Sunday 15 January 2017

உம்முல் குறாவும்! மன்ஸில்களும்!

உம்முல் குறா இணையதளத்தில் இருக்கும் தகவல்களை புரிந்துகொள்வதெப்படி?
கீழே நீங்கள் பார்ப்பது உம்முல் குறா இணையதளத்தில் இருக்கும் தினசரி நாட்காட்டி.
www.ummulqura.org.sa தளத்தை திறந்த உடன் நம் பார்வைக்கு கிடைப்பது இதுதான். இதில் அன்றைய தினத்தின் பல்வேறு தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேதிக்கும் பின்னால் ஒரு வரலாறும் விண்ணியல் தொடர்பான தகவல்களும் இருக்கின்றன. அவற்றை இங்கே தெரிந்துகொள்வோம்.


கீழே இருப்பது அவர்களின் இணையதளத்தில் இருக்கும் மாதாந்திர நாட்காட்டி
இதைப்பார்க்க  www.ummulqura.org.sa  தளத்திற்கு சென்று அங்கே  التقويم  என்பதை க்ளிக் செய்யவும். பின்னர் அதில்  تقويم أم القرى  என்பதை தேர்ந்தெடுக்கவும் அதன் கீழ்பகுதியில்  تقويم المزارعين  என்றிருக்கும். இதில் நமக்கு தேவையான மாதங்களுக்கு நாட்காட்டியை எடுத்துக்கொள்ளலாம். ஆங்கில தேதி, ஹிஜ்ரி தேதி ஆகிய இரண்டு தேர்வுகளும் இருக்கும்.


இவற்றிக்கான சுருக்கமான விளக்கக் குறிப்புகள் கீழே. மேலே தினசரி நாட்காட்டியில் இருக்கும் தேதிகளிலும் மாதந்திர நாட்காட்டியில் இருக்கும் தேதிகளிலும் ஒரு சிறிய சிவப்பு வட்டமும் அதனுள் ஒரு எண்ணும் இட்டுள்ளோம். அந்த எண் குறி இடப்பட்ட தேதிக்கான விளக்கங்களை கீழே தந்துள்ளோம். தினசரி, மாதாந்தரி இரண்டிலும் ஒரே இலக்கம் இருப்பின் அவ்விலக்கம் இரண்டிலும் ஒரே நாட்காட்டியைக் காட்டுகிறது. சிவப்பு நிற வட்டத்திற்குள் இருக்கும் எண்ணையும் கீழே அட்டவையில் உள்ள அதே எண்ணையும் பொருத்தி, அட்டவணையிலிருக்கும் விளக்கத்தைப் பார்க்கவும்.


#_  
மாதாந்திர நாட்காட்டி
தினசரி நாட்காட்டி

உம்முல் குறா
தமிழ் விளக்கம்
உம்முல் குறா
தமிழ் விளக்கம்
التاريخ الميلادي
ஆங்கில தேதி
15  January (1) 2017 يناير 
ஜனவரி (1) ம் மாதம் 15 ம் தேதி
 اليوم
வார நாள்
الاحد
ஞாயிறு
التاريخ الهجري القمري
சந்திர ஹிஜ்ரி தேதி
17 (4) ربيع الثاني   Rabi’ al Thani 1438هـ
ரபியுல் ஆகிர் 4 ம் மாதம் 17 ம் தேதி ஹிஜ்ரி 1438ம் வருடம்
التاريخ الهجري الشمسي
சூரிய ஹஜ்ரி தேதி
الجدي25  1395 هـ ش
ஹிஜ்ரி ஷம்சி 1395, ஹிஜ்ரத் நடந்து 1395 சூரிய வருடங்கள் ஆகின்றன.
சூரியன் ஜதி (Capricorn மகர ராசி) எனும் புருஜில் நுழைந்து 25 நாட்கள் ஆகின்றன
النجمي - طالع  الفجر
நட்சத்திர தேதி
பஜ்ரில் (விடியலில்) உதிக்கும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டது
نوء النعايم 1
நஆயிம் எனும் சந்திர மன்ziல் உதித்து இன்று முதல் நாள். நாளை இரண்டாம் நாள். சூரியனுக்கு முன்னால் உதிக்கும் சந்திர மன்சிலை நவ்இ என்று அழைப்பார்கள். நஆயிம் என்பது ஒரு சந்திர மன்ziல்.
الدارج لدى المزارعين
விவசாயிகள் பயன்படுத்தும் நட்சத்திர நாட்காட்டி
الشبط 1
ஷுபத் உதித்து இன்று முதல் நாள்
كانون-2
கானூன் ஃதானி. ஆங்கில மாதங்களின் பெயர்கள் அரபில். ஹீப்ரூ (எபிரேய) மாதங்கள் பெயர்களுடன் இவை ஒத்துப்போகும்


க்கான அதிகப்படியான விளக்கம்
No.
ஆங்கில மாதம்
அரபுப் பெயர்கள்
(சுரியானி எனும் Aramaic
மொழியை சார்ந்த பெயர்கள்)
உச்சரிப்பு
ஹீப்ரூ (எபிரேய) இணை
1
January
كانون الثاني
Kānūn ath-Thānī கானூன் அல் ஃதானி

2
February
شباط
Shubāṭ ஷுபாத்
Shevat
3
March
آذار
Ādhār ஆதார்
Adar
4
April
نيسان
Nīsān நீசான்
Nisan
5
May
أيار
Ayyār அய்யார்
Iyar
6
June
حزيران
Ḥazīrān / Ḥuzayrān ஹுைZறான்

7
July
تموز
Tammūz தம்மூZ
Tammuz
8
August
آب
Āb ஆப்
Av
9
September
أيلول
Aylūl அய்லூல்
Elul
10
October
تشرين الأول
Tishrīn al-Awwal திஷ்ரீன் அல் அவ்வல்
Tishrei
11
November
تشرين الثاني
Tishrīn ath-Thānī திஷ்ரீன் அல் ஃதானி
Tishrei,
12
December
كانون الأول
Kānūn al-Awwal கானூன் அல் அவ்வல்

நன்றி https://en.wikipedia.org/wiki/Arabic_names_of_calendar_months
********************
விரிவான விளக்கம்
மேலே அட்டவணையில் ➊➋➌ஆகிய குறிகளிடப்பட்ட நாட்காட்டிகள் பற்றி நமக்கு தெரிந்ததே. அவற்றை விளக்கத் தேவையில்லை. எனினும் உம்முல் குறாவில் இருக்கும் ஹிஜ்ரி கலண்டரை பற்றி தெரிந்துகொள்ள கட்டுரையின் இறுதியில் இருக்கும் துடுப்புகளைப் பார்வையிடவும்.
குறியில் இருப்பது சூரிய நாட்காட்டி மாதங்களின் சுரியானி/அரபுப் பெயர்களே தவிர அதில் கூடுதல் தகவல் ஏதுமில்லை. ➍➎➏ஆகிய குறிகளில் இருக்கும் நாட்காட்டிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
வானில் நாம் பார்ப்பவை : சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள்.
இவற்றில் சூரியன் உதித்து மறைவதை நாம் அறிவோம். சந்திரன் உதித்து மறைவதை வெகு சிலரே அறிந்துவைத்துள்ளனர். நட்சத்திரம் உதித்து மறையுமா 😱 என்று பலரும் வாய் பிளப்பார்கள். எனில் இதற்கும் ஒரு படி மேலே! வானமே உதித்து மறைகிறது. ஆம்!. வானத்தில் இருக்கும் எல்லாமே வானத்துடன் சேர்ந்து உதித்து மறைகிறது.
இந்த வகையில் வானத்தில் நிலையாக இருக்கும், வான் கோளத்தில் ஒட்டிவைக்கப்பட்டுள்ள நட்சத்திரங்களும் உதித்து மறையும். இந்த நட்சத்திரங்களில் முக்கியமானவை *கோள்கள் கடந்து செல்லும் பாதையில்* இருக்கும் நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களை வைத்துதான் அன்றும் இன்றும் மனிதன் வானில் கோள்கள் இருக்கும் இருப்பிடங்களை அறிந்துகொண்டான். இன்றும் வானில் கோள்கள் (சூரியன், சந்திரன், இன்ன பிற கோள்கள்) இருக்கும் இருப்பிடங்களை விஞ்ஞானம் நட்சத்திரங்களை வைத்தே அறிகிறது, கணக்கிடுகிறது. இது தகவலுக்காக மட்டுமே. இந்த நட்சத்திரங்களை மனிதன் தன் தேவைக்கேற்ப பிரித்து அளந்துவருகிறான். சூரியனின் இருப்பிடத்தை அளப்பதற்காக இந்த நட்சத்திரங்களை மனிதன் 12 கூட்டங்களாக பிரித்தான். சந்திரனின் இருப்பிடங்களை அளப்பதற்காக மனிதன் இன்னட்சத்திரங்களை 28 கூட்டமாக பிரித்தான். கவனிக்க! உலகில் உள்ள எல்லா சமுதாயங்களும் 12 - 28 என்றுதான் சூரிய சந்திர நட்சத்திரங்களை பிரித்தது. இவ்வாறு பிரிப்பதற்கும் தகுந்த அறிவியல் காரணங்கள் உள்ளன. அதை பின்னர் பார்ப்போம். சூரியன் கடக்கும் அதே விண்மீன்களை சந்திரனும் கடப்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். சூரியன் சந்திரன் வெள்ளி வியாழன் சனி புதன் என அனைத்து கோள்களும் கடக்கும் நட்சத்திரங்கள் ஒன்றுதான். என் விண்மீனில் நீ வரக்கூடாது என்று கோள்களுக்கிடையே சண்டை ஏதும் நடக்காது. மனிதன் தனது வசதிக்காகவே விண்மீன்களை பகுத்துக்கொண்டான்.
எந்த ஒரு நிமிடமும் சூரியன் ஒரு சூரிய ராசியிலும் சந்திரன் ஒரு சந்திர ராசியிலும் இருக்கும். அமாவாசை நடக்கும் வினாடியில் இவை இரண்டும் ஒரே ராசியில் இருக்கும். (சூரியனை சந்திர ராசியிலும் சந்திரனை சூரிய ராசியிலும் கூட சொல்லலாம், அப்படிப்பட்ட வழிமுறைகளும் உலகத்தில் உள்ளன. தண்ணீரை கிலோ கணக்கில் அளப்பதும் உண்டு, இரும்பை லிட்டர் கணக்கிலும் அளப்பதும் உண்டு, தண்ணீரை கன அடியில் அளக்கலாம் இரும்பின் கன அளவை மில்லி லிட்டரில் அளக்கலாம்).
சந்திர காலண்டரை பொறுத்தவரை அமாவாசை – அமாவாசை என்றோ பவுர்ணமி – பவுர்ணமி என்றோ மதங்களை, கலாச்சாரங்களை பொறுத்து காலண்டர்கள் அமைந்துள்ளன. ஆனால் முஸ்லிம்களின் பிறைக் காலண்டர் தலைப்பிறை – தலைப்பிறையை அடிப்பையாகக் கொண்டதாகும்.
சூரிய காலண்டரை பொறுத்தவரை சூரியனை சுற்றி பூமியின் இருப்பிடமே சூரிய காலண்டர். இதை வேறு விதமாக மனிதன் பேசும் மொழியில் சொல்வதென்றால், எக்ளிப்டிக் எனும் கோள்கள் சுழன்று வரும் பாதையில் சூரியனின் இருப்பிடமே சூரிய காலண்டர். சூரியனின் இருப்பிடத்தை மனிதன் நாம் மேலே சொன்ன 12 நட்சத்திரக் கூட்டங்களை வைத்து அறிந்துகொண்டான். அவற்றை zodiac, ராசி, புருஜ் என்று ஒவ்வொரு மொழிகளிலும் அழைத்தனர். இந்த காலண்டர் முறைதான் ம் குறியிட்ட நிரலில் காலண்டராக உம்முல் குறா வெளியிடுகிறது.

புருஜ்களின் அரபுப் பெயர்
புருஜ்களின் அறிவியல்ப் பெயர்
புருஜ்களின் தமிழ்ப் பெயர்
சூரியன் நுழையும் நாள்
சூரியன் வெளியேறும் நாள்
1
الحمل
Aries
மேஷம்
19-Apr
13-May
2
الثور
Taurus
ரிஷபம்
14-May
19-Jun
3
التوأمان
Gemini
மிதுனம்
20-Jun
20-Jul
4
الشرطان
Cancer
கடகம்
21-Jul
09-Aug
5
الأسد
Leo
சிம்மம்
10-Aug
15-Sep
6
العذراء
Virgo
கன்னி
16-Sep
30-Oct
7
الميزان
Libra
துலாம்
31-Oct
22-Nov
8
العقرب
Scorpius
விருச்சிகம்
23-Nov
29-Nov
9
الحواء
Ophiuchus
ஓஃபியகஸ்
30-Nov
17-Dec
10
الرامي
Sagittarius
தனுசு
18-Dec
18-Jan
11
الجدي
Capricornus
மகரம்
19-Jan
15-Feb
12
الدلو
Aquarius
கும்பம்
16-Feb
11-Mar
13
الحوت
Pisces
மீனம்
12-Mar
18-Apr
* உலக விண்ணியல் ஒன்றியமான IAU வரையறுத்துள்ள புருஜ்களின் பட்டியல்கள் இவை. இவையும் உம்முல் குறாவும் பொருந்தாது. துல்லியமான அறிவியல் தகவல்களுக்காக இதை தருகிறோம்.
சூரியனின் இருப்பிடத்தை அறிவது எளிதல்ல. மேலும் அது கிட்டத்தட்ட நீண்ட 30 ½ நாட்ககளைக் கொண்டதாக இருந்ததால் இடையிடையே மனிதன் தனது தேவைக்கேற்ப காலத்தை அறிவது சிரமமாக இருந்தது. இதற்கு எளிமையான மாற்று வழியாக சில சமுதாயங்கள் சந்திர ராசிகளை பயன்படுத்தினர். இம்முறையில் சூரியன் எந்த சூரிய ராசியில் உள்ளது என்பதைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். சூரியன் எந்த சந்திர ராசியில் உள்ளது என்றும் கணக்கிட மாட்டார்கள். மாறாக எந்த சந்திர ராசி அதிகாலையில் உதயமாகிறது என்று பார்ப்பார்கள். ஒவ்வொரு 13 நாட்களுக்கும் ஒரு சந்திர ராசி அதிகாலையில் புதிதாக உதயமாகும். உதயமாகும் அந்த ராசி எல்லா வருடமும் அதே காலநிலையை காட்டுவதாக இருந்தது. இவ்வாறே அவர்கள் சந்திர ராசிகளில் இருந்து காலத்தை கணக்கிட்டனர்.
மேலே சொன்ன முறையில் காலத்தை கணக்கிடுவதற்கும் பிறையின் வடிவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் இம்முறைக்கும் சந்திரன் அதன் மன்ஸிலில் இருப்பதற்கும் கூட தொடர்பேதும் இல்லை. சந்திரன் தனது சுற்றுப்பாதையை 27.32 நாட்களில் கடப்பதையோ அது தாங்கள் கண்டுவைத்திருந்த 28 சந்திர மன்ஸில்களை கடப்பதையோ அரபுகள் காலம் காட்டிகளாக பயன்படுத்தவில்லை. பொதுவாக கோள்கள் கடக்கும் பாதையில் இருக்கும் விண்மீன்களுக்கு மன்சில்கள் என்று பெயர். சந்திரனின் இருப்பிடத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட மன்சில்களுக்கு சந்திர மன்சில்கள் என்றும் சூரியனின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளப் பயன்படுத்தப்பட்ட மன்சில்களுக்கு சூரியமன்சில்கள் அல்லது புருஜ்கள் என்றும் பெயரிடப்பட்டன. அரபுகள் சந்திர மன்சில்கள் உதிப்பதை வைத்தே காலத்தை கணக்கிட்டனர்.
27 நட்சத்திரங்களை எடுக்காமல் 28 நட்சத்திரங்களை எடுக்கக் காரணம் என்ன?
பகலில் வானில் விண்மீன்களை பார்க்க இயலாது. சூரியன் மறைந்து சிறிது நேரத்திற்கு பின்னரே பார்க்க இயலும். அது எவ்வளவு நேரம் என்றால், சூரியன் மறைந்து அது அடிவானுக்கு கீழே 12 டிகிரியை கடந்துவிட்டால் வானில் ஒளிமிகுந்த விண்மீன்களை பார்க்கலாம். மொத்தம் இருக்கும் 360 டிகிரி வானத்தை 27 ஆக பிரித்தால் 13 1/3 டிகிரி வரும். இது 12 டிகிரியை விட துல்லியம் குறைவு. ஆனால் 28 ஆல் வகுத்தால் 12 4/5 வரும் இது விண்மீன்களை பார்க்க இயன்ற அளவு. ஏன் 30 ஆக பகுக்கவில்லை என்றால் நிலவின் இருப்பிடத்தை 28 நட்சத்திரங்களுக்கு மேல் பிரித்து அளப்பது தவறாகும். எனவே நிலவுக்கும் பொருத்தமாக காலக்கணக்கிற்கும் துல்லியமாக இருக்கும் 28 எனும் பிரிவை எடுத்தனர். இதனால் சூரியன் உதிக்கும் முன்னர் தெரியும் முதல் விண்மீனைக் கொண்டு காலநிலையை மிக குறைந்த நாட்களுக்கு துல்லியமாக அறியலாம்.
இந்திய வானியல் கலையும் சோதிடமும்: இப்போது சூரியன் எந்த ராசியில் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறது. இதனால் வானிலை எப்படி இருக்கும் என்று கணக்கிடுவது வானியல். ஒருவன் பிறக்கும்போது சூரியன் எங்கே இருந்தது சந்திரன் எங்கே இருந்தது என்பதை வைத்து அவன் வாழ்நாள் முழுவதும் எப்படி வாழ்வான் என்று சொல்வது சோதிடம் எனும் பகிரங்க ஷிர்க் / குஃப்ர்.
உதாரணமாக நான் பிறக்கும்போது
சூரியன் : அஸ் ஸவ்ர் எனும் சூரிய மன்ஸிலில் இருந்தது அல்லது அல் தபறான் எனும் சந்திர மன்ஸிலில் இருந்தது
சந்திரன்: அல் இக்லீல் எனும் சந்திர மன்ஸிலில் இருந்தது அல்லது அல் மீசான் எனும் சூரிய மன்ஸிலில் இருந்தது
நான் பிறந்த நாளின் நவ்அ = அல் புதைன், அதாவது நான் பிறந்த நாளில் பஜ்ர் வேளையில் உதித்த சந்திர மன்ziல் = அல் புதைன்
☝👆இது உண்மையான சரியான கணக்கு.
இந்தியாவில் சூரிய மன்சிலான புரூஜை ராசி என்பார்கள். சந்திர மன்சிலை நட்சத்திரம் என்பார்கள். இந்திய வானியலில் நவா எனும் கலை இல்லை. பருவகாலங்களை கணிக்க சூரியன் புருஜில் இருப்பதையே எடுத்துள்ளனர். சந்திர ராசி நட்சத்திரங்கள் சோதிடத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
மேலே குறியிடப்பட்டவைகளில்:
சூரியனின் இருப்பிடம் அது சூரிய ராசி அல்லது சந்திர நட்சத்திரத்தில் சொல்லப்படுகிறது
சந்திரனின் இருப்பிடம் அது சந்திர நட்சத்திரத்தில் அல்லது சூரிய ராசியில் சொல்லப்படுகிறது
இது மேலே சொன்ன இரண்டுடனும் எந்த தொடர்பும் இல்லாத ஒரு கலை. சந்திர மன்சில்கள் என்றறியப்படும் நட்சத்திரங்களில் எது ஃபஜ்ர் வேளையில் உதிக்கிறது என்று பார்ப்பார்கள். அதுவே அப்போதைய நவா.
நட்சத்திரம் உதிப்பதை வைத்து காலங்களை கணக்கிடுவது நவா கலை. ஆனால் இந்த கலைக்கு அவர்கள் பயன்படுத்திய நட்சத்திரங்கள் எவையென்றால் சந்திர நட்சத்திரங்களே.
  • அப்துல் காதரின் வீட்டில் அப்துல் காதர் இருக்கிறார்.
  • அப்துல் காதர் வீட்டில் அவர் மனைவி இருக்கிறார்.
  • அப்துல் காதரின் வீட்டில் யாருமில்லை. வெளியூர் சென்றுவிட்டனர்.
அப்துல் காதர் துபாய்க்கு போனாலும் வீட்டின் பெயர் அப்துல் காதர் வீடுதான்.
சந்திரன் இருக்கிறதோ இல்லையோ அது கடந்து செல்லும் விண்மீன்களுக்கு பெயர் மநாசிலுல் கமர். இந்த விண்மீன்கள் உதித்து மறையும். இவை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நேரத்தில் உதித்து மறையும். சூரியன் சந்திரன் இவை இரண்டின் உதவி இல்லாமல் மநாசிலுல் கமர் என்றறியப்பட்ட இவ்விண்மீன்கள் காலங்களை காட்டின.
நாம் விளக்கிய இந்த நவ்அ கலைதான் மேலே உம்முல் குறாவில் குறியிடப்பட்ட காலண்டரில் உள்ளது.
இதே நவ்அ கலையை இப்போதைய அரபு விவசாயிகள் வேறு பெயர்களில் பயன்படுத்துகின்றனர். அதாவது ஜனவரி 15இல் உதிக்கும் நஆயிம் மனசிலை அரபு விவசாயிகள் ஷுபத் என்று அறிகின்றனர். இவ்வகை காலண்டர்  ம் குறியீட்டில் விவசாயிகள் பயன்படுத்தும் காலண்டர் என்ற பெயரில் உம்முல் குறா வெளியிடுகிறது.


நவ்அ
(பஜ்ரில் உதிக்கும் சந்திர ராசி/மன்ziல்)
மன்சில்களின் தமிழ் பெயர்கள்
விஞ்ஞானப் பெயர்கள்
அரபு விவசாயிகள் அடையாளப்படுத்தும் நட்சத்திரங்கள்
இல் குறிப்பிடப்பட்ட விண்மீன் வருடத்தில் முதன் முதலாக உதிக்கும் நாள்
الشرطين
அஸ்வினி
β γ Aries
α Aries / β Tauri
الثريا
12-May
البطين
பரணி
ε δ ρ Aries
الثريا
25-May
الثريا
கார்த்திகை
M45 (Pleiades)
الثريا
07-Jun
الدبران
ரோகினி
α Taurus  (Aldebaran)
التويبع
20-Jun
الهقعة
மிருகசீர்ஷம்
λ φ1 φ2 Orion
الجوزاء
03-Jul
الهنعة
ஆதிரை
γ ξ Gemini
الجوزاء
16-Jul
الذراع
புனர்பூசம்
α β Gemini (Castor & Pollux)
المرزم
29-Jul
النثرة
பூசம்
γ δ ε Cancer (M44: Praesepe)
الكليبين
11-Aug
الطرفة
ஆயில்யம்
κ Cancer, λ Leo
سهيل
24-Aug
الجبهة
மகம்
ζ γ η α Leo (Regulus & Algieba)
سهيل
06-Sep
الزبرة
பூரம்
δ θ Leo
سهيل
20-Sep
الصرفة
உத்தரம்
سهيل
03-Oct
العواء
ஹத்சம்
β η γ δ ε Virgo
الوسم
16-Oct
السماك
சித்திரை
α Virgo (Spica)
الوسم
29-Oct
الغفر
ஸ்வாதி
ι κ λ Virgo
الوسم
11-Nov
الزبانا
விசாகம்
α β Libra
الوسم
24-Nov
الإكليل
அனுஷம்
β δ π Scorpion
المربعانية
07-Dec
القلب
கேட்டை
α Scorpion (Antares)
المربعانية
20-Dec
الشولة
மூலம்
λ υ Scorpion (Schaula)
المربعانية
02-Jan
النعايم
பூராடம்| உத்திராடம்
δ ε η Sagittarius
الشبط
15-Jan
البلدة
-
σ φ τ ζ γ Sagittarius
الشبط
28-Jan
سعد الذابح
அபிஜித் | ஓணம்
Coalsack in Sagittarius
العقارب
10-Feb
سعد بلع
-
α β Capricon
العقارب
23-Feb
سعد السعود
அவிட்டம்
μ ε Aqarius
العقارب
08-Mar
سعد الاخبية
சதயம்
β ξ Aqarius
الحميمين
21-Mar
المقدم
பூரட்டாதி
γ π ζ η Aqarius
الحميمين
03-Apr
المؤخر
உத்திரட்டாதி
α β Pegasus
الذراعين
16-Apr
الرشاء
ரேவதி
γ Pegasus, α Andromeda
الذراعين
29-Apr


01-01-1318 AH (30-04-1900 CE) முதல் 30-12-1500 AH (16-11-2077 CE)  வரை உம்முல் குறா இணைய தளம் இந்த காலண்டர்களை வெளியிட்டுள்ளது.

இந்த நாட்காட்டிகளை ஆண்டிராய்ட் போன்களிலும் நிறுவிக்கொள்ளலாம் >>> https://play.google.com/store/apps/details?id=com.dopravo.ummalquraa&hl=en

குறியீட்டில் இருக்கும் சூரிய கலண்டரை பற்றி தெரிந்துகொள்ள
நாட்காட்டிகள் http://www.piraivasi.com/2015/04/nujumiyya.html
குறியீட்டில் இருக்கும் உம்முல் குராவின் ஹிஜ்ரி நாட்காட்டியைப் பற்றி தெரிந்துகொள்ள
சவூதி அரசு தேதியை மாற்றியதா? http://www.piraivasi.com/2017/01/4.html
உம்முல் குறா நாட்காட்டியின் வரையறை http://www.piraivasi.com/2015/02/28.html
சவூதி அரசு பிறை பார்ப்பதே இல்லை http://www.piraivasi.com/2015/07/6.html
உம்முல் குறாவை உலக நாட்காட்டியாக பயன்படுத்த இயலுமா  http://www.piraivasi.com/2016/01/11.html
மன்சில்கள் புருஜ்கள் ஆகியவற்றின் அடிப்படைக் கல்விக்கு:
http://www.piraivasi.com/2015/08/20.html
http://www.piraivasi.com/2016/03/16.html
http://www.piraivasi.com/2016/05/11.html
http://www.piraivasi.com/2016/11/11.html