Thursday 3 November 2022

QSF33. ஃப்ரிட்ஜை பற்றி குர்ஆன் முன்னறிவிப்பு செய்கிறதா?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள

உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html


QSF ஆய்வுக்குழு

DOUBLE DOOR FRIDGE



QSF33. ஃப்ரிட்ஜை பற்றி குர்ஆன் முன்னறிவிப்பு செய்கிறதா?


தப்ஸீர் குறிப்பு 406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்


ரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியை இந்த வசனம் (2:259) கூறி விட்டு, 'உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம் என்று அம்மனிதரிடம் அல்லாஹ் கூறியதாகக் குறிப்பிடுகின்றது.

மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களில் முன்னறிவிப்போ, அறிவியல் உண்மைகளோ, அது பற்றிய குறிப்புகளோ புதைந்து கிடப்பதைத் திருக்குர்ஆனில் பரவலாகக் காணலாம்.

இந்த நிகழ்ச்சியில் சொல்லப்படும் மனிதர் தன்னுடன் ஒரு கழுதையையும், உண்பதற்கான சில உணவுகளையும், தண்ணீரையும் எடுத்துக் கொண்டு பயணம் செய்கிறார்.

இந்நிலையில் அவரை நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்த இறைவன், கழுதையையும் மரணிக்கச் செய்து மக்கிய எலும்புகளாக்கினான். ஆனால் அந்த மனிதர் கொண்டு வந்த உணவும், தண்ணீரும் நூறு ஆண்டுகள் கடந்த பின்பும் கெட்டுப் போகாமல் அப்படியே இருந்தது.

இதில் இறைவன் கூறும் அந்த அத்தாட்சி எது?

உணவுக்கும், தண்ணீருக்கும் அருகில் தான் கழுதையின் உடலும் கிடந்தது. அப்படியிருந்தும் கழுதை மக்கிப் போகின்றது. உணவும், நீரும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது.

குளிர்பதனப் பெட்டியைப் போன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பாதுகாப்புக் கவசத்தை ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கின்றது.

பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு ஒரு தொழில் நுட்பம் உள்ளது; அதை ஆய்வு செய்யுங்கள் என்ற கருத்து உள்ளடங்கி இருப்பதால் தான் 'இதை அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்' என்று இறைவன் கூறுகின்றான்.

//குளிர்பதனப் பெட்டியைப் போன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பாதுகாப்புக் கவசத்தை ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கின்றது.//


//பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு ஒரு தொழில் நுட்பம் உள்ளது; அதை ஆய்வு செய்யுங்கள் என்ற கருத்து உள்ளடங்கி இருப்பதால் தான் 'இதை அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்' என்று இறைவன் கூறுகின்றான்.//


ஃப்ரிட்ஜுக்கு முன்னறிவிப்பு இது என்றால் வாஷிங் மஷினுக்கான முன்னறிவிப்பு எது என்று விவாதத்தில் நாத்திகன் கேட்பான். இல்லாததை கற்பனை செய்தால் கஷ்டம்தான். புகாரீ 4262. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஸைத் (பின் ஹாரிஸா -ரலி) அவர்களும் ஜஅஃபர் (பின் அபீதாலிப் -ரலி) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) கொல்லப்பட்டுவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப்பெற்று மக்களுக்கு) நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அப்போது சொன்னார்கள்: (முதலில் இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் பிடித்தார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். அடுத்து ஜஅஃபர் பிடித்தார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். அடுத்து இப்னு ரவாஹா பிடித்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்.


நபிகளார் பங்கேற்காத இந்த போரில் வெகு தொலைவில் நடக்கும் காரியங்களை நேரில் பார்ப்பதை போன்று நபி ஸல் அவர்கள் சொன்னார்களே இதை ஸ்கைப் வீடியோ காலிங்-கான முன்னறிவிப்பு என்று எடுத்துக்கொள்வதா? இறையற்புதங்களை கேலிக்கூத்தாக்குவதே தப்சீரின் நோக்கமோ?


மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html