இரவின் பிறை என்றவருக்கு மூன்றாம் தேதியையும் காட்டுமா? அல்லது அவர்கள் எல்லோரும் ஒரு இரவில் நின்று பிறை பார்த்தார்களே அந்த இரவைக் குறிக்குமா?
அது எந்த இரவுக்குரிய பிறை என்று தெரியாமல்தான் இப்னு அப்பாசிடம் கேட்கிறார்கள். நீங்கள் பார்த்த இரவுக்குரிய பிறை என்றால் அதில் என்ன அர்த்தம் இருக்க முடியும். எந்த இரவில் பார்க்கிறோம் என்று தெரியாதவர்களிடம் நீங்கள் பார்த்த இரவுக்குரியது என்று சொல்வார்களா?
இந்த ஹதீஸில் தெளிவாக தெரியும் ஒரு விஷயத்தை ஹிஜ்ராவினர் மறைகின்றனர். இப்ன் அப்பாஸ் ரலி எந்த இரவில் பார்த்தீர்கள் என்று கேட்டுவிட்டு அந்த இரவின் பிறை என்கிறார். இவர்கள் விளங்குவது போல் பிறையைப் பார்த்துவிட்டு இரவை முடிவு செய்யவில்லை.
எந்த இரவில் பார்த்தீர்கள் என்று கேட்டு பதில் தெரிந்த பின்தான் அது அந்த இரவுக்குரிய பிறைதான் என்கிறார். இங்கே நாள்தான் பிறையை முடிவு செய்கிறதே தவிர பிறை நாளை முடிவு செய்யவில்லை.
நீங்கள் எந்த இரவில் பார்க்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியாவிட்டால் பிறை தேதியைக் காட்டாது என்பது இந்த ஹதீஸ் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அதை இருட்டடிப்பு செய்துவிட்டு பிறை தேதியைக் காட்டும் என்பது தவறு.
நீங்கள் எண்ணிவந்த நாள்தான் பிறையை முடிவு செய்யும். பிறை நாளை முடிவு செய்யாது.
எந்த இரவில் பார்க்கிறோம் என்று தெரியாவிட்டால் பிறை தேதியைக் காட்டாது. எந்த இரவில் பார்க்கிறோம் என்பது எப்படி தெரியும்?
எனவே, பார்த்த இரவுக்குரியது என்பது ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டும் என்றோ அவ்வாறு ஒவ்வொரு நாளும் பார்க்கும்போது அது உங்களுக்கு என்ன அளவில் தெரிகிறதோ அந்த அளவுக்குரிய பிறை என்றோ பொருள் கிடையாது. மேலும் இரண்டாம் இரவு என்று சொன்னவர்களுக்கு இரண்டாம் இரவும் மூன்றாம் இரவு என்று சொன்னவர்களுக்கு மூன்றாம் இரவும் வராது. இப்ன் அப்பாஸ் ரலி நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள் என்று கேட்டுவிட்டு அந்த ஒரே ஓர் இரவைத்தான் சொன்னார்கள். அது எந்த இரவு?
அவர்கள் முதல் பிறையை ஏற்கனவே பார்த்திருந்தால் அது எந்த இரவுக்குரிய பிறை என்பதை அவர்கள் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொண்டிருப்பார்கள். சந்தேகமும் வந்திருக்காது! சர்ச்சையும் வந்திருக்காது! எனில் அது எந்த இரவு? அவர்கள் பிறையைத் தேடவேண்டிய 29 ம் பகல் முடிந்து வரும் 30ஆம் இரவு பிறையைப் பார்க்க ஓன்று கூடுகிறார்கள். அது அளவில் பெரிதாக இருப்பதால் முதல் பிறையை நாம் பார்க்க தவறிவிட்டோமோ என்று அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. அதன் அளவை வைத்து சிலர் அதை 2ம் பிறை என்று மற்றும் சிலர் அதை 3ம் பிறை என்றும் சொல்கின்றனர். நீங்கள் சந்தேகம் கொள்ளவே வேண்டாம். பிறையைப் பார்ப்பதற்காகவே அல்லாஹ் முந்தைய மாதத்தை தமாதப்படுத்துகிறான். எனவே நீங்கள் அது பிறையைத் தேடிய முதல் இரவுக்குரியதே என்று ஒரு நபி மொழியைச் சொல்லி இப்ன் அப்பாஸ் தீர்ப்பு வழங்குகிறார்கள்.
இந்த ஹதீஸை தினமும் பிறை பார்க்கவேண்டும் என்பதற்கு ஆதாரமாகவும் ஹிஜ்ராவினர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது தினமும் பிறை பார்ப்பதற்கு எதிரான ஆதாரமாகும். தினமும் பிறை பார்த்திருந்தால் அவர்களுக்கு ஏன் சந்தேகம் வருகிறது என்பதைக் கூட இவர்கள் சிந்திக்கத் தவறுவதேன்.
மேலும் மொழி ரீதியாக ஆய்வு செய்தாலும் அவர்கள் ஹிலால் எனும் தலைப்பிறையையே தேடியுள்ளனர். ஹிலால் என்பதற்கு முதல் மூன்று நாட்கள் பிறையை குறிக்கும் என்று அகராதி பொருளை இவர்கள் காட்டினாலும், இரண்டாம் பிறையை ஹிலால் ஃதானி என்றோ மூன்றாம் பிறையை ஹிலால் ஃதுலூஃத் என்றோ சொன்னதாக இஸ்லாமிய வரலாற்றிலிருந்து இவர்களால் காட்ட இயலாது. மாறாக இரண்டாம் பிறை மூன்றாம் பிறை என்று வரும் இந்த ஹதீஸில் கூட ஹிலால் என்ற வார்த்தை வரவில்லை. மூன்றாம் பிறை என்று வரும் மற்ற ஹதீஸ்களிலும் ஹிலால் என்ற வார்த்தை வரவே இல்லை. தலைப்பிறையை தவிர மற்ற பிறைகளை கமர் என்பதே அரபு/இஸ்லாமிய வழக்கம். அவர்கள் தலைப் பிறை எனும் ஹிலாலை தேடியுள்ளார்கள் என்பது ஹதீஸின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுவிட்டது. அது அளவில் பெரிதாக இருந்ததால் அதை இரண்டாம் பிறை அல்லது மூன்றாம் பிறை என்று சந்தேகம் கொண்டுள்ளனர். நீங்கள் தேடிய முதலாம் இரவுக்குரிய தலைப்பிறைதான் அது என்கிறார்கள் இப்னு அப்பாஸ் ரலி.
மேலும் லைலத் எனும் வார்த்தையை கிழமை என்று மொழிப்பெயர்ததுடன் நில்லாமல் லைலத கதா வகதா என்பதை இன்னின்ன கிழமைகள் என்று பன்மையில் மொழிப்பெயர்த்து தாங்கள் மொழிக்குருடர்கள் என்று நிறுவியுள்ளனர் ஹிஜ்ராவினர். லைலத் என்றால் குறிப்பிட்ட ஓர் இரவு என்று அர்த்தம். லைலத் ஒருமை அன்றி பன்மையே அல்ல. கதா வகதா என்று இருமுறை வந்ததால் நாங்கள் பன்மையில் மொழிப்பெயர்த்தோம் என்று இவர்கள் கூறுவார்களெனில் இவர்கள் மீண்டும் நல்ல மதரசாவில் சேர்ந்து அரபு கற்றுக்கொள்ளவேண்டும்.
தலைப்பிறை அளவில் பெரிதாக இருந்தாலும் அதுவே தலைப்பிறை என்பதே இந்த ஹதீஸின் சாராம்சம்.
ஹிலால் தலைப்பிறையை மட்டுமே குறிக்கும் என்பதற்கான விளக்கம் http://www.piraivasi.com/2016/07/21.html
சஹாபியின் கூற்றை ஹதீஸ் ஆக்கிய மகான்கள்
فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ"
فَهُوَ لِلَيْلَةِ رَأَيْتُمُوهُ
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அதைப் பார்ப்பதற்காக அல்லாஹ் நீட்டுகிறான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே அது நீங்கள் பார்த்த இரவுக்குரியது தான்” (என்று விளக்கமளித்தார்கள்.)
மேலுள்ளது உண்மையான மொழிப்பெயர்ப்பு
அதற்கவர்கள் (இப்னு அப்பாஸ் ரழி), நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்.
பதன்நக்லா ஹதீஸ் என்ற பிரபலமான மேற்படி நபிமொழியில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் அந்த செய்தியில் ஃபஹூவ லிலைலதின் ராஅய்த்துமூஹூ فهو لليلة رأيتموه என்ற சொற்றொடருக்கு எந்தக் கிழமையில் பிறை பார்க்கப்படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்பதை வைத்து, தெஹீட்டியில் பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தப்பிறை, அது எந்தக்கிழமைக்குரிய பிறையோ அது அந்தக்கிழமைக்குரிய பிறைதான் என்றுதான் வாதிடமுடிம்.
இது கமிட்டி. மொழிப்பெயர்ப்பு. இங்கே செய்யப்பட்ட இரு மோசடிகளை பார்ப்போம்.
1. *"இன்னல்லாஹ மத்தஹு லிர்ரூ°யதி"* என்பது மட்டுமே நபிகளாரின் வார்த்தை. *"ஃபஹுவ லி லைலத்தி ரஅய்த்துமூஹு"* என்பது இப்னு அப்பாஸ் ரலி யின் வார்த்தைகள்.
அதாவது "அதைப் பார்ப்பதற்காக அல்லாஹ் நீட்டுகிறான்என்பது மட்டுமே ஹதீஸ்
"எனவே அது நீங்கள் பார்த்த இரவுக்குரியது தான்என்பது இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் விளக்கம்.
இது உண்மை என பின்னர் விளங்கும்
2. *"ஃபஹுவ லி லைலத்தி ரஅய்த்துமூஹு"* என்றால் நீங்கள் பார்த்த இரவுக்குரியது என்பதை தவிர வேறு அர்த்தமே இல்லை.
ஃபஹுவ = எனவே அவன்
லிலைலத்தி = இரவுக்குரியவன்
ரஅய்த்துமூஹு = நீங்கள் பார்த்த
ரஅய்த்துமூஹு என்பது இறந்த காலம். "நீங்கள் பார்த்த" "the one you saw" என்று பொருள்படும் இறந்தகாலம். "நீங்கள் பார்க்கும்" என்ற நிகழ்காலமோ எதிர்காலமோ அல்ல.
*"ஃபஹுவ லி லைலத்தி தரவ்"*
என்று வந்திருந்தால் அதற்கு நீங்கள் பார்க்கும் இரவுக்குரியது என்று பொருள் கொடுக்க இயலும்
இப்போது சிந்தியுங்கள். "பார்க்கும் வரை அல்லாஹ் நீட்டுகிறான், எனவே நீங்கள் *பார்க்கும்* இரவுக்குரியது" என்றிருந்தால் அது மொத்தமும் நபியின் வார்த்தை என்று சொல்ல இயலும்.
ஆனால் மூலத்தில் இருப்பதோ. *"பார்க்கும் வரை அல்லாஹ் நீட்டுகிறான், எனவே நீங்கள் பார்த்த இரவுக்குரியது"* என்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்னால் இறந்து போன நபிகளார் பிற்காலத்தில் வந்த அபுல் பஃக்தரிக்கு நீங்கள் பார்த்த இரவு என்று சொல்ல முடியுமா? இல்லை! நபிகளார் சொல்லியிருந்தால் நீங்கள் *பார்க்கும் இரவுக்குரியது* என்று பின்வரும் எல்லோருக்கும் பொதுவாக நிகழ்காலத்தில் சொல்லியிருப்பார்கள். நீங்கள் பார்த்த இரவுக்குரியது என்று சொல்லவேண்டுமானால் அது பஃக்தரியிடம் நேரடியாக சொல்லும் இப்னு அப்பாசாகவே (ரலி) இருக்க முடியும். அபுல் பக்தரி பார்த்த குறிப்பிட்ட அந்த *ஓர் இரவை* மட்டுமே குறிக்கும் வார்த்தைகள்தாம் "ஃபஹுவ லி லைலத்தி ரஅய்த்துமூஹு" என்பவை. இறந்தகாலத்திற்கு சொல்லப்பட்டது. பொதுவாக யார் பார்த்தாலும் அது அந்த நாளின் பிறை என்று சொல்லும் விதத்தில் எதிர் காலத்தில் அந்த வாசகம் அமையப்பெறவில்லை. லைலத் என்றால் ஓர் இரவு, ஒரு குறிப்பிட்ட இரவு என்றே பொருள்.
அரபு தெரியாமல் போனதால் சஹாபியின் வார்தையை ஹதீஸாக்கிவிட்டார்கள். "நீங்கள் பார்த்த இரவுக்குரியது" என்பதை "எந்தக் கிழமையில் பிறை பார்க்கப்படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை" என்று மாற்றிவிட்டார்கள்

ஹதீஸ்-4

நாங்கள் தாதுஇரக் எனும் இடத்தில் ரமழான் பிறையைப் பார்த்தோம். அது பற்றிய விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரழி) யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள். அறிவித்தவர்: அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 2582).
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் மேற்கண்ட அறிவிப்பில் அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அது உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.
இது ஹிஜ்ராவினரின் திரிபு. உண்மையான விளக்கத்தைப் பார்ப்போம்.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ أَبَا الْبَخْتَرِيِّ، قَالَ أَهْلَلْنَا رَمَضَانَ وَنَحْنُ بِذَاتِ عِرْقٍ فَأَرْسَلْنَا رَجُلاً إِلَى ابْنِ عَبَّاسٍ - رضى الله عنهما - يَسْأَلُهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ - رضى الله عنهما - قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ اللَّهَ قَدْ أَمَدَّهُ لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ‏"‏ ‏.‏
நாங்கள் தாதி இர்க் எனும் இடத்தில் ரமளான் பிறை பார்த்தோம். இது பற்றி விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “அதைப் “(பிறையைப்) பார்ப்பதற்காகவே (காட்சி அளிக்கும் நேரத்தை) அல்லாஹ் நீட்டுகிறான். (சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலையில்) அது உங்கள் மீது மங்கி இருந்தால் எண்ணிக்கையை முழுமையாக்குங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபுல்பக்தரீ
நூல்: முஸ்லிம்
இந்த ஹதீஸ் சிலருக்கு புரியாமல் இருக்கலாம். இதே ஹதீஸ் வேறு அறிவிப்புகளில் விளக்கமாகவே இருக்கிறது.
سنن الدارقطني - رقم الحديث: 1910
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ , ثنا عَلِيُّ بْنُ دَاوُدَ , ثناآدَمُ بْنُ أَبِي إِيَاسَ , ثنا شُعْبَةُ , حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ , قَالَ : سَمِعْتُ أَبَا الْبَخْتَرِيِّ الطَّائِيَّ , يَقُولُ : أَهْلَلْنَا هِلالَ رَمَضَانَ وَنَحْنُ بِذَاتِ الشُّقُوقِ , فَشَكَكْنَا فِي الْهِلالِ , فَبَعَثْنَا رَجُلا إِلَى ابْنِ عَبَّاسٍ فَسَأَلَهُ , فَقَالَ ابْنُ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّاللَّهَ أَمَدَّهُ لِرُؤْيَتِهِ , وَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاثِينَ " .
தாதில் ஷுக்கூக் எனுமிடத்தில் ரமளானின் ஹிலாலைப் பார்த்தோம். அந்த ஹிலாலில் சந்தேகம் கொண்டோம். இதைப் பற்றி கேட்க இப்னு அப்பாஸிடம் ஓர் ஆளை அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் "நீங்கள் பார்ப்பதற்காகவே அதை (காட்சியளிக்கும் நேரத்தை) அல்லாஹ் நீட்டுகிறான். (சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலையில்) அது உங்கள் மீது மங்கி இருந்தால் ஷஅபானின் எண்ணிக்கையை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள்" என நபிகளார் சொன்னார்கள் என்றார்கள்
அறிவிப்பவர்: அபுல் பக்தரி
நூல்: தாரகுத்னி
மற்றொரு முறை அதே அபுல் பக்தரி என்பவர் ரமளானின் பிறையைப் பார்க்கிறார். அந்தப் பிறை பார்த்தலில் அவருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. பிறை மிக மெலிதாக இருந்து பார்த்த உடனே மறைந்துவிட்டதால் தான் பார்த்தது பிறையா இல்லையா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்படுகிறது. உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஓர் ஆளை அனுப்பி விசாரிக்கிறார். நாம் பார்ப்பதற்காக அல்லாஹ் அதன் நேரத்தை நீட்டுகிறான். நமக்கு சந்தேகம் ஏற்பட்டும் நிலையில் அது இருந்தால் ஷாபான் மாதத்தை 30 ஆக முழுமை செய்யுங்கள் என்று ஹதீஸை பதிலாக சொல்லி அனுப்புகிறார்கள்.
இந்தச் சம்பவத்தைச் சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள். அபுல் பக்தரி அவர்கள் பிறையைப் பார்த்துச் சந்தேகம் கொண்டுள்ளார். ஒரு நாளை தவற விடக்கூடாது என்றிருந்தால் அவ்வாறே இப்னு அப்பாஸ் அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்களோ சந்தேகம் ஏற்பட்டால் மாதத்தை 30 ஆகப் பூர்த்திச் செய்யுங்கள் என்பதை ஹதீஸைக் கொண்டு நிறுவுகிறார்கள்.
அல்லாஹ் நாடினால் நமக்குப் பிறையைக் காட்டுவான். நாடாவிட்டால் காட்ட மாட்டான். நாம் பார்த்தது பிறையா? இல்லையா? நாம் பார்த்தது இரண்டாம் பிறையா என்ற சந்தேகத்தின் பெயரில் அடித்துக்கொள்ள மார்க்கம் அனுமதி வழங்கவில்லை. இரண்டாம் பிறையா மூன்றாம் பிறையா என்ற சர்ச்சை ஏற்பட்டபோது நாம் பிறை தேடும் இரவில் தெரிவதுதான் தலைப்பிறை என்றும்; பார்த்தது பிறையா இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டபோது சந்தேகத்தை விட்டுவிட்டு மாதத்தை முழுமையாக்குங்கள் என்றும் ஹதீஸ்கள் சொல்வது முஸ்லிம்களுக்குப் போதுமானது.

ஹதீஸ்-5

حدثنا أحمد بن حنبل ، حدثني عبد الرحمن بن مهدي ، حدثني معاوية بن صالح ، عن عبد الله بن أبي قيس ، قال : سمعت عائشة رضي الله عنها تقول :" كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ، ثم يصوم لرؤية رمضان ، فإن غم عليه عد ثلاثين يوما ثم صام " * سنن أبي داود - كتاب الصوم باب إذا أغمي الشهر حديث 1993
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃஅபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட. பிறகு ரமழானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பார்கள். அது அவர் மீது மறைக்கப்படும் போது அவர் அதை முப்பதாவது நாள் என்று எண்ணிக் (Count) கொள்வார்கள் பிறகு நோன்பு வைப்பார்கள்.
அறிவித்தவர் : ஆயிஷா (ரழி), நூல் : அபூதாவூத் (1993)
இது ஹிஜ்ராவினரின் திரிபு. ஒரு வார்த்தை விடுபட்ட அறிவிப்பை தேடி எடுத்துக் குழப்பம் விளைவிப்பதே இவர்களின் நோக்கம். ஹிலால் எனும் வார்த்தை இந்த அறிவிப்பில் விடுபட்டுள்ளது. அவ்வார்தையுடன் வரும் முழுமையான அறிவிப்பு அஹ்மதிலிருந்து இதோ.
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَيْسٍ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَفَّظُ مِنْ هِلَالِ شَعْبَانَ مَا لَا يَتَحَفَّظُ  مِنْ غَيْرِهِ، ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ  رَمَضَانَ، فَإِنْ غُمَّ عَلَيْهِ، عَدَّ ثَلَاثِينَ يَوْمًا، ثُمَّ صَامَ
مسند أحمد
நபி (ஸல்) அவர்கள் ஏனைய மாதங்களுக்கு வழங்காத முக்கியத்துவத்தை ஷஅபான் தலைப்பிறைக்கு வழங்குபவர்களாக இருந்தார்கள். பிறகு ரமலானின் பிறையைக் கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்களுக்கு மறைக்கப்பட்டால் முப்பதாக கணக்கிட்டு பிறகு நோன்பு நோற்பார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : அஹ்மத் (25202)
அஹ்மதிலிருக்கும் இவ்வறிவிப்பை கவனத்தில் கொண்டு அபு தாவூதில் இருக்கும் அறிவிப்பை மொழிப்பெயர்த்தால் இவ்வாறு இருக்கும்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ، - رضى الله عنها - تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَحَفَّظُ مِنْ شَعْبَانَ مَا لاَ يَتَحَفَّظُ مِنْ غَيْرِهِ ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ رَمَضَانَ فَإِنْ غُمَّ عَلَيْهِ عَدَّ ثَلاَثِينَ يَوْمًا ثُمَّ صَامَ ‏.‏
நபி (ஸல்) அவர்கள் ஏனைய மாதங்களுக்கு வழங்காத முக்கியத்துவத்தை ஷஅபான்(தலைப்பிறை)க்கு வழங்குபவர்களாக இருந்தார்கள். பிறகு ரமலான் பிறையைக் கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்களுக்கு மறைக்கப்பட்டால் முப்பதாக கணக்கிட்டு பிறகு நோன்பு நோற்பார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : அபூ தாவூத் 2325
தினமும் நபிகளார் பிறை பார்ப்பார்கள் என்றோ மனப்பாடம் செய்வார்கள் என்றோ இந்த ஹதீஸில் இல்லை. மாறாக எல்லா மாதமும் பிறை பார்த்தார்கள் என்றும். குறிப்பாக ஷாபானின் தலைப்பிறையை அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பார்கள் என்றும் வந்துள்ளது.
ஹிலால் எனும் தலைப்பிறையை தவிர மற்ற எந்த பிறையையும் நபிகளார் பார்க்கவில்லை என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.  பார்க்க http://www.piraivasi.com/2017/06/25.html
ஷாபான் தலைப்பிறையை முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பார்கள். ஷாபானின் துவக்கத்தை அறிந்தால்தான் அன்றிலிருந்து எண்ணிக்கொண்டு வந்து ஷாபானின் 30ஆம் இரவை அறிந்துகொள்ள முடியும். அப்போதுதான் ரமலானை சரியான நாளில் அடைய முடியும் என்பதே இதற்குக் காரணம். பின்னர் ரமலான் பிறையை கண்ணால் கண்டு நோன்பு பிடிப்பார்கள். இங்கே ரமளானின் எந்த பிறையை பார்த்தால் நோன்பை துவங்க இயலும். இரண்டாம் பிறையா? மூன்றாம் பிறையா? 29ம் பிறையா? நிச்சயமாக தலைப்பிறையைத்தான் பார்த்தார்கள்.
இந்த ஹிஜ்ராவினர் சொல்வதைப் போல 29ம் நாளில் கடைசிப் பிறையை பார்த்துவிட்டு மறுநாள் அமாவாசையை கடைபிடித்து அதற்கும் மறுநாளில் நபிகளார் நோன்பு பிடிக்கவில்லை.