Tuesday 28 February 2017

திரிக்கப்பட்ட ஹதீஸ்கள், பாகம்-3

பலமும் பலவீனமும்:
பிறை தொடர்பாக தெளிவான சஹீஹான ஹதீஸ்கள் பல இருக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் எதோ ஒரு குறை சொல்லி, பலவீனப்படுத்திவிட்டு, ஆதாரம் என்ற பெயரில் சில செய்திகளை எடுத்து வருவார்கள் ஹிஜ்ராவினர். அவைகள் பலவீனமாக இருந்தாலும் பரவாயில்லை பெரும்பாலும் இட்டுக்கட்டப்படவையாகவே இருக்கின்றன. ஆனால் இத்தகைய செய்திகளைதான் முதன்மை ஆதாரமாக ஹிஜ்ரா கமிட்டி வைக்கிறது. அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்
حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، قَالَ: سَأَلْتُ جَابِرًا، هَلْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَا تَصُومُوا حَتَّى تَرَوْا الْهِلَالَ، فَإِنْ خَفِيَ عَلَيْكُمْ، فَأَتِمُّوا ثَلَاثِينَ "؟ وَقَالَ جَابِرٌ: هَجَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ شَهْرًا، فَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ، وَقَالَ: " إِنَّمَا الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ " (3)
[الحكم: إسناد ضعيف فيه عبد الله بن لهيعة الحضرمي وهو ضعيف الحديث]
(مسند أحمد)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பிறையை கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள். எனவே உங்கள் மீது அது மறைந்து இருக்கும் போது முப்பதாக பூர்த்தி செய்யுங்கள். ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன் மனைவிகளை விட்டும் ஒருமாதம் பிரிந்து இருந்தனர். மேலும் 29-வது நாளில் இறங்கினார்கள். மேலும் நிச்சயமாக இந்த மாதம் 29 நாட்களை கொண்டது என கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி) அவர்கள், நூல் : அஹ்மத் (14670) 
(நாம் இங்கே கொடுத்திருக்கும் மொழிப்பெயர்புகளும் அவர்களுடையவையே. நம் கைசரக்கல்ல)
தங்களிடம் இருக்கும் பெரிய ஆதாரமாக அவர்கள் எடுத்துவைப்பது இதைத்தான். இதில் இருக்கும் ஃகஃபிய எனும் வார்த்தைதான் அமாவாசை எனும் சங்கமம் என வாதிடுகிறார்கள். இதை ஏற்கனவே பகுதி ஒன்றில் விளக்கியிருந்தோம். ஆனால் இதை அறிவிக்கும் இப்னு லஹீஆ பல விமர்சனத்திற்கு ஆளான மிகவும் பலவீனமானவர். இது ஹதீசல்ல
عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ جَعَلَ الْأَهِلَّةَ مَوَاقِيتَ لِلنَّاسِ، فَصُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرِوَا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَعُدُّوَا لَهُ ثَلَاثِينَ يَوْمًا»
(مصنف عبد الرزاق)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، نا أَبُو عَاصِمٍ، ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ، ثنا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ جَعَلَ الْأَهِلَّةَ مَوَاقِيتَ، فَإِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ، وَاعْلَمُوا أَنَّ الشَّهْرَ لَا يَزِيدُ عَلَى ثَلَاثِينَ»
(صحيح ابن خزيمة)
''அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு பிடியுங்கள். அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை விடுங்கள். எனவே அவைகள் உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாக கணக்கிட்டு கொள்ளுங்கள்.' )அறிவிப்பாளர் இப்னு உமர் (ரழி) நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக்(
''அல்லாஹ் நிச்சயமாக பிறைகளை தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவைகளை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவைகளை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவைகள் உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை. )அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி)) நூல்: ஸஹீஹ் இப்னு ஹீசைமா 1789(
சூமு லி ருயதிஹி என்றுவரும் ஹதீஸ்கள் முழுமையல்ல. அதன் முழுமையான அறிவிப்பு இதுதான். இதில் அஹில்லா என்று சொல்வதன் மூலம் நிலவின் அனைத்து கலைகளையும் பார்க்கவேண்டும் என்கிறார்கள் ஹிஜ்ராவினர். இதற்கான உண்மையான விளக்கத்தை நீங்கள் இங்கே காணலாம். http://www.piraivasi.com/2016/07/30.html . ஆனால் மேலுள்ள செய்தி இட்டுக்கட்டப்பது. இதை அறிவிக்கும் அப்துல் அzீz பின் அபீ றவ்வாத் தன் தந்தை வழியாக அறிவிக்கும் அனைத்து செய்திகளும் இட்டுக்கட்டப்பட்டவை. எனவே இதுவும் ஹதீசல்ல.
11083- حدثنا سفيان قال، حدثنا ابن فضيل، عن هارون بن عنترة، عن أبيه قال: لما نزلت:"اليوم أكملت لكم دينكم"، وذلك يوم الحج الأكبر، بكى عمر، فقال له النبي صلى الله عليه وسلم: ما يبكيك؟ قال: أبكاني أنّا كنا في زيادة من ديننا، فأما إذ كمل، فإنه لم يكمل شيء إلا نقص! فقال: صدقت. (1)
 تفسير الطبري 519/9
[الحكم: وإسناده ضعيف، وهو مرسل، سفيان بن وكيع ضعيف الحديث، وعنترة بن عبد الرحمن الكوفي تابعي ثقة، قال الحافظ: ووهم من زعم أن له صحبة. ]
நபிகளார் செய்த இறுதி ஹஜ்ஜில் அவர்களின் அரஃபா நாள் வெள்ளிக்கிழமையில் அமைந்திருந்தது. இது புறக்கண்ணால் பிறை பார்ப்பதுடன் ஒத்துப்போவதுடன் இவர்களின் அமாவாசை கணக்கையும் பொய்யாக்குகிறது. நபிகளாரின் அரஃபா வெள்ளிக்கிழமையில் அமைந்ததற்கான ஏராளமான சான்றுகள் சஹீஹான ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன. பார்க்க http://www.piraivasi.com/2015/11/29.html ஆனால் நபிகளாரின் ஹஜ் வியாழக்கிழமையில் அமைந்ததாக பொய்யான செய்தியை பரப்புகின்றனர் ஹிஜ்ராவினர். அதற்கு ஆதாரமாக எந்த ஹதீஸ் புத்தகங்களிலும் இல்லாமல் தபரி எனும் தஃப்சீர் புத்தகத்தில் இருந்து மேலுள்ள செய்தியை எடுத்துள்ளனர். இதில் மார்க்கம் இன்றுடன் முழுமையாக்கப்பட்டது எனும் குர்ஆனின் 5:3ம் வசனம் ஹஜ்ஜுல் அக்பர் நாளில் இறக்கப்பட்டதாக அதாவது நஹ்ருடைய தினத்தில் இறக்கப்பட்டதாக வந்துள்ளது. எனவே நபிகளாரின் அரஃபா வியாழக்கிழமை என வாதிடுகின்றனர். இந்த செய்தியில் பலக்குறைகள் உள்ளன. அறிவிப்பாளர் அந்தறா யாரிடமிருந்து இதைக் கேட்டார் எனும் தகவல் இல்லை. அவரே நேரடியாக பார்த்தது போல செய்தி அமைந்துள்ளது. அவர் ஒரு தாபிஇ. எனவே இது தொடர்பறுந்த செய்தி, மேலும் அறிவிப்பாளர் சுஃப்யான் பின் வகீஇ பலவீனமானவர். மொத்தத்தில் இட்டுக்கட்டப்பட்ட செய்தி இது. இதுவும் ஹதீசல்ல.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...