Saturday 7 October 2017

ஆயிரத்தில் ஒருவன்!

*The Man in Million* என்ற பெயருடன் புகழப்படுபவர் அலி மனிக்ஃபான். இவர்தான் ஹிஜ்ரா காலண்டரின் தந்தை என்று அறியப்படுகிறார். அவர் ஹிஜ்ரா காலண்டரை உருவாக்கிய (?) வரலாற்றை இங்கே காண்க. http://www.piraivasi.com/2017/08/31.html
ஆயிரத்தில் ஒருத்தர் கிப்லாவை மாற்றிய விஷயத்தை நாம் ஏற்கனவே அறிந்துகொண்டோம். பார்க்க http://www.piraivasi.com/2017/06/29-1.html . அவர் உருவாக்கிய (?) காலண்டரை நிறுவுவதற்காக என்னென்ன வேலைகளை செய்துள்ளார் என்பதை இப்போது பார்க்கப்போகிறோம்.
கிப்லாவை மாற்றுவதற்காக அலி மனிக்ஃபான் எழுதிய கட்டுரையின் கீழே சூரிய நாட்காட்டி பிழையானது என்றும் சந்திர நாட்காட்டி சரியானது என்றும் நிறுவுவதற்காக அலி மனிக்ஃபான் ஒரு கணக்கை இட்டு நிறுவுகிறார்.
அல்லது
அதில் பின்வருமாறு எழுதியுள்ளார்
If we calculated the number of days that elapsed between the two incidents according to two calendar systems we can see what happens when a wrong calendar is used to record time. The equivalent dates and days of two solar eclipses of the past are given below as recorded in two calendars.
Solar eclipse according to C.E and M.E
1. C.E. 22.7.1990 Sunday = M.E. 30.12.1410 Sunday
2. C.E. 14.7.622 Wednesday = M.E. 30.12.0000 Wednesday
Time elasped 8.0.1368 = 00.00.1410 Wednesday
Total No. of days according to C.E and 1368 x 365.25+8= 499670.00 days
Total No. of days according to M.E and 1410 x 354.3671= 499657.61 days
Difference = 12.39 days
The error accumulated in C.E for 1368 years is 12.39 days. There is no error in M.E. If the Moon is left out, we cannot find out this error. Our calculation of time will go wrong and we will be in confusion. It is high time that we adopted the scientific date system and used it in our daily affairs so that our records will not cause confusion for the next generation.
இதன் விளக்கத்தை எளிதில் புரியும் வண்ணம் தமிழில் பார்ப்போம்.
வரலாற்றில் கிரிகோரியன் காலண்டரில் இருந்து இரு ஆங்கில தேதிகளை தேர்ந்தெடுக்கிறார் அலி மனிக்ஃபான். அவை இரண்டும் ஆங்கில தேதியில் சூரிய கிரகணம் நடந்த நாட்கள்.
> ஒன்று கி.பி 14.7.622
> மற்றொன்று கிபி 22.7.1990.
இந்த இரண்டு ஆங்கில தேதிகளுக்கும் இணையாக அவரது சந்திர நாட்காட்டியின் தேதிகளையும் குறிக்கிறார்.
[கிருத்துவுக்கு முன் = கி.மு கிருத்துவுக்குப் பின் = கி.பி என்று இருப்பது போல ஹிஜிரிக்கு முன் = ஹி.மு, ஹிஜிரிக்குப் பின் =ஹி.பி என்று அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரத் நடந்த ஆண்டின் முஹர்ரம் மாதம் முதல் தேதியிலிருந்து ஹி.பி. தொடங்குகிறது. அதாவது, 01-01-0001. இதற்கு முந்தைய நாள்தான் ஹி.மு வின் கடைசி தேதி. ஹி.மு வின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் 30 ஆம் தேதியை 30.12.0000 என குறிப்பார்கள்]
>  14.7.0622  =  30.12.0000
>  22.7.1990  =  30.12.1410
நபிகள் நாயகம் () ஹிஜ்ரத் செய்வதற்கு முந்தய துல் ஹிஜ்ஜா மாதத்தின் கடைசி நாளிள் சூரிய கிரகணம் ஏற்பட்டதாம் (அந்த கடைசி நாள்தான் ஹி.மு 30.12.0000).
அதற்கு அடுத்த நாளில் இருந்து ஹிஜ்ரி முதல் ஆண்டு தொடங்குகிறதாம் (01-01-0001) முஹர்ரம் முதல் தேதிக்கு முந்தய நாள் அதாவது ஹி.மு 30.12.0000. அந்த நாளிலிருந்து ஹிஜ்ரி 30.12.1410 வரையுள்ள சுமார் 1400 வருடங்களின் நாட்களை எண்ணப்போகிறாராம்.
“இரண்டு சூரிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களும், இரண்டு சந்திர தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களும் சமமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் சூரிய காலண்டர் சரியானது” என்கிறார். அவ்வாறு இல்லாமல் இரண்டும் வித்தியாசமாக இருந்தால் சூரிய காலண்டர் தவறு என்கிறார்.
முதலில் சூரிய தேதிகளுக்கிடைப்பட்ட நாட்களை கணக்கிடுகிறார்.
முதலில் நாட்களை கழிக்கிறார். 22 – 14 = 8 நாட்கள்
மாதத்தில் இருந்து மாதத்தைக் கழிக்கிறார் 7 – 7 = 0 மாதம்
வருடத்திலிருந்து வருடத்தைக் கழிக்கிறார் 1990 – 622 = 1368 வருடங்கள்.
அதாவது, 22.7.1990 - 14.7.0622 = 8.0.1368
ஃ 1368 வருடங்கள் மற்றும் 8 நாட்கள்.
 22.7.1990
- 14.7.0622
 ----------
 08.0.1368
*இப்படி ஒருவர் தேதியை கழித்து நாட்களைக் கணக்கிடுவதை கணித உலகம் அறிந்தால் அதுவே உலக வரலாற்றின் பெரிய நகைச்சுவையாக கணித உலகம் பார்க்கும்.*
பின்னர் ஒரு சூரிய வருடத்திற்கு சராசரியாக 365 ¹ நாட்கள் என்று அவராக முடிவு செய்து 1368 வருடங்களுக்கு 1368 x 365.25 என்று பெருக்கி பின்னர் மீதமிருக்கும் 8 நாட்களையும் கூட்டி மொத்தம் 499670.00 சூரிய நாட்கள் என்ற முடிவுக்கு வருகிறார்.
*ஃ சூரிய நாட்காட்டியில் இரு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்கள் 499670 நாட்கள் என்கிறார்.*
பின்னர் இதே போல இரு சந்திர தேதிகளைக் கழிக்கிறார்.
 30.12.1410
- 30.12.0000
 ----------
 00.00.1410
சந்திர ஆண்டில் வருடத்திற்கு 354.3671 நாட்கள் என்று அவராகவே முடிவு செய்து 1410 வருடங்களுக்கு 1410 x 354.3671 என்று பெருக்கி 499657.61 நாட்கள் என்ற முடிவுக்கு வருகிறார்.
*ஃ சந்திர நாட்காட்டியில் இரு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்கள் 499657.61 நாட்கள் என்கிறார்.*
பின்னர் சூரிய நாட்காடிக்கும் சந்திர நாட்காடிக்கும் இடையே 12.39 நாட்களை பிழை ஏற்பட்டுள்ளது என்கிறார்.  ( 499670 - 499657.61 = 12.39)
1368 சூரிய வருடங்களில் 12.39 நாட்கள் அதிகமாகிவிட்டது என்கிறார். எனவே சூரிய நாட்காட்டி பிழையானது, சந்திர நாட்காட்டியே துல்லியமானது என்கிறார்.
*எது சரி என்று பார்ப்பதற்கு முன்னர் சாதாரண ஒரு மனிதனின் மூளையில் இரு கேள்விகள் எழும்*
1️ *இரண்டு விசயங்களில் எது சரி என்று பார்க்கவேண்டும் எனில் அவற்றை உரசிப் பார்க்க மூன்றாவதாக ஒன்று வேண்டாமா? 499657.61 சரி என்றும் 499670.00 தவறு என்றும் அலி மனிக்ஃபான் அவர்கள் எப்படி நிறுவுகிறார்.*
2️ *இரண்டு முழுநாட்களுக்கு இடையே எத்தனை நாட்கள் என்று கணக்கிடும்போது ஏன் பின்ன எண்களில் விடை வருகிறது? நாட்களின் எண்ணிக்கை முழு எண்ணாக வரவேண்டாமா?*
நாட்களை எண்ணுவதாக இருந்தால் அலி மனிக்ஃபான் பார்முலாபடிதான் எண்ண வேண்டுமா? ஒரு சிறு உதாரணத்தைப் பார்ப்போம்.
1-3-2015 க்கும் 1-3-2016 க்கும் இடையே எத்தனை நாட்கள்? 1-3-2016 க்கும் 1-3-2017 க்கும் இடையே எத்தனை நாட்கள்?
அலி மனிக்ஃபான் அவர்களின் கணக்குப்படி பார்ப்போம்.
 1.3.2016
- 1.3.2015
 ----------
 0.0.0001
1 x 365.25 = 365.25
 1.3.2017
- 1.3.2016
 ----------
 0.0.0001
1 x 365.25 = 365.25
அலி மனிக்ஃபான் அவர்களின் கணக்கில் எல்லா வருடங்களுக்கும் 365.25 நாட்களே இருக்கின்றன. ஆனால் 1-3-2015 க்கும் 1-3-2016 க்கும் இடையே 366 நாட்களும் 1-3-2016 க்கும் 1-3-2017 க்கும் இடையே 365 நாட்களும் இருக்கின்றன. இதை விரல் விட்டு எண்ணத் தெரிந்த சிறு பிள்ளைகள் கூட சொல்லிவிடுவார்கள்.
*உண்மையில் அலி மனிக்ஃபான் எடுத்துக்கொண்ட இரு தேதிகளுக்கும் இடையே எத்தனை நாட்கள் இருக்கின்றன? பார்ப்போம்.*
இரண்டு தேதிகளை எண்ணுவதற்கென கணித முறை உள்ளது. கணிதம் தெரியாதவர்களுக்கு அதை விளக்குவதாக இருந்தால் அதற்கென தனிக்கட்டுரை எழுதவேண்டும். எனவே அதை Microsoft Excel வடிவில் தயாரித்துள்ளோம். தேவைப்படுபவர் இங்கே காண்க.
ஆனால் இன்றைய தினம் அவற்றை நாம் எளிதாக இணைய தளங்களின் உதவியுடன் எண்ணிவிடலாம். மேலே அலி மனிக்ஃபான் சொன்ன 22.7.1990 மற்றும் 14.7.0622 ஆகிய இரு தேதிகளுக்கு இடையே இருக்கும் நாட்களை டைம் அண்ட் டேட் டாட் காமில் எண்ணினோம். பார்க்க https://www.timeanddate.com/date/durationresult.html?d1=14&m1=7&y1=622&d2=22&m2=7&y2=1990
timeanddate.com சொல்லும் விடை: 499,657 நாட்கள்.
இணையதள செய்திகள் ஆதரமாகுமா என்ற கேள்வி வந்தால், அலி மனிக்ஃபான் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட, அவர்களின் மேற்பார்வையில் உருவான, அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு மென்பொருளை பயன்படுத்தி நாட்களை எண்ணிப்பார்ப்போம்.
இந்த மென்பொருளில் ஹிஜ்ரி 0 என்றொரு ஆண்டு உள்ளது. அதவாது ஹிஜ்ரி 1க்கு முந்தய வருடம் முஹர்ரம் 1ம் தேதியிலிருந்து (1-1-000) நாட்களை எண்ணும் முறை. அன்றிலிருந்து எத்தனை நாட்கள் கடந்துள்ளது என்பதை Hijiri Day என்ற எண்ணிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலே வட்டமிடப்பட்டுள்ள தகவல்களை சற்று உன்னிப்பாக பாருங்கள். 14.7.0622 அன்று ஹிஜ்ரி டே 355ஆக இருந்துள்ளது. 22.7.1990 அன்று ஹிஜ்ரி டே 500012 ஆக இருந்துள்ளது. இரண்டையும் கழித்தால் இரண்டிற்கும் இடைப்பட்ட நாட்கள் கிடைத்துவிடும்.
500012 – 355 = 499,657 நாட்கள் (சூரிய நாட்காட்டியிலும், சந்திர நாட்காட்டியிலும்)
அலி மனிக்ஃபான் கொடுத்த சூரிய தேதிகளுக்கு இடையே உள்ள நாட்களும் சந்திர தேதிகளுக்கு இடையே உள்ள நாட்களும் சமமானவையே என்று அவருடைய மென்பொருளின் மூலமாகவே நிறுவப்பட்டிருக்கிறது.
ஆம் விஞ்ஞான / கணித உலகில் அலி மனிக்ஃபான் அவர்கள் ஆயிரத்தில் ஒருவரே. இவரைப்போன்ற கூட்டல் கழித்தல் அறியா ஒரு விஞ்ஞானியை உலகம் இதுவரை கண்டிருக்காது.
*அலி மனிக்ஃபான் அவர்கள் ஏன் இந்த கீழ்தர வேலையை செய்தார். ஏன் இவ்வாறு தப்பாக கணக்கிட்டு மக்களை ஏமாற்றுகிறார்?*
*மாத நாட்களின் எண்ணிக்கை, வருட நாட்களின் எண்ணிக்கை ஆகியவை நிலையாக நிர்ணயம் செய்யப்பட்ட எந்த எந்த இரு நாட்காட்டிகளை எடுத்துக்கொண்டாலும் அவற்றின் இணையான இரு தேதிகளுக்கிடையே நாட்களின் எண்ணிக்கை சமமாகவே இருக்கும். நாட்களின் எண்ணிக்கை வெவ்வேறாக இருக்காது. ஆனால் நாட்களை எண்ணும் பார்முலா இரண்டிலும் வெவ்வேறா இருக்கும். அந்ததந்த பார்முலாவை பயன்படுத்தி அந்தந்த காலண்டரில் நாட்களை எண்ண வேண்டும். ஆயிரத்தில் ஒரு விஞ்ஞானிக்கு இது தெரியாமல் போயிற்றா?*
*365.25 என்ற ஜூலியன் வருடத்தின் சராசரிக் கணக்கையே அலி மனிக்ஃபான் எடுக்கிறார். சராசரி கணக்கை எடுத்து இயல்பு வாழ்க்கையில் எதையாவது செய்கிறோமா? சராசரி எனும் கணக்கை எங்கே எப்போது பயன்படுத்த வேண்டும்?*
20 மீட்டர் அகலம் கொண்ட ஒரு ஆற்றைக் கடக்க அலி மனிக்ஃபான் முடிவு செய்கிறார். அவருக்கு நீச்சல் தெரியாது. அதை நடந்தே கடக்கலாம் என முடிவு செய்து ஆற்றின் ஆழத்தைப் பற்றி விசாரிக்கிறார். முதல் மூன்று மீட்டருக்கு இரண்டரை அடி ஆழம், ஐந்து மீட்டர் சென்றால் மூன்றரை அடி ஆழம், ஏழாம் மீட்டரில் நான்கரை அடி ஆழம், ஒன்பதாம் மீட்டரில் ஏழரை அடி ஆழம், *பன்னிரண்டாம் மீட்டரில் ஒன்பதடி ஆழம்,* பதினைந்தாம் மீட்டரில் ஆறரை அடி ஆழம், பதினெட்டாம் மீட்டரில் நான்கடி அடி ஆழம், மீதி இரண்டரை அடி ஆழம் என்கின்றனர் மக்கள். அலி மனிக்ஃபான் சராசரி எடுத்துப் பார்க்கிறார். சராசரியாக 5 அடி ஆழம் கொண்டதாக அந்த ஆறு அமைந்திருக்கிறது. *”நான் ஐந்தடி எட்டங்குலம் உயரம் கொண்டவன். ஐந்தடி மட்டுமே ஆழம் கொண்ட இந்த ஆற்றை நடந்தே கடப்பேன். மூழ்க மாட்டேன்”* என அலி மனிக்ஃபான் முடிவெடுத்தால் நிலைமை என்னவாகும்? அலி மானிக்கிற்கு நீச்சல் தெரியாமலிருந்து இப்படி ஒரு ஆற்றை அவர் தொண்ணூறுகளில் கடந்திருந்தால் முஸ்லிம் சமூகம் பெரிய ஃபித்னாவில் இருந்து தப்பித்திருக்கும்

அலி மணிக்பான் செய்த தவறுகளை மேலும் அதிக விபரங்களுடன் தெரிந்துகொள்ள பார்க்க https://docs.google.com/document/d/e/2PACX-1vS8SNIJshPtEBXAf7tD6WW-C8qW3pEExNmz4Zogk05or7ILOA3PU2OoXV_WO63Ae-J3wbJBIwjMkkHU/pub