Monday 17 July 2017

அவதூறு: கிப்லாவை மாற்றியது யார்?

IDLக் கொண்டுதான் கிப்லாவை நிர்ணயம் செய்யவேண்டும் ஹிஜ்ராவினர் கட்டுரை எழுதியும், வீடியோக்களில் விளக்கியும், அனிமேஷன்கள் தயாரித்தும் பிரச்சாரம் செய்துவந்தனர். மேலும் IDL எனும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கற்பனைக்கோட்டை “இது அல்லாஹ் போட்ட கோடு, அது அல்லாஹ்வின் அத்தாட்சி, எனவே IDL ஐப் பின்பற்றி உருவாக்கப்பட்ட எங்க காலண்டர் அல்லாக் காலண்டர்” என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். IDLஐக் கொண்டு கிப்லாவை நிர்ணயம் செய்தால் நீங்கள் கஅபாவை முன்னோக்கமாட்டீர்கள் (Greenwich) க்ரெனிச்சைத்தான் முன்னோக்குவீர்கள் என்று நாம் விளக்கியபிறகு நாங்கள் கிப்லாவைப் பற்றி இன்றுவரை எதுவுமே பேசியதில்லை என்று அந்தர் பல்டி அடித்தனர். கிப்லா விஷயத்தில் இவர்கள் செய்த மோசடிகளை விளக்கி நாம் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம் பார்க்க:-
ஹிஜ்ராவினர் கிப்லாவை மாற்ற முயற்சித்ததற்கான ஆதாரங்கள்: http://www.piraivasi.com/2017/06/29-1.html
ஹிஜ்ராவினர் க்ரெனிச்சை தான் நோக்க சொல்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் http://www.piraivasi.com/2017/06/29-2.html
ஹிஜ்ராவினர் சொல்லும் தட்டை உலக கிப்லா சரியானதா? http://www.piraivasi.com/2015/09/hijiri-committee-qibla.html
திசைவணங்கும் துலுக்கர் http://www.piraivasi.com/2015/03/committeeQibla.html
இக்கட்டுரைகளால் ஆட்டம் கண்ட ஹிஜ்ராவினர் தங்களின் ரசிகர்களின் கவனத்தை திசை திருப்ப, அந்தர் பல்டி அடித்து, சம்பந்தமே இல்லாமல் உளறி ஒரு கட்டுரையை வெள்ளியிட்டனர். பார்க்க http://mooncalendar.in/index.php/ta/ta-faq/479-the-earth-is-the-center-of-makkah-city-can-i-change-the-international-calendar . இதில் நாம் சொல்வதற்கு எள்ளளவும் தொடர்பில்லாமல் திருடனுக்கு தேள்கொட்டிய கதையாய் வாய்க்கு வந்ததை உளறியுள்ளனர். இதற்கு வரிக்கு வரி பதில் அன்றே வெளியிட்டோம் பார்க்க. http://www.piraivasi.com/2016/03/4.html .
அவர்கள் வெளியிட்ட அதே கட்டுரையை மீண்டும் தூசுதட்டி புதிய கட்டுரைபோல இப்போது இணையத்தில் பரப்புகின்றனர்.
இவற்றிற்கான பதில் ஏற்கானவே “ஹிஜ்ராவினரின் கிப்லா மாற்றம் யூத சதியா?” எனும் கட்டுரையில் விளக்கமாக கொடுத்துவிட்டோம். எனினும் இப்போது இவர்கள் விழித்துக்கொண்டு கேட்டுள்ள புதிய கேள்விகளின் மடைமையை விளக்குவதாக இவ்வாக்கம் அமைந்துள்ளது.
//தமிழகத்தில் இதுவரை கட்டப்பட்டுள்ள பள்ளிவாயில் அனைத்தும் தவறுதலாக கட்டப்பட்டு விட்டன. அனைத்தையும் இடித்து கிப்லாவை சரியாக முன்னோக்கும்படி மாற்ற வேண்டும் என்கிறார்களா? தங்கள் கருத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் முதலில் தமிழகத்திலுள்ள ததஜவினரின் பள்ளிவாயில்கள் அனைத்தையும் இடித்து சரி செய்யட்டுமே, செய்வார்களா?. //
உலகம் முழுவதும் கிப்லா கோணத்தை நிர்ணயிப்பதற்காக பயன்படுத்தப்படும் சூத்திரம் ஒன்றுதான். அதன் பெயர் GREAT CIRCLE Formula. கிப்லாவை எப்படி நிர்ணயம் செய்யவேண்டும் என்று குர்ஆன் வசனம் 2:144இல் அல்லாஹ் வார்த்தைகளில் சொன்னதை கணித பார்முலாவாக மாற்றப்பட்டதுதான் GREAT CIRCLE Formula. இந்த பார்முலாவானது நேர்வடக்கிலிருந்து எத்தனை டிகிரியில் கிப்லா அமைந்துள்ளது என்பதைக் காட்டும். இந்த பார்முலா தவறென்றோ இதை மாற்றவேண்டும் என்றோ நாம் சொல்லவில்லை. இந்த பார்முலாதான் உலகெங்கும் உள்ள பள்ளிகளின் கிப்லாவை நிர்ணயம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வடக்கிலிருந்து இத்தனை டிகிரி என்று கிப்லாவை அளந்து குறிக்க வடக்கு திசையை துல்லியமாக கண்டுபிடிக்கவேண்டும். இதைக் கண்டுபிடிக்க பிரபலமாக இருக்கும் முறை காம்பஸ் எனும் காந்தமானி. காந்தமானி காட்டும் வடக்கு திசை துல்லியமற்றது. திசையை நிர்ணயம் செய்ய அல்லாஹ்வே நமக்கு ஏற்படுத்தி தந்த முறைதான் சூரியனின் நிழலைக் கொண்டு திசையை அறிவது. அதுவே கிப்லாவைக் குறிக்க துல்லியமான முறை என்று நாம் கூறினோம் பார்க்க. “கிப்லா-ஓர் அறிவியல் பார்வை”: http://www.piraivasi.com/2014/11/QiblaaScientificviewinTamil.html
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் இடித்துக் கட்டவேண்டும் என்று நாம் சொன்னதாக அவதூறு சொல்கின்றனர் ஹிஜ்ராவினர். சூரியனைக் கொண்டு கிப்லாவை நிர்ணயம் செய்யும் முறையை அல்லாஹ்வே ஏற்படுத்தி தந்துள்ளான். அதுவே மிக துல்லியமான முறை. அந்த முறையைக் கொண்டு எல்லா பள்ளிகளிலும் கிப்லாவை சரி பார்க்க வேண்டும். தவறாக இருந்தால் பள்ளிகளில் இருக்கும் விரிப்புகள், அல்லது ஸஃப்புகளை குறிப்பிடும் கோடுகளை சரி செய்தால் போதுமானதே. மூடைப்பூச்சி தொல்லை இருந்தால் தன்னுடைய வீட்டைக் கொளுத்துவார்கள் போல நம்ம விக்கி விஞ்ஞானிகள்.
//ததஜ பிறைவாசிகள் கிப்லா திசையைப் பற்றி ரெம்பவும்தான் அலட்டிக் கொள்வதை பார்க்கிறோம்.//
//கிப்லா பற்றிய விளக்கம் என்று ததஜவினர் கூறி வருவதே, அவர்களின் தமிழகப்பிறை நிலைப்பாட்டில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே.//
பிறைவாசிகள் கிப்லா திசையைப் பற்றி எந்த அலட்டலும் செய்யவில்லை. IDLஐக் கொண்டுதான் கிப்லாவை நிர்ணயம் செய்யவேண்டும் என்று ஹிஜ்ராவினர் தங்கள் யூத சிந்தனையை பிரச்சாரம் செய்துவரும்போது கஅபாவைக் கொண்டுதான் கிப்லாவை நிர்ணயம் செய்யவேண்டும் என்ற உண்மையை சொல்வதற்கு பிறைவாசிகள் தள்ளப்பட்டோம். பிறையில் எங்களுடைய நிலைப்பாடு மாநில பிறை என்று ஹிஜ்ராவினர் அவதூறு கூறிவருகின்றனர். தமிழ்நாட்டில் மாநில நிலைப்பாடு என்றோ இலங்கையில் தேசிய நிலைப்பாடு என்று நாம் என்றும் சொன்னது கிடையாது. குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து வரும் பிறைத் தகவலை மட்டுமே ஏற்று செயல்படுத்த வேண்டும் என்பது இப்னு அப்பாஸ் அறிவிக்கும் ஹதீசிலிருந்து நாம் எடுக்கும் சட்டம். பார்க்http://www.piraivasi.com/2017/06/28.html . இந்த எல்லையை நிர்ணயிக்கும் உரிமையை மார்க்கம் மக்களுக்கு வழங்கியுள்ளது. எங்களால் தமிழக அளவில் மக்களை ஒருங்கிணைக்க முடிவதால் தமிழகத்தில் பிறை அறிவிப்பு செய்கிறோம். நாளை கேரளாவும் எங்களுடன் நபி வழியில் இணைந்துகொள்ள ஆசைப்பட்டால் அவர்களையும் சேர்த்துகொள்வோம். களியக்காவிளை – கன்னியாகுமரி எத்தனை கிலோமீட்டர், கன்னியாகுமரி – சென்னை எத்தனை கிலோமீட்டர் என்ற கிலோமீட்டர் கணக்கெல்லாம் நபி வழியில் இல்லை. இதெல்லாம் மத்ஹபை பின்பற்றும் ஹிஜ்ராவினரின் சந்தேகங்கள்.
கிப்லாவை க்ரெனிச்சை நோக்கி மாற்றுவதற்கு ஹிஜ்ராவினர் துடிப்பதால் நாம் அந்த உண்மையை சொல்கிறோமே தவிர, எங்கள் நிலைபாட்டை ஆதாரத்துடன் நிறுவ என்றுமே தவறியதில்லை.
//கிப்லா திசையை முன்னோக்குவது பற்றிய விரிவான ஆய்வறிக்கைகளை ஹிஜ்ரிகமிட்டி இன்னும் வெளியிடவில்லை. //
இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இதுவே சான்று. இவர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கைகள், வீடியோ விளக்கங்கள், அனிமேஷன்கள் ஆகியவற்றை இங்கே காண்க
ஹிஜ்ராவினர் கிப்லாவை மாற்ற முயற்சித்ததற்கான ஆதாரங்கள்: http://www.piraivasi.com/2017/06/29-1.html
//சுருக்கமாக சொல்வதென்றால், நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர், இஸ்லாத்தை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்ற நபித்தோழர்களான ஸஹாபாக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிச் சென்றனர். அவர்கள் சென்றடைந்த பகுதிகள் அனைத்திலும் தொழுகைக்காக பள்ளிவாயில்களை அமைத்தனர். அவர்களில் யாரும் பூமியை அஸிமத்தல் வடிவில் (Azimuthal Projection) பார்த்து, பெரிய வட்டக் கோட்பாட்டின் (Great Circle Concept) படி பூமிப்பந்தில் நூல் பிடித்து கிப்லாவின் திசையை நிர்ணயம் செய்யவில்லை. ஆனால் ததஜ பிறைவாசிகள் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக பிரச்சாரம் செய்கின்றனர்.//
விஞ்ஞானம் பொது அறிவு என எதுவுமே இல்லாமல் ஹிஜ்ரா அறிஞர்கள் எழுதிய பொய் இது. குர்ஆன் வசனம் 2:144 ஐக் கொண்டுதான் உலகம் முழுவதும் பள்ளிகளின் கிப்லாக்கள் அமைக்கப்பட்டன. சஹாபாக்கள் காலத்தில் நட்சத்திரங்கள், சூரியன், நிலவு ஆகியவற்றை வைத்தே கிப்லாவை நிர்ணயம் செய்தனர். சூரியனைக் கொண்டு பகலில் எவ்வாறு துல்லியமாக கிப்லாவை நிர்ணயம் செய்ய இயலுமோ அதே போல நிலவையும் நட்சத்திரங்களை பயன்படுத்தி இரவில் துல்லியமாக கிப்லாவை நிர்ணயம் செய்யலாம். சஹாபாக்கள் காலத்தில் கட்டப்பட்ட அனைத்து பள்ளிகளும் மிக சரியாக கஅபாவை நோக்கி அமைந்துள்ளன.
23 யும் 34 யும் கூட்டுவதற்கு ஒருவர் அக்காலத்தில் விரல்களைப் பயன்படுத்தி இருப்பார் இக்காலத்தில் ஒருவர் கால்குலேட்டரை பயன்படுத்தினால் கால்குலேட்டர் தவறென்று ஆகாது, விரலால் கூட்டுவது தவறென்றும் ஆகாது. நபிகளார் காலத்தில், சஹாபாக்கள் காலத்தில் கட்டப்பட்ட பள்ளிகள் அனைத்தும் மிக சரியாக (Azimuthal Projection) (Great Circle) விதிகளை ஒத்துள்ளன. விரலால் கூட்டுவதை எப்படி பிற்காலத்தில் கால்குலேட்டராக மாற்றினோமோ அதே போல தான் நட்சத்திரங்களால் கிப்லா நிர்ணயம் செய்வதை பிற்காலத்தில் (Azimuthal Projection) (Great Circle) என்று மாற்றினோம். விஞ்ஞானம் அறியாத ஹிஜ்ராவினருக்கு இது விளங்காது,.
//அவ்வளவு ஏன்? நாம் வாழுகின்ற இக்காலத்தில்கூட நாம் கட்டும் பள்ளிவாயில்களை யாரும் கமால்அப்தலி என்பவரின் கூற்றுப்படி (Great Circle on Azimuthal projection of earth) கிப்லாவின் திசையை அமைப்பதில்லை. காரணம் கிப்லா விஷயத்தில் இந்த அளவுக்கு கஷ்டப்பட வேண்டும் என்று மார்க்கம் நமக்கு வலியுறுத்தவில்லை. மார்க்கம் மிக இலேசானது.//
அறியாமையின் உச்சகட்டத்தில் உள்ளனர் ஹிஜ்ராவினர். உலகில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளுக்கும் Great Circle பார்முலாவை பயன்படுத்தியே கிப்லா கோணம் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த கோணத்தை காம்பஸ் பயன்படுத்தி வரைவதா சூரிய நிழலை பயன்படுத்தி வரைவதா எது அதிக துல்லியம் என்பதையே நமது ஆய்வில் விளக்கினோம். மேலும் Great Circle பார்முலாவை கண்டுபிடித்தவர் Dr. கமால்அப்தலி அல்லர். அவருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அது கண்டுபிக்கப்பட்டுவிட்டது. பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடாது. கிணற்றுத்தவளைகளுக்கு கிணறே உலகம்.
//1.தொழுகையின் வரிசைகள் கஃபாவை சுற்றி வட்டமாக அமைத்தால், அந்த வரிசை பூமிப்பந்தில் கஃபாவின் நேர் எதிர் பக்கம் (Antipode) வட்டமாக அமையும். ஆனால் ஹிஜ்ரி கமிட்டியினர் திசையை நோக்கி நேர்கோட்டில் நிற்கச்சொல்கிறார்கள் என்பது இவர்களின் முதலாவது குற்றச்சாட்டு. இதை விளக்கி அவர்கள் வெளியிட்ட படத்தை இதன் கீழே அப்படியே தருகிறோம்.
மேலே உள்ள படம் மக்காவிலுள்ள கஃபாவை சுற்றி வட்ட வடிவில் தொழுகை வரிசை அமைந்திருப்பதை விளக்குவது ஆகும். இந்த வரிசையை அப்படியே நீட்டிக்கொண்டே சென்றால் பூமிப்பந்தில் கஃபாவின் நேர் எதிர்முனை (Antipode) கீழ்க்கண்டவாறு அமையும் என்கின்றனர். எனவேதான் அந்த பகுதியை புதிய தேதிக்கோடாக அமைக்க வேண்டும் என்றும் ததஜவினர் கூறி வருகின்றனர்.
இதில் நாம் என்ன கேட்கிறோம் என்றால்,
1. மேலே உள்ள படங்களை அடிப்படையாக வைத்துதான் கிப்லா நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்து ஒரு ஆதாரத்தையாவது தாருங்கள் என்கிறோம்.//
அல் குர்ஆன் 2:144 (முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்பு வீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! 'இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை' என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை
இதுவே ஆதாரம். இதன் அடிப்படையில் கிப்லா அமைக்கப்பட்ட மஸ்ஜிதுன் நபவியே இன்றும் நின்றுகொண்டிருக்கும் ஆதாரம். வேறென்ன ஆதாரத்தைக் கேட்கிறார்கள் ஹிஜ்ராவினர்? சூரியன் உச்சத்தை கடப்பதே லுஹ்ர் தொழுகைக்கான நேரம், ஆனால் இன்று சூரியன் நமது meridianஐக் கடப்பது லுஹ்ர் தொழுகைக்கான நேரம் என்கிறோம். இரண்டுமே ஒன்றுதான். இதை விளங்குவதற்கு குறைந்த பட்சம் ஐந்தறிவு வேண்டும். அது இல்லாத ஹிஜ்ராவினருக்கு இது விளங்காது.
கிப்லாவை எவ்வாறு நிர்ணயம் செய்யவேண்டும் என்பதை விளங்க எந்த விஞ்ஞானமும் கணிதமும் தேவையில்லை. இந்த வீடியோவை பார்த்தால் போதுமானது


இத்தகைய உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற விஷயத்திற்குதான் ஆதாரம் கேட்கிறார்கள் ஹிஜ்ராவினர்
//2. பெரிய வட்டக் கோட்பாடு என்ற இந்த சூத்திரத்தின் அடிப்படையில்தான் ஒவ்வொரு பள்ளிவாயிலும் நிறுவப்பட வேண்டும். அதுவல்லாமல் அமைக்கப்பட்ட பள்ளிவாயில்கள் அனைத்தும் கஃபாவை சரியாக முன்னோக்கிட வில்லை என்பதால் அதில் தொழக்கூடாது என்பதுதான் இவர்களின் வாதமா? அப்படியானால் அதற்கும் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரங்களை தாருங்கள் என்று கேட்கிறோம்.//
//3. மேலும் மேற்படி பெரிய வட்டக் கோட்பாட்டின் படி அமையாத பள்ளிவாசல்களை என்ன செய்வது? அதில் தொழுது வரும் முஸ்லிம்களின் தொழுகையின் நிலை என்ன? என்பதையும் இவர்கள் தெளிவுபடுத்திட வேண்டும்.//
தொழுகைக்கு கிப்லாவை முன்னோக்குவது அவசியம். ஒரு பள்ளி கிப்லாவை முன்னோக்கி கட்டப்படவில்லை என்றால் அந்த பள்ளியை இடிக்க தேவையில்லை. தொழுகைக்காக உள்ளே விரிக்கப்பட்டிருக்கும் விரிப்புகளை சரியான கிப்லாவை நாம் முன்னோக்கி நிற்க தோதுவாக மாற்றி இட்டால் போதுமானது. அதுவரை தொழுத தொழுகை என்னவாகும் என்ற கேள்வி கேட்டால் “அல்லாஹ் அருளாளன், மன்னிப்பவன்” என்ற பதிலே நம்மிடமிருந்து வரும்.
அதாவது ததஜவினர் கூறும் பெரிய வட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் கஃபாவை முன்னோக்கி அமைந்துள்ள நாடுகளில் வட்டமாக தொழுகை வரிசையை ஓரளவுக்கு அமைத்து விடலாம். அதே நேரத்தில், பூமிப்பந்தில் கஃபாவின் நேர் எதிர்முனை (Antipode) பகுதியில் ஒரு பள்ளிவாயில் கட்டப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் கூறுவதைப் போல வட்டமான இந்த தொழுகை வரிசையை அப்படியே நீட்டிக்கொண்டே சென்றால், கஃபாவின் நேர் எதிர்முனையிலுள்ள அந்த பள்ளிவாசலில் தொழுகைக்கான வரிசையை எவ்வாறு நாம் அமைக்க முடியும்? நமது இக்கேள்வியை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள இதன்கீழ் படங்களின் மூலம் விளக்குகிறோம்.
http://ottrumai.net/Images/ProstrateTowardsKaba.jpg
மேலே உள்ள படம் கஃபாவை சுற்றி வட்டமாக அமையும் தொழுகை வரிசையை விளக்குகிறது. கீழுள்ள படம் கஃபாவுக்கு எதிர்பக்கமுள்ள ஒரு மஸ்ஜிதின் தொழுகை வரிசையானது, நேர்கோட்டில் இல்லாமல் 360 டிகிரி வட்டமாக ஒவ்வொருவரும் தத்தமது முதுகை காட்டிக் கொண்டு நிற்பதுபோல அமையும். ததஜ பிறைவாசிகளின் கருத்தை பின்பற்றினால் அங்குள்ள பள்ளிகளில் இப்படி நின்றுதான் தொழ முடியும்.
http://ottrumai.net/Images/MasjidAntipod.jpg
முஸ்லிம்களை முதுகைக் காட்டிக் கொண்டு தொழுவதற்குதான் கட்டுரைக்கு மேல் கட்டுரையாக வரைந்து தள்ளினார்கள் போலும். கிப்லா விஷயத்தை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் மிக இலகுவாக ஆக்கித் தந்துள்ள நிலையில், அதை ஏன் சிரமமாக்க வேண்டும்? இப்படி யாரும் கேள்விகளை கேட்டுவிடக்கூடாது என்பதற்காக கிப்லா ஆய்வு என்ற பெயரில் பல முரண்பட்ட கருத்துக்களையும் தங்கள் இணையதளத்தில் பதிந்துள்ளனர். அவற்றையும் அப்படியே தருகிறோம்.
'ஹரமில் தொழுபவர்கள் காஅபாவை சுற்றி நின்று தொழுவது போன்று கஅபா எதிர் முனையில் உள்ளவர் எந்த திசையை நோக்கி தொழுதாலும் அது கஅபா திசையே. அதனை சுற்றிலும் 1000 கிலோமீட்டர் அளவிற்கு அந்த இடத்தை கடலாக்கி விட்டான். அப்படியே வீம்புக்கு அந்த இடத்தில் செயற்கையாக ஒரு தீவை உருவாகினாலோ, கப்பலை நிறுத்தினாலோ கூட இஸ்லாம் அதற்கு தீர்வு வழங்காமல் இல்லை. ரசூலல்லாஹ் கஅபாவிற்கு உள்ளே நின்று தொழும்போது கஅபாவின் வாசலின் எதிரில் உள்ள சுவற்றை நோக்கி தொழுதார்கள் என்று ஹதீஸில் தெளிவாக உள்ளது. அதே போல் மிகச்சரியாக கஅபாவின் எதிர்முனையில் நின்று தொழுபவர்கள் ரசூலுல்லாஹ் கஅபாவிற்குள் நோக்கிய அந்த சுவற்றை நோக்கி தொழுதால் போதுமானது.'
நாம் எந்த கேள்விகளுக்கு முன்னரே விடையளித்துவிட்டோமோ அதையே மீண்டும் கேள்வியாக கேட்டிருப்பது வேடிக்கைதான். கஅபாவுக்கு மிக சரியாக எதிர் முனையில் ஒரு பள்ளியை கட்டினால் அங்கிருந்து எங்கு நோக்கினாலும் கிப்லாதான். எனினும் சிறந்த தீர்வை நபிவழியில் தேடினோம். இதற்கு ஹதீஸ்களில் தீர்வு உள்ளது.
காபாவிற்கு வெளியே நிற்பவர் காபாவை நோக்கி வட்டமாக நின்று தொழுவார். கஅபாவின் உள்ளே தொழுபவரின் நிலையென்ன?
நபிகளார் கஅபாவிற்கு உள்ளே நின்று தொழும்போது எங்கு நோக்கி தொழுதார்களோ அங்குநோக்கிதான் கஅபாவின் உள்ளே நின்று தொழுபவர் தொழவேண்டும். எனில், கஅபாவிற்கு மிக சரியாக எதிர்முனையில் கட்டப்பட்ட பள்ளி வாசளுக்குள்ளே நின்று தொழுபவரும் அதே திசையை தேர்ந்தெடுக்கலாம் என்று நபிவழியில் நாம் ஒரு தீர்வை சொன்னோம். ஆனால் குழப்ப வாதிகளுக்கு அது விளங்கவில்லை.
மேலும் இந்த தீர்வை சொல்வதற்கு முன்னதாக இப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. கஅபாவிற்கு எதிர்முனையை சுற்றிலும் சுமார் 1000கிலோமீட்டர் சுற்றளவுக்கு கடல்தான் உள்ளது. ஹிஜ்ராவினர் போன்ற குழப்பவாதிகள் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்று அல்லாஹ்வுக்கு தெரியாதா! அதனால்தான் அல்லாஹ் அதை கடலாக மாற்றிவிட்டான் என்றும் சொன்னோம். அதையும் மீறி அல்லாஹ்வை படைப்பை எதிர்த்து ஹிஜ்ராவினரை போன்ற குழப்பவாதிகள் வீம்புக்காக அங்கே ஒரு தீவை எழுப்பினாலும் இஸ்லாம் அதற்கு தீர்வு சொல்லாமல் விட்டுவிடவில்லை என்று சொல்லி நபி வழி தீர்வை சொன்னோம்.
//முதலாவதாக, கஃபாவுக்கு எதிர்முனையில் 1000 கிகோமீட்டர் அளவுக்கு கடல் மட்டும்தான் இருக்கிறது என்று இவர்கள் எழுதியுள்ளது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். அப்பகுதிக்கு மிக அருகில் பல்வேறு தீவுக்கூட்டங்கள் உள்ளன.//
கஅபாவின் எதிர்முனைக்கு 55கிலோமீட்டருக்கு அருகிலேயே மனிதன் கால் வைக்கும் நிலப்பரப்பு உள்ளது. ஆனால் அது மனிதன் வசிக்க இயன்ற பகுதியா? 1000கிலோமீட்டர் சுற்றளவுக்கு கடல்தான் உள்ளது என்று நாம் சொன்னது மனிதன் வசிக்கும் பகுதியைத்தான். கஅபா எதிர்முனைக்கு அருகே மனிதன் வசிக்கும் பிரெஞ்சு பாலினேசியா எனும் தீவு கஅபா எதிர்முனைக்கு 1000கிமி அப்பால் உள்ளது. ஹிஜ்ராவினர் பொங்கி எழும் 1000கிமி என்ற எல்லைக்குள்ளாக மனிதன் வசிப்பதாக இருந்தால் கூட அந்தே பகுதிக்கென்று நிர்ணயிக்கப்பட்ட கிப்லா இருக்கும். அங்கே எந்த பிரச்சனையும் இருக்காது.
//மக்காவை பூமியின் மத்தியப் பகுதியாக்குவோம் என்று இவர்கள் முன்பு வாதித்தனர். சுமார் 1200 சதுர கீலோ மீட்டர்கள் கொண்ட ஒட்டுமொத்த மக்கா நகரையே ஒரு மையப்புள்ளி என்று வைத்து அதற்கு எதிர்பகுதியில் சுமார் 1200 சதுர கீலோ மீட்டர்கள் அளவுக்கு தேதிக்கோட்டை அமைக்க வேண்டுமா? என்று நாம் கேள்வி எழுப்பினோம் (பார்க்க). நிலைமையை புரிந்து கொண்டு 'கஃபா', 'கஃபாவின் எதிர்முனை' என்று எல்கையை சுருக்கி தங்கள் வாதத்தை மாற்றி விட்டனர். காரணம் புனித கஅபா என்பது பரப்பளவில் சுமார் 13 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்டது என்பதால்.//
பொய்யை உண்மையைப் போல புனைவதில் ஹிஜ்ரா தலைவர்ககளை மிஞ்ச உலகில் ஆளில்லை. “திசைதொழும் ஹிஜ்ராவினர்” எனும் கட்டுரையை வரைவதற்கு முன்பே ஸாகிர் நாயக்கிற்கு மறுப்பாக “பூமியின் மையத்தில் கஅபா உள்ளதா?” எனும் கட்டுரையை வெளியிட்டோம். அதில் பூமியின் மையப்புள்ளி அதன் மேற்பரப்பில் அமையாது என்று தெளிவாக விளக்கியிருந்தோம். மக்காவை பூமியின் மையப்பகுதியாக்குவோம் என்று நாம் என்றுமே வாதிட்டதில்லை. அந்த ஆசையும் நமக்கில்லை 😃.
மனிதனாக தேர்ந்தெடுத்த சர்வதேச தேதிக்கோடு பூமியின் எந்த இடத்திலும் வரையப்படலாம். ஆனால் நடைமுறை சிக்கல்களை கருதி கடல்பரப்பு நிறைந்த இடத்தில் அக்கோடு அமைவதே சிறந்தது. உலகிலேயே பெரிய கடல்பரப்பின் மையப்புள்ளியாக இருப்பது கஅபாவின் எதிர்முனைதான். இதை நாம் செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கொண்டு நிறுவினோம். பார்க்க “திசைதொழும் ஹிஜ்ராவினர்”. மேலும் IDL ஐ மாற்றவேண்டும் என்றும் நாம் வாதிடவில்லை. அரண்டவன் கண்ணனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதற்கு வாழும் சான்றுகள் ஹிஜ்ரா அறிஞர்கள்.
//இரண்டாவதாக, இவர்கள் குறிப்பிட்டுள்ளபடி அப்பகுதியில் கடல் மட்டுமே இருக்கிறது என்று அவ்விடத்தை தட்டிக் கழிக்க இயலாது. பூமியின் நிலப்பரப்பு என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுதல்களுக்கு உள்ளாகியே வந்துள்ளது. தற்போது அவ்விடத்தில் கடல் மட்டும்தான் உள்ளது என்று வைத்துக் கொண்டாலும், நாளை தீவுக்கூட்டங்கள் அங்கு உருவாகலாம். எனவே ஒரு விஷயத்திற்கு இஸ்லாமிய அடிப்படையில் தீர்வைச் சொல்லும்போது இவை அனைத்தையும் சிந்திக்க வேண்டும்.//
ஹிஜ்ரா அறிஞர்களே! நீங்கள் வீம்புக்காக அங்கே தீவை கட்டினாலும் என்ன செய்யவேண்டும் என்று ஹதீசிலிருந்து தீர்வை சொல்லிவிட்டோமே!
//மூன்றாவது, அவ்விடத்தில் செயற்கை தீவுகளை ஏற்படுத்துவதும், கப்பலில் பயணிப்பதையும் வீம்புக்காக என்று ததஜ பிறைவாசிகள் எழுதியுள்ளனர். பிரஞ்சு பாலினேசியா தீவுகள், டெமடங்கி மற்றும் காம்பியர் தீவுகள் என்று அழைக்கப்படும் பல்வேறு தீவுக்கூட்டங்கள் அவ்விடத்திற்கு மிக அருகில்தான் அமைந்துள்ளன. ஒவ்வொரு தீவுகளுக்குமிடையில் கடல் வழியான போக்குவரத்துதான் அங்கு உள்ளது. சிறிய கப்பல்கள் மற்றும் படகுகள் எந்நேரமும் சென்று கொண்டிருக்கக்கூடிய கடல்பகுதி அது. எனவே அவ்விடத்தில் முஸ்லிம்கள் கப்பலில் பயணிப்பதை வீம்புக்காக என்று தட்டிக் கழிக்க முடியாது.//
ஹிஜ்ரா அறிஞர்களுக்கு மார்க்க அடிப்படை தெரியாது என்பதற்கும் பொது அறிவில்லை என்பதற்கும் இவ்வாதமே சான்று. இவர்கள் பிரச்சனை பிரச்சனை என்று கூவுவது கஅபாவின் எதிர்முனையான ஒரு புள்ளியைதான். அதை சுற்றிலும் சில மீட்டர்கள் கடந்தாலே தீர்கமான ஒரு திசையை நோக்கி கிப்லா அமைந்துவிடும். போக்குவரத்திற்காக செல்லும் கப்பல்களும் படகுகளும் எங்குமே நிற்காது. குறிப்பாக அந்த புள்ளியில் நங்கூராம் பாய்ச்சி நிற்பவர் வீம்புக்ககாவே நிற்கிறார். அவர் அல்லாஹ்வின் படைப்பை சோதனை செய்கிறார் என்றே பொருள். அவருக்கும் நாம் தீர்வை சொல்லிவிட்டோம்.
பயணத்தில் இருப்பவர் கிப்லாவை நோக்க வேண்டிய கட்டாயமே இல்லை. வாகனம் செல்லும் திசையில் தொழுதால் போதுமானது. இது அல்லாஹ் வழங்கிய சலுகை. அல்லாஹ்வின் சலுகைகள் அல்லாஹ்வின் அருட்கொடைகள் ஆகும். ஸஹர் உணவு எனும் அருட்கொடையை கேலி செய்து “ஸஹர் செய்யாவிட்டால் நோன்பை சுருட்டி மூஞ்சில் வீசிவிடுவனோ அல்லாஹ்?” என்று கேட்ட இக்கூட்டத்திற்கு அல்லாஹ்வின் பரக்கத்துகளை பற்றிய கவலை இருக்குமா?
அல்லாஹ்வின் சலுகைகள் எனும் அருட்கொடைகளை பயன்படுத்துவதே சிறந்தது என்றும் சலுகைகள் எனும் அருட்கொடைகளை பயன்படுத்தாமல் இருப்பது விரும்பத்தகாதது என்றும் பல ஹதீஸ்கள் உள்ளன. பார்க்க. முஸ்லிம் 1222, 2047, 2062 புகாரி 4498. நம்முடைய இயலாமையை அறிந்தே அல்லாஹ் சலுகைகளை வழங்குகிறான். அதை பயன்படுத்தாமல் இருப்பது அல்லாஹ்வை கேலி செய்வதாக அமையும்.
ஹிஜ்ராவினர் வீம்புகளுக்கும் தீர்வுகளை சொல்லிவிட்டோம்.
//நான்காவது விஷயம், கஅபாவின் எதிர் முனையில் உள்ளவர் எந்த திசையை நோக்கி தொழுதாலும் அது கஅபாவின் திசையே என்று ததஜ பிறைவாசிகள் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதால் அவ்விடத்தில் சுமார் ஒரு கிலோமீட்;டர் வட்ட சுற்றளவில் அமையும் பள்ளிவாயில்களின் கிப்லா திசைகள் எதிர்எதிர் திசைகளை நோக்கும்படி அமையும். கீழுள்ள படத்தை பாருங்கள்.
http://ottrumai.net/Images/Antipode-1km.jpg


அதாவது கஅபாவின் எதிர் முனையில் உள்ள அந்த இடத்தில், ஒரு கிலோமீட்;டர் சுற்றளவுள்ள ஒரு தீவுக்குள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு பகுதியிலும் ஒவ்வொரு பள்ளிவாயில்களை நாம் கட்டுவதாக கொள்வோம். அப்படி கட்டினால், ஒவ்வொரு பள்ளிவாயில்களிலும் உள்ள கிப்லா திசை வேறுபட்டிருக்கும். கிழக்கு பகுதியில் கட்டப்பட்ட பள்ளிவாயிலுக்கு கிப்லா கிழக்காவும், மேற்கு பகுதியில் கட்டப்பட்ட பள்ளி வாயிலுக்கு கிப்லா மேற்காகவும், வடக்கு பகுதியில் கட்டப்பட்ட பள்ளிவாயிலுக்கு வடக்கு திசையாகவும், தெற்குப் பகுதியில் கட்டப்பட்ட பள்ளி வாயிலுக்கு கிப்லாதிசை தெற்காகவும் அமையும்.//
செயற்கையாக, வீம்புக்கு கட்டப்படும் ஒரு தீவில் பள்ளிவாசல்கள் எப்படி அமைக்கப்படவேண்டும் என்று கேள்விகள் எழுப்பியள்ளனர் ஹிஜ்ராவினர். கிப்லா என்பது எல்லோருக்கும் ஒரே திசையில் இருக்கவேண்டும் என்று மார்க்கம் சொல்கிறதா? மஸ்ஜிதுல் ஹரமை சுற்றிலும் சிறு சிறு பள்ளிவாசல்கள் உள்ளன. ஹரமுக்கு கிழக்கே இருக்கும் பள்ளிவாசலின் கிப்லா மேற்காகவும், மேற்கில் இருக்கும் பள்ளிவாசலின் கிப்லா கிழக்காகவும், தெற்கில் இருப்பதற்கு வடக்காகவும், வடக்கில் இருப்பதற்கு தெற்காகவும் இருக்கும். இவ்வாறு மக்கா எனும் ஒரே ஊரிலேயே பள்ளிவாசல்களின் கிப்லா வெவ்வேறு திசைகளில் இருக்கும். இதனால் என்ன பிரச்சனை ஹிஜ்ராவினருக்கு? திசையை நோக்குவதுதான் கிப்லாவா அல்லது கஅபாவை நோக்குவது கிப்லாவா? திசை தொழும் ஹிஜ்ராவினர் என்று இவர்கள் மீண்டும் மீண்டும் நிறுவுகிறார்கள்.
//இறுதியாக, கஅபாவின் எதிர்முனையில் நின்று தொழுபவர்கள் ரசூலுல்லாஹ் கஅபாவிற்குள் நோக்கிய அந்த சுவற்றை நோக்கி தொழுதால் போதுமானது என்றும் இவர்கள் எழுதியுள்ளனர். இப்படி எழுதிவிட்டபடியால், மஸ்ஜிதுகளின் கிப்லா திசை பெரிய வட்டக் கோட்பாட்டின்படிதான் அமைக்கப்பட வேண்டும் என்று இதுவரை வாதித்த இவர்களின் கருத்து தோல்வி கண்டு தவிடு பொடியாகி விட்டது. காரணம் ஒரு சுவற்றை நோக்கி வட்டவடிவில் நின்று தொழ முடியாது, நேர்கோட்டு வரிசையில் நின்றுதான் தொழ முடியும். எனவே கஅபாவின் எதிர்முனையில் கிப்லாவின் திசை ஒன்றுதான், பல திசைகள் அல்ல என்பதை இவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். இவர்கள் வாதம் தவறானது என்பதும் தெளிவாக நிரூபனமாகி விட்டது.//
இந்த கட்டுரை எழுதியவருக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது. மிகச்சரியாக கஅபாவின் எதிர்முனையில் வீம்புக்காக ஒரு பள்ளியைக் கட்டினால் மட்டுமே இவர்களின் கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டி வருகிறது, இன்ஷா அல்லாஹ் அது நடக்காது. வீம்புக்கு கட்டப்படும் அந்த பள்ளியிலிருந்து எங்கு நோக்கி தொழுதாலும் கிப்லாதான். எனினும் ஒரு ஹதீஸை ஆதாரமாக காட்டி அப்படிக் கட்டப்பட்ட ஒரு பள்ளிக்கு தீர்வை சொன்னோம். இதனால் அப்புள்ளியை தவிர மற்ற பகுதிகளுக்கு கிப்லா நிர்ணயம் செய்யும் முறை தவறென்று ஆகுமா? இதை புரிந்துகொள்ள இயலாமல் போனது மூளை வளர்சியின்மைதான்.
//கிப்லாவை நோக்கி தொழுவதன் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். அந்த கிப்லா மிகத்துல்லியமாக இருக்க வேண்டியதில்லை. நம் சக்திக்கு உட்பட்டு கிப்லாவை நோக்கினால் போதுமானது. கிப்லாவை மிக துல்லியமாக அமைத்துகொள்ள வேண்டும் என மார்க்கம் கூறவில்லை என்றும் எழுதி ததஜ பிறைவாசிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வாறு ஒப்புக் கொண்டு விட்டு, கிப்லாவை மாற்றி விட்டார்கள் என்று சம்பந்தமின்றி ஹிஜ்ரி கமிட்டி மீது இவ்வளவு வசைமொழிகளை பரப்பி வருவது ஏன்? என்று கேட்கிறோம்.//
ஒருவர் இயன்ற அளவு கிப்லாவை துல்லியமாக அமைப்பது என்பது வேறு, வேண்டுமென்றே “முஸ்லிம்களின் கிப்லா தவறு IDLஐக் கொண்டுதான் கிப்லா தீர்மானிக்கப்படவேண்டும்” என்பது வேறு. இயன்ற அளவுக்கு துல்லியமாக கிப்லாவை அமையுங்கள். இயலாமைக்கு அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான் என்பதே நமது கருத்து,. ஆனால் இவர்களோ IDLஐக் கொண்டுதான் கிப்லா நிர்ணயம் செய்யவேண்டும் என்கிறார்கள். இரண்டிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இவர்கள் கிப்லாவை மாற்ற முயல்கிறார்கள்
//இத்தோடு விட்டார்களா? இல்லை. சர்வதேசத்தேதிக் கோட்டை மையப்படுத்தி, அதற்கு நேர் எதிராக அமையும் லன்டன் க்ரெனிச் தீர்க்கரேகையையும் குறிப்பிட்டு, அதை நோக்கிதான் ஹிஜ்ரி கமிட்டி தொழச் சொல்கிறது என்று வடிகட்டிய அவதூறையும் நம்மை நோக்கி அள்ளி வீசியுள்ளனர்.//
நாம் எந்த அவதூறையும் இவர்கள் மீது சொல்லவில்லை. IDL ஐ பின்னோக்குவதுதான் கிப்லா என்று இக்கட்டுரையை வடித்தவரே பேசியுள்ளார். மேலும் இவர்கள் ஆங்கிலத்தில் ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்ட ஆதாரங்கள், IDL ஐ பின்னோக்கி க்ரெனிச்சை முன்னோக்கி வரைந்த அனிமேஷன்கள் ஆகிய ஆதாரங்களை இங்கே தொகுத்துத் தந்துள்ளோம். ஹிஜ்ராவினர் கிப்லாவை மாற்ற முயற்சித்ததற்கான ஆதாரங்கள்: http://www.piraivasi.com/2017/06/29-1.html
//இதற்குக் காரணம் ததஜவினர் கஃபாவை பூமியின் மையப்பகுதியாக வைத்து அதன் நேர்எதிர் பகுதியை தேதிக் கோடாக அமைக்க வேண்டும் என்று துடிப்பதை தவறான கருத்து என்று நாம் நிருவி விட்டதால் (பார்க்க) அதற்கு எதிராக சர்வதேசத்தேதிக் கோட்டையும் மையப்படுத்தி, அதற்கு நேர்எதிர் பகுதியாக அமையும் லன்டன் க்ரெனிச் தீர்க்கரேகையை முன்னோக்குவதாக கூறுகின்றனர். ஹிஜ்ரி கமிட்டியினரை பொருத்தவரை, நாங்கள் சர்வதேசத்தேதிக் கோட்டை பூமியின் மையப்பகுதி என்று நம்பவுமில்லை, லண்டன் க்ரெனிச் பகுதியை நாங்கள் தூக்கி பிடிக்கவுமில்லை.//
கஅபாவை தேதிக்கோடாக மாற்றவேண்டும் என்று சவுதிப் பிறையை பின்பற்றுபவர்கள் துடிப்பதாக சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும். நபி வழி பிறையை பின்பற்றுபவர்கள் துடிக்கிறார்கள் என்று சொன்னால் ஹிஜ்ராவினரே நம்பமாட்டார்கள். கஅபாவை பூமியின் மையப்பகுதியாக வைக்கவேண்டும் என்று நாம் சொல்லவே இல்லை. கஅபாவின் எதிர்முனை தேதிக்கோட்டிற்கு உகந்த பகுதியாக உள்ளது என்று நாம் புவியியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம்.
//மேலும் ஹிஜ்ரி கமிpட்டியினர் கிப்லாவை மாற்றிவிட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டையும் இந்த ததஜ பிறைவாசிகள் முன்வைக்கிறார்கள்.//
ஹிஜ்ராவினர் கிப்லாவை மாற்றியதை நாம் ஆதரங்களுடன் நிறுவிவிட்டோம். ஆனால் நெருக்கடிக்குள்ளான ஹிஜ்ராவினர் “நாங்கள் அவ்வாறு சொல்லவே இல்லை. நாங்களும் உங்களுடன்தானே தொழுகிறோம். உங்களுடைய கிப்லாவைத்தானே முன்னோக்குகிறோம்” என்று முஸ்லிம்களிடம் பசப்புகின்றனர். “நாங்களும் உங்களின் கிப்லாவைத்தானே நோக்குகிறோம். நாங்கள் IDL ஐ நோக்குகிறோமா? நாங்கள் க்ரெனிச்சை நோக்குகிறோமா?” என்று கேட்கின்றனர். கஅபாவை முன்னோக்குவதுதான் கிப்லா என்று சொல்லிவிட்டு IDL க்கு முதுகைக் காட்டுவதும் கிப்லா என்பது ஏற்புடையது அல்ல. அல்லாஹ்தான் கடவுள் ஆனால் ஈசா (அலை) அவனது குமாரர் என்பது இஸ்லாம் ஆகுமா?
ஹிஜ்ராவினர் கிப்லாவை மாற்ற முயற்சித்ததற்கான ஆதாரங்கள்: http://www.piraivasi.com/2017/06/29-1.html