Sunday 6 March 2016

புர்ஜ் கலீபாவின் மேல் மாடியில்

D:\Articles\~ஹிஜ்ரி கமிட்டி\Burj khalifa-1.jpgD:\Articles\~ஹிஜ்ரி கமிட்டி\Burj khalifa-2.jpg
விவாதத்துக்கு மத்தியில் ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றும் ஒரு சகோதரர் “புர்ஜ் ஃகலீஃபாவின் (துபையில் இருக்கும் உலகிலேயே உயரமிக்க கட்டிடம்) மேல்மாடியில் இருந்து பார்த்தால் பிறையை மேகம் மறைக்காதே! அப்போ மேகம் மறைக்காத அவருக்கு ஒரு தேதியும் கீழே இருப்பவருக்கு ஒரு தேதியும் வருமா?” என்று ஒரு அதிரடிக் கேள்வியைக் கேட்டார்.
புர்ஜ் ஃகலீஃபாவின் உயரம் 800மீட்டர். மேகங்கள் குறைந்தது 2000 மீட்டர்கள் முதல் 6000 மீட்டர்கள் உயரத்திற்கு மேல் வரைக் காணப்படும். புர்ஜ் ஃகலீஃபாவின் உச்சாணிக்கொம்பில் இருந்து பார்த்தாலும் மேகம் இருந்தால் அது பிறையை மறைக்கும். புர்ஜ் ஃகலீஃபாவுக்கு மேலேயும் 6கிலோமீட்டர் உயரத்திற்கு மேகங்கள் காணப்படலாம்.
“30ஆம் இரவில் பிறையைத் தேடுங்கள், பிறைக் கண்ணுக்கு தெரிந்தால் அந்த மாதம் 29நாட்களுடன் முடிந்துவிடும். பிறைக் கண்களுக்கு மறைக்கப்பட்டால் அம்மாதம் 30நாட்களைக் கொண்டதாக நீளும்”. இதுவே இறைக்கட்டளை. பிறையை எது மறைத்தாலும் அது தேதியை மாற்றிவிடும். பிறையை எவையெல்லாம் மறைக்கும் என்பதை இந்த லிங்கில் இருக்கும் கட்டுரையில் விவரித்துள்ளோம் http://www.piraivasi.com/2016/02/13.html
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த கேள்வியைக் கேட்ட சகோதரர் அறியாமையால் கேட்டுவிட்டார் என நினைத்தோம். ஆனால் பின்னர் தொடர்ந்து பேசுகையில் அவர் ஆதாரம் என்று மேலிருக்கும் இரண்டு படங்களைப் பகிர்ந்தார். அந்த படங்களில் புர்ஜ் ஃகலீஃபாவுக்கு கீழ்தானே மேகங்கள் இருக்கின்றன. அதற்கு மேலே மேகங்கள் இல்லையே?
அரபு நாடுகளில் குளிர்காலத்தில் பனி மூட்டம் தரையைத் தொடும். ஒரு மீட்டர் தொலைவில் இருக்கும் பொருட்களைக் கூட பனிமூட்டம் மறைத்து விடும். அத்தகையப் பனிக்காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை. மேகத்திற்கும் பனிமூட்டதிற்கும் வித்தியாசம் தெரியாத கமுட்டியினர். “burj khalifa clouds” என்று கூகுளில் தேடிய கூகுள் வீரருக்கு பனி மூட்டம் என்றால் என்ன மேகங்கள் எந்த உயரத்தில் இருக்கும் எனும் தகவல்களை கூகுளில் வாசிக்கத் தெரியவில்லையே.
1மீட்டர் தொலைவில் இருக்கும் பொருட்களை மறைக்கும் சக்திவாய்ந்த பனிமூட்டம் 4லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனை மறைக்காதா? பனி மூட்டத்தை விட சக்திவாய்ந்த கார்மேகங்கள் பிறையை மறைக்காதா? 15கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனை மறைக்கும் கார்மேகங்கள் நூலை போன்ற மெல்லிய பிறையை மறைக்காதா?
சிந்தியுங்கள் சகோதரர்களே! தங்களை விஞ்ஞானிகள் என்று கூறிக்கொண்டு மக்களை ஏய்க்கும் ஏமாற்றுப் பேர்வழிகளை நம்பாதீர்கள்! மூ’மீன் ஏமாறமாட்டான்