Friday 13 October 2017

mooncalendar vs worldslastchance

தமிழகத்தில் ஹிஜ்ரா கமிட்டி என்போர் தங்களது காலண்டர் குர்ஆன் ஹதீஸின்படி அமைக்கப்பட்ட அல்லாஹ்வின் காலண்டர் என்று இலவசமாக ⁽¹⁾ விற்று வருகின்றனர். ஆனால் உண்மையில் அது அல்லாஹ்வின் காலண்டர் அல்ல, யஹுவாவின் காலண்டர். யஹுவா என்பது யூதர்களின் கடவுளின் பெயர். அதே பெயரை நாமும் பயன்படுத்தினால் மாட்டிவிடுவோம் என்பதால் இவர்கள் அல்லாஹ்வின் காலண்டர் என்று பெயர்மாற்றம் செய்துவிட்டனர்.
யூதம் மதம், கிருத்தவம் மதம் இரண்டையும் இணைத்துப் பின்பற்றும் ஒரு கூட்டம் உலகில் உள்ளது. WLC என்று அவர்கள் தங்களை அழைத்துக்கொண்டு www.worldslastchance.com என்ற இணையதளத்தையும் நடத்துகின்றனர். இவர்கள் வேதத்தின் அடிப்படியிலும் யூத மூதாதையர்களின் வழியிலும் கடவுளின் காலண்டரை வெளியிட்டுள்ளனர். அதை யஹுவாவின் காலண்டர் என்று அழைக்கின்றனர். அவர்களின் இணையதளத்தில் காலண்டர் மற்றும் நாளின் ஆரம்பம் தொடர்பாக இருக்கும் விளக்கக் கட்டுரைகளும் ஹிஜ்ரா கமிட்டியின் இணைய தளத்தில் இருக்கும் கட்டுரைகளும் மிகச்சரியாக ஒத்துப்போகின்றன. யாரைப் பார்த்து யார் காப்பியடித்தார் என்று எமக்கு விளங்கவில்லை. தீர்ப்பை வாசகர்களுக்கு விடுகிறோம்.
இந்த லிங்கில் இருக்கும் கட்டுரையின் சாராம்சத்தை மூலத்துடன் மொழிப்பெயர்த்து தருகிறோம் https://www.worldslastchance.com/yahuwahs-calendar/new-moon-day-the-dawn-after-conjunction.html
பல விஷயங்களில் நேரடி மொழிப்பெயர்புகளே விளக்கத்தை கொடுத்துவிடுகின்றன. அதிக விளக்கம் தேவைப்படும் இடங்களிலும் ஒப்பீடு தேவைப்படும் இடங்களிலும் அவற்றை அடைப்புக்குறிக்குள் தந்துள்ளோம்.
World's Last Chance is overjoyed to share what we sincerely believe to be advancing light on our ​Creator's calendar. ​
WLC (ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாங்கள்) அல்லாஹ்வின் ஒளியில் அமைந்த அல்லாஹ்வின் காலண்டரை உங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
(படைத்தவனின் காலண்டர் என்று யஹுவாவில் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் அல்லாஹ்வின் நாட்காட்டி என்று ஹிஜ்ரா மொழிப்பெயர்திருப்பார்கள்.)
we have in our ignorance proclaimed that New Moon Day was determined by the first visible crescent. We now, after much prayer and study, repent of this error and would like to humbly share our conviction that New Moon Day is to be observed, beginning at dawn, on the day following the moon's conjunction with the sun (as opposed to the day following the first visible crescent).
(மக்ரிப் வேளையில் மறையும்) பிறையை புறக்கண்ணால் பார்த்துதான் மாதம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று அறியாமையால் சொல்லிவந்தோம். இறையச்சத்துடனும், தீவிர ஆய்வின் அடிப்படையிலும், சூரியனின் மையப்புள்ளியும் சந்திரனின் மையப்புள்ளியும் சங்கமிக்கும் புவிமைய சங்கம நாளுக்கு மறுநாளே மாதத்தின் முதல் பிறை என்று இப்போது நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். சங்கமத்திற்கு மறுநாள் ஃபஜ்ரிலிருந்து புது மாதம் துவங்குகிறது. மக்ரிப் வேளையில் மறையும்) பிறையை புறக்கண்ணால் பார்த்து மறுநாள்தான் மாதம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற நிலையில்லை.
New Moon Day Commences at the Dawn After Conjunction.
முதல் பிறை சங்கமத்திற்கு மறுநாள் ஃபஜ்ரிலிருந்து துவங்குகிறது.
The moon begins to illuminate immediately after conjunction. We cannot see it, though, until the sun sets because the moon is obscured by the greater light of the sun. The fact that we cannot see the moon immediately after conjunction, however, does not negate the fact that it has already began a new revolution with new illumination. Often, the first visible crescent will be seen on the evening of New Moon Day, displaying her new light to the viewer.
சங்கமம் நடந்த மறு வினாடியே நிலவு ஒளியூட்டப்பட்டு (பிறை பிறந்து) விடுகிறது). ஆனால் சூரியனின் வெளிச்சத்தால் அந்த பிறையை மறு சூரிய மறைவு வரை கண்ணால் பார்க்க இயலாது. அதைப் புறக்கண்ணால் பார்க்க முடியவில்லை என்பதால் பிறை இல்லை என்றாகிவிடாது. சத்தியத்தில் (அது பழய மாதச்சுற்றை முடித்துவிட்டு) புதிய மாதத்தின் ஒளியுடன் அது புது சுற்றை துவங்கிவிட்டது. சில மாதங்களில் (புது மாதம் பிறந்தத்தின் அத்தாட்சியாக) ஒன்றாம் பிறை மாலையில் புதிய பிறையை பார்க்க இயலும், பார்பவருக்கு தனது புதிய ஒளியை அவள் (நிலவு) காட்டுவாள்.
The reason for making the day after conjunction New Moon Day, as opposed to the actual day that conjunction takes place, is because a day cannot simultaneously be part of the old month and part of the new month.
புது பிறை பிறக்கும் சங்கம நாளையே பிறை ஒன்றாக எடுக்காமல் மறுநாளை பிறை ஒன்றாக எடுக்கக்காரணம், ஒரே நாள் பழைய மாதத்தின் பாகமாகவும் புதிய மாதத்தின் பாகமாகவும் இருக்க முடியாது என்பதால்.
Therefore, the first dawn after conjunction takes place is the beginning of the new month.
எனவே சங்கமம் நடக்கும் அந்த நாளை மாதத்தின் இறுதி நாளாக (பூஜ்ஜியம் நாள் ஜீரோ டே) கொண்டு அடுத்த பஜ்ரிலிருந்து புது மாதத்தை துவங்கவேண்டும்.
When reckoning the dawn after conjunction as the beginning of New Moon Day, the entire world will be united in observing the same day.
சங்கமத்திற்கு அடுத்த பஜ்ரிலிருந்து மாதத்தை துவங்கினால் மொத்த உலகமும் ஒரே நாளில் ஒற்றுமையாக மாதத்தை துவங்கிவிடும்.
Thus, the whole world is truly unified in beginning His Holy Days within one 24-hour period.
இதனால் மொத்த உலகமும் 24 மணி நேரத்தில் புனித (ஜுமுஆ) நாட்களை அடையும்.
Using this method, a divinely-appointed worldwide Date Line is established each month by the Creator.
இம்முறையில் அல்லாஹ்வால் மீகாத் ஆக்கப்பட்ட சர்வதேச தேதிக்கொடு எல்லா மாதமும் அமையும்.
The first visible crescent method for reckoning New Moon Day, however, cannot consistently unite the world in beginning the feasts in the same 24-hour revolution
(மக்ரிபில் மேற்கே மறையும்) பிறையை புறக்கண்ணால் பார்த்து (மறுநாள்) ஒன்றாம் பிறை எனும் முறை உலகில் பெருநாட்களை 24 மணி நேரத்தில் ஒற்றுமையாக கொண்டுவராது
Scripture commands us to observe the Sabbath, not aSabbath. Does it then make sense that there would be multiple Sabbaths in the same week? Does it make sense for different locals to celebrate the Sabbath 48 hours apart? Only by reckoning the day after conjunction as New Moon Day can everyone on Earth consistently observe one Sabbath Day.
வேதத்தில் ஒரே ஒரு ஸபாத் (யூதர்களின் ஜுமுஆ) நாள் தான் உள்ளது. (ஒவ்வொருவருக்கும ஒரு ஸபாத் (யூதர்களின் ஜுமுஆ) நாள் என்றில்லை. ஒரே வாரத்தில் பல ஸபாத்கள் (யூதர்களின் ஜுமுஆ) உலகத்தில் இருப்பது அறிவுக்கு எட்டுவதாக உள்ளதா?. உலகில் 48 மணி நேர வித்தியாசத்தில் உலகில் ஸபாத் (யூதர்களின் ஜுமுஆ) நாளை அடைவது அறிவுக்கு எட்டுவதாக உள்ளதா? சங்கம நாளின் மறுநாளில் பஜ்ரிலிருந்து மாதத்தை துவங்கினால் மட்டுமே ஒரே நாளில் உலகில் உள்ள அனைவரும் ஸபாத் (யூதர்களின் ஜுமுஆ) நாளை அடைய முடியும்.
முஸ்லிகள் ஜுமுஆ என்பதை ஒரு வார நாளின் பெயராகவும் அதையே அன்றைய சிறப்பு வணக்கத்தின் பெயராகவும் கொண்டிருப்பதைப் போல யூதர்கள் எபிரேயு மொழியில் ஸபாத் எனும் சனிக்கிழமையை வாரநாளின் பெயராகவும் அன்றைய சிறப்பு வழிபாடாகவும் கொண்டுள்ளனர். ஸபாத் எனும் சனிக்கிழமை அரபு மொழியில் ஸப்த் ஆகும். எபிரேயு மொழியும் அரபு மொழியும் சகோதரிகள்.
அல்லாஹ் வேதக்கரர்களுக்கும் வெள்ளிகிழமையே வழங்கினான், ஆனால் யூதர்கள் சனிக்கிழமையையும் கிருத்தவர்கள் ஞாயிற்று கிழமையையும் புனித நாளாக்கிக்கொண்டனர்.
In a consistent pattern, the month begins with the first dawn immediately after the moon becomes illuminated and ends when the moon is completely void of light at the conjunction.
தீர்க்கமாக மாதம் என்பது பிறை பிறந்த பஜ்ரிலிருத்து துவங்கி சந்திரனின் ஒளி பூமிக்கு தடுக்கப்பட்ட சங்கம நாளில் முடிவடைகிறது.
(Not being able to see the moon's initial illumination does not change the reality that it is taking place.
பிறையின் ஆரம்ப ஒளியை பார்க்க இயலாதது அந்த (பிறை பிறந்துவிட்டது) என்ற உண்மையை மாற்றிவிடாது
The light of the first visible crescent is only evidence of what began taking place immediately following the moon's conjunction with the sun.)
மக்ரிப் வேளையில் மறையும்போது காட்சியளிக்கும் பிறை ஏற்கனவே சங்கமத்திற்கு பிறகு பிறந்த பிறையின் அத்தாட்சியாகும்
(பிறந்த பிறையை மறையும்போதுதான் மாலையில் பார்க்கிறோம். எனவே அது அப்போது பிறந்ததாக ஆகாது. ஏற்கனவே அது பிறந்துவிட்டது)
அவர்களின் அடுத்த கட்டுரை. https://www.worldslastchance.com/yahuwahs-calendar/calculating-the-conjunction-no-computer-no-problem.html
இதில் பிறைகளை வடிவங்களையும் இருப்பிடங்களையும் வைத்து தேதி அறியும் யுக்தியை அதே இணையதளத்தில் அழகாக விளக்கியுள்ளனர். தவறாமல் பாருங்கள். விரல்களை வைத்து எப்படி தேதி அறியலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதைதான் இவர்களின் காலண்டர் குரு அலி மானிக் பான் காப்பியடித்து இந்த வீடியோவில் விளக்கியுள்ளார். இந்த விடியோவில் 12:06ம் நிமிடம் முதல் பாருங்கள். https://www.youtube.com/watch?v=dLcSCWUCaGo
So, you might be saying, “Well, our modern technology is great for predicting the New Moon but just how did the Ancient Hebrews accurately predict the lunar-solar Conjunction?”
நீங்கள் நவீன தொழில்நுட்பத்தால் நாம் சங்கம நேரத்தை துல்லியமாக கணக்கிடுகிறோம் பண்டைய யூதர்கள் சங்கமத்தை எவ்வாறு கணக்கிட்டார்கள்?
(இந்த கேள்விதான் நபிகளார் மறையும் பிறையை புறக்கண்ணால் பார்க்கவில்லை மறைக்கப்பட்ட நாளை அவர்கள் அறிந்தார்கள் என்று மாறியுள்ளது)
Being that the movements and phases of the moon are very precise and dependable, it makes them function just like a giant clock in the sky
நிலவின் ஓட்டமும் அதன் படிதரங்களும் துல்லியமான கணக்கின்படி இருக்க அது வானில் இருக்கும் பெரிய காலங்காட்டியாகவே செயல்படுகிறது.
We can observe the moon’s phases as they wane from the last quarter phase to the ever shrinking crescents and measure the decreasing distances between them and the rising sun in the east. Instead of only a single opportunity to sight the first visible crescent (FVC), we have the ability to perform several measurement sightings in the days after the Sabbath on the 22nd of the Lunar Month. The measurements are accomplished best around or slightly before the arrival of the sun. Here are the steps:
மக்ரிப் வேளையில் மறையும் ஒரே ஒரு பிறையை மட்டுமே பார்த்து மாதத்தை தவறான நாளில் துவங்காமல், தேய் பிறைகளையாவது பார்த்து வரவேண்டும். அவை மெதுவாக சுருங்கி சூரியன் உதிக்கும் வேளையை நெருங்குவதை கிழக்கு திசையில் பார்த்துவரவேண்டும். இதன் மூலம் ஒரே ஒரு பிறையை பார்த்து தவறிழைக்காமல் துல்லியமாக மாதத்தை துவங்கலாம். பஜ்ர் வேளையில் பிறையை பார்த்து துல்லியமாக சங்கம நாளை அறியும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
measuring angular separation of sun and moon with your hands
(இவ்வாறு விரலால் அளந்து தேதியை அறியவேண்டுமாம்.)
We no longer believe that the day after the first visible crescent is New Moon Day.
மக்ரிபில் மறையும் பிறையை பார்த்து மறுநாள் முதல் பிறை என்று இனிமேலும் நாங்கள் நம்பமாட்டோம்.
After much prayerful study, WLC has come to the conclusion that the only lunar phase that can be the New Moon is the moment immediately following the Dark Phase, otherwise called the Astronomical New Moon or Conjunction.
இறையச்சத்துடன் நாங்கள் செய்த ஆய்வின்படி சங்கம் நடந்த மறுவிநாடியே பிறை பிறந்துவிடுகிறது எனும் முடிவுக்கு வந்துள்ளோம். அதுதான் சங்கமம் அல்லது கஞ்சங்க்ஷன்.
This conclusion is based primarily on two facts:
இம்முடிவிற்கான காரணங்கள்
(1) The moon becomes illuminated immediately following its conjunction with the sun. The fact that this cannot be seen does not negate the reality that the moon is now rebuilding.
சங்கமம் நடந்த மறு வினாடியே புதிய மாதத்தின் பிறை பிறந்துவிடுகிறது. அந்த பிறையை பார்க்க முடியவில்லை என்பதால் பிறை இல்லை என்றாகிவிடாது.
(2) Conjunction happens at a specific point in time for everyone on Earth.
சங்கமம் ஒரு தனித்த நாளில் நொடிப்பொழுதில் உலகம் முழுமைக்கும் நடக்கிறது.
WLC believes that the dawn for your location after UTC Conjunction is when New Moon Day begins for you.
சர்வதேச நேரத்தில் சங்கமம் நிகழ்ந்த பின் பஜ்ரிலிருந்து புதுமாத்தின் முதல் நாள் துவங்குகிறது.
Again, Conjunction takes place at a specific time and it is the same moment for everyone on Earth.
மீண்டும் சொல்கிறோம் உலகம் முழுமைக்கும் தனித்த நாளில் ஒரு வினாடியில் தான் சங்கமம் நடக்கிறது.
It is generally recorded in Coordinated Universal Time (UTC) or Greenwich Mean Time (GMT).
சங்கமமானது சர்வதேச நேரத்தில் UTC நேரத்தில்தான் குறிப்பிடப்படுகிறது.
அன்புக்குரிய முஸ்லிம்களே. நீங்கள் மேலே வாசித்த இரு கட்டுரைகள் நீங்கள் எங்கோ வாசித்தது போல இருந்தால் அது வேறெங்குமில்லை mooncalendar.in எனும் இணையதலதில்தான். இந்த கட்டுரைகளின் தமிழாக்கமே மூன் காலண்டர் இணையதளம். குறிப்பாக பின்வரும் இரு கட்டுரைகளை நீங்கள் வாசிப்பீர்களேயானால், யஹுவாவின் கட்டுரைகளை அவ்வாறே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
Δ இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன? http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/175-2015-06-22-13-46-20
Δ 16+ UT யில் புவிமைய சங்கமம்! http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/88-16-ut
கட்டுரைகள் ஒத்துப்போவதால் மட்டுமே இவர்கள் யஹுவாவின் காலண்டரை எடுத்து அல்லாஹ்வின் காலண்டர் என்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறோமா? இல்லை.

யஹுவாவினர் வெளியிட்டுள்ள யஹுவா காலண்டரும் ஹிஜ்ரா கமிட்டியின் ஹிஜ்ரா காலண்டரும் ஒன்றே. இதை ஆதாரங்களுடன் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்... http://www.piraivasi.com/2015/10/17-3.html