Saturday 28 February 2015

சவுதிப் பிறையின் உண்மையான அளவுகோல்

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم


உலக மக்களில் பெரும்பான்மையினர் ஏன் அனைத்து மக்கள் என்று கூட குறிப்பிடலாம், சவூதி அரசு புறக்கண்ணால் பிறையைப் பார்த்துதான் நோன்பையும் இரு பெருநாட்களையும் அறிவிப்பதாக நம்பி வருகின்றனர். ஆனால் சவுதி அரசின் முந்தைய ஆண்டுகளின் பிறை அறிவிப்புகள் கண்ணால் காணப்படும் பிறையின் அளவுகோலை முரண்படுவதையும் பிறை தெரிய அறவே சாத்தியம் இல்லாத நாட்களில் பிறையைப் பார்த்ததாக சவுதி அரசு அறிவித்ததையும் பொதுமக்களும் அறிவியலாளர்களும் கவனித்தே வருகிறார்கள்.
சவூதி அரசு உம்முல் குறா என்று அழைக்கப்படும் தங்களது அலுவலக நாட்காட்டியை பார்த்தே பிறையைத் தேடுகிறார்கள். அதாவது உம்முல் குறாவில் என்று 29 முடிந்து வரும் இரவு என்று காட்டுகிறதோ அன்று பிறையைத் தேடுவதற்காக அறிவிப்பு செய்வார்கள். அன்றைய தினம் பிறை தெரிவதற்கு எள்ளளவும் சாத்தியம் இருக்காது. ஆனால் பிறை தெரிந்ததாக சாட்சியத்துடன் சவூதி அரசு அறிவிப்பு வெளியிடும் இதன் மர்மத்தை தெரிந்துகொள்ளும் முன் உம்முல் குறாவின் வரலாற்றைப் பார்ப்போம்.
ஹிஜ்ரி 1370 (கிபி 1950) முதல் ஹிஜ்ரி 1392 (கிபி 1972) வரையில் (உம்முல் குரா 1)
1950 முதல் 1972 வரையில் பின்பற்றப்பட்ட அளவுகோல்:- பிறை தேடவேண்டிய இரவான 29 பகல் முடிந்து வரும் இரவில் சூரிய மறைவின் பொது சந்திரன் 9 டிகிரி உயரத்தில் இருந்தால் அந்த இரவிலிருந்து மாதம் துவங்குவதாக கணக்கிடப்பட்டது. அதாவது திங்கள் பகல் பொழுது முடிந்து வரும் மாலை பிறை தேடவேண்டிய இரவு எனில் அந்த சூரிய மறைவின்போது சந்திரன் 9 டிகிரி உயரத்தில் இருந்தால் செவ்வாய்க்கிழமை புது மாதம் பிறந்துவிடுகிறது. இந்த அளவு கண்ணால் பிறை தெரிவதற்கான சாத்தியத்துடன் சற்றே ஒத்துப்போகிறது. வானம் மிகத்தெளிவாக இருந்தால் பிறை தெரிவதற்கான வாய்ப்புகள் அமையும். இந்த அளவுகோலின்படி முன்கூட்டியே காலண்டர் அச்சடிக்கப்பட்டது.
ஹிஜ்ரி 1393 (கிபி 1972) முதல் ஹிஜ்ரி 1419 (கிபி 1998) வரையில் (உம்முல் குரா-2)
1973 முதல் 1998 வரையில்:- லண்டன் (Greenwich) க்ரெனிச் நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு முன் அமாவாசை (conjunction) நடந்தால் அதன் மறுநாளில் புது மாதம் பிறந்ததாக கணக்கிடப்பட்டது
உதா. லண்டன் நேரப்படி ஆங்கில கலண்டரில் திங்கள் கிழமை இரவு 11:30 க்கு அமாவாசை நடப்பதாக வைத்துக்கொண்டால், ஆங்கில கலண்டர் வழக்கப்படி இரவு 12 மணிக்கு செவ்வைக் கிழமை துவங்கி விடும். உம்முல்குறாவில் அந்த செவ்வாய்கிழமை மாதத்தின் முதல் நாளாகிவிடும். இன்னுமொரு உதாரணம். (ஆங்கிலக் காலண்டரில் நள்ளிரவு 12 மணிக்கு நாள் துவங்கும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.) லண்டன் நேரப்படி புதன் கிழமை இரவு 1:30 மணிக்கு அமாவாசை நடக்கிறது என்றால் அன்று பகல் கடந்து மீண்டும் இரவு 12 மணியாகும்போது ஆங்கில காலண்டரில் வியாழக்கிழமை துவங்கும். உம்முல்குறாவில் அந்த வியாழக்கிழமையில் மாதத்தின் முதல் நாள் கணக்கிடப்படும்.
மேலே சொன்ன இந்த முறையில்தான் உம்முல் குறா காலண்டர் அன்று வரை அச்சடிக்கப்பட்டது. இது உலகிற்கே தெரியும். ஆனால் சவுதியின் மார்க்க அறிஞர்கள் இதனை வேறுவிதமாக விளக்குகிறார்கள். லண்டன் என்றோ க்ரெனிச் என்றோ வார்த்தைகள் வராதவண்ணம் அறிவுக்கு எட்டாதவகையில் ஒரு விளக்கத்தை அவர்கள் கொடுத்துள்ளனர். இதற்கு ஆதாரமாக "Majlis al-Ifta' al-A'ala" எனும் சவுதியின் உயர்மட்ட மார்க்க குழு Jordanian Astronomical Society (JAS) எனும் ஜோர்தானிய வானியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பிய தந்தியில் சவுதியின் அலுவலக நாள்காட்டியான உம்மல் குறாவின் அடிப்படை என்ன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தந்தியின் தமிழாக்கம் இதோ.
"(To Jordan/ Al-Yadodeh/ M.Kh./ Al-Sook/ Mr. Hayel Mamdooh Abu-Zeid, dated January 21, 1998/Ramadan 23, 1418H.
நீங்கள் அனுப்பிய ரமலான் வாழ்த்துக்களுக்கும் ஹிஜ்ரி 1418ம் வருடத்தின் ஷவ்வாலுக்கான அமாவாசையை நினைவூட்டியதர்க்கும் நன்றி. மாதத்தின் முதல்நாளை நிர்ணயிப்பது தொழுகைக்கான நேரங்களை நிர்ணயிப்பது போலாகும் என்பதை நினைவூட்டுகிறோம். அந்த நேரங்களையே வழிபாடுகளாக எடுத்துக்கொள்ளக்கூடது என்பதே இறைவன் அந்த நேரங்கள் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறான். இஸ்லாமிய நாள் சூரிய மறைவில் தொடங்குவதாலும், அதில் இரவு முதலிலும் பகல் பின் தொடர்ந்தும் இருப்பதாலும் மேலும் நோன்பிருக்கும் நேரம் பகலில் இருப்பதாலும், சூரிய மறைவின் போது பிறையின் வயது 12மணி நேரமோ அதை வித அதிகமாகவோ இருந்தால் அதன் முந்தய நாள் இஸ்லாமிய மாதத்தின் முதல் நாள் ஆகிறது. இதுவே உம்மல் குறா நாள்காட்டியின் அடிப்படை. உங்கள் வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக. அல்லாஹ் இந்த ரமலானில் அருள் புரிவானாக. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி
From: Kingdom of Saudi Arabia/ Al-Riyadh/ The Higher Religious Council "Majlis al-Ifta' al-A'ala"/ Mohammad Bin Ehmead.)"
ஜோர்தானிய விஞ்ஞான அமைப்பில் உள்ள ஹாயல் அவர்களுக்கு மேலும் சில கடிதங்கள் கிடைத்துள்ளன. அவை இந்த தந்தியை விட தெளிவாக சவுதியின் நாட்காட்டி அளவுகோலை தெளிவுபடுத்துவதாக உள்ளன. ஷாபான் 29 ஆம் நாள் ஜனவரி 18ஆம் தேதி வருவதாக வைத்துக்கொள்வோம். எனில் இவர்கள் ஜனவரி 19 ஆம் தேதியன்று சூரியன் மறையும்போது பிறையின் வயது எத்தனை என்று பார்ப்பார்கள். அப்போது பிறையின் வயது 12 மணிக்கு மேலிருந்தால் ஜனவரி 19 ரமலான் மாதத்தின் முதல் நாளாகிவிடும். இது மேற்சொன்ன லண்டன் க்ரெனிச் முறையை மக்களுக்கு சொன்னால் லண்டனுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பென்று அவர்கள் கேட்பார்கள். எனவே அதை இவ்வாறு மாற்றி மக்களை முட்டாளாக்கியுள்ளனர்.
http://www.icoproject.org/tele.jpg
ஹிஜ்ரி 1420 (கிபி 1999) முதல் ஹிஜ்ரி 1422 (கிபி 2002) வரையில். (உம்முல் குரா-3)
1420 ஹிஜ்ரியிலிருந்து சவுதி அரசு மக்காவில் 29ம் பிறை முடிந்து வரும் இரவில் சூரியன் மறைந்த பின் சந்திரன் மறைந்தால் அந்த இரவிலிருந்து அடுத்த மாதத்தை தொடங்கியது. இந்த அடிப்படை முந்தையதை விட சிறந்ததாக இருப்பினும் பிறை கண்ணுக்கு தெரிய வேண்டும் எனும் விதியை இந்த அளவுகோலும் புறக்கணிக்கிறது. மேலும் சில மாதங்களில் கண்ஜங்க்ஷன் (வானியல் பிறை பிறத்தல்) ஏற்படும் முன்பே மாதத்தை துவங்கினர். சூரியனுக்கு பின் சந்திரன் மறைவது மட்டுமே கண்ஜங்க்ஷன் ஏற்பட்டுவிட்டதை காட்டாது என்பதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
பின்வரும் ஷூரா கவுன்சிலின் குறிப்பில் அவர்களின் புதிய அளவுகோல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் பின்வருமாறு:
“மஸ்ஜிதுல் ஹறம் பள்ளியின் புவியியல் புள்ளிகளின் அடிப்படையில், மக்காவில் சந்திர மறைவுக்கு முன் சூரிய மறைவு எனும் அடிப்படையை கொண்டுதான் மாதத்தை துவங்க வேண்டும். இந்த அடிப்படையைதான் உம்மல் குறா நாட்காட்டியை நிர்மாணிப்பவர்களும் பின்பற்றி அதில் மாதத்தை தொடக்கத்தை அமைக்க வேண்டும்”
http://www.icoproject.org/newcri.jpg
உதா: டிச 7 1999 (ஷாபான் 29) மக்காவில் சூரியன் 5:38க்கு மறையும் சந்திரன் 5:29க்கு மறையும். சந்திரன் சூரியனுக்கு முன்னால் மறைவதால் டிச-8 இல் ரமலான் துவங்கவில்லை. டிச-9 அன்று ரமலான் துவங்கியது.
கீழே இருக்கும் இரண்டு தாள்களையும் பாருங்கள். வலதுபுறத்தில் இருப்பது இந்த விதி மாற்றத்திற்கு முன் அச்சடிக்கப்பட்ட நாள்காட்டியில் கிழிக்கப்பட தாள். ரமலான்-1 டிச-8 உடன் ஒத்துவருவதை பார்க்கலாம். இடது புறத்தில் இருப்பது விதி மாற்றதிற்குப்பின்அச்சடிக்கப்பட்ட உம்மல் குறா நாள்காடியிளிருந்து எடுக்கப்பட்டது ரமலான்-1 டிசம்பர்-9ம் தேதி வருவதை காணலாம்.
http://www.icoproject.org/calen.jpg
ஹிஜ்ரி 1423 (கிபி 2002) முதல் பின்பற்றப்படும் அளவுகோல். (உம்முல் குரா-4)
http://www.ummulqura.org.sa/president_address.aspx எனும் சவுதியின் அதிகரப்பூர்வ/அலுவலக இணையதளம் அவர்களின் புதிய பிறை அளவுகோலை தெளிவு படுத்துகிறது
هذا وتعد حسابات تقويم أم القرى وفق الشروط التي أعتمدها مجلس الوزراء الموقر، وهي اعتماد موقع الكعبة المشرفة كمرجع في الحسابات وأن يكون الاقتران قبل مغيب الشمس بحيث يغرب القمر بعد غروب الشمس ، كشروط لبداية الشهر القمري الجديد.
The calculations of the Um Al-Qura calendar are based on the terms set by the distinguished Council of ministers, which adopt the location of the Holy Kaabah as the reference for all calculations, and require conjunction to occur prior to sunset (moonset occur after sunset) as conditions for the birth of the new lunar month.
29வது நாளின் இறுதியில் இந்த இரண்டு வரயைரைகளும் நிறைவடைந்து விட்டால் அந்த இரவிலிருந்து மாதத்தை துவங்க வேண்டும்.
1. சூரிய-சந்திர சந்திப்பு (அமாவாசை) சூரிய மறைவுக்கு முன் நிகழ வேண்டும்
2. சூரியன் மறைந்த பின் சந்திரன் மறைய வேண்டும்.
பிறை கண்ணுக்கு தெரியவேண்டும் எனும் விதி இந்த புதிய அளவுகோலிலும் புறக்கணிக்கப்படுவதை கவனிக்கவும். இந்த அளவுகோல்களை சந்திரன் அடைந்தாலும் பிறை கண்ணுக்கு தெரிவதில்லை.
http://www.icoproject.org/ummulqurah.jpg
1972 வரையில் சவூதி அரசு பின்பற்றிய பிறையின் அளவுகோலை விட பின்னர் அவர்கள் எடுத்த அளவுகோல்கள் தாழ்ந்துகொண்டே சென்றன. பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாட்களில் அவர்களின் காலண்டரில் மாதம் துவங்கியது. பிறையைப் பார்க்காமலே மாதம் துவங்கியதாக நோன்பையும் இரு பெருநாட்களையும் சவூதி அரசு அறிவித்தது. அத்தகைய பொய்யான அறிவிப்புகளின் பட்டியலை ஆதாரங்களுடன் இங்கே காண்க. முட்டாளாக்கும் சவுதிப் பிறைகள் piraivasi.com/2015/07/6.html


நன்றி:
Er. முஹம்மத் அவ்தா http://www.icoproject.org/sau.html?&l=ar