Saturday 15 July 2017

மவாகீத் - அமாவாசி Vs பிறைவாசி

கமிட்டியின் மவாக்கீத்
http://alrashedoon.com/wp-content/uploads/2015/12/%D9%85%D9%88%D8%A7%D9%82%D9%8A%D8%AA-%D8%A7%D9%84%D8%B5%D9%84%D8%A7%D9%87.jpg
"பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்கு தேதிக்காகவும்(காலண்டர்), இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)"
இதுதான் கமிட்டியின் மொழிபெயர்ப்பு. அதாவது, மவாக்கீத் என்ற வார்த்தையை காலண்டர் என்றும் தேதிகள் என்றும் அர்த்தம் கொடுக்கின்றனர்.
இதற்கு ஆதாரமாக 7:142, 7:143, 78:17, 26:38 ஆகிய குர்ஆன் வசனங்களையும் முன்வைக்கின்றனர்.
இவர்களின் மொழிபெயர்ப்பை பார்க்கும் முன்பாக பிறைவாசிகளின் விளக்கத்தைப் பார்ப்போம்.
பிறைவாசிகளின் மவாக்கீத்
மவாக்கீத் (مَوَاقِيتُ) என்ற வார்த்தை "மீக்காத்" (مِيقَات) என்ற வார்தையின் பன்மை வார்த்தையாகும்.
"மீக்காத்" (مِيقَات) -ற்கு என்ன அர்த்தங்கள் இருக்கிறதோ அதன் பன்மை அர்த்தங்கள்தான் மவாக்கீத்திற்கு இருக்கும்.
மவாக்கீத் (مَوَاقِيتُ) - தை தேதிகள் என்று சொல்கிறார்கள் கமிட்டியினர். அப்படியென்றால் அதன் ஒருமையான மீக்காத் (مِيقَات) -ற்கு "தேதி" என்றொரு அர்த்தம் இருக்க வேண்டும்.
அரபு அகராதிகளையும் தஃப்ஸீர்களையும் ஹதீஸ் புத்தகங்களையும் நாம் பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து பார்த்த வகையில் மீக்காத் (مِيقَات) என்ற வார்த்தைக்கு "தேதி" என்றொரு அர்த்தமே கிடையாது.
மீக்காத் (مِيقَات) என்ற வார்த்தை "நிர்ணயிக்கப்பட்ட இடம்" மற்றும் "நிர்ணயிக்கப்பட்ட நேரம்" என்ற இரண்டு அர்த்தங்களில் கையாளப்படுகிறது.
ஹஜ்ஜின் போது இஹ்ராம் கட்டவேண்டிய எல்லையை குறிக்கவும் மற்றும் தொழுகைகளை "அதன் நேரத்தில்" தொழுது கொள்ள சொல்லும்போதும் மீக்காத் (مِيقَات) என்ற வார்த்தையை நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
2:189 ல் உள்ள மவாக்கீத் (مَوَاقِيتُ) என்ற பன்மை வார்த்தையையும், நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஃதும் இருக்கிறது.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம்
தொழுகையின் நேரங்களைப் பற்றிக் கேட்டார். தொழுகைகளை அதன்அதன் நேரங்களில் தொழுதுகாட்டி விட்டு அந்த மனிதரிடம் நடந்த உரையாடலில் உள்ள நபி(ஸல்) அவர்களின் வார்த்தை...
أَيْنَ السَّائِلُ عَنْ مَوَاقِيتُ الصَّلاَة
தொழுகையின் நேரங்களைப் பற்றி கேட்டவர் எங்கே? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்
فَقَالَ ‏"‏ مَوَاقِيتُ الصَّلاَةِ كَمَا بَيْنَ هَذَيْنِ ‏"‏
( நாம் தொழுதுகாட்டிய) இந்த இரண்டிற்கும் இடைப்பட்டவை போலதான் தொழுகையின் நேரங்கள் என்று கூறினார்கள் -
ஆக, மீக்காத் (مِيقَات) என்ற வார்த்தையை இடத்துடன் தொடர்புபடுத்தும்போது "நிர்ணயிக்கப்பட்ட இடம்" மற்றும் "எல்லை" என்று பொருள்படுகிறது.
[பன்மை : மவாக்கீத் (مَوَاقِيتُ) என்பது "எல்லைகள்" மற்றும் "நிர்ணயிக்கப்பட்ட இடங்கள்"]
மீக்காத் (مِيقَات) என்ற வார்த்தையை காலத்துடன் தொடர்புபடுத்தும்போது "நிர்ணயிக்கப்பட்ட காலம்" மற்றும் "நிர்ணயிக்கப்பட்ட நேரம்" என்றும் பொருளாகிறது.
[பன்மை : மவாக்கீத்( مَوَاقِيتُ) என்பது "நிர்ணயிக்கப்பட்ட காலங்கள்" மற்றும் "நிர்ணயிக்கப்பட்ட நேரங்கள்" ]
தொழுகையின் நேரம் - مِيقَات الصَّلاَة
தொழுகையின் நேரங்கள் - مَوَاقِيتُ الصَّلاَة
[மீக்காதுஸ் ஸலா - மவாக்கீத்துஸ் ஸலா]
ஹஜ்ஜின் எல்லை - مِيقَات الحَج
ஹஜ்ஜின் எல்லைகள் - مَوَاقِيتُ الحَج
[மீக்காத்துல் ஹஜ் - மவாக்கீத்துல் ஹஜ்]
மீக்காத் (مِيقَات) என்ற வார்த்தைக்கு "தேதி" என்றொரு அர்த்தமே கிடையாது. மவாக்கீத்( مَوَاقِيتُ) என்ற வார்த்தையை "தேதிகள்" என்றும் "காலண்டர்" என்றும் தங்களின் மனோ இச்சைப்படி மொழிபெயர்க்கின்றனர் கமிட்டியினர்.
இனி... கமிட்டியின் மொழிபெயர்ப்பு ஏமாற்று வேலையை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
கமிட்டி:
அப்போது சூனியக்காரர்கள் குறிப்பிட்ட "தேதி"யில், அறிவிக்கப்பட்ட நாளில் ஒன்று திரட்டப்பட்டார்கள். அல்குர்ஆன் (26:38)
இதில் எப்படி ஏமாற்று வேலை செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
மூஸா(அலை) அவர்களுக்கு எதிராக சூனியக்காரர்களை பண்டிகை நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திரட்டுவது என முடிவு செய்யப்பட்ட சம்பவத்தையும் குர்ஆன் விவரிக்கிறது.
"பண்டிகை நாளே உங்களுக்குரிய நேரம். முற்பகலில் மக்கள் ஒன்று திரட்டப்படட்டும்'' என்று அவர் கூறினார்(20:59)
இங்கு, நாள் என்பது பண்டிகை நாள். நேரம் என்பது அந்நாளின் முற்பகல்.
பண்டிகை நாளின் முற்பகலில் கூடுவது என நிர்ணயிக்கப்பட்ட அந்த நேரத்தை குறிப்பிடுகிறது.
இதுதான் 26:38 வசனத்தில் கூறப்படுகிறது.
فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ(26:38)
சூனியக்காரர்கள் திரட்டப்பட்டார்கள்- فَجُمِعَ السَّحَرَةُ
நிர்ணயயிக்கப்பட்ட நேரத்தில்(முற்பகல்) - لِمِيقَاتِ
அறியப்பட்ட நாளில் (பண்டிகை நாள்) - يَوْمٍ مَّعْلُومٍ
அறியப்பட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர். ( 26:38)
இதுதான் அந்த வசனத்தின் நேரிடையான பொருளாக கிடைக்கிறது. இதில் எங்கேயிருந்து வந்தது "தேதி"?
அடுத்த வசனம்
கமிட்டி:
நிச்சயமாக தீர்ப்பு நாள், "தேதி" நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவே இருக்கிறது. அல்குர்ஆன் (78:17)
தீர்ப்பு நாளிற்கு தேதி குறிக்கப்பட்டிருக்கிறதாம்?
எதனுடைய தேதியில்? பூமியின் தேதியிலா?
அற்ப விலைக்கு மூளையை விற்றவர்களே! தேதி என்றொரு சமாச்சாரமே பூமியில்தான். பூமியைக் கடந்து ஒருவன் சென்றுவிட்டால் அவனுக்கு ஏது தேதி???
அல்லாஹ்விடம் இருக்கும் காலக்கணக்கு வேறு என்று அல்லாஹ் சொல்லிவிட்டபோது அல்லாஹ்விடம் இருக்கும் விசயங்களுக்கு நீங்கள் தேதி சொல்வதா?
தீர்ப்பு நாள் என்பது பூமி மற்றும் வானங்கள் அழிக்கப்பட்டு பின்னர் அல்லாஹ் உயிர்கொடுத்து விசாரிக்கும் நிகழ்ச்சி அது. பூமியே அழிக்கப்பட்ட பின்னர் ஏது தேதி? எந்த தேதியில் வைத்து தீர்ப்பு நாள் நடக்குமாம்?
இது எல்லாம் நிச்சயமாக தெளிவற்றவனின் மனநிலையில் இருந்து வரக்கூடிய உளறல்கள்.
உலகம் அழிக்கப்படும் தேதி கூட எது என்று நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அந்த நேரத்தை அவன் மட்டும்தான் அறிவான் என்று வசனம் சொல்கிறது.
" யுகமுடிவு நேரம் எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது...(7:187)
யகமுடிவு ஏற்பட்டு பின்னர் வரும் தீர்ப்பு நாள் எந்த தேதியில் ஏற்படுமோ!!!
إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
தீர்ப்பு நாள் நிர்ணயிக்கப்பட்ட நேரமாக இருக்கிறது.(78:17)
إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ
தீர்ப்பு நாள் தான் அவர்கள் அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட நேரம்.(44:40)
இதில் எங்கேயிருந்து வந்தது தேதி? பூமியில் சந்திர காலண்டர் போட்டவர்கள் தீர்ப்பு நாள் வரை தேதி குறித்து விட்டனரோ!!!
கமிட்டியின் மற்றொரு ஏமாற்று மொழிபெயர்ப்பு...
கமிட்டி :
இன்னும், நாம் நிர்ணயித்த "தேதி"யில் மூஸா வந்தபோது, மேலும் அவருடைய இரட்சகனிடம் அவர் பேசினார். அல்குர்ஆன் (7:143)
மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று ஒரு மலையின் உச்சியை நோக்கி பயணம் மேற்கொள்கிறார். அந்த மலையில் ஒரு பகுதியில் தங்கி சில காலங்கள் தங்கி இறைகட்டளைகளை நிறைவேற்றுகிறார்.
இந்த சம்பவத்தில் "இடம்" மற்றும்"காலம்" ஆகிய இரண்டும் இடம்பெறுவதால், இந்த சம்பவம் தொடர்பான வசனங்களில் இடம் பெற்றிருக்கும் மீக்காத் (مِيقَاتِ) என்ற வார்த்தை "நிர்ணயிக்கப்பட்ட நேரம்" மற்றும் "நிர்ணயிக்கப்பட்ட இடம்" என்ற இரண்டு பொருளிலும் மொழிபெயர்க்கப்படுகிறது.
وَلَمَّا جَاءَ مُوسَىٰ لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ ...
நாம் நிர்ணயித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது...(7:143)
இதிலும் எங்கேயிருந்து வந்தது தேதி???
கமிட்டியின் பிறிதொரு ஏமாற்று வேலை..
கமிட்டி :
மூஸாவிற்கு நாம் முப்பது நாட்களை வாக்களித்தோம். மேலும் அவற்றுடன் பத்து நாட்களை இணைத்தோம். அப்பொழுது அவர் அவருடைய "இரட்சகனின் தேதி"யை நாற்பது நாட்களாக முழுமையாக்கினார். அல்குர்ஆன் (7:142)
அது என்ன "இரட்சகனின் தேதி???
இரட்சகனிடம் நாள் என்பது, அதாவது ஒரு தேதி என்பது நமது கணக்கில் ஆயிரம் வருடங்களாம்.
...உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது (22:47)
இரட்சகனின் இந்த தேதியில் எந்த தேதியில் மூஸா(அலை) அவர்கள் மலையில் இருந்தார்கள்? எந்த தேதியில் இரட்சகனிடம் பேசினார்?
وَوَاعَدْنَا مُوسَىٰ ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً ...
மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். அதை (மேலும்) பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது...(7:142)
இதில் எங்கேயிருந்து வந்தது தேதி???
போகாத ஊருக்கு வழி சொல்லும் கமிட்டியே! இது போன்ற ஆராய்ச்சியெல்லாம் செய்ய உங்களால் மட்டும்தான் முடியுமோ!!!
மவாகீத் என்றால் தேதிகள் என்றும் காலண்டர் என்றும் மொழிப்பெயர்க்கும் ஹிஜ்ராவினர் தங்களது காலண்டரை “மவாகீது ஹிஜ்ரா” என்றல்லவா அழைக்க வேண்டும்? ஏன் “தக்வீம் ஹிஜ்ரா” என்று பெயரிட்டு அழைக்கின்றனர்?