Monday 27 June 2016

விதியை மீறிய சந்திரன்

கமிட்டி விதித்த விதியை மீறிய சந்திரன்
பிறை விளக்கக் சாட்சிகளோடு பிறைகளை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதையும் விஞ்ஞானி அலிமனிக்பான் அவர்கள் உரைநிகழத்தினார். ஒரு மாதத்தின் முதல்நாளை நாம் சரியாக கணக்கிட வேண்டுமென்றால் முந்திய மாதத்தின் பிறையின் படித்தரங்களில் உள்ள தேய்பிறைகளையாவது கண்டிப்பாக பார்த்து, கணக்கிட்டு வந்திருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்திய அலிமனிக்ஃபான் அவர்கள் தேய்பிறைகளை கணக்கிடாமல் விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
நீங்கள் பார்க்கின்ற பிறை எந்த நாளை காட்டுகிறது என்பதை தோராயமாக அறிந்து கொள்ளும் வழிமுறையையாவது தெரிந்திருக்க வேண்டும். அதாவது மாதம் என்பது 29 நாட்கள் அல்லது 30 நாட்களைக் கொண்டது. ஒரு மாதம் எத்தனை நாட்கள் கொண்டது என்பதை முன்கூட்டியே நாம் தோராயமாக அறிய வேண்டுமானால், மாலை சூரியன் முழுமையாக மேற்கு நோக்கி மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90 டிகிரியில்) நிலைபெற்றிருந்தால் அந்த பிறை 07 (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 08ஆவது நாளைக் (மாதம் 30 ஆக இருந்தால்) காட்டுகிறது. 
மாலை சூரியன் முழுமையாக மேற்கில் மறையும்போது, பிறை முழு நிலவு அளவில் கிழக்கு திசையில் உதித்துக் கொண்டிருந்தால், அந்த பிறை பவுர்ணமி நாளை தெரிவிக்கிறது. ஒரு மாதத்தில் பவுர்ணமி பெரும்பாலும் 14ஆம் நாளில் (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 15ஆம் நாளில் வரும் (மாதம் 30 ஆக இருந்தால்). அந்நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனத்தையும் கிழக்கில் சந்திரன் உதிப்பதையும் காணலாம். 
அதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில், நாம் நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருந்தால், அந்தப் பிறை 21 (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 22 (மாதம் 30 ஆக இருந்தால்) தேதியை காட்டும் பிறையாகும். இதுதான் பொது விதி. 
இதல்லாமல் சில வருடங்களில் சில மாதத்தில் (Rare occurrence) பிறை 06 இல் முதல் பாதியும் 13இல் பவுர்ணமியும், பிறை 23இல் அரை வட்டும் வரும். இதையும் கணக்கீட்டின் படி முற்கூட்டியே அறிய முடியும்..
- இவை 2013 காயல்பட்டினம் பிறைக் கருத்தரங்கில் பெரியார் அலி மானிக் பான் பேசியவை.
பார்க்க
இதே தகவல்கள் ஹிஜ்ராவின் இணையதளத்திலிருந்து
மேலே இருப்பது ஹிஜ்ராக்கள் சந்திரனுக்கு விதித்த பொது விதி. இந்த விதிப்படிதான் சந்திரன் இயங்குவதாகவும், அதைதான் அவர்கள் காலண்டர் காட்டுவதாகவும் பரப்புரை செய்கின்றனர். இந்த விதியிலுள்ள படித்தரங்கள்தான் அவர்களின் காலண்டரில் இருப்பதாக சொல்கின்றனர். அவர்களின் விஞ்ஞான காலண்டர் அல்லாஹ் 2:189 இல் சொல்லும் படித்தரங்களுடன் ஒத்துப்போகிறதா என்பதை பரிசோதிக்கும் முறைதான் இவர்கள் மேலே சொல்லியிருப்பது. உண்மையாகவே இவர்களின் காலண்டர் இவர்கள் சொல்லும் கொள்கையுடன் ஒத்துப்போகிறதா என்பதைத்தான் நாம் இங்கே ஆய்வு செய்யப்போகின்றோம்.
பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே நிலைபெற்றிருந்தால் அந்த பிறை 07 (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 08ஆவது நாளைக் (மாதம் 30 ஆக இருந்தால்) காட்டுகிறது. இந்த கூற்று உண்மையெனில் இவர்கள் காலண்டரில் முதல் அரைப்பிறை 7ம் நாளில் வந்து மாதம் 29இல் முடிந்தும், அது 8ம் நாளில் வந்து மாதம் 30இலும் முடிந்தால் இவர்கள் கொள்கைக்கு இவர்கள் காலண்டர் ஒத்துப்போகிறது. மாறாக அரைப்பிறை 8 இல் வந்து மாதம் 29 ஆக முடியக்கூடாது. மேலும் அரைப்பிறை 7 இல் வந்து மாதம் 30 ஆக முடியக்கூடாது. என்ன நடக்கிறது பாருங்கள்.
பின்வரும் மாதங்களில் முதல் அரைப்பிறை 7இல் வந்து மாதம் 30 இல் முடிகிறது
ஹிஜ்றாக்களின் காலண்டரில்
மாதம்/வருடம் அரபி பெயர்கள்
அமாவாசை
முதல் குவாட்டர்
முதல் குவாட்டர் வரும் நாள்
மாத நாட்களின் எண்ணிக்கை
صفر, 1428
17-2-2007
24-2-2007
7
30
جمادى الأولى, 1428
16-5-2007
23-5-2007
7
30
محرم, 1429
8-1-2008
15-1-2008
7
30
ربيع الأول, 1429
7-3-2008
14-3-2008
7
30
جمادى الثانية, 1429
3-6-2008
10-6-2008
7
30
صفر, 1430
26-1-2009
2-2-2009
7
30
ربيع الثاني, 1430
26-3-2009
2-4-2009
7
30
رجب, 1430
22-6-2009
29-6-2009
7
30
جمادى الأولى, 1431
14-4-2010
21-4-2010
7
30
شعبان, 1431
11-7-2010
18-7-2010
7
30
ذو القعدة, 1431
7-10-2010
14-10-2010
7
30
رمضان, 1432
30-7-2011
6-8-2011
7
30
ذو الحجة, 1432
26-10-2011
2-11-2011
7
30
شوال, 1433
17-8-2012
24-8-2012
7
30
محرم, 1434
13-11-2012
20-11-2012
7
30
ربيع الأول, 1434
11-1-2013
18-1-2013
7
30
ذو القعدة, 1434
5-9-2013
12-9-2013
7
30
محرم, 1435
3-11-2013
10-11-2013
7
30
ربيع الثاني, 1435
30-1-2014
6-2-2014
7
30
صفر, 1436
22-11-2014
29-11-2014
7
30
جمادى الأولى, 1436
18-2-2015
25-2-2015
7
30
رجب, 1436
18-4-2015
25-4-2015
7
30
ربيع الأول, 1437
11-12-2015
18-12-2015
7
30
جمادى الأولى, 1437
8-2-2016
15-2-2016
7
30
شعبان, 1437
6-5-2016
13-5-2016
7
30

பின்வரும் மாதங்களில் முதல் அரைப்பிறை 8இல் வந்து மாதம் 29 இல் முடிகிறது
ஹிஜ்றாக்களின் காலண்டரில்
மாதம்/வருடம் அரபி பெயர்கள்
அமாவாசை
முதல் குவாட்டர்
முதல் குவாட்டர் வரும் நாள்
மாத நாட்களின் எண்ணிக்கை
رجب, 1428
14-7-2007
22-7-2007
8
29
شوال, 1428
11-10-2007
19-10-2007
8
29
شوال, 1429
29-9-2008
7-10-2008
8
29
ذو القعدة, 1430
18-10-2009
26-10-2009
8
29
ربيع الأول, 1431
14-2-2010
22-2-2010
8
29
ربيع الأول, 1432
3-2-2011
11-2-2011
8
29
ربيع الأول, 1433
23-1-2012
31-1-2012
8
29
جمادى الثانية, 1433
21-4-2012
29-4-2012
8
29
رجب, 1434
10-5-2013
18-5-2013
8
29
رمضان, 1434
8-7-2013
16-7-2013
8
29
رجب, 1435
29-4-2014
7-5-2014
8
29
رمضان, 1435
27-6-2014
5-7-2014
8
29
شوال, 1436
16-7-2015
24-7-2015
8
29
شوال, 1437
4-7-2016
12-7-2016
8
29

இவர்களின் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறது இவர்களின் காலண்டர். ஒவ்வொரு நாளின் பிறையின் வடிவங்களும் தேதியைக் காட்டும் என்பதும், அந்த வடிவங்களை வைத்து மாதத்தை முன்கூட்டியே அறியலாம் என்பதும் இவர்கள் பரப்பும் வடிகட்டிய பொய்.
பட்டியலின் நீளத்தினைக் கருத்தில் கொண்டும், வாசகர்கள் தகவல்களை சரிபார்க்க சுலபாக இருப்பதற்காகவும் இவர்கள் வெளியிட்ட 2007 முதல் 2016 வரையுள்ள காலண்டர்களை மட்டுமே இங்கே பட்டியலிட்டுள்ளோம். இவர்கள் வெளியிட்ட 2007 முதல் 2016 காலண்டர்களை கீழே லிங்குகளிளிருந்து டவுன்லோடு செய்து நீங்கள் இந்த தகவல்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
சரி, ஏழில் முப்பதும் எட்டில் இருபத்தொன்பதும் குழப்பம் மட்டும்தான் இவர்களின் காலண்டரில் உள்ளதா? பாருங்கள் - ஒவ்வொரு நாளின் பிறையின் வடிவங்களும் தேதியைக் காட்டும் என்பார்கள். ஆனால் முதல் அரைப்பிறை எனும் வடிவம் இவர்களின் காலண்டரில் 6, 7, 8, 9 என்று நான்கு தேதிகளைக் காட்டுகிறது. 6 இல் முதல் அரைப்பிறை வருவது அரிதாம். அது அரிதா என்று கீழேப்பாருங்கள். 7க்கும் 8க்கும் மேலே உதாரணகளைக் காட்டிவிட்டோம். 6ம் 9ம் கீழே
ஹிஜ்றாக்களின் காலண்டரில்
மாதம்/வருடம் அரபி பெயர்கள்
அமாவாசை
முதல் குவாட்டர்
முதல் குவாட்டர் வரும் நாள்
மாத நாட்களின் எண்ணிக்கை
محرم, 1428
19-1-2007
25-1-2007
6
29
ربيع الأول, 1428
19-3-2007
25-3-2007
6
29
ربيع الثاني, 1429
6-4-2008
12-4-2008
6
29
جمادى الأولى, 1430
25-4-2009
1-5-2009
6
29
شعبان, 1430
22-7-2009
28-7-2009
6
29
جمادى الثانية, 1431
14-5-2010
20-5-2010
6
29
رمضان, 1431
10-8-2010
16-8-2010
6
29
شوال, 1432
29-8-2011
4-9-2011
6
29
ذو القعدة, 1433
16-9-2012
22-9-2012
6
29
ذو الحجة, 1434
5-10-2013
11-10-2013
6
29
صفر, 1435
3-12-2013
9-12-2013
6
29
ربيع الأول, 1436
22-12-2014
28-12-2014
6
29
ربيع الثاني, 1437
10-1-2016
16-1-2016
6
29
جمادى الثانية, 1437
9-3-2016
15-3-2016
6
29
ذو القعدة, 1429
28-10-2008
6-11-2008
9
30
ربيع الثاني, 1433
21-2-2012
1-3-2012
9
30
شوال, 1435
26-7-2014
4-8-2014
9
30

ஒரு வடிவத்துக்கு நான்கு தேதிகள்
அடுத்து ஒரு மாதத்தில் பவுர்ணமி பெரும்பாலும் 14ஆம் நாளில் (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 15ஆம் நாளில் வரும் (மாதம் 30 ஆக இருந்தால்). இதை அலசுவோம். இந்தக் கூற்றின்படி பவுர்ணமி 15இல் வந்தால் அம்மாதம் 29ஆக இருக்கக் கூடாது. பவுர்ணமி 14இல் வந்தால் அம்மாதம் 3௦ஆக இருக்கக் கூடாது. என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
பின்வரும் மாதங்களில் பவுர்ணமி 14இல் வந்து மாதம் 30 இல் முடிகிறது
ஹிஜ்றாக்களின் காலண்டரில்
மாதம்/வருடம் அரபி பெயர்கள்
அமாவாசை
ஃபுள்
ஃபுள் வரும் நாள்
மாத நாட்களின் எண்ணிக்கை
صفر, 1428
17-2-2007
3-3-2007
14
30
محرم, 1429
8-1-2008
22-1-2008
14
30
ربيع الأول, 1429
7-3-2008
21-3-2008
14
30
صفر, 1430
26-1-2009
9-2-2009
14
30
ربيع الثاني, 1430
26-3-2009
9-4-2009
14
30
جمادى الأولى, 1431
14-4-2010
28-4-2010
14
30
رجب, 1432
1-6-2011
15-6-2011
14
30
رمضان, 1432
30-7-2011
13-8-2011
14
30
شعبان, 1433
19-6-2012
3-7-2012
14
30
شوال, 1433
17-8-2012
31-8-2012
14
30
ذو القعدة, 1434
5-9-2013
19-9-2013
14
30
محرم, 1435
3-11-2013
17-11-2013
14
30
محرم, 1436
23-10-2014
6-11-2014
14
30
صفر, 1436
22-11-2014
6-12-2014
14
30
صفر, 1437
11-11-2015
25-11-2015
14
30
ربيع الأول, 1437
11-12-2015
25-12-2015
14
30
جمادى الأولى, 1437
8-2-2016
22-2-2016
14
30

பின்வரும் மாதங்களில் பவுர்ணமி 15இல் வந்து மாதம் 29 இல் முடிகிறது
ஹிஜ்றாக்களின் காலண்டரில்
மாதம்/வருடம் அரபி பெயர்கள்
அமாவாசை
ஃபுள்
ஃபுள் வரும் நாள்
மாத நாட்களின் எண்ணிக்கை
ربيع الثاني, 1428
17-4-2007
2-5-2007
15
29
جمادى الثانية, 1428
15-6-2007
30-6-2007
15
29
شوال, 1428
11-10-2007
26-10-2007
15
29
جمادى الأولى, 1429
5-5-2008
20-5-2008
15
29
رجب, 1429
3-7-2008
18-7-2008
15
29
شعبان, 1429
1-8-2008
16-8-2008
15
29
شوال, 1429
29-9-2008
14-10-2008
15
29
شعبان, 1430
22-7-2009
6-8-2009
15
29
رمضان, 1430
20-8-2009
4-9-2009
15
29
ذو القعدة, 1430
18-10-2009
2-11-2009
15
29
شوال, 1431
8-9-2010
23-9-2010
15
29
ذو الحجة, 1431
6-11-2010
21-11-2010
15
29
ربيع الأول, 1432
3-2-2011
18-2-2011
15
29
ذو القعدة, 1432
27-9-2011
12-10-2011
15
29
محرم, 1433
25-11-2011
10-12-2011
15
29
ربيع الأول, 1433
23-1-2012
7-2-2012
15
29
جمادى الثانية, 1433
21-4-2012
6-5-2012
15
29
صفر, 1434
13-12-2012
28-12-2012
15
29
ربيع الثاني, 1434
10-2-2013
25-2-2013
15
29
رجب, 1434
10-5-2013
25-5-2013
15
29
ربيع الأول, 1435
1-1-2014
16-1-2014
15
29
جمادى الأولى, 1435
1-3-2014
16-3-2014
15
29
رجب, 1435
29-4-2014
14-5-2014
15
29
رمضان, 1435
27-6-2014
12-7-2014
15
29
جمادى الثانية, 1436
20-3-2015
4-4-2015
15
29
شعبان, 1436
18-5-2015
2-6-2015
15
29
شوال, 1436
16-7-2015
31-7-2015
15
29
رجب, 1437
7-4-2016
22-4-2016
15
29
رمضان, 1437
5-6-2016
20-6-2016
15
29
شوال, 1437
4-7-2016
19-7-2016
15
29

பவுர்ணமி கூட இரண்டு தேதிகளைக் காட்டி ஹிஜ்ராக்களை குழப்புவதில்லை. அதுவும் 4 தேதிகளில் வந்து ஹிஜ்ராக்களை சோதனையில் ஆழ்த்திவிடுகிறது.
ஹிஜ்றாக்களின் காலண்டரில்
மாதம்/வருடம் அரபி பெயர்கள்
அமாவாசை
ஃபுள்
ஃபுள் வரும் நாள்
மாத நாட்களின் எண்ணிக்கை
جمادى الثانية, 1431
14-5-2010
27-5-2010
13
29
ذو الحجة, 1434
5-10-2013
18-10-2013
13
29
جمادى الأولى, 1428
16-5-2007
1-6-2007
16
30
رجب, 1428
14-7-2007
30-7-2007
16
29
شعبان, 1428
12-8-2007
28-8-2007
16
30
رمضان, 1429
30-8-2008
15-9-2008
16
30
ذو القعدة, 1429
28-10-2008
13-11-2008
16
30
شوال, 1430
18-9-2009
4-10-2009
16
30
ذو الحجة, 1430
16-11-2009
2-12-2009
16
30
ذو القعدة, 1431
7-10-2010
23-10-2010
16
30
محرم, 1432
5-12-2010
21-12-2010
16
30
صفر, 1433
24-12-2011
9-1-2012
16
30
ربيع الثاني, 1433
21-2-2012
8-3-2012
16
30
ربيع الأول, 1434
11-1-2013
27-1-2013
16
30
جمادى الأولى, 1434
11-3-2013
27-3-2013
16
30
جمادى الثانية, 1435
30-3-2014
15-4-2014
16
30
شعبان, 1435
28-5-2014
13-6-2014
16
30
رجب, 1436
18-4-2015
4-5-2015
16
30
رمضان, 1436
16-6-2015
2-7-2015
16
30
ذو القعدة, 1437
2-8-2016
18-8-2016
16
30

அடுத்து நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருந்தால், அந்தப் பிறை 21 (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 22 (மாதம் 30 ஆக இருந்தால்) இதை அலசுவோம். இந்தக் கூற்றின்படி இறுதி அரைப்பிறை 22 இல் வந்தால் அம்மாதம் 29ஆக இருக்கக் கூடாது. இறுதி அரைப்பிறை 21 இல் வந்தால் அம்மாதம் 30ஆக இருக்கக் கூடாது. என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
இறுதி அரைப்பிறை 22 இல் வந்து மாதம் 29இல் முடிந்த மாதங்கள்:
ஹிஜ்றாக்களின் காலண்டரில்
மாதம்/வருடம் அரபி பெயர்கள்
அமாவாசை
லாஸ்ட் குவாட்டர்
லாஸ்ட் குவாட்டர் வரும் நாள்
மாத நாட்களின் எண்ணிக்கை
محرم, 1428
19-1-2007
10-2-2007
22
29
ربيع الأول, 1428
19-3-2007
10-4-2007
22
29
جمادى الثانية, 1428
15-6-2007
7-7-2007
22
29
رجب, 1428
14-7-2007
5-8-2007
22
29
صفر, 1429
7-2-2008
29-2-2008
22
29
ربيع الثاني, 1429
6-4-2008
28-4-2008
22
29
رجب, 1429
3-7-2008
25-7-2008
22
29
شعبان, 1429
1-8-2008
23-8-2008
22
29
شوال, 1429
29-9-2008
21-10-2008
22
29
جمادى الأولى, 1430
25-4-2009
17-5-2009
22
29
جمادى الثانية, 1430
24-5-2009
15-6-2009
22
29
شعبان, 1430
22-7-2009
13-8-2009
22
29
ذو القعدة, 1430
18-10-2009
9-11-2009
22
29
رجب, 1431
12-6-2010
4-7-2010
22
29
رمضان, 1431
10-8-2010
1-9-2010
22
29
ذو الحجة, 1431
6-11-2010
28-11-2010
22
29
شعبان, 1432
1-7-2011
23-7-2011
22
29
شوال, 1432
29-8-2011
20-9-2011
22
29
ربيع الأول, 1433
23-1-2012
14-2-2012
22
29
ذو القعدة, 1433
16-9-2012
8-10-2012
22
29
ربيع الثاني, 1434
10-2-2013
4-3-2013
22
29
صفر, 1435
3-12-2013
25-12-2013
22
29
رجب, 1435
29-4-2014
21-5-2014
22
29
رمضان, 1435
27-6-2014
19-7-2014
22
29
ربيع الأول, 1436
22-12-2014
13-1-2015
22
29
شعبان, 1436
18-5-2015
9-6-2015
22
29
شوال, 1436
16-7-2015
7-8-2015
22
29
ربيع الثاني, 1437
10-1-2016
1-2-2016
22
29
جمادى الثانية, 1437
9-3-2016
31-3-2016
22
29
رمضان, 1437
5-6-2016
27-6-2016
22
29
شوال, 1437
4-7-2016
26-7-2016
22
29

இறுதி அரைப்பிறை 21 இல் வந்து மாதம் 3௦இல் முடிந்த மாதங்கள்:
ஹிஜ்றாக்களின் காலண்டரில்
மாதம்/வருடம் அரபி பெயர்கள்
அமாவாசை
லாஸ்ட் குவாட்டர்
லாஸ்ட் குவாட்டர் வரும் நாள்
மாத நாட்களின் எண்ணிக்கை
صفر, 1430
26-1-2009
16-2-2009
21
30
صفر, 1431
15-1-2010
5-2-2010
21
30
ذو الحجة, 1436
13-9-2015
4-10-2015
21
30

இறுதி அரைப்பிறை 22 இல் வந்து மாதம் 29இல் முடிந்த மாதங்களின் அட்டவணை பெருசுதான் ஆனால் இறுதி அரைப்பிறை 21 இல் வந்து மாதம் 3௦இல் முடிந்த மாதங்களின் அட்டவணை சின்னதாதானே இருக்கு. இது ரேர் அக்கரன்ஸ். அரிதாக நடக்கும் இதை கணக்கிலெடுக்கக் கூடாது என்று நீங்கள் எண்ணினால், இதோ சந்திரன் ஹிஜிராக்களுக்கு வைத்த பெரிய ஆப்பு கீழே...
ஹிஜ்றாக்களின் காலண்டரில்
மாதம்/வருடம் அரபி பெயர்கள்
அமாவாசை
லாஸ்ட் குவாட்டர்
லாஸ்ட் குவாட்டர் வரும் நாள்
மாத நாட்களின் எண்ணிக்கை
ربيع الثاني, 1428
17-4-2007
10-5-2007
23
29
جمادى الأولى, 1429
5-5-2008
28-5-2008
23
29
رمضان, 1430
20-8-2009
12-9-2009
23
29
شوال, 1431
8-9-2010
1-10-2010
23
29
ذو القعدة, 1432
27-9-2011
20-10-2011
23
29
محرم, 1433
25-11-2011
18-12-2011
23
29
ذو الحجة, 1433
15-10-2012
7-11-2012
23
29
صفر, 1434
13-12-2012
5-1-2013
23
29
ربيع الأول, 1435
1-1-2014
24-1-2014
23
29
جمادى الأولى, 1435
1-3-2014
24-3-2014
23
29
ربيع الثاني, 1436
20-1-2015
12-2-2015
23
29
جمادى الثانية, 1436
20-3-2015
12-4-2015
23
29
رجب, 1437
7-4-2016
30-4-2016
23
29

அரைப்பிறை 22 இல் வந்தாலே மாதம் 30 என்று கட்டளையிட்டிருந்தனர் ஹிஜ்ராக்கள். ஆனால் இங்கே அரைப்பிறை 23 வந்து மாதம் 29இல் முடிந்துவிட்டது.
இவர்கள் சந்திரனுக்கு விதித்த பொதுவிதியை மீறி சந்திரன் அல்லாஹ்வின் கணக்குப்படித்தான் இயங்கும் என்று காட்டிவிட்டது.
இனியுமா ஹிஜ்ராக்கள் இந்தக் காலண்டரைப் பின்பற்றுவார்கள்? ஆம் பின்பற்றுவார்கள்! இதை வாசித்துவிட்டு ஒரு ஹிஜ்ராவாவாது தலைவன் ஹிஜ்ராவிடம் இதுபற்றி கேட்கும்.
அதற்கவர்: “நீங்கள் தினமும் பிறையைப் பார்த்துதானே வருகிறீர்கள். அவன் சொன்னது போல என்னிக்காவது நடந்ததா?”
கேட்டவர்: “இல்லை”.
தலைவன்: “அப்புறம் என்ன! அவன் எப்போதும் போல பொய் சொல்றான்! போய் வேலையைப் பாருங்க”
ஹிஜ்ராக்களே தலைவனின் பேச்சைக் கேட்டு அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாதீர்கள், நீங்கள் கையில் ஹிஜ்றா காலண்டரை வைத்துவிட்டு வானில் பார்த்தால் நீங்கள் காலண்டரில் பார்த்ததைப் போலத்தான் உங்கள் கண்களுக்கு மாயத்தோற்றம் ஏற்படும். காலண்டரை வீசிவிட்டு வானைப் பாருங்கள். உண்மை புலப்படும்.
சுருக்கம்:
1. தினமும் பிறை பார்த்து தேதியை அறிந்துகொள்ள முடியாது.
2. கமிட்டி காலண்டரிலேயே பிறையின் ஒரே வடிவம் வெவ்வேறு மாதங்களில் 4 தேதிகள் வரைக் காட்டுகிறது
3. பிறையின் வடிவங்கள் தேதியைக் காட்டாது.
4. ஹிஜ்றா சொல்லும் கொள்கைக்கும் அவர்கள் காலண்டருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
காலண்டர் லிங்குகள்
1436 ஆம் ஆண்டின் ஹிஜ்ரா காலண்டர்