Friday 6 November 2015

"ஜாக்"-கிரதை!!!!

D:\Articles\~பிறை ஆய்வுகள்\சவுதியை கண்மூடி பின்பற்றும் ஜாக்\F2016Oct01.png
அக்டோபர்-1 2016 உலகில் எங்குமே பிறை தெரிய வாய்ப்பில்லை. (பிரெஞ்சு பாலிநேசியாவில் தெரிய வாய்ப்பிருந்தாலும் அங்கிருந்து ஜாக்கிற்கு தகவல் கொடுக்க யாருமில்லை. ஜாக்கிற்கு தகவல் வருவதாக வைத்துக்கொண்டாலும் அந்த தகவல் வரும்போது 2ம் தேதி விடிந்திருக்கும்)
பிறை தெரிய அறவே வாய்ப்பில்லாத நாளில் பிறை பார்த்ததாக ஒருவர் சொன்னால் அவர் பொய்யரேயன்றி வேறல்லர்.
ஆனால் அக்டோபர் 1 மாலை பிறை பார்த்தாக தகவல் வந்தாதாம் ஜாக்கும் முஹர்ரம் மாதத்தை துவங்கியதாம்.
D:\Articles\~பிறை ஆய்வுகள்\சவுதியை கண்மூடி பின்பற்றும் ஜாக்\muharram 1438.jpg
*************************************

உம்முல் குறாவை பின்பற்றி வந்த ஜாக் சமீப காலங்களில் எந்தக் கொள்கையும் இல்லாமல் எந்தக் காலண்டர் கிடைத்தாலும் அதை பின்பற்றி வருகிறது. எந்தக் காலண்டரில் முதன் முதலாக நோன்பு (அ) பெருநாள் வருகிறதோ அந்தக் காலண்டரை எடுப்பதை வழிமுறையாக கொண்டுள்ளது ஜாக் (ஹிஜ்றாவின் காலண்டரை தவிர). 1437 முஹர்ரத்தில் எகிப்து காலண்டரை எடுத்து ஆஷூரா நோன்பை அறிவித்த ஜாக், 1437 க்கான ஷஅபானுக்கும் ரமலானுக்கும் எந்தெந்த காலண்டரை எடுத்துள்ளது என்று பார்ப்போம்.
எகிப்து ஃபலஸ்தீன் அமீரகம் போன்ற நாடுகளின் யாரும் பிறையைப் பார்த்து அறிவிப்பு செய்வதில்லை. இங்கெல்லாம் ஜாக்கி கிளைகள் பிறை பார்த்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இந்நாடுகள் அவர்களுக்கென காலண்டரை வைத்து அவற்றைப் பின்பற்றுபவை. அந்தக் காலண்டரை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று ஜாக் அறிவிக்க தயக்கம் காட்டுவது ஏன்?
அதை தொடர்ந்து 5-6-2016 மாலை கேரளாவில் கப்பாட்டில் பிறை தெரிந்ததாக அறிக்கை விட்டு 6ம் தேதி ரமலான் 1437இன் நோன்பை அறிவித்தது ஜாக்.
D:\Articles\~பிறை ஆய்வுகள்\சவுதியை கண்மூடி பின்பற்றும் ஜாக்\F2016Jun05.png

ஜூன் 5 - 2016 உலகில் எங்குமே பிறை தெரியாத நாளாகும். (சிலியில் பிறை தெரிய வாய்ப்பிருந்தாலும் அந்த சேதி ஜாக்கை அடையும்போது விடிந்திருக்குமே!)
காப்பாடில் சூரியன் மறையும்போது பிறையின் வயது 10 மணி 25 நிமிடம் 
சூரிய மறைவு 18:55
சந்திர மறைவு 19:14
சூரியன் மறைந்து 19 நிமிடத்தில் சந்திரன் மறைகிறது. 
19 நிமிடத்தில் மறையும் 10மணி வயது பிறை நிச்சையம் இந்தியாவில் எங்குமே கண்ணுக்கு தெரியாது.
ஆனால் கண்ணுக்கு தெரியாத இந்தப் பிறையைப் பார்த்ததாக கேரள ஹிலால் கமிட்டி அறிவித்தது. அதை அப்படியே ஏற்று அறிவித்தது ஜாக். கேரள ஹிலால் கமிட்டி பிறையைக் கண்ணால் பார்ப்பதை விட்டு வருடங்கள் ஆயிற்று. அவர்கள் சூரியன் மறைந்த பின் சந்திரன் மறைந்தால் புது மாதம் பிறக்கும் எனும் கணக்கை கையில் எடுத்து வருடங்கள் ஆகின்றன. இதற்கான ஆதாரங்களும் நம்மிடம் உள்ளன. எகிப்தைப் போல, சவுதியைப் போல, ஏன் கேரளத்தைப் போல ஒரு காலண்டருக்கு மாறாமல் ஒவ்வொரு மாதமும் எதாவது ஒரு காலண்டரை தேடி அலையும் அவல நிலை ஜாக்கிற்கு ஏன் நேர்ந்தது. சாத்தியமில்லாத சர்வதேசப் பிறை எனும் வெற்று சித்தாந்தத்தை தூக்கிப் பிடிக்கவா இந்த கபடம்.

*************************************

D:\Articles\~பிறை ஆய்வுகள்\சவுதியை கண்மூடி பின்பற்றும் ஜாக்\F2015Oct13.png
இது முஹர்ரம் 1437 பிறை கணிப்பு வரைபடம். 13 அக்டோபர் 2015 அன்று உலகில் பிரெஞ்சு பாலினேசிய தீவுகளை தவிர எங்குமே பிறை கண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை. (பிரெஞ்சு பாலிநேசியாவில் தெரிய வாய்ப்பிருந்தாலும் அங்கிருந்து ஜாக்கிற்கு தகவல் கொடுக்க யாருமில்லை. ஜாக்கிற்கு தகவல் வருவதாக வைத்துக்கொண்டாலும் அந்த தகவல் வரும்போது 14ம் தேதி விடிந்திருக்கும்)

பொதுவாக தங்கள் உம்முல் குறா நாட்காட்டியை பின்பற்றும் சவுதி அரசு இந்த முஹர்ரம் பிறை தெரியாததால் மாதத்தை 30ஆக முழுமைப்படுத்தி அக்டோபர் 15 முஹர்ரத்தின் முதல் தேதியாக அறிவித்தது. முந்தய மாதமும் (தில் ஹஜ்) சவுதி தங்கள் காலண்டரை பின்பற்றாமல் பிறை பார்க்கப்படாததால் மாதத்தை முழுமை செய்தது குறிப்பிடத்தக்கது. சவுதியின் அறிவிப்பு கீழேயுள்ளது.
ஆனால் சவுதி எப்போதுபோல காலண்டரைத்தான் பின்பற்றும் என்ற நம்பிக்கையில் அவசரக்குடுக்கைகளாக ஜாக் 14அக்டோபர் முஹர்ரம் ஆரம்பித்து விட்டாதாக அறிக்கை வெளியிட்டது. அறிவிப்பு கீழேயுள்ளது. மூக்குடைந்தபோது எகிப்தில் தொலைநோக்கியால் கூட பார்க்கமுடியாத பிறையை “நாங்கள் எகிப்து அறிக்கையை ஏற்றோம்” என்று புழுகியது. உம்மல் குறா காலண்டர் போல எகிப்திலும் ஒரு காலண்டர் உள்ளது. அவர்கள் அதை பின்பற்றுகின்றனர். அன்றைய தினம் உலகில் எந்த முஸ்லிமும் பிறை பார்த்ததாக தகவல் இல்லை. எந்த கொள்கையுமே இல்லாமல் இப்படி தொழில் செய்வதை விட ஹிஜ்ரி கமிட்டி போல ஒத்துவராத கணக்கையும் அதற்கு துணை போக குர்ஆன் வசனங்களையும் ஹதீசையும் திரிக்கும் வேலையையாவது இவர்கள் கையில் எடுக்கலாம்.