Thursday 4 May 2023

மனாஸில் என்றால் என்ன?

மனாஸில் என்றால் என்ன?

10:5. ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும்சந்திரனை ஒளியாகவும் அமைத்தான்சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான்தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான்அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

36:39. சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம்முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது.

மனாஸில் என்பதை படித்தரம்/நிலைகள் என்றும். புரூஜ் என்பதை நட்சத்திரங்கள் என்றுமே எல்லா தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்த்துள்ளனர். பல ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் இவற்றை சரியாக மொழிபெயர்த்துள்ளனர். மலையாளத்தில் மொழிபெயர்த்த அமானி என்பவர் கூட மிக சரியாக மொழிபெயர்த்துள்ளார். இங்கே நாம் சொல்லும் இந்த விளக்கம் புதியதும் அல்ல. தபரி குர்துபி போன்ற பழைய தப்சீர்களில் இருப்பவையே. ஃபத்ஹுல் பாரியில் இவ்விளக்கங்களை இமாம் இப்னு ஹஜர் விவரித்துள்ளார்கள். மனாஸிலுல் கமர் என்ற வார்த்தைக்கு ஒருவர் அகராதிகளில் அர்த்தம் தேடினால் இந்த விளக்கத்தை தவிர வேறொன்றை அவர் காணமாட்டார். இதே போல புரூஜ் என்றாலும் நட்சத்திரம் என்ற பொருள் அல்ல. சூரியனின் ஓடுபாதையில் தெரியும் நட்சத்திரக் கூட்டம் என்றே பொருளாகும்.

இந்த தலைப்பு வானியல் தொடர்பாக இருப்பதாலும் புதிய கருத்தைப் போன்று தோற்றம் ஏற்படுவதாலும் இதனை மட்டும் சற்று விரிவாக பார்க்க வேண்டியுள்ளது. எனவே இதை 9 பாகங்களாகப் பிரித்துள்ளோம்.

பாகம்-1: *மனாஸில் ஆண்டுகளின் எண்ணிக்கையைக் காட்டுமா?*

குர்ஆனில் 10:5 & 36:39 ஆகிய வசனங்களில் மனாஸில் என்கிற வார்த்தையை அல்லாஹ் கையாண்டுள்ளான். இந்த மனாஸிலை சரியாக பல அறிஞர்கள் பொருள் செய்திருந்த போதிலும் இதன் விளக்கத்தை பல தஃப்சீர்கள் தெளிவுபடுத்தியிருந்த போதிலும் நிலவுக்கு ஏற்படும் வளர் தேய் பிறைகள்தான் மனாஸில் என்றே பலரும் பொருள் கொடுக்கின்றனர். அதாவது முதல் பிறை முதல் மன்ஸில், இரண்டாம் பிறை இரண்டாம் மன்ஸில், மூன்றாம் பிறை மூன்றாம் மன்ஸில், இப்படியே 29 பிறைகளும் 29 மனாஸில் என்று விளங்கி வைத்துள்ளனர்.

“நிலவுக்கு ஏற்படும் ஒரே நிகழ்வு வளர் தேய் நிலைகள்தான். எனவே மனாஸில் என்றால் வளர் தேய் பிறைகளைத்தான் குறிக்கும். வேறு எதனையும் குறிப்பதற்கு வாய்ப்பில்லை” எனும் சிந்தனைதான் இதற்குக் காரணம். இதனாலேயே *நிலவின் வளர் தேய் நிலைகள், பிறைகள், படித்தரங்கள், தங்குமிடங்கள், இருப்பிடங்கள்* என்று பல்வேறு வார்த்தைகளைக்கொண்டு மொழிபெயர்க்கப்பட்டாலும் அதனை விளக்கும்போது “வளர்ந்து தேயும் பிறைகள் என்பதுதான் மனாஸிலுக்கு பொருள்” என்று விளக்குவர்.

10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். *ஆண்டுகளின் எண்ணிக்கையையும்,* காலக்கணக்கையும் நீங்கள் *அறிந்து கொள்ளும் பொருட்டு* (ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

10:5. அவனே, சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான்; சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும், வளர்ந்து தேயும் நிலைகளைச் சந்திரனுக்கு நிர்ணயம் செய்தான்; இவற்றின் மூலம் *ஆண்டுகளின் எண்ணிக்கையையும்,* கணக்கையும் நீங்கள் *அறிந்து கொள்வதற்காக!* இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே படைத்துள்ளான். அறிவுடைய மக்களுக்கு அவன் தன் சான்றுகளைத் தெளிவாக விளக்குகின்றான்.

பிரபலமான இரு மொழிபெயர்ப்புகளை தந்துள்ளோம். சந்திரனுக்கு மனாஸிலை ஏற்படுத்தி இருப்பதிலிருந்து நாம் ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்கிறோம் என்று அல்லாஹ் சொல்கிறான். மனாஸில் என்பதற்கு நாம் என்ன பொருள் கொடுக்கிறோமோ அது ஆண்டுகளின் எண்ணிக்கையைக் காட்டவேண்டும். பொதுவாக இந்த வசனத்தை விளக்கும் அறிஞர்கள், “நிலவானது வளர்ந்து தேய்ந்து, வளர்ந்து தேய்ந்து வருவதன் மூலம் நமக்கு மாதங்களைக் காட்டுகிறது, 12 மாதங்கள் சேரும்போது ஓர் ஆண்டு ஆகிறது. இவ்வாறுதான் நிலவின் (மனாஸில்) வளர் தேய் நிலைகள் ஆண்டுகளை காட்டுகின்றன” என்று விளக்கம் கொடுப்பார்கள். இந்த விளக்கம் பொருத்தமானதா என்று பார்ப்போம்.

https://i5.walmartimages.com/asr/618b767d-fb01-45e6-90ec-b6b505a3fccb_1.f3a7d71ab8e7f28e32d69ec81e1c5bbc.jpeg

பொருத்தமின்மை # 1

ஒரு சுவர் கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மணி முள், நிமிட முள், வினாடி முள் என்று மூன்று முட்கள் இருக்கும். நொடி முள்ளானது நேரடியாக நொடியைக் காட்டும். நிமிட முள்ளானது நேரடியாக எத்தனை நிமிடங்கள் கடந்துள்ளன என்பதைக் காட்டும். அதே போல மணி முள்ளும் எத்தனை மணி நேரம் கடந்துள்ளது என்பதை நேரடியாகக் காட்டும். சற்று உன்னிப்பாக கவனியுங்கள்! 60 வினாடிகள் சேர்ந்தால் ஒரு நிமிடம் ஆகும். இந்த அடிப்படையில் பார்த்தால் நிமிட முள் கடிகாரத்தில் தேவையில்லை, வினாடி முள்ளைக் கொண்டே நிமிடத்தையும் அறிய இயலும். அதனால் வினாடி முள்ளை இனிமேல் நிமிட முள் என்று அழைக்கலாம் என்று யாராவது சொல்வார்களா? அதே போல 3600வினாடிகள் சேர்ந்தால் ஒரு மணி நேரம் ஆகும். இவ்வாறு வினாடி முள்ளே மணியையும் காட்டுவதால், மணி முள் தேவையில்லை, வினாடி முள்ளையே இனிமேல் மணி முள்ளாகவும் பயன்படுத்தாலம் என்று யாராவது முடிவெடுப்பார்களா? 3,15,57,600 மூன்று கோடியே பதினைந்து லட்சத்து ஐம்பத்தி ஏழாயிரத்து அறுநூறு வினாடிகள் கொண்டது ஒரு ஆண்டு. எனவே வினாடி முள்ளைக் கொண்டு ஆண்டுகளை எண்ணலாம் என்று யாராவது சொன்னால் நாம் அதனை எவ்வாறு எதிர்கொள்வோம்?

அவ்வாறல்ல... அல்லாஹ்வின் படைப்பில், நாளைக் காட்டுவது இரவு பகல், மாதத்தைக் காட்டுவது தலைப்பிறை, ஆண்டுகளைக் காட்டுவது பருவ காலங்கள் என்று நாம் தெளிவாக விளங்கி வைத்துள்ளோம். இதற்கு மாற்றமாக பொருத்தமே இல்லாமல் வளர் தேய் பிறைகள் மாதத்தைக் காட்டும் என்பதும், 12 மாதங்கள் ஒர் ஆண்டு எனும் அடிப்படையில் நிலவின் மனாஸில் ஆண்டுகளின் எண்ணிக்கையைக் காட்டும் என்பதும் பொருத்தமற்ற வாதம். கடிகாரத்தின் வினாடி முள் ஆண்டுகளை எண்ண உதவும் என்பதைப் போன்ற வாதமிது. சந்திரனின் மனாஸில் என்பதற்கு நாம் என்ன பொருள் கொடுக்கிறோமோ அது நேரடியாக ஆண்டுகளின் எண்ணிக்கையைக் காட்டவேண்டும். அதவாது “இந்த மன்ஸில் வந்துவிட்டது ஓராண்டு நிறைவடைந்துவிட்டது, அடுத்ததாக இந்த மன்ஸில் வந்துவிட்டது இரண்டாமாண்டு நிறைவடைந்துவிட்டது” என்று நேரடியாக எண்ண இயன்ற வகையில் மனாஸில் இருக்கவேண்டும். அல்லாஹ் பொருத்தமற்ற வார்த்தைகளை பயன்படுத்த மாட்டான் என்பதையும் நினைவில் கொள்க.

மேலும் இந்த விளக்கத்தில் பெரிய விபரீதம் உள்ளது. “மனாஸிலை ஏற்படுத்தி இருப்பதிலிருந்து நீங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிகிறீர்கள்” என்று அல்லாஹ் சொல்கிறான், ஆனால் “மனாசிலில் இருந்து ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிய முடியாது. அல்லாஹ் விதித்த மனாஸில் மாதங்களின் எண்ணிக்கயைதான் காட்டும், அதிலிருந்து ஆண்டுகளின் எண்ணிக்கையை நாம்தான் கணக்கிட வேண்டும்” என்று அல்லாஹ் சொன்னதற்கு மாற்றமாக நாம் சொல்வதைப் போன்று அமைந்துவிடும்.

பொருத்தமின்மை # 2

நிலவின் வளர்தேய் நிலைகள்தான் மனாஸில் என்றும் அந்த மனாஸில் மாதங்களைக் காட்டுவதன் மூலம் ஆண்டுகளைக் காட்டுகிறதும் என்றும் சொல்கிறார்களே, முதலில் வளர்தேய் நிலைகள் மாதத்தைக் காட்டுமா என்றால், அவை மாதத்தையும் காட்டாது. நிலவின் வளர் தேய் நிலைகள் காலத்தைக் காட்டாது என்பதை பிறைவாசி.காம் தளத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம். மாதத்தைக் காட்டுவது தலைப்பிறைதானே தவிர வளர்ந்து தேயும் நிலவல்ல. ஒரு தலைப்பிறையில் இருந்து அடுத்த தலைப்பிறை வரையுள்ள காலமே ஒரு மாதம். இதைதவிர நிலவின் வேறு எந்த வடிவத்திற்கும் மாதத்திற்கும் தொடர்பே இல்லை. நிலவின் வேறு வடிவங்கள் மாதத்தையும் காட்டாது, மாதத்திற்குள் தேதியையும் காட்டாது, வருடத்தையும் காட்டாது.

ஆக, மனாஸிலுக்கு *நிலவின் வளர் தேய் நிலைகள், பிறைகள், படித்தரங்கள், தங்குமிடங்கள், இருப்பிடங்கள்* என்று பல்வேறாக பொருள் செய்துவிட்டு இறுதியாக “வளர் பிறை தேய்பிறைகள்தான் மனாஸில்” என்று சொல்லப்படும் விளக்கம் அடிப்படையில் அர்த்தமற்றது. மனாஸில் என்பதற்கு என்ன பொருள் கொடுக்கிறார்களோ அது நேரடியாக ஆண்டுகளை எண்ணுவதற்கு உதவ வேண்டும்.

பொருத்தமின்மை #3

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான்.

இது ஒரு மொழிபெயர்ப்பு. அரபு மூலத்தில் இப்படித்தான் இருக்கிறதா என்று பார்ப்போம்.

 هُوَ الَّذِي அவனே جَعَلَ அமைத்தான் الشَّمْسَ சூரியனை ضِيَاءً வெளிச்சமாகவும் وَالْقَمَرَ சந்திரனை نُورًا ஒளியாகவும். وَقَدَّرَهُ மேலும் அவனுக்கு ஏற்படுத்தினான் مَنَازِلَ பல நிலைகளை لِتَعْلَمُوا நீங்கள் அறிந்து கொள்வதற்காக عَدَدَ السِّنِينَ ஆண்டுகளின் எண்ணிக்கையையும் وَالْحِسَابَ (காலக்) கணக்கையும்.

அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான்

இங்கே நாம் மொழிபெயர்ப்பை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளோம். மூலத்தில் உள்ள வரிசைப் படி மொழிபெயர்ப்பை வரிசைப் படுத்தியுள்ளோம்.

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّـهُ ذَٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

மேலே மூலத்தில் கோடிடப்பட்ட வாக்கியமே சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான் என்பதாகும். அது வாக்கியத்தின் நடுவே அமைந்துள்ளது. ஆனால் மொழிபெயர்ப்போ அதை தனி வாக்கியமாக மாற்றி அர்த்தமற்றதாக இறுதியில் தள்ளியுள்ளது.

உண்மையில்...

ஆண்டுகளை எண்ணவும் காலக்கணக்கை அறியவும் அல்லாஹ் ஏற்படுத்தி இருப்பது நிலவின் மன்zில்கள் ஆகும். ஆனால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் அந்த கிரெடிட்டை தர்ஜமா கொடுத்துவிட்டு, சந்திர மநாzிலை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

இந்த வசனத்தில் சந்திர மநாzிலில் இருந்து ஆண்டுகளை எண்ண முடியும் காலக் கணக்கை அறிந்துகொள்ள முடியும் என்று ஒரு தகவலாக அல்லாஹ் சொல்லவில்லை. மாறாக சந்திரனுக்கு மநாzலை ஏற்படுத்தி இருப்பதற்கான காரணமே நாம் ஆண்டுகளை எண்ணிக்கொள்ளவும் காலக் கணக்கை அறிந்துகொள்ளவும்தான் என்கிறான். ஆக இந்த வசனத்தை தகவலாக எடுக்க முடியாது. சந்திர மநாசிலில் இருந்துதான் நாம் ஆண்டுகளின் எண்ணிக்கையும் காலக்கணக்கையும் அறிந்துகொள்ள வேண்டும்.

நாம் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே பிறை பார்கிறோம். 30ம் இரவு பிறை தேடவேண்டும், பிறை தெரிந்தால் அவ்விரவு புது மாதத்தின் முதல் நாள் இரவு. இல்லையேல் அம்மாதம் 30ஆக முழுமையடையும். மறுநாள் பிறை பார்க்க தேவையில்லை என்கிறோம். ஆக, காலங்களை அறிந்துகொள்ள தலைப்பிறை மட்டுமே போதும் என்று நடைமுறைப்படுத்தும் நாம் அதற்கு மாற்றமாக நிலவின் வளர் தேய் நிலைகள் காலங்களை காட்டும் என்கிறோம். இது எத்தகைய முரண்பாடு. இதை ஹிஜ்ரா கமிட்டியினர் எவ்வாறு கேலி செய்கிறார்கள் என்று பாருங்கள்.

//ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக்கணக்கையும் நாம் அறிந்துகொள்வதற்காக வளர்ந்து சந்திரனுக்கு தேயும் நிலைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அதாவது ஒவ்வொரு நாளும் காட்சியளிக்கும் பிறை வடிவம் அந்த நாளின் தேதியை காட்டும். தினமும் பிறை பார்த்தால் அந்த நாளின் தேதியை தெரிந்துகொள்வது மட்டுமல்லாது அந்த மாதம் எப்போது முடியும் என்று முன்னரே தெரிந்துகொள்ள இயலும். மாதத்தின் இறுதி நாளில் மட்டுமே பிறை பார்த்து ஒருவேளை மேகமூட்டம் காரணமாக பிறை தெரியாவிட்டால் அநியாயமாக ஒரு நாளை இழக்க நேரிடும்.

நாம் காலத்தை அறிந்துகொள்வதற்காக சந்திரனின் வளர் தேய் நிலைகளை அல்லாஹ் படைத்திருக்கும்போது, அதை பின்பற்றாமல் மாதத்தின் இறுதி நாளில் மட்டுமே பிறை தேடச் சொல்லும் ஹதீஸ்களை தவ்ஹீத் ஜமாஅத் பின்பற்றலாமா? 30ம் இரவு மட்டுமே பிறை பார்த்தல் போதும் என்று சொல்லும் ஹதீஸ்கள் 10:5ம் வசனத்திற்கு முரண்படுகிறதல்லவா? குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் பின்பற்றுகிறீர்கள்.//

ஹிஜ்ராவின் இந்த நியாமான கேள்விக்கு மனாஸில் எனும் வார்த்தையை தவறாக மொழியாக்கம் செய்தும் விளக்கம் கொடுப்பதுமே காரணம் ஆகும்.

பாகம் – 2, ஆண்டுகளின் எண்ணிக்கையை நேரடியாகக் காட்டும் பகல்.

10:5ம் ஆயத்தில் ஆண்டுகளின் எண்ணிக்கையை நேரடியாக அறிந்துகொள்கிறீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். ஆனால் அறிஞர்களோ “சந்திரனின் படித்தரங்கள் மாதத்தைக் காட்டும் என்றும் 12 மாதங்கள் சேரும்போது நாம் ஆண்டுகளை எண்ணுகிறோம்” என்று விளக்கம் சொல்கிறார்கள். இந்த ஆயத்தைப் போல பேசும் மற்றோர் ஆயத்தும் உள்ளது.

وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ ۖ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا

இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி(இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.

(அல்குர்ஆன் : 17:12)

இந்த வசனத்திலும் لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ என்று 10:5 இல் பயன்படுத்திய அதே வார்த்தை அமைப்பைப் பயன்படுத்தி அல்லாஹ் ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்வீர்கள் என்று சொல்கிறான். இதற்கு அறிஞர்கள் எவ்வாறு விளக்கம் கொடுக்கப்போகிறார்கள்? “ஒவ்வொரு பகலாக எண்ணி வரவேண்டும் 365 பகல்களை எண்ணும்போது ஓராண்டு நிறைவடைந்திருக்கும்” என்பார்களா? அவ்வாறு அவர்கள் சொன்னால் அது நாம் உதாரணமாக கூறிய நிமிடமுள் கதை போல அமைந்துவிடும்.

பகலின் பிரகாசத்திலிருந்து ஆண்டுகளை எண்ணுவது எப்படி?

பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக ஆக்கியதால் நீங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்வீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே இதன் பொருள் என்ன. இதிலும் முதல் வசனத்தில் இருப்பது போல் ஆழ்ந்த விஞ்ஞான உண்மையும் வரலாறும் புதைத்துள்ளது. எந்த வார்த்தையையும் தேவை இல்லாமல் அல்லாஹ் பயன்படுத்த மாட்டான். பருவ காலத்தைக் கணிப்பது எல்லாக் காலத்திலும் மனிதனின் தேவையாகவே இருந்துள்ளது. பருவ காலத்தைக் கணிக்காமல் விவசாயம் செய்ய இயலாது. எனவே அதைக் கணிக்கும் யுக்தியை அல்லாஹ் பழங்கால மனிதனுக்கே கற்றுக்கொடுத்துவிட்டான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் பகலின் நீளமும் இரவின் நீளமும் சமமாக இருப்பதில்லை. சில காலங்களில் 14 மணி நேரம் பகல் நீடித்தால் 8 மணி நேரமே இரவு நீடிக்கும். அல்லது 9 மணி நேரப் பகலும் 15 மணி நேர இரவும் இருக்கிறது. இவ்வாறு இரவும் பகலும் வித்தியாசமான நீளத்தில் அமைகிறது. ஆனால் வருடத்தின் இரு நாட்களில் மட்டும் இரவும் பகலும் சமமாக அமைகின்றன. அதில் ஒன்று வசந்த காலத் துவக்கத்திலும் (மார்ச் 20) மற்றொன்று இளவேனிற் காலத் துவக்கத்திலும் (செப்டம்பர் 20) அமையும். இரவும் பகலும் சம அளவில் வரும் நாளைக் கண்டுபிடிக்க மனிதன் சில கருவிகளைக் கண்டுபிடித்தான். அவை காலங்களை காட்டின. ஆண்டுகளின் எண்ணிக்கையைக் காட்டின.

http://www.english-heritage.org.uk/remote/www.english-heritage.org.uk/content/properties/stonehenge/hero-carousel/stonehenge-circle-pink-sky?w=1440&h=612&mode=crop&scale=both&cache=always&quality=60&anchor=bottomcenter

http://www.english-heritage.org.uk/remote/www.english-heritage.org.uk/content/properties/stonehenge/hero-carousel/Stonehenge_Circle_Travel_Promo.jpg?w=1440&h=612&mode=crop&scale=both&cache=always&quality=60&anchor=middlecenter

இத்தகைய கருவிகளில் இன்றளவும் வியப்புடன் பார்க்கப்படுபவை தற்போதைய இங்கிலாந்து நாட்டில் இருக்கும் STONEHENGE ஸ்டோன்ஹெஞ்ச் ஆகும். மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது. சுமை தாங்கிகளைப்போல வட்டவடிவத்தில் சில கற்களை நட்டு வைத்துள்ளனர். இவை கிமு 3000 இல் கட்டப்பட்டவையாக கணிக்கப்பட்டுள்ளது. நான்கு காலங்களையும் மேலும் பல வானியல் ஆய்வுகளையும் இந்த கற்களைக் கொண்டு கணக்கிடலாம். இது ஒரு கோளரங்கம் என்றால் அது மிகையாகாது.

இந்த கருவி பகலின் வெளிச்சத்தில் மட்டுமே வேலை செய்யும். சூரிய ஒளியைக் கொண்டு மட்டுமே இந்த கருவியிலிருந்து காலங்களைக் கணக்கிட இயலும். ஒரு பருவ காலம் தொடங்கி மீண்டும் அதே பருவ காலம் வருவதுதான் ஓர் ஆண்டு.

http://www.ancient-origins.net/sites/default/files/Mnajdra-equinox.jpg

இது மால்டாவில் இருக்கும் ஒரு கோயில். இது கிமு 3600 களில் கட்டப்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடமும் காலங்களைக் கணக்கிடும் அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் இரவும் பகலும் சமமாக இருக்கும் அந்த நாளில் சூரிய உதயத்தின்போது ஒளிக்கீற்று கட்டிடத்தின் வாயிலை ஒளிர்விக்க செய்கிறது.

மனித இனம் காலம் காலமாகச் சூரிய வெளிச்சத்திலிருந்து ஆண்டுகளின் எண்ணிக்கையையும் பருவ காலங்களையும் கணக்கிட்டதற்கு சான்றுகள்தான் மேற்சொன்ன கட்டிடங்கள். பகலின் வெளிச்சத்திலிருந்து ஆண்டுகளை எண்ணும் பழங்கால முறை இவை எனில் பிற்கால மக்கள் இன்னமும் துல்லியமாக பகலின் வெளிச்சத்திலிருந்து காலத்தை கணக்கிடலானார்கள்

 kairouan-VR

சூரிய ஒளி நிழல் கடிகாரத்தில் பகல் 12 மணியின் போது நேராக உள்ள நிழல்.

இது துனிசியாவில் கைறவான் நகரில் உள்ள அல் உக்பா மஸ்ஜிதில் உள்ள நிழல் கடிகாரம். ஆய்வாளர்களை வியக்க வைக்கும் விதமாக இதில் நான்கு Gnomonகள் உள்ளன.

இந்த நிழல் கடிகாரம் பழவேற்காட்டில் உள்ள மஸ்ஜிதில் உள்ளது. இது 1915 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. இது ஒரு பக்கவாட்டு நிழல் கடிகாரம் (horizontal sundial) நடுவிலிருக்கும் Gnomon இன் நிழல் இரண்டு பக்கமும் விழாமலிருக்கும் நிலை ளுஹ்ருடைய நேரத்தை குறிக்கும். இது ஒரு நாளின் நேரத்தை மட்டுமே காட்டும். இதில் எல்லா நாளும் சூரிய உதயம் காலை 6மணிக்கும் சூரிய மறைவு மாலை 6 மணிக்கும் இருக்கும். வருடத்தின் எல்லா நாட்களிலும் சூரியன் சரியாக 12மணிக்கு உச்சியில் வரும்.

இதுவும் க்றகோவ் நகரில் Jagiellonian பல்கலை கழகத்தில் இருப்பதாகும். ஆண்டுகளின் எண்ணிக்கையை காட்டும் மற்றொரு நிழல் கடிகாரம்.

மேலே இருப்பது போலந்து நாட்டின் க்றகோவ் நகரில் உள்ள மேரி கிருத்தவ ஆலயத்தின் சுவரில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு நிழல் கடிகாரமாகும். நிழல் கடிகாரம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். செங்குத்தாக நடப்பட்ட குச்சியின் நிழலின் திசையை வைத்து நேரத்தை அறிந்து கொள்ளும் கருவி. நீள வாக்கில் அமைக்கப்பட்ட நிழல் கடிகாரங்களும் உள்ளன. இந்த நிழல் கடிகாரம் நேரம் மற்றும் மன்ஸில்களை காட்டவல்லது.

பழவேற்காடு மஸ்ஜிதில் இருப்பதைப் போல் நேரத்தை மட்டும் காட்டும் நிழல் கடிகாரமல்ல போலந்தில் இருப்பது. அதன் சிறப்பம்சம் அது நேரத்தைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் அது எந்த நாள் என்பதையும் தெளிவாகவே காட்டும் தன்மை வாய்ந்தது. இது ஒரு வருடத்தின் தொடக்கத்தையும் முடிவையும் தெளிவாக காட்டும். மேலும் இது காலத்தை காட்டுவதற்கு சூரிய வெளிச்சம் இன்றியமையாதது. அதாவது இது பகலின் வெளிச்சத்தில்தான் ஆண்டுகளின் எண்ணிக்கையை நேரடியாகக் காட்டும்.

http://www.muslimheritage.com/uploads/inscriptions_sundial_in_Topkapi_Palace.JPG

இது இஸ்தான்புல் டாப் காப்பி அரண்மனையில் இருக்கும் நிழல் கடிகாரம்.

இதுவும் இஸ்தான்புல் நகரில் உள்ள மிஹ்ரிமா மஸ்ஜிதில் உள்ள ஒரு நிழல் கடிகாரம். இதுவும் நேரத்தை மட்டுமல்லாமல் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் நேரடியாக காட்டவல்லது. ஆங்கில காண்டருக்கு இணையான தேதியையும் காட்டவல்லது.

உதுமானிய பேரரசில் இருந்த முஸ்லிம் விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டவை. மேலே பார்த்த மேரி தேவாலயத்தில் இருந்த கடிகாரத்தை போல இதிலும் ஆண்டுகளின் எண்ணிக்கையைச் சூரியனின் மன்zில்களில் இருந்தே அறிந்து கொள்கிறோம். மேரி ஆலயத்தில் சூரியனின் மன்zில்கள் அவற்றின் குறியீடுகளில் குறிக்கப்பட்டிருந்தன. இந்த கடிகாரத்தில் சூரியனின் மன்சில்கள் அவற்றின் அறபிப்பெயர்களில் குறிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் சூரியனின் மன்ஸில்களை (ராசிகளை) ஜோதிடத்திற்குப் பயன்படுத்தாமல் காலத்தைக் கணக்கிட பயன்படுத்தினர் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாக உள்ளது.

பகலை வெளிச்சமாக்கியதில் இருந்து ஆண்டுகளின் எண்ணிக்கையை இவ்வாறே அறிந்துகொள்ள முடியும். மேலும் அதை அல்லாஹ் அத்தாட்சிகள் என்கிறான். பகலில் பிரகாசம் ஆண்டுகளின் எண்ணிக்கையை நேரடியாக காட்டுவதைப் போல மனாஸில் என்று எதை சொல்கிறோமோ அது நேரடியாக ஆண்டுகளை எண்ண உதவ வேண்டும்.

பாகம் -3, *மனாஸில் பற்றிய மொழிபெயர்ப்புகளின் நிலை.*

பல ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் ஒரு மலையாள மொழிபெயர்ப்பு உட்பட இன்ன பிற மொழிபெயர்ப்புகளிலும் மனாசிலை சரியாக பொருள் கொண்டுள்ளனர். மனாஸில் என்கிற வார்த்தைக்கு பல தஃப்சீர்களில், அகராதிகளில், ஹதீஸ் விரிவுரைகளில் விளக்கம் இருந்தபோதிலும், அவற்றில் இருக்கும் வானியல் விளக்கங்களை விளங்கிக்கொள்ள இயலாமையால் அல்லது அவற்றை சோதிடம் என்று கருதியதால் அவ்விளக்கங்களைச் சட்டை செய்யாமல் மனாஸில் என்கிற வார்த்தையை நேரடியாக மொழிபெயர்க்க முயற்சி செய்தனர் தமிழ் அறிஞர்கள்.

*நிலவின் வளர் தேய் நிலைகள், பிறைகள், படித்தரங்கள், தங்குமிடங்கள், இருப்பிடங்கள்* என்று பல்வேறாக மொழியாக்கம் செய்தாலும் வளர் பிறை தேய் பிறைகளைதான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது தெளிவு. மனாஸில் என்பதற்கு இத்தனை பொருள்கள் கொடுக்க இயலும் என்றாலும் இதில் படித்தரம் என்பது சற்று வித்தியாசமானது. அரபு மொழியைப் பொறுத்தவரை, மனாஸில் எனும் வார்த்தை மனிதனுடன் தொடர்பு படுத்தி வந்தால் மட்டுமே அது படித்தரம் எனும் பொருளைப் பெறும். தமிழ் மொழியில் கூட படித்தரம் என்றால் ஒரு மனிதனின் தகுதி, அந்தஸ்து, தராதரம் எனும் பொருளில் பயன்படுமே தவிர உயிரற்ற பொருட்களுக்கும் அஃறிணை உயிரனங்களுக்கும் பயன்படுத்தப்படாது. நிலவுடன் தொடர்புபடுத்தி மனாஸில் என்று சொல்லப்பட்டால் அதை நிலவின் அந்தஸ்து என்று அரபுகள் விளங்கமாட்டார்கள். படித்தரம் எனும் தமிழ் வார்த்தைக்குப் பொருள் தெரியாத நாம்தான் படித்தரம் என்றால் வளர்ந்து தேயும் நிலைகள் என்று விளங்கி வைத்துள்ளோம். இதற்கான காரணத்தை அலசினால் அது ஒரு வேடிக்கையான வரலாற்றைச் சொல்கிறது.

Dr. ஜான் (Jan) மொழிபெயர்த்த தமிழ் மொழிபெயர்ப்பு அரபு மொழியில் இருந்து நேரடியாக தமிழுக்கு மாற்றம் செய்யப்படவில்லை. யூஸுஃப் அலி என்பார் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பை தமிழுக்கு மாற்றினார் ஜான் அவர்கள். 10:5ம் வசனத்தில் இருக்கும் மனாசிலிக்கு stage என்று மொழிபெயர்த்திருப்பார் யூஸுஃப் அலி. stage ஐ எப்படி தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று தடுமாறிய ஜான் அவர்கள் படித்தரம் எனும் வார்த்தையை இட்டார். அதை ஹிஜ்ரா கமிட்டி போன்றோர் வளர்ந்து தேயும் பிறைகள் எனும் பொருளில் பயன்படுத்தவே நாளடைவில் படித்தரம் என்றால் வளர்ந்து தேயும் நிலைகள் என்று தமிழ் முஸ்லிம்கள் மனதில் பதிந்துவிட்டது. ஒரு தமிழ் வார்த்தையின் பொருளையே மாற்றிவிட்டார்கள்.

இவ்வாறு நேரடியாக அகராதி பொருளைக் கொடுத்து மொழிபெயர்த்தால் என்ன தவறு?

ஒருவர் அரபு மொழியில் இருக்கும் ஓர் ஆக்கத்தை தமிழில் மொழிபெயர்க்கிறார். அப்போது بَيْتُ الحَرَامُ எனும் வார்த்தையை ஹராமான வீடு என்றும் بَيْتُ المَالِ எனும் வார்த்தையை செல்வ வீடு என்று மொழிபெயர்த்தால் மொழி அறிந்தவர்கள் நகைப்பார்கள். பைத்துல் ஹராம் – கஅபா & பைத்துல் மால் – பொருளகம் என்பதே அவற்றின் பொருள். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பின் விபரீதத்தை இதுபோன்ற பல உதாரணங்களை சொல்லி விளக்கலாம். அதில் முக்கியமான ஒரு உதாரணம்தான் இது....

பின்வரும் அரபு வாசகத்தை

السنان الذي له شعبتان يصاد به الوحش

மிருங்கங்கள் (மற்ற மிருகங்களை) வேட்டையாட பயன்படுத்தும் (அவற்றின்) கூர்மையான இரண்டு பற்கள்.

என்று ஹிஜ்ரா கமிட்டி மொழிபெயர்த்தது. அரபு அறிந்தோர் அனைவரும் அவர்களை பார்த்து நகைத்தார்கள். ஹிஜ்ரா கமிட்டியின் அரபு மொழி அறிவும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.

A. سن என்றால் பல்-லைக் குறிக்கும் அரபு சொல்லின் ஒருமை வடிவம்

B. أسنان என்றால் பற்கள் (பன்மை)

C. سنان என்றால் இரு பற்கள் (இருமை)

ஸின்னான் என்றால் இரு பற்கள் என்று பொருள் இருப்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மேலுள்ள வாசகத்தில் இருக்கும் “அல் ஸின்னானுக்கு” இருசூலம் என்று பொருள்.

*மிருங்கங்களை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் இரு பிளவுகளைக் கொண்ட இருசூலம்.*

என்பதே மேலுள்ள அரபு வாசகத்திற்கான சரியான மொழியாக்கம். இதே போல இடம், பொருள், காலம் & வரலாறு அறிந்து மொழியாக்கம் செய்யவேண்டும். அகராதிகளில் கூட நிலவுடன் தொடர்புபடுத்தி மனாஸில் எனும் வார்த்தை வந்தால் அது நட்சத்திரங்களை குறிக்கும் என்று தெளிவாக உள்ளது. எனினும் அது புரியாமல்போன காரணத்தால் அறிஞர்கள் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்துவிட்டனர்.

அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (பருவ காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக (சந்திரனுக்கு) மன்ஸில்களை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் : 10:5)

பாகம் -4, மனாஸில் பற்றிய வானியல் கலை

வானியலை புரிந்துகொள்ள இயலாமையால் அறிஞர்கள் மனாஸில் எனும் வார்த்தையை தவறாக விளங்கினர் என்று பார்த்தோம். எனவே மனாஸில் பற்றிய விஞ்ஞானத்தை சற்று அறிந்துகொள்ள முயற்சிப்போம்.

இன்று நாம் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டோம். அவைகள் நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன. முன்னர் ஓர் ஊருக்கு வழி சொல்வதெனில் அதன் பக்கத்து ஊரில் துவங்கி, குளம், குட்டை, வயல், ஆலமரம், சூப்பர் மார்க்கட், மால், எனப் பல அடையாள இடங்களைச் சொல்ல வேண்டும். இப்போது அந்தச் சிரமம் இல்லை. வாட்ஸ்ஆப்பில் லொகேஷனை ஷேர் செய்து விட்டால் அந்த இடத்திற்கு அவர் எளிதில் சென்று சேர்ந்துவிடுவார். இது எவ்வாறு வேலை செய்கிறது? பூமியில் அட்ச ரேகைகள் தீர்க்க ரேகைகள் என்று கற்பனை கோடுகளை வரைந்துள்ளனர். ஒவ்வொரு இடத்தின் வழியாகவும் ஒரு அட்ச ரேகையும் தீர்க்க ரேகையும் செல்லும். நாம் இருக்கும் இடத்தின் வழியாக ஒரே ஒரு அட்ச ரேகையும் தீர்க்க ரேகையும் மட்டுமே செல்லும். இந்த அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் GPS எனும் கருவியின் உதவியுடன் வாட்ஸ்ஆப் கண்டு பிடித்து மற்றொருவருக்கு அனுப்புகிறது. அதைப் பெறுபவரின் ஸ்மார்ட் போனிலும் ஒரு GPS கருவியும் வரைபடமும் இருக்கும். ஸ்மார்ட் போன் GPS கருவியைப் பயன்படுத்தி அவர் இருக்கும் இடத்தையும் சென்று சேரவேண்டிய இடத்தையும் வரைபடத்தில் காட்டும். எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதையும் காட்டிவிடும்.

இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டியது வாட்ஸ்ஆப் அல்லது GPS பற்றியல்ல. பூமியில் ஓர் இடத்தை எப்படி அடையாளம் இடுகிறார்கள் என்பதையே. பூமியில் இடங்களை அட்ச ரேகை latitude தீர்க்க ரேகை longitude எனும் கோடுகளைப் பயன்படுத்தி அடையாளப்படுத்துவதைப் போல வானிலும் அடையாளங்கள் இருக்கின்றன. வானத்தில் சந்திரன் எங்கே இருக்கிறது சூரியன் எங்கே இருக்கிறது எந்தக் கோள்கள் எங்கே இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள பூமியில் இருக்கும் லாடிடூட் லாஞ்சிடூட்களைப் போல் வானத்திலும் கற்பனையான கோடுகளை மனிதன் இன்று அமைத்துள்ளான். வானத்தில் இருக்கும் லாஞ்சிடூட்கள் Right Ascension என்றும் லாடிடூட்கள் Declination என்று அறியப்படுகின்றன. Right Ascension (சுருக்கமாக RA) என்பவை தீர்க்க ரேகைகளுக்கு இணையாக வானில் கற்பனையாக வரையப்பட்டவை. Declination (சுருக்கமாக DEC) என்பவை அட்ச ரேகைகளுக்கு இணையாக வானில் வரையப்பட்ட கற்பனைக் கோடுகள்,

இன்று மனிதன் RA & DEC க்களை வைத்து வானில் ஒரு கோள் எங்கே இருக்கிறதென்று எளிதில் சொல்லிவிடுகிறான். இந்த இரண்டு மதிப்புகளையும் உள்ளீடு செய்தால் இன்றைய நவீன தொலைநோக்கிகள் மிகச்சரியாக ஒரு கோளை நோக்கி நின்று விடும். ஆனால் பண்டைய மக்கள் ஒரு கோள் எங்கே இருக்கிறதென்பதை எப்படி குறித்துகொண்டார்கள்? பார்ப்போம்!

பூமி உருண்டையைச் சுற்றிலும் வான் உருண்டை இருப்பதாக மனிதன் கற்பனை செய்தான். அந்த உருண்டையில் நட்சத்திரங்கள் ஒட்டி வைக்கப்பட்டிருப்பதாக எண்ணினான். இந்தக் கோளம் வான்கோளம் என்றறியப்பட்டது. மனிதன் தன்னுடைய நெடுநாள் கவனிப்பின் விளைவாக நட்சத்திரங்கள் ஒன்றிற்கொன்று நகராமல் நிலையாக இருப்பதை அறிந்தான். சில நட்சத்திரங்கள் மற்றவற்றிலிருந்து நகர்வதையும் கண்டான். நகரும் நட்சத்திரங்கள் என்று அவற்றுக்குப் பெயரிட்டான். பின்னாளின் இவைதான் சூரிய குடும்பத்தின் கோள்கள் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்டன. ஆங்கிலத்தில் planet எனும் வார்த்தை கிரேக்க மொழியில் planētēs எனும் வார்த்தையிலிருந்து வந்ததுதான். Planētēs என்றால் நாடோடி என்று பொருள். மற்ற நட்சத்திரங்கள் நிலையாக இருந்தபோது இவை ஓடித்திரிந்ததால் அதை அவ்வாறு அழைத்தனர். பிற்காலத்தில் கோள்களுக்கு அதுவே பெயராகிவிட்டது. அரபியிலும் கோள்களுக்குச் சொல்லப்படும் கவ்கப் எனும் வார்த்தையின் மூலமும் “அலையும் நட்சத்திரங்கள்” என்று பொருள்படும் ‘கொவ்கோப்’ எனும் வார்த்தையிலிருந்து வந்ததுதான்.

மேற்சொன்ன வான்கோளத்தில் இந்த நிலையான நட்சத்திரங்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் இக்கோளத்தினுள்ளே பூமியும் சூரியனும் சந்திரனும் இன்ன பிற கோள்களும் சுற்றி வருவதாக எண்ணினான். கீழே நீங்கள் பார்ப்பதுதான் வான்கோளம் ஆங்கிலத்தில் celestial sphere.

https://i.ytimg.com/vi/aFIR7hbqed4/maxresdefault.jpg

நீங்கள் இரவில் வானதைப்பார்க்கும்போது ‘டூம்’ வடிவில் ஒரு அரைக்கோளத்தால் பூமி மூடப்பட்டுள்ளது போல் உணர்வீர்கள். கீழே படத்தில் இருப்பதைப் போல. இரவில் இந்த அரைக்கோளத்தையும் பகலில் ஒரு அரைக்கோளத்தையும் கண்ட மனிதன் பூமியை சுற்றி இருக்கும் வான் கோளை இதைவைத்தே உருவகப்படுத்தினான்.

http://www.herongyang.com/astrology_horoscope/celestial_sphere_relative_coordinate.gif

ஒன்றிக்கு ஓன்று நகராமல் நிலையாக இருக்கும் நட்சத்திரங்களுக்கு மனிதன் பெயரிட்டான். இவையே அளவுகோலாக மாறின. இந்த நிலையான நட்சத்திரங்கள் என்றுமே நகர்ந்ததில்லை. (பூமியில் இருந்து பார்க்கும்போது அவை நகாராமல் காட்சியளிக்கின்றன. ஆனால் அவையும் சூரியனைப் போல் வினாடிக்குப் பல மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றன). இந்த நட்சத்திரங்களைத்தான் மனிதன் வானில் இருக்கும் கோள்கள் அவை எங்கே இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளப் பயன்படுத்தினான்.

நட்சத்திரங்களுக்குப் பெயரிட்டால் மட்டும் போதாது பல நாட்களுக்குப் பிறகு பார்க்கும்போது இந்த நட்சத்திரம்தானா அது என்ற குழப்பம் வந்துவிடக் கூடாது. எனவே நட்சத்திரங்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள மனிதன் ஒரு முறையைக் கையாண்டான். தான் வானில் பார்த்த, பெயரிட்ட, நட்சத்திரங்களைக் கற்பனைக் கோடுகளால் இணைத்தான். புள்ளியிட்டு கோலமிடுவதைப் போல. அவன் கற்பனையான இணைக்கும் கோடுகள் ஏதாவது அவனுக்கு எளிதில் விளங்கும் வடிவத்தைக் காட்டுவதாக இருக்குமாறு அவன் இணைத்தான்.

மேலே இருப்பது இரவுநேர வானத்தின் காட்சி. இது தெற்கு வானத்தைக் காட்டுகிறது. இதில் இருக்கும் நட்சத்திரங்களை இணைத்து உங்களால் எதாவது கற்பனை செய்யமுடிகிறதா? இல்லையென்றால் பின்வரும் படம் அதைக் கற்பனைசெய்ய உங்களுக்கு உதவும்.

இந்தபடத்தில் நட்சத்திரங்களை இணைத்துக் கற்பனைக்கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதிலும் உங்களால் எந்த வடிவத்தையும் உருவகப்படுத்த இயலவில்லையெனில் பின்வரும் படம் அவற்றைத் தெளிவாகவே உங்களுக்கு விளக்கும்.

மேலே இருக்கும் படத்திலிருந்து நட்சத்திரங்களை இணைத்து எப்படி வடிவங்களைக் கற்பனை செய்தனர் என்று எளிதில் விளங்கிக்கொள்ளலாம். இன்றும் வானியல் ஆர்வலர்கள் ஒரு கோளைப் பார்க்க வேண்டுமென்றால் அது இன்று எந்த நட்சத்திரக்கூட்டதில் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டுதான் தங்களின் தொலைநோக்கியைக்கொண்டு பார்கின்றனர்.

இன்று வானியலில் பயன்படுத்தப்படும் RA DEC எனும் அளவீடுகளுக்கு இணையானவை அன்றைய நட்சத்திரங்களைக் கொண்டு வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிக்கும் முறை. மனிதன் இவ்வாறு பல நட்சத்திரக்கூட்டங்களை உருவகப்படுத்தி அவற்றிற்குப் பெயரிட்டான். இதனால் நட்சத்திரங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. (இன்றளவில் உலக வானியல் ஒன்றியத்தால் 88 நட்சத்திரகூட்டங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளன). ஒரு கோள் வானில் எங்கிருக்கிறது என்பதை அது எந்த நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கிறது என்பதை வைத்துச் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டிற்கு மேலுள்ள படத்தில் சனி கிரகம் தரசு வடிவில் இருக்கும் நட்சத்திரக்கூட்டத்தில் இருப்பதை நீங்கள் காணலாம். இதைத் துலாம் நட்சத்திரக்கூட்டத்தில் சனி இருப்பதாகச் சொல்வார்கள். இதே போல் சந்திரனும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரக்கூட்டத்தில் காட்சியளிக்கும். இதை வைத்து “சந்திரன் இன்று இந்த நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கிறது” என்பார்கள்.

பூமியும் இன்ன பிற கோள்களும் சூரியனை ஒரே தளத்திலேயே சுற்றிவருகின்றன. இதனால் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும் சந்திரனும் பிற கோள்களும் ஒரே பாதையில் பயணிப்பதுபோல் காட்சியளிக்கும். அதாவது எல்லா கோள்களும் ஒரே பாதையிலே வானில் பயணிக்கின்றன. இதனால் சில குறிப்பிட்ட நட்சத்திரக் கூட்டங்களைத் தவிர மற்றவற்றில் சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றைப் பார்க்க முடியாது. 88 நட்சத்திரக்கூட்டங்களில் 13 நட்சத்திரக் கூட்டங்களை மட்டுமே (பூமியிலிருந்து பார்க்கும்போது) சூரியனும் கோள்களும் கடக்கின்றன. இவைகள் ராசிகள் (zodiacal constellation) என்றறியப்படுகின்றன.

வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் என்பதால் மனிதன் சூரியனின் பாதையை 12 ஆகப் பகுத்து அதில் இருக்கும் ராசிகளில் சூரியன் பயணிப்பதை கவனித்து வந்தான். குறிப்பிட்ட காலநிலையில் குறிப்பிட்ட ராசியிலேயே சூரியன் இருப்பதை மனிதன் பல வருடங்களாகக் கவனித்து வந்தான். இதன்மூலம் சூரியன் இருக்கும் ராசிகளை வைத்து மனிதன் காலநிலை மாற்றத்தைக் கணித்துவந்தான். அது விவசாயத்திற்கு பயன்பட்டது. சூரியன் ஒரு ராசியில் அதன் சுற்றித் தொடங்கி மீண்டும் அதே ராசியில் முடிக்க 365.25 நாட்களை எடுக்கும்.

இதே போல் சந்திரன் கடக்கும் நட்சத்திரக்கூட்டங்களை மனிதன் கவனித்து வந்தான். சூரியனைவிட வேகமாக நட்சத்திரக்கூட்டங்களை சந்திரன் கடந்தது.  எனவே நட்சத்திரக்கூட்டங்களை மொத்தமாகக் கணக்கிலெடுக்காமல் ஒரு சில நட்சத்திரங்கள் அல்லது ஒரே ஒரு நட்சத்திரத்தை மட்டும் வைத்துச் சந்திரனின் இருப்பிடங்களை மனிதன் கவனிக்கலானான். சந்திரன் சராசரியாக 27 – 28 நாட்களுக்குள் அது தொடங்கிய நட்சத்திரத்தில் மீண்டும் வந்தது. எனவே சந்திரனின் ஓடு பாதையை மனிதன் 28 பிரிவாகப் பிரித்தான். இதற்குக் காரணம் சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீண்டும் அதே நட்சத்திரத்தில் முடியும் சுற்றுக்குச் சராசரியாக 27.32நாட்கள் எடுத்துக்கொண்டது. ஒவ்வொரு பிரிவிலும் ஓன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தன. இந்த நட்சத்திரங்களில் சந்திரன் கடந்து செல்வதை மனிதன் ராசி நட்சத்திரங்கள் என்று அழைத்தான்.

அரபுகள் சூரிய ராசிகளை மனாஸிலுல் ஷம்ஸ் அல்லது புரூஜ் என்றும் சந்திர ராசிகளை மனாசிலுல் கமர் என்றும் அழைத்தனர். எவ்வாறு நாம் பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டி பருவ காலங்களைக் காட்டுகிறதோ அதே போலச் சூரியன் எந்த புரூஜில் இருக்கிறதோ அது நேரடியாக அந்தப் பருவநிலையை காட்டியது. ஆங்கில நாட்காட்டி வெயில் காலத்தை ஏப்ரல் மே மாதங்களிலும் குளிர் காலத்தை டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் காட்டும். இந்த வேலையை புரூஜுகள் அதே போல் துல்லியமாகக் காட்டின. அரபுகள் மட்டுமல்ல பல ஆயிரம் ஆண்டுகளாக மனித சமூகம் அனைத்துமே புரூஜிலிருந்துதான் பருவகாலங்களை அறிந்தனர் ஆண்டுகளை எண்ணினர்.

ஆனால் அரபுகள் சூரியனின் மன்சிலை அறிந்து காலநிலை மாற்றத்தை அறிந்துகொள்வதற்கு பகரமாக வேறொரு முறையைக் கையாண்டனர். ஒரு சந்திர மன்சில் அதாவது நட்சத்திரம் ஒரு வருடத்தில் முதலில் எப்போது உதிக்கிறது என்று பார்ப்பார்கள். உதாரணத்திற்கு ஃதுரய்யா எனும் நட்சத்திரத்தை எடுத்துக்கொள்வோம். இன்று முழுவதும் அது காட்சியாளிக்கவே இல்லை. நாளை ஃபஜ்ர் வேளைக்கு சற்று முன் அது உதிப்பதை பார்க்கிறேன் என்று வைத்துகொள்வோம். எனில் இந்த வருடத்தில் நாளைதான் அந்த நட்சத்திரம் முதல் முதலாக பஜ்ர் வேளையில் உதிக்கிறது. இதை நான் குறித்துக்கொள்வேன். நாளைமறுநாள் அது 4 (3 நிமிடம் 56வினாடிகள்) நிமிடங்கள் முன்பாகவே உதித்து விடும். இவ்வாறு ஓவ்வொரு நாளும் முந்தைய நாளைவிட 4 நிமிடங்கள் முன்பாக உதிக்கும். அடுத்த ஆறு மாதத்தில் அந்த நட்சத்திரம் (ராசி அ மன்சில்) மக்ரிப் வேளையில் உதித்து ஃபஜ்ர் வேளையில் மறையும். அடுத்த மூன்று மாதங்கள் கடந்தால் நண்பகலில் உதித்து இஷாவுக்கு முன்னதாகத் தலைக்குமேல் காட்சியளித்து நள்ளிரவில் மறையும். அடுத்த இரண்டரை மாதங்களில் மக்ரிப் வேளையில் அதை மறைவதை மட்டுமே பார்க்க இயலும். பின்னர் சில வாரங்களுக்கு அந்த நட்சத்திரம் என் கண்ணிலேயே தென்படாது. மீண்டும் ஒரு நாள் அது ஃபஜ்ர் வேளையில் உதிக்க துவங்கும். இப்போது மிகச்சரியாகப் பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி இருக்கும். அதாவது ஒரு நட்சத்திரம் முதன் முறையாக ஃபஜ்ர் வேளையில் காட்சியளிக்க துவங்கி சில காலங்களுக்கு பின்னர் அது காட்சியளிக்காமல் போனபிறகு மீண்டும் ஃபஜ்ர் வேளையில் காட்சியளிக்கும்போது 365.2425 நாட்கள் கடந்திருக்கும். பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி ஒரு ஆண்டை முடித்துக் கொண்டதை இவ்வாறுதான் அன்றைய அரபுகள் அறிந்துகொண்டனர். இது சூரிய மன்சில்கள் எனும் புரூஜ்களை கவனிப்பதை விட எளிதானது. சூரிய மன்சில்களைக் கவனிக்க நிழல் கடிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் சந்திர மன்சில்களைக் கவனிக்க பார்வை மட்டுமே போதும்.

பல காலமாகச் சந்திர மன்சில்களைக் கவனித்துவந்த மனிதன் குறிப்பிட்ட சில மன்சில்கள் உதிப்பது காலநிலையை பிரதிபலிப்பதைக் கண்டான். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நட்சத்திர உதயம் சூரிய ஓட்டத்தைப் பிரதிபலித்ததால் அவை சூரிய காலண்டரைப் போல் காலநிலையைப் பிரதிபலித்தன. சுரையா (கார்த்திகை) எனும் ராசி உதிப்பது இளவேனிற்காலத்தை உணர்த்தியது. தபறான் (ரோகினி) எனும் ராசி உதிப்பது மழைக்காலத்தை காட்டியது எனும் தகவல்களை நம்மால் வரலாறுகளில் பார்க்க முடிகிறது.

இந்த விடியோக்கள் சூரியனும் சந்திரனும் எவ்வாறு ராசிகளைக் கடந்து செல்கின்றன என்பதை விளக்குகின்றன.

இந்த வீடியோவில் சந்திரனும் தன் ராசிகளைக் கடப்பதை காட்டுகின்றனர். வீடியோ வேகமாக ஓடுவதால் அது தெரிவதில்லை. வீடியோவின் வேகத்தை 0.25X இல் வைத்து பாருங்கள்.

https://www.youtube.com/embed/82p-DYgGFjI?start=30&end=62&version=3

இந்த வீடியோவில் சூரியனின் புரூஜ்கள் எப்படி நேரடியாக காலநிலை மாற்றத்தை காட்டுகின்றன என்பதை விளக்குகிறார்கள்.

https://www.youtube.com/embed/eeQwYrfmvoQ

நட்சத்திரங்களை இணைந்து மனிதன் ராசிகளை எப்படி கற்பனை செய்தான் என்பதை இந்த வீடியோ விளக்குகிறது

https://www.youtube.com/embed/Hm2MKez7atI

பாகம்- 5, மனாஸில் - ஆண்டுகளைக் காட்டும் செய்முறை விளக்கம்

இரவில் நாம் பல ஆயிரம் விண்மீன்களைப் பார்த்திருப்போம். தினமும் வானைப் பார்த்து வருபவர் நிலவு மற்றும் வெள்ளி, வியாழன், சனி போன்ற கோள்களும் குறிப்பிட்ட சில விண்மீன்களின் பின்னணியிலேயே மீண்டும் மீண்டும் கடந்து செல்வதைக் காண்பார். நிலவு பூமியை சுற்றுவதால் பூமியில் இருக்கும் நமக்கு நிலவானது விண்மீன்களின் பின்னணியில் ஓடுவதைப் போல காட்சியளிக்கும். அதேபோல இன்ன பிற கோள்கள் சூரியனைச் சுற்றும்போது அதன் வட்டப்பாதைக்குள்ளே இருக்கும் பூமியையும் சேர்த்துச் சுற்றுவதால் அவையும் விண்மீன்களின் பின்னணியில் ஓடுவதைப் போல காட்சியளிக்கும். உதாரணமாக வியாழன் கோளின் சுற்றுவட்டப்பாதைக்குள்ளாக பூமி இருப்பதால் வியாழன் கோள் விண்மீன்களின் பின்னணியில் ஓடுவதைப் போன்ற தோற்றம் ஏற்படும். இன்று ஒரு கோளை நாம் ஒரு விண்மீனுக்கு அருகில் கண்டால் அது விண்மீன்களின் சுற்றை முடிந்துகொண்டு மீண்டும் அதே கோள் அதே விண்மீனுக்கு அருகே வரும். இதற்கான காலத்தை மனிதன் கணக்கில் வைத்து வந்தான்.

இந்த அடிப்படையில் 27.32 நாட்களில் நிலவு பூமியை ஒரு சுற்று சுற்றி முடித்திருக்கும் அதே கால அளவில் அது முதலில் காட்சியளித்த விண்மீனுக்கு அருகே காட்சியளிக்கும்.

4332 நாட்களில் பூமியையும் சூரியனையும் சேர்த்து வியாழன் கோள் சுற்றியிருக்கும். ஆகவே 4332 நாட்களுக்குப்பிறகு முதலில் காட்சியளித்த விண்மீனுக்கு அருகே மீண்டும் காட்சியளிக்கும்.

கோள்கள் சுற்றிவரும் பாதையில் தெரியும் இந்த விண்மீன் கூட்டங்களில் பிரகாசமான 28 நட்சத்திரங்களை மனிதன் கண்டுவைத்திருந்தான். இந்த குறிப்பிட்ட 28 நட்சத்திரங்களில் கோள்கள் இருப்பதைக் கொண்டு அவன் காலத்தை அளவிட்டான். 27.32 நாட்களில் நிலவு பூமியை சுற்றுவதால் அதற்கு நெருக்கமான எண்ணிக்கையாக இருக்கும் 28 ஐ எடுத்து அந்த எண்ணிக்கையில் நட்சத்திரங்களை மனிதன் தேர்வு செய்தான். இதனால் அந்த நட்சத்திரங்கள் மனாஸிலுல் கமர் என்று பெயர் பெற்றன. அரபு மொழியில் மட்டுமல்ல இன்ன பிற மொழிகளிலும் கலாச்சாரங்களிலும் கூட இந்த விண்மீன்களுக்கு மனாஸிலுல் கமர் (நிலவின் விண்மீன்கள்) என்ற பொருளிலேயே பெயர் இருந்ததைக் காணமுடிகிறது.

இந்த 28 விண்மீன்களை மனிதன் எவ்வாறு பயன்படுத்தினான் என்று பார்ப்போம்.

மேலே நாம் நிலவு மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுக் காலத்தைப் பார்த்தோம். பூமி சூரியனை சுற்றி வருவதால் பூமியில் இருந்து பார்க்கையில் சூரியனும் மேற்சொன்ன விண்மீன்களில் சுற்றிவருவதைப் போன்ற காட்சி ஏற்படும். சூரியனை பூமி சுற்றிவரும் காலம் 365.2425. நாட்கள் எனவே இன்று சூரியன் காட்சியளித்த அதே விண்மீனில் 365 நாட்களுக்குப் பிறகு மீண்டும் காட்சியளிக்கும். இந்த 365 நாட்களைத்தான் ஒரு வருடம் என்றழைக்கிறோம்.

சூரியனை நாம் பார்க்கும் பகலில் விண்மீன்களைப் பார்க்க முடியாதே. அவ்வாறிருக்கும்போது சூரியன் இருக்கும் விண்மீனை எவ்வாறு பார்ப்பது என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். இதற்கு ஒரு எளிய வழியை நம் முன்னோர்கள் கையாண்டார்கள். மொத்தம் இருக்கும் 28 விண்மீன்களில் சூரியன் இருக்கும் விண்மீனைத் தவிர மற்ற அணைத்து விண்மீன்களையும் ஓரிரவில் பார்த்துவிடலாம்.

எப்படி?

மேலுள்ள படத்தைப் பாருங்கள். உங்களுடைய கற்பனை திறன் மற்றும் சிந்திக்கும் ஆற்றலைப் பொருத்து இதை நீங்கள் எளிதில் விளங்கிக்கொள்வீர்கள். நடுவே ஒரு மனிதன் தரையில் நிற்கிறான். அவனைச் சுற்றி ஒரு வட்டமிட்டுள்ளோம். தரைக்கு மேலே தெரியும் அரைவட்டம் அவன் இரவில் பார்க்கும் வானம். அந்த வட்டம் தரையை தொடும் இடம்தான் தொடுவானம். ஆக மனிதனுக்கு வலப்புறம் இருப்பது கிழக்கு தொடுவானம். இடப்புறம் இருப்பது மேற்கு தொடுவானம். பூமி தானே சுழல்வதால் தரையில் இருக்கும் நமக்கு பூமி நிலையானதாகவும் நமக்கு மேலிருக்கும் வானம் எனும் வட்டம் நம்மைச் சுழல்வது போன்ற தோற்றமும் ஏற்படும். எனவே விண்மீன்கள், சூரியன் நிலவு மற்றும் இன்ன பிற கோள்களும் உதித்து மறைவதைப் போன்ற தோற்றம் ஏற்படும். இரவு வானத்தில் மொத்த வானத்தின் பாதியை நாம் பார்ப்போம். மீதி பாதி வானம் பூமியின் மறுபக்கம் பிரகாசித்துக்கொண்டிருக்கும்.

மேலே இருக்கும் மனிதன் சூரியன் உதிக்கும் முன்னர் இருக்கும் இருட்டில் இருக்கிறார். இன்னமும் சற்று நேரத்தில் சூரியன் தொடுவானத்தைக் கடந்து உதிக்கத் துவங்கும். இப்போது நாம் பார்க்கும் பாதி வானத்தில் மொத்தம் இருக்கும் 28 விண்மீன்களில் 14 விண்மீன்களை நாம் பார்ப்போம்.

இப்போது அதே மனிதன் சூரியன் மறைந்த பிறகு இருக்கும் இருட்டில் இருக்கிறார். இப்போது சூரியன் உதிக்கும் முன்னர் அவர் பார்த்துக்கொண்டிருந்த பாதி வானம் பூமியின் மறுபக்கம் சென்று விடும். சூரியன் உதிக்கும் முன்னர் பூமியின் மறுபக்கம் இருந்த வானத்தை அவர் இப்போது பார்ப்பார். இப்போதும் அவர் 14 விண்மீன்களைப் பார்ப்பார். ஆனால் அந்த 14இல் ஒன்று அவர் ஏற்கனவே பார்த்த விண்மீன்களில் ஒன்று. ஆக மொத்தமாக அவர் 27 விண்மீன்களைப் பார்த்திருப்பார். சூரியன் எந்த விண்மீனில் இருக்கிறதோ அதை மட்டும் அவரால் பார்க்கவே முடியாது.

ஆக அவரால் எந்த விண்மீனைப் பார்க்க இயலவில்லையோ அந்த விண்மீனில் சூரியன் இருப்பதாக எளிதில் முடிவெடுத்துவிடுவார்.

வானை ஏறெடுத்தும் பார்க்காத நமக்கு இது சிரமமான முறை போல தோன்றும். இதில் எந்தச் சிரமமும் இல்லை. இதை விட ஒரு எளிமையான முறையை நமது முன்னோர்கள் அறிந்தார்கள்.

அது என்னவென்று பார்ப்போம்.

மேலே இருக்கும் படத்தைப் பாருங்கள். 23ம் விண்மீனில் சூரியன் இருக்கிறது. சூரியன் உதிக்கும் முன்புவரை 9 முதல் 21ம் விண்மீன்கள் வரை பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும். சூரியன் உதிப்பதற்கும் சற்று நேரத்திற்கு முன்பாக 22ம் விண்மீன் உதிக்கும். 22ம் விண்மீன் உதித்த சற்று நேரத்தில் அடிவானம் வெளுக்கும். நேரம் செல்லச்செல்ல அடிவானின் வெண்மையில் 22ம் விண்மீன் மறைந்து போகும். ஆக சூரியன் உதிப்பதற்கு முன்னதாக எந்த விண்மீன் உதித்து சற்று நேரத்தில் விடியலின் வெண்மையில் மறைந்து போகிறதோ அதற்கு அடுத்த விண்மீனில் சூரியன் இருப்பதை அறிந்துகொள்ளலாம். அதிகாலையில் எழுந்து உழைக்க ஆரம்பித்த மனிதன் அடிவானைப் பார்த்து இதை அறிந்துகொள்வான். நாம் முதலில் விளக்கியதைப் போல நாள் முழுக்க வானைப் பார்த்து சூரியன் இருக்கும் விண்மீனை அறியவேண்டியதில்லை. அதிகாலையில் மட்டுமே பார்த்தால் போதுமானது. இதனைத் தினமும் பார்க்க வேண்டிய தேவையும் இல்லை.

பூமி சூரியனை சுற்றி வரும் காலம் 365.2425 நாட்கள். இதனால் விண்மீன்களை 365.2425 நாட்களில் சூரியன் கடந்து வருவதை நாம் அறிந்தோம். இந்தப் பாதையை நாம் 28 விண்மீன்களைக் கொண்டு பகுத்ததால் ஒரு விண்மீனில் இருந்து அடுத்த விண்மீனுக்குச் சூரியன் செல்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 365.2425 ÷ 28 = 13.044375 நாட்கள். சராசரியாக 13 நாட்களில் அடுத்த விண்மீன் உதிப்பதை நம்மால் பார்க்க இயலும்.

மேலுள்ள படத்தைப் பாருங்கள். 23ம் விண்மீனில் இருந்த சூரியன் 13 நாட்களுக்குப்பிறகு 24ம் விண்மீனில் இருக்கிறது. இப்போது 23ம் விண்மீன் சூரியன் உதிப்பதற்கு முன்னதாக உதித்து சற்று நேரம் காட்சியளித்து அடிவானம் வெளுக்கும்போது மறைந்துவிடும்.

இப்படத்தைப் பாருங்கள். 24ம் விண்மீனில் இருந்த சூரியன் 13 நாட்களுக்குப்பிறகு 25ம் விண்மீனில் இருக்கிறது. இப்போது 24ம் விண்மீன் சூரியன் உதிப்பதற்கு முன்னதாக உதித்து சற்று நேரம் காட்சியளித்து அடிவானம் வெளுக்கும்போது மறைந்துவிடும்.

இவ்வாறாக இந்த மனாஸிலுல் கமர் எனும் விண்மீன் சுற்றை சூரியன் முடிக்கும்போது சரியாக 365.25 நாட்கள் எனும் சூரிய ஆண்டை முடித்திருக்கும். இந்த முறையைத்தான் பெரும்பான்மையான மனித சமுதாயம் பயன்படுத்தியுள்ளதை நாம் வரலாற்றில் இருந்து அறிகிறோம். முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. இஸ்லாம் வருவதற்கு முன்னர் அரபுகளும் இதே முறையைப் பயன்படுத்தி காலத்தைக் கணக்கிட்டனர். இஸ்லாம் வந்த பிறகும் இதே முறை தொடர்ந்தது. மேலும் எந்த விண்மீன் உதிக்கிறது என்பதைப் பார்த்த மாத்திரத்தில் அவர்கள் அறிவார்கள். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு பருவ காலத்தைக் காட்டியது. ஆக! தினமும் பார்க்காமல் இருந்தாலும் அவர்கள் என்று பார்க்கிறார்களோ அன்று உதிக்கும் விண்மீனைக் கொண்டு அந்தப் பருவகாலத்தை அவர்கள் அறிந்தார்கள்.

இன்று நமது கையிலிருக்கும் கிரிகோரியன் நாட்காட்டி என்றும் சூரிய நாட்காட்டியில் பருவ காலங்கள் ஒரே தேதியில் மீண்டும் மீண்டும் வருவதைக் கவனித்திருப்போம். கோடைக்காலம் ஏப்ரல் மாதமாகவும் குளிர்காலம் டிசம்பர் மாதமாகவும் இருக்கும். இதற்குக் காரணம் சூரிய நாட்காட்டியில் ஓர் ஆண்டு என்பது 365.2425 நாட்கள். பூமி சூரியனை சுற்றுவதால் பருவகால மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்தச் சுற்றை எந்த நாட்காட்டி பிரதிபலிக்கிறதோ அந்த நாட்காட்டி பருவகாலங்களையும் பிரதிபலிக்கும். அந்த அடிப்படையில் அரபுகள் பயன்படுத்தி வந்த மனாஸிலுல் கமர் உதிப்பதை அடிப்படையாகக் கொண்ட நவ்அ எனும் நாட்காட்டி பருவ காலங்களைக் காட்டியது. 28 விண்மீன்களில் 7 விண்மீன்களின் உதயம் கோடை காலத்தையும் 7 விண்மீன்களின் உதயம் இளவேனிற்காலத்தையும் 7 விண்மீன்களின் உதயம் குளிர்காலத்தையும் மீதமிருக்கும் 7 விண்மீன்களின் உதயம் வசந்த காலத்தையும் காட்டியது.

விவசாயம் செய்வதற்கு பருவகாலங்களை அறிவது மிக முக்கியம். குறிப்பிட்ட பருவகாலத்தில் பயிர் செய்ய வேண்டும் குறிப்பிட்ட பருவகாலத்தில் பாசனம் செய்ய வேண்டும் குறிப்பிட்ட பருவகாலத்தில் அறுவடை செய்ய வேண்டும். இன்று விசாயிகள் சூரிய காலண்டரைப் பார்க்கின்றனர். பண்டைய விவசாயிகள் மனாஸிலுல் கமர் உதிப்பதைக் கொண்டுதான் காலங்களை அறிந்தனர்.

பாகம்-6, அன்று முதல் இன்றுவரை அரபுலகத்திற்கு காலம் காட்டும் மனாஸில்

“நீங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (பருவ காலக்)கணக்கையும் அறிவதற்காக” என்று அல்லாஹ் பொதுவாக எல்லா காலத்திற்கும் ஏற்ற மாதிரி வாசகத்தை அல்லாஹ் பயன்படுதியுள்ளான். எனில் அக்காலத்திற்கு மட்டுமல்ல எல்லா காலத்திற்கும் நீங்கள் சொல்வதைப் போல நட்சத்திரங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையைக் காட்டவேண்டும். இன்றைய காலத்தில் யாராவது நட்சத்திரங்களில் இருந்து ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிகிறார்களா? எனும் கேள்வி எழுகிறது.

நாம் இதுவரைப் பார்த்த மனாசிலைக் கொண்டு பருவகாலங்களையும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் அறியும் முறை இன்றளவும் அரபு நாடுகள் வெளியிடும் காலண்டர்களில் உள்ளன.

(சவூதி மற்றும் கத்தர் காலண்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன)

  கத்தர் நாட்டு காலண்டர் :-

http://www.qatarch.com/electronic-calendar

http://www.qatarch.com/wp-content/uploads/2017/03/A3-أوقات-الصلاة-لمدينة-الدوحة-1438هـ.pdf 

 சவுதியின் உம்முல் குரா காலண்டர்:-

www.ummulqura.org.sa

http://ummulqura.org.sa/datespage.aspx?d1=true&d2=true&d3=true&d4=true&d5=true&month=1&year=1440&h=true

கீழே நீங்கள் பார்ப்பது உம்முல் குறா இணையதளத்தில் இருக்கும் தினசரி நாட்காட்டி. அச்சடிக்கபப்ட்ட நாட்காட்டியும் நூறு சதவீதம் இதைப் போலவே இருக்கும். அச்சடிக்கப்பட்ட காலண்டரின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

www.ummulqura.org.sa தளத்தை திறந்த உடன் நம் பார்வைக்கு கிடைப்பது இதுதான். இதில் அன்றைய தினத்தின் பல்வேறு தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேதிக்கும் பின்னால் ஒரு வரலாறும் விண்ணியல் தொடர்பான தகவல்களும் இருக்கின்றன. அவற்றை இங்கே தெரிந்துகொள்வோம்.

கீழே இருப்பது அவர்களின் இணையதளத்தில் இருக்கும் மாதாந்திர நாட்காட்டி

இதைப்பார்க்க  www.ummulqura.org.sa  தளத்திற்கு சென்று அங்கே  التقويم  என்பதை க்ளிக் செய்யவும். பின்னர் அதில்  تقويم أم القرى  என்பதை தேர்ந்தெடுக்கவும் அதன் கீழ்பகுதியில்  تقويم المزارعين  என்றிருக்கும். இதில் நமக்கு தேவையான மாதங்களுக்கு நாட்காட்டியை எடுத்துக்கொள்ளலாம். ஆங்கில தேதி, ஹிஜ்ரி தேதி ஆகிய இரண்டு தேர்வுகளும் இருக்கும்.

மேலே தினசரி நாட்காட்டியில் இருக்கும் தேதிகளிலும் மாதந்திர நாட்காட்டியில் இருக்கும் தேதிகளிலும் ஒரு சிறிய சிகப்பு வட்டமும் அதனுள் ஒரு எண்ணும் இட்டுள்ளோம். அந்த எண் குறி இடப்பட்ட தேதிக்கான விளக்கங்களை கீழே தந்துள்ளோம். தினசரி, மாதாந்தரி இரண்டிலும் ஒரே இலக்கம் இருப்பின் அவ்விலக்கம் இரண்டிலும் ஒரே நாட்காட்டியைக் காட்டுகிறது. சிகப்பு நிற வட்டத்திற்குள் இருக்கும் எண்ணையும் கீழே அட்டவையில் உள்ள அதே எண்ணையும் பொருத்தி, அட்டவணையிலிருக்கும் விளக்கத்தைப் பார்க்கவும்.

 #_ 

மாதாந்திர நாட்காட்டி

தினசரி நாட்காட்டி

உம்முல் குறா

தமிழ் விளக்கம்

உம்முல் குறா

தமிழ் விளக்கம்

 

 التاريخ الميلادي

ஆங்கில தேதி

 15  January (1) 2017 يناير 

ஜனவரி (1) ம் மாதம் 15 ம் தேதி

 

  اليوم

வார நாள்

 الاحد 

ஞாயிறு

 

 التاريخ الهجري القمري

சந்திர ஹிஜ்ரி தேதி

 17 (4) ربيع الثاني   Rabi’ al Thani 1438هـ

ரபியுல் ஆகிர் 4 ம் மாதம் 17 ம் தேதி ஹிஜ்ரி 1438ம் வருடம்

 

 التاريخ الهجري الشمسي

சூரிய ஹஜ்ரி தேதி

 الجدي25  1395 هـ ش

ஹிஜ்ரி ஷம்சி 1395, ஹிஜ்ரத் நடந்து 1395 சூரிய வருடங்கள் ஆகின்றன.

சூரியன் ஜதி (Capricorn மகர ராசி) எனும் புருஜில் நுழைந்து 25 நாட்கள் ஆகின்றன

 

 النجمي - طالع  الفجر

நட்சத்திர தேதி

பஜ்ரில் (விடியலில்) உதிக்கும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டது

 نوء النعايم 1

நஆயிம் எனும் சந்திர மன்ziல் உதித்து இன்று முதல் நாள். நாளை இரண்டாம் நாள். சூரியனுக்கு முன்னால் உதிக்கும் சந்திர மன்சிலை நவ்இ என்று அழைப்பார்கள். நஆயிம் என்பது ஒரு சந்திர மன்ziல்.

 

 الدارج لدى المزارعين

விவசாயிகள் பயன்படுத்தும் நட்சத்திர நாட்காட்டி

 الشبط 1

ஷுபத் உதித்து இன்று முதல் நாள்

 

 كانون-2

கானூன் ஃதானி. ஆங்கில மாதங்களின் பெயர்கள் அரபில். ஹீப்ரூ (எபிரேய) மாதங்கள் பெயர்களுடன் இவை ஒத்துப்போகும்

க்கான அதிகப்படியான விளக்கம்

No.

ஆங்கில மாதம்

அரபுப் பெயர்கள்

(சுரியானி எனும் Aramaic

மொழியை சார்ந்த பெயர்கள்)

உச்சரிப்பு

ஹீப்ரூ (எபிரேய) இணை

1

January

كانون الثاني

Kānūn ath-Thānī கானூன் அல் ஃதானி 

2

February

شباط

Shubāṭ ஷுபாத்

Shevat

3

March

آذار

Ādhār ஆதார்

Adar

4

April

نيسان

Nīsān நீசான்

Nisan

5

May

أيار

Ayyār அய்யார்

Iyar

6

June

حزيران

Ḥazīrān / Ḥuzayrān ஹுைZறான்

7

July

تموز

Tammūz தம்மூZ

Tammuz

8

August

آب

Āb ஆப்

Av

9

September

أيلول

Aylūl அய்லூல்

Elul

10

October

تشرين الأول

Tishrīn al-Awwal திஷ்ரீன் அல் அவ்வல்

Tishrei

11

November

تشرين الثاني

Tishrīn ath-Thānī திஷ்ரீன் அல் ஃதானி

Tishrei,

12

December

كانون الأول

Kānūn al-Awwal கானூன் அல் அவ்வல்

நன்றி https://en.wikipedia.org/wiki/Arabic_names_of_calendar_months

மேலே அட்டவணையில் ➊➋➌ஆகிய குறிகளிடப்பட்ட நாட்காட்டிகள் பற்றி நமக்கு தெரிந்ததே. அவற்றை விளக்கத் தேவையில்லை.

குறியில் இருப்பது சூரிய நாட்காட்டி மாதங்களின் சுரியானி/அரபுப் பெயர்களே தவிர அதில் கூடுதல் தகவல் ஏதுமில்லை. ➍➎➏ஆகிய குறிகளில் இருக்கும் நாட்காட்டிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

சூரிய மன்சிலான புருஜில் சூரியன் இருப்பதைக் கொண்டு பருவ காலங்களை அறிந்துகொள்ள இயலும் என்று கற்றோம் அதனடிப்படையிலான காலண்டரை நிரல் ல் உம்முல் குறா வெளியிடுகிறது.

புருஜ்களின் அரபுப் பெயர்

புருஜ்களின் அறிவியல்ப் பெயர்

புருஜ்களின் தமிழ்ப் பெயர்

தொடங்கும் நாள்

1

الحمل

Aries

மேஷம்

19-Apr

2

الثور

Taurus

ரிஷபம்

14-May

3

التوأمان

Gemini

மிதுனம்

20-Jun

4

الشرطان

Cancer

கடகம்

21-Jul

5

الأسد

Leo

சிம்மம்

10-Aug

6

العذراء

Virgo

கன்னி

16-Sep

7

الميزان

Libra

துலாம்

31-Oct

8

العقرب

Scorpius

விருச்சிகம்

23-Nov

9

الحواء

Ophiuchus

ஓஃபியகஸ்

30-Nov

10

الرامي

Sagittarius

தனுசு

18-Dec

11

الجدي

Capricornus

மகரம்

19-Jan

12

الدلو

Aquarius

கும்பம்

16-Feb

13

الحوت

Pisces

மீனம்

12-Mar

* உலக விண்ணியல் ஒன்றியமான IAU வரையறுத்துள்ள புருஜ்களின் பட்டியல்கள் இவை. இவையும் உம்முல் குறாவும் பொருந்தாது. துல்லியமான அறிவியல் தகவல்களுக்காக இதைத் தருகிறோம்.

சந்திர மன்சில் உதிப்பதை நவ்ஆ என்று அழைத்தனர். ஒவ்வொரு மன்சில் உதிப்பதையும் அதே மன்ஸிலில் பெயரில் நவ்அ என்று அழைத்தனர். அந்த வகையான காலண்டரை உம்முல் குறாவில் குறியிடப்பட்ட நிரலில் உள்ளது.

இதே நவ்அ கலையை இப்போதைய அரபு விவசாயிகள் வேறு பெயர்களில் பயன்படுத்துகின்றனர். அதாவது ஜனவரி 15இல் உதிக்கும் நஆயிம் மன்சிலை அரபு விவசாயிகள் ஷுபத் என்று அறிகின்றனர். இவ்வகை காலண்டர்  ம் குறியீட்டில் விவசாயிகள் பயன்படுத்தும் காலண்டர் என்ற பெயரில் உம்முல் குறா வெளியிடுகிறது.

 நவ்அ

(பஜ்ரில் உதிக்கும் சந்திர ராசி/மன்ziல்)

மன்சில்களின் தமிழ் பெயர்கள்

விஞ்ஞானப் பெயர்கள்

 அரபு விவசாயிகள் அடையாளப்படுத்தும் நட்சத்திரங்கள்

 இல் குறிப்பிடப்பட்ட விண்மீன் வருடத்தில் முதன் முதலாக உதிக்கும் நாள்

الشرطين

அஸ்வினி

β γ Aries
α 
Aries / β Tauri

الثريا

12-May

البطين

பரணி

ε δ ρ Aries

الثريا

25-May

الثريا

கார்த்திகை

M45 (Pleiades)

الثريا

07-Jun

الدبران

ரோகினி

α Taurus  (Aldebaran)

التويبع

20-Jun

الهقعة

மிருகசீர்ஷம்

λ φ1 φ2 Orion

الجوزاء

03-Jul

الهنعة

ஆதிரை

γ ξ Gemini

الجوزاء

16-Jul

الذراع

புனர்பூசம்

α β Gemini (Castor & Pollux)

المرزم

29-Jul

النثرة

பூசம்

γ δ ε Cancer (M44: Praesepe)

الكليبين

11-Aug

الطرفة

ஆயில்யம்

κ Cancer, λ Leo

سهيل

24-Aug

الجبهة

மகம்

ζ γ η α Leo (Regulus & Algieba)

سهيل

06-Sep

الزبرة

பூரம்

δ θ Leo

سهيل

20-Sep

الصرفة

உத்தரம்

β Leo (Denebola)

سهيل

03-Oct

العواء

ஹத்சம்

β η γ δ ε Virgo

الوسم

16-Oct

السماك

சித்திரை

α Virgo (Spica)

الوسم

29-Oct

الغفر

ஸ்வாதி

ι κ λ Virgo

الوسم

11-Nov

الزبانا

விசாகம்

α β Libra

الوسم

24-Nov

الإكليل

அனுஷம்

β δ π Scorpion

المربعانية

07-Dec

القلب

கேட்டை

α Scorpion (Antares)

المربعانية

20-Dec

الشولة

மூலம்

λ υ Scorpion (Schaula)

المربعانية

02-Jan

النعايم

பூராடம்| உத்திராடம்

δ ε η Sagittarius 

الشبط

15-Jan

البلدة

-

σ φ τ ζ γ Sagittarius

الشبط

28-Jan

سعد الذابح

அபிஜித் | ஓணம்

Coalsack in Sagittarius

العقارب

10-Feb

سعد بلع

-

α β Capricon

العقارب

23-Feb

سعد السعود

அவிட்டம்

μ ε Aqarius

العقارب

08-Mar

سعد الاخبية

சதயம்

β ξ Aqarius

الحميمين

21-Mar

المقدم

பூரட்டாதி

γ π ζ η Aqarius

الحميمين

03-Apr

المؤخر

உத்திரட்டாதி

α β Pegasus

الذراعين

16-Apr

الرشاء

ரேவதி

γ Pegasus, α Andromeda

الذراعين

29-Apr

சவூதி மற்றும் கத்தர் அரசுகள் அச்சடித்து வெளியிடும் காலண்டர்களில் மன்சில்கள்

இதில் ஒன்றைக் கவனியுங்கள். சூரியனின் மன்சிலான புருஜ் காட்டும் தேதியும், சந்திர மன்சில் உதயத்தின் அடிப்படையில் இருக்கும் நவ்அ தேதியும் ஆங்கில காலண்டருடன் பொருந்துவதைப் பாருங்கள். அதவாது இவ்வருடம் ஜனவரி 8ம் தேதி எந்த மன்ஸில் உதிக்கிறதோ அதே மன்சில்தான் அடுத்த வருடம் ஜனவரி 8ம் தேதி உதிக்கும். இவ்வாறுதான் மன்சில்கள் ஆண்டுகளை நேரடியாக காட்டின.

பாகம் – 7, மன்சில் நட்சத்திரம் என்றால் அது 36.39ம் வசனத்திற்கு முரண்படாதா?

நிலவுடன் தொடர்புபடுத்தி மனாஸில் என்று வந்தால் அதற்கு நட்சத்திரம் எனும் பொருள் மட்டுமே இருப்பதாக நாம் விளக்கும்போது பெரும்பான்மையாக எழும் கேள்வி ஒன்று உள்ளது. அதனை விளக்காவிட்டால் இந்த ஆய்வு பயன் பெறாது.

“நீங்கள் சொல்லும் விளக்கம் 36.39ம் வசனத்திற்குப் பொருந்தவில்லையே. 36.39ல் இருக்கும் மனாஸில் நிலவில் வளர் தேய் நிலைகள் என்ற பொருளில் தெளிவாக வந்துள்ளதே” இதுவே அக்கேள்வி.

وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ‌، ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ،‏

وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏

لَا الشَّمْسُ يَنْۢبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ‌، وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏

சவூதி மற்றும் Jan Trust வெளியீடுகளை தவிர மற்ற மொழிபெயர்ப்புகளை வாசிப்பவர்கள் “மெல்லிய பிறையாக தொடங்கி மெதுவாக சந்திரன் வளர்கிறது, முழுநிலவான பின்னர் அது தேய்கிறது. மாத இறுதியில் அது காய்ந்த பேரீச்சம் பாளையை போல ஆகிவிடுகிறது. இங்கே வளர்ந்து தேயும் நிலைகளை குறிக்க அல்லாஹ் மனாஸில் என்கிற வார்த்தையைதானே பயன்படுத்துகிறான். எனில் மனாஸில் என்பதற்கு வளர் தேய் நிலைகள் எனும் பொருளை தவிர வேறு பொருள் இல்லையல்லவா?” என்றே சிந்திப்பர். மனாஸில் என்றாலே வளர்தேய் நிலைகள் எனும் பொருள் மனதில் பதிந்துவிட்ட நிலையில் இவ்வாறே நாம் அவ்வசனத்தை அணுகுவோம். அதுதான் இந்த சிந்தனைக்குக் காரணம்.

குர்ஆனின் தனிச்சிறப்பே அதில் அல்லாஹ்வின் வார்த்தைத் தேர்வுகள்தான். அல்லாஹ்வின் வார்த்தைத் தேர்வுகளைக் கொண்டுதான் அதில் இருக்கும் அறிவியல் சான்றுகளை நாம் இன்று பேசிவருகிறோம். இங்கே கமர் எனும் வார்த்தை நேரடியாக நிலவு எனும் கோளைக் குறிக்கிறது, மாறாக வளர்ந்து தேய்வதுபோல நமது கண்களுக்கு காட்சியளிக்கும் நிலவிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியை பற்றி அல்லாஹ் இங்கே பேசவில்லை. இதுதான் நாம் இங்கே கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம். பிறை அல்லது வளர்ந்து தேயும் நிலைகள் அனைத்துமே நமது கண்களுக்கு ஏற்படும் காட்சிகள் ஆகும். உண்மையில் நிலவு வளர்வதோ தேய்வதோ இல்லை. பூமியை நிலவு சுற்றிவருவதால் பூமி சூரியன் நிலவு ஆகியவற்றின் கோணங்கள் மாறுபடும்போது நிலவிலிருந்து பிரதிபலிக்கப்பட்டு பூமியை நோக்கி வரும் சூரிய ஒளி வளர்ந்து தேய்கிறது. நிலவு வளர்ந்து தேயாது என்பதை அல்லாஹ்வை தவிர வேறு யாரும் நன்கறிய முடியாது. அத்தகைய அல்லாஹ் நிலவே வளர்ந்து தேய்ந்து காய்ந்த பேரீச்சை மட்டை போல ஆகும் என்று சொல்லமாட்டான். உர்ஜுனில் கதீம் பிறையின் இறுதி வடிவத்தைக் குறிப்பதாக இருந்தால் “உர்ஜுனில் கதீம் போல கமர் காட்சியளிக்கும் வரையில் அதற்கு நாம் மன்ஸில்களை நிர்ணயித்துள்ளோம்” என்று தகுந்த வார்த்தைப் பயன்படுத்தி அல்லாஹ் சொல்லி இருப்பான். ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

أَيُّكُمْ يَذْكُرُ حِينَ طَلَعَ الْقَمَرُ وَهُوَ مِثْلُ شِقِّ جَفْنَةٍ

"குவளையின் துண்டைப் போன்று நிலவு தோன்றுவதை உங்களில் நினைவில் கொள்பவர் யார்?"

முஸ்லிம் : 2177

இது நபி ஸல் அவர்கள் மாத இறுதியில் தோன்றும் மெல்லிய நிலவைக் குறித்து சொன்ன செய்தி ஆகும். குவளையின் துண்டைப் போன்று நிலவு தோன்றும் என்று கண்ணுக்கு தெரியும் நிலவின் தோற்றத்தைப் பற்றி பொருத்தமான வார்த்தைகளில் நபி ஸல் அவர்கள் சொல்கிறார்கள். நிலவே குவளைத் துண்டைப் போல ஆகும் என்று நபி ஸல் சொல்லவில்லை. ஆனால் இவ்வசனத்தில் உர்ஜுனில் கதீம் போல நிலவு தோற்றமளிக்கும் என்று சொல்லாமல் உர்ஜுனில் கதீம் போல நிலவே ஆகிவிடும் என்கிறான். எனவே நிச்சயமாக இந்த வசனம் தலைப்பிறை பற்றியோ மாத இறுதியில் தெரியும் நிலவின் கடைசி வடிவம் பற்றியோ பேசவில்லை. மாறாக யுக முடிவு நாளில் உர்ஜுனில் கதீம் போல நிலவே ஆகிவிடுவதைக் குறிக்கிறது.

36:39ம் வசனத்தை மட்டும் தனியாக அணுகாமல் 36:37ம் வசனத்திலிருந்து இதை அணுகவேண்டும். அதில் இரவும் ஒரு சான்று என்று அல்லாஹ் துவங்குகிறான். பின்னர் 38ம் வசனத்தில் மேலும் சூரியனும் என்று தொடர்கிறான். அதாவது சூரியனும் ஒரு சான்று எனும் பொருளில் தொடங்கி சூரியனின் ஓட்டத்தையும் சூரியனின் இறுதிக்கட்டதைப் பற்றியும் பேசுகிறான். பின்னர் 40ம் வசனத்தில் சூரியனால் சந்திரனை அடைய முடியாது என்கிறான். 38ம் வசனத்தில் சூரிய ஓட்டத்தைப் பற்றி பேசிய அல்லாஹ் 40ம் வசனத்தில் சூரிய-சந்திர ஓட்டங்களை இணைத்துப் பேசுகிறான். சூரியனின் ஓட்டத்தை அரபுச் சமுதாயம் அறிந்திருக்கவில்லை. நவீன விஞ்ஞானம்தான் பால்வெளியின் மையத்தை நோக்கி சூரியன் ஓடுவதை கண்டறிந்து சொல்கிறது. இதனை solar apex என்றழைக்கின்றனர். இவ்வாறு 38ம் வசனமும் 40ம் வசனமும் அல்லாஹ்வின் படைப்பின் ஆழ்ந்த உண்மைகளை பேசுகின்றன. எனில் 38க்கும் 40க்கும் இடையே இருக்கும் வசனம் மட்டும் மிகச் சாதரணமாக நிலவு வளர்ந்து தேய்ந்து இறுதியில் மெலிதாக ஆகிறது என்று எல்லோருக்கும் தெரிந்த சாதாரண விஷயமாக இருக்குமா?

وَالْقَمَرَ = மேலும் நிலவுக்கு

 قَدَّرْنٰهُ= நிர்ணயித்துள்ளோம்

 مَنَازِلَ= மன்ஸில்களை

 حَتّٰى عَادَ = ஆகும் வரையில்

 كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏ = உர்ஜுனில் கதீம் போல

“உர்ஜுனில் கதீம் போல கமர் ஆகும் வரையில் அதற்கு நாம் மன்ஸில்களை நிர்ணயித்துள்ளோம்”

உர்ஜுனில் கதீம் என்றால் பழைய பேரீச்சம் பாளை என்று பொருள் செய்வதைப் போல முந்தய பேரீச்சம் பாளை என்றும் பொருள் செய்யலாம். பேரீச்சம் பாளையில் அதன் பூக்கள் இருக்கும். அந்த பூக்களை உதிர்த்துதான் மகரந்த சேர்கை செய்வார்கள்.

பார்வை நிலை குத்தும்போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும்போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும்போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான் (அல் குர்ஆன் 75:7, 8, 9, 10.)

உலக முடிவின் அடையாளமாக சந்திர கிரகணம் ஏற்படும்போது சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் என்று அல்லாஹ் சொல்கிறான். உலகம் அழிக்கப்படும் வரையில் சூரியனும் சந்திரனும் சந்திக்காது. அவை சந்திக்கும்போது உலகம் அழிக்கப்படும். சந்திரனும் சூரியனும் ஒன்று சேர்க்கப்பட்டால் சந்திரனின் நிலை என்ன? அது பேரீச்சம் பாளையில் உள்ள பூக்கள் உதிவதைப் போல உதிர்ந்துவிடும்.

“முந்தைய பேரீச்சம் குருத்தைப் போல ஆகும் வரையில் நிலவுக்கு நாம் மன்ஸில்களை நிர்ணயம் செய்துள்ளோம்”

பூமியை நிலவு சுற்றி வருவதால் பூமியில் இருந்து பார்க்கும் நமக்கு நட்சத்திர பின்புலத்தில் நிலவு நகர்ந்து வருவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் மனாஸில் என்று ஏற்கனவே பார்த்துவிட்டோம். நிலவின் ஓடுபாதை என்று சொல்வதும் ஒன்றுதான் அதனை இலக்கிய நயமாக மனாஸில் என்று சொல்வதும் ஒன்றுதான். இந்த மனாஸில் ஓட்டம் அதாவது பூமியை சுற்றிவரும் நிலவின் ஓட்டம் எந்த காலம் வரையில் நடக்கும் என்று அல்லாஹ் இங்கே சொல்கிறான். உர்ஜுனில் கதீம் போல ஆகும் வரையில் பூமியை நிலவு சுற்றி வரும், அதனால் மன்சில்களிலும் காட்சியளிக்கும். உர்ஜுனில் கதீம் போல நிலவு ஆகிவிட்டால் நிலவுக்கு மனாசில் இருக்காது. அதாவது நிலவின் முடிவைப் பற்றி இங்கே அல்லாஹ் குறிப்பிடுகிறான். பூமியை சுற்றிக்கொண்டிருக்கும் நிலவானது உர்ஜுனில் கதீம் போல ஆகும்போது அதன் காலம் முடிந்துவிடும். இவ்வசனத்தில் மனாஸில் என்றும் உர்ஜுனில் கதீம் என்றும் உவமைகளாக இலக்கிய நயத்துடன் சந்திரனைப் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே வரியில் சொல்லி முடிக்கிறான். The Sun and the Earth-Moon System எனும் விஞ்ஞானத்தின் பெரும்பகுதியை இந்த நான்கு சிறு வசனங்களில் குர்ஆன் விளக்கிவிடுகிறது.

பாகம்-8,  மனாஸில் பற்றிய ஆதாரங்களின் தொகுப்பு

ஹதீஸ் ஆதாரங்கள்:

ஃதுறைய்யா

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ كَانَ الدِّينُ عِنْدَ الثُّرَيَّا لَذَهَبَ بِهِ رَجُلٌ مِنْ فَارِسَ - أَوْ قَالَ مِنْ أَبْنَاءِ فَارِسَ - حَتَّى يَتَنَاوَلَهُ ‏"

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மார்க்க (ஞான)ம் "கிருத்திகா" ராசியின் (ஸுரையா) அருகில் இருந்தாலும், அதைப் "பாரசீகர்களில்" அல்லது "பாரசீக மக்களில்" ஒருவர் எடுத்துக்கொண்டுவந்து விடுவார்" என்று கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி); புகாரீ (4897) முஸ்லிம் (4976)

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّاسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَتَبَايَعُونَ الثِّمَارَ، فَإِذَا جَدَّ النَّاسُ وَحَضَرَ تَقَاضِيهِمْ قَالَ الْمُبْتَاعُ إِنَّهُ أَصَابَ الثَّمَرَ الدُّمَانُ أَصَابَهُ مُرَاضٌ أَصَابَهُ قُشَامٌ ـ عَاهَاتٌ يَحْتَجُّونَ بِهَا ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا كَثُرَتْ عِنْدَهُ الْخُصُومَةُ فِي ذَلِكَ ‏ "‏ فَإِمَّا لاَ فَلاَ يَتَبَايَعُوا حَتَّى يَبْدُوَ صَلاَحُ الثَّمَرِ ‏"‏‏.‏ كَالْمَشُورَةِ يُشِيرُ بِهَا لِكَثْرَةِ خُصُومَتِهِمْ‏.‏ وَأَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ لَمْ يَكُنْ يَبِيعُ ثِمَارَ أَرْضِهِ حَتَّى تَطْلُعَ الثُّرَيَّا فَيَتَبَيَّنَ الأَصْفَرُ مِنَ الأَحْمَرِ‏.‏

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் மரத்திலுள்ள கனிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பழங்களைப் பறித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்ததும் வாங்கியவர், 'இது அழுகிவிட்டது; இது நோயால் தாக்கப்பட்டிருக்கிறது; இது செங்காயாக இருக்கிறது; இன்னும் பல குறைகள் இருக்கின்றன' எனக் கூறி சச்சரவு செய்வார். நபி(ஸல்) அவர்களிடம் இத்தகைய புகார்கள் பெருத்தபோது 'மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்காதீர்கள்!" என்று ஆலோசனை போல் கூறினார்கள்.

ஸைத் இப்னு ஸாபித்(ரலி), ஸுரையா (கிருத்திகா) (தோன்றக் கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வரும்வரை தம் தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்க மாட்டார்.

அறி: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ; புகாரி 2193.

ஸுரையா எனும் மன்சில் உதிப்பது அறுவடை செய்யும் பருவகாலத்தைக் காட்டியது என்பதை மேலுள்ள ஹதீஸ் சொல்கிறது.

حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، قَالَ : أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُرَاقَةَ ، قَالَ : كُنَّا فِي سَفَرٍ وَمَعَنَا ابْنُ عُمَرَ ، فَسَأَلْتُهُ ؟ فَقَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " لَا يُسَبِّحُ فِي السَّفَرِ قَبْلَ الصَّلَاةِ وَلَا بَعْدَهَا ، قَالَ : وَسَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ بَيْعِ الثِّمَارِ ؟ فَقَالَ : نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تَذْهَبَ الْعَاهَةُ " ، قُلْتُ : أَبَا عَبْدِ الرَّحْمَنِ ، وَمَا تَذْهَبُ الْعَاهَةُ ؟ مَا الْعَاهَةُ ؟ قَالَ : طُلُوعُ الثُّرَيَّا .

“கனிகளின் குறைகள் போகும்வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) தடை விதித்தார்கள்” என இப்ன் உமர் (ரலி) கூறினார்கள். அது எப்போது என இப்னு உமரிடம் கேட்டேன். “ஸுரையா(கிருத்திகா)வின் உதயம்” என்று கூறினார்கள்.

அறி: உஸ்மான் பின் அப்துல்லாஹ் பின் சுராகா ; அஹமத் 5012, தஹாவி-1906

ஸுரையா எனும் மன்சில் உதிப்பது அறுவடை செய்யும் பருவகாலத்தைக் காட்டியது என்பதை மேலுள்ள ஹதீஸ் சொல்கிறது.

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَالْوِتْرُ رَكْعَةٌ ‏"‏ قُلْتُ أَرَأَيْتَ إِنْ غَلَبَتْنِي عَيْنِي أَرَأَيْتَ إِنْ نِمْتُ قَالَ اجْعَلْ أَرَأَيْتَ عِنْدَ ذَلِكَ النَّجْمِ ‏.‏ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا السِّمَاكُ ثُمَّ أَعَادَ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَالْوِتْرُ رَكْعَةٌ قَبْلَ الصُّبْحِ ‏"‏ ‏.‏

இப்ன் உமர் (ரலி) அறிவித்தார்: “இரவுத்தொழுகைகள் இரண்டு இரண்டு ரகாத்துகளாக தொழப்படவேண்டும், வித்ர் ஒரு ரகாத்” என அல்லாஹ்வின் தூதர் ஸல் கூறினார்கள். “எனக்கு தூக்கம் வந்து நான் தூங்க நாடுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்“ என நான் (இப்னு உமர்) கேட்டேன். அதற்கு நபி ஸல் “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்பதை அந்த நட்சத்திரத்துடன் இட்டுப்பார்” என்றார்கள். (தூக்கம் வருவதைப் பற்றி நினைக்கக்கூடாது எனும் அர்த்தத்தில் அப்படி கூறினார்கள்). நான் தலையை தூக்கிப் பார்த்தேன். சிமாக் (சித்திரை ராசி நட்சத்திரம்) தெரிந்தது. பின்னர் நபி ஸல் “இரவுத்தொழுகைகள் இரண்டு இரண்டு ரகாத்துகளாக தொழப்பட வேண்டும், வித்ர் ஒரு ரகாத், சுபுஹுக்கு முன் (தொழவேண்டும்)” என்றார்கள்.

அறி: அபு மிஜ்லஸ் (ரஹ்); இப்ன் மாஜா 1175

[شرح محمد فؤاد عبد الباقي]

 [ش (السماك) في الصحاح السما كان كوكبان. سماك الأعزل وهو من منازل القمر. وسماك الرامح وليس من المنازل] .

விரிவுரையாளர் (அப்துல் பாகி) சிமாக்கை பற்றி விளக்கும்போது “சிமாக் எனும் நட்சத்திரம் சந்திரனின் மன்சில்களில் ஒன்று என்கிறார்”. இப்போதும் சந்திரனின் 28 ராசிகளில் சிமாக்கும் ஒன்று. சிமாக் தமிழில் சித்திரை நட்சத்திரமாக அறியப்படுகிறது.

صحيح ابن حبان

6130 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي عَتَّابُ بْنُ حُنَيْنٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:  «لَوْ أَمْسَكَ اللَّهُ الْقَطْرَ عَنِ النَّاسِ سَبْعَ سِنِينَ، ثُمَّ أَرْسَلَهُ لَأَصْبَحَتْ طَائِفَةٌ مِنْهُمْ بِهَا كَافِرِينَ، يَقُولُونَ مُطِرْنَا بِنَوْءِ الْمِجْدَحِ »

قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: « الْمِجْدَحُ هُوَ الدَّبَرَانِ، وَهُوَ الْمَنْزِلُ الرَّابِعُ مِنْ مَنَازِلِ الْقَمَرِ »

இப்ன் ஹிப்பான், அஹ்மத், சுனனுல் குப்ரா நசாயி, பைஹகி என பல்வேறு புத்தகங்களில் இந்த செய்தி இடம்பெற்றுள்ளது. அறிஞர்கள் இந்த ஹதீஸை ஹசன் தரம் என்றுள்ளனர். இந்த சஹீஹா லயீபா என்று பார்க்கத் தேவையில்லை. இமாம் அபூ ஹாத்திம் அவர்கள் ”மிஜ்தஹ் என்பது அல் தபறான் எனும் நட்சத்திரம் ஆகும். அது  சந்திரனின் நான்காவது மன்சிலாகும்” என்று கூறுவதை கவனிக்கவே இதனை மேற்கோள் காட்டுகிறோம்.

دبر (لسان العرب)

والدَّبَرَانُ: نجم بين الثُّرَيَّا والجَوْزاءِ ويقال له التَّابِعُ والتُّوَيْبِعُ، وهو من منازل القمر،

: الدَّبَرانُ خمسة كواكب من الثَّوْرِ يقال إِنه سَنَامُه، و

தபறான் (ரோகினி): இது ஃதுறையா (கார்த்திகை) விண்மீனுக்கும்  ஜவ்ஸாஇ (மிதுனம்) விண்மீனுக்கும் இடைப்பட்ட விண்மீன் ஆகும். அத்தாபிஉ என்றும் துவைபிஉ என்றும் சொல்லப்படும். இது மனாசிலுல் கமரில் ஒன்றாகும். ஃதவ்றி (ரிஷபம்) விண்மீன் கூட்டத்தில் ஐந்தாவது விண்மீன் என்றும் சொல்லப்படும்.

سمك (الصّحّاح في اللغة)

والسِماكانِ: كوكبان نيِّران: السِماكُ الأعزلُ، وهو من منازل القمر، والسِماكُ الرامحُ وليس من المنازل.

ويقال إنَّهما رِجْلاَ الأسد.

சிமாகானி (இரு சிமாக்குகள்)

1. அஸ் சிமாகுல் அஃzலு. (சித்திரை ) இது மனாசிலுல் கமரில் ஒன்றாகும்.

2. அஸ் சிமாகுல் ர்ராமிஹு. இது மனாசிலுல் கமரில் ஒன்றல்ல.

இவ்விரண்டும் அல் அசத் (சிம்ம ராசி)யில் உள்ளவை என்றும் சொல்லப்படும்

(لسان العرب)

والبطين : نجم من نجوم السماء من منازل القمر بين الشرطين والثريا ،

அல் பு(த்)தைன்: இது வானில் உள்ள விண்மீன்களில் ஒன்றாகும். இது ஷரதைனி (அஸ்வினி) விண்மீனுக்கும் ஃதுறையா (ரோகிணி) விண்மீனுக்கும் இடைப்பட்ட விண்மீன் ஆகும். மனாசிலுல் கமரில் உள்ளதாகும்.

மனாஸில் பற்றி தெரிந்துகொண்டோம். நவ்ஆ பற்றியும் அன்வாஉ பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். சந்திரனின் ஓடுபாதையில் தெரியும் நட்சத்திரங்கள் மனாஸில் என்று அறியப்படும். அதே மனாஸில் உதிப்பதைக் கொண்டு காலநிலையை அறிவதை நவ்ஆ என்பார்கள். நவ்அ-வின் பன்மை அன்வா எனப்படும்.

3850 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «خِلاَلٌ مِنْ خِلاَلِ الجَاهِلِيَّةِ الطَّعْنُ فِي الأَنْسَابِ وَالنِّيَاحَةُ» وَنَسِيَ الثَّالِثَةَ، قَالَ سُفْيَانُ وَيَقُولُونَ إِنَّهَا الِاسْتِسْقَاءُ بِالأَنْوَاءِ

[تعليق مصطفى البغا]

3637 (3/1398) -[ ش (خلال) خصال وأعمال. (النياحة) رفع الصوت بالبكاء على الميت مع التكلم أو الفعل بما يدل على الجزع. (بالأنواء) جمع نوء وهو منزل القمر وكانوا يقولون مطرنا بنوء كذا وسقينا بنوء كذا]

புகாரி 3850. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: பிறர் வம்சத்தைக் குறை கூறுவதும் ஒப்பாரி வைத்து அழுவதும் அறியாமைக் காலத்துப் பண்புகளாகும். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத்(ரஹ்) மூன்றாவது பண்பொன்றை மறந்துவிட்டார்கள். "சந்திரனின் இன்னின்ன (அன்வா) ராசிகளால் தான் எங்களுக்கு மழை பெய்தது என்று சொல்லுவதே (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அந்த மூன்றாவது பண்பாகும்" என சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.

புகாரியில் வரும் இந்த ஹதீசுக்கு விரிவுரையாளர் முஸ்தபா அல் பிகா விளக்கம் கொடுக்கிறார்: அன்வா என்பது நவ்அ-வின் பன்மையாகும். நவ்அ என்பது சந்திரனின் மன்ஸில்களை ஒருங்கிணைத்து கூறப்படுவதாகும். அவர்கள் இன்ன இன்ன நவ்அக்களால் மழை பெய்தது என்று கூறினார்கள்.

(فتح الباري)

وحكى ابن قتيبة في " كتاب الأنواء " أن العرب كانت في ذلك على مذهبين على نحو ما ذكر الشافعي ، قال : ومعنى النوء سقوط نجم في المغرب من النجوم الثمانية والعشرين التي هي منازل القمر ، قال : وهو مأخوذ من ناء إذا سقط ، وقال آخرون : بل النوء طلوع نجم منها ، وهو مأخوذ من ناء إذا نهض ، ولا تخالف بين القولين في الوقت لأن كل نجم منها إذا طلع في المشرق وقع حال طلوعه آخر في المغرب لا يزال ذلك مستمرا إلى أن تنتهي الثمانية والعشرون بانتهاء السنة ، فإن لكل واحد منها ثلاثة عشر يوما تقريبا

ஷாஃபிஈ (ரஹ்) கூறினார்கள்: நவ்அ என்பதன் பொருள் = மநாசிலுல் கமர்-ஆக இருக்கும் 28 நட்சத்திரங்களில் ஒன்று மேற்கில் மறைவதாகும். அது முதலில் மறைவதாகும். சிலர் கூறினர்: நவ்அ என்பது (மநாசிலுல் கமர் ஆக இருக்கும் 28 நட்சத்திரங்களில்) ஒன்று (கிழக்கில்) உதிப்பதாகும். அது முதலில் உதிப்பதாகும். இவ்விரு கூற்றுக்களும் காலத்தில் முரண்படுவதில்லை, ஏனெனில் கிழக்கில் உதிக்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் மேற்கில் மறைவது தொடர்ந்து நடந்து *28 நட்சத்திரங்களும் ஓராண்டில் முடிந்துவிடும்.* ஒவ்வொரு நவ்அவும் 13 நாட்களைக் கொண்டது

- ஃபத்ஹுல் பாரி

(شرح السنة للبغوي)

قَوْلُهُ : " فِي أَثَرِ سَمَاءٍ " أَيْ فِي أَثَرِ مَطَرٍ ، وَالْعَرَبُ تُسَمِّي الْمَطَرَ سَمَاءً ، لأَنَّهُ يَنْزِلُ مِنَ السَّمَاءِ.

وَالنَّوْءُ لِلْكَوَاكِبِ الثَّمَانِيَةِ وَالْعِشْرِينَ الَّتِي هِيَ مَنَازِلُ الْقَمَرِ ، يَسْقُطُ مِنْهَا فِي كُلِّ ثَلاثَ عَشْرَةَ لَيْلَةً نَجْمٌ مِنْهَا فِي الْمَغْرِبِ مَعَ طُلُوعِ الْفَجْرِ ، وَيَطْلُعُ آخَرُ يُقَابِلُهُ مِنَ الْمَشْرِقِ مِنْ سَاعَتِهِ ، فَيَكُونُ انْقِضَاءُ السَّنَةِ مَعَ انْقِضَاءِ هَذِهِ الثَّمَانِيَةِ وَالْعِشْرِينَ.

وَأَصْلُ النَّوْءِ ، هُوَ النُّهُوضُ ، سُمِّيَ نَوْءًا ، لأَنَّهُ إِذَا سَقَطَ السَّاقِطُ مِنْهَا بِالْمَغْرِبِ نَاءَ الطَّالِعُ بِالْمَشْرِقِ يَنُوءُ نَوْءًا ، وَذَلِكَ النُّهُوضُ ، وَقَدْ يَكُونُ النَّوْءُ لِلسُّقُوطِ.

وَكَانَتِ الْعَرَبُ تَقُولُ فِي الْجَاهِلِيَّةِ : إِذَا سَقَطَ مِنْهَا نَجْمٌ ، وَطَلَعَ آخَرُ ، لا بُدَّ مِنْ أَنْ يَكُونَ عِنْدَ ذَلِكَ مَطَرٌ ، فَيَنْسُبُونَ كُلَّ غَيْثٍ يَكُونُ عِنْدَ ذَلِكَ إِلَى النَّجْمِ ، فَيَقُولُونَ : مُطِرْنَا بِنَوْءِ كَذَا.

وَهَذَا التَّغْلِيظُ فِيمَنْ يَرَى ذَلِكَ مِنْ فِعْلِ النَّجْمِ ، فَأَمَّا مَنْ قَالَ : مُطِرْنَا بِنَوْءِ كَذَا ، وَأَرَادَ : سَقَانَا اللَّهُ تَعَالَى بِفَضْلِهِ فِي هَذَا الْوَقْتِ ، فَذَلِكَ جَائِزٌ.

وَرُوِيَ عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ لا يَتْرُكُونَهُنَّ : الْفَخْرُ فِي الأَحْسَابِ ، وَالطَّعْنُ فِي الأَنْسَابِ ، وَالاسْتِسْقَاءُ بِالنُّجُومِ ، وَالنِّيَاحَةُ "6

நவ்அ என்பது 28 நட்சத்திரங்களில் ஒன்றாகும். அந்த 28 நட்சத்திரங்களும் மனாசிலுல் கமர் ஆகும். அவற்றுள் ஒரு நட்சத்திரம் ஒவ்வொரு 13 இரவுகளிலும் மேற்கில் விழுந்து கிழக்கில் உதிப்பதாகும். *வருட முடிவில் 28 நட்சத்திரங்களும் முடிந்திருக்கும்.*

அறியாமை கால அரபுகள் ஒரு நட்சத்திரம் மேற்கில் விழுந்து இன்னொரு நட்சத்திரம் கிழக்கில் உதிப்பதால் மழை வரும் என்றார்கள். எனவே மழையை அந்த நட்சத்திரத்துடன் தொடர்பு படுத்தினார்கள். இந்த நட்சத்திரம்தான் மழையை தந்தது என்றார்கள்.

முஸ்லிம் 1700. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது. ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள். இதை அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஷரஹ் சுன்னாஹ்

(معرفة السنن والآثار للبيهقي)

قَالَ الشَّافِعِيُّ وَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّهُ قَالَ يَوْمَ الْجُمُعَةِ وَهُوَ عَلَى الْمِنْبَرِ : " كَمْ بَقِيَ مِنْ نَوْءِ الثُّرَيَّا ؟ فَقَامَ الْعَبَّاسُ ، فَقَالَ : لَمْ يَبْقَ مِنْهُ شيء إِلَّا الْعُوَاءُ ، فَدَعَا وَدَعَا النَّاسُ حَتَّى نَزَلَ عَنِ الْمِنْبَرِ ، فَمُطِرَ مَطَرًا أَحْيَا النَّاسُ مِنْهُ " . قَالَ الشَّافِعِيُّ : وَقَوْلُ عُمَرَ هَذَا يُبَيِّنُ مَا وَصَفْتُ لِأَنَّهُ إِنَّمَا أَرَادَ كَمْ بَقِيَ مِنْ وَقْتِ الثُّرَيَّا ، لِمَعْرِفَتِهِمْ بِأَنَّ اللَّهَ تَعَالَى قَدَّرَ الْأَمْطَارَ فِي أَوْقَاتٍ فِيمَا جَرَّبُوا كَمَا عَلِمُوا أَنَّهُ قَدَّرَ الْحَرَّ وَالْبَرْدِ فِيمَا جَرَّبُوا فِي أَوْقَاتٍ . قَالَ : وَبَلَغَنِي أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَوْجَفَ بِشَيْخٍ مِنْ بَنِي تَمِيمٍ غَدَا مُتَّكِئًا عَلَى عُكَّازَهِ وَقَدْ مُطِرَ النَّاسُ ، فَقَالَ : أَجَادَ مَا أَقْرَى الْمِجْدَحُ الْبَارِحَةَ ، فَأَنْكَرَ عُمَرُ قَوْلَهُ : أَجَادَ مَا أَقْرَى الْمِجْدَحُ ، لِإِضَافَتِهِ الْمَطَرَ إِلَى الْمِجْدَحِ

ஷாஃபிஈ (ரஹ்) கூறினார்கள்: வெள்ளிகிழமை ஜுமுஆ மின்பரில் நின்று கொண்டு “ஸுரையாவில் எத்தனை மீதமுள்ளது” என உமர் (ரலி) கேட்டார்கள். “அவ்வாஉ மட்டுமே மீதமுள்ளது” என அப்பாஸ் (ரலி) பதிலளித்தார்கள். பின்னர் (உமர் ரலி) துஆ செய்தார்கள். மக்களும் துஆ செய்தார்கள். மின்பரில் இருந்து இறங்கும் வரை துஆ செய்தார்கள். மழை பொழிந்தது, மக்கள் மகிழும் வகையில் மழை பெய்தது.

ஷாஃபிஈ (ரஹ்) கூறினார்கள்: உமர் ரலியின் மேற்கண்ட கூற்றுகள் முன்னரே நான் கூறியவற்றிற்கு விளக்கமாக உள்ளது. அல்லாஹ் தஆலா மழையின் நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். மேலும் அவர்கள் (உமர் ரலி) கோடை காலம் வருவதையும் குளிர் காலம் வருவதையும் அனுபவ ரீதியாக நட்சத்திரங்களை கொண்டு அறிந்திருந்தார்கள். (எனவே தான் ஃதுறையா பற்றி விசாரித்தார்கள்).

ஷாஃபிஈ (ரஹ்) கூறினார்கள்: பனீ தமீம் குலத்தை சார்ந்த ஒரு முதியவரை உமர் (ரலி) சந்தித்தார்கள். அவர் கைத்தடியில் சாய்ந்தவாறு இருந்தார். “மழை பெய்தபோது நேற்று உதித்த மிஜ்தஹ் நட்சத்திரம்தான் மழையை பொழிவித்தது. நட்சத்திர கணிதம் உண்மையாகிவிட்டது.” என்று கூறினார்  அவரின் சொல்லை உமர் ரலி மறுத்தார்கள். எந்த நேரத்தில் மழை பொழிய வேண்டும் என அல்லாஹ்தான் நிர்ணயிக்கிறான் என்றார்கள்.

பைஹகியின் மஆரிஃபதுல் சுனன் வல் ஆஃதார்

(جامع البيان عن تأويل آي القرآن)

(34289)- [24 : 261] حَدَّثَنِي الْحَسَنُ بْنُ قَزَعَةَ، قَالَ: ثنا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ في قوله: (وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ).قَالَ: ذَاتِ الرَّمْلِ وَالْمَاءِ وَأَوْلَى الأَقْوَالِ فِي ذَلِكَ بالصواب أن يقال: مَعْنَى ذَلِكَ: وَالسَّمَاءِ ذَاتِ مَنَازِلِ الشَّمْسِ وَالْقَمَرِ ؛ وَذَلِكَ أَنَّ الْبُرُوجَ جَمْعُ بُرْجٍ، وَهِيَ مَنَازِلُ تُتَّخَذُ عَالِيَةً عَنِ الأَرْضِ مُرْتَفِعَةً، وَمِنْ ذَلِكَ قَوْلُ اللَّهِ: ( وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ) : وهي مَنَازِلُ مُرْتَفِعَةٌ عَالِيَةٌ فِي السَّمَاءِ، وَهِيَ اثْنَا عَشَرَ بُرْجًا، فَمَسِيرُ الْقَمَرِ فِي كُلِّ بُرْجٍ مِنْهَا يَوْمَانِ وَثُلُثٌ، فَذَلِكَ ثَمَانِيَةٌ وَعِشْرُونَ مَنْزِلا، ثُمَّ يَسْتَسِرُّ لَيْلَتَيْنِ، وَمَسِيرُ الشَّمْسِ فِي كُلِّ بُرْجٍ مِنْهَا شَهْرٌ.

வானத்தில் சூரியனுக்கும் நிலவுக்கும் மன்சில்கள் உள்ளன. சூரியனின் மன்சில்கள் புரூஜ் என்று அழைக்கப்படுகின்றன. புர்ஜ் என்பதன் பன்மை புரூஜ் ஆகும். 12 புரூஜ் உள்ளன. ஒவ்வொரு புர்ஜிலும் இரண்டு நாட்களும் ஒரு நாளின் மூன்றில் ஒரு பகுதியும் நிலவு சஞ்சரிக்கிறது. நிலவுக்கு 28 மன்சில்கள் உள்ளன. சூரியனின் பாதை ஒரு புர்ஜில் ஒரு மாதம் நீடிக்கும்.

தஃப்ஸீர் தபரீ.

(الجامع-لأحكام-القرآن)

فكيف قال : " قدرناه منازل " ففي هذا جوابان : أحدهما قدرناه إذا منازل ، مثل : واسأل القرية . والتقدير الآخر : قدرنا له منازل ، ثم حذفت اللام ، وكان حذفها حسنا لتعدي الفعل إلى مفعولين ، مثل واختار موسى قومه سبعين رجلا . والمنازل ثمانية وعشرون منزلا ، ينزل القمر كل ليلة منها بمنزل ، وهي : الشرطان ، البطين ، الثريا ، الدبران ، الهقعة ، الهنعة ، الذراع . النثرة ، الطرف ، الجبهة ، الخراتان ، الصرفة ، العواء ، السماك ، الغفر ، الزبانيان ، الإكليل ، القلب ، الشولة ، النعائم ، البلدة ، سعد الذابح ، سعد بلع ، سعد السعود ، سعد الأخبية ، الفرغ المقدم ، الفرغ المؤجر ، بطن الحوت . فإذا صار القمر في آخرها عاد إلى أولها ، فيقطع الفلك في ثمان وعشرين ليلة ، ثم يستسر ثم يطلع هلالا ، فيعود في قطع الفلك على المنازل ، وهي منقسمة على البروج ، لكل برج منزلان وثلث . فللحمل الشرطان والبطين وثلث الثريا ، وللثور ثلثا الثريا والدبران وثلثا الهقعة ، ثم كذلك إلى سائرها .

மனாசிலில் 28 மன்சில்கள் உள்ளன. ஒவ்வொரு மன்சிலிலும் ஓர் இரவில் நிலவு தங்கும். அவை அஸ்வினி, பரணி, கார்த்திகை , ரோகினி , மிருகசீர்ஷம், ஆதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், ஹத்சம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், அபிஜித், ஓணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகும். இறுதி நட்சத்திரத்தை கடந்த பிறகு மீண்டும் முதல் நட்சத்திரத்திற்கு மீளும். இவை வானத்தை 28 ஆக பிரிக்கின்றன. 28 மன்ஸில்களை புர்ஜாக பகுத்தால் ஒரு புர்ஜில் 2  மன்சில்கள் இருக்கும். இவ்வாறாக மேஷ ராசியில் அஸ்வினி பரணி மற்றும் கார்த்திகையில் மூன்றில் ஒன்று நட்சத்திரங்களும்,  ரிஷப ராசியில் கார்த்திகையில் மூன்றில் ஒன்று நட்சத்திரங்களும், ரோகினி மற்றும் மிருகஷீஷா நட்சத்திரங்களும் இருக்கும். இவ்வாறாக 12 ராசிகளிலும் 28 நட்சத்திரங்கள் இருக்கும்.

தஃப்ஸீர் குர்துபி.

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ عَدْوَى وَلاَ هَامَةَ وَلاَ نَوْءَ وَلاَ صَفَرَ"‏

صحيح مسلم 2220(4)

முஸ்லிம் 4469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்றுநோய் கிடையாது; ஆந்தை பற்றிய (மூட)நம்பிக்கையும் (உண்மை) இல்லை;  நவ்அவால் மழை பொழிகிறது என்பதும் (உண்மை) இல்லை; ஸஃபர் (தொற்று நோய்) என்பதும் கிடையாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

எனும் ஹதீஸை எடுத்துக்கொண்டு நவ்அ ஹராம் என்று விளங்கக்கூடாது. மழைக்காலத்தை ஒரு மன்சில் அல்லது நவ்அ உதிப்பதன் மூலம் அறிந்துகொள்ள இயலும். ஆனால் அன்றைய அரபுகள் அந்த நவ்அ அல்லது நட்சத்திரம்தான் மழையைக் கொண்டுவருவதாக நம்பினர். அதனை மட்டுமே நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள். இதே ஹதீஸில் தொற்றுநோய் இல்லை என்று நபி ஸல் அவர்கள் சொல்கிறார்கள். அதனால் தொற்றுநோய் இல்லை என்று நாம் விளங்கமட்டோம். தொற்றுநோய் இருக்கிறது ஆனால் அது ஒருவருக்கு தொற்றிகொள்வதும் தொற்றாமல் போவதும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நாம் நம்புகிறோம். இதே போல நவ்அவையும் புரிந்துகொள்ள வேண்டும்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: " مَا اقْتَبَسَ رَجُلٌ عِلْمًا مِنَ النُّجُومِ إِلَّا اقْتَبَسَ بِهَا شُعْبَةً مِنَ السِّحْرِ مَا زَادَ زَادَ "

நட்சத்திர பலன்களை கற்றுக்கொள்பவர் சூனியத்தின் ஒரு பிரிவை கற்றுக்கொள்கிறார். எந்த அளவுக்கு அதிகமாக (நட்சத்திரத்தை கற்கிராரோ) அதே அளவுக்கு அதிகமாக (சூனியத்தைக் கற்கிறார்).

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்; நூல்: அஹ்மத் 2001, அபூ தாவூத், இப்னு மாஜா.

எனும் ஹதீசையும் தவறாக விளங்கிக்கொள்ளக் கூடாது. இங்கே நட்சத்திரக் கலை என்று சொல்லப்படுவது சோதிடத்தையாகும். வானியல், சோதிடம் இரண்டையுமே நுஜுமிய்யா என்று அரபியில் சொல்வார்கள். ஜோதிடத்தை கற்பது கூடாது, வானியலை கற்பதை அல்லாஹ் குர்ஆனில் ஆர்வமூட்டியுள்ளான்.

தஃப்சீர்களிலும் அகராதிகளிலும் இடம்பெறும் சூரிய மற்றும் சந்திர மன்சில்களின் பெயர்கள்

சூரியனின் 12 புர்ஜ்கள் (சூரிய மன்zில்கள்)

விஞ்ஞானப்பெயர்

அரபுப் பெயர்

தமிழ்ப் பெயர்

Aquarius

الدلو

கும்பம்

Aries

الحمل

மேஷம்

Cancer

الشرطان

கடகம்

Capricornus

الجدي

மகரம்

Gemini

التوأمان

மிதுனம்

Leo

الأسد

சிம்மம்

Libra

الميزان

துலாம்

Pisces

الحوت

மீனம்

Sagittarius

الرامي

தனுசு

Scorpius

العقرب

விருச்சிகம்

Taurus

الثور

ரிஷபம்

Virgo

العذراء

கன்னி

சந்திரனின் 28 மன்zில்கள்

அரபுப் பெயர்

தமிழ்ப் பெயர்

விஞ்ஞானப்பெயர்

الشرطان (or) النطح

அஸ்வினி

β γ Aries
α Aries / β Tauri

البطين

பரணி

ε δ ρ Aries

الثريا

கார்த்திகை

M45 (Pleiades)

الدبران

ரோகினி

α Taurus  (Aldebaran)

الهقعة

மிருகசீர்ஷம்

λ φ1 φ2 Orion

الهنعة

ஆதிரை

γ ξ Gemini

الذراع

புனர்பூசம்

α β Gemini (Castor & Pollux)

النثرة

பூசம்

γ δ ε Cancer (M44: Praesepe)

الطرف

ஆயில்யம்

κ Cancer, λ Leo

الجبهة

மகம்

ζ γ η α Leo (Regulus & Algieba)

الزبرة

பூரம்

δ θ Leo

الصرفة

உத்தரம்

β Leo (Denebola)

العواء

ஹத்சம்

β η γ δ ε Virgo

السماك

சித்திரை

α Virgo (Spica)

الغفر

ஸ்வாதி

ι κ λ Virgo

الزبانان

விசாகம்

α β Libra

الإكليل

அனுஷம்

β δ π Scorpion

القلب

கேட்டை

α Scorpion (Antares)

الشولة

மூலம்

λ υ Scorpion (Schaula)

النعائم الواردة (or) النعائم الصادرة

பூராடம்

δ ε η Sagittarius 

உத்திராடம்

البلدة

σ φ τ ζ γ Sagittarius

سعد الذابح

அபிஜித்

Coalsack in Sagittarius

ஓணம்

سعد بلع

α β Capricon

سعد السعود

அவிட்டம்

μ ε Aqarius

سعد الأخبية

சதயம்

β ξ Aqarius

الفرع المقدم

பூரட்டாதி

γ π ζ η Aqarius

الفرع المؤجر

உத்திரட்டாதி

α β Pegasus

بطن الحوت

ரேவதி

γ Pegasus, α Andromeda

பிறைவாசி.காம்