Friday 5 December 2014

தரீக் ஜின்னா? இல்லை தரமாறிய மண்ணா?

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
அக்கால மக்களால் விளங்க இயலாத, இன்றைய அறிவியலாளர்களால் மட்டுமே விளக்க இயன்ற பல அறிவியல் உண்மைகளை குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான். இவை குர்ஆன் இறைவேதம்தான் என சாட்சி அளிப்பவை என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் சிலர்  அவசர கோலத்தில் தங்களுக்கு தெரிந்த அறிவியலை வைத்தோ அல்லது குர்ஆனில் தாங்கள் விளங்கியதிலிருந்தோ சிலவற்றை எடுத்து இந்த குர்ஆன் வசனம் இந்த அறிவியலைப் பற்றி பேசுகிறது என்று தவறாகப் பொருத்தி விடுகின்றனர். இதை செய்பவர்கள் அனைவரும் இது நன்மை தரும் என்ற நோக்கில்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் அறிவியல் எந்த அளவுக்கு உண்மையானது என்றும் அப்படி அது உண்மையாகவே இருந்தாலும் குறிப்பிட்ட அந்த குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ் இதைதான் கூறுகிறதா என்று சிந்திக்காமலும் இதை செய்துவிடுகின்றனர். இதன் பின்விளைவு எதிரிகள் இதை ஒரு விமர்சனமாக எடுக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லிலும் அதற்கு பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்படுகிறான். அப்படிப்பட்ட தகவல்கள் நமது பார்வையில் வரும்போது அதன் உண்மை நிலையை ஆராய்ந்து தொடர்புடைய சகோதரருக்கு விளக்கி வருகிறோம். அதனடிப்படையிலான ஒரு கட்டுரைதான் இது. 
தரீக் ஜின்னா? இல்லை தரமாறிய மண்ணா? எனும் தலைப்பில் சகோ. ஒருவர் எழுதிய ஒரு கட்டுரைக்கு நான் எழுதிய மறுப்பு. அந்த மலையை பற்றி இனியும் மக்கள் குழம்பவேண்டமெனும் எண்ணத்துடன் இங்கே வெளியிடுகிறேன். முதலில் அவரது கட்டுரையும் பின்னர் நமது விளக்கமும் இடம்பெற்றுள்ளன.
கட்டுரை:
தரீக் ஜின். மதினாவிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள ஓர் இடம். இங்கே இரண்டு மாதங்களுக்கு முன் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த இடத்தில் பிரத்தியேக சிறப்பு என்னவெனில், வாகனங்களை நியூட்ரலில் போட்டுவிட்டு நீங்கள் ஸ்டார்ட் செய்தீர்கள் என்றால், ஆக்சிலேட்டரைக் கொடுக்காமலேயே வாகனம் செல்ல ஆரம்பிக்கிறது. அதனுடைய வேகம் சிறிது சிறிதாக அதிகரித்து 140 கி.மீ வேகம் வரை செல்கிறது. இத்தனையும் ஆக்சிலேட்டரை அழுத்தமலேயே நடக்கிறது. நாம் 140 கி.மீ வேகம் வரை தான் சென்றோம் அதற்கு மேலாகவும் வேகம் அதிகரிக்கிறது. அதே போன்று எதிர் திசையில் வருகிற பொழுது எவ்வளவு தான் உங்கள் வாகனத்தின் வேகத்தைக் கூட்டினாலும் 60 முதல் 70 கி.மீ வேகத்திற்கு மேல் செல்வது கிடையாது.
இந்த நிகழ்வைப் பார்த்து விட்டு, இது ஏதோ ஜின்னால் தான் நடக்கிறது என அப்பகுதி மக்கள் மூட நம்பிக்கையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். இப்படி மூட நம்பிக்கையில் வீழ்கின்ற மக்கள் திருமறைக் குர் ஆன் கூறக்கூடிய விடயங்களைப் பற்றி சற்றும் சிந்திப்பது கிடையாது. அல்லாஹ் திருமறையில்,
51: 20 وَفِي الْأَرْضِ آيَاتٌ لِّلْمُوقِنِينَ
51:20. நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
என்று கூறுகின்ற வசனத்தை சற்றும் சிந்திப்பது கிடையாது. இப்பூமியில்
அல்லாஹ் பல் வேறு அத்தாட்சிகள் மூலம் படைத்தவன் என்கிற நான் ஒருவன் இருக்கிறேன் நிரூபித்துக் கொண்டே இருக்கிறான். அந்த நிரூபணத்தில் ஒன்று தான் தரீக் ஜின் என்று மக்களால் நம்பப்படுகிற மேக்னடைட் மற்றும் ஹேமடைட் தரீக் அதாவது காந்தப் பாதை.
பொதுவாக மலைகளைப் பார்க்கிற பொழுது ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் குர் ஆனிய அறிவியலின் ஒப்புமையோடும் இஸ்லாமியர்களாகிய நாம் பார்ப்பது கிடையாது. இன்று வரை மலையைப் பற்றி திருமறை என்ன சொல்கிறது என படித்த இஸ்லாமியச் சிந்தனையுள்ளவர்களிடம் கேட்டால், திருமறையில் அல்லாஹ் மலைகளை முளைகளாக படைத்துள்ளான் என்று கூறுகிற விடயத்தை சட்டென்று கூறி விடுவார்கள். ஆனால் அதைத் தாண்டி அல்லாஹ் என்ன சொல்கிறான் எனக் கேட்டால் தெரியாவதர்களின் சதவீதமே மிகைத்திருக்கிறது எனலாம். படைத்தவனால் மட்டுமே தான் படைத்த பொருளின் உள் நுட்பங்களைக் கூற முடியும். இதோ அந்த நுன்னிய அறிவியலின் ஆதிமூலமாகிய அல்லாஹ் என்ன சொல்கிறான் எனப் பாருங்கள்.
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُّخْتَلِفًا أَلْوَانُهَا ۚ وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِيبُ سُودٌ 35:27
அல்லாஹ் தான் வானத்திலிருந்து தண்ணிரை இறக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட கனிகளை உருவாக்கினோம். மலைகளில் வென்மையும், சிகப்பும் மாறுபட்ட பாதைகளைக் கொண்டதுமாக உள்ளன. கருப்பு நிறமுடையவைகளும் உள்ளன. (சூரத்துல் ஃபாத்திர்- 27)
இந்த வசனத்திலே, மலைகளில் வென்மை, சிகப்பு மற்றும் கருப்பு நிறப் பாதைகள் உள்ளன என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அல்லாஹ் இந்த விடயத்தை வெறுமனே குறிப்பிடவில்லை. இதில் சிந்திப்பவர்களுக்கும், அறிவுடையோருக்கும், ஆராய்ச்சி செய்வோருக்கும் கட்டாயம் அவன் இருக்கிறான் என்பதற்கான அத்தாட்சியும் அவன் தான் படைத்தான் என அறிவியல் பூர்வமான நம்பிக்கைக்கும், இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதற்கான சான்றும் குவிந்து கிடக்கிறது.
ஆம்,மலைகளில் நாம் பல் வேறு வண்ணங்களைப் பார்க்கிறோம். ஒரே மலையில் பல வண்ணங்களையும் பார்க்கிறோம். ரசித்தோம், ஆனால் ஆராயவில்லை. அப்படி என்ன அதில் ஆய்வு செய்ய இருக்கிறது?.என வினவினால் ஏராளம் இருக்கிறது.
வென்னிற வரிகளுடைய அல்லது வென்னிற மலைகளிலிருந்து தான் கிம்பர்லைட் என்கிற தனிமம் கிடைக்கிறது. இம்மலைகளில் தான் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது. சிகப்பு நிற வரிகளுடைய அல்லது செந்நிற மலைகளிலிருந்து ஹேமடைட் என்கிற தனிமமும், கருப்பு வரிகளுடைய அல்லது கரு நிற மலைகளிலிருந்து மேக்னடைட் என்கிற தனிமமும கிடைக்கிறது. இந்த ஹேமடைட்( Fe2O3) என்கிற இந்த தனிமம் ஆண்டி ஃபெர்ரோ மேக்னடிக் தன்மை கொண்ட்து. அதாவது ஒரு விதமான காந்தச் சுழற்ச்சியை ஏற்படுத்தக் கூடிய கதிர் வீச்சு சக்தி கொண்டவை. அது மட்டுமல்லாது ஜியோ மெட்ரிக் ஃபிரஸ்ட்ரேசன் என்று சொல்லக்கூடிய ஒரு வகையான உண்மை நிலைக்கு மாற்றமான(வடிவியல் ஏமாற்றம்) செயல்பாட்டை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. அடுத்து மேக்னடைட், இந்த மேக்னடைட் முழுக்க முழுக்க காந்தத் தன்மை கொண்ட தனிமமாகும். இதிலிருந்து இதிலிருந்து தான் காந்தம் தயாரிக்கப்படுகிறது.
மதினாவிலுள்ள தரீக் ஜின் என அறியப்படுகிற இட்த்தைச் சூழ்ந்துள்ள மலைகள் அனைத்தும் கருப்பும் சிகப்புமான மலைகள் ஆகும். எனவே ஹேமடைட்டும் மேக்னடைட்டும் நிறைந்த மலை சூழ்ந்த அந்த இடத்தில் இது போன்று நிகழ்வு நடப்பது ஜின்னால் அல்ல. புவியியல் அடிப்படையில் மண்ணிலும் மலையிலும் உள்ள மாற்றமே. அல்லாஹ்வின் அற்புதங்கள் இந்த பூமியில் நிறைய உள்ளன.அதை அல்லாஹ் திருமறையில் நமக்குச் சுட்டிக் காட்டினாலும் ஆராய நாம் தயாரில்லை.
51: 20 وَفِي الْأَرْضِ آيَاتٌ لِّلْمُوقِنِينَ
51:20. நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன
**********************************************
விளக்கம்:
இது காந்த சக்தி அல்ல... optical illusion ஆகும்...  Gravity hill - Wikipedia, the free encyclopedia இதை வாசியுங்க
optical (visual) illusion ஐ நகரும் பொருள் நிற்பது போன்றோ நிற்பது நகர்வது போன்றோ, பள்ளம் மேடாகவோ, மேடு சமவேளியகவோ, நீளமானது குட்டையானது போன்றோ, 2D பொருட்கள் 3D பொருட்களாகவோ etc etc... என பல விதமாக விளக்கலாம். இவைகள் அந்த நிகழ்ச்சியின் இயற்பியல் காரணிகளுக்காகவோ அல்லது நம் கண்கள் அல்லது மூளையின் செயல் பாடுகள் காரணமாகவோ நிகழலாம். பறந்து கொண்டிருக்கும் வாகனம் ஆகாயத்தில் நிற்பது போன்று நீங்கள் பார்த்திருக்க கூடும். விமானத்தால் வானத்தில் நிலையாக நிற்க இயலாது. கீழே விழுந்து விடும். அந்த விமானம் பறக்கும் கோணமும் நாம் அதை பார்க்கும் கோணமும் ஒரு நிலையில் தோற்றுவிக்கும் optical (visual) illusion தான் விமானம் வானத்தில் நிற்பது போல் நம் கண்களை ஏமாற்றுகிறது.
இதை பற்றி அதிகமாக இந்த
தளங்களில் பார்த்துக்கொள்ளுங்கள்.....
இங்கே நமது மதீனா மலையில் இருக்கும் இறக்கம் நமக்கு ஏற்றமாக காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் அந்த மலைகளின் அமைப்பு. இது மதீனாவில் மட்டும் அல்ல உமானில் உள்ளது. ஏன் இந்தியாவிலும் உள்ளது. இன்னும் பல இடங்களில் உள்ளன http://en.wikipedia.org/wiki/List_of_gravity_hills . கீழே உள்ள links இவற்றை மிகவும் விளக்குபவைகளாக உள்ளன. இந்த நிகழ்வு பல வருடங்களுக்கு முன்பாகவே optical (visual) illusion தான் என நிரூபிக்க பட்டு விட்டது. காணொளிகளும் உள்ளன....
இது மலேசியாவில் உள்ள ஒரு மலையில் நிகழும் நிகழ்ச்சியை மட்டமானியை கொண்டு விளக்குகிறார்கள்
இது போன்ற ஒரு நிகழ்ச்சியை செயற்கையாக உருவாக்கி விளக்குகிறார்கள்

இது (from Paranormal studied & investigation Canada) ஒரு விஞ்ஞானி optical(visual) illusion தான் என நிறுவிய ஆதாரம்.
இது கலிபோர்னியா பல்கலை கழக தளத்திலிருந்து
இனி சகோ பயன்படுத்திய அறிவியல் வார்த்தைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்:
ஃபெர்ரோ மேக்னடிக் Ferromagnetism is the basic mechanism by which certain materials (such as iron) form permanent magnets, or are attracted to magnets, ஒரு பொருளின் காந்தத்தால் கவரப்படும் தன்மையோ அல்லது நிரந்தர காந்தமாக மாறும் தன்மையோ பெர்ரோ மக்னேடிசம் என் அழைக்கபடுகிறது.
Antiferromagnetism
In materials that exhibit antiferromagnetism, the magnetic moments of atoms or molecules, usually related to the spins of electrons, align in a regular pattern with neighboring spins (on different sublattices) pointing in opposite directions. This is, like ferromagnetism and ferrimagnetism, a manifestation of ordered magnetism. Generally, antiferromagnetic order may exist at sufficiently low temperatures, vanishing at and above a certain temperature, the Néel temperature (named after Louis Néel, who had first identified this type of magnetic ordering). Above the Néel temperature, the material is typically paramagnetic.
ஆண்டி ஃபெர்ரோ மக்னேடிசம் மிகவும் ககுறைந்த வெப்பநிலையில் நிகழ்வதாக குறிப்பிட பட்டுள்ளது . மதீனாவில் வாகனகள் குளிர் காலத்தில் மட்டும் தான் தானே நகர்கின்றனவா...
காந்தச் சுழற்ச்சி magnetic moment: Nothing but the magnitude of the force of a magnet that attracts other magnetic mateial. ஒரு காந்தம் அது (காந்த) பொருட்களை ஈர்க்கும் சக்தியின் அளவு.
கதிர் வீச்சு சக்தி: radiation: காந்தவியலில் கதிர்வீச்சு என்ற வார்த்தையே பயன் படுதுவதில்லை. electro magnetic radiation என்பது மின் கந்தவியல் ஆகும். அதன் பேச்சுக்கே இங்கு இடமில்லை.
ஜியோ மெட்ரிக் ஃபிரஸ்ட்ரேசன் Geometric frustration
Unlike ferromagnetism, anti-ferromagnetic interactions can lead to multiple optimal states (ground states—states of minimal energy). In one dimension, the anti-ferromagnetic ground state is an alternating series of spins: up, down, up, down, etc. Yet in two dimensions, multiple ground states can occur.
Consider an equilateral triangle with three spins, one on each vertex. If each spin can take on only two values (up or down), there are 23 = 8 possible states of the system, six of which are ground states. The two situations which are not ground states are when all three spins are up or are all down. In any of the other six states, there will be two favorable interactions and one unfavorable one. This illustrates frustration: the inability of the system to find a single ground state. This type of magnetic behavior has been found in minerals that have a crystal stacking structure such as a Kagome lattice or hexagonal lattice.
சகோதர் பயன்படுத்திய வார்த்தைகள் வாகனம் எப்படி தானாகவே மேட்டில் ஏறுகிறது என்பதை விளக்குவதாக இல்லை... மாறாக மலைகளில் இருக்கும் தனிமங்கள் காந்த சக்தி கொண்டவை என்பதையே காட்டுகின்றன.. அப்படியானால் எல்லா இரும்பு பொருட்களும் தானாக சென்று மலையில் ஒட்டிக்கொள்ள வேண்டும்... அனால் மதீனாவிலோ பிளாஸ்டிக் பொருட்கள் வரை உருண்டு மலையில் ஏறுகின்றன...
இதை காணவும்
சகோதரர் வண்ணங்களையும் தனிமங்களையும் ஒப்பிட்டு ஒரு குர்ஆன் வார்த்தைக்கு அறிவியல் விளக்கம் கொடுக்க முற்படுகிறார். அதன் முன்னர் இந்த தனிமங்கள் இந்த மலைகளில் உள்ளனவா என்றும் யோசிக்க வேண்டும். நிரூபிக்கவும் வேண்டும்.

சகோதரர் சிந்தித்த கோணம் என்னையும் சற்று பாதித்தது. கமெண்ட்ஸ் இடும் முன்னர் சகோதரர் சிந்தித்த கோணத்தில் உண்மை இருந்தால் .....  என நானும் யோசிக்க ஆரம்பித்தேன். காந்தவியலும் மின் காந்தவியலும் நான் விரும்பி படித்த பாடங்கள் என்பதால் அது என்னை மிகவும் கவர்ந்தது. அப்படி சிந்திக்கும்போதுதான் தாங்கள் கூறியது நடக்க வாய்ப்பில்லை என அறிய முடிந்தது. ஒரு magnetic fieldஇல் (காந்த கதிவீச்சு, காந்த சுழற்ச்சி) நகரும் எந்த மின் கடத்தும் பொருளிலும் மின்சாரம் தூண்டப்படும். இது induction என அறியப்படுகிறது. மேலும் ஒரு மின்சாரம் பாயும் எந்த ஒரு மின் கத்தியை சுற்றிலும் காந்த புலம் உருவாகும், இது electro magnetism ஆகும். ஆக காந்த புலத்தில் நகரும் கடத்தியில் மின்சாரம் தூண்டப்பட்டு அங்கே ஒரு மின் சுற்று (closed circuit) ஏற்படும் வாய்ப்பு இருப்பின், மின்சாரம் பாய்ந்து அதன் மூலம் அந்த கத்தியை சுற்றி ஒரு காந்த புலம் உருவாகும். lense law எனும் விதிப்படி இந்த தூண்டப்பட்ட மின்சாரமும் கந்தபுலமும் அது தூண்டப்படும் காரணியை எதிர்க்கும். இங்கே அவை தூண்டப்படும் காரணி அந்த கடத்தியின் இயக்கமாகும். எனவே தூண்டப்பட்ட மினசாரமும் காந்த புலமும் அந்த கடத்தின் இயக்கத்தை நிறுத்திவிடும். எனவேதான் சகோதரர் கூறிய அறிவியல் சாத்தியமில்லை என முடிவுக்கு வந்தேன். அந்த அறிவியலின் படி வண்டி எந்த திசையிலும் வேகமாக ஓடாது மாறாக நாமே accelerator கொடுத்தாலும் எந்த திசையிலும் ஓட மறுக்கும்.