Thursday 3 November 2022

QSF07. எறும்புகளால் நிலநடுக்கத்தைக் கண்டுபிடிக்க இயலுமா?

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்

ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்

அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html

QSF ஆய்வுக்குழு

 QSF7 எறும்புகளால் நிலநடுக்கத்தைக் கண்டுபிடிக்க இயலுமா?

தஃப்ஸீர்: 470. எறும்புகளுக்கும் அறிவு உண்டு

www.onlinetntj.com/470-எறும்புகளுக்கும்-அறிவு/1837

இந்த தஃப்ஸீர் தினமலர் பத்திரிக்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாகும். ஒரிஜினல் ஆய்வறிக்கையை கண்ணால் கூட காணவில்லை.

தஃப்ஸீர் காப்பியடிக்கப்பட்ட இடம்:  https://www.dinamalar.com/news_detail.asp?id=691777

//ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறிவிடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலைக்கு திரும்பிவிடுகின்றன.//

இப்படி அந்த ஆய்வில் இல்லவே இல்லை. ஒரிஜினல் ஆய்வு > http://bit.ly/பூகம்பஎறும்பு

Early results show that ants have a well-identifiable standard daily routine. Correlation with local seismic events suggests changes in the ants’ behavior hours before the earthquake: the nocturnal rest phase and daily activity are suppressed, and standard daily routine does not resume until the next day.

இதுதான் அவர்கள் சொல்வதாகும். இதில் புற்றிலிருந்து வெளியேறியதாக எந்த வார்த்தையும் இல்லை. நிலநடுக்கம் ஏற்படும் முன்னர் எறும்புகளின் தினசரி செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதாகவும் நிலநடுக்கம் முடிந்து மறுநாள் வரையில் அவை பழைய நிலைக்கு திரும்பவில்லை என்றும்தான் இந்த ஆய்வு சொல்கிறது. //ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலைக்கு திரும்பி விடுகின்றன// என்பதெல்லாம் தினமலரின் கற்பனை.

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னால் அங்கிருந்து வெளியேறும் வாயுக்களால் எறும்புகளின் தினசரி வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதாக ஆய்வு சொல்கிறதே தவிர அதிர்வுகளால் எறும்புகள் வெளியேறியதாக கூறுவதற்கும் அதனை சுலைமான் நபியின் குதிரைப் படையின் அதிர்வுகளுடன் ஒப்பிடுவதற்கும் முகாந்திரமே இல்லை. மேலும் குதிரைப் படைகள் எந்த நில அதிர்வுகளையும் உருவாக்குவதில்லை.

These studies are not provided for earthquake prediction, but are an important step towards the understanding of geobiological processes.

இது ஆய்வறிக்கையின் இறுதி வரி ஆகும். நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்காக இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்படவில்லை என்று ஆய்வாளர்களே சொல்கிறார்கள். ஆய்வாளர்களை ஆர்வக்கோளாறுகள் மிஞ்சி விடுகிறார்கள்.

ஒரு வேளை அந்த ஆய்வு வெற்றிகரமானதாக இருந்திருந்தால் redwood எறும்புகளைக் கொண்டு ஒருநாள் முன்னதாக நிலநடுக்கத்தை அறிந்து பெரிய பெரிய நிலநடுக்கத்தில் இருந்து பெரிய உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாமே. 2013ல் வெளிவந்த இந்த ஆய்வுக்கு பிறகு எந்த நிலநடுக்கத்தாலும் பாதிப்பு ஏற்படாமல் தப்பித்திருக்கலாமே.

அவ்வாறல்ல, இதையும் வாசிக்கவும். https://www.usgs.gov/faqs/can-animals-predict-earthquakes?qt-news_science_products=0#qt-news_science_products உலகிலேயே பெரிய அளவில் நிலநடுக்கத்தை ஆய்வு செய்யும் ஒரே நிறுவனம் அமெரிக்க அரசின் USGS நிறுவனத்தின் இணையதளம் தான் இது. நிலநடுக்கத்தை எந்த விலங்கினாலும் கருவியாலும் கண்டுபிடிக்க இயலாது.


மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html