Monday 17 July 2017

பீஜேயின் கருத்துக்களை ஆய்வுசெய்ய பிறைவாசிகள் தயாரா

இவர்களின் காலண்டரை உலகில் யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு ததஜ உறுப்பினர் அடையாளம் கொடுப்பதும், அதிகமாக எதிர்ப்பவர்களுக்கு ததஜ நிர்வாகி அந்தஸ்து கொடுப்பதும் இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. யாரென்பது தெரியாமல் நபி வழி பிறையைப் பின்பற்றும் ஒரு சகோதரருக்கு இவர்கள் ததஜ நிர்வாகி பட்டம் கொடுத்து, அவர் காரி உமிழாத குறையையாய் இவர்களை கேவலப்படுத்தினார். இவர்களின் இச்செயலால் பலமுறை அசிங்கப்பட்டும்கூட இவர்கள் இதை தொடர்ந்து செய்துவருகிறார்கள். பிறைவாசி இணையதளத்தின் சத்திய பிரசாரத்தால் மிகுந்த நெருக்கடிக்குள்ளாயினர் ஹிஜ்ராவினர். உதாரணமாக “நாம் ஏன் கிப்லாவை மாற்றினோம்” என்ற சக ஹிஜ்ராவினரின் கேள்விகளுக்கே பதிலில்லாமல், சப்பைக்கட்டு கட்டிப்பார்த்தும் பயனில்லாமல், போகவே பிறைவாசியை எதிர்ப்பதற்காக தற்போது அவர்கள் கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் “மூட்டிவிடுதல்”.
தவ்ஹீத் வாதிகளை பிறைவாசி தளத்திற்கு எதிராக திருப்பிவிட்டால் தவ்ஹீத்வாதிகள் பிறைவாசி தளத்தை புறக்கணிப்பர்; நமக்கு இருக்கும் பெரிய எதிர்ப்பு குறைந்துவிடும் என்பதே இவர்களது எண்ணம். “PJ vs பிறைவாசி”, ‘பீஜேவுக்கு எதிராக பிறைவாசிகள் பேசுகின்றனர்’, ‘பீஜேவின் குர்ஆன் மொழிப்பெயர்ப்பு எதிராக பிறைவாசிகள் மொழிப்பெயர்ப்பு செய்கின்றனர்’ என பக்கம் பக்கமாக இணையதளங்களில் எழுதிவருகின்றனர். மேலும் பீஜேவுக்கு எதிராக பேசுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பிறைவாசி என்ற தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற அறிவிப்பு தவ்ஹீத் ஜமாஅத் தரப்பிலிருந்து வரும், இதன் மூலம் ‘நம்மை எதிர்க்கும் பெரிய கூட்டத்திட்டமிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம்’ என்பதும் இவர்களின் எண்ணமாக உள்ளது.
IDLஐக் கொண்டுதான் கிப்லாவை நிர்ணயம் செய்யவேண்டும் என்றும், மீகாது கிப்லா என்றும் அலி மானிக் பான் சொன்னபோது செவியுற்றோம் கட்டுப்பட்டோம் என்று நீங்கள் சரணடைந்ததைப் போல பீஜே என்ன சொன்னாலும் சரணடையும் கூட்டமல்ல தவ்ஹீத்வாதிகள். அலி மானிக் பான் சொன்ன தட்டை உலக RHUMB LINE கிப்லாவை நீங்கள் மார்க்கமாக மாற்றியதைப் போன்றும், அவர் புதிதாக மார்கத்தில் நுழைத்த மீகாத்து கிப்லா என்ற பித்அத்தை மார்க்கமாக்கியதைப் போன்றும் தவ்ஹீத்வாதிகள் பீஜேவின் சுய கருத்தை மார்க்கமாக்கியவர்கள் அல்லர். ஆகவே நீங்கள் என்னதான் மூட்டிவிட நின்னைதாலும் உங்கள் கனவுகள் நிறைவேறாது.
குர்ஆன் ஹதீஸுக்கு எதிராகவோ குர்ஆன் ஹதீஸின் போதனைக்கு எதிரான வகையிலோ பிறைவாசி தளம் பிரச்சாரம் செய்யாதவரையில் உங்களின் எண்ணம் நிறைவேறாது. பிறைவாசியில் குர்ஆன் ஹதீஸ் இருக்கிறதா என்றுதான் தவ்ஹீத்வாதிகள் பார்ப்பார்களே தவிர நீங்கள் எண்ணுவதைப்போல பீஜே இருக்கிறாரா தவ்ஹீத் ஜமாஅத் இருக்கிறதா என்று பார்க்கமாட்டார்கள். மேலும் பிறைவாசி எனும் தளம் தவ்ஹீத் ஜமாத்தால் நடத்தப்படும் இணையதலமல்ல. தவ்ஹீத் ஜமாஅதிற்கும் பிறைவாசி இணைய தளத்திற்கும் ஏற்கனவே எந்த தொடர்பும் இல்லை. எனவே இதை புதிதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவிக்கத் தேவையில்லை.
ஹிஜ்ரா அறிஞர்களால் எழுதப்பட்டு இணைய தளங்களில் பரப்பப்படும் மற்றொரு அவதூறைப் பார்ப்போம்.
//பீஜேயின் கருத்துக்களை ஆய்வுசெய்ய பிறைவாசிகள் தயாரா?//
பீஜேவின் கருத்துக்களை ஆய்வு செய்ய ஹிஜ்ராவினர் தயாரா? பீஜே சொன்ன விஷயங்கள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து எம்முடன் விவாதிக்க கிலாஃபத் பேர்வழிகளுக்கு நெஞ்சுரம் இருக்கிறதா? பீஜேவின் கருத்துக்களில் உங்கள் அறிவுக்கு எட்டாமல் போனவற்றை கீழே விளக்கியுள்ளோம்
//ததஜ சகோதரர்களே!, அண்ணன் பீஜே ஆரம்ப காலத்தில் ஊருக்கு ஊர் பிறைபார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் என்ற கொள்கையைச் சொன்னபோது அதுதான் நபிவழி என்று நம்பி பின்பற்றினீர்கள். பின்னர் சர்வதேசப் பிறைதான் சரி என்ற கொள்கைக்கு அண்ணன் மாறிய போதும் அதுவே நபிவழி என்று நம்பி பின்பற்றுனீர்கள். அப்போது இந்த ததஜ பிறைவாசிகள் எங்கே இருந்தார்கள்? என்று நமக்கு தெரியவில்லை.//
அப்போது ததஜ பிறைவாசிகள் உள்ளூரில்தான் இருந்தார்கள். நீங்கள் யூத காலண்டரை கேரளம் வழியாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த அதே 2007ம் ஆண்டின் ஆரம்பதில்தான் பிறைவாசிகள் பொருளீட்டுவதற்காக வெளிநாடு சென்றனர். யூதர்களின் காலண்டர் தமிழ்நாட்டில் உலாவுவது 2014 இல் தான் பிறைவாசிகளின் கவனத்திற்கு வந்தது. உங்களை களையெடுக்கும் பிறைவாசி இணையதளமும் 2014இல் தான் உருவானது.
//அதன் பிறகு திடீரென்று அண்ணன் பீஜே அவர்கள் யூடேர்ன் (U-Turn) அடித்து உள்ளூர் பிறைதான் சரி என்று சொன்னபோது இயல்பாகவே அதுவும் நபிவழி ஆகிப்போனது. அடுத்து மாவட்ட பிறைதான் நபிவழி என்று அண்ணன் திருத்திக் கூறியபோது, அது மீண்டும் நபிவழி என்ற அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டது. அப்போதும் இந்த சிந்தனை சிற்பிகளான ததஜ பிறைவாசிகள் எங்கே இருந்தார்கள்? என்பது தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் மாவட்டம், மண்டலம் போன்ற எல்லைக் கோடுகளை அழித்துவிட்டு, 'மாநிலம் அளவு பிறை' இதுதான் நபிவழி என்று சகோதரர் பீஜே அவர்கள் உறுதியாக அறிவித்தார். அதுவரை சொல்லி வந்ததெல்லாம் நபி வழியில்லை, மாறாக புதிதாக தமிழகப்பிறை என்று சொல்லியதுதான் நபிவழி என்று பிரச்சாரம் செய்தார். மறுபேச்சு ஏதும் பேசாமல் ததஜவினர் அனைவரும் அதுவும் நபிவழி என்று உறுதி செய்தனர். இப்படி அண்ணனின் வழியை பின்பற்றுவதற்குப் பெயர்தான் நபிவழியா? நபிவழி என்பது திரைசீலை அல்ல. பழையதானவுடன் மாற்றிவிட்டு புதியதை தொங்க விடுவதற்கு.//
பீஜே தனது வாழ்நாளில் மார்க்க நிலைபாடுகளில் என்னென்ன மாற்றம் செய்தார், எந்த அடிப்படையில் அம்மாற்றங்களைச் செய்தார் என்பதை விவாதிக்க அவர் தயாராக இருக்கிறார். அவரை ஹிஜ்ராவினர் தொடர்பு கொள்ளவும். பீஜேவுடன் விவாதிக்க எங்களுக்கு தைரியம் இல்லை என்று புறமுதுகு காட்டி ஓடிய கிலாஃபத் வீரர்கள், அவர் எத்தனை முறை நிலைப்பாட்டை மாற்றினார் என்பதை எண்ணுவதை விட நபிவழிப் பிறைக் கொள்கையை நபிவழியைக் காட்டி மறுக்கப்பாருங்கள்.
//1. தமிழகம் என்ற ஒரு மாநில எல்லைக்குள்தான் பிறைபார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்பதற்கு ததஜ பிறைவாசிகளிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?//
ஆதாரத்திற்குப் பார்க்க: http://www.piraivasi.com/2017/07/17-9.html
//2. தமிழகம் அல்லாத பிற இடங்களில் இருந்து பிறை பார்க்கப்பட்ட தகவல் வந்தால் அதை புறக்கணித்து விட்டு, நமது மாநில எல்லையில் பிறை தென்பட வேண்டும் என்பதற்காக நோன்பை பிற்படுத்த வேண்டும் என்பதற்கு ததஜ பிறைவாசிகளிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?//
ஆதாரத்திற்குப் பார்க்க : http://www.piraivasi.com/2017/06/28.html
//3. ஐம்பது மைல் தொலைவில் இருக்கும் ஒரு ஊரில் பிறை கண்டால் அதை ஏற்றுக் கொள்ளாமல், ஐந்நூறு மைலுக்கு அப்பால் தென்படும் பிறையை ஏற்றுக் கொள்வதற்கும் ததஜவிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?//
டபுள் இமாம் சுபுகி (ரஹ்) அவர்களின் மத்ஹபை பின்பற்றுவதால் ஹிஜ்ராவினர் இக்கேள்வியை கேட்கின்றனர். இத்தனை கிலோமீட்டர் தூரத்தில் இருந்து தகவல் வந்தால் ஏற்கவேண்டும் என்றோ அதை தாண்டினால் ஏற்க கூடாது என்றோ எந்த கட்டளையும் மார்க்கத்தில் இல்லை. மத்ஹபுகளிலிருந்து வெளியே வாருங்கள் ஹிஜ்ரா அறிஞர்களே. எல்லையை எப்படி முடிவு செய்யவேண்டும் என்று தெளிவாக விளக்கிவிட்டோம். அங்கே கிலோமீட்டர் கணக்கெல்லாம் கிடையாது. எல்லையை எந்த அடிப்படையில் முடிவு செய்தாலும் எல்லைக்கு அருகாமையில் உள்ளே மற்ற பிரதேசங்கள் இருக்கும். இந்தியா எனும் எல்லையை எடுத்தாலும் இந்தியாவுக்கு அருகே வங்காள தேசமும், பாகிஸ்தானும் இருக்கும். அப்போதும் இவர்கள் வங்காள தேசப் பிறையை கேள்வி கேட்பார்கள். அங்கே பிறை பார்க்கப்பட்டாலும் நபி வழியின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இயலாது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் களியக்காவிளையைத் தாண்டி 1கிமி தூரத்தில் பிறை தெரிந்தாலும் தமிழகத்தில் ஏற்க மாட்டோம். ஆனால் அதே கன்னியாகுமரி மாவட்டம் தெங்கபும்தூரில் பிறை தெரிந்தால் 700கிமி-க்கு அப்பால் இருக்கும் சென்னை வரை அதை ஏற்றுக்கொள்வோம். இதுதான் நபிவழி.
மத்ஹப் சிந்தனைகளை விட்டு வெளியே வாருங்கள் ஹிஜ்ரா அறிஞர்களே! கிலோமீட்டர் கணக்கு மார்க்கத்தில் இல்லை. மக்கள் முடிவு செய்யும் எல்லையே பிறை தகவலை ஏற்றுக்கொள்ளும் எல்லையை நிர்ணயிக்கிறது.
//4. தமிழக தவ்ஹீத் ஜமாத்திற்கு (TNTJ) மாநிலப்பிறை எனில் தங்கள் கிளை அமைப்பான இலங்கை தவ்ஹீத் ஜமாத்திற்கு (SLTJ) இலங்கை தேசியப்பிறை. இதை எந்த ஆதாரத்தை வைத்து முடிவு செய்தீர்கள்? ஒரே கொள்கையை பின்பற்றுபவர்களுக்கு இடையிலேயே பிறை விஷயத்தில் ஒரு இணக்கமான கொள்கை முடிவை எடுக்க முடியாமல் ஏன் முரண்படுகிறீர்கள்?//
மூளை வளர்சியின்மையே இக்கேள்விக்கு காரணம். விளக்கமான விடையை இங்கே காண்க: http://www.piraivasi.com/2017/07/17-9.html
//5. சந்திரன் மேற்கில் உதிக்கிறது. மேற்கு திசையில்தான் சந்திரனை பார்ப்பீர்கள். சந்திரன் (பிறை) மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது என்று சகோதரர் பீஜே சொல்வதை எந்த விஞ்ஞான அடிப்படையை வைத்து நிரூபிக்கப் போகிறீர்கள்? //
நிலவு கிழக்கில் தான் எழுகிறது மேற்கில்தான் விழுகிறது. பீஜே சொல்வதெல்லாம் மார்க்கமல்ல. குர்ஆன் ஹதீஸே மார்க்கம்.
IDLஐக் கொண்டுதான் கிப்லாவை நிர்ணயம் செய்யவேண்டும் என்றும், மீகாது கிப்லா என்றும் அலி மானிக் பான் சொன்னபோது செவியுற்றோம் கட்டுப்பட்டோம் என்று நீங்கள் சரணடைந்ததைப் போல பீஜே என்ன சொன்னாலும் சரணடையும் கூட்டமல்ல நாங்கள். குர்ஆன் ஹதீஸே மார்க்கம். தனிமனிதனின் இயலாமைகளை மார்க்கமாக்கும் ஹிஜ்ரா கமிட்டி நாங்களல்லர்.
//6. நாம் கண்ணால் பார்ப்பது மூன்றாவது பிறைதான். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது பிறையைத்தான் முதல் பிறை என்று பீஜே அவர்கள் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். ஆக ததஜ பிறைவாசிகள் உட்பட அனைத்து ததஜவினரும் மூன்றாவது பிறையை பார்த்துவிட்டுதான் மாதத்தின் முதல் நாளை தொடங்குவதாக பீஜே கூறுகிறார். இதற்கு வஹியை மட்டும் பின்பற்றும் ஒரே கூட்டத்தின் வீர சிப்பாய்களிடம் என்ன பதில் இருக்கிறது? //
பிறை என்பதே கண்ணுக்கு தெரியும் முதல் வடிவம்தான். கண்ணுக்கு தெரிவதுதான் பிறை. கண்ணுக்கு தெரியாமல் வானில் இருப்பது பிறையல்ல. நாம் கண்ணால் பார்ப்பதுதான் பிறை.
மூன்றாம் பிறைதான் முதல் பிறை என்று பீஜே சொல்லிவிட்டால் அது மார்க்கமாகாது. 29 பகல் முடிந்துவரும் 30ம் இரவில் பிறைதேட வேண்டும். அன்று நம் கண்களுக்கு பிறை தெரிந்தால் புது மாதம் அவ்விரவிலிருந்து துவங்குகிறது. இல்லையேல் மாதம் 30 ஆக பூர்த்தியாகிறது. மூன்றாம் பிறை நான்காம் பிறை எல்லாம் மார்க்கத்தில் இல்லை. ஹிலால் எனும் தலைப்பிறையை பார்த்து நாட்களை எண்ணிவரவேண்டும். அதுதான் தேதி.
அலி மானிக் பான் சொன்ன தட்டை உலக RHUMB LINE கிப்லாவை நீங்கள் தாங்கிப்பிடிப்பதைப் போன்று பீஜேவின் இயலாமையால் வெளிவந்த வார்த்தைகளுக்கு முட்டுக் கொடுக்கும் நிலையில் எந்த தவ்ஹீத் வாதியும் இல்லை. குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம். தனி மனிதனின் இயலாமைகள், குறைகளை மார்க்கமாக மாற்ற நாங்கள் ஹிஜ்ராவினர் அல்லர்.  
//7. பிறை விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன. காரணம் பிறை சம்பந்தமான ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளன. லூனார் (Lunar) என்றாலே கிறுக்கு என்று பொருள். பிறை என்றாலே கிறுக்குப் பிடிப்பது போன்றுதான் உள்ளது. எனவே யாராலும் நூறு சதவிகிதம் நிலை நாட்ட முடியாது என்றும் பீஜே கூறியுள்ளார். ஆக ததஜ பிறைவாசிகள் எத்துனை கட்டுரைகளை எழுதி பரப்பினாலும் அவர்களால் நூறு சதவிகிம் நிலைநாட்டிட முடியாது என்கிறார் பீஜே. இதற்கு ததஜ பிறைவாசிகள் என்ன பதிலை வைத்துள்ளார்கள்.//
Middle English: from Old French lunatique, from late Latin lunaticus, from Latin luna ‘moon’ (from the belief that changes of the moon caused intermittent insanity).
5ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக் கல்வி பயின்ற பீஜேவுக்கு இருக்கும் ஆங்கில அறிவு ஹிஜ்ரா விஞ்ஞானிகளுக்கு இல்லையே. Luna எனும் இலத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்ததுதான் லூனார் லுனாடிக் போன்ற ஆங்கில வார்த்தைகள். நிலவின் இயக்கத்தால் மனிதனுக்கு உளவியல் மாற்றம் நிகழ்வதாகவும், கிறுக்கு பிடிப்பதாகவும் அக்கால மக்கள் நம்பினர். தமிழ்நாட்டிலும் அமாவாசை அல்லது பவுர்ணமியில் பைத்தியம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது. இந்த நம்பிக்கை காரணமாக கிறுக்கு என்ற வார்த்தைக்கு நிலவை குறிக்கும் Luna என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தனர். இது ஆங்கிலம் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரியும்.
எந்த மொழியிலும் அறிவில்லாத ஹிஜ்ராவினர் பீஜேவை விமர்சனம் செய்ய தகுதியற்றவர்கள்.
//8. பிறை சம்பந்தமாக எந்த ஒரு நிலைப்பாட்டிலும் 4 கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மிச்சமிருக்கும். எந்த நிலைப்பாட்டில் குறைந்த கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் இருக்கிறதோ அந்த நிலைப்பாட்டிற்கு சென்றுவிடுவது சிறந்தது என்று பீஜே சொல்கிறார். ஆகையால் பிறைவாசிகள் நான்கு கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளதாக பொருள்படுகிறது. அது என்னென்ன கேள்விகள் என்பதை அறிந்து விட்டீர்களா பிறைவாசிகளே?//
அல்ஹம்துலில்லாஹ்! நபி வழியில் எல்லாவற்றிற்கும் தீர்வு உள்ளது. பிறை விஷயத்திற்கும் தீர்வு இல்லாமல் இல்லை.
//9. தலைப்பிறை சவுதியில் உதிக்கிறது என்றால் சவுதியிலிருந்து பிறை ரிவேஸ்ல வராது. காரணம் அது மேற்கு உதிப்பதால் நம் தலைக்கு நேராக வருவதற்கு 21:30 மணிநேரம் ஆகும் என்று பீஜே சொல்கிறார். ஒருவேளை இது பூமியின் குறுக்கு வட்டக் கோட்பாடாக இருக்கலாம். பூமியின் பெரிய வட்டக் கோட்பாடு (Great Circle) என்று ததஜ பிறைவாசிகள் எழுதி பிரச்சாரம் செய்வதால் இதற்கும் என்ன பதிலைச் சொல்கிறார்கள் என்று பார்ப்பபோம்.//
பிறை விஷயத்தில் பீஜே ஒரு விஞ்ஞானி என்றால் அது மிகையாது. மேற்கில் பிறை பார்க்கிறோம் என்று சொல்ல எத்தனித்து சந்திரன் மேற்கில் உதிக்கிறது என்று சொல்லிவிட்டார். மூன்று நாள் வயதுடைய பிறையாக இருந்தாலும் நாம் பார்ப்பதுதான் முதல் பிறை என்று சொன்னதை, மூன்றாம் பிறைதான் முதல் பிறை என்று திரித்துவிட்டனர் ஹிஜ்ராவினர். ஆனால் நமக்கு தெரியாமல் சவுதிக்கு பிறை தெரிந்தால் மீண்டும் அந்த பிறை நமது கண்களுக்கு காட்சியளிக்க 21:30 மணிநேரம் ஆகும் என்ற சாதாரண உண்மையை கூட விளங்க இயலாமல் இருக்கும் ஹிஜ்ரா அறிஞர்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.
அதிக விளக்கத்திற்கு பார்க்க http://www.piraivasi.com/2015/10/16.html
//10. பிறை பிறந்தால்தான் இரவு ஆரம்பிக்கிறது. இரவில்தான் நாள் ஆரம்பிக்கிறது என்கிறார் பீஜே. மேலும் முதல் பிறை சிலநேரம் 20 நிமிடம் தெரியும், சில நாளில் 35 நிமிடங்கள் தெரியும், சில வேளை 5 நிமிடங்கள்கூட தெரியும் என்கிறார். ஒவ்வொரு நாளும் சந்திரன் எந்தெந்த நேரத்தில் உதயமாகிறதோ அந்தெந்த நேரத்திலிருந்து ஒருநாளை தொடங்கிட முடியுமா? என்பதையும் ததஜ வீர சிப்பாய்கள் அண்ணனுக்கு விளக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.//
“தலைப்பிறை மக்ரிப் வேளையில்தான் தெரியும். இஸ்லாத்தில் நாளின் ஆரம்பமும் மக்ரிப் தான். நாள் பகலில் ஆரம்பித்து மாதம் இரவில் ஆரம்பிக்காது. நாளும் மாதமும் ஒரே காலப்புள்ளியில் இருந்தான் துவங்கும். எனவே பிறை தெரியும் இரவு நேரம்தான் நாளின் ஆரம்பமாகவும் மாதத்தின் ஆரம்பமாகவும் உள்ளது.”
இதுதான் பீஜே சொன்னதன் கருத்து. பூமி தட்டை என்று நினைக்கும் ஹிஜ்ராவினருக்கு விளங்காமல் போனதில் ஆச்சரியமில்லை.
//அத்தோடு ஒரு நாள் என்பது மஃரிபிலிருந்து தொடங்குகிறது என்றும் அண்ணன் பிரச்சாரம் செய்துள்ளார். அதை ததஜவினர் அதை மார்க்கம் என்று நம்பியுள்ளனர். எனவே ஒரு நாளுக்குரிய ஐந்துவேளை கடமையான தொழுகைகளில் மஃரிபு தொழுகையை முதல் தொழுகையாக அமைத்து, ததஜ மர்கஜ்களில் உள்ள தொழுகை கால அட்டவணையை 'மஃரிபு, இஷா, ஃபஜ்ரு, லுஹர், அஸர்' என்று மாற்றி எழுதுங்கள்.//
இக்கேள்விக்கு ஏற்கனவே விடையளிக்கப்பட்டுள்ளது பார்க்க.. http://www.piraivasi.com/2017/04/10.html
//11. சூரியக் (ஆங்கிலக்) காலண்டர் அடிப்படையில் வரும் 365 என்ற வருடக் கணக்குதான் சரியானது. சந்திரக் கணக்கீடு மாதத்தைத்தான் அளவிட முடியும் என்றும் பீஜே பேசியுள்ளார். ஆனால் ததஜ பிறைவாசிகளோ சந்திரனை வைத்து ஒரு காலண்டரை தயாரிக்கவே முடியாது என்கின்;றனர். கடந்த 1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதிக்குப் பின்னர் 3-ஆம் தேதி என்று வருவதற்கு பதிலாக, 14-ஆம் தேதி என்று ஏன் ஆக்கப்பட்டது? 11 நாட்கள் ஏன் கூட்டப்பட்டது? அவ்வளவு துல்லியமான வருடக்கணக்கா இந்த கிருஸ்தவக் காலண்டர்? என்பதையும் ததஜ பிறைவாசிகள் சொல்லட்டும்.//
சுய நினைவுடன்தான் கட்டுரையாளர் இதை எழுதினாரா எனத் தெரியவில்லை. ஜூலியன் காலண்டர் கிரிகோரியன் காலண்டராக மாற்றப்பட்டது ஆண்டு 1582 அக்டோபர் மாதம். இது ஹிஜ்ரா அறிஞர்கள் மார்க்க ஆதாரமாக காட்டும் விக்கிபீடியாவில் உள்ளதே! ஹிஜ்ரா அறிஞர்களுக்கு என்ன ஆயிற்று?
கிரிகோரியன் காலண்டர் துல்லியமானதா? பார்க்க = http://www.piraivasi.com/2017/01/5.html
சூரியனை கொண்டு ஆண்டுகளை கணக்கிட சொல்லும் குர்ஆன் வசனம் பார்க்க = http://www.piraivasi.com/2015/08/20.html
சூரிய நாட்காட்டியின் தேவை = http://www.piraivasi.com/2015/04/nujumiyya.html
12. மேலும் உமர் (ரழி) அவர்களும் ஸஹாபாக்களும் இஸ்லாமிய ஆண்டு கணக்கீட்டை ஹிஜ்ரத்திலிருந்து ஆரம்பித்தது பொருத்தமில்லாதது. நபி (ஸல்) அவர்களின் நுபூவத்திலிருந்துதான் ஆரம்பித்திருக்க வேண்டும் என்று பீஜே பேசியுள்ளர். ஆக ஹிஜ்ரி காலண்டர் சரியில்லை நூபூவத் காலண்டர் போடலாம் என்று பச்சைக்கொடி காட்டியுள்ளார் பீஜே. ததஜ பிறைவாசிகளே என்ன செய்யப் போகிறீர்கள்? நுபூவத் காலண்டர் தயாரிக்கப் போகிறீர்களா? அல்லது பீஜே அறிவில்லாமல் சொல்லி விட்டார் என்று கூறப் போகிறீர்களா?
இதற்கான விடைக்கு பார்க்க : ஹிஜ்ரி ஆண்டுமுறை இஸ்லாமிய வழிமுறையா?  http://www.piraivasi.com/2016/01/1.html