Monday 17 July 2017

தேதிக்கோட்டை மாற்றத் துடிக்கும் ததஜவின் கனவு நிறைவேறுமா

IDLக் கொண்டுதான் கிப்லாவை நிர்ணயம் செய்யவேண்டும் ஹிஜ்ராவினர் கட்டுரை எழுதியும், வீடியோக்களில் விளக்கியும், அனிமேஷன்கள் தயாரித்தும் பிரச்சாரம் செய்துவந்தனர். மேலும் IDL எனும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கற்பனைக்கோட்டை “இது அல்லாஹ் போட்ட கோடு, அது அல்லாஹ்வின் அத்தாட்சி, எனவே IDL ஐப் பின்பற்றி உருவாக்கப்பட்ட எங்க காலண்டர் அல்லாக் காலண்டர்” என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். IDLஐக் கொண்டு கிப்லாவை நிர்ணயம் செய்தால் நீங்கள் கஅபாவை முன்னோக்கமாட்டீர்கள் (Greenwich) க்ரெனிச்சைத்தான் முன்னோக்குவீர்கள் என்று நாம் விளக்கியபிறகு நாங்கள் கிப்லாவைப் பற்றி இன்றுவரை எதுவுமே பேசியதில்லை என்று அந்தர் பல்டி அடித்தனர். கிப்லா விஷயத்தில் இவர்கள் செய்த மோசடிகளை விளக்கி நாம் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம் பார்க்க:-
பார்க்க:-
ஹிஜ்ராவினர் கிப்லாவை மாற்ற முயற்சித்ததற்கான ஆதாரங்கள்: http://www.piraivasi.com/2017/06/29-1.html
ஹிஜ்ராவினர் க்ரெனிச்சை தான் நோக்க சொல்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் http://www.piraivasi.com/2017/06/29-2.html
ஹிஜ்ராவினர் சொல்லும் தட்டை உலக கிப்லா சரியானதா? http://www.piraivasi.com/2015/09/hijiri-committee-qibla.html
திசைவணங்கும் துலுக்கர் http://www.piraivasi.com/2015/03/committeeQibla.html
இக்கட்டுரைகளால் ஆட்டம் கண்ட ஹிஜ்ராவினர் தங்களின் ரசிகர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பிறைவாசிகள் தேதிக்கோட்டை மாற்றத் துடிக்கின்றனர் என்றும், கஅபாவை மையமாக்குகிறார்கள் என்றும் நம்மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். இவர்கள் கிப்லாவை மாற்ற துடித்ததை நாம் வெளிப்படுத்தியபோது ஆதாரங்களை அழித்தனர், தங்களது இணையதளத்தை தாங்களே முடக்கினர். எனினும் நாம் ஏற்கனவே பாதுகாத்து வைத்திருந்த ஆதாரங்களை வெளியிட்டபோது ஆடிப்போன ஹிஜ்ராவினர் தங்களது ரசிகர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பிறைவாசிகளின் மீது அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றனர். அதுபோன்ற ஒரு அவதூறு செய்தியின் உண்மையை நிலையை பார்ப்போம்.
அவர்கள் வெளியிட்ட கட்டுரையின் லிங்க்.
//தேதிக்கோட்டை மாற்றத் துடிக்கும் ததஜவின் கனவு நிறைவேறுமா?//
ஹிஜ்ரா அறிஞர்கள் இட்ட தலைப்பே தவறானது. இதில் Dream To Change IDL என்ற ஆங்கில தலைப்பு வேறு. தேதிக்கோட்டை மார்க்கம் என்று நினைத்து வழிபடுபவர்களுக்குதான் அது கடவுளாக தெரியும். தேதிக்கோடு என்பது மனித ஏற்பாடு. அது எங்கிருந்தாலும் எமக்கு எந்த பிரச்சனையுமில்லை என்பதே நமது கருத்து. நாம் தேதிக்கோட்டை மாற்றதுடிப்பதாக இவர்கள் சொல்லும் அவதூறுகள் நமக்கு சிரிப்பை வரைவழைப்பதைதவிர வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
//ததஜ பிறைவாசிகளின் இந்த கூற்றிற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள் அனைத்தும் அந்த சர்வதேசத் தேதிக்கோட்டில் இருந்து தொடங்குகிறது. எனவே அந்த சர்வதேசத்தேதிக் கோடே தவறான இடத்தில் இருக்கிறது என்று சொல்லி விட்டால் ஹிஜ்ரி காலண்டரும் தவறானது என்று நிறுவிவிடலாம் என்ற மனோ இச்சைதான் இவர்களின் இந்த தவறான வாதத்திற்கு அடிப்படை.//
இதில் பாதி உண்மை பாதி பொய்.ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள் அனைத்தும் அந்த சர்வதேசத் தேதிக்கோட்டில் இருந்து தொடங்குகிறது.” இது உண்மை. சர்வதேஸ் தேதிக்கோடு மற்றும் சர்வதேச நேரம் என்பவைதான் ஹிஜ்ரா காலண்டரின் அடிப்படைகள். இந்த இரண்டும் மனித ஏற்பாடுகள் என்கிறோம். அதை நிறுவதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. வாய் மனித ஏற்பாடுகளே! “சர்வதேசத்தேதிக் கோடே தவறான இடத்தில் இருக்கிறது என்று சொல்லி விட்டால் ஹிஜ்ரி காலண்டரும் தவறானது என்று நிறுவிவிடலாம் என்ற மனோ இச்சைதான் இவர்களின் இந்த தவறான வாதத்திற்கு அடிப்படை”. இது பொய். சர்வதேச தேதிக்கோடு எங்கு வேண்டுமெனிலும் அமைக்கப்படலாம். ஆனால் நடைமுறை சிக்கல்களை கருதி அது அதிக கடல்பரப்பில் இருப்பதே சிறந்தது. தற்போது அதிக கடல்பரப்பின் மையமாக இருப்பது கஅபாவின் எதிர்முனை. எனவே தேதிகோட்டிற்கு அது சிறந்த தேர்வாக இருக்கும் என்கிறோம்.
//ததஜவினரைப் பொருத்தவரையில் தங்களின் மாநிலப்பிறை நிலைப்பாடுதான் சரியானது என்பதை நிறுவுவதற்கு எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்க அக்கரை காட்ட மாட்டார்கள். மாறாக ஹிஜ்ரி காலண்டரை ஒழித்து கட்ட வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளில்தான் அவர்களின் பிரச்சாரம் இருந்து வருகிறது.//
உலகிற்கெல்லாம் ஒரே பிறை என்ற தத்துவமோ உலகிற்கெல்லாம் ஒரே காலண்டர் என்ற தத்துவமோ இஸ்லாம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய இரண்டிற்கும் எதிரானது. பிறை என்பதே கண்ணுக்கு தெரியும் காட்சிதான். பிறையை அடிப்படையாகக்கொண்டு மாதத்தை துவங்குவதாக இருந்தால் ஒரே சூரிய தேதியில் பெருநாட்கள் அமையாது. பிறை பார்த்த தகவலை ஏற்றாலும் ஒரே சூரிய தேதியில் பெருநாள் வராது. நிலவை கணக்கிட்டோ அமாவாசையை கணக்கிட்டோ ஒரே சூரிய தேதியில் பெருநாள் கொண்டாட இயலாது என்று மார்க்க ஆதாரங்கள் மற்றும் விஞ்ஞான ஆதாரங்களைக் கொண்டு நிறுவிவிட்டோம். பிறைவாசி இணையதளத்தை பார்வையிடுபவர்கள் அவற்றை அறிவார்கள். எனினும் நாம் நிறுவவில்லை என்பது அவதூறு.
தமிழ்நாட்டில் மாநில நிலைப்பாடு என்றோ இலங்கையில் தேசிய நிலைப்பாடு என்று நாம் என்றும் சொன்னது கிடையாது. குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து வரும் பிறைத் தகவலை மட்டுமே ஏற்று செயல்படுத்த வேண்டும் என்பது இப்னு அப்பாஸ் அறிவிக்கும் ஹதீசிலிருந்து நாம் எடுக்கும் சட்டம். பார்க்க http://www.piraivasi.com/2017/06/28.html . இந்த எல்லையை நிர்ணயிக்கும் உரிமையை மார்க்கம் மக்களுக்கு வழங்கியுள்ளது. எங்களால் தமிழக அளவில் மக்களை ஒருங்கிணைக்க முடிவதால் தமிழகத்தில் பிறை அறிவிப்பு செய்கிறோம். நாளை கேரளாவும் எங்களுடன் நபி வழியில் இணைந்துகொள்ள ஆசைப்பட்டால் அவர்களையும் சேர்த்துகொள்வோம். களியக்காவிளை – கன்னியாகுமரி எத்தனை கிலோமீட்டர், கன்னியாகுமரி – சென்னை எத்தனை கிலோமீட்டர் என்ற கிலோமீட்டர் கணக்கெல்லாம் நபி வழியில் இல்லை. இதெல்லாம் மத்ஹபை பின்பற்றும் ஹிஜ்ராவினரின் சந்தேகங்கள்.
//மேலேயுள்ள படத்தில் உள்ளபடி நயூசிலாந்து நாட்டிற்கு கிழக்கே அமைந்துள்ளது ஃபிஜி தீவுகள். இந்த ஃபிஜி தீவுகளுக்கு கிழக்குப் பகுதியில் மிகஅருகில் இந்த சர்வதேசத்தேதிக்கோடு அமைந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை என்று வாரத்தின் ஒவ்வொரு நாளுக்குள்ளும் அந்த கிழக்கு பகுதியிலுள்ள மக்கள்தான் முதலில் நுழைவார்கள். இவ்வாறு ஒரு நாள் என்பது இந்த பூமிப்பந்தில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஒவ்வொரு நாடாக வந்து அடைகிறது. அதாவது ஃபிஜி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று கிழக்கு பகுதியிலிருந்து தொடங்கி சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, சவுதி அரேபியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, அலாஸ்கா, அமெரிக்கன் சமோவா என்று மேற்கு நோக்கி உள்ள ஒவ்வொரு நாடுகளாக ஒரு நாளுக்குள் நுழைந்து விடுகிறது. நீங்கள் ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றினாலும், அல்லது வெறுத்து ஒதுக்கினாலும் வல்ல அல்லாஹ் அமைத்துள்ள இந்த விதிமுறையை மாற்ற இயலாது. ததஜ பிறைவாசிகள் இதை மாற்ற வேண்டும் என்கின்றனர்.//
ஹிஜ்ராவினர் எந்த அளவுக்கு அறியாமையில் உள்ளனர் என்பது கல்வியாளர்களுக்கு விளங்கும். இவர்கள் சொல்லும் நாடுகள் ஒரு நாள் முதலில் எங்கு துவங்குகிறது என்பதை தற்போது நிர்ணயம் செய்வது தேதிக்கோடு எனும் கற்பனைக் கொடு. அது அட்லாண்டிக் கடலில் அமைக்கப்பட்டிருந்தால் ஒரு நாளை அமெரிக்கர்கள் முதலில் துவங்கியிருப்பார். இங்கிலாந்தின் ஆளுமையால் தேதிக்கோடு இப்போது இருக்கும் பகுதில் அமைந்தது. இது தெரியாமல் இது அல்லாஹ் போட்ட கோடு என்பது இவர்கள் காலண்டருக்காக செய்த வழிகேடு.
//இவர்கள் கிப்லா வசனங்களையும் மனம்போன போக்கில் திரித்து, சர்வதேசத்தேதிக்கோட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். பிறை விஷயத்தில் தமிழக எல்லையையே தாண்டாத இவர்கள் மக்காவைப் பற்றியும், சர்வதேசத்தேதிக் கோட்டை பற்றியும் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?//
காயல்பட்டினம், சவூதி, இலங்கை ஆகிய நாடுகளை தாண்டாத ஹிஜ்ராவினர் தேதிக்கோட்டில் முதுகைக்காட்டி மக்கள் தொழுகிறார்கள், தேதிக்கோட்டில் கிப்லா மாறும் என்ற வடிகட்டிய பொய்யை அவிழ்த்துவிடும்போது தேதிக்கோட்டில் கிப்லா மாறாது என்ற உண்மையை உணர்ந்த எமக்கு தேதிக்கோட்டைப் பற்றி பேசும் எல்லா தகுதிகளும் இருக்கின்றன.
//புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான தீர்க்கரேகை) உலக நாடுகள் அங்கீகரித்து அறிவித்தால்தான் மக்காவுக்கு சிறப்பு வரும் என்ற ரீதியில் இவர்களின் ஆராய்ச்சி அமைந்துள்ளது.//
பொய்யை எப்படி புனைய வேண்டும், அவதூறுகளை அள்ளி வீசி நமது தவறுகளை எப்படி மறைக்கவேண்டும் என்ற வித்தையெல்லாம் ஹிஜ்ரா அறிஞர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக அறிவித்தால்தான் மக்காவுக்கு சிறப்பு வரும் என்று நாம் நினைப்பதாக அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர். அவ்வாறு பேசிய ஸாகிர் நாயக்கிற்கு தமிழகத்தில் முதன் முதலில் மறுப்பு கொடுத்ததே நாம் தான் பார்க்க., http://www.piraivasi.com/2014/12/KaabaCenterofEarth.html & http://www.piraivasi.com/2014/12/zakirnaikeggearth.html. அவதூறுகளுக்கும் அளவு வைத்துக்கொள்ளுங்கள் ஹிஜ்ரா அறிஞர்களே!
நாம் கேட்பது என்னவெனில், இவ்வாறு மக்காவை மத்தியப் பகுதியாகவும், மக்காவுக்கு நேர்எதிர் முனையில் அமையும் பகுதியை (140 Degree West - Antipode of Makkah) தேதிக் கோடாகவும் வைக்க வேண்டும் என்று,
• அல்குர்ஆனில் கட்டளை இடப்பட்டுள்ளதா?
• நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்களா?
• நபித்தோழர்களில் யாராவது இது போன்ற கருத்தை சொல்லியுள்ளார்களா?
• இவ்வாறு மாற்றம் செய்வதற்கு இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாக்கள் முயன்றார்களா?
• முற்கால இமாம்கள் இப்படி ஆய்வு செய்து சொன்னதாக ஒரு வரலாற்று பதிவாவது இருக்கிறதா?
ஹிஜ்ராவினரை எதிர்க்கும் பலதரப்பட்ட முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் மக்கா தேதியை எடுக்க வேண்டும் என்கின்றனர். சிலர் மக்காதான் உலகின் மையம் என்கின்றனர். இந்த இரண்டையும் எதிர்க்கும் நாங்கள் மக்காவை மையமாகக துடிப்பதாக ஹிஜ்ராவினர் ஏன் அவதூறு சொல்கின்றனர்.?
இதே கேள்விகளை நாம் ஹிஜ்ராவினரை நோக்கி கேட்கிறோம், இப்போது இருக்கும் 180டிகிரி தீர்க்க ரேகைதான் அமாவாசை காலண்டரின் நாள் மற்றும் மாதத்தின் துவக்கத்தை தீர்மானிக்கும் என்று
• அல்குர்ஆனில் கட்டளை இடப்பட்டுள்ளதா?
• நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்களா?
• நபித்தோழர்களில் யாராவது இது போன்ற கருத்தை சொல்லியுள்ளார்களா?
• இவ்வாறு மாற்றம் செய்வதற்கு இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாக்கள் முயன்றார்களா?
• முற்கால இமாம்கள் இப்படி ஆய்வு செய்து சொன்னதாக ஒரு வரலாற்று பதிவாவது இருக்கிறதா?
சொல்லுங்கள் ஹிஜ்ரா அறிஞர்களே! தேதிக்கோடு எங்கே வேண்டுமெனிலும் இருக்கலாம். அது கிப்லாவின் எதிர் முனையில் இருக்கவேண்டும் என்று நாங்கள் சொல்வது புவியியலின் அடிப்படையில் மட்டுமே. மார்க்கதிற்கும் தேதிக்கோட்டிற்கும் என்ன தொடர்பு. தேதிக்கோட்டை ஏன் மார்க்கமாக்குகிரீர்கள் ஹிஜ்ரா அறிஞர்களே?
//மனோயிச்சைகள் மார்க்கமாகாது. புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக அமைக்க வேண்டும். பின்னர் மக்காவுக்கு நேர்எதிர் பகுதியை (140 Degree West - Antipode of Makkah) தேதிக் கோடாக அமைக்க வேண்டும் என்ற கருத்து, கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது. அப்படி மாற்றி அமைப்பதற்கு ஹிஜ்ரி கமிட்டியிthethiனர்தான் தடையாக இருப்பதைப் போலக் கருதியுள்ளனர். அதனால் இவ்விஷயத்தை மையப்படுத்தி ஹிஜ்ரி நாட்காட்டிக்கு எதிராக பிரச்சாரமும் செய்கின்றனர். இது ஏன்? என்று கேட்கிறோம்.//
ஹிஜ்ரா அறிஞர்களே! எது மார்க்கம் எதுஉலக விஷயம் என்று தெரிந்துகொள்ள முயலுங்கள். Percentage system என்ற ஒரு மதிப்பெண் முறையும் கல்வித்துறையில் உள்ளது GPA என்ற ஒரு மதிப்பெண் முறையும் கல்வித்துறையில் உள்ளது. Percentage முறையை விட GPA முறை சிறந்தது என்று ஒருவர் வாதிட்டால் “பார்த்தீர்களா மனோ இச்சையை மார்க்கமாக்கிவிட்டார்கள்!” என்று ஹிஜ்ராவினர் சொல்வார்களா? சிந்தியுங்கள் ஹிஜ்ரா சகோக்களே. சர்வதேச தேதிக்கோடு மனிதன் உருவாக்கியது. இங்கிலாந்தின் ஆளுமையால் அவர்கள் தங்கள் க்ரெனிச் கோட்டை மையமாகவும் அதற்கு எதிரே இருக்கும் 180கோட்டை தேதிக்கோடாகவும் அமைத்தார்கள். இதை நாளை மனிதர்கள் மாற்றினாலும் எந்த பிரச்னையும் இல்லை. இது உலக விஷயம். தேதிக்கோட்டை கடவுளாக பார்க்காமல் மனித ஏற்பாடாக பாருங்கள்.
அடுத்த கட்டுரை: . http://ottrumai.net/Calendar/QiblaAayaths.htm
//கிப்லா சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் கூறுவது என்ன?//
//அல்குர்ஆன் சூரத்துல் பகராவில் இடம்பெரும் கிப்லா பற்றிய வசனங்களில் 'ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்' என்பதற்கு சகோதரர் பீஜே அவர்கள் தான் குர்ஆன் மொழிபெயர்ப்பில், 'மஸ்ஜிதுல் ஹராமின் திசை' என்றுதான் மொழி பெயர்த்துள்ளார். ஆனால் ததஜ பிறைவாசிகளோ பெரியவட்டக் கோட்பாடு, பூமியின் மையப்பகுதி, கஃபாவுக்கு எதிர்பக்கம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். பிறை விஷயத்தில் தங்களை களம் இறக்கிய அண்ணனுக்கு பாடம் நடத்துவதையும் பிறைவாசிகளின் தங்கள் கடமையாக கொண்டுள்ளனர். இதை ஏற்கனவே படித்திருப்பீர்கள். பார்க்க
குர்ஆன் விரிவுரையாளர்கள் அனைவரின் கருத்தும் இவ்வாறுதான் உள்ளது. இக்கருத்துதான் சரி என்பதை தெளிவுபடுத்திடும் பல ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் காணக் கிடைக்கின்றன. இந்நிலையில் மக்காவை மையப்பகுதியாகவும், மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாகவும் மாற்றி அமைக்க மேற்படி வசனங்கள் எப்படி ஆதாரமாக அமையும் என்பதுதான் ஆச்சரியம்.
''(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (இருக்கும்) திசையில் திருப்புவீராக!'' (2:144,149,150) என்ற கட்டளை இவ்வசனங்களில் மூன்று முறை இடம்பெற்றுள்ளது. இதை வைத்துக் கொண்டு, ''பார்த்தீர்களா அல்லாஹ்வே கட்டளையிட்டு விட்டான். கஅபாவுக்குள்ள முக்கியத்துவத்தை பார்த்தீர்களா? எனவே மக்காவைத்தான் நாம் மையப்படுத்த வேண்டும்' என்று ஆர்ப்பரிப்பது அறிவுடையாகுமா? கஅபாவுக்கு முக்கியத்தும் இல்லை என்று யார் சொன்னது? நாமும் மறுக்கவில்லையே!. இறைக் கட்டளைபடி நாமும் கஅபாவின் திசையை நோக்கித்தானே தொழுது வருகிறோம். இமயமலையை நோக்கி தொழுது கொள்ளுங்கள் என்றோ, தாஜ்மஹாலின் திசையை நோக்கி தொழுங்கள் என்றோ நம்மில் யாரும் பிரசாரம் செய்யவில்லையே.
கிப்லாவை முன்னோக்குதல் என்ற அம்சத்திலிருந்து, மக்காவை மையப்பகுதியாகவும், மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாகவும் மாற்றி அமைக்கவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர்கள் எப்படி எடுத்தார்கள்? என்பதுதான் நமது கேள்வி. மக்காவுக்கு உள்ள சிறப்புகளோ, கிப்லாவுடைய வசனங்களோ, அதை உலகின் மத்தியப் பகுதியாக ஆக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.//
ஒரே கட்டுரையை மூன்றாக வெட்டி, வேறு கட்டுரைகளில் இருந்து சிறிது வெட்டிச் சேர்த்து மூன்றிகும் மூன்று வெவ்வேறு தலைப்புகளை இட்டு நமக்கு மறுப்புகொடுத்த எண்ணிக்கையை கூட்டுவதே நோக்கமாக கொண்டுள்ளனர் ஹிஜ்ரா அறிஞர்கள்.
மீண்டும் மீண்டும் நாம் மக்காவை மையமாக ஆக்கவேண்டும் என்று இவர்களிடம் கோரிக்கை வைத்ததைப் போன்ற மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இந்த அவதூறுகளுக்கான போதிய விளக்கத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டோம். மேலும் விளக்கங்களுக்கு பார்க்க http://www.piraivasi.com/2015/03/committeeQibla.html