Monday 10 April 2017

அரபு மொழியும்! அமாவாசைகளும்!! -1

குர்ஆன் ஹதீஸை கடைபிடிக்க அரபு மொழியை அறிந்துகொள்ளவேண்டிய கட்டாயமில்லை. ஆனால் அவற்றை ஆய்வு செய்ய அரபு மொழியை தெளிவாக அறிந்திருப்பது கட்டாயமாகிறது. அரபு மொழி அறியாமையும் இறைவனின் படைப்புகளின் உண்மையை அறியாமையும்தான் ஹிஜ்ரா காலண்டரை மக்கள் பின்பற்றவும் அதை மக்களை பின்பற்ற செய்யவும் காரணிகளாக அமைகின்றன.

ஏற்கனவே இவர்களுக்கு அரபு மொழி தெரியாதென்பதை பல தருணங்களில் கட்டுரைகளாக தந்துள்ளோம்.

பார்க்க 
👉 http://www.piraivasi.com/2016/07/21.html 
👉 http://www.piraivasi.com/2016/07/22.html 
👉 http://www.piraivasi.com/2016/07/30.html 

அக்கட்டுரைகளின் தொடர்ச்சிதான் இது
மலையாளத்தில் இருக்கும் வீடியோவை தமிழ் வாசகர்கள் சற்று சிரமப்பட்டு விளங்கிக்கொள்ளவும். 11:46 முதல் 12:25 நிமிடம் வரை வீடியோவைக் கேளுங்கள்.
ஹிஜிராக் கமிட்டியின் பேச்சாளர்கள் மேடைகளில் பேசும்போது தங்கள் கொள்கையை ஏற்காதவர்களின் பேச்சுக்களில் உள்ள குறைகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசுவார்கள். ஹிஜிராக் கமிட்டியின் கொள்கைளை நிலை நாட்ட இத்தகைய நடைமுறைகளைத்தான் பின்பற்றுகின்றனர்.
இத்தகைய கொள்கையாளர்களின் மொழி அறிவும் விஞ்ஞான அறிவும்  எப்படிப்பட்டது என்பதற்கு சான்றாக ஒரு சோற்றைப் பதம் பார்ப்போம்.
மேலே வீடியோவில் பேசும் மேடைப்பேச்சாளர், இரவு பகலைப் பற்றி பேசுகிறார். அதாவது, "இரவா? பகலா? முந்தியது எது?" என்ற கேள்விக்கு குர்ஆன் வசனங்களை தனது சுய விஞ்ஞான அறிவை வைத்து விளக்கமளிக்கிறார்.
அதாவது, குர்ஆன் வசனம் - 7:54 ன் படி "பகலை இரவு மூடுகிறதுஇரவு வேகமாக பகலை தொடர்கிறது" என்று தனது அரபு அறிவின் அறியாமையையும், தான் விஞ்ஞானத்தின் விளையாட்டுப் பிள்ளை என்பதையும் நிரூபணம் செய்தார்.
இவருக்கு முதலில் அரபு இலக்கண விதிமுறைகளை நாம் கற்றுக்கொடுப்போம்.
* -----  ** ------ ****
அவன்
அடித்தான்
பந்து
மட்டை
இந்த நான்கு வார்த்தைகளை வாக்கியமாக மாற்றும்போது நம்மை அறியாமலே "" மற்றும் "ஆல்" என்பதை சேர்த்து எழுதுவோம். தனித்தனி வார்த்தைகளை வாக்கியமாக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறை நமக்கு தெரியும்.
"அவன் பந்து() மட்டை(ஆல்) அடித்தான்" என்று வாக்கியத்தில் அமைப்போம்.
அதாவது, "அவன் பந்தை மட்டையால் அடித்தான்" என்று  தெளிவாக எழுதுவோம்.
"" மற்றும் "ஆல்" என்பதை இடம்மாற்றி எழுதுவதில்லை. ஏனெனில் அதன் அர்த்தம் சரியானதாக இருக்காது என மொழியறிவு உள்ள எவராலும் கூற முடியும்.
"அவன் பந்து(ஆல்) மட்டை() அடித்தான்" அதாவது "அவன் பந்தால் மட்டையை அடித்தான்" என்று எழுதினால் வாக்கியம் மட்டும்தான் கிடைக்கும். ஆனால், அந்த வாக்கியத்தில் அர்த்தம் கிடைக்குமா?
இதுபோலதான், பிறமொழிகளில் நாம் வாக்கியங்களை அமைக்கும்போது அந்தஅந்த மொழியின் விதிமுறைகளுக்கேற்ப அமைக்க வேண்டும்.
அரபு மொழியிலும் முதல் Object க்கு "" என்பதையும் இரண்டாவது Object க்கு "ஆல், ஆக" என்பதையும் கொடுக்கின்றனர்.
 ...يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ... (25:70)
அல்லாஹ் மாற்றுவான் - .يُبَدِّلُ اللَّهُ
அவர்களின் பாவங்களை - سَيِّئَاتِهِمْ (1)
நன்மைகளாக - حَسَنَاتٍ (2)
1 வது Object "" யும், 2 வது Object "ஆக" வும் பெறுகிறது.
இதை இடம் மாற்றி கொடுத்தால் "நன்மைகளை அவர்களின் பாவங்களாக அல்லாஹ் மாற்றுவான்" என்று பிழையான அர்த்தமாகிவிடும்.
இதுபோல இடம்மாற்றி கொடுத்துதான் விஞ்ஞான உளறலில் வசனம் பேசினார் சலபி.
அதை விரிவாகவே பார்ப்போம்.
இந்த அடிப்படை விதியைக்கொண்டு 7:54 வசனத்தின் ஒரு பகுதியை அனுகுவோம்.
..يُغْشِي اللَّيْلَ النَّهَار... 7:54
 يُغْشِي (யுஃக் ஷீ - مضارع
اللَّيْلَ (லைய்ல) - مفعول به أوّل منصوب (Object 1)
النَّهَار (நஹார) - مفعول به ثان منصوب (Object 2)
அவன் மூடுகிறான் - يُغْشِي
எதை மூடுகிறான்?
அவன் இரவை மூடுகிறான் -
يُغْشِي اللَّيْلَ
முதலாவது மஃப்ஊல் (Object 1) "" பெறுகிறது.
எதைக்கொண்டு இரவை மூடுகிறான்?
அவன் இரவை மூடுகிறான் பகலால் - يُغْشِي اللَّيْلَ النَّهَار
இரண்டாவது மஃப்ஊல் (object 2) "ஆல்" என்பதைப் பெறுகிறது.
இரவைப் பகலால் அவன் முடுகிறான் இதுதான் அரபு இலக்கணத்தின் அடிப்படையில் மொழிபெயர்க்க வேண்டிய விதம்.
" பகலை இரவால் மூடுகிறான்" என்று  ஏன் இவர் வீடியோவில் பேசினார்?
 பகலை இரவால் மூடுகிறான் என்றுதான் பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் இருக்கிறது. அந்த காலத்திய மக்கள் அறிந்திருந்ததுபோலதான் வசனங்களை மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
இரவு வந்து பகலை மூடுவதாக மக்கள் நினைத்தார்கள். அதனால்தான் "பகலை இரவால் மூடுகிறான்" என்று அரபு இலக்கண விதியை மீறி விதிவிலக்காக மொழிபெயர்த்தனர்.
 அரபு அறிவை முன்னோர்களிடம் அடகு வைத்துவிட்டுதான் விஞ்ஞானம் பேசினார் இவர்.
1. பகல் இருக்கிறதாம். இரவானது வந்து அதை மூடுகிறதாம்.
2. இரவானது பகலை வேகமாக துரத்துகிறதாம்.
இந்த இரு கருத்துக்களும் அவரின் அறியாமையை பறைசாற்றின.
1. இரவால் பகலை மூட முடியாது. காரணம், பகலைத்தரும் சூரியனை மூடினால்தான் பகலை மூடுவதாக அர்த்தம். சூரியனை மூடக்கூடிய மூடி கமிட்டியிடம் இருக்கிறதா???
2. இரவு பகலை துரத்துகிறது என்றால் பகலானது இரவுக்கு முன்னால் ஓடுகிறது என்று அர்த்தம். ஓடிக்கொண்டிருக்கும் பகலை இரவால் எப்படி மூட முடியும்?
படுத்திருக்கும் ஒருவனை போர்வையால் மூடலாம். நமக்கு முன்பாக ஓடும் ஒருவனை போர்வையால் எப்படி மூடுவதோ?
இரவு பகலைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் குர்ஆன் வசனங்களில் விளையாடும் சலபியும், அவர் சார்ந்திருக்கும் கமிட்டியும் நம்மிடம் வந்து இரவு பகலைப் பற்றி அறிந்து கொள்ளட்டும். பிறகு கூறட்டும் முந்தியது பகலா? இரவா ? என்று.

இரவு பகல் தொடர்பான அதிக விஞ்ஞான விளக்கங்களுக்கு பார்க்க www.piraivasi.com/2016/06/15-2.html


தொடர்ந்து அவர் கேட்கும் சில கேள்விகளை பாகம் இரண்டில் பார்க்க இருக்கிறோம்...