Monday 17 July 2017

ததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு

அடுத்த அவதூறு கட்டுரை:
//ஹிஜ்ரிகமிட்டிக்கு அரபி தெரியவில்லை..! ஹதீஸ்களை பலவீனம் என்கின்றனர்..!! – ததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு//
கட்டுரையாளர் செய்தித்தாள்களில் நடிகைகளை பற்றிய கிசுகிசு எழுதியவராக இருந்திருப்பார், அல்லது தொலைகாட்சியில் சினிமா விமர்சனம் செய்பவராக இருந்திருக்க வேண்டும். பகீர், டபீர் என்றெல்லாம் எழுதியுள்ளார் 😃 😄 😁
//ஹிஜ்ரி கமிட்டியினர் அனைத்து ஹதீஸ்களையும் ழயீஃப் என்கிறார்கள் என்று TNTJவின் பிரதான தொண்டர் பிறைவாசி, ஹிஜ்ரி கமிட்டியினர் மீது தனது வழக்கமான அவதூரை பரப்பியுள்ளார்.//
//இன்னும் ஹிஜ்ரி கமிட்டிக்கு ஹதீஸ்கலை தெரியவில்லையாம்! அரபியும் தெரியவில்லையாம்!!. TNTJ பிறைவாசி ரெம்பவும்தான் கவலைப்பட்டு விட்டார் போலும். அரபு மொழியையே தெரியாதவர்களால் ஒரு ஹதீஸை ஸஹீஹ், ழயீஃப் என்று எப்படி கூற முடியும்? என்ற சிந்தனைகூட இவர்களுக்கு இல்லை. ஹிஜ்ரி கமிட்டிக்கு அரபி தெரியவில்லை என்று கூறிவிட்டு, ஹதீஸை ழயீஃபாக்குகிறார்கள் என்றும் சொல்வது முரண்பாடாக இல்லையா?//
நல்ல கேள்விதான். சவூதி சாக்கடையில் வீசிய காலண்டரை நீங்களே தயாரித்ததாக புழுகியபோது கூட்டல் கழித்தல் அறியாதவர்கள் எப்படி காலண்டர் தயாரித்திருக்க முடியும் என்று நாங்கள் சிந்தித்தோம். பின்னர் ஆய்வு செய்து அது சாக்கடை இருந்து மீட்கப்பட்ட காலண்டர் என்பதையும் வெளிப்படுத்தினோம். அதே போல ரு’யதி-ற்கு அறிவால் அறிதல் என்ற பொருள் இருப்பதாக நீங்கள் சொன்னபோதும் சிந்தித்தோம், பின்னர் ஆங்கில கட்டுரைகளின் காப்பி பேஸ்ட் என்று அறிந்துகொண்டோம். இதே போலதான் அரபு அறியாத நீங்கள் ஹதீஸ்களை மறுப்பது எங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லை. அரபு மொழியும் ஹதீஸ் கலையும் அறியாமலேயே மனோ இச்சையின்படி காலண்டருக்கு எதிராக இருக்கும் ஸஹிஹ் ஹதீஸ்களை லயீப் என்கிறீர்கள், இட்டுக்கபட்ட செய்திகளை திரித்து ஸஹிஹ் ஹதீஸ்கள் என்கிறீர்கள். அரபு மொழி தெரிந்தால் தான் ஒரு ஹதீஸை ஸஹிஹ் லயீப் என்று சொல்லமுடியுமா? சும்மா அடித்து விடுவதுதானே உங்களது வேலை. உங்களுக்கு அரபு மொழி தெரியாது என்ற உண்மையையும் ஹதீஸ் கலை தெரியாது என்ற உண்மையையும் நிறுவப்பட்டுள்ள லிங்குகளை கீழே தந்துள்ளோம்’




//மேலும் ''நிச்சயமாக அல்லாஹ் பிறைகளை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான்' என்று தொடங்கும் முஸன்னஃப் அப்துர்ரஸாக்கின் ஸஹீஹான (7306) ஹதீஸை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த ஹதீஸின் வாசகங்கள் அல்குர்ஆனின் 2:189-வது வசனத்தைத் தழுவி அமைந்துள்ளதை காணலாம். அல்குர்ஆனை விளக்கித்தர வந்த இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சொற்கள் அப்படிதானே அமையும். மேற்படி முஸன்னஃப் அப்துர்ரஸாக் ஹதீஸ் கிரந்தத்தில் இடம்பெறும் இந்த ஹதீஸூம், பிறைகள் நாட்காட்டியாக உள்ளன என்றுகூறி ஹிஜ்ரி காலண்டருக்கு சாட்சி பகர்வதால் TNTJவினருக்கு இந்த ஹதீஸ்மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாகத்தான் 'இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது' என்று இந்த TNTJ தொண்டர் சொல்கிறார். விரைவில் இந்த ஹதீஸூம் TNTJவின் ஹதீஸ் மறுப்பு பட்;டியலில் இடம்பெறலாம்.//
இவர்கள் சொல்லும் அப்துர் ரஸ்ஸாக் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதாக இருந்தால் அதுவே தலைப்பிறையை பார்த்து மாதத்தை துவங்குவதற்கு சரியான ஆதாரமாகவும் 2:189வது வசனத்தின் விளக்கமாகவும் அமைந்திருக்கும். அது ஸஹீஹ் ஹதீஸாக இருந்தால் அது புறக்கண்ணால் பிறை பார்பதற்கான முதன்மை ஆதரமாக இருந்திருக்கும். அது இட்டுக்கப்பட்ட செய்தியாக இருக்கும் ஒரே காரணத்திற்காக அதை நாம் மறுக்கிறோம். விளக்கங்களுக்கு மேலே தந்துள்ள லிங்குகளில் உள்ள கட்டுரைகளை வாசிக்கவும்.

புறக்கண்ணால் மக்ரிபில் வேளையில் மக்ரிப் திசையில் பிறை பார்த்து பிறை தெரிந்தால் அதே இரவில் மாதத்தை துவங்குவதற்கு சூமூ லிரு’யதிஹி எனும் ஒரே ஒரு ஹதீஸ் போதுமானது. மேலும் எல்லைக்கும் இந்த ஒரே ஹதீஸ் போதுமான ஆதாரமாகும். எனினும் ஸஹீஹ் ஹதீஸாக இருக்கும் ஒரே காரணத்தால் கிராமவாசிகள், வாகனக்கூட்டம், குறைப் ஹதீஸ் ஆகியவற்றையும் ஆதாரமாக காட்டுகிறோம்